கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பிள்ளைகள் பெண்ணாய் பிறந்து விட்டதே தங்கம் வாங்கிச் சேர்க்கவேண்டும் நிலம் வாங்கி சேர்க்க வேண்டும் செலவை குறைத்து சேமித்த பணத்தை வங்கியில் சேர்கனும் என்று ஏங்கித் தவிக்காதீர்கள் தூக்கம் மறந்து துவழாதீர்கள் துக்கம் கொள்ளாதீர்கள் நீங்கள் ஆற்ற வேண்டியது ஒன்றே ஒன்று தான் பெண் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுங்கள் எதையும் எதிர்த்து ஏறி மிதித்து வாவென்று தன்…
-
-
- 5 replies
- 1.5k views
- 1 follower
-
-
பகவான் தத்துவஞானி ஓஷோ காமத்தை துறந்தால் பரிபூரண நிலைய அடையலாம்னு சொல்லி , காமத்தில மனதை ஒடுக்கணும்னு சொல்லி தியான வகுப்புகள நடத்தி பெரிய சர்ச்சைய கிளப்பினாங்க . இப்போ இந்த லவ்வேர்ஸ் கடவுளை பாக்கிறாங்களாம் . உங்க கருத்துங்கள எழுதுங்க . அடிக்காதீங்க . ஓக்கேயா ? முதலில் அறிமுகம் கொஞ்சமாய் சினிமாவை அலசியபின் செக்ஸ் பற்றிய தடுமாற்றமான துவக்கம் மெல்ல பாதுகாப்பான உறவில் கைவசம் காண்டம் இல்லாமலும் முடியும் என்றேன் கண்களை ஊடுருவிய கண்கள் நிலைக்க ஆக்ரோஷமான காமத்தை விரும்புகிறவள் நீ என்றாய் ஒரு பறவையைப் போல் என் காமத்தை அவசரப்படுத்த முடியாது நான் பாம்பு உன்னையும் பாம்பாக பற்றிக்கொள்ளத்தான் முடியும் என்றேன் அவளின் புன…
-
- 5 replies
- 1.8k views
-
-
பாலி ஆறு ஏன் அடிமையாக்கப்பட்டது? தீபச்செல்வன் மணற்ப்படுக்கைகளில் எழுதப்பட்டு விதைபட்ட உன் கவிதைகளும் கதைகளும் மூடுண்டு கிடக்கின்றன நண்பனே! பாலி ஆறு எப்படி இருக்கிறது? என்ற உனது முதலாவது வார்த்தையிலேயே தாங்க முடியாத என் பதில்கள் உதிர்கின்றன நமக்கொரு பெரிய கனவு இருந்தென்பதை வரலாற்றில் பரப்பிச் செல்லும் பாலியாறு என்ன தவறிழைத்தது? நண்பனே நீ கண்ட கரையினில் பெண்கள் யாருமில்லை வீழ்த்தும் கைகளை மீறி நணல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன மீன்கள் வெளியில் வருவதுமில்லை துள்ளுவதுமில்லை யாருடைய கால்த்தடங்களுமில்லாத பாலி ஆற்றங்கரை இருண்டு கிடக்கிறது ஆற்றங்கரை மரங்கள் சலசலத்து மண்ணின் கவிதைகளை பாடிக் கொண்டேயிருக்கின்றன. குருதியை நிலத…
-
- 5 replies
- 1.5k views
-
-
நீ இல்லாத நிகழ்காலம் இப்போதும் இனிக்கிறது உன் கவிதைகள் உன் காதலைச் சொல்லிய அந்தக் கணத்தின் இனிமையைப்போல! உன் அறையெங்கும் சுழல்கிறது சுவாசம் தீராத எழுத்தின் தாகத்தோடு! உன் கணினியில் வழிகிறது நலம் விசாரிக்கும் உன் நண்பர்களின் மின்னஞ்சல்கள்! உன் முடிவுறாத இரவின் உரையாடல்கள் கைபேசியில் உறைந்துகிடக்கிறது மௌனங்களாக! உன் கலந்துரையாடல்களால் களைகட்டும் நம் வீடு நிசப்தம் தாங்கிய மௌனத்தின் சாட்சியாய்... உன் வளர்ப்பு நாயின் உண்ணாநோன்பும்! உன் சாம்பல் கிண்ணம் கங்குகள் காணாது காத்துக்கிடக்கிறது நீயே சாம்பலானது அறியாமல்! பழுத்த இலையின் வெம்மைபோல் சுட்டெரிக்கிறது உன் நினைவுகள் நம் கிராமத்தின் பாதையெங்கும் ய…
