கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
போறன் என்றோ ... போயிட்டு வாறன் என்றோ .. சொல்லிவிட்டுப் போகாத என் அண்ணன் அடிக்கடி வந்து நினைவில் நிக்கிறார்! அவரைப் பாத்தா ரெண்டு கேள்வி கேக்கோணும்; எண்டுதான் நான் நினைச்சிருந்தன்! -ஆனால் நேத்திரவு கூட கனவில வந்தவர்... என்னால ஒண்டுமே கேட்க முடியேல. சத்தியமாச் சொல்லப் போனால்.... அண்ணை செய்தது மெத்தச் சரி! ஏன் தெரியுமோ...!?? எங்கட சனத்தின்ர குணம் உங்களுக்குத் தெரியாதே? போறன் எண்டு சொல்லிட்டுப் போனாலும்... போத்திக்கொண்டு படுத்திருப்பாங்கள்! போயிட்டுவாறன் எண்டு சொல்லிட்டுப் போனாலும்... போத்திக்கொண்டுதான் படுத்திருப்பாங்கள்! என்னைப் பொறுத்தவரையில்........ அண்ணை எல்லாத்தையும் செய்திட்டார்! இதுக்குமேலயும் அந்த மனுஷனே வரோணும் உங்களுக…
-
- 3 replies
- 857 views
-
-
பெண் மலர் தான் மலிவல்ல...?! பெண் மலர் தான் மலிவல்ல... சில்லறை வண்டுகள் ரீங்காரமிடும்போது , சில்லிட்டு உறையாமல் சிக்காமல் மீண்டு எழுந்தால்; பெண் மலர் தான் மலிவல்ல...! ஆப்பிள் தேவதைகள் தான் ... அழுகிப் போகாமல் காக்கும் வரை; சாக்லேட் தேவதைகள் தான் ... சாக்கடையில் நழுவாமல் தன்னைத் தானே காக்கும் வரை; பெண் மலர் தான் மலிவல்ல! ஆதாமின் முதுகெலும்பு ஏவாள் என்றால்... ஏவல்களில் தேய்ந்து போன பெண்ணியத்தின் முதுகெலும்பில் விரிசல்களை எண்ணக்கூட வராதொழிக்கும் ஆதாமை சட்டை செய்யாது விட்டு விடுதலையாகி சிட்டுப் போல் சிறகு விரித்து பறந்து திரிந்து ஊரில் பல…
-
- 3 replies
- 1.3k views
-
-
எனக்கு என்னாயிற்று...? என்ன நடக்குது...? ஒன்றுமே புரியவில்லையே...! எல்லாமே வித்தியாசமாய்த் தெரிகிறது!! அனைத்துமே புரியாத புதிர்களாய்!!! சின்ன வயசில் ஓடி விளையாடிய போதும், நான் நன்றாகத்தான் விளையாடுவேனாம்; அம்மா சொன்னா...!? பள்ளிக்கூடத்தில படிக்கும் போதும், நன்றாகத்தான் படிப்பேனாம்; ஆசிரியர் சொன்னார்கள்...!? வேலை செய்யும் இடத்தில் கூட, நன்றாகத்தான் வேலை பார்க்கின்றேனாம்; எல்லாருமே சொல்கின்றார்கள்...!? எப்பவுமே சாதரணமாய்த்தான் இருப்பேன்... அது எனக்கே தெரியும்!? இப்படி எல்லாமே நன்றாகத்தானே இருக்கு!? அப்புறம் எனக்கேன் இந்தக் குழப்பம் ??? என்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் போதெல்லாம், எனக்குள் எந்தக் குழப்பமும் இல்லை…
-
- 4 replies
- 2.1k views
-
-
