Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தனி விமானம் மூலம் சென்னை வந்தார், நடிகர் அர்னால்ட் ( படங்கள்) "ஆஸ்கர் பிலிம்ஸ்' நிறுவனத்தின் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருள் செலவில் உருவாகி வரும் படம் "ஐ'. விக்ரம், எமி ஜாக்சன் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக படப்படிப்பில் இருந்துவரும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா திங்கள்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்று ஆடியோவை வெளியிடுகிறார் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். இதற்காக ஹாங்காங்கில் இருந்து தனி விமானம் மூலம் இன்று திங்கள்கிழமை காலை சென்னை வந்தார் அர்னால்ட்.…

  2. தமிழக முதல்வரை சந்திக்க விரும்பும் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சென்னையில் வரும் 15ஆம் தேதியன்று பிரபல டைரக்டர் ஷங்கர் இயக்கியுள்ள 'ஐ' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதன் சிறப்பு விருந்தினராக பிரபல ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னருமான அர்னால்ட் ஷ்வாஸ்நெகர் கலந்துகொண்டு ஆடியோவை வெளியிடுகின்றார். தமிழக முதல்வரைப் பற்றிக் கேள்விப்பட்ட அர்னால்டு ஷ்வாஸ்நெகர், அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்து அவரது குழுவின் மூலம் தலைமைச் செயலகத்திற்கு ஒரு கோரிக்கையை அனுப்பியுள்ளார் என்று 'ஐ' படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனிடையில், இந்தியாவின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த்தும் இந்த விழாவில் கலந்துகொள்ள சம்மதித்த…

  3. நடிகை ரோஜாவை கத்தியால் கிழித்த மர்ம நபருக்கு வலை வீச்சு! [saturday 2014-09-13 20:00] ஆந்திர மாநிலம் நகரியில் கங்கை அம்மனை கொண்டாடும் வகையில் ‘ஜாத்திரை திருவிழா’ ஆண்டு தோறும் நடப்பது உண்டு. ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த விழாவில் நேற்று கிராம தெய்வமாக வணங்கப்படும் தேசம்மா, ஓடு குண்டலம்மா வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. அங்குள்ள ஈஸ்வரன் கோவிலில் 2 அம்மனையும் அலங்கரித்து வீதி வீதியாக ஊர்வலமாக எடுத்து வருவார்கள். விடிய விடிய இந்த வீதி உலா நடைபெறும். விழாவில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா கலந்து கொண்டார். இதற்காக அவர் 500 பெண்களுடன் சீர்வரிசை தட்டு ஏந்தி கோவிலுக்கு சென்றார். 2 அம்மனுக்கு அணிவிக்க விலை உயர்ந்த பட்டுப்புடவையை நடிகை ரோஜா சீர் தட்டில் எடுத்துச் சென்றார். இதி…

  4. வணக்கம் அண்ணா.. நான் மஹாவிஷ்ணு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை மகிழ்விக்கும் நகைச்சுவை கலைஞன்.. உங்கள் புகழ் ஊரெங்கும் பேசப்பட, நான் தங்களை புகழ விரும்பவில்லை. அமரகாவியம் என்னுள் ஏற்படுத்திய நெருடல்களை உண்மை குறையாமல் பரிமாறிக்கொள்ள விழைகிறேன்.. * எத்தனை முறை ரீடேக் போனது, இல்லை எவ்வளவு முறை வசனங்கள் மாற்றப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் உங்களால் எழுதப்பட்ட வசனங்கள், நீங்கள் வசனங்களை திரையில் உபயோகப்படுத்திய விதம் அனைத்தும் இதுவரை நான் திரையில் கண்டிராதது ! அவ்வளவு ஆத்மார்த்தமாக இருந்தது, காணும்போதே கதாபாத்திரங்களின் மீது ஆழமான மரியாதையை ஏற்படுத்தியது.. * நடிகர் நடிகைகளை நடிக்க தேர்வு செய்வதில் “ஜீவா” ராஜதந்திரன் என்பதை நிரூபித்து விட்டீர்கள். காரணம், கதாநாயகன் ச…

