வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
சூர்யா நடிக்கும் படத்துக்கு ‘ஆதவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அயன்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதையடுத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘ஆதவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சூர்யா ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்கள் ஏற்கனவே ‘கஜினி’ படத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து மிஷ்கின் இயக்கும் ‘முகமூடி’ படத்தில் சூர்யா நடிக்கிறார். http://www.cinemaseithi.com/
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=4][/size] எழுத்தாளர் ஜெயமோஹன் கதையில் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம் "நீர் பறவை”. இந்தப் படத்தின் சான்றிதழ் தொடர்பாக ஏற்கெனவே சர்ச்சை நிலவி வரும் சூழ்நிலையில், இந்தப் படத்தில் வைரமுத்து எழுதியிருக்கும் ஒரு பாடல் கிறிஸ்துவர்களின் எதிர்ப்பால் மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகர் முழுதும் சுவரொட்டிகளை ஒட்டி வைத்துள்ளனர். [size=3][size=1][size=4]ஒரு பாடலில் "என்னுயிரை அர்ப்பணம் செய்தேன். உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன். சத்தியமும் ஜீவனுமாய் நீயே நிலைக்கிறாய்'' என்று எழுதியிருக்கிறார் வைரமுத்து. இது கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளில் இடம் பெற்றுள்ள வசனம். இந்த வசனத்தை சினிமா பாடலில் பயன…
-
- 5 replies
- 1.2k views
-
-
தேனி சுற்றுவட்டாரங்களை ஒன்றுவிடாமல் சலித்தெடுத்து 'திருமகனை' உருவாக்கி வருகிறார் இயக்குனர் இரத்னகுமார். எஸ்.ஜே. சூர்யாவையும் மீராஜாஸ்மினையும் மொத்தமாக மாற்றி படமாக்கும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். 'கிழக்கு சீமையிலே', 'கருத்தம்மா'க்கு கதை எழுதியது இவர்தான். லஞ்ச்சை முடித்துவிட்டு குட்டித்தூக்கம் போட்ட இயக்குனரைத் தட்டினோம். 'என்னாப்பு.... கதை கேட்க வந்துட்டீங்களோ...' கிராமத்து மணம் கமகமக்க ஆரம்பித்தார். "நாம் மறந்துபோன உறவுகளின் பிரிவும், இருக்கின்ற உறவுகளின் அறியப்படாத அழகும் பின்னப்பட்ட கதைதான் 'திருமகன்.' வாழந்து கெட்ட ஒரு பணக்காரனுக்கும், புதுசா பணம் பார்த்த ஒருவனுக்கும் ஏற்படுகிற நட்புதான் கதைக்கரு. இதுல வாழ்ந்து கெட்ட …
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரசாந்துக்கு புதுவருடம் புது தலைவலியுடன் பிறந்திருக்கிறது. சென்ற வருடம் மகன் பிறந்ததை கொண்டாட முடியாதபடி மனைவியுடன் பிரச்சனை. வருட இறுதியில் மனைவியை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்றும், மகனை வாரம் இருமுறையாவது பார்க்க அனுமதிக்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். என்ன பயன்? மனைவி கிரகலட்சுமி தரப்பிலிருந்து வெள்ளைக் கொடி காண்பிக்கப்படவில்லை. மாறாக பெரிய சிவப்பு கொடியாக காண்பித்திருக்கிறார்கள். பிரசாந்த் தன்னை சரியாக கவனிக்கவில்லை, சதா வரதட்சணை பற்றியே பேசுகிறார், பிரசவத்திற்கே 2 லட்சம் செலவானது, மேலும் தற்போது தனியாக மகனுடன் எனது பெற்றோர் தயவில்தான் வாழ்ந்து வருகிறேன். அதனால் எனக்கும் என் மகனுக்கும் மாதம் ரூபாய் ஒரு லட்சம் ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
டோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்! - மலையாளம் 2016-ன் க்ளைமாக்ஸில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் `விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்' என கமல் ஓடிவந்து வாழ்த்து சொல்வார். நாமும் பார்ட்டி, சபதம் என கொண்டாட்டமாக வரவேற்போம். அதெல்லாம் இருக்கட்டும். இன்னும் இந்த வருஷம் செய்ய வேண்டியவையே நிறைய பாக்கி இருக்கிறது. அதில் ஒன்று சினிமா. இந்த ஆண்டு வெளியான படங்களில் மிஸ் பண்ணக் கூடாத படங்கள் பற்றிய லிஸ்ட்டை ரகம் வாரியாக பிரித்துக் கொடுத்திருக்கிறோம். மறக்காம பார்த்துடுங்க மக்களே! இது மலையாளப் படங்களுக்கான லிஸ்ட். கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! மகேஷின்டே பிரதிகாரம் மலையாள உலகின் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசிலின் யதார்த்த நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான படம். பசுமை போர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
உடல்நலமில்லாத தன்னை தாயைப் போல கவனித்துக் கொண்டார் சல்மான்கான் என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார் நடிகை அசின். ரெடி இந்திப் படத்தில் சல்மான்கான் அசின் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பு முடியும் கட்டத்தில் உள்ளது. இருவருக்கும் காதல் மலர்ந்து, கல்யாணம் வரை போய்விட்டதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சமீபத்தில், இருவரும் திருமணம் செய்து கொண்டுவிட்டதாக செய்திகள் வந்துள்ளதே என்று தொலைக்காட்சி பேட்டியொன்றில் கேட்கப்பட்டது. அதற்கு சல்மான்கான் பதில் அளிக்கையில் அப்படி நடந்து இருந்தால் மிகவும் சந்தோஷப்படுவேன் என்றார். அசின் குறுக்கிட்டு சல்மான்கான் ஜோக்கடிக்கிறார் என்று சொல்லி நழுவிவிட்டார்;. இதற்கிடையில் ரெடி படப்பிடிப்பில் சல்மான்கான் தாய் போல் தன்னை கவனித்துக் க…
-
- 1 reply
- 1.2k views
-
-
முன்னணி ஹீரோக்கள் கூட ஆச்சர்யமாக பார்க்கிறார்கள் ஜீவாவை. காரணம் அவர் தேர்தெடுக்கும் கதைகள். ராம் படத்தில் தொடங்கி ஈ, பொறி, கற்றது தமிழ், ராமேஸ்வரம் என்று அவர் கைவைக்கிற கதைகள் எல்லாமே, தொட்டால் சுடுகிற ரகம். தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் கற்றது தமிழ் இருவேறு அபிப்ராயங்களை கொண்டிருக்கிறது என்றாலும் ஜீவாவை பொறுத்தவரை வா..வா.. என்கிறார்கள் ரசிகர்கள். சமுதாயத்தின் ஏற்றதாழ்வுகளை சற்று காரமாகவே விமர்சிக்கிறது கற்றது தமிழ். இரண்டாயிரம் ரூபாய் வாடகைக்கு சென்னையில் வீடு கிடைப்பதில்லை என்ற விஷயத்தை வெறும் வசனமாக உச்சரிக்காமல் வாழ்ந்தது போல் உச்சரிக்கிறார் ஜீவா. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பாளரின் மகன் இவர். எப்படி வாய்த்தது இந்த ஏழைகளின் அனுபவம்? ஜீவாவை கேட்டோம். …
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ் நாட்டில் அரசியல் மாற்றத்தினால் சில மாதங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்த வடிவேலு திரும்ப ரீஎன்ட்ரி கொடுக்க போகிறார். அதாவது, சிம்புதேவன் டைரக்ஷன்ல “இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2′-க்கான கதை டிஸ்கஷன் தொடங்கி உள்ளது. கடந்த வாரம் சாலிகிராமத்தில் வடிவேலுவின் ஆபிஸில் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கான, வேலைகள் நடந்து முடிந்துள்ளது. ஃபர்ஸ்ட் பார்ட்டை விட, இந்த செகண்ட் பார்ட்டில், காமெடி கொஞ்சம் தூக்கலாக, இருக்கணும் என சொல்லி அதன்படி கதையை, எழுத வைத்திருக்கிறாராம் வடிவேலு. ஆரம்ப காலத்திலிருந்து தனக்கு காமெடி டிராக் எழுதிய, சிலரை அழைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறாராம் வடிவேலு. சில அரசியல் மாற்றங்கள் காரணமாக, கடந்த 2012ம் ஆண்டு முழுவதுமே வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த வடிவேலுக்கு இத…
