வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
லிங்கா படத்தால் தங்களுக்கு ரூ. 20 கோடி முதல் ரூ. 30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக சில விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். இந்த இழப்பை நடிகர் ரஜினிகாந்த் தங்களுக்குத் திருப்பித் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக யூடியூப்பில் ஒரு வீடியோ உலா வருகிறது. அந்த வீடியோவில் அந்த விநியோகஸ்தர்கள் கூறியுள்ளதாவது: முதல் விநியோகஸ்தர்: நான் திருச்சி தஞ்சாவூர் ஏரியா விநியோக உரிமையை வாங்கியுள்ளேன். ரூ. 8 கோடி கொடுத்து வாங்கினேன். லிங்கா பட இசை வெளியீட்டு விழாவின்போது பேசிய இயக்குநர்கள், ரஜினி சார் உள்ளிட்டோர் இந்தப் படம் படையப்பா படத்தை விட நன்றாக போகும், 10 மடங்கு படையப்பாவை விட சிறப்பாக இருக்கும் என்றனர். பெரும் வசூலை கொடுக்கும் என்றனர். மேலும் அவர்களே…
-
- 22 replies
- 2k views
-
-
அதாகப்பட்டது... : டி.வியில் ஒருநாள் சேனல் மாற்றிக்கொண்டே வரும்போது, ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. சும்மா ஐந்து நிமிடம் பார்ப்போமே என்று ஆரம்பித்தால், சட்டென்று என்னை உள்ளே இழுத்துக்கொண்டது அந்தப் படம். அது ‘தடையறத் தாக்க’. அந்தப் படம் ஏன் ஓடவில்லை என்றும் எனக்குப் புரியவில்லை, அதன் இயக்குநருக்கு ஏன் அடுத்த பட வாய்ப்பு உடனே வரவில்லை என்றும் புரியவில்லை. ஒவ்வொரு சீனிலும் இது ஒரு சினிமா தெரிந்த இயக்குநரின் படம் எனும் முத்திரை இருந்தது. அப்படி என் மனதில் பதிந்த இயக்குநர் மகிழ் திருமேனியின் அடுத்த படைப்பு என்பதே, இந்தப் படத்தை நான் பார்க்கப் போதுமானதாக இருந்தது. ஒரு ஊர்ல..: தாதாக்கள் கூட்டத்துக்குள் ‘காக்கிச்சட்டை-போக்கிரி’ ஊடுருவும் கதை தான். ஆனால் திரைக்கதை....…
-
- 0 replies
- 741 views
-
-
இந்தியாவின் பெரிய பிரச்னைகளில் போலி சாமியார்களும் உண்டு. ஹிந்து மதத்தில் மட்டும் இல்லாமல் முஸ்லிம்கள், க்ரிஸ்தவர்கள், இன்னும் இருக்கும் எல்லா மதங்களிலும் இவர்களே அதிகம். இவர்களை முக்கியமாக எடுத்துக்கொண்டு இப்படிப்பட்டவர்களின் பணம் சேர்த்தல், இவர்களை நம்பும் மக்கள், அதனால் விளையும் பிரச்னைகள் என்பவற்றையெல்லாம் நகைச்சுவை கலந்த திரைக்கதையாகச் சொல்லியிருப்பதுதான் பீகே. நம்மூரில் பல படங்களில் வந்துவிட்ட சப்ஜெக்ட் இது. எம்.ஆர் ராதாவின் ஃபேவரைட் விஷயம். ஹிந்தியில் ‘Oh My God’ படத்துக்குப் பின்னர் இப்போது மறுபடியும் எழுந்திருக்கிறது. பீகேவின் கதை இதற்குள் எல்லாருக்கும் தெரியும் என்பதாலும், அதைப்பற்றிப் பேசினாலும் படம் பார்க்காதவர்களை அது பாதிக்காது என்பதாலும் – வேறு கிரகம் ஒன…
-
- 0 replies
- 1.6k views
-
-
