கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஒன்பது தசாப்தங்கள் -கடந்து.. செத்தொழிந்து... மேலும் - மூன்று தசாப்தம் முடிந்தும்... ஏன் அந்த - உற்சாக கிழவன்... உன் மனசில் - துருத்திகொண்டே கிடக்கிறான்?? வெளிப்படையாய் -பேசினாலென்ன... அந்த வெள்ளி - தாடி .. நாத்திகனுக்கு-....... ஆத்திகனாய் - இருப்பவர் தரும்... அதரவு - அதிகம் ..!!! எல்லாம்..... அவர் கருத்து...... அதிலொரு சிறு குழப்பம்... பட்டு சேலையை சாமிக்கு உடுத்தி....... அழகு பார்த்து.... பக்கத்து உறவுகள் ... ஊத்தை - துணியுடன் கிடப்பதை ரசிப்பதில் உனக்கென்ன பெருமை?? அவர் - வார்த்தையில் சொல்லுறேன் -கேளேன்... நீ வெங்காயம்!!
-
- 6 replies
- 1.6k views
-
-
மலர்களின் அழகில் களித்திருப்போம் வேர்களின் வலிகள் புரிவதில்லை மரங்களின் நிழலில் குளித்திருப்போம் வேர்களின் தியாகம் புரிவதில்லை மண்ணுக்குள்ளே அவை புதைந்திருக்கும் எங்களின் கண்ணுக்குத் தெரிவதில்லை - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ஒவ்வொரு முறையும் உங்கள் மரணத்தின் போது நான் மெளனித்துப் போகிறேன் கூனிக் குறுகித் தலை குனிந்து!
-
- 6 replies
- 1.8k views
-
-
1987 செப்ரம்பர் 15 அன்று நல்லூர் வீதியில் தியாக தீபம் திலீபனின் நீரேந்தும் அருந்தாத உண்ணாவிரதம், இந்திய வல்லாதிக்கத்திடம் ஈழத் தமிழ் மக்களின் 5 அம்சக் கோரிக்களை நிறைவேற்றக் கோரி ஆரம்பமானது. (திலீபன் தமிழீழ விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவன். யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி இருந்த மாணவன்.) ----- நினைவுப் பதிவு----- தியாக தீபமே விடுதலைத் தீயே.... அன்னை மடியில் நீ கிடந்த நினைவுகள் அழியவில்லை..! தமிழீழ மண்ணில் நீ பதித்த பாதச் சுவடுகள் கருவறைகளாய் சாதனைகளைப் பிரசவிக்கின்றன...! அண்ணா.. உன் உயிர் தந்து தமிழீழ விடுதலைக்கு நீ.. உயிர் கொடுத்தாய்..! உன் தியாகம…
-
- 6 replies
- 3.3k views
-
-
என் மண்மேலே நின்று, என்மேலே இரத்தம் சிந்தி, யுத்தம் செய்த வித்தகரே, காத்த முடியாமல் சத்தம் போடாமல்-உங்களை நித்தம் தேடுகிறேன், தமிழீழ நாடு தமிழரின் தாய் வீடென்று என்மீது தாவி திரிந்த வீரர்களே, தனிமையாய் எல்லாம் வெறுமையாய் தவிக்கிறேன். என் கடல் மேலே ஏறி அலையோடு தாவி அற்புதங்கள் செய்தவரே-உங்கள் படகோசை கேட்காமல் படைவாசம் வீசாமல் பாவி மகளாய் பரிதவித்து வாழ்கிறேன். அலைகள் மட்டும் என்னை முட்டிப்போகுது, அன்று காடு மலைகள் எல்லாம்-உங்கள் பாதச்சுவடுகளால் பசுமையாக்கி சென்றீர் இன்று என்னை அழிப்பவர் கால்பதிக்க, கூடி அழ யாருமின்றி குமுறி அழும் என்குரல் கேட்காமல் போனதோ உங்களுக்கும். வாய் நிறைந்த சிரிப்போடு வானம் எரிய வான்புலியே காற்றிலும் புலி பறக்குமென…