காதலித்துப்பார்........... தேன் கசக்கும் வேப் எண்ணை இனிக்கும் அம்மா சொல்வது காற்றில் பறக்கும் காதலி சொல்வது வேதவாக்காகும், கெட்டவனாய் ஊர் உலகத்துக்கு தெரிவாய் நல்லவன் வல்லவன் ஆவாய் உன் காதலிக்கு, பகல் இரவாகும் சூரியன் சுகமாகும் இரவு பகலாகும் நிலவு சுடும் நீ உன் காலில் எழும்பி நிற்க முடியாதவரை சொல்வாய் உன் சிரிப்பு என்னை பலவீனமாக்கி விட்டது என்று பலம் பெற மீண்டும் ஒரு முறை சிரியேன் என்பாய் உன் வங்கியில் இருப்புக் குறைய கதலியின் கண்ணில் வெறுப்புத் தெரியும் உன் மடியின் கனம் குறையும் அவளை தேடி இன்னுமொரு மடி வரும் வங்கியில் இருப்புடன் தெளிவான வானமாய் உன் மனம் இருந்திருந்தால் நீ இந்த சாக்கடைக்குள் வீழ்ந் திருக்கமாட்டாய…
-
- 8 replies
- 1.1k views
-
-
எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து நண்பி ஒருவர் இமெயிலில் அனுப்பிய கவிதை ஒன்றை யாழ்களத்தில் பகிர்கின்றேன். ஈழமுரசு "நகைச்சுவை இரவு" நிகழ்வில்(06.08.2011) வாசிக்கப்பட்ட கவிதை ஆயிரம் மைல் கடந்து அன்னைதேசம் தனை பிரிந்து அனாதைகளாய் ஆனபோதும் அண்ணனாய் தம்பியாய் பிள்ளைகளாய் உற்ற உறவுகளாய் அன்போடு அரவணைக்கும் என் புலம் பெயர் சொந்தங்களே வணக்கம்! என் உயிரிலும் மேலான தமிழ்தாயின் உச்சிமுகர்ந்து அவள் தந்த தமிழ்ப்பாலின் பாசம் உணர்ந்து புதுவை அண்ணாவை என் நெஞ்சில் வைத்து காசி அண்ணாவின் கைபிடித்து கவிதை நான் எழுதி வந்தேன் காலம் அறிந்து! வீட்டிலே தமிழ்! தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல் தமிழ்மானம் போச்சு! தமிழனாய் பிறந்தோம் என்று பெர…
-
- 2 replies
- 857 views
-
-
பாம்பு !! உடைப்பெடுத்த ஆற்றைப் போல் பீறிட்டு எழும் ஆர்பரிப்புடன் என் முன்னே ஆடியது வரிகள் எல்லாம் அதன் தோலாக தோலெல்லாம் அதன் வரிகளாக நெளிந்து நெளிந்து சீறிக் கொண்டே ஆர்ப்பரித்தது இதிகாசங்கள் தம்மை ஏமாற்றிய தவிப்பு ஒரு கண்ணில், ஆயிரம் ஆயிரம் ஆண்டு கடந்தும் மனிதன் மீது மாறா வெஞ்சினம் அதன் மறு கண்ணில் தனக்கும் மனிசனுக்குமான தீர்க்க முடியா கணக்கை பாம்பு சொல்லியது ஒவ்வொரு வரியிலும் மனிதன் பெயர் வரும்போது வெறுப்புடன் துப்பியது பாம்பின் கால்கள் எல்லாம் நியாயம் கேட்டு வரலாறு முழுதும் நடந்து நடந்தே அழிந்து போனதாம்... அதன் காதுகள் மனிதனின் பம்மாத்து வாக்குறுதிகளால் அறுந்து விழுந்ததாம் ஏவாளுக்…
-
- 18 replies
- 8.7k views
-
-
பிரிவு பூக்கள் உதிரும்போது காம்புகள் அநாதையாகின்றன... ஒய்வு ஒவ்வொரு இறகையும் கோதிவிடுகையில் உதிர்ந்து போகிறது பறவையின் களைப்பு... கவலை துரத்தில் மைதானத்தில் புள்ளி புள்ளியாய் கால்பந்தாடும் சிறுவர்கள் யன்னலோரம் கவலைகளில் இளமையைத் தொலைத்துவிட்டு நான்.. மதம் எல்லா வீதிகளும் தொலைந்து போகின்றன நெடுஞ்சாலையில்... மரணம் ஒவ்வொரு மரணத்திலும் முற்றுப்பெறுகிறது காலம் எழுதிமுடித்த ஏதோ ஒரு அத்தியாயம்.. முயற்ச்சி மின்மினிகள் போராடுகின்றன இரவை எரித்துவிட.. மௌனம் காற்றின் சலனங்களில் கலைந்து போகிறது மரங்களின் மௌனம்..
