வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
பிரபலமான நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அவர்களது ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு அளவே இருக்காது. அதிலும் ரஜினி படம் வெளியானால் ரசிகர்கள் கொஞ்சம் அதிகமகவே கொண்டாடுவார்கள். தங்கள் விருப்பமான நடிகர்களை தெய்வமாகவும் அவர்களது படத்திற்கு அபிஷேகங்கள் செய்வதும் ரசிகர்களின் வாடிக்கையாகி விட்டது. இப்படி ரஜினி ரசிகர்கள் அவரது கட்-அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்தது ரஜினிக்கு எதிராக திரும்பி உள்ளது. பெங்களூரை சேர்ந்த கன்னட தமிழ் கூட்டமைப்பின் தலைவர் மணிவண்ணன் பெங்களூர் மேயோ ஹால் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அவர் தொடர்ந்த வழக்கில், ரஜினி ரசிகர்கள் கட்-அவுட், பேனர்களுக்கு பாலபிஷேகம் செய்க…
-
- 0 replies
- 528 views
-
-
திருமணமானதும் தனது வேண்டுதலை நிறைவேற்ற கணவரோடு நேற்று வேளாங்கண்ணிக்கு வந்தார் கோபிகா. வேளாங்கண்ணி மாதா கோயிலில் தனது நன்றி அறிவிப்புப் பிரார்த்தனையைச் செலுத்திய அவரைக் காண முண்டியடித்தது கூட்டம். ஒரு கட்டத்தில் ரசிகர்களின் நெரிசலில் சிக்கிக் கொண்ட கோபிகாவை வேளாங்கண்ணி போலீசார் மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். வேளாங்கண்ணி விசிட் குறித்து கோபிகாவிடம் கேட்டபோது, மிகுந்த மனநிறைவைத் தந்த பயணம் இதுதான். திருமணமானதும் வேளாங்கண்ணிக்கு வந்து மாதாவுக்கு என் நன்றி காணிக்கையைச் செலுத்துவதாக வேண்டிக் கொண்டிருந்தேன். அதை உடனே நிறைவேற்றத்தான் வந்தேன். இங்கு கூடிய ரசிகர் கூட்டம் நானே எதிர்பார்க்காதது. மனசுக்குள் ஒரு ஓரத்தில் சின்ன வருத்தமாகக் கூட இருந்தது. இவ்வளவ…
-
- 1 reply
- 863 views
-
-
ரசிகர்களின் நண்பர்! ஜெமினி கணேசன், சாவித்திரி ஜெமினி கணேசன் 98-வது பிறந்த தினம், நவம்பர் 17 சிறிய நடிகரோ பெரிய நடிகரோ தன் ரசிகர்களோடு கைகுலுக்குவார்கள். ஆட்டோகிராஃப் போட்டுத் தருவார்கள். அதிகம்போனால் ரசிகர்களின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு போட்டோ எடுத்துக்கொள்வார்கள். அன்றும் இன்றும் பெரும்பாலான நடிகர்கள் இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை அவர்களது தொழிலும் புகழும் அவர்களுக்கு ஏற்படுத்திவிடுகின்றன. இதில் ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் முற்றிலும் மாறுபட்டவர். தன் ரசிகர்களைக் கடைசிவரை நண்பர்களாகவும் சகோதரர்களாகவும் பார்த்தவர். ரசிகர்களின் இல்லத் திருமணம், விழாக…
-
- 0 replies
- 456 views
-
-
சென்னை: தனது பிறந்தநாளை பெற்றோரை வழிபடும் நாளாக கொண்டாடுமாறு தனது ரசிகர்களுக்கு பிறந்தநாள் செய்தியாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். வழக்கமாக தனது பிறந்த நாளன்று தனிமையில் கழிக்கும் ரஜினிகாந்த்,இன்று தனது பிறந்த நாளையொட்டி ரசிகர்களை சந்தித்தார். செய்தியாளர்களும், டி.வி.கேமராமேன்களும் போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டு முன்னால் கூடி நின்றனர். திடீரென்று அவர்களை ரஜினி வீட்டுக்குள் அழைத்தார். அப்போது செய்தியாளகள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள். பதிலுக்கு ரஜினி நன்றி கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்,"என் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் வாழ்த்து சொல்ல வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை சந்தித்தேன். மகிழ்ச்சியாக உள்ளது. எனது பிறந்த நா…
