வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
முத்திரை பதித்த வித்தகர்! S. V. Ranga Rao and M. R. Radha in Modern Theatres' `Kavitha'. - THE HINDU ஜூலை 3: எஸ்.வி.ரங்கா ராவ் நூற்றாண்டு தொடக்கம் செல்வாக்கு பெற்ற நடிகர்கள் வலிந்து உருவாக்கிக்கொண்ட சாகசக் கதாபாத்திரங்களின் நிழல், அத்தனை எளிதில் அவர்களை விடுதலை செய்வதில்லை. அவர்களுக்கான நட்சத்திரப் பிம்பத்தை உருவாக்குவது அந்த நிழலே. அந்தப் பிம்பத்துக்கு நேர்மாறான கதாபாத்திரத்தில் நடிக்கும்போது மக்கள் ஏற்பதில்லை. உச்ச நடிகர்கள் ஏற்கும் கதாபாத்திரங்களில், பிம்ப ஒளிவட்டம் பொருந்திய நடிகர்களாகவே பார்வையாளர்களுக்குத் தெரிவதால்தான் இந்தப் பின்னடைவு. எம்.ஜி.ஆரை ‘எங்க வீட்டுப் பிள்ளை’யாகவும் ஜெமினி கணேசனைக் காதல் மன்னனாக…
-
- 0 replies
- 598 views
-
-
The way back ஆங்கில சினிமா சுதந்திரத்திற்கான வேட்கை அடக்க முடியாதது. மற்றவனுக்கு தாழ் பணிவதும், அடங்கி வாழ்வதும், கொடும் சிறையில் அடைக்கப்பட்டு அல்லலுறுவதும் எந்தவொரு மனிதனுக்கும் உவப்பானதல்ல. அதுவும் செய்யாத குற்றத்திற்காக அடைபட்டுக் கிடப்பது கொடூரமானது மட்டுமல்ல அவலமானதும் கூட. Janusz (Jim Sturgess) சிறையில் அடைபடுகிறான். அவன் குற்றம் செய்யவில்லை என்பது சூசமாக எமக்கு உணர்த்தப்படுகிறது. அவனது மனைவியே அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்வதைப் பார்க்கிறோம். பயத்தில் உறைந்த முகமும், கலைந்து கிடக்கும் கேசமும், சிவந்த கண்களும், முட்டிக் கொண்டு வரும் கண்ணீரும், அது உதிர்வதைத் தடுக்க முயலுவதுமாக அவள். மறுபு…
-
- 0 replies
- 598 views
-
-
’யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை’ ஸ்ருதிஹாசன் ‘சங்கமித்ரா’ திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அடுத்து ‘சபாஷ்நாயுடு’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஹிந்தியில் நடித்துள்ள ‘பெஹன் ஹோகி தேரி’ திரைப்படம் 9ஆம் திகதி வெளியாகிறது. இந்த நிலையில், சுருதிஹாசன் அறுவை சிகிச்சை செய்து தனது உதட்டை அழகுபடுத்திக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் சிலர் அவரை விமர்சித்தனர். இதற்கு பதில் அளித்துள்ள ஸ்ருதிஹாசன், “என் உடம்பு, என் முகம், என்ன வேண்டுமானாலும் செய்வேன். யாருக்கும் பதில் சொல்லவேண்டியது இல்லை. சமூக வலைத்தளங்களில் யார் என்னைப்பற்றி என்ன எழுதினாலும் எனக்கு கவலை இல்லை. நான் யாருக்கும் பதில…
-
- 4 replies
- 598 views
-
-
[size=4]பிரபல இந்திப்பட இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கும் படம் 'டேவிட்!. இப்படத்தில், விக்ரம், ஜீவா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். கதைப்படி, விக்ரம் மீனவராகவும், ஜீவா இசைக் கலைஞராகவும் நடிக்கும் இப்படம், இரண்டு தனி கதைகளை கொண்டதாம். அதோடு, இரண்டு கதைகளையும், இரண்டு கேமராமேன்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.[/size] [size=4]மேலும், இப்படத்துக்கு, எட்டு பேர் இசையமைத்துள்ளனர். அவர்களில், "கொலைவெறிடி புகழ் அனிருத், பிரஷாந்த் பிள்ளை, மாடர்ன் மாபியா, ரெமோ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 0 replies
- 598 views
-
-
