Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொரோனா பீதி : யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் முடக்கம் யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தின் தொழிநுட்ப பீடத்தில் கல்வி பயிலும் தென்னிலங்கையை சேர்ந்த மாணவியின் சகோதரன் ஒருவர் கந்தக்காடு கொரோனா வைத்தியசாலைக்கு பணி நிமிர்த்தம் சென்று வந்ததன் பின்னர் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டயறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று குறித்த மாணவி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அறிவியல்நகர் வளாகம் முடக்கப்பட்டுள்ளது. எவரும் வெளியேறாது தடுக்கப்பட்டுள்ளனர். மாணவியிடம் பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படைய…

  2. தமிழர்களின் அடையாளங்களை காப்பாற்ற, இந்தியாவின் பங்களிப்பு அவசியம்..!- சத்தியலிங்கம் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் எமது இனத்தின் அடையாளங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு இந்தியாவின் காத்திரமான பங்களிப்பு அவசியம் என முன்னாள் வட.மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் தமிழர்களின் தாயகத்தில் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மேலும் தீவிரமடைவதற்கா…

  3. பிரிவினைவாதம் மீண்டும் பயங்கரவாதமாக தலைதூக்க முயற்சி - அடியோடு அழிப்போம் என்கிறார் பாதுகாப்பு செயலாளர் (ஆர்.யசி) நாட்டில் பயங்கரவாதிகளின் ஆயுதம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தாலும் கூட பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாது போய்விட்டது. இந்த பிரிவினைவாதம் மீண்டும் பயங்கரவாதமாக தலைதூக்க முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது எனவும் அவ்வாறன அடிப்படைவாதிகளின் முயற்சிகளை ஆரம்பத்திலேயே இல்லது செய்வோம் எனவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூறுகின்றார். கொக்காவில் போரின் 30 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இதன் போதே பாதுகாப்பு செயலாளர் இதனைக் கூறினார். அவர் மே…

  4. எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து..! தேசிய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை, 16 பேர் கொண்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பு.. தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து என தேசிய புலனாய்வு பிரிவு வழங்கிய எச்சரிக்கைக்கு அமைவாக அவருக்கான விசேட அதிரடிப்படை பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் போராளிகள் சிலர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதன் காரணமாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சுமந்திரனுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்…

    • 26 replies
    • 3.1k views
  5. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போலி அரசியலையே நடத்திவருகின்றது.! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது போலி அரசியலையே நடத்திவருகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல்வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான பொய் அரசியலை நடத்துகின்றது என்பது உங்களுக்கு தெரியும். நான் 2000 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினேன். 20 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவருகின்றேன். இக்காலப்பகுதியில் சம்பந்தன் ஒரே கதையைத்தான் மீண்டும் மீண்டும் கூறிவருகிறார். ஹ…

  6. எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர் ஒருவருக்கு விடுமுறை தேவைப்படும் பட்சத்தில் அதனை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொழில் தருநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1981ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 122ஆம் பிரிவின் அடிப்படையில், வாக்காளர் ஒருவருக்கு தேவையான விடுமுறை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், வாக்களிப்பிற்காக விடுமுறை கோரி விண்ணப்பிக்கப்படும் பட்சத்தில், நான்கு ங்களுக்குக் குறையாத, சம்பளத்துடன் கூடிய, விடுமுறையொன்று வழங்கப்பட வேண்டும் எ…

    • 0 replies
    • 398 views
  7. மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் பிரதமராக வர அதிகம் வாய்ப்புள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். மன்னாரில் இன்று (09) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும், “இம்முறை தேர்தலில் மிக பெரும்பான்மையாக மஹிந்த தரப்பினர் வருவார்கள். மூன்றில் இரண்டு பெறும்பான்மையைப் பற்றிக் கதைத்தாலும் அவர்களுக்கு 120 – 130 வரையான ஆசனங்கள் கிடைக்கும் என நம்புகின்றார்கள். இருந்தாலும் அவர்கள் அரசியல் அமைப்பின் 19வது திருத்ததை இல்லாமல் செய்வதுடன், அவர்களின் கட்சியில் உள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் 13ம் திருத்தச் சட்டத்தையும் இல்லாமல் ஆக்கும் நோக்கத்துடன் இருப்பவர்கள். ஆனாலும், இந்தியா ஒரு போதும் இதற்கு அனுமதிக்கா…