-
- 28 replies
- 2.1k views
-
-
ரசிகர்களை சுண்டி இழுக்கும் பட்டியல் எல்லா இடங்களிலும் வசூலை வாரிக் குவிக்கிறத விக்ரம் விஜய் முதல் நாளே பார்த்துவிட, படம் பத்திரிகை, டிவி அனைத்திலும் ஒருவரை ஒருவர் மாறி மாறி வாரிக்கொள்ளும் ஆக்ஷன் ஹீரோக்கள். அனல் பறக்கும் அவர்களது பேட்டிகள். அதற்கு மேல் ஆவேசம் ததும்பும் ரசிகர்களின் வெறி எல்லை மீறும். இப்படிப்பட்ட கூண்டுக்கிளித்தனமான தமிழ் சினிமா சூழலில் 2 ஆக்ஷன் ஹீரோக்களைப் போட்டு படம் எடுத்தால் தயாரிப்பாளர், இயக்குநர் கதி அதோகதிதான். ஆனால், ஒரே படத்தில் 2 ஆக்ஷன் ஹீரோக்கள் என மற்றவர்கள் செய்யத் தயங்கிய விஷயத்தை கதையில் எடுத்துக் கொண்டு கலக்கியிருக்கிறார் பட்டியல் இயக்குநர் விஸ்வநாதன். வெற்றி இயக்குநர்கள் பட்டியலில் இப்போது விஸ்வநாதனும். வெளியான வெள்ளிக்கிழம…
-
- 0 replies
- 1.2k views
-
-
சூர்யா ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம். பேச்சிலராக இருந்தபோது சூர்யாவிடம் இருந்த கலகலப்பு பிளஸ் ரசிகர்களை மதிக்கும் மனோபாவம் குடும்பஸ்தரான பிறகு மிஸ்ஸிங். காரணம் திருமதி சூர்யா? சென்னை கடையொன்றில் இந்த ஜோடி பர்சேஸ் செய்தது. ரசிகர்கள் வெளியே கூடிநின்றனர். அதிகமும் சாப்ட்வேர் என்ஜினியர்கள். வெளியே வந்த சூர்யா,ஜோதிகா ஜோடி காத்து நின்ற ரசிகர்களை கண்டு கொள்ளாததுடன், 'கஜினி' முகத்துடன் தொலைச்சுடுவேன் என்பதுபோல் சுண்டு விரலை நீண்டி மிரட்டினார் சூர்யா. இந்த அவமரியாதையால் சுண்டிவிட்டது ரசிகர்களின் முகங்கள். இதேபோல் நேற்று முன்தினம் இரவு திருப்பதி சென்றது இந்த நட்சத்திர ஜோடி.தேவஸ்தானத்துக்கு சொந்தமான விடுதியில் சிறது ஒய்வு எடுத்தவர்கள் ஒன்பது மணிக்கு க…
-
- 0 replies
- 811 views
-
-
-
- 4 replies
- 788 views
-
-
கவிஞர் வாலியின் உடலுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை அவரது உடல் தகனம் நடக்கிறது. காவிய கவிஞர் என்று திரையுலகினரால் பாராட்ட பெற்றவர் வாலி (82). கடந்த சில மாதங்களாகவே நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு வந்த இவர், கடந்த மாதம் 14ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். 2 தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மீண்டும் மோசமானது. உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட…
-
- 0 replies
- 374 views
-
-
புகழ் வந்தாலும் ஆடக் கூடாது: ரஜினி புகழ் என்பது ஆயிரம் கிலோ பாறை போன்றது. நமது தலையில் அது ஏறும்போது நிலையாக இருக்க வேண்டும். கொஞ்சம் ஆடினாலும் அது நம்மை பதம் பார்த்து விடும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். விவேக் ஹீரோவாக நடித்துள்ள சொல்லி அடிப்பேன் படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கத்தில் நடந்தது. இதில் இயக்குநர் கே.பாலச்சந்தர் கலந்து கொண்டு முதல் கேசட்டை வெளியிட ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். முதல் சிடியை ரஜினி வெளியிட, இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், ரஜினி பேசுகையில், 30 வருடங்களுக்கு முன்பு பாலச்சந்தர் சார் படத்தில் நடித்தபோது பயந்து பயந்து நடித்தேன். அதற்குப் பிறகு இப்போது ஷங்கரி…
-
- 5 replies
- 1.7k views
-
-