  5. பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே வாழ்க்கை படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சுயசரிதை திரைப்படமாகத் தயாராகின்றது. இந்தப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஹாலிவுட் பிரபலங்களான ஜெப் சிம்பாலிஸ்ட் மற்றும் மைக்கேல் சிம்பாலிஸ்ட் பீலே படத்தை எழுதி இயக்கியுள்ளார்கள். கெவின் டி பவுலா, வின்சென்ட் டி ஓனோபிரியோ, ரோட்ரிகோ சன்டோரோ, டியாகோ போனேடா, கோல்ம் மியானே ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை பீலே படத்திற்கு இசையமைக்கும் பணி இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்றுள்ள ஏ.ஆர். ரகுமானுக்குக் கிடைத்துள்ளது. இதை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ரிலீஸ் பிரேசில…

  6. - சென்னை உயர் நீதிமன்றத்தில் நாட்டுக்கு மிக முக்கியமான ஒரு வழக்கு போடப்பட்டது. “இனிமேல் 18 வயதுக்குக் குறைவான பெண்களை ஹீரோயினாக போட்டு படம் எடுக்கக் கூடாது’ என்பதே அது. அந்த ஹீரோயின்களை முத்தக் காட்சிகளில் நடிக்க வைப்பதும் கிளாமர் காட்ட வைப்பதும் “பெண்களை தவறாகக் காட்டுவதை தடை செய்யும் சட்டத்தின்’ கீழ் வருமாம் (என்னமா யோசிக்கிறாங்கப்பா?) - ஆனால் அந்த வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. சரி, அதெல்லாம் நமக்கு எதுக்கு? நம்ம ஹீரோயின்களோட பர்த்டேட் என்னனு ஆராய்ச்சி பண்ணினோம். (வேற வேலையே இல்லையானு கேட்கக் கூடாது. வேணா ஒரு பேங்க் வெச்சுக் கொடுங்க பார்த்துக்குறோம்.) - லட்சுமி மேனன்: 19.05.1996 (18) கார்த்திகா: 27.06.1992 (22) துளசி: 25.10.1997 (17) (இவர்கள் மூவர் பேரும…

  7. PAYCHECK - விமர்சனம் தற்செயலா ஒரு நாள் டிவில இந்தப் படத்தோட ட்ரெய்லர் பார்த்தேன். ஏதோ வித்தியாசமாத் தெரிஞ்சது. அப்புறம் டவுன்லோட் பன்ணிப் பார்த்தா, புத்திசாலித்தனமான ஆக்சன் பிலிம்! இங்கிலிபீஸ் படமாப் பார்த்துட்டு பீட்டர் விடற சில லோக்கல் நண்பர்கள்கிட்ட இந்தப் படத்தைப் பத்தி கேட்டப்போ, யாருக்கும் இப்படி ஒரு படம் வந்ததே தெரியலை..’அட அப்ரெண்டிஸ்களா, இன்னும் நீங்க ஜுராஸிக் பார்க்கத் தாண்டி வரலையா’ன்னு நினைச்சுக்கிட்டேன்..அதனால இங்க இப்போ Paycheck. பென் அஃப்லெக் ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினீயர். சாஃப்ட்வேர்னா நம்மூர்ல காப்பி-பேஸ்ட் பண்ணியே காலத்தை ஓட்டுவாங்களே, அவங்களை மாதிரி நினைச்சுடாதீங்க. இவர் பெரிய மண்டைக்காரர். பெரிய கம்பெனிகளுக்கு சில சீக்ரெட் ப்ராஜெக்ட் செஞ்சு கொடுத்…