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாதது ஏன் கமல்ஹாசன் வீடியோ மூலம் விளக்கம் சென்னை தமிழ்ப்பட உலகில், ‘இயக்குனர் சிகரம்’ என்ற பட்டத்துடன் 100-க்கும் மேற்பட்ட படங்களை டைரக்டு செய்து மிகப்பெரிய சாதனைகளை செய்தவர் கே.பாலசந்தர். காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். அவருடைய உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ,அற்றும் நடிகர் நடிககள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். மாலை 3 மணிக்கு, கே.பாலசந்தரின் இறுதி ஊர்வலம் சென்னை மைலாப்பூர் வாரன் சாலையில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து புறப்பட்டது. இறுதி ஊ…
-
- 0 replies
- 832 views
-
-
கோடீஸ்வரிகளாகும் தமிழ் நடிகைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி, கமல் தவிர மற்ற நடிகர்கள் ஒரு கோடி சம்பளம் வாங்கினால் அதுவே பெரிய செய்தி. இன்றைக்கு முதல் படத்தில் பணம் கொடுத்து அறிமுகமாகும் நடிகர் அந்த படம் ஹிட்டாகிவிட்டால் அடுத்த படத்துக்கு கோடிக் கணக்கில் சம்பளம் கேட்கிறார். கோடிக்கு குறைவாக சம்பளம் வாங்கினாலும் வெளியில் அத்தனை கோடி சம்பளம், இத்தனை கோடி சம்பளம் என்று சொல்லி இமேஜை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்கள் கோடியை தாண்டினாலும் நடிகைகள் சம்பளம் லட்சங்களுக்குள்ளேயேதான் புரண்டு கொண்டிருந்தது. இந்தி நடிகைகள்தான் கோடி கணக்கில் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தார்கள். காரணம் இந்தி பேசும் 8 மாநிலங்கள் அந்த படங்களின் வியாபார பரப்பு என்பதால் அந்த சம்பளத…
-
- 1 reply
- 2.1k views
-
-
மும்பை: பாலிவுட் உலகின் புதிய வரவான "பிகே" திரைப்படம் உலக அளவிலான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் 150 கோடியை நெருங்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரே ஒரு பகுதியில் மட்டும் "லிங்கா" திரைப்படத்துடன் போட்டி போட இயலாமல் தவித்து வருகின்றது. அந்த நாடு "மலேசியா". மலேசியாவில் முதல் வாரத்தில் இப்படம் வெறும் 8 லட்சத்தினை மட்டுமே குவித்துள்ளது. பல்வேறு தரப்பினரும் மலேசியாவில் "பிகே" திரைப்படம் எவ்வளவு வசூலைக் குவிக்கிறது என்ற எதிர்பார்ப்புடன் இருந்து ஏமாற்றத்தில் ஆழ்ந்து போயுள்ளனர். ஆனால், பிகேவால் லிங்கா திரைப்படத்தினை மீறி திரையில் ஜொலிக்க முடியவில்லை. முதல்வாரத்திலேயே லிங்கா திரைப்படம் 2.26 கோடி வசூலைக் குவித்தது. மலேசியாவில் அதிக அளவில் இருக்கும் தமிழ் மக்களால் தமிழ்…
-
- 0 replies
- 718 views
-
-
சில்லறைக்கு சினிமா அக்கப்போருக்கு அரசியல் – வீடியோ! http://www.vinavu.com/2014/11/21/rajini-linga-comedy-video/
-
- 1 reply
- 622 views
-
-
சோனாக்ஷி காட்டில் அடை மழை திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014 லிங்கா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமாவில் கால்பதித்துள்ள சோனாக்ஷி சின்ஹாவுக்கு பாராட்டுகளும் வாய்ப்புகளும் குவிகின்றன. புதிய தமிழ்ப் திரைப்படங்களில் நடிக்க அவருக்கு பெரிய இயக்குநர்களிடமிருந்து அழைப்புகள் வந்தாலும், நல்ல கதைக்காக அவர் காத்திருப்பதாகக் கூறியுள்ளார். லிங்காவில் ராஜா லிங்கேஸ்வரன் பாத்திரத்தில் வரும் ரஜினியின் ஜோடி சோனாக்ஷி. ஹிந்திப் திரைப்படங்களில் தாராள கவர்ச்சியுடன் நடிக்கும் சோனாக்ஷிக்கு இந்தப் திரைப்படத்தில் பழங்கால தமிழ்ப் பெண்களைப் போல, ரவிக்கையில்லாமல் புடவை கட்டி நடிக்க வேண்டிய வேடம். அவரும் சிறப்பாக நடித்திருந்தார். அனுஷ்காவை விட ச…
