ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142936 topics in this forum
-
பூர்வீக குடிகள் கால் நீட்டி இருக்க முடியாதவாறு நாட்டை சூழ அந்நியர்- மஹிந்த இந்நாட்டின் பூர்வீக குடிகளான சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கால் நீட்டி இருக்க முடியாத அளவுக்கு எமது நாட்டைச் சூழவும் வெளிநாட்டவர்கள் ஆக்கிரமித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கடன் சுமையைக் காட்டி நாட்டு மக்களை ஏமாற்றி நாட்டின் முக்கிய தளங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் இந்தியாவுக்கு, திருகோணமலைத் துறைமுகம் இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுக்கும் விற்பனை செய்துள்ளது. இவ்வாறு இலங்கையைச் சுற்றியும் வெளிநாட்டவ…
-
- 1 reply
- 217 views
-
-
(எஸ்.கே) 200 ஆபாச படங்களைத் தயாரிப்பதற்கு பிரான்ஸ் நாட்டவரொருவருக்கு சிறுவர்களை வழங்கி இலட்சக் கணக்கில் பணம் பெற்றதாகக் கூறப்படும் வெளிநாட்டவருக்கு வழி காட்டியாக தொழில் புரியும் நபரொருவரை நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விசேட பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்த நபரின் வீட்டை வாடகைக்குப் பெற்று பிரான்ஸ் நாட்டவர் அந்த வீட்டில் சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளதாகவும் சிறுவர்களைப் பயன்படுத்தி ஆபாச திரைப்படங்களைத் தயாரித்து வந்துள்ளதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நடவடிக்கைகளில் ஈடு…
-
- 0 replies
- 317 views
-
-
இலங்கைக்கு இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் குடிமக்களுக்கு இந்தியா விடுத்துள்ள அறிவிப்பு By T. SARANYA 26 AUG, 2022 | 04:10 PM (நா.தனுஜா) இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதற்குத் திட்டமிடும் இந்தியப்பிரஜைகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தியிருக்கும் அந்நாட்டு அரசாங்கம், இலங்கைக்கு அத்தியாவசிய பயணங்களை மேற்கொள்வதற்கு முன்பாக நாணயமாற்று இயலுமை மற்றும் எரிபொருள் கிடைப்பனவு ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேடமாகக் கவனத்திற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. பாரிய பொருளாதார நெருக்கடியின் விளைவாகக் கடந்த சில மாதங்களாக நாட்டில் உணவு மற்றும் எரிபொருள் ஆகியவற்றுக்குத் தீவிர தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன் அதனையடுத்து நாட…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
இலங்கைக்கு எம்.பி.க்களை அனுப்ப சுப்பிரமணிய சுவாமி கடும் எதிர்ப்பு [19 - June - 2006] [Font Size - A - A - A] இலங்கையின் வட, கிழக்கு பகுதிகளில் காணப்படும் நிலைவரத்தை நேரடியாக கண்டறிவதற்காக இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள வேண்டுகோளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சுப்பிரமணிய சுவாமி, ஒரு நாட்டின் அழைப்பு இல்லாமல் அந்த நாட்டிற்கு பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவை அனுப்ப முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். சமஷ்டி தீர்வொன்றை சிங்கள பெரும்பான்மையினர் எதிர்த்து வருவதாலேயே…
-
- 1 reply
- 1.2k views
-
-
சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சித்த கிராமசேவையாளர் தாக்குதலுக்கு உள்ளானார் நவ 1, 2010 மட்டக்களப்பில் தமிழர்களின் காணிகளை அத்துமீறி ஆக்கிரமித்த முஸ்லிம்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சித்த கிராமசேவையாளர் ஒருவர் பொலிசாரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். நேற்றைய தினம் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தளவாய் கிராமத்தில் கிராமசேவையாளராக கடமையாற்றுகின்ற திரு.ஜெகநாதன் என்பவர் தனது கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கு சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் சுபைகிர் தர்பிக் நாகூர் இஸ்மாயில் என்பவரா கடுமையாகத் தாக்கியுள்ளார். அத்துடன், கிராமசேவையாளரிடமிருந்த காணி சம்பந்தமான ஆவணங்களும் கிழித்தெறியப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளான க…
-
- 1 reply
- 724 views
-
-
தமிழீழத் தேசியக் கொடி விழிப்பு நிகழ்வு பதிந்தவர்: ஈழப்பிரியா ஞாயிறு, 7 நவம்பர், 2010 ரொரன்ரோ பல்கலைக்கழகத்தின் மிஸ்ஸிசாகா வளாகம் தனது முதலாவது தமிழ் அடையாள பரப்புரைப் போராட்டத்தை கடந்த வியாழன் கார்த்திகை 4ம் நாள் முன்னெடுத்தது. அதேவேளை தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் உயிர்நீத்த எமது மாவீரர்களை கௌரவிக்கும்முகமாகவும் அவர்களின் தியாகங்களை எண்ணிப்பார்க்கும்முகமாகவும் கார்த்திகை மாதத்தை நினைவுகூரும் மாதமாக அறிவித்துள்ளது. தேசியக்கொடி வாரமான முதலாவது வாரத்தில், பல்கலைக்கழகத்தின் தெற்குக் கட்டிடத்தில் உள்ள நடைபாதையில் தகவல்சாவடி ஒன்று அமைத்து அந்த வழியே செல்லும் தமிழ் மாணவர்களுக்கும் வேற்றினத்தைச் சோ்ந்த மாணவர்களுக்கும் தமிழீழத் தேசியக்கொடியின் அர்த்தம் மற்றும் அதன் மு…
-
- 0 replies
- 756 views
-
-
"எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் எதுவித தீர்மானங்களோ, இணக்கப்பாடோ எட்டப்படவில்லை" உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை பெற்றுக்கொள்ளல் அல்லது அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அத்தகைய எதுவித தீர்மானங்களோ அல்லது இணக்கப்பாடோ எட்டப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையே எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே அதில் எது வித உண்மையும் இல்லையென குறிப்பிட்டே ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட…
-
- 0 replies
- 198 views
-
-
சீனாவின், பங்களிப்பு இல்லாமல்... கடன் மறுசீரமைப்பு செய்யமுடியாது – ரொய்ட்டர்ஸ். சீனாவின் பங்களிப்பு இல்லாமல் நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை கடினமாக இருக்கும் என்று ஜப்பானிய அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்களை பெறுவதற்கு இலங்கைக்கு சவாலாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின்படி, உலக நிதி மேலாளர்களால் இந்த நாட்டில் உள்ள சர்வதேச பத்திரங்களின் அளவு 20 பில்லியன் டொலர்களுக்கு அருகில் உள்ளது. இந்த நாட்டில் வெளிநாட்டுக் கடன் தொகை 85 மு…
-
- 0 replies
- 209 views
-
-
