Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சென்னை: விஸ்வரூபம் விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது. நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள்இருப்பதாகக் கூறி எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, படத்தை தமிழகத்தில் திரையிடமாநில அரசு தடை விதித்தது. தடைக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு நேற்று முன்தினம் விஸ்வரூபம் படத்தை பார்த்து ஆய்வு செய்தது. இதில், தயாரிப்பு நிறுவனம், ரசிகர்கள் மற்றும்மனுதாரர்கள் தரப்பிலும் பிரதிநிதிகள் அந்தப் படத்தை பார்த்தனர். இந்நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது…

  2. ரெண்டு சூட்கேசுக்குள் அடங்கியாக வேண்டுமே, இல்லாவிட்டால் 'ஒன்றரை லட்சம் கோடி' என்று கூட டைட்டில் வைத்திருப்பார்கள். தங்கம் வைரம் கரன்ஸி இம்மூன்றும் நிறைந்த சூட்கேஸ் இரண்டை நீரா ராடியா மாதிரி ஒரு ஜில் ஜில் லேடியிடமிருந்து அடித்துக் கொண்டும் கிளம்பும் கல்லு£ரி நண்பர்கள் நான்கு பேர் அதை 'அனுபவித்தார்களா' என்பதுதான் படம். ஆரம்பத்திலேயே நடக்கும் கல்லு£ரி கலாட்டாக்கள், முதல் இரண்டு ரீல்களை சர்வ நாசம் செய்வதால் மேலும் ஒரு ஐயாயிரம் கோடிக்கு கள்ள ஜாமீன் போட்டுவிட்டாவது வெளியேறி விடலாம் என்ற நினைப்பு வந்துவிடுகிறது நமக்கு. நல்லவேளை... அதற்கப்புறம் கெமிக்கல். லேப் பரிசோதனை. ஆளே மறைந்துவிடுகிற விட்டலாச்சார்யா விஷுவல் என்று நம்மை கதைக்குள் இழுத்துக் கொள்கிறார்கள். கூடவே படிக்கி…

    • 0 replies
    • 1.1k views
  3. என் தமிழகமே என்னிடம் விளையாடிவிட்டதே என்று வருத்தப்பட்டுள்ளார் கமல்ஹாஸன். அமெரிக்காவின் ப்ரீமாண்ட் பகுதியில் விஸ்வரூபம் திரைப்பட வெளியீட்டிற்கு நேரடியாக தியேட்டருக்கு வந்தார் கமல்ஹாஸன். அப்போது ரசிகர்களிடம் அவர் பேசுகையில், "என் தமிழகத்தில் விஸ்வரூபம் வெளியீடு சில காலத்துக்கு நிறுத்தபட்டுள்ளது. என் தமிழ் நாட்டிலேயே எனக்கு இந்த நிலையா என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. நீங்கள் வெளியில் இருக்கிறீர்கள் (அமெரிக்க வாழ் தமிழர்கள்). நானும் வெளியில்தான் உள்ளேன் இப்போது. என் தமிழகம் என்னை இப்படி விளையாடி பார்த்துவிட்டதே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. ஆனால் இது எல்லாம் மாறும். நான் செய்திருப்பதில் தவறேதும் இல்லை. இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் என்ன சொல்ல விரும்புகிறேன்.. …

  4. காஷ்மீரில் இரு ராணுவத்தினரின் தலையை துண்டித்து பாகிஸ்தான் ராணுவத்தினர் எடுத்துக்கொண்டு சென்றபோது அதை எதிர்த்து போராட்டம் நடத்தாத ஒரு தலைவர், ஹைதிராபாத்தில் மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ.வான ஓவாஸி பதினைந்து நிமிடத்தில் 100 கோடி இந்துக்களை கொன்றுவிடுவேன் என்று சொல்லும்போது எதிர்த்து போராட்டம் நடத்தாத ஒருவர் (ஆனால் அன்றே தன் எதிர்ப்பைக்காட்டி சமுதாயத்திற்கு தான் ஒரு உதாரணம் எனக் காட்டினார் அப்துல் கலாம்) விஸ்வரூபம் என்ற ஒரு சினிமாவில் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதியாக ஒரு முஸ்லீமை காட்டியதற்காக எதிர்க்கிறார். உடனே இதை ஆதரித்து ஒரு சாரரும், எதிர்த்து ஒரு சாரரும் சமூக வலைத்தளங்களிலும், இணைய தளங்களிலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர். இவர்களில் யாருமே படத்தைப் பார்க்கவில்லை, படத்தில்…

