கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
03.தமிழீழம் தாய்நாடு அது எங்கள் தமிழீழம் எம் தமிழ்த் தாய்நாடு தமிழீழம்! உரக்கச் சொல்வோம் இதை உலகுக்கும் எடுத்துச் சொல்வோம்! இங்கே யார் நாங்கள்...? இங்கே யார் நாங்கள்...? எட்டுத் திக்கிலுமிருந்து.. எழுகின்ற கேள்விக்கு.. என்ன விடை..? இதை அறிந்து சிலபேர், அறியாமல் பலபேர், உனக்குள் இருக்கும் உன் தாய்நாடு எங்கே...? இருபத்தியோரம் நூற்றாண்டின் இயந்திர வாழ்வில்..! சுவடுகள் பதிக்குமுன் ஓருகணம் நில்லுங்கள்! உனக்குத் தெரிந்த உன் தாய்நாடு என்று எதைச் சொல்லிக்கொள்ளப் போகிறாய்..? உன் எண்ணக்கரு என்ன சொல்கிறது..? என் எண்ணக்கரு இதைத்தான்.. எண்ணிக் கொள்கிறது! தாய்நாடு அது எங்கள் தமிழீழம் எம் …
-
- 5 replies
- 1.6k views
-
-
தமிழீழக் காதல்....... கவிதை..... எங்கள் தாயக மண்ணின் விடுதலைப் போர் பல தியாகங்களை அடிப்படையாகக் கொண்டு முன் நகர்ந்து விருகிறது. அதில் காதலால் உண்டாகும் தியாகத்தை ஒரு கவிதை வடிவில் சொல்லியிருக்கிறேன். பாடசாலைத் திண்ணையிலே பள்ளித் தெருக்களிலே மாமரத் தோப்பினிலே மலர்கொண்ட பூங்காவிலே மனம்போல பலகுருவி மகிழ்ந்து விளையாடும் செல் சத்தங்கள் கேட்டவுடன் மண் தரையில் படுத்துக் கொள்ளும் கிஃபீரின் இரைச்சல் கேட்டால் பதுங்குகுழிக்குள் பாய்ந்துவிடும்....... இக்குருவிக் கூட்டங்களில் சில தாமக ஜோடிசேர்ந்து காதலெனும் கீதம் பாடி கனிவாக வலங்கள் வரும் காதலிலின் சிறுபிரிவுக்காய் ஊடலும் சேர்ந்து கொள்ள..... காதலனில் சந்தேகம் காட்டிடுவாள்…
-
- 4 replies
- 1.6k views
-
-
வேதனையின் ஈரம்... தினசரி இப்படித்தான் அழிக்க நினைக்கின்ற உன் நினைவுகள்-என் மனத்தோட்டத்தில் செழித்து கிளைபரப்ப விழியின் ஓரம் வரை வியாபிட்த்து நிக்கிறது வேதனையின் ஈரம்!
-
- 5 replies
- 1.6k views
-
-
பிணக் காடுகளில்..... கவிதை - இளங்கவி.... பிணக் காடுகளில் பேய்களின் ஊர்வலம் நடக்க..... நாம் பிறந்த தேசம் நாயின் வாயில் கேவலமாய்க் கிடக்க..... ஈழத்து வளங்களெல்லாம் எதிரியின் காலடியில் நசுங்க.... எம் உறவின் எலும்புகளை அவன் நாய்கள் திண்டு ருசிக்க.... ஆடுகிறான் பேயாட்டம் அதை அடக்க இல்லை ஓர் கூட்டம் உலகத்தின் அசிங்க அரசியலில் அழிந்தது எம் உயிரோட்டம்.... அன்றொரு நாள் இரவில்.... ஓலைக்குடிசை இடுக்கினிலே ஒற்றை நிலவைப் பார்த்துக்கொண்டு மயங்கிய பூவினிலே மது அருந்தும் வன்னிவண்டு.... இன்றைய இரவினிலே..... இரவின் கோரப்பல்லின் இடுக்கினிலே கொடிமல்லிகைகள் சிக்கிக்கொண்டு எதிரியின் கோரப்பசிக்கு சிதையும் நம் மலர்கள் இன…
-
- 12 replies
- 1.6k views
-
-