  8. குழந்தைகளைக் கவரும் வகையில் அவர்களுக்காகவே தயாரித்த ஸ்டீபென் ஸ்பீல்பெர்க்கின் மற்றுமொரு மிகச் சிறந்த படம் "ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ்". ஒரு அம்மாவுக்கும் - பத்து வயது மதிக்கத்தக்க இயந்திர மகனுக்கும் இடையே இருக்கும் பாசப்பிணைப்பைச் சொல்வதே இப்படம். ஒரு தம்பதியினர் டேவிட் என்ற இயந்திர மகனை ஒரு விஞ்ஞானியிடமிருந்து வாங்கி வீட்டிற்கு அழைத்துவருகின்றனர். டேவிட் என்ற மகனின் குணாதிசியங்கள் அம்மாவுக்கும் தந்தைக்கும் பாசத்தைக் காட்டும் படியே வடிவமைக்கப்பட்டிருக்கும். எப்போதும் அம்மாவிடம் பாசமாய் கொஞ்சி, பழகி, அம்மாவின் புன்னகை பார்த்து மகிழும் வண்ணம் டேவிட் வடிவமைக்கப்பட்டிருப்பான். டேவிட்டோடு பேசி நடக்கும் திறன் கொண்ட மற்றொரு சிறிய இயந்திர கரடி பொம்மையும் கூடவே இருக்கும் எ…

  9. முதல்முறை மழை பார்த்த சிறுபிள்ளை போலே... மனம் இன்று கொண்டாடுதே.. இது என்ன இருதயம் மிருதங்கம் போலே... இன்று புதுப்பண் பாடுதே... http://www.youtube.com/watch?v=uWt4zsXPHQA

  10. ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் திரைப்பட இயக்குனர் லெனின் எம் சிவம் அவர்கள் தீபம் கலையகத்தில் - உடன் யோகா தினேஷ்

  11. வெளியாகின, இயக்குநர் பாலா - பூஜாவின் கிஸ் கிஸ் படங்கள்! அந்தப் படங்களை முதலில் பார்த்தபோது நம்ப முடியவில்லை. காரணம் இயக்குநர் பாலா மீதான இமேஜ் அப்படி. ஆனால் சினிமாவில் அப்படி எந்த பிம்பத்தையும் நம்பத் தேவையில்லை என்பதைச் சொல்லும் வகையில் பாலாவும் அவரது விருப்ப நடிகை பூஜாவும் நெருக்கமாக முத்தமிட்டுக் கொள்ளும் படங்கள் நேற்று வெளியாகியுள்ளன. பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்தவர் பூஜா. அதற்கு முன் வரை சுமார் நடிகையாக இருந்தவரை, சூப்பர் நடிகையாக்கியது நான் கடவுள்தான். பின்னர் பாலா இயக்கிய பரதேசியில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏனோ மறுத்துவிட்டார். ஆனால் பாலா எப்போது அழைத்தாலும் நடிப்பேன் என்று சமீப காலமாக சொல்லிக் கொண்டிருந்தார் பூஜா. இந்த முத்தச் சம்பவ…

    • 12 replies
    • 4.3k views
  12. 'தமிழ் சினிமா படைக்கும் நல்லுலகம் இதுவரை மொக்கைப் படத்தையே ரசிகர்களுக்குத் தந்தது இல்லையோ?!' என்ற ஐயத்தை ஏற்படுத்தி இருக்கிறது, லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த 'அஞ்சான்' படமும், அதற்கு சமூக வலைதளத்தில் குவிந்த 'கழுவி ஊற்றல்' எதிர்வினைகளும்! இப்படிப்பட்ட கலாய்ப்பு விமர்சனங்களை எள்ளளவும் எதிர்பார்த்திடாத நடிகர் சூர்யா, இணையத்தில் தனது படம் மீதான தொடர் தாக்குதல்களால் அதிர்ச்சியுற்று, "தியேட்டரில் படம் தொடங்குவதற்கு முன்பே, சீட்டில் இருந்தபடி ட்விட்டர், ஃபேஸ்புக்கில் விமர்சனங்களை வெளியிடுகிறார்கள்" என்று ஆதங்கத்தைக் கொட்டினார். சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டால், குறிப்பிட்ட அப்படம் வசூல் ரீதியிலும் வெற்றி அடைய வேண்டும்தானே? ஆனால், 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்'…