-
- 1 reply
- 1.2k views
-
-
சித்தார்த், ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் படம் 'தீயா வேலை செய்யனும்குமாரு'. சுந்தர்.சி இயக்குகிறார். யூ.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சினிமாக்ஸ் தயாரிக்கின்றன. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. இதில் சுந்தர்.சி பங்கேற்று பேசியதாவது:- ஹன்சிகாவை இந்த படத்தில் நடிக்க வைத்தது நல்ல அனுபவம். நான் படம் ஆரம்பிக்கும் முன்கதை விவாதத்துக்கு நிறைய நாள் எடுத்துக் கொள்வேன். படப்பிடிப்பு தொடங்கியதும் ஆறு மாதத்துக்குள் படத்தை முடித்து விட நினைப்பேன். விரைவாக முடிந்தால் தான் படத்தின் புதுத்தன்மை மாறாமல் இருக்கும். தயாரிப்பாளருக்கும் நல்லது. அதற்கேற்றபடி ஹன்சிகா ஒத்துழைப்பு கொடுத்தார். ஹன்சிகாவை குட்டி குஷ்பு என்கிறார்கள். உருவத்தால் மட்டுமல்ல, நல்ல நடிகை எ…
-
- 0 replies
- 1.2k views
-
-
கதை ஒன்று என சொல்லலாம் நடக்கும் சம்பவங்கள் மற்றும் இடம் மட்டும் வெவ்வேறு , கேரளாவிலிருந்து அரபு நாட்டுக்கு சென்று அங்கு தனது கடின உழைப்பால் தொழிலதிபராகும் ஒருவர் ,மிக்க மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத துரோகத்தினால் தொழிலில் கடன் நெருக்கடி ஏற்பட சட்டபிரச்சினை ஏற்பட்டு கைதாகும் ஆபத்து இருப்பதால் தலைமறைவாகிறார்.சீரும் சிறப்புமாக இருந்த வாழ்க்கை ஒரே நாளில் தலைகீழாக மாறுகிறது,தகப்பன் தலைமறைவாகிட அம்மா கைதுசெய்யப்பட மூத்த மகனான நிவின் பாலி இதை எல்லாம் எப்படி எதிர் கொண்டு அப்பாவின் வியாபாரத்தை எப்படி தலை நிமிர்த்துகிறார் என்பதே ஜேக்கப்பின்டே ஸ்வர்கராஜ்ஜியம். ஜோமோன்டே சுவிஷேசங்கள் திருச்சூரில் தொழிலதிபராக இருக்கும் வின்சென்ட் அவரின் கடை…
-
- 3 replies
- 1.2k views
-
-
ரஜினி குசேலன் படத்திற்காக 20 கோடி சம்பளம் வாங்கியது தான் கோடம்பாக்கத்தில் தற்போது பரபரப்பு செய்தியாக பேசப்படுகிறது. சிவாஜி படத்தில் 15 கோடி சம்பளம் வாங்கியதன் மூலம் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை பெற்றார் ரஜினிகாந்த். சிவாஜி படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்தார் அவர். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=251
-
- 0 replies
- 1.2k views
-
-
மோசமான படத்துக்காக என் படம் பயானது! ""அதிகாலையில் நியூஸ் பேப்பரோடு சில மழைத்துளிகளையும் விட்டெறிந்து செல்கிறான் பேப்பர் சிறுவன். குப்பைகளோடு மழைத்துளிகளையும் அள்ளிச் செல்கிறார் நீல் மெட்டல் பனால்கா ஊழியர். வாழ்க்கை எல்லா தருணங்களிலும் ரசனைக்குரியதுதான்''... பேட்டியை இப்படி வித்தியாசமாகத் தொடங்கி வைக்க இயக்குநர் சீனு ராமசாமியால் மட்டுமே முடியும். மதுரையில் பிறந்த நீங்கள், சினிமா கோட்டையில் காலூன்றியது எப்படி? அய்யா பழ.நெடுமாறனுக்கு இதில் பங்கிருக்கிறது என்றால் அவருக்கேகூட ஆச்சர்யமாகத்தான் இருக்கும். நாங்கள் குடியிருந்த மேலமாசி வீதியில்தான் அவரும் குடியிருந்தார். அவருடைய விவேகானந்தர் அச்சகம் அங்கே செயல்பட்டுக் கொண்டிருந்தது. அங்கே நூல்கள் அச்சாகும்…
-
- 2 replies
- 1.2k views
-
-
