வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
சென்னை: சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கம்முன்னு கெட என்று மனோரமா பேசிய வசனம் அப்போது மிகவும் பிரபலம் ஆனது. விசு இயக்கி நடித்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நன்றியுள்ள பணிப்பெண்ணாக நடித்திருந்தார் மனோரமா. கண்ணம்மா என்ற கதாபாத்திரமாகவே வாழ்த்திருந்தார் ஆச்சி. அந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் கம்முன்னு கெட என்று அவர் பேசிய வசனம் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற வசனம் போன்று மிகவும் பிரபலமானது.வீட்டு முதலாளியின் மகளை அவரது கணவருடன் சேர்த்து வைக்கும் நல்ல எண்ணத்தில் தான் மனோரமா நடித்திருப்பார். முதலாளியின் சம்பந்தியை பார்த்து மனோரமா நறுக் நறுக்கென்று பேசுவார். அதை கேட்ட முதலாளியின் மனைவியும், மகளும் பதறிப் போய் கண்ணம்மா, கண்ணம்மா என்பார்கள். அதற்கு மனோரமாவோ அவர்களின் …
-
- 0 replies
- 662 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
விளைநிலங்களை வேட்டையாடு வது மற்றும் விவசாயத்துக்கு எதிராக நடக்கும் அநீதிகளைப் பற்றி அழுத்தமாக பதிவு செய்திருக்கும் படம் ‘கத்துக்குட்டி’ நண்பன் ஜிஞ்சருடன் (சூரி) சேர்ந்து ஊர் வம்பு, அடிதடி என்று சுற்றிவரும் இளைஞன் அறிவழகன் (நரேன்). அம்மாவுக்கு செல்லப் பிள்ளையான, அப்பாவுக்கு அடங்காத பிள்ளையான அவர், தன் பகுதியில் விவசாயம் அழிந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார். நாயகி ஸ்ருஷ்டி டாங்கே, பறவைகளை நேசிப் பது, செடிகொடிகள் வளர்ப்பது என்று இயற்கையை நேசிக்கும் கிராமத்து பெண்ணாக வருகிறார். ஒரு மோதலில் ஆரம்பிக்கும் நரேன் - ஸ்ருஷ்டி டாங்கேவின் சந்திப்பு, காலப்போக்கில் காதலாக மாறுகிறது. இந்நிலையில் மீத்தேன் எரிவாயு திட்டத்துக்காக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை கு…
-
- 0 replies
- 318 views
-
-
http://teakadaiarasiyal.blogspot.in/2015/05/blog-post_79.html
-
- 4 replies
- 629 views
-
-
புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராஜமெளலி. இவர் இயக்குனர் கே. ராகவேந்திர ராவ் வழிகாட்டுதலின் கீழ் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கினார். இயக்குனரும் எழுத்தாளருமான வி. விஜயேந்திர பிரசாத் என்பவருக்கு மகனாக கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரில் அக்டோபர் 10, 1973 ல் பிறந்தார். இவரின் முதல் திரைப்படம் ஸ்டூடண்ட் நெம்பர் 1, 2001 இல் வெளியானது. இதை ராகவேந்திர ராவ் தயாரிக்க அவரின் உதவியாளராக இருந்த இவர் இயக்கினார். இதில் கதாநாயகனாக ஜூனியர் என் டி ஆர் நடித்தார். இதுவே ஜூனியர் என் டி ஆரின் முதல் பெரு வெற்றிப் படமாகும். தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று இல்லாத காலத்தில், சத்யராஜ் மகன் சிபிராஜ் நடிப்பில், ஸ்டூடண்ட் நெம்பர் 1 என்ற பெயரிலேயே இப்படம் தமிழில் எடுக்கப்பட்டது. ராஜம…
-
- 0 replies
- 353 views
-
-
