கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
http://youtu.be/9eHfgta1ClQ உக்கிப்போன நினைவுகளில் துளிர்விடும் காளான் கனவுகள் ஆராதிக்க முடியாத பொழுதுகள் கரைந்து காணாமல் போகின்றது விறகில் எரித்த கரிப்பானையை கழுவுவதுபோல் துக்கம் படிந்த முகத்தை கழுவி கழுவி மீண்டும் அடுப்பில் வைத்தபடி வாழ்க்கை.. கச்சைக்குள் எதுவும் இல்லாத வெறுமை சனக் கூட்டத்தின் நடுவே அர்த்தமற்று நடக்கின்ற உணர்வு வெட்ட வெளியில் ஆணிவேர் அறுந்த மரமாய் எட்டுத் திசையில் இருந்து வரும் காற்றுக்கு அஞ்சியபடி.. எங்கும் எதையோ தேடியபடி.. நிச்சயமாக கடவுளை இல்லை. யாரோ ஒருவன் வந்து திடீர் என்று கன்னத்தில் அறைகின்றான் மறுகன்னத்தையும் காட்ட தென்பில்லாமல் நடந்தபடி.. ஏன் என்ற கேள்விக்கு இடமே இல்லை அடிமையாக விரும்பியவனுக்கு…
-
- 1 reply
- 590 views
-
-
-
நான் வாழ்ந்த மண்னை நினைதத்துப் பார்த்தேன் . சுடும் வெயிலில். நடைசெய்தாலும் மரநிலலின் காற்றின் குளிர்மை. நெடும் துரம் நடை செய்தாலும் அந் கால் பட்டமண்ணின் ஒருசுகம். வியர்வை சிந்த சிந்த . தாகத்தை தேடி போனேன் தரைகளில் இருந்த மரத்தின் கனிகளை உண்டேன். தண்ணீரே தேவை இல்லை . திரும்ப வீடு வந்தேன். சுவையுடன் சமைத்துக்கிடந்த உணவை சுவையாகவே உண்டேன்: மாமரகிளையில் ஊஞ்சல் கட்டி கால் மேல் கால் போட்டு விசுகின்ற காற்றின் ஒளியில் நித்திரை செய்த நாள் அந்தநாள். இன்று என்மண்ணையும் உறவுகளையும் நினைத்து நினைத்து உள்ளம் வருகி உருகிபோகிற மொளுகு திரி போல் என் மனம் உருகிறதம்மா . நான் வாழ்ந்த மண்ணின் வாழ்க்கை . திரும்ப வருமா திரும்ப வருமா
-
- 1 reply
- 678 views
-
-
குளிர் போக்கும் ஞாபகங்கள். பாலத்தின் கீழே படர்ந்தோடும் நீரேபோல் பாய்ந்தோடிப்போனதடி கண்ணம்மா காலத்தின் பயணம். கனியெனவே நானுரைத்தேன் நின் பெயரை இனியொருகால் வருமோடி அவ்வின்பம். வருடங்கள் பலவாகியென்விழிகள் உனைக்காணும் வழக்கிழந்து போனதுண்மை கண்ணம்மா. இருந்துமென்ன மனதுழலும் நினைவுகளை மறுத்தலொன்று ஆகுதலோ நடக்குதில்லை. ஒருத்திக்கே தினமும் அன்புரைத்தல் ஓரவஞ்சம் என அறிவேன் இருந்துமென்ன வேறு வழியில்லையடி கண்ணம்மா. வேதனைதான் மிஞ்சி இப்போ நிற்குதடி. கூடிவாழ்ந்தோம் உண்மையடி கண்ணம்மா கூடுடைந்து போனதுவும் குட்டை கலங்கியதும் பீடை வந்து நாம் பிரிந்தது போனதுவும் காடெரிந்து சாம்பரென ஆகியதாய்ப் போனதடி. தொலைத் தொடர்பில் கேட்டேனுன் குரலின்று …
-
- 6 replies
- 2.5k views
-
-
-
-
- 5 replies
- 687 views
-
-
காடுகளில் வாழத்தொடங்கும் வரை காடுகளின் சொர்க்கம் தெரிந்திருக்கவில்லை வீடும் சுற்றமும் அற்பமாய் போயிற்று காடுகளில் வாழும்வரை இன்று கலைந்த கூட்டில் தாயை தேடும் குஞ்சுகளாய் காடற்று வாழும் வாழ்வு காடுகளில் தவழும் இசையை கேட்க மனம் மீண்டும் மீண்டும் துள்ளும் பாலுக்கு அழும் குழந்தையைப்போல காடுகள் அபாயமானவை பழகாதவனுக்கு காடுகள் அதிசயம் நேசிப்பவனுக்கு ஊர்வாழ்க்கை சீனி/சர்க்கரை காட்டுவாழ்க்கை தேன் காட்டினுள் மிருகங்கள் குளம் நாடிவரும் அழகு வேட்டையால் சிதறும் கொடுமை அழகிய ஊரில் கிபீர் இரைச்சலுடன் குண்டு வீசுவது போல கொடும் வெயிலிலும் குளிர்மையை பரிசளிக்கும் காடு (யுத்த) காட்டுத்தீயால் வெந்தது கூடி வாழ்ந்த உறவுகளுடன் க…