கண்ணியத்தை கடைபிடிங்க.. அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு ‘குட்டு’ வைத்த அஜித்.. பரபரப்பு அறிக்கை! சென்னை: வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அலப்பறை செய்து வரும் ரசிகர்களுக்கு 'குட்டு' வைப்பது போல பரபரப்பு அறிக்கையை தல அஜித் வெளியிட்டுள்ளார். எங்கே சென்றாலும், யாரை பார்த்தாலும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வந்த ரசிகர்கள், நேற்று பிரதமர் மோடியின் கார் வரும் போது வலிமை அப்டேட் கேட்டு கூச்சலிட்டது பெரும் சலசலப்பை உண்டாக்கி உள்ளது அதன் எதிரொலியாகவே தயாரிப்பாளர் போனி கபூர், தல அஜித் அடுத்தடுத்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அஜித் அப்செட் வலிமை படம் குறித்த அப்டேட்களை தல ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு நச்சரித்து வந்த நிலையில், அதை எல்லாம் கவனித்து வந்த நட…
-
- 7 replies
- 1.2k views
-
-
திருமணம் சில திருத்தங்களுடன் - திரை விமர்சனம்! திருமணம் நடக்கும் விதத்தில் உள்ள சிக்கல்களைப் பற்றிப் பேசும் படம் எப்படி இருக்கிறது? திருமணம் நடத்துவது நிச்சயம் எளிமையான விஷயம் அல்ல. காதலர்கள், வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்வதுகொள்வது என்பதும் கடினம்தான். அப்படி ஒரு திருமணத்தில் எத்தனை தடங்கல்கள் ஏற்படும் என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான் திருமணம் சில திருத்தங்களுடன். உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ், சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, மனோபாலா முதலானோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் சேரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜமீன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, அக்காவின் பாசத்தம்பியாக அன்பிலும் …
-
- 0 replies
- 1.2k views
-
-
ரொரென்ரோவின் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆதி பகவன் கூட்டம் - கனடாவில் கோலாகலம்: [Friday, 2012-10-05 18:01:17] அமீரின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஆதி பகவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஆறாம் திகதி மாலை 6 மணியளவில் POWERADE சென்ரரில் நடைபெற உள்ளது. பருத்திவீரன் திரைப்படத்தை தொடர்ந்து அமீர் அடுத்ததாக இயக்கி வரும் படம் ஆதிபகவன். ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். திமுக அரசியல் பிரமுகர் ஜெ. அன்பழகன் தயாரிக்கிறார். 2010-ல் தொடங்கப்பட்ட ஆதிபகவன் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. தற்போது தயாரிப்பிற்கு பின்னதாக நடத்தப்படும் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகின்றன. ! தமிழ் திரைப்படங்களு…
-
- 1 reply
- 1.2k views
-
-
காப்பான்: சினிமா விமர்சனம். திரைப்படம் : காப்பான் நடிகர்கள் : சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா, போமான் இரானி, பூர்ணா, சமுத்திரக்கனி இசை: ஹாரிஸ் ஜெயராஜ் இயக்கம் : கே.வி. ஆனந்த் அயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு சூர்யாவும் இயக்குனர் கே.வி. ஆனந்தும் இணைந்திருக்கும் மூன்றாவது படம் இது. கிராமத்தில் வசிக்கும் கதிர் (சூர்யா) ஒர் ஆர்கானிக் விவசாயி. (பயப்பட வேண்டாம். கொஞ்ச நேரம்தான் அந்த பாத்திரம்). ஆனால், உண்மையில் அவர் ராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்தவர். அவர் பிறகு இந்தியப் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படையில் இணைகிறார். பிரதமருக்கு வரும் ஆபத்துகள், அதிலிருந்து அவரைக் காப்பாற்ற கதிர் செய்யும் சாகசங்கள்தான் மீதிப் பட…