    • 3 replies
    • 700 views
  8. பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 150 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் – பிரசன்ன ரணதுங்க eyachandran Vithushan எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 150 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பியகமவில் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டுவர நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் தேவை என்றும் குறிப்பிட்டார். கடந்த 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு எட்டு ஆசனங்கள்…

    • 1 reply
    • 905 views
  9. கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்! முள்ளிவாய்க்காலில் இறுதி நேரத்தில் மக்கள் வெளியேறும் போது அன்று இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகள் என்னிடம் கூறிய விடயங்கள் இவைதான் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ச.கனகரத்தினம் தெரிவித்துள்ளார். அன்று இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகள் இன்று இல்லை ஆனால் அவர்கள் என்னிடம் சொன்னார்கள் இனி போராட்டம் சரிவராது இந்த அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவிசெய்யுங்கள் மக்களின் அபிவிருத்தியினை முன்னெடுங்கள் என்று, அந்த ஒரு சொல்லுத்தான் எனது அடி நெஞ்சில் இப்பொழுதும் இருக்கின்றது. இந்த உண்மையினை இன்று சொல்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார…

    • 5 replies
    • 1.2k views
  10. கந்தகாடு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்- இராணுவத் தளபதி by : Yuganthini கந்தகாடு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கந்தகாடுவின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலுள்ள கைதிகளைப் பார்வையிடவென, 116 பேர் இதுவரை வருகை தந்திருந்தனர். குறித்த அனைவரும் வெவ்வேறு பகுதிகளில் தற்…

    • 0 replies
    • 481 views
  11. இரண்டு ரீட் மனுக்களை தாக்கல் செய்த அநுர மற்றும் ஷானி எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க யாபா சேனாதிபதி செய்த முறைப்பாட்டிற்கு அமைய அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தன்னை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுகமாறு வெளியிட்டுள்ள அழைப்பானையை இரத்து செய்யுமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவின் பிரதிவாதிகளாக அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் உயர்நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன, அதன் உறுப்பினர்களான டீ.சி ஜயதிலக மற்றும் சந்திர பெர்னாண்டோ, அதன் செயலாளர், சட்டமா அதிபர் தப்புல த லிவேரா, ச…

    • 0 replies
    • 334 views
  12. அம்பாறை தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயம் – சயனொளிபவன் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் நான்கு ஆசனங்கள் சிங்கள மக்கள் இடையேயும், இரண்டு ஆசனங்கள் முஸ்லிம் மக்கள் இடையேயும் உறுதிப்படுத்தப்பட்டதன் விளைவாக எஞ்சி இருக்கும் ஒரு ஆசனம் யாருக்கு கிடைக்க போகின்றது என்பதே தற்பொழுது எழுந்துள்ள கேள்வியாகும். பெரும்பாலும் இந்த ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்ள போவது அதாவுல்லாவா இல்லை தமிழ் மக்களா என்பதே இங்கு பிரதான கேள்வியாக எழுந்துள்ளது என்று குறித்த தேர்தல் மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் இரா.சயனொளிபவன் தெரிவித்தார். நாவிதன்வெளியில் நேற்று (12) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “இம்முறை தேர்தலிலே…

  13. விவசாய ஏற்றுமதிகளுக்கு முன்னுரிமை வழங்கவும்! கோத்தா ஆலோசனை விவசாயப் பயிர்கள் ஏற்றுமதியின்போது பூரணப்படுத்தப்பட்ட விவசாய ஏற்றுமதிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். கண்டி – ஹசலக பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தபோதே, ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், விவசாய ஏற்றுமதிகளுக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மிளகை மீள் ஏற்றுமதி செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மிளகு விதைகள், மிளகுத் தூள் அல்லது வேறு பூரணப்படுத்தப்பட்ட விவசாய பொருட்களாக மாற்ற…

    • 2 replies
    • 354 views
  14. மாணவராக உள்ளவர் துணைவேந்தருக்கு புள்ளி போட முடியுமா? யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் மீண்டும் சர்ச்சையொன்று கிளப்பப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்ட புதிய நடைமுறைகளின் பிரகாரம் எதிர்வரும் ஆகஸ்ட் 7ம் திகதி இடம்பெறவுள்ள துணைவேந்தர் தெரிவுக்கான மதிப்பீடு செய்யும் விசேட கூட்டத்தில் மதிப்பீடு செய்யும் பேரவை உறுப்பினர்கள் தொடர்பிலேயே இந்தச் சர்ச்சை எழுந்திருக்கிறது. பல்கலைக்கழகத்தின் நடப்பாண்டில் கலாநிதி கற்கை நெறிக்கு மாணவராகப் பதிவு செய்துள்ள ஒருவர், பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்டுப் புள்ளியிடலை மேற்கொள்ள முடியுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. பே…

