ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
ரஷ்ய அதிபர் தேர்தலைக் கண்காணிக்க மொஸ்கோ செல்கிறார் நாமல் ரஷ்யாவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் வரும் மார்ச் 18ஆம் நாள் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை சுதந்திரமான கண்காணிப்பாளராக கண்காணிப்பதற்கு வருமாறு நாமல் ராஜபக்சவுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று, நாமல் ராஜபக்ச இன்று ரஷ்யாவுக்குப் புறப்படவுள்ளார். http://www.puthinappalakai.net/2018/03/15/news/29802
-
- 0 replies
- 132 views
-
-
மே 2009-இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நான்காம் கட்ட ஈழம்போரின்போது கட்டவிழ்த்துவிடப்பட்ட போர்க்குற்றவியல் சம்பவங்களில் யார் யார் ஈடுபட்டார்கள் என்கிற பெயர் பட்டியல் வெளிவரத் தொடங்கிவிட்டது. அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்ட படையதிரிகாரிகள் மற்றும் கட்டளையிட்ட அரச அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலே வெளிவரத் தொடங்கியுள்ளது. இன்னும் பல படையதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பெயர் விபரங்களும் வெகுவிரைவில் வெளிவரும் என்கின்றனர் தகவலறிந்த வட்டாரங்கள். புலிகளுக்கு எதிராக சண்டை செய்வதாக கூறி பல்லாயிரம் பொதுமக்களைக் கொன்றும் மேலும் பல மனிதப் பேரவலங்களுக்கு காரணமான சூத்திரதாரிகளை விசாரணை செய்து, அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னாள் நிறுத்தப்பட வேண்டும் என்கிற வேண்டுகோள் முன்ன…
-
- 1 reply
- 784 views
-
-
புத்தசாசனத்தை பாதுகாப்பதற்காக வீதியில் இறங்கி போராட தயார் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க தயாராகி வரும் பௌத்த விகாரை மற்றும் ஆலயங்கள் தொடர்பான சட்டமூலத்தினால் பௌத்த சாசனத்திற்கு எந்த நன்மையுமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உத்தேச இந்த சட்டமூலம் தொடர்பில் கோட்டே நாக விகாரையில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மாநாயக்க தேரர்கள் முன்வைத்துள்ள திருத்த யோசனைகளை உள்ளடக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் கட்சி என்ற வகையில் பௌத்த சாசனத்தை பாதுகாக்க நாம் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். …
-
- 1 reply
- 315 views
-
-
-கனகரத்தினம் கனகராஜ் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்றத்தின் பின்னர் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.குருபரன் செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தார். 2010ஆம் ஆண்டு மீள்குடியேறுவதற்கு அனுமதியளிக்கப்பட்ட பின்னர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் 5,600 வரையிலான குடும்பங்கள் மீளக்குடியமர்ந்தனர். இதன் பின்னர், மக்களுக்குத் தேவையான குடிநீர், மலசலகூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் பொதுநோக்கு மண்டபம், முன்பள்ளி உள்ளிட்ட சமூக தேவைகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், பிரதேச செயலக பிரிவில் 111 குழாய்க் கிணறுகள் புதிததாக அமைக்கப்பட்டுள்ளதுடன், 23 பழைய குழாய்க் கிணறுகள் திருத்தம் செய்யப்பட்டன. மேலும்,…
-
- 1 reply
- 480 views
-
-
இன்றுடன் ஓய்வு பெறுகிறார் நவநீதம்பிள்ளை! [sunday 2014-08-31 08:00] ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து நவநீதம்பிள்ளை இன்றுடன் ஓய்வுபெறவுள்ளார். இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக ஐ.நா மனித உரிமை ஆணையாளராகப் பணியாற்றி வந்தார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் நவநீதம்பிள்ளை, சர்வதேச அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதானியாக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நன்றி - செய்தியிணையம்
-
- 9 replies
- 823 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழு : சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத் தன்மைக்கு அவமானம் - பேராயர் By DIGITAL DESK 5 08 NOV, 2022 | 03:39 PM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் , சட்டமா அதிபர் திணைக்களமானது அரச அதிகாரிகள் தேவைக்கு ஏற்ப செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இது சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீன தன்மைக்கு அவமானமாகும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் ஏனைய தொகுதிகளையும் ம…
-
- 1 reply
- 203 views
- 1 follower
-
-