-
- 0 replies
- 677 views
-
-
"பிசாசு" - விமர்சனம். நடிப்பு: நாகா, ப்ரயாகா, ராதாரவி இசை: அரோல் கொரோலி தயாரிப்பு: பாலா எழுத்து - இயக்கம்: மிஷ்கின் ஒரு சாலை விபத்தில் அழகிய இளம்பெண் ப்ரயாகா அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடிக்க, அந்தப் பக்கமாக வரும் நாகா உள்ளிட்ட மூவர் ஒரு ஆட்டோக்காரர் உதவியுடன் அவளை மருத்துவனையில் சேர்க்கின்றனர். அவர்களில் நாகாவின் கையை இறுகப் பற்றிக் கொள்கிறாள் ப்ரயாகா. மருத்துவமனைக்குப் போன சில நிமிடங்களில் அவன் கையை இன்னும் இறுகப் பற்றிய நிலையில், 'ப்பா..' என்ற ஒற்றைக் குரலோடு அவள் உயிர் அடங்குகிறது. ப்ரயாகாவின் தந்தை ராதாரவியிடம் உடலை ஒப்படைத்துவிட்டு மனசு முழுக்க பாரமாய், அவளின் ஒற்றைச் செருப்பை நினைவாக எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறான் நாகா. கவலையைப் போக்…
-
- 5 replies
- 2.4k views
-
-
-
சென்ற வாரம் 12ந்திகதி நடிகர் ரஜனிகாந்தின் பிறந்த நாள் அன்று அவருடைய படம் லிங்கா வெளியிடப்பட்டது. அதற்காக விஜய் தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் தொடக்கம் ஆரம்பம் முதல் ரஜனியுடன் இiணைந்தவர்கள் பணி செய்தவர்கள் என ஏராளமானவர்களை அழைத்து பேட்டி கண்டார்கள். ரஜனிகாந்தின் வாழ்க்கை வரலாறு முழுவதும் அங்கு அலசப்பட்டது எனலாம். அவருக்கு சக்தி வாய்ந்த கண்கள், அதைப் பார்த்துத்தான் பாலசந்தர் அவரைத் திரையுலகுக்குக் கொண்டு வந்தார், அவருடைய பணிவு அவருடைய அது அவருடைய இது எனப் புகழ்ந்து புகழ்ந்து கடைசியில் அவரைக் கடவுளாகவே சொல்ல ஆரம்பிpத்து விட்டார்கள்! ரஜனியுடன் அவருடைய வருடாந்த ஆன்மீகப் பயணத்தில் செல்பவரையும் பேட்டி கண்டார்கள். அவர் தங்களுடைய இமயமலைப் ப…
-
- 2 replies
- 705 views
-
-
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஸ்டார் ஓட்டல்களில் நடனம் ஆட ஹீரோயின்கள் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு கோடிகளில் சம்பளம் பேசப்படுகிறது. பெரும்பாலும் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இதற்கான சான்ஸ் கொட்டிக்கொண்டிருக்கிறது. சில தென்னிந்திய ஹீரோயின்களுக்கும் அழைப்பு வந்திருக்கிறது. கேட்டாலே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு ஒரு நாள் இரவு ஆட்டத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்குகிறார் ஆபாச நடிகை சன்னி லியோன். இந்தி படங்களில் கிளாமர் வேடங்களில் நடித்து வரும் இவர் தமிழில் ‘வடகறி என்ற படத்தில் குத்தாட்டம் போட்டார். தெலுங்கு படங்களிலும் கவர்ச்சி ஆட்டம் ஆடுகிறார். இதற்கிடையில் இம்மாதம் 31ம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடனம் ஆட ஒப்புக்கொண்டிருக்கிறார். ஐதராபாத் ஜூப்ளி ஹில்…