-
- 2 replies
- 602 views
-
-
பிரிவு... நீயில்லாத நிமிடங்களில் ஒவ்வொரு நொடிகளும் எனைப்பிடித்துப் பெருஞ்சர்ப்பத்தைப்போல அணுவணுவாக விழுங்கிவிடுகின்றன காற்றில்லாத வெற்றிடமொன்றில் அடைத்து விடப்பட்டதுபோல நீயில்லாத கணங்களில் என் ஒவ்வொரு சுவாசங்களும் பெருஞ்ச்சுமையாய் இடம்பெறுகின்றன அருகேதானே இருக்கிறேன் என்று தொலைபேசியில் நீ சிணுங்கினாலும் சுடர் அணையும் சிறுகணத்தில் கனமாய் இறங்கும் இருளைப்போல சிலுவைகளாய்க் கனக்கின்றன நீயற்ற சிறு நொடிகளும் பிரிவு முடித்து உன் ஒவ்வொரு மீள்கையிலும் நீயற்ற நிமிடங்களின் வலிகளை அனுப்பிவிட்டு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாயைப்போல ஒவ்வொரு தடவையும் பூரித்துப்போகிறது எனதுள்ளம் எல்லாப்பிரிவுகளின் முடிவிலும் இன்னமும் இன்னமும் பேரன்…
-
- 2 replies
- 629 views
-
-
கடல்நாகம் சடை விரிக்கும் காட்சியினை இரசித்தபடி கண்ணாடி மணல்வெளியில் கால் புதைய நடக்கவேண்டும்
-
- 45 replies
- 7.7k views
-
-
காலை, தாமரை பூக்கும் நேரம் அல்ல, இரவு, அல்லி மலரும் நேரம் அல்ல. ஈழத்தில், நாள்களை சிங்களக்குருவிகளின் அலகுகள் திறக்கின்றன, மூடுகின்றன. அவற்றின் இறுக்கமான இரும்பு நகப்பிடிகள் நேரங்களை நிரப்புகின்றன தமிழ்ப்பிணங்கள் கொண்டு கறுப்புக் கனவுகளின் பாதை நெடுகிலும் காயப்பசியுள்ள ஈட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நனவுகளின் மார்பிலிருந்து இரத்தம் பவுத்த நெடியோடு பாய்கிறது குறுக்கும் நெடுக்குமாய் ஈழத்தில். தமிழ்மொழி பதைக்கிறது தமிழ் இயல், தமிழ் இசை தமிழ்நாடகம் எல்லாமே- போராடும் தமிழன் கைகளில் ஆயுதங்களாயிடத் தவிக்கின்றன. இங்கோ தமிழனின் பதைப்பும் தவிப்பும். வேவு பார்க்கப்படுகின்றன விசாரணைக்குக்குள்ளாகின்றன. அர்த்தங்கள் மாற்றி வைக்கப்ப…
-
- 0 replies
- 767 views
-
-
காட்டை அளித்து வீட்டை கட்டியவன் காரும் சோறும் கடையில் தின்றவன் மூட்டை கட்டி முதலீடு செய்தவன் நாட்டை காக்க மறந்துவிட்டான்...... சொகுசும் பவுசும் போதுமென்று சொக்காய் போட்டு திரிந்தவன் பரம்பரை வழக்கத்தை மாற்றவே பவுடர் பூசி வாழ்கிறான்.... கோடி கோடி சேர்க்கவே குற்றம் நிறைய செய்கிறான் கணினி யுகம் மாறியும் கடமை மறந்து வாழ்கிறான் சுமைகள் கோடி இருந்துமே சுகமாய் வாழ தெரியாமல் பகைமை கொண்ட நோக்கிலே பார் உலகை மறந்துமே வேறுலகில் சென்றுமே வேண்டிய வசதி பெற்றுமே நாசம் கொண்ட ஆசையால் நாடும் வீடும் மறந்துமே நன்மையெல்லா தொலைத்துமே பாதி உயிர் போகவே மீதி உயிர் மண்ணிலே சேரும்போது சொர்க்கமே... இனியாவது திருந்திட இமயம் வென்று காட்டடா! ஹிஷாலீ http://w…
-
- 0 replies
- 762 views
-
-
Posted by சோபிதா on 19/08/2011 in புதினங்கள் | 0 Comment நேசித்த இதயத்திற்கு பாசம் அதிகம் என்றார்கள் ஆனால் உன்னால் அறிந்து கொண்டேன். காதலித்த இதயத்திற்கு வலிகளும் அதிகம் என்று நான் உறவுகள் அற்று தனிமையில் துடித்த போது சொல்லாமல் வந்த உறவு நீ. முகவரி இல்லாத என் வாழ்க்கைக்கு முழு நிலவாய் வந்தவளே. இன்று நான் காதல் பைத்தியத்தில் கண்ணீரோடு அலைகின்றேன். உன்னை நேசித்த பாவத்திற்கு விடை கூறாமல் சென்றவளே விடை பெறும் நேரத்திலும் நினைவுகளை மட்டும் தந்தவளே இன்று உன் கழுத்தில் தாலி என்னும் பாசக்கயிரை கட்டி கணவன் என்னும் நாடகம் போடுபவனை பார்த்து எரிகின்றது என் இதயம்…… உன் வாழ்வின் எல்லை வரை சந்தோசங்கள் மட்டுமே நடை போட வாழ்த்துகின்றது என் உள்ளம் http://ww…
-
- 2 replies
- 1.9k views
-
-
ரசித்த சில குட்டிக் ஹைக்கூக் கவிதை வரிகளுக்குக் காட்சி கொடுத்தால் நன்றாக இருக்குமா என்று நினைத்தேன்... (வரிகளுக்குச் சொந்தக்காரரின் பெயரை மறக்காமல் இணைத்துள்ளேன் ) தொடரும்...