ரொறன்ரோவில் தமிழ் இளைஞர்கத்தியால் குத்திப் படுகொலை. ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 24 செப்ரெம்பர் 2006 ஸ ஜ யோகராஜன் ஸ வடமராட்சி, குடத்தனை, அம்பன் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கனடாவிலுள்ள ரொறென்ரோ நகரில் வைத்து இனந்தெரியாதோரால் வழிமறித்து கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 17ஆம் திகதி காலையில் நடைபெற்ற இச்சம்பவத்தில் தர்மகுல சிங்கம் பிரதீப்(வயது 25) என்ற இளை ஞரே இவ்வாறு கொலை செய்யப்பட் டுள்ளார்.தனது பெற்றோருடன் 5 வயதில் கனடாவில் குடியேறிய இவர் சம்பவ தினத்தன்று தனது காரில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது இனந் தெரியாதோரால் வழிமறிக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு கொலை செய் யப்பட்டுள்ளதாக அங்கிருந்து உறவின ருக்குக் கிடைத்த தகவலில் தெரிவிக்கப் பட்டது …
-
- 0 replies
- 1.1k views
-
-
Jan 4, 2011 / பகுதி: செய்தி / பாதுகாப்பு அமைச்சின் காணியில் ஹொங்கொங் 7 நட்சத்திர விடுதி சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் காணியை ஹொங்கொங் நிறுவனம் ஒன்றிற்கு 7 நட்சத்திர விடுதி கட்டுவதற்கு சிறீலங்கா அரசாங்கம் விற்பனை செய்துள்ளமை தெரிய வந்துள்ளது. கொழும்பு காலிமுகத்திடலிற்கு அருகிலுள்ள 7 ஏக்கர் காணியே இவ்வாறு விற்பனை செய்வதற்கு கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருப்பதுடன், இதனை சிறீலங்கா சுற்றுலா அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் நாலக கொடஹேவவும் உறுதி செய்திருக்கின்றார். ஹொங்கொங்கின் சங்ரி-லா (Shangri-La Hotels and Resorts) விடுதி நிறுவனம் இந்தக் காணியைப் பெற்றுக்கொள்ள இருப்பதுடன், இந்த வருடம் அந்தக் காணியில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 7 நட்சத்த…
-
- 0 replies
- 846 views
-
-
பருத்தித்துறையில் 13 இளைஞர்கள் கைது! சட்டவிரோதமாக கூட்டம் கூடியமை , சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 13 இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை , பாவனைகள் மற்றும் போதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் போன்ற அநாகரிக செயற்பாடுகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் , பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளை முன்னெடுத்த போது , வீதிகளில் அநாவசியமாக கூட்டம் கூடி நின்றமை , சந்தேகத்திற்கு இடமா…
-
- 0 replies
- 199 views
-
-
பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள சிறீலங்காப் படைகள் தயாராகியுள்ளது. சிறீலங்காவின் ஆக்கிரமிப்புப் படைகள் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன. யாழ் குடாநாட்டின் தென்முனையில் உள்ள சிறீலங்காவின் ஆக்கிரமிப்புப் படைகள் கிளாலி, முகமாலை மற்றும் நாகர்கோவில் பகுதிகள் ஊடான பெரும் படையெடுப்பை முன்னெடுக்க தாயாராகி வருவதாக போர் முனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு கட்டமாக கடந்த இரு நாட்களாக பூநகரி, முகமாலை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் சிறீலங்காப் படையினரின் வலிந்த வான்வெளித் தாக்குதகள் மற்றும் எறிகணைத் தாக்குதகள் பெருமெடுப்பில் நடத்தப்படுகின்றன. கிளாலி, முகமாலை மற்றும் நாகர்கோவில் ஊடாகவும் மும்முனை இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள…
-
- 0 replies
- 1.3k views
-
-
விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பலைக் கண்காணிப்புக் குழு காப்பாற்றியது! விக்கிலீக்ஸ் அதிரடித் தகவல் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-10 08:57:20| யாழ்ப்பாணம்] விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றுக்குச் சரியான நேரத்தில் தகவல்களை வழங்கிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அதனை இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இருந்து காப்பாற்றியுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் அதிரடித் தகவல் வெளியிட்டுள்ளது. வடகிழக்கு கடற்பகுதியில் பயணித்த விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றை இலங்கைக் கடற்படையினர் தாக்க முனைந்த சமயம் விடுதலைப்புலிகளுக்குச் சரியான சமயத்தில் தகவல்களைக் கொடுத்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு காப்பாற்றியதாக 2003ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 23 ஆம் திகதி அனுப்பப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
-யோ.வித்தியா யாழ்ப்பாணம் முகாமையாளர் மன்றத்தின் ஏற்பாட்டில், வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர், கழிவகற்றல் தொடர்பிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் யாழ்.பொது நூலகத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்றது. யாழ்.பல்கலைக்கழக சிவில் பொறியியல்துறை தலைவர் எஸ்.சிவகுமார் மற்றும் சமூக மருத்துவத்துறை தலைவர் ஆர்.சுந்தரகுமரன் ஆகியோர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த கருத்தரங்கில், நீரின் முக்கியத்துவம், சுகாதாரமற்ற நீரால் பரவும் நோய்கள், நிலத்தடி நீரின் பயன்பாடு, நீரை பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. மேலும் 'நீரால் ஏற்படும் நோய்கள், அதிகமாக விவசாயிகளையே பாதிக்கின்றன. அதற்கு காரணம் விவசாயிக…