-
- 15 replies
- 3.6k views
-
-
கேபியின் உடல் நிலையும்..... மீடியாக்களின் ‘கொலை’ப் பசியும்! கடந்த சில நாட்களாக சினிமா வட்டாரத்திலும் மீடியாக்கள் வட்டாரத்திலும் பெரிய பரபரப்பு ஏற்படுத்திய செய்தி தமிழ் சினிமாவின் பிதாமகன் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரின் உடல் நிலை பற்றியதுதான். இது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், அதைவிட பெரிய அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது இந்த விஷயத்தில் சில மீடியாக்களின் அநாரீகமான அணுகுமுறை. இரண்டு நாட்களுக்கு முன் கே.பி அவர்கள் லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆழ்வர்பேட்டை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் சில விஷமிகள் மூலம் வாட்ஸ் அப்பில் கே.பி இறந்து விட்டதாகவே ( மன்னிக்கவும்) பரபரப்பப்பட்டது. உடனே ஒட்டு மொத்த மீடியாக்களும் தங்கள் ஊழியர்களை மருத…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஒரு பாத்திரத்துக்காக எந்த அளவு ஆபத்தையும் சந்திக்கத் தயங்காதவர்களில் விக்ரமும் ஒருவர். குறிப்பாக ஷங்கரின் ஐ படத்துக்காக அவர் எடுத்த ரிஸ்க், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்றால் மிகையல்ல. கடந்த சில தினங்களாக இணையத்தில் உலா வரும் அவரது ஒரு நோஞ்சான் படத்தைப் பார்த்தாலே அதைப் புரிந்து கொள்ளலாம். படத்தில் வரும் கூனன் கதாபாத்திரத்திற்காக உடல் எடையைக் குறைத்து, எலும்பும் தோலுமாக அவர் காட்சியளிக்கும் அந்தப் படம் பார்ப்பவர் கண்களை குளமாக்கும். இது விக்ரம்தானா? இந்த மனிதர் ஏன் இப்படி ரிஸ்க் எடுக்கிறார்.. இப்படியெல்லாம் கூட ஒருவரால் சினிமாவுக்காக மெனக்கெட முடியுமா? என்று பிரமிப்பும் கவலையும் கலந்த தொனியில்தான் ஒவ்வொருவரும் கேட்டு வருகின்றனர். இனி விக்ரம் இ…
-
- 0 replies
- 951 views
-
-
தமிழக கவிஞர் முத்துக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம். தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்கள் எழுதி முதலிடத்தில் உள்ள கவிஞர் நா.முத்துக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ”தங்கமீன்கள்” படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை பாடலுக்காக நா.முத்துக்குமார் தேசிய விருது பெற்றது நினைவிருக்கலாம். தற்போது அமெரிக்க உலகத்தமிழ் பல்கலைகழகம் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. இந்த விழா தியாகராயநகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. அமெரிக்க உலகத்தமிழ் பல்கலைக்கழகத்தின் தலைவர், முனைவர் திரு.செல்வின்குமார் அவர்கள் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவித்தார். ஏற்கனவே 2006 ஆம்…
-
- 0 replies
- 510 views
-
-