-
- 5 replies
- 1.5k views
-
-
எழில் பொங்கும் என்னூரின் ஏகோபித்த நினைவுகளோடு என் பயணம் தொடர்கிறது திருவிழாவின் தெருக்களில் தென்றலாய் வந்துபோனவைகளும் வீதியில் தேரோட நீரோட்டமாய் வந்து போனவைகளும் மனதில் மங்கலாக வந்து போகின்றன மார்கழி மாதத்து மரகதத் துகள்களாய் இன்னும் நெஞ்சத்து அடிப்பரப்பில் அடர்த்தியாய் ஒட்டிக்கொண்டபடி அணைத்து ஆறுதல் தருகின்றன வீட்டோரத்து வெடிப்புக்களின் இடைவெளிகளில் தவழும் எறும்புகளின் வரிசையின் கூட்டுப்போல் எல்லையற்று நீள்கின்றது நினைவு கால்கள் புதையும் கனவுகளோடு கண்விழித்த காட்சிகள் இன்னும் பசுமை குலையாத பச்சை வயலாய் பள்ளிகொள்ளும் போதில் வந்து போகின்றன எத்தனை கடந்தும் அத்தனையும் அசைக்க முடியா ஆணிவேராய் அடிமனத்தின் படிக்கட்டுகளில் ஆழப்பதிந்து அல்லல் செய்தபடியே
-
- 5 replies
- 791 views
-
-
வாரஇறுதி விடுமுறைகூட வருடங்களின் பின்புதான் ஓய்வின்றிய உழைப்பில்.. தொலைந்து மறையும் தொலைதூர உறவுகள் தொலைபேசி அழைப்பில்.. முழுநாளும் வேலைக்குள் தடம்மாறும் நண்பர்கள் முகம்பார்க்க முடியாமல்.. தொலைவில் இருந்து தொலைபேசிக்குள்ளே குடும்பம் நடத்தி.. தூங்கியெழ மட்டும் வீடுவந்து செல்லும் குடும்பத்து உறவுகள்.. பம்பரமாய் உழைக்கும் பரதேசி வாழ்க்கையின் பாழாய்போன கொள்கை.. பசிக்கும்போது உணவு களைத்தபோது தூக்கம் கிடைத்தாலே போதும்.. வருஷங்களுடன் சேர்த்து வாழ்க்கையை தொலைக்கும் வலிமையான வட்டத்துள்.. முடிவற்ற பாதையில் தெளிவற்ற பயணமாய் புரிந்த…
-
- 5 replies
- 1.7k views
-
-
*** வசம்பெனும் குருவி குசும்புகள் பலசெய்து வலையிலே குடும்பமாய் வாழ்ந்தபின் மெளனமாய் ஓய்ந்து போனதென்ன? ஓடிப் போனதென்ன? *** புதிதாய் நண்பர்களை சேர்ப்பதிலும் ஏலவே நட்புறவு கொண்டோரின் இதயத்தில் நிரந்தரமாய் நிலைத்திருக்கும் நோக்குடனே நீண்டதூரம் சென்றாயோ? *** நிச்சயம் இன்றென அநித்தியம் நாளையென அன்றெமக்கு அன்புடன் பகர்ந்த அறிவுரையை மெய்ப்பிக்க நினைத்தே நீ பொய்யாகிப் போனாயோ? *** தருக்கங்கள் நிறைந்த கருத்தாடல் தளத்தில் சுடுகின்ற சூரியனல்ல நான் குளிர்விக்கும் நிலவென்று எமக்கு உணர்த்தவே நீ அமரன் ஆகினாயோ? *** குரலறிந்து, முகமறிந்து, முக…
-
- 5 replies
- 4.3k views
-
-