  5. விஸ்வரூபம் திரைப்பட பிரச்னையால் கமலை விட்டு நழுவிய பத்ம விருது http://dinamani.com/india/article1437382.ece விஸ்வரூபம் திரைப்பட பிரச்னையைத் தொடர்ந்து நடிகர் கமலஹாசனுக்கு பத்மபூஷண் விருது கிடைக்காமல் போனதாகத் தெரிகிறது. பத்மபூஷண் விருது பெறுவோரின் தகுதிப் பட்டியலில் கமலஹாசன் பெயர் இருந்ததாகவும், கடைசித் தருணத்தில் அவரது பெயரை மத்திய அரசு நீக்கியதாகவும் கூறப்படுகிறது. சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி, விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. "பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட வெள்ளிக்கிழமைக்கு முந்தைய நாள் வரை, கமல் பெயர் விருது பெறுவோர் தகுதிப் பட்டியலில் இருந்தது. அவரது விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழகத்தைத் …

  6. துப்பாக்கி போன்ற குப்பைக் கூடைக்குள் கூட போட முடியாத மோசமான தரமுடைய படத்தைப் பார்த்த பின் இனி எப்ப ஓரளவுக்கேனும் நல்ல தமிழ் படம் பார்க்கலாம் என்று இருந்த எனக்கு கும்கி படம் பற்றி எந்தவிதமான எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. இன்று TMT இணையம் மூலம் கும்கி படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சில சினிமாத்தன காட்சிகள் தவிர்ந்த (கிளைமாக்ஸில் யானைக்கு கிடைக்கும் முடிவு) மிச்ச காட்சிகள் எல்லாம் அப்படியே மனசை அள்ளும் காட்சிகள். தமிழகத்தின் காடுகளுக்குள் இன்றும் மரணித்துப் போகாமல் இருக்கும் மனிதர்களின் இயற்கையுடனான பின்னிப் பிணைந்த வாழ்க்கையையும், அவர்களின் நம்பிக்கைகளையும் அதை அவர்கள் காப்பாற்ற முயலும் முரட்டுத்தனத்தையும் அழகாக காட்டியுள்ளார்கள். தமிழ் சினிமாவில் யானையை இந…

    • 57 replies
    • 4.8k views
  7. .சத்யராஜ் -மணிவண்ணன் காம்பினேசன் என்றாலே அந்த படத்தில் ஒரு பரபரப்பு இருக்கும். இன்னார் என்று பாராமல் கலாய்க்கும் அரசியல் காமடி சிரிக்க வைத்து விலா எலும்புகளை பதம் பார்க்கும். மொத்தத்தில் இந்த காம்பினேசன் பெரிய ஹிட் கொடுத்த படங்கள் ஏராளம். ‘வாழ்க்கை சக்கரம்’, ‘நூறாவது நாள்’, ‘புதுமனிதன்’, ‘மாமன் மகள்’ போன்ற படங்கள் உதாரணம். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த ‘அமைதிப்படை’ படத்தின் இரண்டாம் பாகம் ‘நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ.,’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இது, சமீபத்திய அரசியலை கிண்டல் செய்யும் காமெடி படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், மணிவண்ணன், சீமான், ரகுமணிவண்ணன், வையாபுரி, எம் எஸ் பாஸ்கர், கோமல்ஷர்மா, வர்ஷா, மிருதுளா, அன்சிபா, கிருஷ்ணமூர்த்தி என்ற ம…