84 வயதான சினிமா டைரக்டர் கே.பாலச்சந்தர் உடல்நிலை கவலைக்கிடம் 84 வயதான சினிமா டைரக்டர் கே.பாலச்சந்தர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய உடல்நிலை கவலைக்கிடம் அடைந்ததை தொடர்ந்து ரஜினிகாந்த் ஆஸ்பத்திரிக்கு சென்று உடல்நலம் விசாரித்தார். கே.பாலச்சந்தர் தமிழ் பட உலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவர் கே.பாலச்சந்தர். இவருக்கு 84 வயதாகிறது. சமீபத்தில் இவருடைய மகன் கைலாசம் மரணம் அடைந்தார். அந்த சோகம் கே.பாலச்சந்தரை மிகவும் பாதித்தது. அதிர்ச்சியில் இருந்து அவர் மீளவே இல்லை. அதைத் தொடர்ந்து அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக அ…
-
- 0 replies
- 2.4k views
-
-
லண்டன் பிரபல அமெரிக்க போர்ப் ஸ் மேகசின் இந்திய அளவில் இந்த ஆண்டு அதிகபட்ச வருமானம் உள்ள நட்சத்திரங்கள் பட்டியல் குறித்து சமீபத்தில் சர்வே ஒன்று எடுத்தது. இந்த சர்வே முடிவு இன்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதலிடம் பெற்றார். நம்மூர் விஜய், ரஜினி, அஜீத் ஆகியோர்களும் இந்த பட்டியலில் உள்ளனர். இந்தியாவின் டாப் 100 நட்சத்திரங்கள் பட்டியலில் சல்மான் கான் ரூ.244.5 கோடி வருமானத்துடன் முதல் இடத்தில் உள்ளார்.அமிதாப்பச்சன் (ரூ.196.5 கோடி) 2 வது இடத்திலும், ஷாருகான் ( ரூ.202.4 கோடி) 3 வது இடத்திலும், தொடர்ந்து எம்.எஸ் தோணி (ரூ.141.8 கோடி), அக்சய் குமார், வீராத் கோலி, அமீர்கான், தீபிகா படுகோனே,ஹிருத்திக் ரோசன், சசின் தெண்டுல்கர் ஆகியோர…
-
- 0 replies
- 957 views
-
-
தண்ணீர் பிரச்சனை, இரண்டு ரஜினிகள், கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கம், அனுஷ்கா, சோனாக்ஷி என்று ஒன்றுக்கு இரண்டு தேவதைகள், ரஹ்மானின் இசை, ரத்னவேலின் ஒளிப்பதிவு... விசிலடிச்சே வாய் வலிக்கணும்டா என்ற வேண்டுதலுடன்தான் ரசிகர் கூட்டம் தியேட்டருக்குள் பாய்ந்தது. அந்த ஆர்வத்துக்கு படம் அணை போட்டதா இல்லை கரை உடைத்ததா? சோலையூரிலுள்ள அணைதான் படத்தின் மையம். கம்பீரமாக நிற்கும் அணையை, இடிகிற நிலையில் இருக்கு என்று பொய் சான்று தரச் சொல்கிறார் அவ்வூர் அரசியல்வாதி. அதிகாரி மறுக்க அவர் கொலை செய்யப்படுகிறார். அணையை முன்னிட்டு நடக்கும் அனைத்து அனர்த்தங்களுக்கும் மூடிக்கிடக்கும் கோயில்தான் காரணம், அதனை திறந்தால் அனைத்தும் சரியாகும் என்று கோயிலை திறக்கும் முயற்சியில் இறங்குகிறது ஊர். கோயி…
-
- 12 replies
- 1.6k views
-
-
சென்னை இங்கிலாந்தை சேர்ந்த ” ஈஸ்டர்ன் ஐ” வார பத்திரிகை ஒன்று ஆண்டு தோறும் ஆசியாவின் கவர்ச்சிகரமான ஆண்கள் மற்றும் பெண்கள்கொண்ட 50 பேரை தேர்ந்து எடுத்து வெளியிட்டு வருகிறது. இதில் கடந்த ஆண்டு கவர்சிகரமான பெண்கள் பட்டியலில் நடிகை காத்ரீனா கையூப் முதல் இடத்தில் இருந்தார். இந்த முறை அந்த இடத்தை 32 வயதான நடிகையும், பாடகியுமான பிரியங்கா சோப்ரா தட்டி பறித்து உள்ளார். புகழ் பெற்ற டிவி நடிகை தர்சிதி டாமி இரண்டாவது இடத்தில் உள்ளார். சானியா இரானி டிவி நடிகை 3-வது இடத்தில் உள்ளார். கடந்த முறை முதல் இடத்தை பிடித்த காத்ரீனா கையூப் இந்த முறை 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். மாதுரி தீட்ஷித் 28-வது இடத்தை பெற்று உள்ளார். குறிப்பாக பாலிவுட் நட்சத்திரங்கள் ,ஐஸ்வர்யா ராய் பச்சன் …