கவியல்ல இது ஒரு காவியம் தேடியும் கிடைத்திடா தேவதையாய் எண்ணியது தேய்ந்து கட்டெறும்பான கதை சொல்லும் ஜீவகாவியம்…! ஊரின் ஓரத்தில் ஒரு தோப்பு தோப்பிலே குருவியொன்று சிங்காரச் சிறகு விரிக்க சுதந்திர வானம்….! சுதந்திரமாய்க் குடியிருக்க சின்னக் கூடு சுமை தாங்கியாய் சின்ன மாமரம்…! சுந்தரக் கானமிசைக்க தென்றல் போடும் தக திமி தாளம்..! இவை சேர தப்பாமல் தன்பாட்டில் வாழ்ந்தது மனதோடு மகிழ்ச்சி பொங்க….! அன்றொரு வேளை அந்திசாயும் மாலை நெருங்க அருமையாய் வசந்தம் பூத்திருக்க பூமி மகள் அழகு காட்டியிருக்க கண்ணினைக் காட்சிகள் காந்தமாய்க் கவர களம் ஏகியது குருவி….! கண்கொள்ளாக் காட்சிகள் விருந்துகள் படைக்க வாயோடு வந்த கீதம் இசைத்துப் ப…
-
- 16 replies
- 1.6k views
-
-
அணிலே அணிலே கொய்யாப்பழத்தை தூக்கி வீசிட்டு சொக்கிலேட் கிரீம் பிஸ்கட் சாப்பிடும் குண்டு அணிலே கிட்டவா.. நீ ஒரு obesity தெரிந்தும் உன்னை ஓடிவரக் கேட்கமாட்டேன் பயந்திடாமல் பைய நடந்தே வா..! களவெடுத்து நீ தின்னும் பிஸ்கட்டில் பாதி பறக்க திணறும் குண்டுப் புறாவுக்கும் கொடுக்கலாம் கொண்டு வா..! கமராவால் அதைக் கண்ணடித்தே இணையத்தில் போட ஆசை மெல்ல பத்திரமாய் ஊர்ந்து வா. ஊரில் என்றால் மிளகாய்த் தூள் தூவிய நல்ல பொரியலாய் சட்டிக்குள் நீ ஆகி இருப்பாய் தெரிந்து வா..!
-
- 13 replies
- 1.6k views
-
-
செடிவாழ நீர் தேவை... நான் வாழ-நீதேவை.. நீ வாழ வாழ்த்தி-இங்கு நான் வாழப் பார்க்கிறேனோ...? இல்லை..இல்லை... நீ வாழ நான் தேவை நான் வாழ நீ தேவை அதனால்.... "வாழ்த்துக்கள்" உனக்கு...அதனால்... எனக்கும்.....நானே... அத்துடன் ..அனைவரிற்கும்-தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
-
- 7 replies
- 1.6k views
-
-
-
-
''சுட்டு வீழ்த்தடா கிபிரை.......!!!'' எங்கள் வானில் வந்து பகை எம்மை அழிப்பதா......??? இதை கண்டு கண்டு வேங்கை இனி சும்மாய் இருப்பதா.....??? கோரமதாய் வந்து பகை கொன்று அழிப்பதா.....??? எம் தமிழர் உயிர்களையே தின்று களிப்பதா....??? இத்தனையும் ஆடும் பறவை விட்டு வைப்பதா....??? எங்கள் வானில் உள் நுழைய விட்டு கொடுப்பதா....??? கொட்டமடித்து எங்கள் வானில் பறக்க முனைவதா.....??? மீண்டும் மீண்டும் எம் தமிழை அழிக்க நினைப்பதா.....??? இத்துடனே நிறுத்தி கிபிரை சுட்டு வீழத்தடா....!!! வன்னி மைந்தன்
-
- 8 replies
- 1.6k views
-
-
ஈரவிழி உலர்த்தி இகப்பரப்பை உலுப்பு! பண்பட்டுப் பண்பட்டு புண்பட்டுச் சிதைகிறோமே... பார்த்தெவரும் விழி நனைத்து வேதனைகள் தீர்த்தாரா? மண்பட்டு மரணம் தரும் கந்தக அமிலங்களைக் காட்சிப் படுத்தி எவரேனும் கணக்கெடுத்துக் கொண்டாரா? தாயக புூமியிலே.. பேய் ஏவும் கூர்முனைகள் பிண ஓலம் வளர்க்கிறதே... தீ ஏறி உலவிட - எம் தேச முகம் கருகிறதே.. வாயாறச் சொல்லின்றி விம்மி அழும் குரல் கொண்டு வீணர்களின் வேட்டுக்களால் - எம்மினம் வீதியெங்கும் சாகிறதே.... கணப் பொழுதும் இடைவிடா வேதனையைச் சுமத்தி - எங்கள் இனத்துவாழ் குடிநிலங்கள் பறித்தெடுக்கப் படுகிறதே.. இனவாதக் கோரப் பேய் - எம் இன இரத்தம் பருகத் தினவெடுத்துத் தினவெடுத்துத் திருமலையில்…