  13. இளமை பருவத்தை நான் அனுபவித்தில்லை: ஏ.ஆர்.ரகுமான் இளமை பருவத்தை நான் அனுபவித்தில்லை. அப்போதும் இசையில்தான் நேரத்தை செலவிட்டேன் என்றார் ஏ.ஆர்.ரகுமான்.இதுபற்றி அவர் கூறியதாவது: கடினமாக வேலை வாங்கும் படங்களுக்கு மட்டுமே இப்போதெல்லாம் இசை அமைக்கிறேன். இல்லாவிட்டால் எனது ரசிகர்களை நான் இழக்க வேண்டியது இருக்கும். சரித்திர கால படங்களுக்கு இசை அமைத்து முடித்தபிறகு இப்போது இளைஞர்களை கவரும் படங்களுக்கு இசை அமைக்கிறேன். புராண, சரித்திர கால படங்களுக்கு இசை அமைத்ததால் நான் சோர்வு அடையவில்லை. தொடர்ந்து அத்தகைய படங்களில் பணியாற்ற விரும்புகிறேன். சரித்திர கால படங்களுக்கு இசை அமைக்கும்போது புதிய கலாச்சாரத்தை என்னால் கண்டு உணரமுடிகிறது. ஒரு சில படங்களுக்கு நான் அமைத்த இசை பின்…

  14. சதுரங்க வேட்டை - சினிமா விமர்சனம் ''பணம் இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம்னா, அந்தப் பணத்தைச் சம்பாதிக்க நான் ஏன் என்ன வேணும்னாலும் பண்ணக் கூடாது?’ என்று திட்டமிடும் ஒருவனின் 'சதுரங்க வேட்டை’ வியூகங்கள்! சமூகத்தால் விரட்டப்படும் சிறுவன், அதே சமூகத்தை ஏமாற்றும் கிரிமினலாக உருவாகும் ஒன்ஸ்மோர் ஒன்லைன்தான். ஆனால், அதில் தமிழகத்தின் 'வொயிட் காலர் ஃப்ராடு’களைப் புட்டுப் புட்டு வைத்திருக்கும் டீட்டெய்லிங்... அசத்தல்! மண்ணுள்ளிப் பாம்பு, மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங், ஈமு கோழி, இரிடியம் கோபுரம்... என்று செய்திகளில் கடந்துபோன சம்பவங்கள்தான். அந்த மோசடிகளையே கதைக் களமாக்கி, செஸ் காய் நகர்த்தல் ட்ரீட்மென்ட்டில் திரைக்கதை அமைத்து, இறுதியில் அன்பின் பெருவெளிச்சத்தைப் பாய்ச்சியி…

  15. இணையத் தளத்தில் இருக்கும், நிர்வாண படங்களில்... இருப்பது நான் அல்ல: தமன்னா. சென்னை: இணையதளங்களில் உள்ள நிர்வாண படங்கள் தன்னுடையது அல்ல என்றும், அவை மார்பிங் செய்யப்பட்டவை என்றும் தமன்னா தெரிவித்துள்ளார். நடிகைகள் பலரின் புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு இணையதளங்களில் வெளியிடப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட நடிகை அது நான் இல்லை, அவை போலியான படங்கள் என்று கூறுவார். தற்போது தமன்னாவுக்கும் அந்த நிலை தான். இணையதளங்களில் மார்பிங் செய்யப்பட்ட தமன்னாவின் நிர்வாண படங்கள் வெளியாகியுள்ளன. இதை பார்த்து தமன்னா அதிர்ச்சி அடைந்துள்ளார். அது போலி. இணையதளங்களில் இருக்கும் என்னுடைய நிர்வாண படங்கள் போலியானவை. போட்டோவில் உள்ள என் தலையை மட்டும் எடுத்து யாரோ நிர்வா…

  16. பல கோடி சொத்துக்களை இழந்து வீட்டை விட்டு வெளியேறினார் கார்த்திக்…! தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90–களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் கார்த்திக். இவர் மறைந்த நடிகர் முத்துராமனின் மகன் ஆவார்.முத்துராமனுக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் நிறைய வீடுகள் மற்றும் வணிக வளாகம் உள்ளது. இவற்றின் மதிப்பு பல கோடிகள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. முத்துராமனின் பூர்வீக வீட்டில் கார்த்திக் குடும்பத்துடன் வசித்தார். இதே வீட்டில் முத்துராமன் மனைவி சுலோசனா மற்றும் குடும்பத்தினர் வசித்தார்கள். முத்துராமனுக்கு கார்த்திக் தவிர இன்னொரு மகன் மற்றும் மகள்கள் உண்டு. கார்த்திக் குடும்பத்தினர் இடையே சமீபத்தில் திடீர் சொத்து தகராறு ஏற்பட்டது. வீட்டை விட்டு வெளியேறும்படி அவர் நிர்ப்பந்த…