-
- 6 replies
- 723 views
-
-
தசையினைத் தீ சுடினும்... எழுத்தா ளரும் விடுதலைச் சிறுத்தைகள் முன்னாள் எம்.எல்.ஏவுமான ரவிக்குமாரின் "தமிழராய் உணரும் தருணம்" என்ற நூலில் வாசிக்க வாய்த்த கவிதை. 1983-ல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனக் கலவரத்தின் ஒரு சம்பவத்தை சிங்களக் கவிஞர் பாஸில் ஃபெர்னாண்டோ கவிதையாகப் பதிவுசெய்திருக்கிறார். மொழியாக்கம் கவிஞர் சேரன். 'ஜூலை: மேலும் ஒரு சம்பவம் இறந்தவர்களைப் புதைப்பது ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில் இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக் காரணம் ஏதுமில்லை சத்தியமாகச் சொல்கிறேன் நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன். சித்தம் குழம்பியனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை. உங்களைப் போலவே நானும் உணர்ச்சிகளை வெளிக்கா…
-
- 6 replies
- 825 views
-
-
பனையடி வினை பாடலெல்லாம் சிதைந்திருந்த தெருவழியே தனித்திருந்த பனை மரங்களைக் கேட்டேன் இந்த வெறி எங்கே கொண்டு போகும்? என்று எந்தப்பனையும் எதுவும் பேசவில்லை நூற்றாண்டுகள் பலவும் வாய் மூடி மௌனமாக இருந்த பழக்கத்தை விடுவதில் ஏராளம் தயக்கங்கள் ஒவ்வொரு தளும்பாய் பனை நீளம் படர்ந்திருந்தது. நானறிய நூற்றாண்டுகளை விழுங்கி விழுங்கி எல்லா வெறிக்கும் வழிவிட்ட பனையே முறிகின்றாய் பெரும் பழி சூழ் வினையில். ஒவ்வொரு பனையாய் முறிகின்றாய் முறிந்த பனைகள் துளிர்ப்பதுண்டோ? தோப்பெல்லாம் பெருந்தீ மூண்டெரிந்தாலும் புதுக் குருத்தெறியும் வரமுடைய தாலமே கால நிழலின் குழியுள் இதோ உனது நாட்கள் செத்தழிகின்றன எல்லா வெறிக்கும் வழி விட்ட முந்தைப் பெரும் பழியெலாம் …
-
- 6 replies
- 1.2k views
-
-
விரிக்கப்பட்ட ஒரு துண்டின் மேல் விழும் எச்சில்களுக்கு இரத்தம் வருத்த ஆடுகிறான் தன் பிஞ்சுகளோடு கனத்த உடலும் கால் தெரியும் அமைப்பும் ரசிக்கத்தான் கூட்டமுண்டு காலணா வீச ஆளில்லை கரணம் அடிக்கும் பூக்களை ரசிக்கத் தெரிகிறது சிந்தும் துளி ரத்தங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை உழைக்கப் பல தொழில்கள் பிழைக்கப் பல தொழில்கள் பிச்சைக்குத் தொழிலுண்டா? வீசுங்கள் உங்கள் சட்டைப்பை காசுகளை. ஆகாயத்தின் மத்தியில் ஆடும் இவர்களின் வாழ்க்கையும் அடிக்கடி கலையும் மேகங்கள் கயிறின் நுனியில் உயிரை வைத்து பூக்கள் வாடும் மஞ்சள் வெயிலில் உதடுகள் வெடிக்க இவர்கள் ஆடுகிறார்கள் இறைவனின் கூத்து இறைவன் ஆடுகிறான் இவர்களின் வாழ்க்கையில் கூத்து.…
-
- 6 replies
- 1.4k views
-
-
எனக்கும் உனக்கும் நீதி சொல்லும் பிரதம நீதி தேவதை இன்று நீதி கேட்டு புத்தரிடம் தமிழர்களுக்கு நீதி மறுக்கும் புத்தர் கண் திறப்பாரோ ?