-
- 2 replies
- 1.6k views
-
-
''வந்தேறு குடியா தமிழன்....???'' கலங்குது கலங்குது என் மண்டை கலங்குது..... ஆய்வுகள் வரலாறு ஆயவே கலங்குது... எம் தமிழ் வரலாறு அறியவே துடிக்குது.... ஜயோ படிக்கையில் என் மண்டை குளம்புது.... திராவிட மக்களே எம் தமிழ் என்குது.... திறம்பட்ட வீரர் என்றவரை சொல்லுது.... கண்டி. களனி அனுராதபுரம் வரை ஆண்டதாய் சொல்லுது..... வன்னியில் இருந்து எம் படை போயே கண்டியை காத்ததாய் கதைகளும் சொல்லுது..... எம் தமிழ் ஆட்சியை உயர்வதாய் செப்புது.... இலங்கையின் அரசனே இராவணண் என்கிது.... குறு மன்னர் ஆட்சியை குலவியே சொல்லுது.... அவர் நேர்மை திறனை நெகிழ்ந்தே சொல்…
-
- 7 replies
- 1.6k views
-
-
வலை வீசம்மா வலை வீசு வம்பு வளக்கலாம் வலை வீசு.. கை வீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு காதல் செய்யலாம் கை வீசு கனடா போகலாம் கை வீசு கம்பியூட்டர் முன்னால் கையடிக்கலாம் வலை வீசு கத்தி வெட்டு குத்திப்போடலாம் கைவீசு கருத்துச் சொன்னால் பாவம் கைவீசு களம் என்ன குயவன் செய்யும் பொம்மையோ கை வீசு வெட்டில் வெட்டலாம் கைவீசு வீணில் வெட்டுவதைத் தள்ளிப்போட்டு கைவீசு காரணம் சொல்லலாம் கைவீசு களத்தில் இருப்பவர் புட்டிப்பால் குடிப்பதில்லை கைவீசு காத்திரமான பங்கு வேண்டுமா கைவீசு கோபம் ருத்திரம் மனிதம் உணர்த்துவது கைவீசு சண்டையும் சச்சரவும் இல்லையென்றால் கைவீசு சாதிப்பது என்பது பூச்சியமே கை வீசு ஆங்கிலம் பேசுவது கோமளித்தனமல்ல கைவீசு …
-
- 3 replies
- 1.6k views
-
-
ஞாலம் தமிழை எவண் வைத்தாலும், ஞாயம் என்னவிதி செய்தாலும், காலம் என்னவிடை சொன்னாலும், கனிய வேண்டியது தமிழீழம்! தமிழன் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும், தாங்கொணாத் துயரம் சூழ்ந்தாலும், குமுறி அழுதபடி வீழ்ந்தாலும், கொள்ள வேண்டியது தமிழீழம்! கத்து கடலில் உயிர் கரைந்தாலும், காடையோர் கொடுமை தொடர்ந்தாலும், (இ)ரத்த நாளங்கள் வறண்டாலும், எய்த வேண்டியது தமிழீழம்! குடிசை யாங்கெணும் எரிந்தாலும், குருதி எத்தனை சொரிந்தாலும், வெடிமுழக்கம் இனி விரிந்தாலும், வெல்ல வேண்டியது தமிழீழம்! பகைமை பேயரசு புரிந்தாலும், பரத தேசம் அதை அறிந்தாலும், அகதி ஆயிரவர் குவிந்தாலும், அடைய வேண்டியது தமிழீழம்! …
-
- 5 replies
- 1.6k views
-
-