-
- 17 replies
- 17.4k views
-
-
அம்மா............... இப்பூமியில் நான் விழும் முன்னே, உன் பாசத்தை அறிந்தவன் நானே....அம்மா...! இவ்வுலகம் காணும் முன்னே, என்னை முதலில் அறிந்தவள் நீயே......அம்மா...! உன் கரு அறையின் இருளில் என்னை, நிம்மதியாகவும்,சீறாகாவும், உறங்க வைத்தவள்........நீ அல்லவா.......! அக் கருவில் நான் உட்கி கிடந்தபோதும், எந்த வசதியும் இல்லாத போதும், அக் கருவிலே பாதுகத்தவள் .......நீ அல்லவா......! உன் உயிர் துடிப்பின் தொப்புல் கோடியிலிருந்து...என்னை, உயிரோடு இப்பூமியில் ஈன்றவளே.......என் அன்னயே.....! உன் தூக்கம் துறந்து, என் உறக்கம் தந்தவளே...........என் தாயே......! உன் மடியில் உறங்கும் தருணம், அந்த வானத்தை கொண்டும், இப்பூமியை கொண்டும், அந்த நிலவை கொண்டும், அந்…
-
- 4 replies
- 1.9k views
-
-
நிலவுக்கு விடைகொடுத்த பின்னும், தூங்காத விழிகளுடன்... மனதில் பாரத்துடன்... கனவுகளும் வெறுங் கனவாகிப்போக, உன் நினைவுகளை மீட்டியபடி... வளர்ந்து தேயும் நிலவுகளோடு, அமாவாசையானது என் ஆசைகளும்!
-
- 14 replies
- 1.5k views
-
-
வரிப் புலிகள் வாழ்ந்த காலம்.. விறகு வெட்டி கட்டி கண்டி வீதி வழி நடுச்சாமம் தாண்டியும் பெண்டிர் கூட மிதித்து வைக்க ஓடிய வண்டிகள்.. யாழ் நகர் வந்து சேர செம்மணிப் பேய்கள் கூட அமைதி காத்தன...! வானரப் படைகள் வாழும் காலம்.. விறகுவெட்டியும் தூக்கில் தொங்குகிறான் மாற்றான் மனையாளொடு கட்டியணைத்தபடி. பெண்டிர் மிதிக்கா வண்டிகள் பெற்றோலில் ஓட பெற்றோர் ஓடுகிறார் அவர் பின் பிள்ளை ஓடிப் போயிடுவாளோ என்றே பதறியடித்தபடி. செம்மணிப் பேய்களை விஞ்சி.. கோத்தாவின் ஏவல் பிசாசுகள்.. கிறீஸ் பூதங்களாய் மகளிரை மட்டும் குறிவைத்து கருவறுக்கும் நிலை..! தமிழினம் ஈழத்தில் வேரறும் நிலை...! புட்டுக்கு தேங்காய்ப் பூவாய் இருந்த ச…
-
- 19 replies
- 2.5k views
-
-
கோழியின் கால்களை பிடித்து தலையை சுவற்றில் ஓங்கி அடித்து பின் சுருக்கில் தொங்கவிட்டு உரித்து குழம்புவைப்பார்கள் அப்படித்தான் அவ்வப்போது ஆட்களையும் அடித்து தொங்கவிடுகின்றார்கள் ஆனால் ஏன் என்று தெரியவில்லை திருவிழாக்களில் பறவைக் காவடிகள் குறைந்துவிட்டதால் கடவுளின் கோபம் என்றும் பேசிக்கொள்கின்றார்கள் கடவுளை குளிப்பாட்டி பவுடர் போட்டு மசாஜ் செய்துவிட்டாலும் கோபம் குறைவதாக தெரியவில்லை கடவுளின் பொண்டாட்டிமார்களுக்கு மேக்கப்செய்து திருக்கலியாணம் நடத்தி முதலிரவுக்கு அனுப்பி வைத்தாலும் கோபம் குறைவதாக தெரியவில்லை கடவுளுக்கும் சரி காவடி தூக்கும் பக்தனுக்கும் சரி கோபம் ஒரு மார்க்கமாகத்தான் எப்போதும் வருகின்றது கண்ணகியம்மன் கோயில்க் கோடி…
-
- 13 replies
- 2.1k views
-
