வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
கொரோனா தொற்றால் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 21 நாட்கள் வீட்டிலேயே இருப்பது அவ்வளவு சுலபமானது அல்ல. இந்த சமயத்தில் மதிய உணவு சாப்பிட்ட உடனே குட்டி தூக்கம் போட தோன்றும். பலருக்கு உடல் எடை கூடும் என்ற அச்சம் உண்டு அவ்வாறு மதிய தூக்கத்தை விரும்பாதவர்கள் திரைப்படம், வெப் சீரிஸ் என எதையேனும் பார்த்தால் நேரம் போவது தெரியாது. வீட்டிலிருந்தபடியே இணையச் சேவையை பயன்படுத்தி எளிதாக படம் பார்க்க முடியும். வாழ்க்கையின் மீது புதிய உத்வேகம் பெற, சாதனையாளர்களின் வாழ்க்கை படங்களைப் பார்ப்பது நல்லது. இந்த 21 நாட்களில் நீங்கள் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய படங்கள். காந்தி இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தியின் …
-
- 1 reply
- 575 views
-
-
யாரும் வெளிய வராதீங்க.. கண் கலங்கிய வடிவேலு.. கொரோனாவிற்கு உருக்கமான விழிப்புணர்வு.! சென்னை: கொரோனா பாதிப்பில் பல மக்கள் பாதிக்கபட்டு வருவதையும் அவதிபட்டு வருவதையும் கண்டு மிகவும் நகைச்சுவை நடிகர் வடிவேலு வருந்தி ஒரு வீடியோ பதிவை பகிர்ந்து உள்ளார் . இந்த வீடியோவில் வடிவேலு மக்களை கெஞ்சி கேட்டுக்கொண்டார். தயவு செய்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளியுங்கள் என்று கண் கலங்கி கேட்டு கொண்டுள்ளார். இதில் உலகம் சந்திக்காத பேரழிவை சந்தித்து வருகிறது மருத்துவர்கள் தங்களின் உயிரை பணையம் வைத்து போராடி வருகிறார்கள் .இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் வெளியே வராதீர்கள். இதனால் யாருக்காக இல்லையோ நமது சங்கதிக்காக இதை செய்யுங்கள். வெளியே வராதீர்கள் என்று க…
-
- 4 replies
- 1.2k views
-
-
போன வார இறுதிகளில் பார்ப்பதற்கு என்ன புதிய தமிழ் படம் வந்து இருக்கு என என் ஐ. பி ரிவி யில் வந்த புதிதாக வந்த படங்களின் வரிசையை பார்த்துக் கொண்டு இருக்கும் போது இரண்டு படங்களின் பெயர்கள் கண்களில் தட்டுப்பட்டன. அப் படங்களின் பெயர்களை இதற்கு முதல் கேள்விப்பட்டும் இருக்கவில்லை. சிறியளவில் கூட இவை பற்றி வாசித்து இருக்கவும் இல்லை. ஆனால் பெயர்களில் இருக்கும் வழக்கத்துக்கு மாறான சொற்கள் என்னை கொஞ்சம் கவர்ந்திழுக்க 'சரி பார்ப்பம்' என்று பார்க்கத் தொடங்கினேன். ஊரிலிருக்கும் போது சீனி, மா, பருப்பு போன்றவற்றை சுற்றி வரும் பேப்பர்களில் எதிர்பாராவிதமாக நல்லதொரு கவிதையோ மனசுக்கு பிடிக்கும் ஒரு கதையின் சிறு பகுதியோ வந்து இருக்கும். வாசித்து பார்க்கும் போது மனசுக்குள் அப்படி ஒரு இனிய…
-
- 28 replies
- 3.5k views
- 1 follower
-
-
சென்னை: சென்னையில் டைரக்டர் விசு(74) உடல்நல குறைவு காரணமாக இன்று(மார்ச் 22) காலமானார். கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக, சிகிச்சை பெற்று வந்த விசு, இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். விசு தமிழ்த் திரைப்பட டைரக்டர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் ஆவார். 1945-ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் மக்களிடையே பெரும் வரேவற்பு பெற்றது. இத்திரைப்படம் 1986-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம் பேர் விருதை பெற்றுள்ளது. தமிழின் தலைசிறந…