நம்பிக்கைகள் கைகோர்த்து நடக்க எண்ணங்கள் இணையாக பிறக்க பல வண்ணங்கள் இழையோடிச் சிறக்க இரு உள்ளங்கள் உறவாடிப் பழகும் இனிமையான காலத்தின் பெயர்தான் 'காதல்' அப்படியான இனிதான பொழுதுகளை முன்னொரு நாளில்.... நீயும் நானும் பகிர்ந்திருந்தோம்! காதலையும் அன்பையும் அள்ளிக்கொடுத்த நீயேதான், பின்னொரு நாளில்.... பிரிவையும் வலியையும் வாரியிறைத்துவிட்டுப் போனாய்! நீ தந்துவிட்டுப்போன அந்த வலிகளைத் தாண்டி வெளியேவர... நான் பல ஜென்மங்கள் எடுக்க வேண்டியிருந்தது! இன்னும் என் இரவுகள்... என் தூக்கத்தை திருப்பித்தரவில்லை! இன்னும் உன் ஞாபகங்கள்... எனைத் தீயால் தீண்டுவதை நிறுத்தவில்லை! வலிகள் ஒருவனை வலிமையாக்கும்! எப்படியான துன்பத்தையும்... புன்னகையோடு வரவேற்கும் வல்லமையை, உன…
-
- 18 replies
- 1.6k views
-
-
உன் கண்களில் மிதக்க ஆசைபட்டு மூழ்கிப்போனது யார் யாரோ கண்களில் என் கவிதைகள் * என்னைக் காட்டிக் கொடுப்பவன் தான் தூரோகி என்றால் என்னவளைக் காட்டிக் கொடுக்கும் என் கண்களை யார் என்பேன் * நீ அழகாய் கிழித்தெறிவதை ரசிப்பதற்காகவே அழகான கவிதைகளாய் எழுதிக் கொண்டுவருகிறேன் * சாண் ஏற முழம் சறுக்கிறது உன் வீட்டு வாசல்படி எனக்கு * என் நம்பிக்கை மீது நம்பிக்கையில்லாமல் போனது நீ என்னை மறந்ததை நான் இன்னும் நம்பவில்லை * அவளைச் சிரிக்கவைத்து அழாமல் எடுத்துக் கொடுத்தேன் என் செத்தவீட்டு புகைபடக்காரனாய் அவளின் கல்யாணவீட்டுப் புகைப்படத்தை * உன் வீட்டுச் சுவரில் எனக்கு யாரோ எழுதிய இரங்கல் கவிதை இன்…
-
- 9 replies
- 1.6k views
-
-
யூலை 1983... படித்துக்கொண்டிருந்த என்னை தெருவில் ஓடத்துரத்தியநாள் இலங்கையனாக இருந்த என்னை தமிழனாக மாற்றியநாள் இலங்கை என் தாய்நாடு என்பதை வடக்கு கிழக்கு என்றநாள் தமிழன் என்று அடையாளமிட்டு கொல்லப்படவேண்டியவனாக்கியநாள்.. இசுலாமிய சகோதரர்களின் சுயரூபத்தை நான் தரிசித்தநாள் அகப்பட்டிருந்தால் இன்று 31வது நினைவஞ்சலி நாள்............
-
- 5 replies
- 1.6k views
-
-
இன்று என் பெயரைத் தமிழில் Google பண்ணிப் பார்த்த போது கிடைத்த என் பழைய கவிதை இது. 23 ஆம் வயதில் 1998 January இல் எழுதி பிரசுரமான கவிதை. விசுவாசமற்ற காதலன்:
-
- 11 replies
- 1.6k views
-
-
தீவினில் ஒரு தீபம் அது வீர தீபம் உடல்தனை உருக்கி உயிரினை அளித்து மூட்டிய தீபம் கார்த்திகை மாதம் மலர்ந்திடும் மலரும் காட்டினில் சிறுத்தையும் வளவினில் செம்பகமும் வீதியில் வாகையும் வணங்கிடும் தீபம் அது வீர தீபம் மக்களின் மனங்களில் மலர்ந்திடும் நினைவுகள் சொரிந்திடும் விழினீரில் உருகியே தாழ்ந்திடும் தீபம் அது வீர தீபம் விடியலின் ஒளிதேட இருளோடு கலந்திட்ட தமிழீழ மைந்தரவர் ஏற்றிய தீபம் அது வீர தீபம் காற்றோடு சாயினும் மழையோடு மாழினும் தமிழீழ மண்ணிலது அணையாத தீபம் அது வீர தீபம் வேங்கைகள் உயிரது வேள்வியில் கலந்திட்ட வேளையில் பிறந்திட்ட மாவீர தீபம் அது வீர தீபம் அழியாத நினைவோடு நெஞ்சினில் வாழ்ந்திடும்…
-
- 4 replies
- 1.6k views
-
-