நாங்களோ எம் போரைத் தொடர்ந்தோம்............. ------------------------------------------------------------------------------------------ சாவதெனினும் தன்மானத் தமிழராய் சாவதென்ற முடிவுடன் தொடர்ந்தார் தொடர்ந்ததால்தானே உரிமைப் போரை பிராந்தியம் கடந்து நகர்த்திட வைத்து அனைத்துலகிடம் கொண்டு சென்றதும் அதனையும் மீண்டும் நயவஞ்சகத்தாலே கர்ணனைக் கொன்ற கண்ணனைப்போன்று கைங்கரியத்தை அரங்கேற்றிய அசிங்கமான கிந்தியர் அரசது வங்கதேசத்திலும்காஸ்மீரிலும் கைக்கொண்ட கொடுமைகள் போன்று மீண்டும் வந்து எங்கள் தேசத்திலும் பேரழிவினை விதைத்து இனத்தினையழித்து ஈழத்தீவிலே தமிழினத்தை இல்லாதுசெய்யும் பொல்லாத பொழுதொன்றை வென்றிட வேண்டி மெளனம் காத்திட ம…
-
- 5 replies
- 1.3k views
-
-
இனவெறி கொண்ட சிங்களவன் கொலைவெறிதாண்டி மதவெறி தாண்டி ஏதுமறியாப் பிஞ்சு பிறந்தபின் கொன்ற காலம் போய் கருவிலிருந்ததை மட்டும் கலைத்தழித்தது போய் தாயொடு சேய் சேர்த்துக் கொல்லும் காலமடா தண்ணீர்சிந்திய தேசத்தில் இன்றுகண்ணீர் சிந்தியே வெள்ளபெருக்கோடுதடா கொதிக்கும் சட்டிக்கும் தண்ணீர் படக்கூடாது வெடிக்கும் அடிக்கும் திண்ணையில் என்னை விடக்கூடாது ஒடிக்கும் அந்த நொடிக்கும் எனக்கும் இருக்கும் பந்தம் துடிக்கும் அப்போது வந்தவர் மனமெல்லாம் துடிக்கும் அதைப்பார்த்து நாலஞ்சு நன்றாக இங்கே நடிக்கும் என்றெண்ணி கொடிக்கும் வளரும் இடும்பை கூட மடிக்கும் தன் கொடி நிலம் நோக்கி வெடிக்கும் என் நெஞ்சு கொடுக்கும் அவர்களுக்கு விளக்கம் மூலப் பிரதியைக் காண இங்கே ச…
-
- 5 replies
- 1.2k views
-
-
தடமரித்த லாகா அலைஇ மகளிர் படமெடுத்துப் போட்ட அது தேடின் திரும்பா அலைநின் விழியிரண்டும் ஆடவள் கண்ணில் உளவே நுரைபால் இனிமை இலமே உளது நுரைக்கும் அவளின் நுரை இரைச்சல் அடங்கி அலைபுரளும் பெண்டிர் உரைச்சல் தவழ்ந்து வரின் முத்துக்கள் என்ப விலையில்லா நல்மணிகள் அத்துணையும் கேசத்தின் ஈறு அசையும் அதரத்தே தோற்குமே ஈர்ப்பில் இசையும் கடலின் அலை தொல்கவின் பேராழி நீலம்போல் எஞ்ஞான்றும் நல்கவின் பெண்டிர் சிறப்பு வற்றா கடலன்ன அன்புடையாள் வற்றினள்நீர் வற்றிய வற்றிலும் பற்று கடல்குடித்தால் தீராது தாகம் மகளிர் மடல்குடித்தால் தீர்ந்து விடும் அஞ்சுதல் துஞ்சுதல் விஞ்சுதல் எல்லாமே வஞ்சியர் பின்னும் உள
-
- 5 replies
- 2.2k views
-
-
அம்மா சமாதி பன்னீர் வடிக்கும் கண்ணீரில் அம்மா சமாதியே அரை அடி உயரும். சசி துடைக்கும் கைக்குட்டையில் காவிரி டெல்டா ஒருபோகம் விளையும். அம்மாவை நினைத்தாலே அழத்தான் முடியும். அவர்களுக்கோ, அழுகை சிரிப்பின் முக்காடு சிரிப்பு அழுகையின் வேக்காடு. அழுகைப் போட்டியில் யாருக்கு முதல் பரிசு?. தடுமாறுது தமிழகம் அழுகாச்சி காவியத்தில் அமுக்கி எடுக்குது ஊடகம். சிரித்ததனால் நான் மனிதன் என்பது பன்னீரு சிரித்ததனாலேயே நீ மனிதனில்லை என்பது வெந்நீரு. நீ பெரிய குளமென்றால் நான் மன்னார் குடி! அம்மாவுக்கே நான்தான் ஆன்மா அடைக்கலம் தருமோ அம்மா ஆன்மா? மெரினா தியானத்தை கலைக்கும் சின்னம்மா! பேயைப் பற்…
-
- 5 replies
- 2.3k views
-
-