ரஜினி மகள் சவுந்தர்யா தியாகராய நகரில் ‘ஆக்கர் ஸ்டூடியோ’ என்ற நிறுவனத்தை தொடங்கி சினிமா கிராபிக்ஸ், அனிமேஷன் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். உலகளவில் ‘சுல்தான் தி வாரியா’ படத்தையும் ரிலீஸ் செய்ய உள்ளார். சினிமா தயாரிப்பிலும் இறங்கி உள்ள இவர், வெங்கட்பிரபு இயக்கும் ‘கோவா’ படத்தை தயாரித்து வருகிறார். ரஜினி சவுந்தர்யாவுக்கு திருமணம் செய்து வைத்து விட முடிவு செய்துள்ளார். மாப்பிள்ளை பெயர் அஸ்வின். சென்னையில் கட்டுமான தொழில் செய்யும் ராம்குமார் என்பவரின் மகன். அமெரிக்க ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். முடித்துள்ளார்.. தற்போது தந்தையுடன் கட்டுமான நிர்வாக பணிகளில் கவனம் செலுத்துகிறார். திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி பிப்ரவரி 17ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. …
-
- 3 replies
- 1.4k views
-
-
திரு ரஜனிகாந்த் அவர்களுக்கு வணக்கம், ஒரு ரசிகனாக இருந்தும் உங்களை தலைவா என்று அழைக்காததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். ஈழத்தில் பிறந்ததால் தலைவா என்று ஒரு நடிகரை அழைப்பது எனக்கு அந்நியமாக இருக்கிறது. ஆயினும் நான் உங்கள் பரம ரசிகன். ஈழத்தை சேர்ந்த பெரும்பாலானவர்கள் உங்கள் ரசிகர்கள்தான். தமிழ்நாட்டில் இருப்பவர்களை விட நாங்கள் உங்களை அதிகமாக நேசிக்கின்றோம். இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை. தமிழ்நாட்டில் குசேலன் படத்தை மக்கள் தோற்கடித்த பொழுது, வெளிநாடுகளில் அதை நாங்கள் வெற்றி பெறச் செய்தோம். வெளிநாடுகளில் தசாவதாரமா அல்லது குசேலனா நன்றாக ஓடியது என்று விசாரித்துப் பாருங்கள். நான் சொல்வது உண்மை என்று புரியும். படத்தைப் பார்க்காது உங்களை …
-
- 0 replies
- 3.6k views
-
-
நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கையில் பாட்சா படத்திற்கு முக்கிய இடம் உண்டு. மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் அது. நடிகர் ரஜினிகாந்தின் „சுப்பர் ஸ்டார்' பட்டத்தை மேலும் வலுவாக்கிய படம். ரஜினிகாந்திற்கு என்றே உருவாக்கப்பட்ட பாத்திரம் மற்றும் திரைக்கதையை கொண்டிருந்த படம். வேறு யார் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவ்வளவிற்கு எடுபட்டிருக்காது. படம் வெற்றி பெற்றதோடு மட்டும் அல்லாது ரஜினிகாந்தை அரசியலில் குரல் கொடுக்கவும் செய்த படம் அது. பாட்சா படத்தின் வெற்றி விழாவில் ரஜினிகாந்த் தமிழ் நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புக்களை கண்டித்துப் பேச அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதன் பிறகு „ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்க…
-
- 13 replies
- 1.5k views
-
-
மு.நியாஸ் அகமது, அறவாழி இளம்பரிதி பிபிசி தமிழ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Dinodia Photos ரஜினி தன் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்து இன்றோடு (டிசம்பர் 31) ஓராண்டாக போகிறது. அவரது ரசிகர்களின் பல தசாப்த காத்திருப்புக்குப் பின் சென்றாண்டு இதே நாளில்தான் ரஜினி தான் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். "எனது அரசியல் பிரவேசம் உறுதி. இது காலத்தின் தேவை" என்று அவர் அப்போது பேசி இருந்தார். அதுமட்டுமல்ல, "ஆன்மிக அரசியல்" …
-
- 2 replies
- 1.4k views
-
-