மோகன்லால்: உளவியலும் உடல்மொழியும் ஆர். அபிலாஷ் கமலின் நடிப்பு பற்றி ஒரு ஓரு பேட்டியில் மணிரத்னத்திடம் கேட்கிறார்கள். அவர் ”நாயகன்” படத்தில் ஒரு காட்சியை படமாக்கிய அனுபவம் பற்றி சொல்கிறார். அது ரொம்ப முக்கியமான காட்சி. அதனால் அதை டாப் ஆங்கிளில் படமாக்க நினைக்கிறார் மணிரத்னம். அது போல் பின்னணி சூழல் அமைப்பிலும் கவனம் செலுத்துகிறார். ஆனால் கமல் நடிக்க துவங்கியதும் மொத்த காட்சியையும் அவர் ஆதிக்கம் செலுத்துகிறார். அதாவது ஒளிப்பதிவாளர், பின்னணி இசை அமைப்பாளர், கள அமைப்பாளர், கூட நடிப்பபவர்கள் யாரையும் பொருட்படுத்தாமல் கமல் தன்னந்தனியாக காட்சியை தன் முதுகில் தூக்கி செல்கிறார். மணிரத்னம் இதை ஒரு சிறப்பாக வியந்தாலும் கூட இது ஒரு குறை அல்லவா எனவும் …
-
- 1 reply
- 597 views
-
-
ரூ. 4500 கோடி வசூல் செய்து ஹாரிபாட்டர் படம் சாதனை ஹாரி பாட்டர் கதையை தழுவி எடுக்கும் சினிமா படங்கள் உலக அளவில் வசூல் சாதனையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் இதன் இறுதி பாகமான ஹாரிபாட்டரும், உயிர் ரகசியமும் (“ஹாரி பாட்டர் அண்டு டெத்லி ஹாலோவ்ஸ்” பார்ட்-2) என்ற படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை உலகம் முழுவதும் அமெரிக்காவின் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் பரபரப்பாக ஓடி வசூலில் சக்கை போடு போடுகிறது. இப்படம் இதுவரை ரூ.4500 கோடி வசூல் செய்து “பாக்ஸ் ஆப் கிட்” பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு வெளிவந்த பைரேட் ஆப் தி கரீபியன் என்ற படம் முதலிடம் வகிக்கிறது. இது ரூ.4635 கோடி வசூல் செய்துள்ளது. அதற்கு அடுத்த படியாக இப்படம் ரூ.4,500 க…
-
- 0 replies
- 596 views
-
-
Andhadhun - Hindi ஒரு கோவா ( cabbage) தோட்டம் அதற்குள் இருக்கும் கோவா எல்லாத்தையும் ஒரு ஒற்றைக்கண்முயல் அரைகுறையாக தின்று சேதமாக்குகின்றது ,கோபத்துடன் முயலை துரத்தும் தோட்டக்காரன் குறிபார்த்து சுடுகிறான்..குறிதவறும் தோட்டாவும் துள்ளி பாயும் முயலும் வாழ்வா சாவா நிலையில் நிற்கும் ஒருவனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகின்றது ********************************************************************************************* ஆகாஷ் ஒரு கண் பார்வையற்ற? பியானோ கலைஞன் வாய்ப்புகளை தேடிகொண்டிருப்பவன் ,வீதியில் நடக்கும் ஒருவிபத்தில் ஷோபி யை சந்திக்கிறான். அவள்மூலம் அவளின் தந்தை நடத்தும் விடுதியில் பியானோ வாசிக்க போகிறான் அங்கு அவனுக்கு பிடித்த முன்னாள் திரைப்பட நடிகரின் அறிமுக…
-
- 0 replies
- 596 views
-
-
திரைக்குப் பின்னால்: இளையராஜாவின் இசை நிழல்! ராஜாவுடன் புரு ஆர்.சி.ஜெயந்தன் சரியாக 44 ஆண்டுகளுக்கு முன் ஓர் இசையமைப்பாளராகப் பிரவாகித்த இளையராஜா, தன் அறிமுகப்படத்தைக்கொண்டே, ‘அன்னக்கிளி’க்கு முன், ‘அன்னக்கிளி’க்கு பின் எனத் தமிழ்த் திரையிசையை இரு கூறாகப் பிரிக்கவேண்டிய கட்டாயத்தை உருவாக்கினார். புதிய இசைவடிவம், புதிய இசைக்கருவிகளின் அறிமுகம், புதிய ஒலிப்பதிவுத் தொழில்நுட்பம் என மெல்லிசை மன்னருக்குப் பின்னர், பெருந்தேடல் கொண்டிருந்தார். தனது தேடலுக்கு ஏற்ற ரசனை மிகுந்த ஒரு கலைஞனைத் தன் அருகில் வைத்துக்கொள்ள நினைத்தார். அப்போது நவீனத்தின் மொத்த உருவமாக அவருக்குக் கிடைத்தவர்தான் ‘புரு’ என்று இளையராஜாவால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட ஆர். புருஷோத்தமன். …