எமது மக்களின் இயல்பான வாழ்விற்கு விரைவில் அரசியல் தீர்வு காணப்படும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற ஏ9 பாதை அகலமாக்கல் மற்றும் புனரமைப்பு அபிவிருத்தி திட்டத்துக்கான தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், புனரமைப்புப் பணிகளின் போது உள்ளுர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்பதுடன் அடுத்த நேரம் என்ன நடக்கும் என்ற நிலைமாறி இன்று நம்பிக்கையான வாழ்வைக் கிடைக்கச் செய்த ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளதாகவும், எமது சமூகம் எதிர்காலத்தில் வளமான தேசத்…
-
- 1 reply
- 625 views
-
-
தேனகத்தைப் பார்வையிட கண்காணிப்புக் குழு மறுப்பு [ஞாயிற்றுக்கிழமை, 30 யூலை 2006, 00:16 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா விமானக் குண்டு வீச்சுக்குள்ளான தமிழீழ விடுதலைப் புலிகளின் தேனகம் மாநாட்டுச் செயலகத்தைப் பார்வையிட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் மறுத்துவிட்டனர். கரடியனாறு தேனகம் செயலகம் மீது சனிக்கிழமை சிங்கள விமானப் படையினர் நடத்திய விமான குண்டு வீச்சில் 8 போராளிகள் வீரச்சாவைத் தழுவினர். இந்நிலையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக சம்பவ இடத்தைத் தங்களால் பார்வையிட முடியாது என்று மட்டக்களப்பு கண்காணிப்புக் குழுவின் தலைவரான ராஸ்க்(பின்லாந்து), மட்டக்களப்பு அரசியல்துறை பொறுப்பாளர் தயா மோகனிடம் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் வெள்ளிக்கிழமையன்று இலங…
-
- 0 replies
- 844 views
-
-
மஹிந்தவின் அமைச்சரவைக்குள் முரண்பாடு மறுசீரமைப்பு பிற்போடப்பட்டது. வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, நவம்பர் 21, 2010 மஹிந்தவின் அமைச்சரவைக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அமைச்சரவை மறுசீரமைப்பு பிற்போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த பிளவுகள் மூன்றுவகையாக ஏற்பட்டுள்ளன. முதலாவது மஹிந்தவின் மனைவி மற்றும் நகன் நாமலின் செல்வாக்கு. இரண்டாவது சுதந்திரகட்சியின் மூத்த உறுப்பினர்கள். அடுத்ததாக எதிரணியில் இருந்து கட்சி தாவிய எம்.பி. க்கள் இவர்கள் குழுவாக செயற்படும் நிலை மஹிந்தவிற்கு தலையிடியினை தோற்றுவித்துள்ளது. இதனால் எல்லா எம். பி. க்களுக்கும் அமைச்சு பதவிகளை உருவாக்க வேண்டிய நிலையில் மஹிந்த உள்ளாராம். ஈழநாடு
-
- 0 replies
- 621 views
-
-
http://www.nitharsanam.com/?art=19959
-
- 4 replies
- 1.7k views
-
-
வடக்கில் யுத்தத்தினால் பெற்றோரை இழந்த 1746 பிள்ளைகளில் 1551 பேர் மாணவர்களாவர் : அரசாங்கம் வீரகேசரி நாளேடு 11/27/2010 9:35:58 AM யுத்தத்தினால் வடக்கில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் 1746 பேர் உள்ளனர். அவர்களில் 1551 பேர் பாடசாலை மாணவர்கள் என அரசாங்கம் தெரிவித்தது. பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது அனுரகுமார திஸாநாயக்க கேட்டிருந்த கேள்விகளுக்கான பதிலை ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சபைக்கு ஆற்றுப்படுத்திய பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய்மூல கேள்வி நேரத்தில் அனுரகுமார திஸாநாயக்க மீள்குடியேற்ற அமைச்சரிடம் வடக்கு பிரதேசத்திலுள்ள யுத்தத்தினால் பெற்றோர…
-
- 0 replies
- 362 views
-
-
கவலைப்படாத தம்பி.... நான் இருக்கிறன்...