  17. தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த பார்த்திபன், மிகுந்த சிரத்தைக்குப் பிறகு இயக்கிய 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகி வெற்றிபெற்றிருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் திருட்டு வீடியோக்களை ஒழிக்கும் விதத்தில், சென்னை பர்மா பஜாரில் ஒரு கடையில், இயக்குநர் பார்த்திபன் தானே நேரில் சென்று கையும் களவுமாக ஒருவரை பிடித்துள்ளார். இதை வீடியோ பதிவாக எடுத்து தனது யூடியூப் சனலிலும் பார்த்திபன் பதிவேற்றியுள்ளார். பார்த்திபனின் உதவியாளர் ஒருவர் கடையில் நிற்க, தூரத்தில் கேமராவுடன் இருக்கும் பார்த்திபன், உதவியாளருடன் செல்பேசியில் பேசுகிறார். சிடி வாங்குவதற்காக ஒருவர் வந்து, காசு கொடுத்து, அவருக்கு 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படத்தின் திருட்டு விசிட…

    • 9 replies
    • 1.1k views
  18. தீபாவளிக்கு தமிழில் வெளியாகிறது சங்கராபரணம்! 35 ஆண்டுகளுக்குப் பின் மறு வெளியீடு... கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் அளித்து கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கில் வெளியாகி, 4 தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த படம் ‘சங்கராபரணம்’. இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் தமிழில் தீபாவளிக்கு வெளி வர உள்ளது. கர்நாடக இசைக்கு இன்றளவும் சிறந்த எடுத்துக்காட்டாக தெலுங்கு திரைப்படமான ‘சங்கராபரணம்’ விளங்கி வருகிறது. இசைக்கு முக்கியத்துவம் அளித்து இயக்குநர் கே. விஸ்வநாத் இயக்கிய இப்படம், கடந்த 1979 ல் வெளியானது. பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக இப்படத்தில் பணியாற்றி இருந்தார். முக்கிய வேடங்களில் மறைந்த நடிகர் சோமயாஜுலு, மஞ்சு பார்கவி, ராஜலட்சுமி, துளசி போன்றோர் நடித…

    • 6 replies
    • 1k views
  19. ஈரான் இயக்குனர் கேள்வி… ஏ.ஆர். ரகுமான் பதில்… வசந்த பாலன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா, நாசர் மற்றும் பலர் நடிக்கும் ‘காவியத் தலைவன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் சஷிகாந்த் ஒருவர் விடாமல் நன்றி கூறி நீ…….ண்டதொரு பேச்சை வழங்கினார். பொதுவாக ஏ.ஆர்.ரகுமான் இப்படியான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்வது அபூர்வம் என்பதால் அனைத்து பத்திரிகையாளர்களும் ரகுமான் பேச்சைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். இரண்டு மணி நேரம் கடந்த பிறகு கடைசியாகவே ரகுமான் பேச அழைக்கப்பட்டார். அவர் பேசியது சில வரிகள்தான் என்றாலும் அதில் இருக்கும் அர்த்த…

  20. இன்று நூறாவது பிறந்த நாள் காணும் நடிப்புலக மேதை டி.எஸ்.பாலைய்யா குறித்த சன் டிவி சிறப்பு விருந்தினர் பக்கம்