காவல் துறையின் பச்சோந்தித் தனத்தைத் தோலுரித்துக் காடும் படம் கிருமி. கதிர் (‘மதயானைக் கூட்டம்’ கதிர்) வேலை யில்லாத, ஆனால் மணமாகிக் குழந்தை யுள்ள இளைஞன். வீட்டுக்கு எப்போதா வது வரும் அவன் நண்பர்களுடன் அறையில் தங்கிப் பொழுதைப் போக்குகிறான். குடி, சீட்டாட்டம் என நகர்கிறது அவன் வாழ்க்கை. போலீஸ் இன்ஃபார்மர் பிரபாகரன் (சார்லி) கதிர் மீது பிரியம் கொண்டவர். கதிரும் பிரபாகரன் உதவியுடன் போலீஸ் இன்ஃபார்மராக மாறுகிறான். இது பொருளாதார ரீதியாக அவனை உயர்த்துகிறது. ஆனால் முன்னெச் சரிக்கையின்றி அவன் செய்யும் சில காரியங்கள் அவனைச் சிக்கலில் மாட்டி விடுகின்றன. காவல் துறை ஆய்வாளர் கள் இருவருக்கு நடுவே நடக்கும் பனிப் போரிலும் அவன் மாட்டிக்கொள் கிறான். இந்தச் சிக்கல்களிலிருந்து அவன் தப்பித்தா…
-
- 1 reply
- 514 views
-
-
விஜய், புலி படக்குழுவினர் வீடுகளில் ரெய்டு ஏன்?: பரபர தகவல்கள்! சென்னை: புலி படம் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணத்தை வைத்து எடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்தே வருமான வரித்துறையினர் விஜய் மற்றும் படக்குழுவினரின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்களாம். விஜய் ஆசை, ஆசையாக நடித்து முடித்துள்ள படம் புலி. படத்தின் கதையை சிம்புதேவன் கூறியதுமே வாவ், இந்த படம் நிச்சயம் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும், இதில் நான் நிச்சயம் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். படப்பிடிப்பின்போது முழு ஈடுபாட்டோடு நடித்து சிம்புதேவனை அசத்தினார் விஜய். படத்தின் இரண்டு டிரெய்லர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. புலி புலி படம் நாளை ரிலீஸாக உள்ளது. புலி தமிழ், தெலுங்கு மற்றும்…
-
- 7 replies
- 2.4k views
-
-
ஹிட்லரின் இறுதி நாட்கள்: திரைப்பட அறிமுகம் ஜி.ஆர்.சுரேந்திரநாத் “கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், எனது அலுவலக வேலையாக பெர்லின் சென்றிருந்தேன். மைனஸ் டிகிரி குளிரை எப்படி தாக்குப் பிடிக்கப்போகிறோம் என்ற கவலையை வெளியே காட்டிக்கொள்ளாமல், எனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜெர்மனிய மொழிபெயர்ப்பாளர் ஃபிஷ்ஷரிடம், ‘இன்றைய ஜெர்மனியர்கள் ஹிட்லரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?’ என்று கேட்டேன்” என்று இக்கட்டுரையை ஆரம்பித்தால் ஒரு கெத்தாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கெல்லாம் ஜாதகத்தில் எழுதியிருக்கவேண்டும். எனது பணித் தொடர்பாக, பல்லாவரம் வரையிலும் கூடச் செல்வதற்கு வாய்ப்பில்லாத ஒரு வேலையில் நான் இருப்பதால், தனது கம்பெனி வேலையாக அடிக்கடி ஜெர்மனி சென்று வந்துள்ள என் தம்பியிடம் இதே கேள்வி…
-
- 0 replies
- 1.3k views
-
-
Jaffna International Cinema Festival will be held from 15th-21st September 2015 in Jaffna. Film screenings at Majestic Cineplex - Cargils Square, Kailasapathy Auditorium - University of Jaffna, Public Library Auditorium and Open Air Theatre CPA Jaffna. Discussion Forums, Masterclasses and many more fringe events. Please spread the word. All screenings are FREE. வாழ்த்துக்கள் போக ஆசையாய் இருக்கு அடுத்தமுறை படத்துடன் போவம் .