-
- 4 replies
- 429 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரித்தானிய விஜயத்தின் போது ஏற்படக்கூடிய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக மதிப்பீடு செய்து, அதை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதற்கு லண்டனிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகரலாலயம் தவறிவிட்டது என அமைச்சர் விமல் வீரவன்ஸ குறை கூறியுள்ளார். ஜனாதிபதியை இலங்கை உயர் ஸ்தானகராலயம் எச்சரிக்கத் தவறிவிட்டதா எனக் கேட்டபோது அவர்கள் தமது கடமையை முறையாக செய்யத் தவறிவிட்டனர் என அமைச்சர் விமல் வீரவன்ஸ பதிலளித்துள்ளர். http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/12304-2010-12-02-14-27-02.html 'ஜனாதிபதியின் உரை இரத்தானதில் பிரித்தானிய அரசுக்கு தொடர்பில்லை' ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒக்ஸ்போர்ட் யூனியன் உரை நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டதில் தனக்க…
-
- 8 replies
- 1.5k views
-
-
கொக்குவில் பிரம்படி வீதியில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்! கொக்குவில் பிரம்படி வீதியில் உள்ள வீட்டின் மீது சற்று முன்னர் பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்..... இன்று(04-03-2018) கொக்குவில் பிரம்படி பகுதிக்கு சென்ற 7 பேர் கொண்ட குழுவினர் அங்குள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து ஒரு நபரை விசாரித்துள்ளனர். அவர் அங்கு இல்லை என வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்த போது, வீட்டின் மீது பெற்றோல் குண்டை வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்…
-
- 0 replies
- 253 views
-
-
இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு காயமடைந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனிடம் அந்த காயங்களை அவர் சுயமாகவே ஏற்படுத்திக் கொண்டார் என மிரட்டி வாக்குமூலம் பெறும் முயற்சியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினர் மிரட்டி வாக்குமூலம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்கப்பட்டதாலேயே காயம் ஏற்பட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மிரட்டி வாக்குமூலம் பெறும் முயற்சி இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பல்கலைக்கழகத்திலேயே தங்கியுள்ளனர் எனவும் பல தமிழ்மாணவர்களை விசாரித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது …
-
- 0 replies
- 220 views
-
-
கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறிலங்காவுக்கு ஜப்பானிய கடற்படை உதவும் சிறிலங்காவின் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, ஜப்பானிய கடற்படை முழுமையான ஆதரவை வழங்கும் என்று ஜப்பானிய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி அட்மிரல் கட்சுரோஷி கவானா, உறுதியளித்துள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அட்மிரல் கட்சுரோஷி கவானா நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே இந்த உறுதிமொழியை வழங்கினார். சிறிலங்கா அதிபரின் வதிவிடத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் சிறிலங்கா கடற்படையினருக்கு ஜப்பானில் பயிற்சி வாய்ப்புகளை அதிகரிக்குமாறு சிறிலங்கா அதிபர்…
-
- 0 replies
- 312 views
-
-
விமானப்படை,ஆட்லறி சூட்டாதரவு..டாங்கிகளின் பாதுகாப்பு..சூட்டாதரவு..பல்கு
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற வெறித்தனமே தனிச் சிங்கள தேசிய கீதம் - கனேடிய இணையத்தளம் கருத்து..! [ பிரசுரித்த திகதி : 2010-12-13 05:34:19 AM GMT ] இலங்கையின் தேசிய கீதம் தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளமை, சிறுபான்மை மக்களான தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற பெரும்பான்மை அரசாங்கத்தின் வெறித்தனம் என கனேடிய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. அத்துடன், ஜனநாயக இலங்கையில், பெரும்பான்மை மக்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே பிரித்தானியாவில் பல்வேறு அவமானங்களின் பின்னர், இலங்கை வந்து நடத்திய முதலாவது அமைச்சரவை மாநாட்டின்போது இந்த தீர்மானத்தை…