-
- 2 replies
- 1.2k views
-
-
அஜீத் படங்களுக்கு பெரிய ஓபனிங் உண்டு என சினிமாக்காரர்கள் சொல்கிறார்களோ இல்லையோ... அவர் படங்கள் வெளியாகும்போதெல்லாம் சில பத்திரிகைகள் எழுதுவது வழக்கம். இவர்கள் சொல்வது போல ஆரம்ப வசூல் அமோகமாக இருந்தாலும், நிலைத்து ஓடும் நாட்கள் எண்ணிக்கை குறைவுதான். வசூலும்தான். இதுவரை மங்காத்தா உள்ளிட்ட அஜீத்தின் எந்தப் படமும் ரூ 100 கோடியை வசூலித்ததில்லை என்பதே பாக்ஸ் ஆபீஸ் சொல்லும் உண்மை. அஜீத்தின் கடைசி 5 படங்களில் வசூல் விவரங்களைப் பார்க்கலாம்... பில்லா 2 Read more at: http://tamil.filmibeat.com/heroes/ajith-s-last-5-movies-bo-facts-037697.html
-
- 4 replies
- 1.2k views
-
-
சென்னையில் நடந்த குசேலன் பாடல் வெளியீட்டு விழாவை நயன்தாரா, பசுபதி, மீனா புறக்கணித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. ரஜினி நடிப்பில் கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் குசேலன். இதில் தனக்கு கவுரவ வேடம்தான் என ஏற்கெனவே ரஜினி கூறியிருந்தார். படத்தின் ஹீரோ பசுபதிதான். அவருக்கு ஜோடியான மீனாதான் பட ஹீரோயின். நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. விழாவுக்கு பட ஹீரோவான பசுபதி, ஹீரோயின் மீனா மற்றும் நயன்தாரா ஆகிய மூவரும் வரவில்லை. விழா நடக்கும் இடத்தில் இருந்த விளம்பரங்களிலும் படத்தின் மற்ற விளம்பரங்களிலும் இந்த மூவரின் படங்கள் இடம்பெறவில்லை. விழாவில் பேசிய இயக்குனர் பி. வாசு, த…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன! சிறந்த நடிகராக முடிசூட்டப்பட்ட லண்டனைச் சேர்ந்த கொலின் பேர்த் செவ்வாய், 01 மார்ச் 2011 00:08 ஒஸ்கார் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. பிரிட்டிஷ் நடிகர் கொலின் பேர்த் சிறந்த நடிகருக்கான பரிசை தட்டிச் சென்றார். ஒஸ்கார் விருதுகளில் ஒரு மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரமாகக் கருதப்படுவது சிறந்த நடிகருக்கான விருதாகும். கிங்ஸ் ஸ்பீச் என்ற திரைப்படத்தில் ஆறாவது ஜோர்ஜ் மன்னரின் வேடமேற்று நடித்தமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்தத் திரைப்படத்துக்கு மொத்தம் நான்கு விருதுகள் கிடைத்தன. இந்த படத்தின் இயக்குனர் டொம் ஹூபருக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும், இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை வசனத்துக்காக டேவிட் ஸீட்லருக்கும் மற்றும் 2…
-
- 1 reply
- 1.2k views
-
-
ரஜினி-கமல்-ஸ்ரீதேவி மூவரையும் ஒரே மேடையில் ஏற்றிவிட வேண்டும் என்று ஆசைப்பட்ட பாரதிராஜாவுக்கு அது சாத்தியமில்லாமலே போய்விட்டது. தனது அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்திய பாரதிராஜா, தனது உயிர் நண்பன் இளையராஜாவை அந்த மேடைக்கு வரவழைத்ததுதான் ஹைலைட். இந்த ஒரு காரணத்திற்காகவே பாரதிராஜாவின் 'பாதி' ராஜாவான கவிப்பேரரசு வைரமுத்து அழைக்கப்படவே இல்லை அங்கு. இருந்தாலும் சென்னையிலிருந்து ஒவ்வொரு நிமிடமும் தனக்கு நெருக்கமான ஒருவரிடம் விழா குறித்து போனில் விசாரித்துக் கொண்டேயிருந்தாராம் வைரமுத்து. அதுவும் இரவு பதினொரு மணி வரைக்கும். வழக்கம்போலவே இளையராஜாவை 'வாடா போடா' என உரிமையோடு அழைத்த பாரதிராஜா உருக்கமாக பேசிய சில விஷயங்கள் கால காலத்திற…