    • 0 replies
    • 616 views
  8. கவர்ச்சி என்பது ஒரு ஊறுகாய் போல - லட்சுமி மேனன் சினிமாவில் கவர்ச்சி என்பது ஒரு ஊறுகாய் போலத்தான் என நடிகை லட்சுமி மேனன் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் மலையாளிகளின் ஆதிக்கம் வெகுவாகவே உள்ளதென தற்போது வெளியாகும் படங்களை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். தமிழை குறைவாக கற்றுக்கொண்டாலும் அழகின் மூலமாக இளம் நடிகைகள் நுழைந்து வந்தனர். தற்போது பள்ளிக்கூட மாணவிகளும் படத்தில் நடித்து வருகின்றார்கள். இதற்கு சிறந்த உதாரணம் நடிகை லட்சுமி மேனன். இவர் 10ம் வகுப்பு தான் படிக்கிறார். சுந்தரபாண்டியன், கும்கி படங்களில் நடித்து வெற்றிநாயகியாக வலம் வரும் இவர், குட்டிப்புலி, மஞ்சப்பை என இரு புதிய படங்களிலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் இயக்குனர் ஒருவர் இவரி…

  9. காலம் தாழ்த்தி கிடைக்கும் கவுரவம், எனக்கு தேவையில்லை. எனக்கு கொடுக்கப்பட்டுள்ள, பத்ம பூஷன் விருதை, ஏற்கப் போவது இல்லை, என, பிரபல பின்னணி பாடகி, ஜானகி, அதிரடியாக அறிவித்துள்ளார். பிரபல சினிமா பின்னணி பாடகி, எஸ்.ஜானகி, 75. தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம், இந்தி உள்ளிட்ட, பல்வேறு மொழிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிஉள்ளார். தமிழில், சிங்கார வேலனே தேவா, காற்றில் எந்தன் கீதம், நெஞ்சினிலே... நெஞ்சினிலே உள்ளிட்ட, புகழ் பெற்ற பாடல்களை பாடியுள்ளார்.தேசிய அளவில் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை, நான்கு முறை பெற்றிருந்தாலும், பத்ம விருதுகளை, இதுவரை, மத்திய அரசு தனக்கு கொடுக்கவில்லையே என்ற மனக்குறை, அவருக்கு இருந்தது. இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி, மத்திய அ…

  10. விஸ்வரூபத்திற்கு கொதிக்கும் நடிகர்கள் தேன்கூடு, ஆணிவேர் படத்திற்கு குரல் கொடுக்காதது ஏன்?...உச்சிதனை முகர்ந்தால் வெளிவேந்தபோது அந்த படத்தின் விளம்பரம் மற்றும் பாடல் காட்சிகள் எப்.எம். மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவில்லை...எங்கே போனது கருத்துரிமை?...எங்கே போனது உங்கள் குரல்?... கமலுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்தார், பார்த்திபன் குரல் கொடுத்தார், அஜித் குரல் கொடுத்தார்...இனி விஜய் குரல் கொடுப்பார்... திரிஷா கொடுப்பார்... காவிரி டெல்டாவில் எங்கள் விவசாயி தண்ணீர் இல்லாமல் சாகிறானே எங்கே உங்கள் குரல்... அணுவுலைக்கு எதிராக 500 நாட்களுக்கு மேல் போராடுகிறானே எங்கே உங்கள் குரல்... முல்லை பெரியாரில் விடயத்தில் எங்கே உங்கள் குரல்... பல தடுப்பணைகளை கட்டி பாலாற்றை …

  11. ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைகளில் இதுவரை சினிமா உலகில் கொடிகட்டிப் பறந்த நட்சத்திரங்களின் பெயர்கள் தான் அடிபட்டிருக்கின்றன.ஆனால் ஆஸ்கார் வரலாற்றில் இதுவரை பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்களில் மிக வயது குறைந்த நடிகை தான் குவாஞ்சனே வாலிஸ் (Quvenzhane Wallis)என்ற 9 வயதுச் சிறுமி. த பீஸ்ட்ஸ் ஆஃப் த சதர்ன் வைல்ட் (The Beasts of the Southern Wild) என்ற குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்தக் குழந்தையின் அபாரத் திறமைக்காக அவளின் பெயர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உலகத் தொடர்புகளின்றி, பின்னடைந்த சமூகமொன்றின் வாழ்க்கைப் போராட்டத்தை சித்தரிக்கின்ற இந்தப் படத்தில் ஹஷ் பப்பி என்ற பாத்திரத்தில் குவாஞ்சனே வாலிஸ் நடித்…