-
- 0 replies
- 227 views
-
-
இடி, மின்னலுடன் மழை : பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.! நாட்டில் மாலை வேளைகளில் பல பிர தேசங்களிலும் பெய்துவரும் மழையுடனான கால நிலை எதிர்வரும் 16ஆம் திகதிவரை தொடரும் சாத்தியம் இருப்பதாக வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்போது இடியுடன்கூடிய மழை பெய்யும்போது பாரிய மின்னலுடன் மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 வரையான வேகத்தில் காற்று வீசும் அபாயம் இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய தினம் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் கிழக்கு, ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் காலை வேளையில் மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அத்து…
-
- 0 replies
- 163 views
-
-
2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை By DIGITAL DESK 2 07 DEC, 2022 | 04:04 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு வியாழக்கிழமை (டிச. 08) மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் 2023ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்துக்கு முன்வைத்தார். அதன் பிரகாரம் 2023 ஆம் ஆண்…
-
- 1 reply
- 343 views
- 1 follower
-
-
1983 ஜூலைக் கலவரத்துக்குப் பிற்பட்ட காலத்தில் ஈழப் பிரச்சினையைக் கையாள்வதில் இரண்டு விதமான நிலைமைகளைக் கவனத்திற்கொள்ள வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்தது. இவை தொடர்பாக கடந்த வாரம் விரிவாகப் பார்த்திருந்தோம். அவையாவன: 1. ஈழப் போராளி அமைப்புக்கள் தமிழகத்திலுள்ள தமது ஆதரவுச் சக்திகளின் உதவியுடன் தமிழகத்தில் ஆயுதப் பயிற்சி முகாம்களை அமைத்துச் செயற்படத் தொடங்கியிருந்தன. இவற்றை மூடிவிடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்திருந்தன. 2. மேற்குலகுக்கு ஆதரவான வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடித்த இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன இலங்கையில் அமெரிக்கா தளம் அமைப்பதற்கான நிலைமைகளை ஏற்படுத்தியிருந்தார். இது தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்ற கருத்து இந்தியாவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
கூட்டமைப்பைத் தீடீரென ஆதரித்த கூட்டணி!! கூட்டமைப்பைத் தீடீரென ஆதரித்த கூட்டணி!! துணுக்காய் பிரதேச சபையின் ஆட்சியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றுவதற்கு, தமிழர் விடுதலைக் கூட்டணி கைகொடுத்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 6 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 3 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு 2 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் க…
-
- 0 replies
- 428 views
-
-
சுவிசில் சமாதானப் பேச்சு, உக்கிரேனில் யுத்த தளபாடப் பேச்சு சனிக்கிழமை, 28 ஒக்ரேபர் 2006கிருஷ்ணப்பிள்ளை சுவிசில் சமாதானப் பேச்சுகளில் பங்குபற்ற என்று கூறிக்கொண்டு இலங்கை அரசு குழுவொன்று சென்றுள்ள நேரம், இலங்கை இராணுவ மற்றும் விமானப்படையின் குழுக்கள் உக்கிரேன் நாட்டின் தலைநகரான கீவ் பகுதியில் உள்ள விசேட உல்லாச விடுதி ஒன்றில் தங்கியள்ளதாகவும், சுமார் 15 எம்.ஜ27 தரத்திலான உலங்கு வானூர்திகள் மற்றும் பாரிய யுத்த தளபாடங்களை கொள்வனவு செய்வதற்குரிய ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுவருவதாக அறியமுடிகிறது. சமாதானம் என்ற போலியான நாடகத்தை சுவிசில் ஆடிவரும் இலங்கை அரசு, உக்கிரேன் நாட்டில் தனது யுத்த தளபாடக் கொள்வனவை இதே காலப்பகுதியில் செய்ய முயற்சிப்பது, இலங்கை அரசின் எதிர்கால நோக்கத்…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை பணயக் கைதியாக வைத்து, தடுத்து வைக்கப்பட்டிருந்த தம் இயக்கத்தை சேர்ந்தவர்களை விடுவிப்பதை நோக்காகக் கொண்டே 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தியதாக, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த லக்ஷ்ர்-இ-ஜங்வி இயக்க உறுப்பினரான அப்துல் வகாப் தெரிவித்துள்ளார். மேலும், குறித்த தாக்குதலுக்கான திட்டம் வொஸ்ரிஸ்டனில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் ஜியோ செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு என மோட்டார் சைக்கிள் சிலவும் கொள்ளவனவு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி மீது பாகிஸ்தானில் மேற்கொண்ட தாக்குதலிற்கு விடுதலைப்புலிகளே பொறுப்பு என இந்த…
-
- 0 replies