-
- 13 replies
- 1.3k views
-
-
எந்தக் கதாபாத்திரத்தையும் மையப் படுத்தாமல் ஒரு சம்பவத்தை அல்லது பிரச்சினையை மையப் படுத்தும் படங்களின் வகையைச் சேர்ந்தது பிரம்மாவின் இயக்கத்தில் வந்துள்ள ‘குற்றம் கடிதல்’. யதார்த்தத்தைச் சமரசம் செய்துகொள்ளாமல் விறுவிறுப்பாக இதைக் கையாண்டுள்ள பிரம்மாவின் முயற்சி பாராட்டத்தக்கது. லாரியில் பயணம் செய்யும் அந்த இளம் ஜோடியின் முகத்தில் பெரும் கலவரம். குறிப்பாக அந்தப் பெண்ணின் முகத்தில். அதற்கான காரணத்தைச் சொல்வதாக விரிகிறது படம். தனியார் பள்ளியொன்றில் ஆசிரியை யாகப் பணியாற்றுபவர் மெர்லின் (ராதிகா பிரசித்தா). திருமண விடுப்பு முடிந்து பள்ளிக்குச் செல்கிறார். சக ஆசிரியையின் வேண்டுகோளை ஏற்று அவரது வகுப்பை கவனித்துக்கொள்ளச் செல்கிறார். அங்கே மெர்லின் செய்யும் ஒரு சிறு தவறு ஒரு பையனை…
-
- 2 replies
- 602 views
-
-
’தாரை தப்பட்டை’ பாலா பொளேர்!- ம.கா.செந்தில்குமார் எப்போதாவதுதான் பேசுவார். அப்போதும் அதிர்வேட்டு அதிரடிதான் இயக்குநர் பாலா ஸ்பெஷல். இதோ இப்போதும்..! ''கதையை ஒரு வரி, ஒன்றரை வரியில சொல்றதுக்கு நான் என்ன திருவள்ளுவரா? நான் ஒரு சாதாரண சினிமா கிறுக்கன். ஏதோ எனக்குத் தெரிஞ்ச சினிமாவை எடுத்து பொழப்பை ஓட்டிட்டு இருக்கேன்'' - எடுத்த எடுப்பிலேயே 'தாரை தப்பட்டை’ பதில். கரகாட்டப் பின்னணிக் கதை, இளையராஜாவின் 1,000-வது படம் என விசேஷங்கள் பல சூழ்ந்திருக்கும் படத்தின் பணிகளில் பரபரப்பாக இருந்தவரிடம் பேசியதில் இருந்து... ''திருவையாறு ஆராதனையில, டிசம்பர் சீஸன்ல வாசிச்சு, பத்மஸ்ரீ, பத்மபூஷண்னு விருதுகளை வாங்குபவர்களுக்கு மத்தியில், தங்கள் வாழ்க்கையைத் தொலைச்சு நிக்கிற தஞ்சை மண்ணின்…
-
- 0 replies
- 2.2k views
-
-
மெகாஸ்டார் சிரஞ்சீவி விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோவாக நடிக்கிறார். மெகாஸ்டார் சிரஞ்சீவி அரசியலில் பிசியாக இருந்துவிட்டதால் சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.149 படங்களில் நடித்த அவரை 150வது படத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சிரஞ்சீவி தனது 150வது படத்தில் நடித்துவிட்டார். 150வது படம் என்றால் அவர் ஹீரோவாக நடிக்கவில்லை மாறாக தனது மகன் ராம் சரண் தேஜாவின் ப்ரூஸ் லீ படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். அப்படி என்றால் ஹீரோவாக இல்லையா என்று கேட்டால் கவலைப்படாதீர்கள் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கத் தயாராகிவிட்டார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான…
-
- 1 reply
- 492 views
-
-
5 ஆண்டுகளாக வரி கட்டாமல் பதுங்கிய 'புலி'! கடந்த 5 ஆண்டுகளாக நடிகர் விஜய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய் நடிப்பில் உருவான புலி படத்திற்கு முறையாக வருமானவரி செலுத்தப்படவில்லை என வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.. நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, இயக்குநர் சிம்புதேவன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, திரைப்பட பைனான்சியர் ரமேஷ், நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட 10 பேர் வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் புகார் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய், நடிகைகள் சமந்தா, நயன்தாரா உள்ளிட்ட 10 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அத…
-
- 0 replies
- 343 views
-
-