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் ஷூட்டிங், ஏப்ரல் 10-ம் தேதி தொடங்குகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சர்கார்’. விஜய் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்தார். வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு, ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படம் அரசியல் சம்பந்தப்பட்டது எனவும், அதற்கு ‘நாற்காலி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், அதை ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துள்ளார். இதுவரை …
-
- 2 replies
- 489 views
-
-
"வண்ணத்திரை" பகுதியில் யாரும் சொந்தமாக எழுதுவதாக தெரியவில்லை. நான் ஏதாவது எழுதுவோம் என்று நினைக்கிறேன். என்னுடைய வெப்ஈழம் இணையத்தில் அரசியலும், யாழ் களத்தில் பகுத்தறிவு சார்ந்த விடயங்களும் நான் எழுதுவது உங்களுக்குத் தெரியும். ஒரு மாறுதலுக்கு கொஞ்சம் சினிமாவும் எழுதப் போகிறேன். அதற்குள்ளும் அரசியல், திராவிடம், பார்ப்பனியம் என்று ஏதாவது வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. தமிழக சினிமா இவைகளை தவிர்த்துவிட்டு இயங்குவதும் இல்லை. "ரஜினி - கமல்" என்று தலைப்புக் கொடுத்தாகி விட்டது. இவர்கள் இருவரையும் பற்றி எனது மனதில் தோன்றியவைகைளை எழுதுவது என்னுடைய எண்ணம். ஆனால் இவர்களைப் பற்றி மட்டும் எழுதப் போவதில்லை. எழுதுகின்ற பொழுது வருகின்ற அனைத்து எண்ணங்களையும் இதில் சேர்த்துக் கொண…
-
- 29 replies
- 7.9k views
-
-
தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் தூள் கிளப்புகின்றன. அன்னதானங்கள் பொறி பறக்கின்றன. ஸ்பீக்கர்கள் அனைத்திலும் ரஜினி படப் படப்பாடல்கள்! புரிந்திருக்கும்... இன்று ரஜினியின் 57-பிறந்தநாள் ரசிகர்களை ஏமாற்றி இந்த முறையும் தலைமறைவாகிவிட்டார் ரஜினி. எங்கு இருக்கிறார்... யாருடன் இருக்கிறார்...? அது சஸ்பென்ஸ்! ரஜினிக்கு பிடித்த கடவுள் ராகவேந்திரர். ரஜினி மன்ற அகில இந்திய தலைவர் சத்ய நாராயணா ரஜினிக்கு இஷ்டமான கர்நாடக மாநிலம் மந்த்ராலயத்திலுள்ள ராகவேந்திரர் கோயிலுக்கு கிளம்பிச் சென்றுள்ளார். ரஜினி பிறந்தநாளுக்கு சிறப்பு பூஜை செய்யவும் 'சிவாஜி' வெற்றியடையவுமே இந்த யாத்திரை. சென்னை தி. நகர் ராகவேந்திரர் கோவில், வடபழனி முருகன் கோயில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை…
-
- 6 replies
- 1.7k views
-
-
ரஜினி அஜித்தின் அதிகாரவர்க்கம்: சிதைக்கப்பட்ட "சிகை" நடிகர் கதிர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது சிகை. இந்த படம் இன்று வெளிவந்துள்ளது என்பதே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் பேட்ட , விஸ்வாசம் என தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைக்கும் இரு பெரும் ஜாம்பவான்கள் மோதிக்கொண்டுள்ள இந்த பொங்கலில் தெரிந்தே தேவையில்லாமல் வந்து மாட்டிக்கொண்டது சிகை. சினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் மக்களிடம் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறுவது உறுதி. அப்படி நல்ல வித்தியாசமான கதையம்சம் கொண்டிருந்தும் அதிகாரவர்க்கத்தால் ஏழை நீதிக்காக வாதாடுவது போன்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது கதிரின் சிகை படத்திற்கு. தியேட்டர் சிக்கல்கள், பட வியாபாரம் என பல விசயங்களை கடந்து படத்தை வாங்கக்கூட…
-
- 4 replies
- 1k views
-
-