எட்டுகோடிக்கு மேல்லானோர் எழுதி ஒட்டிய கடிதம் கேட்பார் அற்று ஆசியாவின் ஒரு பெருநிலத்தில் பரவி கிடந்ததது சிதறி இருந்தது .. எமக்கான பதிலையும் நாம் யார் ? என்னும் கேள்விக்கு விடையும் அதில் கேட்டு எழுதி இருந்தோம் கவனமா ஆனாலும் அதை உலக பெட்டியில் போட ... அஞ்சி பயந்து நடுங்கி கைகளில் வைத்து பைகளில் மறைத்து அன்னியர் பாரது .. பக்குவமா தலைமுறைகளுக்கு மாற்றி மாற்றி கொடுத்து பாதுகாத்து வைத்த கடிதம் ... வள்ளுவன் வந்தான் கம்பன் கூட வந்தான் நக்கீரர் நாவலர் என பலர் வந்து போயிம் எமக்கான கடிதத்தின் முகவரி கிடைக்க வில்லை நாங்களும் வருந்தவில்லை தேடியபடி இருந்தோம் .. கார்த்திகை திங்கள் வேளையில் வல்வையில் கிடைத்தது முகவரி உலக தமிழரின் நிஜ வரி தேங்கி கிடந்த அஞ்சல்கள் எல்…
-
- 5 replies
- 974 views
-
-
இந்த வார குங்குமம் இதழில் (25.4.16) வெளியாகியுள்ள எனது குறுங்கவிதை "சொல்", யாழ்களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! சொல் ஆயிரம் இருந்தாலும் நான் அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது என்கிறார்கள். நமக்குள்ளே இருப்பது ஆயிரம் இல்லை ஒன்றுதான், அதை வேறெப்படிச் சொல்வது?
-
- 5 replies
- 2.2k views
-
-
கார்த்திகை பெற்றெடுத்த கல்லறைகளே.. கலங்கரை விளக்குகளாய் நீவிர்... மனக்கரைகளில் நிமிர்ந்து நிற்கையில் கார்த்திகைப் பூக்களுக்கு கண்ணீர் விட ஏது தேவை.?! கார்கால இருளின் மின்னல்களே ஒளிரும் தாரகைகளாய் நீவிர் விண்ணெங்கும் நிறைந்திருக்க.. காட்டுச் சிறுத்தைக்கு சிணுங்க ஏது தேவை...?! தேசக் காற்றின் வாசமான இளம் தென்றல்களே... உயிர் மூச்சுக்களாய் நீவிர் சுவாசப்பைகள் எங்கும் நிறைந்திருக்க... எங்கள் வாகைக்கு வாடி நிற்க ஏது தேவை..?! கடல் கொண்டாடும் அலையாகி நிற்போரே ஓயாத அலைகளாய் நீவிர் உயிரோடிருக்க தத்தித் திரியும் அந்தச் செம்பகத்துக்கு சோர்ந்திருக்க ஏது தேவை..??! கால வெளியில் கோலங்கள் மாறலாம் தேசங்கள் அலங்கோலமாகலாம் கண்மணிகளாய் நீவிர் …
-
- 5 replies
- 621 views
-
-
மீண்டும் பேரிடி மீண்டும் பேரிடி!மூண்டது போரடி! எங்களின் மண்ணிலா பகைவனின் காலடி? பேரினவாதமே இது வேண்டாத தலையிடி! எரிகுழல் கொண்டு எத்தனை குண்டு கொண்டுவந்தாலும் பொடிப்பொடியாகும் மறத் தமிழரின் கால்மண் பட்டு! 'வெட்டியாய்" எம்மை நினைத்தோ வந்தாய்! "கொட்டியா" பலம் கண்டாய் இனி வேண்டாம் அப்பு சுருட்டு உன் வாலை! மகிந்தவுக்கு உது வேண்டாத வேலை கடனைப் பெருக்கி கைகட்டி நின்று வாங்கினாய் ஆயுதம் புலிக்கே என்று! உந்தச் சொல்லு பலித்தது சரிதான் புலிக்கே ஆயுதம் கொண்டு வந்தாய் எம்மண்ணில் எமக்கே வந்து தந்தாய்! இதுதான் இந்த ஆண்டுத் தொடக்கம் இனியும் வெடிக்கும்! தெற்கில் தெறிக்கும்! கிழக்கின் விடியலில் புலிக்கொடி பறக்கும்!