  12. தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின்தலைவர் அமீர் இன்று விஸ்வரூபம் தடை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் தான் இன்னும் படத்தை பார்க்கவில்லை என்றும், படத்தை பார்த்த பின்புதான் கருத்து தெரிவிக்க இயலும் என்றும், எனவே இதுகுறித்துதிரைப்பட கலைஞர்கள் யாரும், தனிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், நீதிமன்ற தீர்ப்புக்கு பின் கருத்து தெரிவிக்கலாம் என்றும் மழுப்பலாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இயக்குனர் அமீரின் முழு அறிக்கைப் புகைப்படம் பார்க்க....

    • 0 replies
    • 641 views
  13. சென்னை : பிரமாண்டமாக உருவாக்கியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு கமல் 100 கோடி ரூபாய் செலவழித்துள்ளார். இதற்கு அவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என எண்ணிப்பார்க்க வேண்டும். இதனை நினைக்கும்போது மனம் கலங்குகிறது. கமலை தமக்கு 40 ஆண்டுக காலமாக தெரியும் என்றும் தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு கொண்டு சென்றவர் கமல் என்றும், அவர் யாரு‌டைய மனதையும் புண்படுத்தும்படி நடந்து கொள்ள மாட்டார் என்றும், அவரது திரைப்படத்தை வெளியிட அமர்ந்து பேசி தீர்க்க வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். விஸ்வரூபம் திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாவதாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திரைப்படத்திற்கு மாநில அரசு தடை விதித்தது. கேரளாவில் …

    • 2 replies
    • 474 views
  14. விஸ்வரூபம் படம் சாதாரணமாக வந்திருந்தால் இந்த அளவு கவனிக்கப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. காரணம், அத்தனை சுலபத்தில் வசீகரிக்காத அதன் கதை! அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது கதை. பிராமணப் பெண் பூஜாகுமார், பி.எச்.டி படிப்பதற்காக, அதிக வயசு வித்தியாசம் உள்ள கமலை திருமணம் செய்வதாக ஒப்பந்தம் போட்டு அமெரிக்கா வருகிறார். ஆனால் வந்த இடத்தில் கம்பெனி பாஸுடன் கள்ளக் காதல். நடன ஆசிரியரான கணவருக்கும் அவரது மாணவி ஆன்ட்ரியாவுக்கும் கள்ளத் தொடர்பு இப்பதாக சந்தேகம் பூஜாவுக்கு. இது உண்மையாக இருந்தால் கமலை வெட்டிவிடுவது எளிதாக இருக்கும் என்று ப்ரைவேட் டிடெக்டிவ்வை நியமிக்கிறார். அப்போதுதான் கமல் ஒரு முஸ்லிம் என்பது அம்பலமாகிறது. அதேநேரம் கமலை பின் தொடரும் டிடெக்ட்டிவ் கொல்லப்படுகிறார். அப்பாவி …

  15. முஸ்லீம்க‌ள் "விஸ்வ‌ரூப‌ம்" ப‌ட‌த்தை எதிர்க்கும் கார‌ண‌ங்க‌ள் ஆறு. பெரும் பொருட் செலவில் கமல்ஹாசன் நடித்து, இயக்கித் தயாரித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் இஸ்லாமியர்களையும், இஸ்லாமையும் இழிவுபடுத்துவது போலவும், மோசமாக சித்தரிப்பதாகவும் உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. விஸ்வரூபம் படத்தைப் பார்த்த இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், இப்படத்தில் இஸ்லாமியர்களை இதுவரை யாருமே இப்படி கேவலப்படுத்தியதில்லை என்றும் குமுறல் வெளியிட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் விஸ்வரூபம் படம் தொடர்பாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் இவைதான்... 1)விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதியாக காட்டப்படும் நபர் முஸ்லீமாக காட்டப்படுகிறார். மேலும் எந்த ஒரு தீவிரவாத செயலையும் செய்யும் முன்பு …