-
- 8 replies
- 5.1k views
-
-
-
-
-
[size=5][/size] [size=5]குழந்தை[/size] புட்டிப் பாலை எட்டிப் பறித்துக் குடித்தது குட்டி பலூனை தட்டித் தட்டிச் சிரித்தது தொட்டில் மீது பெட்சீட் நனைத்தது தூங்கும்போது "நரி வெருட்டி" சிரித்தது இரவிரவா கத்தியழுது அப்பா அம்மாவின் நித்திரையைக் குழப்பியது தவழ்ந்து தவழ்ந்து பின் தள்ளாடி நிமிர்ந்து பெற்றோர் கைபிடித்து நடை பழகியது என , இவையெல்லாம் இப்பொழுது ஞாபகம் இல்லையெனினும் வேறோரு குழந்தை செய்வதைப் பார்த்து நாமும் அப்போது இப்பிடித்தானோ!? என உள்ளுக்குள்ளே சிரிப்பது வழமை! நன்றி : கவிதையின் கவிதைகள் .
-
- 4 replies
- 649 views
-
-
-
குழந்தைகளுக்கான பாடல்களை தொகுத்த பதிவு யாழிலிருக்கோ? யாழில் தேடிப்பாத்தன் ஒன்றும் அம்பிடவில்லா. நான் எதிர்பாக்கிறது, நிலா நிலா ஒடிவா நில்லாமல் ஒடிவா மாதிரி .....
-
- 5 replies
- 4.1k views
-
-
____________________ இப்படித்தான் கொடுமையான இரவுகளையே எப்பொழுதும் உனக்கு தரவேண்டியாயிற்று. காலை என்றாலும் உன்னை நெருங்கிவிட முடியவில்லை. எல்லாவற்றையும் நிர்பந்தங்களுக்காக செய்துகொண்டிருக்கிறோம். உன்னை தனியே விட்டுச் செல்லுகிற என் தாய்மையைப் பற்றி என்ன சொல்லி அழுகிறாய்! அந்த வெளியில் கலந்து கிடக்கிற தாலாட்டுகள் உன்னை தூங்க வைக்கும் என்றே நினைத்திருந்தேன். அவர்கள் உன்னை என்னிடமே சேர்ப்பதாக சொல்லுகிறார்கள். வீடுகளை பார்த்து ஆசைப்பட்டுக்கொண்டு வந்த பயணத்தின் இடையில் ஒரு தோழிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. அதற்கான பாதுகாப்பு விசாரணைகளுக்காகத்தான் இடையில் தடுத்து வைக்ப்பட்டிருக்கிறோம். தூங்க மறுத்து அழுது களைத்துப்போய் காலையில் …
-
- 4 replies
- 1.2k views
-
-
குழந்தைகள் பலிவாங்கப்படுகிற நகரம் இங்கும் ஒரு தாயின் அழுகைதான் நகரத்தை உலுப்புகிறது குழந்தைகள்தான் ... பலியிடப்பட்டு அடுக்கப்படுகின்றனர். பேரீட்சைமரங்களின் கீழே பாலஸ்தீனக் குழந்தைகள் தென்னை மரங்களை தேடுகின்றதை நான் கண்டேன். எனது அம்மாவே நீ எங்கும் குருதி சிந்துகிறாய் நமக்காய் குழிகளைக்கூட வழங்க பிடிக்காத அதிகாரத்திடம் குழந்தகைள் திரிகிற நகரம் பலியிடப்படுகிறது. காஸா எல்லைகளில் இலங்கைப்படைகள் மோத வருகின்றன கிளிநொச்சியை இஸ்ரேல்படைகள் முற்றுகையிடுகின்றன. குழந்தைகள் என்ன செய்தார்கள்? நமது குழிகளில் கிடக்கிற குழந்தைகள் அங்கு அடுக்கப்பட்டிருக்கிறார்கள் மேலும் மேலுமாய் சனங்கள் தோற்றுப்போக அதிகாரத்தை கடக்க இயலாதிருக…
-
- 1 reply
- 517 views
-
-
பொய் சொல்ல வேண்டியதில்லை எதிர்பார்த்து ஏமற வேண்டியதில்லை வெட்டிக்கதைகள் பேச வேண்டியதில்லை கவலையால் தூக்கம்கெட தேவையில்லை முகத்திற்குமுன் சிரித்துப்பேசி முதுகுக்குப்பின் குறைத்துப்பேச வேண்டியதில்லை ஊருக்கு உபதேசம் செய்யவேண்டியதில்லை நாம் குழந்தையாகவே இருந்திருந்தால்...