-
- 5 replies
- 2.1k views
-
-
அழகு மலர்களின் மெளன மொழியில் காதல் கொண்டு.. விரியும் இதழ்களின் காந்தக் கவர்ச்சியில் கவர்ந்து..கள்ளுண்டு கலவி கண்டு கருத்தரிக்க உதவுகிறான் காதல் தூதுவன் இவன்..! அந்த விசயத்தில் இவன் ஒரு "பிளே பாய்"..! மானுட உலகம் மாற்றி அமைத்திட்ட இயற்கையின் நியதியில் கருத்தடை மாத்திரைகள் கருப்பைகளுக்கு விடுமுறை தர யோனிகளுக்கோ ஓய்வில்லாத உரசல்கள்..! உராய்வு நீக்கிகளுக்குக் கூட அங்கு பஞ்சம்.. கிழியும் அந்த உறைகளின் வியாபாரமோ இன்று உச்சியில்..! நிமிட நேர உள்ளக் களிப்பில் போதை கண்டு.. உடலில் சேரும் அந்த மாத்திரை நஞ்சுகளின் தாக்க அறிதல் இன்றி கூடிக் களித்திருக்குது மானுட சமூகம்..! பாவம் இவன் அதே.. மானுட உலகின் அரக்கச் சிந்தனையில் பூச்சி கொல்லி…
-
- 5 replies
- 1k views
-
-
நேற்றுவரை ஒன்றாய் வாழ்ந்தவரை, வீரச்சாவு என கேட்கும் கணங்கள் மனம் பிழிந்து சாறாகும் நிமிடங்கள் அவர் உறவுகளை காணும் நிமிடத்துளிகள் உலகில் யாருக்குமே வரக்கூடாது எங்கள் பணிகளுக்குள் உறவுகளுக்கு ஆறுதல் சொல்லி இறுதி நிகழ்வை நடாத்தி எல்லோரும் போன பின் துயிலும் இல்லத்தில் இருந்து நாங்கள் அழுவோம் சிலர் ஊமையாய் அழுவர் சிலர் ஒப்பாரி வைப்பர் சிலர் சாமம் தாண்டியும் மண்ணில் வீழ்ந்துகிடப்பர் கூடி அழுதவரை இன்னொருநாள் விதைத்துவிட்டு எஞ்சியவர் துடித்து அழுவோம் யாரும் குறிப்பெடுக்கா சோகம்
-
- 5 replies
- 705 views
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
புதிய கிளிநொச்சி அழகு தேசமே எழில் கொஞ்சும் பேரழகே-உன் இறக்கை ஒடிந்து இயற்கை வற்றி இடிந்து போனதேனோ உறக்கம் அறியா-எங்கள் ஊர்களின் மெளனம் தான் என்ன..? பட்டுப் போய் கிடக்கும்-என் பழைய ஊரே கிளிநொச்சி மண்ணே-நீ கிலி கொண்டு இருப்பதேனோ...? உன்னில் கொட்டுண்டு கிடக்கும் அத்தனை அழகும் எங்கே...? சாலையோரம் உயர்ந்து நின்ற கட்டடங்களே........... டிப்போ பேருந்து தரிப்பிடமே... யாருக்கு ஏது செய்தீர் தெருவின் ஓரம் சிரித்து நின்ற சந்திரன் பூங்காவே உன்மீதும் புதியதோர் சிலையா..? சிங்கள வெறியன் நினைவுத் தூபியா நீ அதிர்ந்தாவது வீழ்த்திடமாட்டாயா..? இதமிதமாய் குளிரவைத்த சேரன் பாண்டியன் சுவையூற்றுக்களே உங்கள் அத்திவாரங்கள் எங்கே...? நீதி …
-
- 5 replies
- 1.7k views
-
-
செக்கு செக்கில் கட்டிய மாடுகள் சுற்றின. போராட்டம் முடிச்சவிழ்த்தது. பழக்கத்திலிருந்து விடுபடாமல் செக்கையே திரும்பத் திரும்பச் சுற்றின. முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டிருப்பதை உணர்த்தியபடியே போராட்டம் வளர்ந்தது. அருகாமையில் குண்டுகள் வீழ சிதறித் திக்கெட்டும் பிரிந்தவை பசுமை வெளிகளையும், பனிபடரும் குளுமை தேசங்களையும் தம் வாழ்விடங்களாக மாற்றிக் கொண்டன. வழமையில் இருந்து மாற்றமடையாது முடிச்சுகளுக்குள் தத்தம் கழுத்துகளை நுழைத்து அரவி அரவித் தழுவும் சுகிப்பில் திளைத்தபடி இரைமீட்டிகள் சுற்றி வருகின்றன. நாகரீக வெளிகளின் மெருகேற்றலில் செக்கிழுப்புகள் பரவி விரிகின்றன.