-
- 6 replies
- 598 views
-
-
நிரந்தரமற்ற கனவுகளை நினைவில் சுமந்து வாழ்ந்தேன் இன்று என் விழிகளில் நீ சுமக்க வைத்தது கண்ணீரைத் தானே... பசுமையான என் வாழ்வில் வந்து பாசத்தைக் காட்டி வேசம் போட்டாய்.. என் பாசங்களை வெறுத்தேன் பொங்கி வந்த ஆசைகளைப் பொசுக்கிப் போட்டாய்.. சில நாட்களில் பழகி தொடர் நாட்களில் விலகி விட்டாய்.. உன் வரவுக்காய் ஏங்கிய என் விழிகள்-இன்று உன் கனவுக்காய் ஏங்குகின்றன... காவியத்தின் நாயகனாய் உனைக் கண்டேன் காதல் காவியத்தைத் தேர்ந்தெடுத்தேன் கற்பதற்கு.. ஆரம்பம் சுவையாய் இனித்ததால் காவியத்தக்காய் என்னை அற்பணித்தேன்.. இந்த உலகத்தையே காவிய நாயகனாய் நினைத்தேன்.. பசியை மறந்தேன்.. படுக்கையை இழந்தேன் கண் உறங்காமல் …
-
- 6 replies
- 1.6k views
-
-
உன்னை .... காதல் செய்த நாளே .... காதலில் கருத்தரித்த நாள் .... என்னை .... காதலித்த நாளே .... காதலின் பிறந்த நாள் ....!!!+உன்னை ..... மறக்கும் நாள் வரின் .... என்னை இழக்கும் நாள் .... தொடங்கும் ..... உன்னை .... இழக்கும் நாள் தோன்றின் .... என் ......... மரிக்கும் நாள் தோன்றும் ....!!!@கவிப்புயல் இனியவன் காதல் ஒன்று கவிதை இரண்டு
-
- 6 replies
- 5.3k views
-
-
சிங்களக்கோட்டையில் சீறியே பாய்ந்த புலிவீரர்களிற்கு காணிக்கையாக. . . . ஏறுது ஏறுது புலிக்கொடி பார் ஏற்றிடுவோர் எம் மறவர் பார் வெற்றியை முத்தமிட்ட வீரர் மாற்றான் பகைமுடித்த தோழர் தோற்காமல் நின்ற தமிழர் கூற்றவனை கொன்றழித்து காற்றிலே கரைந்திட்ட புலிவீரர் அன்று உற்றார் உறவினரை இழந்தோம் வேற்று மனிதராய் வாழ்ந்தோம் - அந்த கற்கால வாழ்க்கை கழிந்ததடா - கண்முன்னே பொற்கால வாசல் தோன்றுதடா வலிகள் தாண்டி வலிமை தாங்கி வழிகள் பல கண்டோம் எம் கதியை எண்ணி கலங்கியதில்லை - தினம் விதியை வென்று நின்றோம் பொறுமை போர்த்தி போர்க்களம் வென்று புதுமைகள் பல செய்தோம் தலைவன் வழியிலே தடைகள் பலவுடைத்து தமிழனாய் தலைநிமிர்ந்தோம் அன்னியசக்தியின்…
-
- 6 replies
- 1.7k views
-
-
நெல்லும் உயிரல்ல நீரும் உயிரல்ல முல்லை நிலத்தில் அலைந்து உழன்றவரை கொல்லும் எறிகணைகள் கூட்டாக வீசியவன் மன்னாதி மன்னனென மார்தட்டிக் கொள்கின்றான் எண்ணிக்கை யாருக்கு வேண்டும்? மொழியால் அமைந்த நிலம் எனச் சங்கத் தமிழோடும் செம்மொழியின் வனப்போடும் புதைகுழிக்குள் போனவர்கள் நாங்களன்றோ? குழந்தைகளின் மென்கரத்தை அரிந்து நெருப்பில் எறிந்தவனுக்குத் தாம்பூலம் தந்து தாலாட்டுப் பாடி கால்கள் வருடி தலைமயிருக்கு நிறம் தீட்டி அவன் பேழ் வயிறை வழிபட்ட அப்பாலும் அடிசார்ந்தார் இப்பாலும் இருப்போர்கள் முப்பத்து முக்கோடி படையினர்கள் எல்லோரும் பட்டழிவதன்றி வேறென்ன கேட்கும் என் கவிதை? படித்துப்பிடித்தது . ஈழத்துக் கவிஞர் சேரன்.