-
- 0 replies
- 558 views
-
-
சின்னஞ்சிறிய குழந்தை - அதன் சிந்தையில் வஞ்சகம் இல்லை கன்னல் மழலை பொழிந்து - எங்கள் காதிற்கு அமுதமளிக்கும் ஆசையுமில்லை மோசமுமில்லை - அது ஆணவம் கொள்வது இல்லை காசையு மெண்ணுவதில்லை - இதால் கவலைப் படுவதுமில்லை பிஞ்சுக் குழந்தை மனதில் - ஒரு பேதம் வளர்வதேயில்லை அஞ்சுதல் என்பதுமில்லை - அதை யார் வெறுப்பார்? யாருமில்லை இவ்வளவு பெரிய உலகில் - துயர் பிடித் அலைந்திடும் மக்கள் மத்தியில் சின்னக் குழந்தையாய் மாறி வாழ்ந்திட ஆசை...
-
- 0 replies
- 778 views
-
-
-
குழம்பும் படைகள்.... அப்புகாமி பிள்ளை எல்லாம் ஜயோ குளறுது.... அண்ணன் படை வந்தடிக்கும் என்று பதறுது.... பேச்சு வார்த்தை முறிந்து விட்டா நடக்கும் என்ங்குது.... பேரழிவு தமக்கு வரும் என்று குளறுது.... ஜயா மகிந்தா கள முனைக்கு இவரை அனுப்புது... அங்கே போக இந்த சிப்பாய் இன்று மறுக்குது.... பகை முகாம்கள் அத்தனையும் இன்று நடுங்குது.... படைகள் எல்லாம் படை முகாமில் இன்று குளம்புது....!!! வன்னி மைந்தன்
-
- 4 replies
- 1.4k views
-
-
( படம் முகநூல் ) இன்பத்துக்கும் துன்பத்துக்கும் வித்தியம் தெரியாத விடலைக் குழவி நான் . இயற்கை அன்னை அள்ளித் தெளித்த அகண்ட நீர்வீழ்சியில், இன்று நான் பட்ட இன்பம் என் வாழ்வில் கண்ட முதல் இன்பம் . அம்மாவும் அப்பாவும் எனக்கில்லை இயற்கையே எனக்கு அம்மா . அவள் மடியில் செல்லக் குழவி நான் . என்ற போதிலும் !!!!!!!!! மனிதன் கையில் நான் பட்டால் என் இன்பம் தொலைந்து விடுமே !!!!!!!!
-
- 2 replies
- 757 views
-
-
தன்னைப் படைத்த இறைவன் விண்ணைப் படைத்திருக்கக் கூடாது! விண்ணைப் படைத்திருந்தாலும் - பின்னே மண்ணைப் படைத்திருக்கக் கூடாது! மண்ணைப் படைத்திருந்தாலும் - அங்கே உன்னைப் படைத்திருக்கக் கூடாது! உன்னைப் படைத்திருந்தாலும் - முன்னே என்னைப் படைத்திருக்கக் கூடாது! என்னைப் படைத்திருந்தாலும் - என் கண்ணைப் படைத்திருக்கக் கூடாது!