எம்எஸ்வி – 1 இசையும் காலமும் எஸ்.சுரேஷ் பின்னணி திரையிசை ரசிகர்களால் எம்எஸ்வி என்று அன்புடன் அழைக்கப்படுபவரும், தமிழ்த் திரையிசையுலகில் எக்காலமும் நீங்கா இடம் பெற்ற இசையமைப்பாளருமான எம். எஸ். விஸ்வநாதன் அண்மையில் காலமானார். அதைத் தொடர்ந்து செய்தித்தாள்களிலும், சமூக ஊடங்களிலும் அஞ்சலியாக ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது ஒரு தலைமுறையினர் மீது முழுமையான தாக்கம் ஏற்படுத்திய இசையமைப்பாளர் அவர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அஞ்சலி கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் ஒரு கதை இருந்தது, ஒவ்வொன்றும் ஒரு பாடலை நினைவுகூர்ந்தது, மிக முக்கியமாக ஒவ்வொன்றிலும் இதயத்தில் அதுவரை மறைந்திருந்த ஒரு நினைவு உயிர்பெற்று வெளிப்பட்டது. அவரது இசைக் கோவைகள் நேயர்கள் மனதில் ஏற்படுத்…
-
- 3 replies
- 7.7k views
-
-
சிவாஜிகணேசன் | 'தாய்மொழியில் பதில் சொல்லவே விரும்புகிறேன்' இன்று சிவாஜிகணேசன் 87-வது பிறந்த நாள் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் அறிவித் துள்ளார். சிவாஜியின் 87-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் இவ் வேளையில் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் இது தித்திக்கும் செய்தி! ஒருநாள் எனக்கு சிவாஜி வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. என்னை அவர் அருகில் உட்கார சொன்னவர், “ என்டிடிவி என்னைப் பேட்டி காணப் போகி றது. அவர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க, நான் தமிழில் பதில் சொல்லப் போகிறேன்” என்றார். “உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமே பின் ஏன் தமிழில்?” என்றேன். “அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் சரியான பதில் தர விரும்…
-
- 1 reply
- 297 views
-
-
‘மாயா’ படத்துக்காக மயானத்தில் நள்ளிரவுகளில் படப்பிடிப்பை நடத்தினர். பேய் படத்தில் நடிப்பதற்கு பயமாக இருந்தது என்று நயன்தாரா கூறினார். நயன்தாரா ‘மாயா’ என்ற பேய் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. தெலுங்கில் ‘மயூரி’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு உள்ளது. பேய் படத்தில் நடித்த அனுபவம் பற்றி நயன்தாரா ஐதராபாத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: ‘மாயா எனக்கு நான்காவது பேய் படம். ஏற்கனவே மலையாளத்தில் பேய் படமொன்றில் நடித்தேன். தமிழில் ரஜினிகாந்துடன் ‘சந்திரமுகி’, சூர்யாவுடன் ‘மாசு என்கிற மாசிலாமணி’ போன்ற திகில் படங்களில் நடித்து இருக்கிறேன். எனவே பேய் படங்களில் நடிப்பது எனக்கு பழகிவிட்டது. மாயா படத்தில் நடித்தது வித்தியா…
-
- 0 replies
- 315 views
-
-
இவரை மறக்க முடியுமா? கவர்ச்சி நடிகைகள் தமிழ் சினிமாவில் நடனம் மட்டுமே ஆடிக் கொண்டிருந்தபோது தன்னால் நடிக்கவும் முடியும் என்று நிரூபித்தவர் சில்க் ஸ்மிதா. ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எளுரு என்ற கிராமத்தில் பிறந்த விஜயலட்சுமி, நான்காம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார். சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த விஜயலட்சுமியை ஒரு முறை பார்த்த நடிகர் வினுச்சக்கரவர்த்திதான் 'வண்டிச்சக்கரம்' படத்தில் அறிமுகப்படுத்தினார். சினிமாவுக்காக 'சில்க் ஸ்மிதா' என்ற பெயர் அவருக்கு சூட்டப்பட்டது. கவர்ச்சி நடிகைகள் என்றால் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவார்கள், போய் விடுவார்கள் என்ற நிலையை தமிழ் சினிமாவில் மாற்றிக் காட்டியவர் சில்க் ஸ்மிதா. பாரதிராஜ…