-
- 1 reply
- 439 views
-
-
'ஆபாச படங்கள் எடுக்க பயப்படத் தேவையில்ல’ ரா.பார்த்திபன் 360° | ஒத்த செருப்பு
-
- 0 replies
- 377 views
-
-
அரியவகை கேன்சர், 1 வருட போராட்டம், தொடர் கீமோ, வாழ ஓர் வாய்ப்பு: மீண்டும் நடிக்க வந்த இர்ஃபான் கான்! ‘என் உடல் சில நாட்கள் நன்றாகவும், சில நாட்கள் நரகமாக இருக்கிறது. ஆனாலும் நம்பிக்கையுடன் முன்னேறிக் கொண்டே இருக்கிறேன்’ - இர்ஃபான் கான் By Gajalakshmi Mahalingam 18th Mar 2020 எதிர்பாராதது எதிர்பார்க்காத நேரத்தில் நிகழும் போதே வாழ்க்கையின் அர்த்தம் புரியும். நடிப்புத் துறையில் கோலோச்சும் நடிகர், பணம், பெயர், புகழுக்குப் பஞ்சமில்லை வாழ்வில் இன்னும் சாதிக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டிருந்த இர்ஃபான் கானுக்கு 20…
-
- 0 replies
- 357 views
-
-
-
4 மார்ச் 2020 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Youtube திரைப்படம் ஜிப்ஸி நடிகர்கள் ஜீவா, நடாஷா சிங், லால் ஜோஷ், சன்னி வயன், சுஷீலா ராமன் ஒளிப்பதிவு செல்வகுமார் எஸ்.கே இசை ச…
-
- 0 replies
- 1k views
-
-
-
ஆஸ்கார் 2020 : சில அவதானிப்புகள் – கோ. கமலக்கண்ணன் February 24, 2020 1985-ஆம் ஆண்டு ’அமேடியஸ்’ திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டது. அதை மேடையில் அறிவித்த லாரன்ஸ் ஆலிவர் அவசரத்தில் நாமினிகளைக் குறிப்பிட மறந்து விட்டிருந்தார். ஒவ்வொரு பிரிவிலும் விருது அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அப்பிரிவில் இருக்கும் பரிந்துரைகளைக் குறிப்பிட வேண்டுமென்பது ஆஸ்காரின் மரபு. அதைச் சொல்ல விட்டு விட்டோமே, சொல்லியாக வேண்டுமே என்ற புரிதலுக்குச் சென்று மீளும் முன்னரே அமேடியஸ் குழு முண்டியடித்து மேடைக்கு வந்துவிட்டிருந்தது. இதை ஒரு தனி நபரின் தடுமாற்றம் எனக் கொள்ளலாம். வெகு சமீபத்தில் 2017-ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கும் போது கூட இப்படியொ…
-
- 0 replies
- 708 views
-
-
இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். இவ்விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை அருகே செம்பரம்பாக்கத்தில் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் - 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்தது. இதில் கிரேனில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே 3 சண்டை கலைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட…
-
- 7 replies
- 1.8k views
-
-
இந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி
-
- 0 replies
- 334 views
-
-
Azali (Netflix) மேற்கு ஆபிரிக்க நாடான Ghana விலிருந்து முதன்முதலாக 92வது Academy Awardsற்கு அனுப்பபட்ட திரைப்படம். 14 வயது சிறுமியான Aminaவினது கதை. காட்டுப்பாதை ஒன்றில் நகரத்தை நோக்கி ஒரு வான் விரைவாக புழுதியை கிளப்பியபடி செல்கிறது, நீண்ட தூரபயணம், இரவின் அமைதியை குழப்பியபடி சென்று கொண்டிருக்கும் போது, பொலீஸாரால் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுகிறது. வானின் பின்பகுதியை மறைத்திருந்த திரையை அகற்றிய போது, அங்கு மறைத்து வைக்கப்பட்ட சிறுமி, சிறுவர்களை கண்டுபிடிக்கிறார்கள். அந்த சிறுவர்களை, இவர்களை போன்றவர்களை வைத்து பாராமரிக்கும் இடத்திற்கு அழைத்துவருகிறார்கள். அந்த சிறுவர்களை, ஒரு பெண் அதிகாரி பெயர் ஊர் விபரங்களை ஒவ்வொருவராக விசாரித்து வருகையில், ஒரு சிறுமியிடம் வந…