-
- 5 replies
- 999 views
-
-
கூடாரத்திலும் மலர்கின்ற மலர்கள் இளங்கவி - கவிதை வதைமுகாம் கூடாரங்களில் அடைபட்டுக்கிடக்கும் குடும்பத்தின் குரலொன்றாய் இந்தக் கவிதை அந்த இருண்ட இரவின் இருளடைந்த கூடாரத்தில்.... சிறிதாக முனகிடும் சிறுமியின் குரலொன்று.... ''அம்மா வியர்க்கிறது வெளியில் நிற்போம் வா....'' சும்மா கிடவடி சிங்காரி சிலிர்த்துக்கிட்டு போறாவாம் சிங்களவன் காத்திருக்கான் உன்னை தூக்கிகிட்டே போவானாம்..... நான் சின்னப்பொண்ணு தானே எனக்கேது பயமம்மா.... உள்ளே கிடப்பதனால் என் சட்டை நனையுதம்மா... அடியேய்.. சொல்லுக் கேள் உன் சட்டை வியர்வைக்காய் சட்டென்று நீ வெளியே போனால்..... சிறு பெட்டையென்றும் பார்க்காமல் பிச்சிடுவான் ரொட்டியை போல்.... …
-
- 16 replies
- 1.9k views
-
-
என் இனமே என் சனமே கூடு சேரும் பறவைகளே நம்புங்கள் தமிழீழம் நிச்சயம் கிடைக்கும் தானைத்தலைவன் கண்சிவப்பது என் இனத்தின் மீது சூரிய ஒளி பட்டொளியாய் வீசவே அன்னைபூமியின் மடியில் உறங்கும் பாலகர் மீது சத்தியம் மாய்ந்து விட்ட மழழைகள் மீது சத்தியம் மரணித்த மங்கையர் மீது சத்தியம் வித்துக்களை தந்த வீரத்தாய் மீது சத்தியம் பண்பாட்டின் பாட்டிகள்.பாட்டனார்மீது சத்தியம் மானம் காத்த மறவர் மீது சத்தியம் சகோதரி சகொதரன் மீது சத்தியம் என் இனமே என் சனமே கூடு சேரும் பறவைகளே நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும் அதுவும் தானைத் தலைவன் காலத்திலே என் இனமே என் சனமே பூக்கள் பூத்துக் குலுங்கும் தேனீக்கள் இசை பாடும் நெற்கதிர்கள்வரவேற்கும் தலயசைத்து முற்றத்து…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
""""கூட்டமாய் கூடாதீர் தளபதிகளே"..."""" அன்புத் தளபதியே அஞ்சும் மனதொன்று கெஞ்சி கேட்கிறது கூட்டம் இட்டு கூட்டமாய் கூட்டத்தில் நீவீர் ஏன்....??? நீர் மக்களின் தொண்டன் மரணம் உங்களுக்கு தூசு புரிகிறது இருந்தும் மனசு பதைக்கிறது... விருட்சங்களே எங்களின் விசாலங்களே நீவீர் வீழ்ந்தால் எம் விடுதலை என்னாவவது....??? வட்டமிட்டு வானத்தில் வள்ளூறு சுற்றி திரிகிறது... அலரி மாளிகையின் அரக்கன் உயிர் குடித்து ஏப்பம் விடுகின்றான்... வீதி உலா போகும் மனித மரங்களை வெட்டி எறிகின்றான்... ஆணி வேர் அறுந்து எத்தனை குடுமபங்கள் அல்லாடுகிறது... கண்ணீரோடு எத்தனை உறவுகள் தள்ளாடுகிறது... சுமையா…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஞாபகத்தில் இருக்கிறது அழகாய் நிழலாய் ஒரு முகம். ம்ம்ம்ம்.... தெளிவாயில்லை. அலையும் நீரில் அலைவதாய் அது. வயது தொலைந்து வாழ்வின் எல்லையின் தனிமையில் இளமையை அசை போட்டபடி. நிறைவாய் ஒரு நீ.........ண்ட ஞாபக உறவு. வாழ்வு இயல்பாய் நகர்ந்தும் அம்முகம் அடிக்கடி வரும்... மறையும். கொல்லைப்புறத்துப் பொட்டு வேலிதான் அவனது போக்கு வரத்து. பனம்பாத்தியடியில் கிளுவங்குச்சி முறித்துக் கொட்டில் கட்டி, குரும்பட்டியில் ஈர்க்கில் குத்தி மரப்பாச்சி பொம்மையும் செய்து, கொட்டாங்குச்சியில் சோறும் காய்ச்சி, தொட்டாச்சிணுங்கி இலையும் தேங்காய்ப்பூக் கீரையும் கறிகளுமாய். அம்மாவின் சோட்டிக்குள் நானும், அப்பாவின் வேட்டிக்குள் அவனுமாய். …
-
- 0 replies
- 699 views
-