ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
ஆட்சி ஏற்றதும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது விசாரணை “அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில், ஆட்சி ஏற்றதும் விசேட விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். அம்பாந்தோட்டை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “கடந்த அரசில் அரசியல் பழிவாங்களுக்காகவே எப்.சி.ஐ.டி. அமைக்கப்பட்டது. அரசியல் பழிவாங்களுக்கான திட்டமிடல்களை மக்கள் விடுதலை முன்னணியினர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்னின்று முன்னெடுத்தார்கள். இதன் பலனை தற்போது அனுபவிக்கின்றார்கள். பெரும்பாலான அரசசார்பற்ற அமைப்புக்கள் கடந்த காலங்களில்…
-
- 0 replies
- 259 views
-
-
விடுதலைப்புலிகளின் அமைப்பில் சிறுவர் வீரர்கள் இருக்கவில்லை- கருணா தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பில் சிறுவர்களை வீரர்களாக பயன்படுத்தவில்லையென முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 18 வயதுக்கு கீழ்ப்பட்ட எவரையும் ஆட்சேர்ப்பு செய்வதற்கு தடை விதித்திருந்தார். மேலும் சிறுவர் படையினர் என்று கூறி விளம்பரப்படுத்தப்படும் ஒளிப்படங்கள் உண்மையான சிறுவர் வீரர்கள் அல்ல. விடுதலைப் புலிகள் அமைப்பு சிறுவர்களை ஒருபோதும் வீரர்களாக பயன்படுத்தவில்ல…
-
- 0 replies
- 185 views
-
-
கிணற்றில் தவறி விழுந்த இளைஞன் சாவு – யாழில் சம்பவம்! யாழ்ப்பாணம் – ஆவரங்கால் கண்ணாரை அம்மன் கோவில் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் இருந்து இன்று (05) காலை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவ்விளைஞன், தோட்டத்துக்கு நீர் இறைப்பதற்குக் கிணற்றடிக்கு வந்த போதே, கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. https://newuthayan.com/கிணற்றில்-தவறி-விழுந்த-இ/
-
- 0 replies
- 395 views
-
-
டிப்பர் பெட்டி விழுந்து சாரதி பலி யாழ்ப்பாணம் – கோப்பாய் சந்திப் பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் கராச்சில் டிப்பர் ஒன்றை பழுது பாா்த்துக் கொண்டிருந்த போது டிப்பரின் சுமை பெட்டி விழுந்ததில் அதன் சாரதி உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். திருத்துனர்கள் டிப்பர் பெட்டியினை யக் (தூக்கி) மூலம் உயர்த்தி திருத்திக் கொண்டிருந்த சமயம் டிப்பர் சாரதி அதனை சரிபார்க்க முயன்றபோது யக் விலகியதில் உயர்ந்து நின்ற பெட்டி திடீரென்று விழுந்ததில் பெட்டிக்கு அடியில் சிக்கிய சாரதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மானிப்பாயை சேர்ந்த லிகிந்தன் என்பவரே என தெரியவருகிறது. https://newuthayan.com/டிப்பர்-பெட்டி-விழு…
-
- 0 replies
- 412 views
-
-
பெண்கள் விடுதியில் தூக்கிட்ட நிலையில் சிறுமியின் சடலம் வவுனியா – கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அருளக பெண்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் நாளையதினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான ஆயத்தபணிகள் இல்லத்தினால் இன்று (05) மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த மாணவியை நீண்ட நேரம் காணாத நிலையில் இல்லத்தில் இருந்தவர்கள் அவரை தேடியுள்ளனர். இந்நிலையில், விடுதியின் முதலாவது மாடியில் அமைந்துள்ள கழிவறையில் குறித்த சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா த…
-
- 0 replies
- 669 views
-
-
தமது நாட்டுக்கு வரும் சுற்றுலாத்துறையினரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாத நாடுகளின் பட்டியலில் இலங்கையை, பிரித்தானியா இணைத்துக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரித்தானியா கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையை பாதுகாப்பற்ற நாடாக பட்டியல்படுத்தியுள்ளது. நேற்றையதினம் பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் என்பன தனது நாட்டு பிரஜைகளுக்கா புதுப்பித்து வெளியிட்டுள்ள உலகளாவிய சுற்றுலா அறிவுறுத்தலிலே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி அவுஸ்திரேலியா, தென் கொரியா, மலேசியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகியவை பிரித்தானியர்களுக்கு பயணிக்க பாதுகாப்பான நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் கொரோனவைர…
-
- 0 replies
- 399 views
-
-
யாழில் வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் விபத்து: இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழப்பு! யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனம் பழுது பார்த்துக்கொண்டிருந்த குறித்த இளைஞன் மீது டிப்பர் வாகனத்தின் சுமைப்பெட்டி விழுந்ததில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற நிலையில், இச்சம்பவத்தில் சுமைப்பெட்டியை ‘ஜக்’ மூலம் தூக்கிவிட்டு அதன் கீழிருந்து பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது ‘ஜக்’ நழுவி சுமைப்பெட்டி இளைஞன் மீது விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் மானிப்பாய் பகுதியைச் சோ்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளார். https://athavannews.com/ய…