-
- 0 replies
- 596 views
-
-
பிரபல தமிழ் நடிகை த்ரிஷா- தொழிலதிபர் வருண்மணியன் நிச்சயதார்த்தம் சென்னையில் இன்று நடைபெற்றது. சினிமாவில் 12 ஆண்டுகளாக நீடித்து வரும் த்ரிஷாவின் திருமணம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியானது. இதனிடையே, தொழிலதிபரான வருண்மணியனுடன் சேர்ந்து த்ரிஷா இருப்பது போன்ற படங்கள் வெளியானது. இதனால் த்ரிஷாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாக செய்தி வெளியானது. ஆனால், இதனை த்ரிஷா மறுத்தார். இந்நிலையில், திடீரென வருண்மணியனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கடந்த ஜனவரி 7ஆம் தேதி த்ரிஷா திடீரென அறிவித்தார். மேலும், ஜனவரி 23 ஆம் தேதி ( இன்று) திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் கூறியிருந்தார். அதன்படி, சென்னையில் இன்று காலை த்ரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடை…
-
- 2 replies
- 596 views
-
-
இந்தக் காதல் கதை இனிக்குதா... கசக்குதா? - ‘காதல் கசக்குதய்யா’ விமர்சனம் மெச்சூரிட்டி + புறத்தோற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் தன்னைத் தேடி வரும் காதலை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தவிக்கும் ஓர் இளைஞனின் கதையே, 'காதல் கசக்குதய்யா'. லவ் பண்ற பொண்ணுக்காக சண்டை போடுறது, அந்தப் பொண்ணு வேற ஒருத்தனோட ரிலேஷன்ஷிப்ல இருக்குறான்னு தெரிஞ்ச உடனே அவளுக்கான மவுசு அதிகமாகுறது எல்லாம் வழக்கமான ஸ்கூல் லவ் ஸ்டோரில வர்ற டெம்ப்ளேட் காட்சிகள்தான். அதுவே அந்த ஸ்கூல் பொண்ணு லவ் பண்ற பையனுக்கு 25 வயசுனா.. என்னெல்லாம் நடக்கும்? அவங்களுக்குள்ள எந்த மாதிரியான ஈகோ மோதல் வரும்? ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிற அளவுக்கு ஸ்பேஸ் இருக்கும…
-
- 0 replies
- 596 views
-
-
முதல் பார்வை: C/O காதல் பள்ளிக் காலம், பதின்ம வயது, நடுத்தர வயது, 40 வயதுக்கு மேல் என நான்கு பருவங்களில் நடக்கும் காதல் கதைகள். இதில் எந்தக் காதல் கை கூடியது, எது தோல்வியடைந்தது என்பதே 'C/O காதல்'. காதல் என்பதைத் தாண்டிய பொதுவான விஷயம் ஒன்று இந்த நான்கு காதல்களுக்கு இருக்கிறது. அதுவே படத்தின் முக்கியமான திருப்புமுனை. ஒரு காதலைத் தவிர மற்ற மூன்று காதல் கதைகளிலும் ஏதோ ஒரு விஷயம் கண்டிப்பாக நம்மைப் பாதிக்கிறது. பள்ளி நாட்கள் காதல் கதையில் சிற்பி கதாபாத்திரத்தின் முடிவும், நடுத்தர வயதுக் காதலில் சலீமா கதாபாத்திரத்தின் முடிவும் அதிர்ச்சியைத் தர, 40 வயதைக் கடந்த இருவர் காதலிக்கும் கதையில் அதன் வெகுளித்தனமும், நடக்கும் சம்பவங்களின் நகைச்சுவையும் ஆச்சரியத்தை…
-
- 0 replies
- 596 views
-
-
[size=3]கலகலப்பு' படத்தில் 'இவளுக இம்சை தாங்க முடியல' பாட்டில் அஞ்சலியின் கவர்ச்சி குத்தாட்டத்தை பார்த்து ரசித்தவர்களுக்கு ஒரு 'சேட்டை' படம் ஒரு படி மேலேயே உற்சாகப்படுத்த இருக்கிறது. 'சேட்டை' படத்தில் அஞ்சலி ஒரு கவர்ச்சியான முத்தக் காட்சியிலும், ஹன்சிகா ஒரு கிளுகிளுப்பான படுக்கையறை காட்சியிலும் ரசிகர்களை சூடாக்க இருக்கிறார்கள். முத்தக் காட்சியில் நடிக்கிறது எல்லாம் ஒரு தப்பா... அது பாச முத்தமா கூட இருக்கலாம் என்று தன் கருத்தை கூறி இருக்கிறார் அஞ்சலி. " படம் ரிலீஸ் ஆகும்வரை இந்த ரகசியத்தை வெளியே சொல்லாதீர்கள் என்று இயக்குனரிடம் சொல்லியிருந்தும் ரகசியத்தை வெளியே சொல்லிவிட்டார். இந்தக் கதையை இயக்குனர் எனக்கு சொல்லும்போதே ஒரு டெஸ்ட் வெச்சார். ப…