-
நான் கேட்டுத் தூங்கிய ஆராரிரோ பாட்டில், பாதிப் பாட்டை பாடி முடித்த... பாசத்தின் உருவம் அவர்! சரியெது பிழையெது எதுவும் தெரியாத பருவம், அம்மாவைத் தாண்டினாலும்..... என் அப்பாதான் எல்லை! கண்டிப்பும் தண்டிப்பும் இருந்தாலும், அன்பு அத்தனைக்கும் உறைவிடம் அங்கேதான்! அப்பாவின் கைபிடித்து நடைபயின்ற நேரங்களும், கல்லூரிவரை கவனித்த காலங்களும், இன்றுவரை கண்முன் காட்சிகளாய்... காலத்தால் அழியாத பாசங்களின் சாட்சிகள்! உயிரைக் கொடுத்து உருவாக்கி... தன் உயிரைக் கொடுத்தும் தன் உயிராய் எனை நினைத்து வளர்த்த... என் தெய்வத்துக்கு, என்ன கடன் பட்டேனோ? என்ன தவம் செய்வேனோ?? நாளைக்கு.... நானும் ஒரு அப்பா!!!
-
- 5 replies
- 1.3k views
-
-
இன்றைய தேதியில்... மகிமைக்கு உரிய அத்தனை பேரையும், பத்துநாள் பட்டினி போட்டால் திருந்துவார்கள்! அந்தஸ்தோடு ஆட்டிப்படைக்கும் மனித எந்திரங்கள்!! அதிகாரங்களின் அதிகாரங்கள் இவர்கள்!!! அவர்களை நினைத்தாலே போதும் ... ஒலிவாங்கியோடு ஒரு ஒளிநாடாதான் எம் கண்முன் நிற்கும். அதை விட்டால் வேறொன்றும் வராது!? வராதா....????!!!! அடங்குவதும் தாங்குவதும் அவர்களுக்கும் இயல்புதான். அவர்கள் வாழும் முகவரியும் அதே எங்கள் பூமிதான். வலியும் கிலியும் அவர்களுக்கும் இருக்கு. வழியும் சளியும் ... நெளியும் பாம்பும் அவர்களையும் பயமுறுத்தும். என்றாவது ஒருநாளேனும் அவர்களை இயல்பாய் பார்த்திருக்கின்றோமா? பசித்தலும் புசித்தலும்... புசித்தபின் படுத்தலும் , காலையிலெழுதலும் காலைக…
-
- 2 replies
- 855 views
-
-
என்னுடைய அதிகபட்ச ஆசைகள் என்பதெல்லாம், நான் எழுதுகின்ற மாதிரியே வாழணும்! வாழுகின்ற விஷயங்களையே எழுதணும்!... என்பதுதான்!! எதிர்த்த மாடிக்கட்டிடங்களின் கண்ணாடிகளில், முகம் பார்க்கவேண்டிய நிர்ப்பந்தம்! அவை முகத்தில் ஓடும் சோக நரம்புகளை மட்டுமே பெருப்பித்துக் காட்டுகின்றன! எம் கண்ணீரில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளியும் வானவில்லாகி... கட்டணப் பரிமாற்றங்களில் ஊர்போய்ச் சேர்கின்றது! அந்நியத் தெருக்களில் கொஞ்ச தூரம் நடந்தவுடன், களைத்துப் போகின்றேன்... ! ஏனென்று புரியவில்லை!? பழக்கப்படாத தெருக்களும், கொஞ்சம் பழகின முகங்களும்... ஏதோ, அகழிகள் போல் பயமுறுத்துகின்றன! என்னுடைய ஊர் ஒழுங்கைகளின் புழுதிமண் வாசனையும்... மழைக்கால சகதிகளும்... இப்பொழுது, எவ…
-
- 2 replies
- 1k views
-
-
உணர்ச்சியலைகள் அடித்தோய்ந்த பின்பும் உன் கரையில் மணலையள்ளி வருடியபடி வெண்ணிலா உன்னை ரசித்திருப்பேன்! கடல் மீண்டும் கரைதொடும்... நிலவு மீண்டும் வானம் வரும்... என்ற எதிர்பார்ப்புடன், வெற்று வானத்தை பார்த்தபடி... சுடுமணலில் நான்!