-
- 0 replies
- 348 views
-
-
கரவெட்டிப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 20 குளங்களை ஆழமாக்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில் கரணவாய் தெற்கு கிராம சேவகர் பிரிவில் - முதலைக்குளம், ஆண்டியப்புக்குளம், மத்தொனியில் - சண்டியகுளம், கரவெட்டி கிழக்கு கிராம சேவகர் பிரிவில் - மருதடிக்குளம் கட்டைவேலிப் பிரிவில் தில்லைக்குளம், - தல்லையப்புலம் மற்றும் கரண்டாதூகுளம் என்பனவும் - துன்னாலை கிழக்குப் பிரிவில் - கொடிக்கட்டுக்குளம், சம்பந்தர் வளவுக்குளம் மற்றும் குடவத்தைக்குளம் என்பனவும், அல்வாய் கிழக்கில் - மாயக்கைக்குளம், கப்புதூவில் - சினப்பிட்டிக்குளம், கரம்பன்குளம், அந்தணத் திடலில் - நெடுங்கிராய்க்குளம், இலந்தைத்தாழ்வுக்குளம் ஆகியனவுமே ஆழமாக்கப்படவுள்ளன என்று கரவெட்டிப் பிரதேச செயலர் எஸ்.சிவசிற…
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழ் மக்கள் தாங்களாக முன்வந்து நடத்தும் போராட்டத்தைத் தவிர்த்து செயற்கைப் போராட்டம் நடத்தத் தூண்டப்படுகிறார்கள். இத்தனைக்கும் பின்புகூட அரசியல் தீர்வைக் காப்பதில் இன்றய அரசாங்கம் அக்கறை செலுத்துவதாய்த் தெரியவில்லை. ஆட்சிக்கு வரும் பெருங் கட்சிகளையும் சேர்ந்த இரு பெருந் தலைவர்களின் கூற்றுகளையே நான் மேற்கோளாய்க் காட்டியுள்ளேன்.அப்படி நீங்கள் கூறிய குறைந்த பட்சத் தீர்விலிருந்து விலகிச் செல்வது எப்படி நீதியாக முடியும்? தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. என்பதற்கான சாட்சிகளாய் மேற்கூறிய இரு முக்கி தலைவர்களின் கூற்றுகளே அமைந்துள்ளன. தமிழ்பேசும் மக்களின் தனித்துவத்தை அழிக்க அரசு திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது. தமிழ் மக்களினதும்,முஸ்லிம் மக்களினது…
-
- 0 replies
- 591 views
-
-
மோசடியான முறையில் பிரித்தானிய வீசா பெற்றுக்கொள்ள முயற்சித்த இலங்கைப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 42 வயதான பெண்ணும், வயதுக்கு வந்த அவரது இரண்டு புதல்விகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து வீசாவிற்காக விண்ணப்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 2005ம் ஆண்டில் வேறும் பெயர்கள் மற்றும் பிறந்த திகதிகளைப் பயன்படுத்தி இவர்கள் பிரித்தானிய வீசாவிற்காக விண்ணப்பித்துள்ளனர். குறித்த மூன்று பேரினதும் வீசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் பத்தாண்டு காலம் பிரித்தானியாவிற்கு பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக குறித்த மோசடியில் ஈடுபட்ட ப…
-
- 0 replies
- 250 views
-
-
முகப்புத்தகத்தில் இனஒற்றுமையை சிதைக்கும் கருத்துக்களை பதிவிட்ட முன்னாள் இராணுவ வீரருக்கு விளக்கமறியல் முகப்புத்தகத்தில் இனஒற்றுமையை சிதைக்கும் வகையிலான கருத்துக்களை பதிவிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கம்பஹாவைச் சேர்ந்த 28 வயதுடைய குறித்த சந்தேகநபர் இன்று குற்ற விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்பட்ட போது சந்தேகநபருக்கு எதிரான விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான குறித்த சந்தேநபரை எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 175 views
-
-
Wednesday, December 22nd, 2010 | Posted by admin சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு நடந்தது என்ன? விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எந்தவொரு கட்டத்திலும் புத்துயிர் கொடுக்க யாரும் உயிரோடு இருக்கக் கூடாது- இது தான் போரின் இறுதிக் கட்டத்தில் சிங்களத் தலைமையின் அடிப்படை நோக்கமாக இருந்துள்ளது. கடந்த காலங்களில் சிறிலங்கா இரண்டு முறை ஜேவிபியின் ஆயுதக் கிளர்ச்சிகளைத் தோற்கடித்த பாடத்தைக் கற்றுக் கொண்டிருந்தது. எச்சமாக விடப்பட்ட ஜேவிபியினரால் அரசாங்கங்களுக்குத் தலைவலியே மிஞ்சியது. எனவே அது போன்றதொரு நெருடிக்கடி புலிகளால் எதிர்காலத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் சிங்கள அரசு உறுதியாக இருந்தது. இராணுவ ரீதியாகப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்…
-
- 0 replies
- 1.4k views
-