-
- 5 replies
- 4.6k views
-
-
பிரபாகரனைத் தொலைத்து விட்டுத் தேடிக்கொண்டிருக்கும் சிங்கள அரசே பிரபாகரனை உனக்கு நான் காட்டுகிறேன் உன் தடுப்பு முகாம்களின் முள் வேலிகளுக்கு மேலாய் சற்றே எட்டிப்பார். அங்கே தாய் தந்தையரை இழந்து பசியால் வாடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு குழந்தையும் நாளைய பிரபாகரன்கள் அவர்கள் பொங்கி எழும் வேளையில் உன் ஆணவம் பிணமாகும் http://gkanthan.wordpress.com/index/eelam/where/
-
- 5 replies
- 9k views
-
-
வறுமை எல்லோருக்கும் பொதுமை ..... உலகில் சதித்தவனும் .... சாதிக்க போகிறவனுக்கும் .... மூலதனம் - வறுமை ....!!! இவனுக்கோ .... பிறப்பிடமே - வறுமை - என்றால் .... கொஞ்சம் கேட்கவும் சகிக்கவும் .... உங்களுக்கு கடினமாய் தான் .... இருக்கப்போகிறது .....!!! யார் இவன் ...? அடிப்படை வசதிகள் குறைந்த .... அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ... தன்மானத்துடன் காத்திருந்து .... கிடைத்தால் சாப்பிட்டு .... கிடைக்கா விட்டால் ஈரதுணியை .... வயிற்றில் கட்டி வாழ்ந்த .... கௌரவம் மிக்க வறுமை குடும்ப .... நாயகன் - " ஆதவன் ".......!!! இவனது வாழ்கை தற்காலத்துக்கு .... எந்தளவுக்கு பொருந்தும் ... ஏற்கும் என்று தெரியாது .... ஆனால் இவனின் வாழ்கை .... இவனு…
-
- 5 replies
- 1.4k views
-
-
-
ஏனிந்தக் கேள்வி ? ----------------------------------------------------------------------------- எப்படியெனப் புரிகிறது. ஏனெனப் புரியவேயில்லை. எந்தப் பதிலாலும் திருப்திகொள்ளாது ஏந்தச் சாக்குப் போக்குகளாலும் ஏமாற்றுப்படாது நிரந்தர விழிப்பிலிருக்குமொரு ஒற்றனைப்போல் கேள்வி மட்டும் தொடர்நது கொண்டேயிருக்கிறது சொந்தப் பதில்கள் இரவற்பதில்கள் சொத்திப் பதில்கள் சுரணையற்ற பதில்கள் குள்ளப் பதில்கள் கூனற்பதில்கள் குதர்க்கப் பதில்கள் குருட்டுப் பதில்கள் குழந்தைப் பதில்கள் வயோதிபப் பதில்கள் அழகிய பதில்கள் அற்பப் பதில்கள் ஆரவாரப் பதில்கள் ஊமைப்பதில்கள் நூதனப் பதில்கள் நொண்டிப்பதில்கள் ஆயிரமாயிரம் பதில்களெனப் பதில் வெள்ளம் பாயும் போதும்…
-
- 5 replies
- 1.8k views
-
-
விரல் இடுக்கில் வீழ்ந்து கிடக்கிறது உயிரும் உலகமும் .. கடைசித் துளியினை இரசித்து விட்டு இறந்து போகலாம் நா . தேடுகிறது ... பொங்கி வழியும் சம்பெயின் விம்மி நிக்கும் நீ ..
-
- 5 replies
- 739 views
-