இப்ப போகலாமென மனம் அடித்துக் கொள்கிறது. 83இன் பின்னர் மறந்து போயிருந்தவையெல்லாம் நினைவிற்குள் மீண்டன. கறுப்பு வெள்ளைப் போட்டோ ஆல்பம், புத்தகக் கவருக்குள் ஒளித்து வைத்த காதல் கடிதங்கள், திண்ணைச் சுவரில் எண்ணெய் பிசுக்காய் அப்பியிருக்கும் ஆச்சியின் அடையாளம். பின்முற்றம் கக்கூஸ் கிணற்றடி இத்தனை காலமாய் மறந்து போயிருந்த அனைத்தையும் கூட்டி நினைவிற்குள் மீட்க புகாராய் எதுவும் ஒட்டமாட்டேன் என்கிறது. என் மண் என் நாடு என் மக்கள் படபடக்கின்றது மனம் தங்குவதற்கு வசதியான இடம் சப்ப “சுவிங்கம்” சாப்பாட்டு ஒழுங்கும் போக முன்பே செய்ய வேண்டும். இல்லாதவர்களுக்குக் குடுக்க கொஞ்ச பழைய உடுப்பு சொக்லேட்டுப் பெட்டிகள், …
-
- 4 replies
- 1.5k views
-
-
மணல் சுமக்கும் கடற்கரை , இந்தக் கன்னம் சுமக்கும் கை விரல் , . நித்தம் உன் நினைவுகள் சுமக்கும் இந்த இதயம் என மெல்ல நீள்கிறது இந்த கடற்கரை காட்சிகள் இன்னும் என்னுள் கரை தொடாத அலைகலென கனக்கிறது கைரேகை முழுவதும் அழியாத உன் ஞாபகங்கள் !.. - பனித்துளி சங்கர்
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆண்டகை அகதியாக அல்லலுறும் பூமியிலே மாண்ட அடிகளே! மானிடக் கருணையே! நீண்டதொரு சரித்திரத்தின் நிதர்சனச் சான்றென்று நீசர்கள் வைத்தகுறி நேசரும்மைப் பறித்ததுவோ?
-
- 4 replies
- 1.5k views
-
-
தீயின் வம்சமடா நாம் தீமை கண்டால் தீது செய்தால் தீக்கிரையாக்கிடுவோம் விழிகள் திறந்தே உறங்கிக்கொள்வோம் விடியல் வரும் நாள் கண்ணயர்ந்து கொள்வோம் உரசிப்பார் பற்றிக்கொள்வோம் பிரிதல் ஒன்றும் பிரியப்போவதில்லை இணைவோம் எம் லட்சியம் ஈடேறும்போது அரசியல் ஆட்டம் காண எம் ஆட்சி பீடம் ஏற இணைவோம் புரியும் அன்று பிரிவு ஏன் - எம்முள் பிளவு ஏன் ? கிழக்கில் தோன்றும் இருளெல்லாம் - ஓர்நாள் வடக்கில் வெளிச்த்திற்கு அஸ்த்திவாரம் ஓட ஓட விரட்டி எம்மை கொன்றொழித்த ஓர் காலம் ஓடுஓடுவென அரசை கொன்றொழிப்போம் எம் காலம் கருநாகம் படையெடுத்தால் கலங்கிப்போகாதே - அதன் கடிவாளம் எம்மிடத்தே கவலை கொள்ளாதே வீசும் காற்றும் வ…
-
- 7 replies
- 1.5k views
-
-
தேசக்காற்றே அனல் வீசியதேன் - எம் தேவனையும் நீ பறித்ததேன் தேசத்தின் குரல் ஓயந்து நாம் திகைத்து நின்றோம் - இன்று தேசியகீதமே அழிந்ததம்மா ! அலையொன்று அடித்தோய்ந்ததம்மா அந்த ஆண்டவனும் எம்மை மறந்தானம்மா தமிழின் செல்வனை பறித்தானம்மா எம் தாயக வேள்வியை அணைத்தானம்மா
-
- 0 replies
- 1.5k views
-
-
புகலிடம் *********** அவள் ஒன்றும் இந்த மர மனங்களிடம் கனிகளுக்காக - காத்திருக்கவில்லை..... அது - தரும் நிழலுக்காகத்தான்...... காத்து நின்றாள் அவள்- கனத்த இதயத்தில்... நினைத்த எண்ணங்கள் சருகாகிப் போனதால்... அந்த சருகையே உரமாக்கி (மர)மனங்கள் ஓங்கி வழர்கின்றன அதனால்தான் -அவள் வெயிலினில் கூட... வெறுப்பின்றி நடக்கின்றாள் இனி- அவள் ஒதுங்கப் போவது எந்த(மர) நிழலிலோ....? இல்லை இந்த வெயில் தான் இவளின்...புகலிடமோ....???
-
- 7 replies
- 1.5k views
-