-
- 0 replies
- 595 views
-
-
இலங்கைப் பற்றி 'CEYLON”எனும் தலைப்பில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனால் தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கும் படமானது 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் இலங்கையை பற்றியதாக இருக்கின்றது என்பதனால் அந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இந்த படத்திற்கு தமிழில் இப்படத்திற்கு 'இனம்' என்று பெயரிட்டு இருக்கிறார்கள். ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன், 'தளபதி', 'ரோஜா', 'இருவர', 'ராவணன்' உள்ளிட்ட பல படங்களுக்கு தனது வித்தியாசமான கேமரா கோணம், ஒளி அமைப்புகளால் பெயர் பெற்றவராவார். ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணைப்பில் உருவான 'துப்பாக்கி' படத்தின் ஒளிப்பதிவாளர் இவரே. ப்ருத்விராஜ் நடித்த 'உருமி' என்ற படத்தினையும் இவரே இயக்கி இருக்கிறார். 'துப…
-
- 1 reply
- 595 views
-
-
அவென்ஜர்ஸ்' இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கும் தனுஷ் நடிகர் தனுஷ் சகோதரர் செல்வராகவன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 2௦௦2ல் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்கம் எனப் படிப்படியாக உயர்ந்துள்ளார். ஏற்கனவே இரண்டு பாலிவுட் படங்களில் நடித்து உள்ளார். தற்போது மூன்றாவது பாலிவுட் படமான 'அட்ரங்கி ரே' படத்தில் நடித்து வருகிறார். கென் ஸ்காட் இயக்கிய சர்வதேச திரைப்படமான 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பாகி…
-
- 0 replies
- 595 views
-
-
ரஜினி கேட்டும் கூட, பாலச்சந்தரின் படத்துக்கு இசையமைக்க மறுத்துவிட்டேன் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார். பிரபல வார இதழில் இளையராஜா வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். புதுப்புது அர்த்தங்கள் படத்துக்குப் பிறகு பாலச்சந்தர் படங்களுக்கு அவர் இசையமைக்காமல் போனது, அதுவும் ரஜினி கேட்டும் கூட இசையமைக்க மறுத்தது பற்றி வாசகர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். அந்த கேள்வி பதில்: கேள்வி: புது புது அர்த்தங்கள் படத்திற்கு பிறகு நீங்கள் பாலசந்தர் படங்களுக்கு இசையமைக்கவில்லையே, ஏன்? பதில்: புது புது அர்த்தங்கள் படத்திற்கு ரீரெக்கார்டிங் நடக்க வேண்டிய நேரத்தில் இங்கே ஸ்ட்ரைக் இருந்தது. அதனால் சிவா என்கிற படத்துக்காக நான் பாம்பே போயிருந்தேன். அப்போ கவி…
-
- 0 replies
- 595 views
-
-
Pinned by OLIPARAPPU ஒளிபரப்பு S.t.a_ S.t3 weeks ago (edited) நான் இலங்கை தமிழர்களின் பல திரைப்பட படைப்புகளைப் பார்த்து இருக்கின்றேன். ஆனால் இதுபோன்று ஒரு இயற்கையான தத்ரூபமான நடிப்பில் சிறந்த திரைக்கதை அமைப்பிலும் ஒரு படம் பார்த்தது இல்லை. தயாரிப்பாளர்களுக்கும் அதில் நடித்த நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். இதில் பாராட்டத்தக்க விடயம் என்னவென்றால் நமது இலங்கை தமிழர்களின் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த . பிள்ளைகளின் தமிழ் உச்சரிப்பு மிகவும் பாராட்டத்தக்கது.👍👑 இவ்வாறு தமிழைக் கதைத்து நடிக்கக் கூடிய திறமை படைத்தவர்களாக இலங்கையில் கூட சிறுவர்கள்(. இளம் தலைமுறையினர்) இருக்கமாட்டார்கள். இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகவும் திறமையாக நடித்திருக்…