  16. நார்வே தமிழ் திரைப்பட விழா கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வருகிறது. தமிழ் திரைத்துறையினருக்கு இது முக்கியமான திரைப்பட விழா. த‌மி‌‌ழ் இயக்குனர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வதும் ர‌சிகர்களுடன் கலந்துரையாடுவதும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. நான்காவது நார்வே தமிழ் திரைப்பட விழா இந்த ஆண்டு நடக்கிறது. இதற்கான பத்தி‌ரிகையாளர் சந்திப்பு நேற்று மதியம் ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் நடந்தது. இந்தமுறை சற்று விசேஷம். ஐரோப்பாவிலுள்ள லண்டன், ஆஸ்லோ, பெர்லின் ஆகிய நகரங்களில் இந்த விழா நடக்கிறது. முன்பு ஒரே நகரத்தில்தான் இந்த விழா நடந்து வந்தது. ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் திரையிட பதினைந்து படங்கள் தேர்வாகியுள்ளன. அவை... நடுவுல கொஞ்சம் பக்…

  17. விஸ்வரூபம் படத்தை முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பதை கமலஹாசன் கண்டித்து நேற்று அறிக்கை வெளியிட்டார். பிரபலங்கள் மீது தாக்குதல் நடத்தி சிறு குழுக்கள் அரசியல் ஆதாயம் பெற நினைக்கின்றன என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதில் அளித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹர்அலி கூறியதாவது:- முஸ்லிம்கள் கமலுக்கு எதிரானவர்கள் அல்ல. நிறைய முஸ்லிம் பெண்களும், இளைஞர்களும் கமல் ரசிகர்களாக இருக்கிறார்கள். ஆனால் உன்னைப்போல் ஒருவன் படத்தில் நடித்த பிறகு எங்களிடம் இருந்து அன்னியப் படலானார். விஜயகாந்த் படங்களில் தீவிரவாதிகள் பற்றிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர் தீவிரவாதிகளை மட்டுமே காட்டுவார். ஆனால் விஸ்வரூபம் படம் அப்படி அல்ல. தீவிரவாதிகள் தலைவர் முல்லாஉமர் கோவை, மதுரையில் வசித்தத…

  18. 'என்னுடைய 'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு எதிராக ஏவி விடப்பட்டிருக்கும் கலாசாரத் தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை நான் நாடவுள்ளேன்' என்று நடிகரும் - இயக்குநருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 'விஸ்வரூபம்' திரைப்படத்திற்குத் தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், இத்திப்படத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் கமல்ஹாசனின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'எனக்கும், எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக எழுந்திருக்கும் குரல்களால் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில், எனது திரைப்படம் எந்த வகையில், இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை. எனது அற…

  19. நடிகர்கள் : கமல்ஹாசன்,பூஜாகுமார்,ஆண்ட்ரியா, இசை : சங்கர் எஷான் லோய், தயாரிப்பு,இயக்கம் : கமல்ஹாசன் அமெரிக்க நடன ஆசிரியராக வேலை பார்க்கும் கமலுடன் இருக்கவே மனைவி பூஜாகுமாருக்கு பிடிக்கவில்லை. இதில் வேலை பார்க்கும் முதலாளியோடு கள்ளத் தொடர்பு வேறு. “என்னோட ஆம்படையா எப்படி தெரியுமா” என்று ஆரம்பித்தவுடன் கமலின் முகம் தெரிய ஆரம்பிக்கிறது. முகம் முழுவதும் பெண்மை கலந்த நளினத்தோடு, நடனம் சொல்லி கொடுக்கும் பாங்கு, கமலுக்கு சொல்லவா வேண்டும். ஜமாய்க்கிறார்.. தான் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் முதலாளியை மணப்பதற்கு விவாகரத்து செய்ய வேண்டுமல்லவா..அதற்காக ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சியை வைத்து கமலை பாலோ பண்ண வைக்க, அதிர்ச்சியாக கமல்…