-
- 4 replies
- 1.7k views
-
-
என்னை கைப் பிடித்தவன் மொழி,இன,மத வேறுபாடு பார்ப்பதில்லை அதேபோல் நானும் எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை என்னை அவன் இயக்கினான் நானும் இயங்கினேன் தோளில் சுமந்தான் நானும் அழகாக தூங்குவேன் நண்பனுக்கு அறிமுகம் செய்தான் அவன் என்னை பார்த்து வியந்தான் ஒரு நாள் வீழ்த்தினான் முன்நின்றவனை எதிரி என்றான் இன்னோரு நாள் வீழ்த்தினான் முன்நின்றவனை துரோகி என்றான் மற்றொருநாள் இவன் வீழ்ந்தான் நானும் வீழ்ந்தேன்,முனகினான் மற்றொருவன் ஒடி வந்தான் என்னை தூக்கினான் நிறுத்தினான் அவன் முனகளை இனியோரு நாள் இவனும் வீழ்வான் நான் இன,மத மொழி பார்க்கமாட்டேன் ஆனால் என்னை இயக்குபவன் .......
-
- 14 replies
- 1.7k views
-
-
கைக்கு எட்டாத வானமாய் - என் கண்களில் தெரிகின்றாய் நீலமாய்! தொலைதூர நோக்கங்கள் எதுவுமில்லை, தோலுரித்த இசைகளைத் தவிர! உன் புன்னகைக்குள் விழுந்து கிடக்கும் வீரனாய், இன்னும் இருக்கின்றேன் உயிருடன்! உன் கண்கள் இன்னும் என்னைச் சீண்டுகின்றன... கூர்மையான வாளுடன்! கொஞ்சமேனும் தள்ளிப்போடு யுத்தத்தை, நான் போராட என்னுயிர் வேண்டும்! அதுவும்.... நீதான்!
-
- 7 replies
- 1.2k views
-
-
உள்ளம் பேதலிக்க... எண்ணம் கொடு! என் வாழ்விலும்... வண்ணக் கோலமிடு! எல்லை மீறும்போது... என்னைத் தடு! "கொஞ்சக்" கனவிலேனும்... என்னை விடு!
-
- 2 replies
- 881 views
-
-
சாப்பாட்டுப் பயணங்களில்...! பசியின் ஆற்றாமையில் கவளம் கவளமாய் தொடங்கிய சாப்பாட்டுப் பயணம் இடவலமாய் கை சுழற்றி வீசுகிறது இடையிடையே கிழிந்த இலையில்! இறுதிவரை நிகழவேயில்லை பசி மாற்றம்! பசியின் துவக்கத்தில் பருக்கைகளின் மேல் துளிர்க்கும் வேட்கையும் விருப்பும் ஆசையும் ஆர்வமும் உள்ளிறங்கும் போது முற்றிலும் நீர்த்துப்போகிறது ருசியின் சுவைகளின்றி! எல்லாப் பந்தியின் நிறைவிலும் உள்நுழைவதில் பரபரப்பு வியாதியாய்! ஒரு முறையாவது பந்தியில் முதலில் உட்கார வேண்டும் சங்கல்பம் தோன்றி மறைகிறது வழக்கம் போல முட்டி மோதி இறுதியாய் இடம் பிடிக்கையில்! http://nejamanallavan.blogspot.com/
-
- 3 replies
- 1.6k views
-