-
- 6 replies
- 760 views
-
-
நான் நேசித்தவள் -___________________ வறுமையிலும் கொடுமையிலும் வேலை செய்துகொண்டிருக்கும் என்னை-- காதல் என்ன என்று புரியாத எனக்கு நட்சத்திரம்போல என் வாழ்க்கையில் அவள் வந்தால்-------------- நானும் அவளும் பழக ஆரம்பித்தோம் முகம் தெரியாதவர்களாகவும் இருந்தாலும் ஒன்றாக தொலைபேசியில் கதைப்போம் அவளின் கதைகள் சிரிப்புக்கள் எல்லாம் என் மனதை கொள்ளை கொண்டன அவளோ ஒவ்வொருநாளும் தொலைபேசியில் கதைப்பால் நாட்கள் ஓட ஓட என் வாழ்க்கையில் ஓர் ஏக்கம் அந்த ஏக்கம் எனக்கே தெரியாதே-- அவளின் சிரிப்புக்கள் --என் காதில் கணீர் கணீர் என்றே ஒலித்துக்கொண்டிருந்தன<------ அவளோ என்னை தன் சகோதரங்கள் என்று நினைத்து கதைப்பால் அவள் வேறு மொழி நான்வ…
-
- 6 replies
- 1.8k views
-
-
வணக்கம், இது கவிதைப் பகுதியில் நான் பதிந்தாலும் இது நிச்சயம் கவிதை அல்ல. பொங்கல் எனக்கு பல வழிகளில் முக்கிய தினம் ஆகின்றது. பொங்கலுடனான என் நினைவுகளை ஒரு கட்டுரையில் சொல்வதை விட கவிதை போன்ற ஒரு மொழியில் உடைத்து சொன்னால் சரியாக இருக்கும் என்று இதை எழுதுகின்றேன்.... எனக்கு இன்னும் என் நினைவுகளில் ஊரில் பொங்கிய பொங்கலின் வாசம் மிச்சம் இருக்கின்றது நாக்கின் ஓரத்தில் இனிப்பின் இறுதி சொட்டுகளை கவனமாக காக்கின்றேன் இன்னும் முன்னொரு காலத்தில் பொங்கல் பொங்கிய என் பாட்டியின் தொலைந்து போன வடையின் ருசியும், அதைக் காவு கொண்ட காக்காவின் பசியும், அதையும் (கூட) சூறையாடிய நரியின் தந்திரமும் இன்னும் என்னுடனே வருகின்றன *************** …
-
- 6 replies
- 1.3k views
-
-
தாயின் மடி போல் தலையணை வேண்டும் தூங்கும் நிலையில் மனநிலை இல்லை வந்து போகுது வரவும் செலவும் நொந்து போகுது மானிட இதயம் உழைத்து உழைத்து உருக்குலைந்த பின் எஞ்சி இருப்பது நோயும் நொடியும் குருவித் தலையில் பனம் பழம் போலே ஏழை உழைப்பில் எத்தனை செலவு காற்றும் கூட காசாய் போனதால் வாழ்வில் எப்படி வசந்தம் வீசும் சுரண்டிய மீதியே ஊதியம் ஆகையில் உயர்வது எப்படி? வாழ்வு மலர்வதெப்போ? மனசு நிறைந்து கனவுத் தூக்கம் கண்டு மகிழ்வதெப்போ? தாயின் மடி போல் தலையணை வேண்டும் நோயில் படுக்கினும் தாயின் மடியே தலையணையாய் வேண்டும்.