தேனி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் கூண்டோடு தற்கொலை செய்து கொள்வோம் என தேனி மாவட்ட ரஜினி ரசிகர்கள் மிரட்டியுள்ளனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மாநிலம் முழுவதும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உச்சகட்டமாக கோவையில் புதுக் கட்சி ஒன்றையும் அவரது ரசிகர்கள் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தேனி மாவட்ட ரசிகர்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளனர். தேனி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற கூட்டம் தலைவர் ஜெய் புஷ்பராஜ் தலைமையில் தேனியில் நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ரஜினி உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தேனி மாவட்ட ரஜினி மன்ற நிர்வாக…
-
- 1 reply
- 1.2k views
-
-
பாலா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெய்பாலா தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம்Â சுவடுகள்ஜெய்பாலாவே இதில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். ஒளிப்பதிவும் செய்கிறார். இவர் ஹாலிவுட் திரைப்பட கல்லூரியில் பயின்றவர். நாயகியாக மோனிகா நடிக்கிறார். உன்னதமான காதல் உறவுகளையும் குடும்ப உறவுகளையும் யதார்த்தமான முறையில் சித்தரிக்கும் கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது. இதில் சரண்யா, ராஜேஷ், கே.ஆர்.விஜயா, மோகன் சர்மா ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்கிறார். ஐம்பது இசைக் கலைஞர்களுடன் 1960 மற்றும் 70-களில் நடந்தது போல் பாடல்கள் லைவ்வாக பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் 'சுவடுகள்' படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந…
-
- 2 replies
- 538 views
-
-
ஒவ்வொரு வருடமும் இமயமலை சென்று வரும் ரஜினி, எந்திரன் படப்பிடிப்பினால் இரண்டு வருடம் இமயமலைப்பயணத்தை தள்ளிப்போட்டார். எந்திரனின் இமாலய வெற்றிக்குப் பிறகு, இமயமலைப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது அவர் பாபாவின் குகைக்குச் சென்று தியானம் செய்தார். உலகமே அவர் படத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்க, அவர் தனிமையும் அமைதியும் நிறைந்த இமயத்தில், தனது நெருங்கிய நண்பர்கள் இருவர் துணையுடன் பாபாவின் குகைக்குச் சென்றார். மிகவும் ஆபத்தான குகை என்று சொல்லப்படும் இந்த இடத்தில் அவர் தியானம் செய்தார். பின்னர் அவர் பாபாவின் ஆசிரமத்தில் தங்கினார். ரஜினி, தீபாவளிக்கு முன் சென்னை திரும்புகிறார்.http://www.tharavu.com/2010/10/blog-post_1579.html
-
- 0 replies
- 835 views
-
-
[size=5]ரஜினி எனும் தொன்மமும் இந்தியக் குடும்பமும்[/size] ஆர்.அபிலாஷ் ஒவ்வொரு சினிமா நட்சத்திரமும் ஒரு தொன்மம் எனும்போது ரஜினிதான் நம் சமூகத்தின் ஆக சுவாரஸ்யமான தொன்மம். ஒரு புனைவு. அவரது எல்லா சிறந்த படங்களும் மெல்ல மெல்ல கூடுதலாகப் பல வர்ணங்களை இந்தப் புனைவில் சேர்த்துவிட்டுச் செல்லுகின்றன என நமக்குத் தெரியும். அவரது ஆன்மீகம், விட்டேத்தி மனோபாவம், வாழ்வில் ஒட்டாமை, பணிவு, எளிமை, முதிர்ச்சி இவையும் சேர்த்துதான். இத்தொன்மத்தில் நிஜத்தில் நாம் அறிந்த ரஜினியும் சினிமா ரஜினியும் பிரித்தறிய முடியாதபடி ஒரு இலையின் இரு பக்கங்களாகி வெகுநாட்களாகி விட்டன. இது போல் மேலும் சில நாயகர்களுக்கும் தொன்மங்கள் உள்ளன. எம்.ஜி.ஆர். பரோ பகாரியாக, கண்ணியமானவராக, வீரராக, மென்மையான, நேர்…
-
- 0 replies
- 1.6k views
-
-