-
- 1 reply
- 595 views
-
-
'மாஸ்டர்' படத்துக்காக ஒன்றிணைந்த தென்னிந்தியத் திரையுலகம். 'மாஸ்டர்' படத்தின் லீக்கான காட்சிகளைப் பகிர வேண்டாம் என்று தென்னிந்தியத் திரையுலகினர் ஒன்றிணைந்து கூறியுள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். நாளை (ஜனவரி 13) இப்படம் வெளியாகவுள்ளதால், இந்தப் படத்தைத் திரையரங்குகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேற்று (ஜனவரி 12) மாலை திடீரென்று படத்தின் சில காட்சிகள் ஒன்றின்பின் ஒன்றாக இணையத்…
-
- 0 replies
- 594 views
-
-
பாடல்களே தேவையில்லை! - ஜிப்ரான் "கமல் அலுவலகத்தில் இருந்து போன் பண்ணி, "கமல் படத்துக்கு இசையமைக்க வேண்டும். டெல்லிக்கு கிளம்பி வாருங்கள்' என்றார்கள்" அறிமுகமான முதல் படத்திலேயே ("வாகை சூட வா') கவனம் ஈர்த்தவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். அந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு, இவருடன் பணிபுரிய விரும்பியவர்கள் பலர். அவர்களில் ஒருவர்தான் கமல். "விஸ்வரூபம்-2' படத்துக்கு ஜிப்ரானை இசையமைக்க அழைத்த கமல், அவரின் இசை பிடித்துப் போனதால் தொடர்ந்து "உத்தம வில்லன்', "பாபநாசம்' பட வாய்ப்புகளையும் ஜிப்ரானுக்கே வழங்கியிருக்கிறார். அவரைச் சந்தித்தோம். முதல் படத்திலேயே உங்களுக்கு எக்கச்சக்க ரெஸ்பான்ஸ். அந்த நேரத்தில் எப்படி உணர்ந்தீர்கள்? என் பாட்டை எல்லோரும் கேட்க வேண்டும் …
-
- 0 replies
- 594 views
-
-
Best picture 12 Years a Slave American Hustle Captain Phillips Dallas Buyers Club Gravity Her Nebraska Philomena The Wolf of Wall Street Best picture nominees in profile Best director Alfonso Cuaron, Gravity Steve McQueen, 12 Years a Slave Alexander Payne, Nebraska David O Russell, American Hustle Martin Scorsese, The Wolf of Wall Street Director profiles Best actor Christian Bale, American Hustle Bruce Dern, Nebraska Leonardo DiCaprio, The Wolf of Wall Street Chiwetel Ejiofor, 12 Years a Slave Matthew McConaughey, Dallas Buyers Club Actor profiles Best actress Amy Adams, American Hustle Cate Blanchett, Blue Jasmine Sandra Bullock, Gravity …
-
- 0 replies
- 593 views
-
-
[size=2] இயக்குனர் கே.பாக்யராஜின் வாரிசு சாந்தனு. சக்கரகட்டி, சித்து ப்ளஸ்டூ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் . இடையில் காதல் சந்தியாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கியவர். சாக்லேட் பாயாகவே நடித்தவர். அதனால் இவர் நடித்த எந்த படமும் இதுவரை வெற்றி பெறவில்லை. இன்னும் மார்க்கெட்டில் மந்தமான நிலையிலேயே இருக்கிறார். முன்னணி இயக்குனர்கள் யாரும் அவரை வைத்து படம் இயக்க முன்வராதபோது தங்கர்பச்சான் மட்டும் துணிச்சலாக தனது அம்மாவின் கைப்பேசி படத்தில் சாந்தனுவை நாயகனாக்கியிருக்கிறார்.[/size] [size=2] இதுவரை வளர்ந்த சூழல் எல்லாமே நகரமாக இருந்தபோதும். இந்த படத்துக்காக முழு கிராமத்து இளைஞனாக மாறி நடித்திருக்கிறேன். படத்தில் நடித்த போது நான் சாந்தனுவாக நடிக்கவில்லை. [/size] [size=2] அண்…