  15. முன்னாள் எம்.பி சரவணபவனின் உதவியாளரது வீடு மீது தாக்குதல்! யாழ்ப்பாணம் – சங்கானை தேவாலய வீதியில் அமைந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் உதவியாளரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று (10) இரவு கூரிய ஆயுதங்களுடன் சென்ற இனம்தெரியாத குழு ஒன்று வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதுடன் சொத்துக்களையும் அடித்து நொருக்கி சேதமாக்கியுள்ளனர். https://newuthayan.com/சரவணபவனின்-உதவியாளரது-வ/

    • 2 replies
    • 716 views
  16. வடக்கில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் இராணுவத்தின் அலுவலகம்.. வடக்கில் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் தலா மூன்று இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் இராணுவ அதிகாரியுடன் கூடிய இராணுவ அலுவலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட உள்ளளதுடன் இரண்டு படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பிரதேசத்தில் ஏதேனும் குற்றச் செயல் அல்லது போதைப் பொருள் தொடர்பான சம்பவங்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட கிராம சேவகர் முதலில் பிரதேசத்தில் உள்ள இராணுவ அலுவலகத்தில் உள்ள அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும். இதனையடுத்து கிராம சேவகரின் உதவியுடன் அந்த இராணுவ அதிகாரி தேவையான நடவடிக்கைகளை எடுப்பார். இராணுவ அதிகாரி மற்று…

    • 5 replies
    • 1.1k views
  17. லக்‌ஷ்மன் கதிர்காமருக்குப் பின்னர் வெளிவிவகார அமைச்சராக வேண்டும் என்பதே சுமந்திரனின் விருப்பம்; சுரேஷ் உரை July 12, 2020 “ சுமந்திரனை பொறுத்தவரை அவருக்கு இலங்கையினுடைய வெளிவிவகார அமைச்சராகுவதற்கு விருப்பம் இருந்தது. முன்னாள் வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமருக்குப் பின்னர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக தான் இருக்க வேண்டும் என்பதில் அதிக விருப்பம் இருக்கிறது. அதனால் தான் பேரம் பேசி அமைச்சுப் பதவி பெறுவதற்கு வலுவான பாராளுமன்ற குழுவை கேட்டு நிற்கின்றார்” எனத் தெரிவித்திருக்கின்றார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்தின். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம…

    • 2 replies
    • 527 views
  18. FAROOK SIHAN - பாறுக் ஷிஹான் வரலாற்று கொலைகளை செய்த கருணா அம்மான் என்னை தோற்கடித்து முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதி தலைவரும் வேட்பாளருமான எச்.எம்.எம். ஹரீஸ் குற்றஞ்சாட்டினார். அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிடும் இவர் இன்று(11) விசேட செய்தியாளர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் தனது கருத்தில் தெரிவித்ததாவது தேர்தல் பிரசாரம் என்ற போர்வையில் கருணா அம்மான் தமிழ் முஸ்லீம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டு வருகின்றார்.அவரது பிரச்சாரத்தில் அண்மைய…

    • 2 replies
    • 954 views
  19. பாடசாலைகளை மூடுவது குறித்து அரசு அவசர ஆலோசனை! கந்தக்காடு புனர்வாழ்வு மையத் தொடர்பு காரணமாக நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் கண்டறியப்படும் நிலையில் பாடசாலைகளை ஒரு வார காலத்திற்கு மூடலாமா என்பது குறித்து அரசு அவசர ஆலோசனை நடத்தி வருவதாக அறிய முடிகிறது. பெற்றோர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை கருத்திற் கொண்டே இவ்வாறான ஆலோசனை நடைபெறுகிறது. இது தொடர்பான அறிவிப்பு இன்று (12) மாலை வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. https://newuthayan.com/பாடசாலைகளை-ஒரு-வார-காலத்/

  20. பயங்கரவாதத்தை விட பொலித்தீன் பாவனை ஆபத்தானது! – யாழ் கட்டளை தளபதி பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையானது பயங்கரவாதம் மற்றும் கொரோனாவை விட மிகவும் ஆபத்தானது என்று மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் வணிகசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கழிவகற்றல் செயற்பாடு இராணுவத்தினரால் இன்று (12) முன்னெடுக்கப்பட்டன. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், “இலங்கையில் பயங்கரவாதம் மற்றும் கொரோனா ஆகியவை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டது. இந்நிலையில் பொலித்தீன் பாவனை மற்றும் பிளாஸ்டிக் பாவனையில் இருந்து மக்களை பாதுகாக்கின்ற வேலைத்திட்டத்தினை தற்போது முன்னெடுத்து வருகின்றோம். அதன் முதற…