-
- 6 replies
- 2.8k views
-
-
உனக்காக இருக்கவா..? உன்னோடு இருக்கவா..? என்றால் உனக்கா எழுதிக் கொண்டு உன்னோடு இருக்கவே விரும்புகிறது மனசு * நியமாக உன்னோடு வரமுடியாமல் போனாலும் என் நிறமாவது வருகிறதே உன் நிழலாக * நீ பயத்தோடு வருவதைக் கண்டாலே நான் தனியா பேச வந்ததை மறந்து விடுகிறேன் * நீ படபடப்பதை யாரும் பார்த்தால் பயத்தை விரும்பும் கோழை என என்னை நினைக்கப் போறார்கள் * நீ என்னைக் காதலிக்கிறாய் என்பதை என்னால் நம்பமுடியாமல் இருக்கிறது பொறுக்கியை எப்பிடி தேவதை காதலிக்கும்..? -யாழ்_அகத்தியன்
-
- 6 replies
- 1.7k views
-
-
அறத்துப்பால்-கடவுள் வாழ்த்து -அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (01)கே இனியவனின் திருக்குறள்-சென்ரியூ எழுத்தின் தாய் உலகின் தாய் -அகரம் - -
-
- 6 replies
- 718 views
-
-
எத்தைகைய ஒழுங்குமற்ற எனது சொற்றொடர்களை நீங்கள் கவிதை எனக் கொள்க. பின் நவீனத்துவம் எனக் கொண்டாலும் நலமே..!! சாமத்தில் வீடுசேர்ந்து வைகறையில் தலைசாய்ந்து நண்பகலில் கண்விழித்து - தாமதமுணர்ந்து தவித்து அரக்கபரக்க அங்கம் கழுவி மடித்துவைத்த உடுப்பணிந்து அழுக்கேறிய இருசக்கரத்திலமர்ந்து சாலையோர பெட்டிக்கடை தேடி சிகரெட்டுடையும் சிறுசமோசாவையும் சிற்றுண்டியாக்கி சிக்னலில் சிக்ககூடாதென சிரம்தாழ்த்தி சிவன் தொழுது அண்ணாசாலை நோக்கி வாகனம் பாய வழியில் குறுக்கிடும் வழிப்போக்கர்களை வைது வெம்மையால் வியர்வை வழிய - ஓடோடி அலுவலகத்தின் வாசல் கதவை திறக்க சில்லெனப் பாயும் குளிர்காற்று !!