-
- 0 replies
- 341 views
-
-
ஒவ்வொரு சாம்ராஜ்யத்தின் எழுச்சிக்கு பின்னும் இன்னொரு சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி இருக்கும் .1453 ல் கொன்ஸ்தாந்திநேபிள் ஓட்டமன் துருக்கியரால் கைப்பற்றப்பட்டது என்பதை ஒரு வரியில் கடந்து சென்றிருப்போம் அதன் பின் உள்ள ரத்தகளரியான வீரம்செறிந்த வரலாற்றை சொல்வது தான் Rise of Empires : Ottoman (Netflix) (மெ(மு)ஹமட்-(II) VS கொன்ஸ்ரன்டைன் (XI)) மேற்கு வரலாற்றாசிரியர்களால் மெகமட் ன் இந்த வெற்றியும் அவனின் சிறப்புகளும் எந்தளவுக்கு வரலாற்றில் சிறப்பாக கூறப்படிருக்கிறதோ தெரியவில்லை துருக்கியர்களால் இயன்றவரை அவரின் சிறப்புகள் புத்தி கூர்மை வீரம் என எல்லாம் சிறப்பாக காட்டப்பட்டிருக்கிறது மெகமட் தாய் எந்த நாட்டவர் என இன்று வரை வரலாற்றாசிரியர்களால் தெளிவாக கூறமுடியவில்லை போலிர…
-
- 0 replies
- 519 views
-
-
நீண்ட காலத்தின் பின்னர் நேர்த்தியான நகைச்சுவை கலந்த ஓர் காதல் திரைப்படம் பார்த்த உணர்வு. நகைச்சுவைக் காட்சிகள் - குறிப்பாக முதற் பாதியில், நம்மை மறந்து சிரிக்க வைத்ததுடன் படத்தின் ஓட்டத்தைப் பாதிக்காமல் இயல்பாக இழையோடியுள்ளன; பிரதான காமெடி நடிகர்கள் இருந்திருந்தாலும் இவ்வாறு சிறப்பாக அமைந்திருக்குமா என்பது சந்தேகமே. உதாரணத்துக்கு, Toiletery factoryல் ஹீரோ படும் அவஸ்தைகள் நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கின்றன. கூடவே, படத்தின் பின் பாதியில் வரும் சில காட்சிகள், வசனங்கள் முன்பாதியை நினைவூட்டியும், ஹீரோ அவ்வப்போது சொல்லும் ஒரே வசனம் வித்தியாசமான கோணங்களில் நினைத்தும் சிரிக்க வைத்த விந்தை இயக்குனரின் சாமர்த்தியமே. அந்த அளவுக்கு நெஞ்சைக் கிள்ளிச் சிரிக்கவும் கூடவே சிந்திக்கவும…
-
- 12 replies
- 1.7k views
-
-
ஆஸ்கார் விருதுகளும் ஆச்சர்யங்களும்- நிலவழகன் சுப்பையா February 11, 2020 - Editor · சினிமா / Flash News ஆஸ்கார் எதிர்பாராத முடிவுகளுடனும் திருப்பங்களுடனும் நிறைவடைந்தது. முதல்முறையாக முழுவதும் ஆங்கிலம் அல்லாத மொழியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட Parasite நான்கு விருதுகளை அள்ளியது. சிறந்தஇயக்குனர், சிறந்த சர்வதேசப்படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த நேரடித் திரைப்படம் என எதிர்பார்க்காத பரிசுகளை பெற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஒரு வெளிநாட்டுப்படம் நேரடியாக போட்டியில் கலந்துகொண்டு இத்தனை விருதுகளை பெறுவது சாத்தியமா? அகாடமி விதிகள் என்ன சொல்கின்றன? சிறந்த படத்திற்கான பிரிவில் போட்டியிட அது ஆங்கிலப்படமாக இருக்க வேண்டிய தேவையில்லை. மாறாக, ச…
-
- 1 reply
- 684 views
-
-