-
- 0 replies
- 1.2k views
-
-
இது சென்னையின் "சினிமா பாரடைஸோ" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் Image captionசென்னையின் ''சினிமா பாரடைஸோ'' சென்னையின் ஜார்ஜ் டவுன் பகுதியில் இயங்கிவரும் நூறாண்டு பழமையான பாட்சா தியேட்டர், நகரில் ஃபிலிம் மூலம் திரையிடப்படும் ஒரே திரையரங்கமாகும். விளம்பரம் பிற்பகல் 2.15 மணி. அந்தத் திரையரங்கின் முன்பாக கூலித் தொழிலாளர்கள், சில குப்பை பொறுக்குபவர்கள், ரிக்ஷாக…
-
- 2 replies
- 1.2k views
-
-
மன்னிப்பு கேட்கவில்லை... அசின் மீது நடவடிக்கை [^] நிச்சயம்! - ராதாரவி சென்னை: நடிகர் சங்கம் மற்றும் திரையுலக அமைப்புகளின் எதிர்ப்பு [^]களையும் மீறி இலங்கைக்குப் போன நடிகை அசின் மீது நடவடிக்கை நிச்சயம் என்று நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி கூறினார். தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கைக்கு நடிகர், நடிகைகள் செல்லக் கூடாது என திரைப்பட கூட்டமைப்பு தடை விதித்தது. ஆனால் இதனை மீறி இலங்கையில் நடந்த ரெடி என்ற இந்தி படப்பிடிப்புக்கு அசின் சென்றார். படப்பிடிப்போடு நிற்கவில்லை அவர். அங்குள்ள தமிழர் பகுதிகளில் அதிபர் ராஜபக்சே மனைவியுடன் இணைந்து சுற்றுப்பயணமும் செய்தார். இலங்கை அரசு தமிழர்களைச் சிறப்பாகப் பராமரிப்பதாக…
-
- 3 replies
- 1.2k views
-
-
‘காலா’ சுவாரஸ்யங்கள்: கம்ப்ளீட் ஸ்கேனிங் ‘காலா’ படம் குறித்த சின்னச் சின்ன சுவாரஸ்யத் தகவல்களை ‘தி இந்து’ வாசகர்களுக்காக தொகுத்துத் தந்துள்ளோம். ‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து, உடனேயே ரஜினிகாந்த் - பா.இரஞ்சித் இரண்டாவது முறையாக இணைந்த படம் ‘காலா’. “கபாலி படத்தை உங்களுக்காக இயக்கினீர்கள். ‘காலா’ படத்தை என் ரசிகர்களுக்காக இயக்குங்கள்” என ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டதால், ரஜினிக்கான பில்டப்ஸ் படத்தில் நிறைய இருக்கிறது. அதேசமயம், தன்னுடைய வழக்கமான கருத்துகளைப் படம் முழுக்கச் சொல்லியிருக்கிறார் பா.இரஞ்சித். ரஜினியின் காதலியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்த…
-
- 4 replies
- 1.2k views
-
-
தீவிர சிகிச்சைப் பிரிவில் டி.எம்.சௌந்தரராஜன் திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் (91) உடல்நலக் குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் கீழே தவறி விழுந்தார். இதனால் பின் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை முடிந்து, கடந்த இரு நாள்களுக்கு முன்புதான் வீட்டிற்கு வந்தார். இதையடுத்து, சனிக்கிழமை காலை அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சௌந்தரராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார்…
-
- 9 replies
- 1.2k views
-
-
முன்னாள் நடிகை ரவளிக்கு பெண் குழந்தை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் ரவளி. விஜயகாந்த், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்தவர். ரவளிக்கும் ஆந்திராவைச் சேர்ந்த நீலிகிருஷ்ணாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின்னர் நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டு ஹைதராபாத்தில் கணவருடன் வசித்து வந்தார். இந் நிலையில், ரவளிக்கு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. நன்றி தற்ஸ் தமிழ்
-
- 0 replies
- 1.2k views
-