-
- 0 replies
- 593 views
-
-
சென்னை: த்ரிஷா தனது அம்மா பார்த்த 2 மாப்பிள்ளைகளுக்கு நோ சொல்லிவிட்டாராம். திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார் த்ரிஷா. ஆனால் இன்னமும் பட வாய்ப்புகள் குறைவில்லை. இந்நிலையில் த்ரிஷாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார் அவரது அம்மா உமா. மகளுக்காக மும்முரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார். இந்நிலையில் அம்மா பார்த்த 2 மாப்பிள்ளைகளை நிராகரித்துவிட்டாராம் த்ரிஷா. ஏன் த்ரிஷா, என்னாச்சு என்று கேட்டால், அவர்கள் வெளிநாட்டில் வேலை பார்க்கின்றனர். வெளிநாடு என்பதால் தான் முடியாது என்று கூறிவிட்டேன். எனக்கு உள்ளூர் மாப்பிள்ளை தான் வேண்டும் என்றார். த்ரிஷாவுக்கு இந்த ஆண்டே திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது. அவர் படங்களில் பிசியாக இருப்பதால் இந்த ஆண்டு திருமணம் நடப…
-
- 2 replies
- 593 views
-
-
தமிழில் அறிமுகமாகும் பிரான்ஸ் அழகி புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் 'மேல்நாட்டு' மருமகன் திரைப்படத்தில் பிரான்ஸ் நாட்டின் மொடல் அழகியும் நடிகையுமான என்ட்ரியன் நடிக்கிறார். ராஜ்கமல் ஹீரோவாக நடிக்கும் இத்திரைப்படத்தை எம்.எஸ்.எஸ் இயக்குகிறார். தமிழ்நாட்டு இளைஞர்கள் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள். வெளிநாட்டு மோகத்தில் திளைக்கிறார்கள். இன்னும் சிலர் வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்துகொண்டு அங்கேயே தங்கிவிடுகின்றனர். அவர்களை பற்றிய கதை ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் தமிழ் கலாசாரத்தை விரும்பி, நேசித்து தமிழ் இளைஞனை திருமணம் செய்து கிராமத்தில் வாழ விரும்பும் வெளிநாட்டு பெண்ணின் கதை. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நல்ல வெளிநாட்டு நடிகையை தேடிய…
-
- 1 reply
- 593 views
-
-
இயக்குனர் பாலு மகேந்திராவின் ப்ளாக் http://filmmakerbalumahendra.blogspot.in/ thanks-facebook
-
- 0 replies
- 593 views
-
-
-
- 0 replies
- 593 views
-
-
ஸ்ரீதேவியின் மரணம் – அழகு – இளமை – அறுவைச் சிகிச்சை – பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் – அமலா பேசுகிறார்.. பெண்ணிடம் மட்டும் உங்களுக்கு எப்போது திருமணம், எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள், சமைப்பீர்களா என்று கேட்க வேண்டும் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் பல தளங்களில் விவாதிக்கப்பட்டது. அப்போது அழகாய் இருப்பதற்காக அவர் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதாகவும் அவரின் மரணத்திற்கு அதுவும் காரணம் என்றும் சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடிகை அமலா, சமூக ஊடகத்தில், முதுமை தொடர்பாக பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் குறித்து எழுதி இருந்தார். …
-
- 0 replies
- 592 views
-