-
- 7 replies
- 1k views
-
-
அகி மியூசிக்... தமிழ் சினிமா இசைத் துறையில் கடந்த சில தினங்களாக இளையராஜாவை மோசடி செய்து, நீதிமன்ற தண்டனைக்கும் ஆளான ஒரு நிறுவனம். சட்டப்படி இந்த நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்த இளையராஜா, இனி அகி மியூசிக் தனது இசையை, பாடல்களை எந்த வடிவிலும் விற்கக் கூடாது என தடை பெற்றுள்ளார். ஆனால் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து இளையராஜா சிடிக்களை விற்பனை செய்து வந்த அகி, கிரி ட்ரேடிங் போன்ற நிறுவனங்களுக்கு எதிராக மீண்டும் இளையராஜா புகார் தர, சேலையூரில் உள்ள இந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தி, அங்கிருந்து இளையராஜாவின் இசை - பாடல் ஆல்பங்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கு முழுவதுமாக இளையராஜாவுக்கு சாதகமாக முடிந்துள்ள நிலையில், அகி மியூசிக் இப்போது இளைய…
-
- 1 reply
- 1.9k views
-
-
60 வயதில்.. என்னை டூயட் பாட வைத்தது, கடவுள் கொடுத்த தண்டனை. ரஜினி பேச்சு. ஹைதராபாத்: லிங்கா படத்தின் கதைக்கு நான்கு பேர் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதில் உண்மையில்லை. இந்தக் கதை பொன் குமரன் எழுதியது. மிகச் சிறந்த கதை. இதில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது," என்று ரஜினிகாந்த் கூறினார். ஹைதராபாதில் நடந்த லிங்கா படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் சுத்தத் தெலுங்கில் நகைச்சுவை ததும்பப் பேசியது அனைவரையும் மகிழ வைத்தது. அவரது பேச்சிலிருந்து... சமீபத்தில் நடந்த புயல் நிவாரண நிதி திரட்டும் கலை நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்திருந்தனர். ஆனால் அன்றைக்கு எனது குடும்பத்தில் முக்கிய திருமண நிகழ்ச்சி இருந்ததால் இங்கு வரமுடியவில்லை. ஆனால்…
-
- 14 replies
- 2.6k views
-
-
மதுரை: தன் கடந்த கால ஏழ்மையை மனதில் வைத்து, கூரை வீட்டில் வசித்த பெண்ணை, தன் மகனுக்கு மணம் முடித்தார், நடிகர் வடிவேலு.தமிழ் சினிமாவில், சிரிப்பு நடிகராக, கொடி கட்டிப் பறப்பவர், வடிவேலு. கடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.,விற்காக பிரசாரம் செய்து, எடுபடாமலும், சினிமாவில் ஓரங்கட்டப்பட்டாலும், இன்றும், தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை தக்க வைத்துள்ளார். சினிமா வாய்ப்பிற்கு முன், மதுரை விரகனூரில் வசித்த வடிவேலு, ஏழ்மையில் பல சிரமங்களை சந்தித்தவர். சினிமா மூலம் வசதியான வாழ்க்கை அமைந்த பிறகும், தன் சொந்த ஊர், உறவுகளுடனான தொடர்பில் அவர் விலகவில்லை. சில மாதங்களுக்கு முன், வடிவேலு மகள் திருமணம், அவரது சொந்த ஊரில் ஆடம்பரம் இன்றி நடந்தது. நேற்று, அவரது மகன் சுப்ரமணி திருமணம், மத…