  21. தொடர்கிறது இராணுவ மயமாக்கல்; இலங்கையின் நிலைமை படுமோசம் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இராணுவ மயமாக்கல் தொடர்கின்றது. இந்தப் படுமோசமான நிலைமை மிகவும் கவலையளிக்கின்றது.” இவ்வாறு அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரத்துக்கான உரிமைகள் குறித்த ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் கிளமென்ற் நயலேஷொஷி வூலே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கைக்கான எனது விஜயம் இடம்பெற்று ஒரு வருடத்தின் பின்னரும், ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற ஆறு மாத காலத்துக்குப் பின்னரும் நான் விஜயம் மேற்கொண்ட வேளை பார்த்த நிலமை தற்போது மாற்றமடைந்துள்ளது. இது குறித்து நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். இலங்கையின் எதிர்காலம் குறித்து ஆழ்ந்த கவலை…

    • 1 reply
    • 467 views
  22. இலங்கையில் 80 ஆயிரம் புதிய குழந்தைகள் பதிவு செய்யப்படவில்லை! கொரோனா நிலைமை காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டு இருந்தமையினால் புதிதாகப் பிறந்த 80,000 குழந்தைகள் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்று குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி மார்ச் – மே மாதங்களுக்கு இடையில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ்களை வழங்குவதற்கு பதிவாளர் ஜெனரல் திணைக்களத்தினால் முடியாமல் போனதாக கூறப்படுகின்றது. இதன்காரணமாக பதிவு செய்யப்படாத குழந்தைகளை பதிவு செய்வதற்கு கைபேசி மூலமான பதிவு சேவை ஒன்று தொடங்கப்பட உள்ளது என்று பதிவாளர் ஜெனரல விதானகே தெரிவித்துள்ளார். இதன்படி பெற்றோர் தமது பிறப்புச் சான்றிதழ், திருமண சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி கைப…

  23. இராவணன் ஒரு முஸ்லிம் மன்னன் – உலமாக் கட்சியின் புதிய வெடிகுண்டு! திருக்கோணேஸ்வரத்தில் பௌத்த விகாரை இருந்தது என்ற தேரரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இராவணன் முஸ்லிம் மன்னன். எனவே அவர் காலத்தில் முஸ்லிம்களின் இடமாகவே இது இருந்திருக்கும்” என்று உலமாக் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது: “திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் 40 அடியில் இராவணனின் சமாதி ஒன்று உண்டு என்றும் அதற்கருகில் அவன் தாயின் சமாதி உண்டு என்றும் இந்தியாவில் இருந்து வந்த சீக்கிய ஆய்வாளர் குறிப்பிட்டிருக்கிறார். அதே போல் கோணேஸ்வரம் கோயிலில் இராவணன் வெட்டும் உள்ளது. பௌத்தர்கள் இலங்கை வந்து வெறும் 2500 ஆண்டுகளே ஆகிறது. …

  24. தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்துடைய சொத்தானது, நமது முழு நாட்டுக்கும் சொந்தமானதேயொழிய, அது குறிப்பிட்ட சமூகத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மேலும், தொல்பொருள் பிரச்சினை சில பிரதேசங்களில் தற்போது உருவெடுத்து வருகின்றது. சுமார் 30 வருட யுத்தத்தினால் பல்வேறு கஷ்டங்களையும் பல இன்னல்களையும் வடக்கு, கிழக்கு மக்கள் சந்தித்தனர். உயிர்களையும் உடைமைகளையும் இழந்தது மட்டுமின்றி, காணிகளைக் கூட இழந்திருக்கின்றனர். யுத்தம் முடிந்து தனது சொந்த இடங்களில் மீளக்குடியேறிய மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். தொல்பொருளியல் என்ற போர்வையிலே, இந்த மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது. பிரச்சினைகள் …

    • 9 replies
    • 1k views
  25. போர்க்குற்றங்கள் நடக்கவே இல்லை என்கிறார் சரத் வீரசேகர.! இறுதிப் போரில் மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்கள் நடக்கவே இல்லை. இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் போலியானவையாகும்." - இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டு ஆகியன தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை அடிப்படையாகக்கொண்டே ஜெனிவாவில் 30/1 யோசனை முன்வைக்கப்பட்டது. போர்க்குற்றம், ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.