- 627 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சயித் அல் ஹுசேன் - இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகிய இருவருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு எவ்விதத்திலும் இடமளிக்கப் போவதில்லையென இச்சந்திப்பின் போது அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐ.நா. ஆணையாளருக்கு உறுதியாகக் கூறவுள்ளார் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. காணமல்போனவர்கள் பற்றிய விசாரணைகளை நடத்த மக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழுவுக்கு அப்பால் விசாரணை நடத்த வெளியார் எவருக்கும் இடமளிக்கப் போவதில…
-
- 0 replies
- 407 views
-
-
சில பக்கங்களை காணோம், ஆதாரங்கள் மறைப்பு, விசாரணையாளர்களுக்கு மிரட்டல்… ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை மற்றும் ஊடகவியலாளர்கள் கடத்தல், தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் காவற்துறை அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக காவற்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விசாரணைகளை தொடர்ந்து துரிதமாக முன்னெடுக்கவும், விசாரணை அதிகாரிகளுக்கு முழு பாதுகாப்பு வழங்கவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியும் பிரதமரும் பணித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களுடன் தொடர்புள்ள வழக்குகள் பல வருடங்களின் பின்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் விசாரணையுடன்…
-
- 0 replies
- 269 views
-
-
சிறையில் உள்ள முன்னாள் போராளிகள் 31 பேரை விடுதலை செய்ய வேண்டும் – சம்பிக்க! தற்போது சிறைச்சாலையில் உள்ள முன்னாள் போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் என 43ஆவது படையணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி தலைவர்களுடனான மாநாடு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். சர்வகட்சி தலைவர்கள் மாநாட்டில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுக்கப்பட வேண்டும், சிறைச்சாலைகளில் உள்ள முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமலாக்கப்பட்டோர் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் இந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண…
-
- 2 replies
- 719 views
-
-
பயங்கரவாதத்தை வெற்றிகரமாக ஒழிப்பது தொடர்பில் இலங்கை இராணுவத்தினர் பெற்றுக்கொண்ட அனுபவம் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கும் முதலாவது கருத்தரங்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி முதல் மூன்று தினங்களுக்கு கொழும்பில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது. சுமார் 54 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், வாண்மையாளர்கள், புலமையாளர்கள், கலந்துகொள்ளவுள்ள இந்த கருத்தரங்கில் புது டில்லியிலிருந்து சுமார் 30 பாதுகாப்பு உயரதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். இராணுவ தலைமையகத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரைய…
-
- 1 reply
- 467 views
-
-
சிறிலங்காவில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்கு மேற்கொள்ளும் விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. 27வது மனித உரிமைகள் மாநாட்டில் உரையாற்றிய உதவி மனித உரிமைகள் ஆணையாளர் ஃப்ளேவியா பென்செய்ரீ இதனைத் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழு சாட்சி பதிவுகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ளும் போது தரமான மொழிப் பெயர்ப்பாளர்களை கொண்டிருப்பதில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் சாட்சி வழங்குகின்றவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும், அவர்களுக்கான ஆலோசனைகள் தொடர்பிலும் இந்த ஆணைக்குழு திருப்திகரமாக செயற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஆதேநேரம் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்…
-
- 0 replies
- 274 views
-
-
உதயனின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்துக்கான ‘வேட்கை’ – UPDATE உதயனின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்துக்கான ‘வேட்கை’ – UPDATE உதயன் பத்திரிகையின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்துக்கான “வேட்கை” நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலையான உதயன் பத்திரிகை நிறுவனம் மீதான தாக்குதல் நடந்த மே 2 ஆம் திகதி, ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி பன்னாட்டு ஊடக சுதந்திர தினம் இன்று யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழ்வு 10 மணிக்கு ஈழநாதம் பத்திர…
-
- 3 replies
- 646 views
-
-
http://www.dailymotion.com/video/xgtr2z_yyyyyy-yyyyyyy-yyyyyyy-yyyyyyyyyyyyyyyy-yyyyy-yyyyyyyy-yyyyy_news#from=embed
-
- 6 replies
- 1.6k views
-