நடிகர் சத்யராஜ் ரஜினி தன் மிகச்சிறந்த நண்பர் என்று கூறியுள்ளார்.ஓகேனக்கல் உண்ணாவிரதத்தின்போது சத்யராஜ் ஆற்றிய உரை நேரடியாக ரஜினியைத் தாக்குவதுபோலவே அமைந்திருந்தது. ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாவிரத மேடையில் ரஜினியைப் பாராட்டிப் பேசியது போல இருந்தது. பெரியார் வலைக்காட்சியின் முதலாமாண்டு நிறைவையொட்டி சத்யராஜ் வழங்கிய சிறப்புச் செவ்வியில் இது குறித்து உண்மையில் ரஜினி பற்றிய உங்கள் கருத்து என்ன? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு சத்யராஜ் பதிலளிக்கையில், உண்மையில் ரஜினி சார் என்னுடைய நெருங்கிய நண்பர். என் மீது மிகவும் அக்கறை கொண்டவர்.ஓகேனக்கல் உண்ணாவிரதத்தின்போது நான் ரஜினியை திட்டிப் பேசவில்லை. கர்நாடகத் தமிழர்கள் பிரச்சினையில் அவர் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டாரோ வ…
-
- 0 replies
- 1.6k views
-
-
‘ரஜினி உங்கள் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார். அவரை நீங்கள் கிண்டலடிப்பது போல எஸ்எம்எஸ் அனுப்பியிருப்பது நியாயமா?’ என ரஜினி ரசிகர்கல் சிலர் வருத்தப்பட்டு அமிதாப்புக்கு எழுத, பதறிப் போய் பதில் சொல்லியிருக்கிறார் அமிதாப். ரோபோ படம் வெளியானதிலிருந்து வட இந்தியாவில் ரஜினி ஜோக்ஸ் மிகப் பிரபலமாகிவிட்டது. இவற்றில் எந்த ஜோக்கும் ரஜினியை கிண்டலடிப்பது போல இருக்காது. இவை அனைத்திலுமே கற்பனை கூட செய்ய முடியாத அளவு உயர்வாக சித்தரிக்கப்பட்டிருப்பார் ரஜினி. போஸ்புக், ட்விட்டர், எஸ்எம்எஸ் என எங்கும் இந்த ரஜினி ஜோக்குகள்தான். கடந்த சில வாரங்களாக இந்த ரஜினி ஜோக்குகள் சற்றே ஓய்ந்திருந்தன. ஆனால் ரஜினி உலகக் கோப்பைப் போட்டியைப் பார்க்கப் போனதும், அந்தப் போட்டியில் இந்தியா…
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
அரசியலோ ஆன்மீகமோ... சும்மா இருக்கும் ரஜினியைச் சீனுக்குள் நுழைப்பதில் கெட்டிக்காரர்கள் நமது பத்திரிகையாளர்கள். அப்படித்தான் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் டோனியிடமும் ஒரு கேள்வி கேட்டார் பத்திரிகையாளர் ஒருவர். ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் வரும் பதினெட்டாம் தேதி துவங்குகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட ஆறு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார் டோனி. மொகாலி அணியை ப்ரீத்தி ஜிந்தா தனது காதலருடன் சேர்ந்து வாங்கியுள்ளார். கொல்கத்தா அணியை வாங்கியிருப்பவர் ஷாரூக் கான். டெல்லி அணி தனது விளம்பரத் தூதராக அக்ஷய் கு…
-
- 6 replies
- 1.6k views
-
-
கபாலி படம் வெளியாகும் போது, அவரின் கட் அவுட் அல்லது போஸ்டரில் பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என ரஜினி ரசிகர்களுக்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கபாலி. இந்த படம் வருகிற 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. பொதுவாக, பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது, அவர்களின் ரசிகர்கள் அவர்களின் கட் அவுட் மற்றும் போஸ்டர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது வழக்கமான ஒன்று. எனவே, கபாலி படம் வெளியாகும் போது, பாலாபிஷேகம் செய்வதில் ரஜினி ரசிகர்கள் மும்முரமாக உள்ளனர். இந்நிலையில், அப்படி செய்ய வேண்டாம் என பால் முகவர்கள் சங்க நிர்வாகிகள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் சத்யநாராயனா …
-
- 2 replies
- 406 views
-