-
- 2 replies
- 748 views
-
-
விவசாயிகளுக்காக ஓர் அசத்தல் சினிமா! ‘‘படத்தோட கதையைச் சொல்ல வந்தப்ப, ‘நீ முன்னாடி பாதியையும் பின்னாடி பாதியையும் விட்டுடு. நடுவுல மட்டும் சொல்லு’னு டைரக்டர்கிட்ட சொன்னேன். அவர் சொன்னதுதான் ‘ஆறடி தாய்மடித் திட்டம்’. அதைக் கேட்டதுமே ஓகே சொல்லிட்டேன். அதனால நான் மறுக்கா மறுக்கா சொல்றேன்... இது ஒரு நல்ல படம்’’ -49-ஓ திரைப்படத்துக்கான இசை வெளியீட்டு விழாவில், நடிகர் கவுண்டமணி, திரும்பத் திரும்ப இதைச் சொல்லி கைத்தட்டல்களை அள்ளினார். ஒரு வார இடைவெளியில் படமும் வெளியாகிவிட்டது. திரையரங்குகளிலும் கைதட்டல்கள் எதிரொலிக்கின்றன... விவசாயிகளுக்காகவும், விவசாயத்துக்காகவும் குரல் கொடுக்கும் இந்தப் படத்துக்கு! கவுண்டமணி வசிக்கும் கிராமத்தின் வழியே தேசிய நெடுஞ்சாலை அமைய உள்ளதை முன்கூட…
-
- 0 replies
- 456 views
-
-
'உனக்கென்ன வேணும் சொல்லு' என்றொரு படம். பத்திரிகையாளர்களுக்குப் போட்டுக் காட்டினார்கள். பேய் படம்தான். ஆனால், அற்புதமான பிலிம் மேக்கிங். படத்தொகுப்பும், பின்னணி இசையும் பிரமாதம். படம் முடிந்தவுடன் காத்திருந்த எடிட்டர் ஹரிஹரனுடன் கை கொடுத்து 'எடிட்டிங் பிரமாதம் பிரதர். நம்பர் கொடுங்க நிறையப் பேசணும்' என்றேன். 'தற்காலிகமான இந்தியன் எண்தான் இருக்கு. நான் ஸ்ரீலங்கன்' என்றார். 'நம்ம பசங்க டிசிப்பிளினான படம் பண்றாங்க' என அந்தக் கணம் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நின்று நிதானமாகப் பேசினால், படத்தின் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம் கூட இலங்கைத் தமிழர்தான். கொழும்பு, கொட்டஹனாவை சேர்ந்த இருவருக்குமே, சிறுவயது முதலே ஒரே கனவு, அது சினிமா. இயக்குநர் ஸ்ரீநாத் எப்படியோ அமெரிக்க…
-
- 1 reply
- 531 views
-
-
யாழ் சர்வதேச திரைப்படவிழாவில் இறுதியாகக் காட்சிப்படுத்தப்பட்டதிரைப்படம் A Gun & A Ring (ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்). இத்திரைப்படத்தை வெண்திரையில் பார்வையிட யாழ் திரைப்பட ரசிகர்கள் ஒருவித எதிர்பார்ப்புடன் வந்திருந்தனர். நானும் பரவசத்துடன் அத்திரைப்படத்தைப் பார்வையிட அரங்கில் மெல்லிய குளிர்காற்றில் ஒப்புவித்துக் காத்திருந்தேன். இத் திரைப்படத்தின் நிகழும் களம் கனடாவாக இருக்கின்றது. கனடாவிற்குப் புலம்பெயர்ந்த ஈழத்து அகதிகள், ஒரு சூடான் நாட்டு அகதி, இரு கனடியகாவற்துறைப் புலனாய்வாளர்கள் ஆகியோர் கதைமாந்தர்கள். நாயகன், நாயகி எனப் பிரதானப்படுத்தும் பாத்திரங்கள் எவரும் இல்லை. மிக வித்தியாசத் தன்மைகளைக்கொண்ட ஆனால் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து செல்லும் ஆறு தனிக்கதைகளைக் கொண…
-
- 0 replies
- 737 views
-
-
எட்டு எம்மி விருதுகளை அள்ளிய ’கேம் ஆஃப் த்ரான்ஸ்’! அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி விருதான எம்மி விருதுகள் நேற்று வழங்கப்பட்டது, ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் இவ்விருதில் சிறந்த அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு நடை பெற்ற இவ்விழாவில், பீட்டர் டின்க்லகெ மற்றும் ஜான் ஹாம் இருவரும் நீண்ட காத்திருப்புக்கு பின் எம்மி விருதினை பெற்றுள்ளனர். மேட் மென் என்னும் நாடக தொடருக்காக ஜான் ஹாம் விருதினை பெற்றார். "கேம் ஆப் த்ரோன்ஸ்" தனிப்பெரும்பான்மை பெற்றத் தொடருக்கான விருதினை தட்டிச்சென்றது . இந்த டிவித் தொடர் உலகம் முழுக்க 2 கோடிக்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. வயோலா டேவிஸ் "ஹவ் டு கெட் அவே வித் எ மர்டர்" என…