-
- 6 replies
- 721 views
-
-
அம்மா இங்கே வா வா!! அம்மா இங்கே வா வா! Arrest Warrant தா தா! வேலூர் ஜெயிலில் போட்டு கண்ணுல தண்ணியும் காட்டு! அப்புவும் ரவியும் கூட்டு சின்ன 'சாமி'க்கும் வேட்டு குடுத்தாங்க மாமீங்க பேட்டி சாயம் போச்சுது காவி வேட்டி பெருசுங்க பொருளுங்க குட்தாங்க கூடவே போட்டாவும் புட்ச்சாங்க எதிராளிய குத்தம் சொன்னாங்க மீதிய அமுக்கினு போனாங்க போஸ்டரு நோட்டிசு அடிப்பாங்க கட்டவுடுக்கு பாலும் ஊத்துவாங்க அந்த 'ஸ்டாரோட' குஞ்சு-கல காணோங்க பாலில்ல! ஒருபுள்ள போச்சுதுங்க அபலைங்க சோகமும் பார்த்தாச்சி அனுதாபமும் எரக்கமும் பட்டாச்சி பழய துணிமணி கொடுத்தாச்சி சுனாமி சோகமும் போயாச்சி மிருனாள் சென் -ஆ! யாருங்க? ஜெயலச்சுமி செரினா தெரியுங்க ஐயோ! '…
-
- 6 replies
- 1.8k views
-
-
தமிழீழ தேசியக்கொடி வீரத் தேசக் கொடிபறக்குது விண்ணில்பாரடா - அது வீறெழுந்து படபடக்கும் வேகம் காணடா! தீரங் கொண்டு துடிதுடித்துச் சொல்வதென்னடா - அது தேடியுன்னை நடநடென்று திக்கைக் காட்டுதா! தீரர் நேசமைந்தர் கொண்ட திண்மை கூறுதா - நின்று தீயைப்போல தீமைகொன்ற தூய்மை சொல்லுதா? ஊரைக் காத்த தெய்வமெண்ணி உள்ளம்சோருதா - இல்லை உண்மைகண்டு ஒங்கிமீண்டும் உயர்பறக்குதா? என்ன சொல்லத் துடிதுடிக்கு தென்றுகேளடா - அது எத்தர்கூட்டம் ஏனிங்கென்று எம்மைக் கேட்குதா? மன்னன் ஆள வன்னிமண்ணில் நின்ற கொடியிதா - அங்கு மற்றவர்க்கு என்னவேலை மண்ணில் என்குதா? கன்னம் வைக்கும் கள்ளர் கூட்டம் கண்டு பொங்கியே -அது கண்சிவந்து காற்றிலாடிக் காணும் தோற்றமா? சின்னப் பெண்கள் மேனிதீண்டி சுட்டெரிக்கையில் - தானு…
-
- 6 replies
- 1.1k views
-
-
நிலைத்தாயே வாழ்க! -------------------------- வாழ்த்தும் வயதுமில்லை வார்த்தைகளும் வரவில்லை வாழும் காலத்தில் வாழும் வரம் பெற்றதனால் மானமுடைத் தமிழினமாய் இப் பூமியிலே நாம்! எங்கள் தலை நிமிர சோதனையும் வேதனையும் தாங்கிய வேந்தனே காலப் பெருவெளியில் கலையாத பெருமொளியே நீலவானத்தின் ஒளித்திரளே நினைத் திங்களென முடியாது தேயாத தெளிந்த நிலை ஓயாத உழைப்பு நிலை காயாத பொன் வதனம் மாறாத புன் சிரிப்பு மறுவற்ற உபசரிப்பு நீயே நிலைத்தாயே எம்மினத்தின் மாறாத பெரும் குறியீடாய்! தமிழினத்தின் வரலாற்றில் வாராது வந்துதித்து வரலாறாய் வாழ்பவரே ஒருநாளும் மறையாது நிலைத்துவிட்ட மாமணியே வாழ்க! வாழ்க! வாழ்க! 26.11.2011
-
- 6 replies
- 977 views
-
-