  21. மூக்கு இருக்கும் வரை எப்படி ஜலதோஷம் இருக்குமோ, அதுபோல கவர்ச்சி இல்லாமல் சினிமா இல்லை. அட.. அவ்வளவு ஏன்? மசாலா இல்லாமல் சாம்பார் வைக்கமுடியுமா? அதுமாதிரிதான் கவர்ச்சி இல்லாமல் சினிமா இல்லை. எந்த டைப் படமாக இருந்தாலும் அதில் கவர்ச்சி கட்டாயம் இருக்கும். சில படங்களில் இலைமறைகாயாக இருக்கும். சில படங்களில் கதைக்கு தேவைப்படுவதால் இருக்கும். சில படங்களில் அது திணிக்கப்படும்போதுதான் பளிச்சென்று தெரியும். தமிழில் 'ரொப் 10' படங்களில் ஒன்றான 'உதிரிப்பூக்கள்' படத்தில் விஜயன் தன் கொழுத்தியாளை பலாத்காரம் செய்யாமல் அவளை நிர்வாணப்படுத்தி "உங்களை இந்தக் கோலத்தில் பார்த்த முதல் ஆள் நான்தான்" என்று சொல்லும் காட்சியும், கொழுத்தியாள் நிர்வாணமாக கிடக்கும் காட்சியும் கவர்ச்சியில்லாமல் வெறெ…

    • 4 replies
    • 5.7k views
  22. நடிகர் சென்ராயன் தன் காதலியை வரும் ஆகஸ்ட் 31ம் தேதி திருமணம் செய்கிறார். தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் பைக் திருடனாக அறிமுகமானவர் வில்லன் நடிகர் சென்ராயன். அதைத் தொடர்ந்து சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர்கூடம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் பிரதான வில்லனாக நடித்து பலராலும் பாராட்டப்பட்டவர் சென்ராயன். இவர் பட்டதாரி பெண்ணான கயல்விழி என்பவரை காதலித்து வந்தார். இந்தக் காதலுக்கு பெரிய எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் இரு வீட்டாரையும் சமாதானப்படுத்திய சென்ராயன் இம்மாதம் 31 ம் தேதி திருமணம் செய்துகொள்கிறார். வத்தலகுண்டு பகுதியில் உள்ள சென்ராயப் பெருமாள் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த திருமணத்தில் கலையுலகை சேர்ந்…

  23. இந்தியப் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியைக் கொன்ற கொலையாளிகளைப் போற்றும் வகையிலான பஞ்சாபி திரைப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்திரா காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு பஞ்சாபி மொழியில், "கெளம் தே ஹீரே' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் இந்திரா காந்தியை படுகொலை செய்த கொலையாளிகள் பேயாந்த் சிங், சத்வந்த் சிங், கேஹர் சிங் ஆகியோரைப் புகழ்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இத்திரைப்படத்தை வெளியிட்டால் நாட்டில் சட்டம்-ஒழுங்கு கடுமையாகப் பாதிக்கும் என்பதால், இத்திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கும்படி பஞ்சாப் மாநில காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம், மத்திய உள்துறை அ…

  24. ராஜபக்ச மகன் நாமலுடன் ஆட்டம் போட்ட பிரபல நடிகை.. படம் அம்பலம்! அது என்னமோ தெரியவில்லை... இந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சேவுக்கு இந்திய நடிகைகள், குறிப்பாக தமிழ் நடிகைகள் மீது அப்படி ஒரு ஆசை... நினைத்தால் டெல்லிக்கோ மும்பைக்கோ (இதுவரை சென்னைக்கு வரமுடியாத நிலை.. ஆனால் இனி அப்படியெல்லாம் சொல்வதற்கில்லை... ஓஎம்ஆரில் ஆடம்பர ஓட்டலும் கோடம்பாக்கத்தில் அவருக்கான ஏஜென்டுகளும் தயார்!) சரி மேட்டருக்கு வருவோம்... இந்த நமல் ராஜபக்சேவும் பிரபல தமிழ் நடிகை ஒருவரும் ரொம்ப ரொம்ப நெருக்கமாக இருந்து டிஸ்கஸ் பண்ண சமாச்சாரத்தை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். அந்த நடிகையும் இந்த நமலும் அந்தரங்கமாக உள்ள வீடியோ வேறு முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்…

  25. இந்த வருட ரொராண்டோ படவிழா அடுத்தமாதம் நான்காம் திகதி ஆரம்பமாகின்றது .இதில் காக்கா முட்டை என்ற மணிகண்டன் இயக்கிய தமிழ்ப்படம் திரையிடப்படுகின்றது.அதைவிட வேறு இரு இந்திய படங்களும் திரையிடுகின்றார்கள் .

    • 3 replies
    • 541 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.