நடிப்பு - ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ்தயாரிப்பு - லைகா புரொடக்ஷன்ஸ்இயக்கம் - ஏ.ஆர்.முருகதாஸ்வெளியான தேதி - 9 ஜனவரி 2020நேரம் - 2 மணி நேரம் 40 நிமிடம்ரேட்டிங் - 3.25/5தமிழ் சினிமாவில் வந்திருக்கும் மற்றுமொரு போலீஸ் படம். ஆனால், இது ரஜினிகாந்த் படம். அதுதான் படத்தின் வித்தியாசம். அதுதான் படத்தையும் தூக்கியும், தாங்கியும் பிடிக்கிறது.இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் போலீசாக நடித்தால் எப்படி இருக்கும் என்பது தெரியாது. அவரது பழைய படங்களைப் பார்த்திருந்தால் தான் தெரியும். இருந்தாலும் போலீஸ் உடையில் ரஜினியின் ஸ்டைல் என்ன என்பதை இந்தப் படம் மூலம் இன்றைய ரசிகர்கள் புரிந்து கொள்ளலாம்.இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த் முதல் முறையாக இணைந்திருப்பதால் இந்தக் கூட்டண…
-
- 41 replies
- 5.1k views
- 1 follower
-
-
ஆஸ்கர் விருது விழா:வெல்லப்போவது யார்? மின்னம்பலம் உலகம் முழுவதுமுள்ள, திரைத்துறையினர் ஆர்வமுடன் காத்திருக்கும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தான். ஒரு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்படுகிறது என்றாலே, அதன் உயர்ந்த தரத்தை எளிமையாகக் கணித்துவிடமுடியும். அனைத்து திரைக்கலைஞர்களின் மனதிலும் இருக்கும் ஒரு உயரிய கனவு என்றால் அது ஆஸ்கார் மேடை தான். கடந்த ஜனவரி மாத துவக்கத்திலேயே 92-ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது துவங்கி, இந்த விருதுகளை வெல்லப் போவது யார் என்ற விவாதமும் ஆரம்பமாகிவிட்டது. அனைத்து விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக …
-
- 5 replies
- 841 views
-
-
ஒட்டுண்ணி கொரிய திரைப்படமான பரசைட் திரைப்படம் அண்மையில் ஆங்கில எழுத்துருவில் பார்த்தேன் பல தரப்பும் மிக சிறந்த படைப்பு என்ற கருத்திற்கமைய இத்திரைப்படத்தை பார்த்தேன் படம் முடிவில் படம் பார்க்கலாம் இரகம் ஆனால் இன்று இத்திரைப்படம் சிற்ந்த படத்திற்கான ஒஸ்கார் விருதினைப்பெற்றுள்ள தகவலை அறிந்தேன் இத்திரைப்படம் தொடர்பாக ஒரு புது திரி ஒன்றினை ஆரம்பித்த நோக்கம் இத்திரைப்படம் தொடர்பாக கள உறவுகள் என்னநினைக்கிறீர்கள் என்ற உங்கள் பார்வை என்ன என்பதே
-
- 2 replies
- 1.2k views
-
-
உருவாகிறது ‘ஏவுகணை நாயகன் அப்துல் கலாம்’ திரைப்படம்: ஃபெர்ஸ்ட் லுக் வெளியானது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் குறித்த வாழ்க்கை வரலாற்றின் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டரை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டடுள்ளார். இந்தப் படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டரை டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைச்சர், வெளியிட்டு வைத்ததன் பின்னர் தனது ருவிற்றர் பக்கத்தில் குறித்த நிகழ்வின் படங்களை வெளியிட்டு கருத்துக் கூறியுள்ளார். அவர் கூறுகையில், “இந்தியாவின் சின்னமான மக்கள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றின் ஃபெஸ்ர்ட் லுக் போஸ்டர் புதுடில்லியில் இன்று வெளியிடப்பட்டது. Hollywood மற்றும் தெலுங்க…
-
- 0 replies
- 332 views
-
-