தாரிலும் சுண்ணாம்பிலும் குறியிட்டு செத்த கிளுவங் கதியாலிலும் பனைமட்டை வேலி இடுக்கிலும் கொழுவிவைத்த மூக்குப்பேணியெல்லாம் ஒரே உலோகத்தினால் ஆனவைதான். திசைகள். வடக்கென்றும், கிழக்கென்றும் என்னதான் கதியால் போட்டுக் கூத்தாடினாலும் ஆண்ட பரம்பரை மகுடக் கனவு எல்லா தரப்புக்கும் அழிந்து போகாதவைதான். யாழாதிக்க வசந்தமும் கிழக்கு மேட்டின் முல்லையும் ஏகபோக ஆளுகையின் வெண்புறாவும் கறுப்பு வெள்ளைக் காலத்துக்கும் முன், வெளியிலாடிய வட்டக்களரி, வரப்பிலாடிய கும்மி, கோல், அலையில் பாடிய அம்பா காலத்துக்கு முன்பிருந்தும் இன்றைய உய்யிலாலா வண்ணங்கள் வரை ஒரே தோலினாலானவைதான். வசந்த முல்லை போலே வந்து எத்தனை புறாக்கள் சதிராடினாலும், நடை மாற்றினாலு…
-
- 6 replies
- 1.1k views
-
-
கோவத்தின் பெறுமதி அறியாதவன் கண்ணீரின் கனதி அறியாதவன் அடிமைத்தனத்தை அழகென ஆரதிப்பவன் மானத்தின் மகத்துவம் புரியாதவன் அவன் யார்? நான் நான் இழவு வீட்டில் சண்டை பிடித்தேன் மயானத்துக்கு செல்ல முடியாத பிணங்கள் முற்றத்தில் நாறுகின்றது பாடை தூக்க நாலுபேரை ஒன்றாக நிற்க விடவில்லை ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழியை ஊர் ரெண்டுபட்டால் கொன்றவனுக்கு கொண்டாட்டமென்று புதுமொழியாக்கியவன் பேரினவாதம் கோவணங்களை அவிட்டு கொடியாய் பறக்கவிட்டுள்ள நிலையில் உரிமையாளர்கள் என்கோவணம் பெரிது உன்கோவணம் பெரிது என போட்ட சண்டையில் முன் நிற்பவன் சாவு வீடு நோக்கி நட்பு பகை மறந்து செல்வார்கள…
-
- 6 replies
- 794 views
-
-
நினைவுப்படிமங்களிலிருந்து எழும் ஓலக்குரல்கள் ஈனஸ்வரத்தில் ஒலிக்கிறது யாருக்கும் கேளாமல், மனக்காயங்களிலிருந்து கசியும்நிணநீர் கோடுகளாய் உறைந்து வடுக்களாய் வதைக்கின்றன , யாருக்கும் தெரியாமல் , வலுவிருந்து சில கணம் சோர்ந்து ஓய்கிறது_ உடல் கனமாய் விழுகிறது . துரோகியா நான் ? ஓரத்தால் விலத்திவந்து _இங்கு வீரக்கதைகள் பேசவில்லை செத்தவர்கள் மீதேறியென்று _அந்த சரித்திரம் பாடவில்லை , நெருப்பில் நீராடிய மறவர்களின் தேகவாசமிது _ என்று தேவாரம் இயற்றவில்லை . குண்டுவிழும் தேசத்து தெருக்களில் ஆற்றாமையுடன் அலைந்த அதே கணவிளைவுகளே இங்கும் துரோகியா நான் ?
-
- 6 replies
- 1.8k views
-
-
மலர்ந்தது புத்தாண்டு !! காலமகள் பெற்றெடுத்தாள் மீண்டும்ஒரு மழலை - நம் கண்ணெதிரே தவழவிட்டாள் புதியதொரு வரவை! ஞாலமெலாம் மகிழ்ந்திருக்க மலர்ந்தது புத்தாண்டு - எழு ஞாயிறுபோல் உதித்ததம்மா நம்மையெலாம் ஆண்டு! ஆண்டுதொறும் அவனிதனை ஆண்டுகொள்வ தால்தான் - இதை "ஆண்டு"எனநாம் அழைத்தோமோ! அரியதொரு பேர்தான்! மீண்டுமொரு படிக்கல்லைத் தாண்டுகின்ற தால்தான் - நாம் மென்மேலும் புத்"தாண்டு"என் றழைத்தோமோ? நேர்தான்!... வான்புகழ்சால் தமிழா,நீ தாண்டுவதற் கென்று - இவ் வையகத்து வாழ்க்கைதனில் எத்தனையோ உண்டு! தான்பிறந்த மண்சிறக்க, தடைகளெலாம் வென்று - நீ தாண்டிடுவாய்! தழைத்திடுவாய், சாதனைகள் கண்டு!…
-
- 6 replies
- 2.6k views
-