-
- 0 replies
- 278 views
-
-
மதுரையில் நடிகர் சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்கள் தாக்குதலால் பரபரப்பு! (வீடியோ) மதுரை: மதுரை விமான நிலையத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை, கமல்ஹாசன் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், நடிகை ஹன்சிகா உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்த விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் கமல்ஹாசன் மதுரை விமான நிலையம் வந்துள்ளார். கமல்ஹாசனை வரவேற்க அவரது ரசிகர்கள் அங்கு குவிந்திருந்தனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட நடிகர் கமல் அங்க…
-
- 1 reply
- 372 views
-
-
2வது காதலனையும் பிரிந்தார் எமி ஜாக்ஸன் ‘மதராசபட்டினம்’, ‘ஐ’ படங்களில் நடித்தவர் எமி ஜாக்ஸன். இந்தியில் ‘ஏக் திவானா தா’ படத்தில் பிரதிக் பாப்பர் ஜோடியாக நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஒருவர் பெயரை ஒருவர் பச்சை குத்திக்கொண்டனர். ஓர் ஆண்டிலேயே இவர்கள் காதல் முறிந்தது. இந்நிலையில் லண்டன் தொழில் அதிபர் ஜார்ஜ் பனாயியோடோவுடன் காதல் மலர்ந்தது. அவருடன் நெருங்கிப் பழகினார். அவருடன் ஜோடியாக இருப்பதுபோல் தனது இன்ஸ்டாகிராம் இணைய தள பக்கத்தில் படங்களை வெளியிட்டு வந்தார்.சமீபத்தில் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமிலிருந்தும் ஜார்ஜுடன் வெளியிட்டிருந்த புகைப்படங்களையும் எமி நீக்கிவிட்டார். எமியுடன் ஜார்ஜ் நெருங்கி பழகும் விவகாரத்துக்கு அவரது தந்தை…
-
- 3 replies
- 791 views
-
-
நான் நரேந்திரமோடியின் மகள் என்று, ஸ்ட்ராபெரி திரைப்பட ஹீரோயின் அவனி மோடி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பா.விஜய் இயக்கத்தில், அவரே ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள தமிழ் திரைப்படம் ஸ்ட்ராபெரி. இதன் ஹீரோயின் அவ்னி மோடி, அப்படத்தில் கவர்ச்சியில் பட்டையை கிளப்பியுள்ளாராம். அடுத்ததாக காலண்டர் கேர்ள்ஸ் என்ற பெயரில் வெளியாகும் படத்தில் நடித்துக் கொண்டுள்ளார். குஜராத்தை சேர்ந்த மாடலான இவரது பெயரையும், பூர்வீகத்தையும் வைத்து நீங்கள் பிரதமர் மோடியின் சொந்தக்காரரா என்று பல பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதனால் வெறுத்துப்போன அவனி மோடி, ஹிந்தி பத்திரிகையொன்றுக்கு இதுபற்றி கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் உறவினரா நீங்கள்… என்ற கேள்வி எங்கு ச…
-
- 0 replies
- 238 views
-
-
இலங்கை இராணுவத்தினரால் மிகக்கொடூரமான முறையில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் வகையில் எடுக்கப்பட்ட ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படத்துக்கு சென்சார் போர்டு தடை விதித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் இயக்குநரான கணேசன், பெங்களூரில் வசித்துவரும் தமிழர். பல கன்னட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அவரது முதல் தமிழ்ப்படம் தான் ‘போர்க்களத்தில் ஒரு பூ’. இந்தப் படத்தின் இயக்குநர் கணேசன் இதுகுறித்து தெரிவிக்கையில், இந்தப் படம், இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடக்கூடியது. இசைப்பிரியாவுக்கு அறிமுகம் ஆனவர்கள் கனடா, லண்டன், பாரீஸ் போன்ற நாடுகளில் உள்ளனர். அவர்களை நேரடியாகச் சந்தித்து தகவல்களைத் திரட்டி இந்தப் படத்தை எடுத்தேன். முத…
-
- 3 replies
- 492 views
-