-
- 8 replies
- 3k views
-
-
வன்னிப் போரின் இறுதி நாளை மையப்படுத்திய கதையுடன் படப்பிடிப்பை முடித்துவிட்டு. சட்ட ரீதியான அங்கீகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு. ஒரு முழுப்படம் செய்யக் கூடிய (என்னால்) சொந்தப் பணம் முழுதையும் அள்ளி இறைத்து விட்டு அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் இப்படி ஒரு கனவுப் படைப்போடு காத்திருக்கிறேன் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். குறிப்பு - போரின் வலி ஒரு தனி மனிதனை எந்தளவுக்கு பாதிக்கும் என்ற கருப் பொருளைக் கொண்ட எந்த அரசியலாளர்களையும் சார்ந்தோ/எதிர்த்தோ உருவாக்கப்படாத படைப்பாகும். போர் என்பது இந்த உலகத்தில் இருந்தே விரட்டப்பட வேண்டிய ஒன்றாகும். (இந்த வருட இறுதிக்குள்ளாவது வெளியிட நினைக்கும் இப்படைப்பு தொடர்பான விபரங்களை அறிய இப்பக்கத்துடன் இணைந்திருங்கள்) https://www.face…
-
- 1 reply
- 576 views
-
-
ஒரு நடிகரை, 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிடுவீங்க? பாரதிராஜா சாட்டையடி. சென்னை: நடிகனிடம் ஆஸ்கார் விருது எப்போது வாங்குவீர்கள் என்று ஊடகங்கள் கேட்பதை விட்டுவிட்டு, அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று ஏன் கேட்கிறீர்கள்... அரரசியலில் ஈடுபட நடிகனுக்கு என்ன தகுதி இருக்கிறது.. ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிட்டுகிட்டே இருப்பீங்க.. என்பது போல தடாலடியாக பேட்டியளித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா ஒரு வார இதழுக்கு தந்துள்ள பேட்டியின்போது, விஜயகாந்த், ரஜினி, விஜய் என நடிகர்கள் அரசியலுக்கு வர்றதுக்கு சினிமாதான் பாதையா? என்ற கேள்விக்கு பாரதிராஜா பதிலளித்துள்ளதாவது: இதுக்கு அடிப்படையான காரணம் யார் சொல்லுங்க? ஊடகம்தான். நடிகர்களைத் தூண்டிவிட்டு, 'அரசியலுக்கு …
-
- 5 replies
- 1.2k views
-
-
சிவதாச சுவாமிகள் (நாசர்) குருவாக இருக்கும் நாடக சபாவில் சிறுவர் களாகச் சேருகிறார்கள் காளியும் (சித்தார்த்) கோமதியும் (ப்ரித்விராஜ்). பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் தமிழ்ப் புராண நாடகங்களை மனப்பாடம் செய்து, கதாபாத்திரங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். பின்னாளில் இவர்கள் காளியப்ப பாகவதராகவும் கோமதி நாயகம் பிள்ளையாகவும் நாடக மேடையில் அடையாளம் காணப்படுகிறார்கள். இந்தக் குழுவில் பாட்டிலும் நடனத்திலும் சிறந்து விளங்கும் வடிவு (வேதிகா) வந்து சேர்கிறார். கோமதி இவள்பால் கவரப்படுகிறார். சித்தார்த் தனது நடிப்பில் பாரம்பரிய வழியைப் புதுமையாக வெளிப்படுத்துகிறார். இதனால் நாசருக்கு சித்தார்த்தை மிகவும் பிடித்துப்போகிறது. பாரம்பரிய முறையை மீறாத ப்ரித்விராஜ், நாசர் தன்னைத் திட்டமிட்டு…
-
- 1 reply
- 925 views
-