    • 0 replies
    • 760 views
  20. ஒரு முத்தமும் பல கேள்விகளும் .. ‘பம்பாய்’ படத்துக்குப் பின் மறுபடியும் மணிரத்னம், ராஜீவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியுடன் எழுத ‘அறம்’ புகழ் எழுத்தாளர் ஜெயமோகன், நடிக்க கார்த்திக்கின் மகன், ராதாவின் மகள், மறுபடியும் அரவிந்த்சாமி, முதல்முறையாக மணிரத்னம் படத்தில் அர்ஜுன் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் பல விளம்பர அம்சங்களுடன் வரவிருக்கும் ‘கடல்’ படத்தின் முதல் டிரெய்லர் பார்த்தேன். பார்க்கச் சொன்னவர் திரையுலகில் பணி புரியும் ஒரு நண்பர்தான். படத்தில் நடிக்கும் ராதாவின் மகள் துளசிக்கு 15 வயதுதான் ஆகிறது. அந்த சிறுமியை இப்படி முத்தமிடும் காட்சியில் பயன்படுத்தியிருப்பது சரிதானா என்ற கேள்வியை அவர் ‘பேஸ்புக்’ சமூக இணைய தளத்தில் எழுப்பியதாகவும் யாருமே …

  21. கலாசார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்: கமலஹாசன் சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு எதிராக ஏவி விடப்பட்டிருக்கும் கலாசாரத் தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். என்று வலியுறுத்தி உள்ள நடிகர் கமலஹாசன், தடையை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து இன்று கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில், " எனக்கும் எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக எழுந்திருக்கும் குரல்களால் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில் எனது படம் எந்த வகையில் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை. அச்சமூகத்தினருக்கு ஆதரவான எனது அறிக்கைகள், பேச்சுக்கள் அனுதாபியாக என்னை முத்திரை குத்தியுள்ளன. அதேசமயம், ஒரு நடிகனாக, எது மனிதாபிமானமோ அதற்காக நான் பல படி மேலே போய் கு…

    • 4 replies
    • 1k views
  22. சென்னை: கமலஹாசனின் நடிப்பு,இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியாக உள்ள 'விஸ்வரூபம்' படத்தை தடை செய்யக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று மனு அளித்துள்ளன. டி.டி.எச். சில் வெளியிடுவதாக அறிவித்ததன் காரணமாக 'விஸ்வரூபம்' படத்திற்கு ஏற்கனவே பல்வேறு இடையூறுகளை சந்தித்தார் கமலஹாசன். ஒருவழியாக அப்பிரச்னைக்கு தீர்வு கண்டு, ஜனவரி 25 ஆம் தேதியனறு 'விஸ்வரூபம்' ரிலீசாக உள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் 'விஸ்வரூபம்' படத்தை தடை செய்யக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று மனு அளித்துள்ளது புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 'விஸ்வரூபம்' படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் புகார் கூறி…

    • 5 replies
    • 879 views
  23. இளையராஜாவை பிரிந்த பிறகு வைரமுத்து எழுதிய பிரிவுக்கடிதம்! இசை ஞானியே! என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை. உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை. என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே! உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன. கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன். மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன் நினைவுகளோடு நான் நித்திரை கொள்க…

  24. மனதில் உறுதி வேண்டும் நல்ல படம்

  25. கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள விஸ்வரூபம் எதிர்கொண்ட விஸ்வரூப பிரச்சனைகள் இப்போது விலகிவிட்டன. இந்த மாத இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய முழு வீச்சில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் கமல்ஹாசன், சில தினங்களுக்கு முன் தனது படத்தை இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு திரையிட்டு காண்பித்துள்ளார். படத்தைப் பார்த்த பாலு மகேந்திரா “படத்தைப் பார்த்தால் கமலுக்கு பித்துபிடித்துப் போய்விட்டது என்று நினைக்கிறேன். படத்திற்கு தன்னை அர்ப்பணித்து, கடின உழைப்புடன் ஆராய்ந்து இந்த படத்தை எடுத்திருப்பதைப் பார்த்தால் கண்டிப்பாக கமலுக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். இந்த பைத்தியம் இருக்கும் வரை கமலை யாரும் அசைக்க முடியாது. விஸ்வரூபம் பார்த்த பிறகு கமல் தமிழன் என்பதிலும், என் நல்ல நண்பன் என்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.