நிஜமும்... நிழலும்... மெழுகு சிலையாக காஜல் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள காஜல் அகர்வால், ‛இந்தியன் 2 படத்தில் கமல் உடன் நடித்து வருகிறார். உலகளவில் பிரபலமான மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் காஜலுக்கு மெழு சிலை வைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் காஜலின் உடல் அங்கங்களை அளவீடும் பணி நடந்தது. இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் காஜலுக்கு மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது. குடும்பத்தாருடன் மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு பறந்த காஜல், தனது சிலையைப் பார்த்து மெய்மறந்து போனார். …
-
- 0 replies
- 375 views
-
-
நடிகர், இசையமைப்பாளர் மற்றும் பாடகரான டி.எஸ் ராகவேந்திரா தனது 75வது அகவையில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (Jan 30) காலமானார். வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக அறிமுகமான இவர், சிந்து பைரவி, விக்ரம், சின்ன தம்பி பெரிய தம்பி, அண்ணா நகர் முதல் தெரு, சொல்ல துடிக்குது மனசு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார். அவர் நினைவாக மகள் கல்பனாவுடன் அவர் பாடும் இனிமையான மனது மறக்காத பாடல் இணைக்கப்பட்டுள்ளது. பாடுவதற்கு சிரமமான ஒரு பாடலை எவ்வளவு அழகாக இருவரும் பாடுகின்றனர்!! (Paris நகரில் 1994ல் இடம்பெற்ற கலையமுதம் நிகழ்வு) Video share credit : Ragenthan Kanakaraja…
-
- 1 reply
- 480 views
-
-
'அந்த மாதிரி' நடிச்சது தப்பாப்போச்சு.. அதே மாதிரி வாய்ப்புகளே வருகின்றன.. பிரபல நடிகை வேதனை! ஆபாச படங்களில் நடிக்கவே அதிக வாய்ப்புகள் வருகின்றன. அவற்றில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என பிரபல நடிகை தெரிவித்துள்ளார். தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட் நடிகையான இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமானார். தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் கவர்ச்சி ரோல்களை தட்டாமல் மிகத் துணிச்சலாக எதிர்கொள்வார் ராதிகா ஆப்தே. அவ்வப்போது இவரின் நிர்வாண போட்டோக்கள், படுக்கையறை காட்சிகள் என வெளி…
-
- 14 replies
- 4k views
-
-
இந்திய இசையின் உயரங்களை உலகளவிற்கு உயர்த்திஇளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழும் புகழ்மிகு கலைஞர் திரு.ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை கவுரவிக்க மேடை ஏறிய இளம் இசையமைப்பாளர்கள்!🎼🎼
-
- 0 replies
- 400 views
-
-
ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா 2020 ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இவ்வருடம் (2020) செப்டம்பர் மாதம் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் சகல மட்டங்களிலும் ஆரம்பமாகி திரைப்பட விழாவுக்கான திரைப்படங்களும் பல்வேறு பிரிவுகளில் கோரப்பட்டுள்ளன. உலகில் பல முன்னணி திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழருக்கான திரைப்பட விழாக்கள் என்பது மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றன. இந்திய மற்றும் இலங்கைக்கு அப்பால், தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் இந்நிகழ்வு ஒழுங்குசெய்யப்படுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது. கனடிய அரசு கனடாவில் …
-
- 0 replies
- 753 views
-