-
- 2 replies
- 948 views
-
-
சிவாஜிலிங்கம் கைது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (05) முற்பகல் 9.30 மணியளவில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்பதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/சவஜலஙகம-கத/175-252763
-
- 2 replies
- 859 views
-
-
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பொதுத் தேர்தலின் பின்னர் உறுதியாக இந்தியாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாக இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே கொழும்பு துறைமுகத்தின் ஜய கொள்கலன் முனையத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள மூன்று புதிய கிரேன்களை அதற்கு பயன்படுத்தாமல், அவற்றை கிழக்கு முனையத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்து வருவதாக சங்கத்தின் பிரதான செயலாளர் சந்திரசிறி மஹகமகே குற்றம் சுமத்தியுள்ளார். இதற்கு எதிராக துறைமுக பொது ஊழியர் சங்கம், வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் அந்த வழக்கு இந்த மாதம் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தம…
-
- 4 replies
- 1k views
-
-
கிளிநொச்சியில் 400 வீடுகளை சுற்றிவளைத்து தேடுதல் கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் சுமார் 400 வீடுகள் வரை சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை அதிகாலை நான்கு மணி முதல் காலை எட்டு மணி வரை இத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோத செயற்பாடுகள், குற்றச் செயல்களில் ஈடுப்பட்டவர்கள், போன்ற பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளின் பொருட்டு இத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் போது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் போது 280 க்கும் மேற்பட்ட பொலிஸார் இராணுவத்தினர் இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த…
-
- 1 reply
- 917 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் இராணுவம், பொலிஸாரால் அதிரடியாகச் சுற்றிவளைப்பு July 5, 2020 யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் சற்று முன்னர் 50 க்கும் அதிகமான இராணுவம், பொலிஸாரால் சற்று முன்னர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் இதன்போது நேரில் வந்திருந்ததாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன. கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு அங்கு நிகழ்வுகள் ஏதாவது நடைபெறலாம் என்பதாலேயே இந்தச் சுற்றிவளைப்பு இடம்பெற்றதாகவும் அறியவருகின்றது. http://thinakkural.lk/article/51889
-
- 2 replies
- 1.1k views
-
-
அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிஸாரால் தடை! கிளிநொச்சி – அக்கராஜன் பகுதியில் அமைக்கப்பட்ட அக்கராஜ மன்னனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மன்னரை நினைவு கூரும் நிகழ்வொன்று இன்று கரைச்சி பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வினை இன்று நடாத்துவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் பொலிஸாருடன் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டடிருந்தனர். எனினும் இன்று கரும்புலிகள் நாள் என்பதால் நிகழ்வை நடார்த்த முடியாது என தெரிவிக்கப்பட்டதை அடுத்து நிகழ்வு இடம்பெறவில்லை. 13ம் நூற்றாண்டில் பொலநறுவை இராசதானிக்கு பின்னர் வன்னி நிலம் தமிழ் அரசர்களால் ஆளப்பட்டது. அத்தகைய அரசர்களில்…
-
- 0 replies
- 598 views
-
-
வவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தல் – காரணம் என்ன? வவுனியா – இறம்பைக்குளத்தில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம் மற்றும் முக்கிய தேவாலயங்களில் இன்று (05) இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டு வருவதுடன், நகரின் முக்கிய பகுதிகள், சனநடமாட்டம் உள்ள இடங்களிலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மோப்பநாய்கள் சகிதம் விசேட தேடுதல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். வெடி குண்டு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியான போதிலும், வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகே பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்திருக்கிற…
-
- 0 replies
- 424 views
-
-
புலம்பெயர் தமிழர்களே அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமைக்கு காரணம் – கருணாவின் மனைவி Jul 05, 20200 புலம்பெயர்ந்துள்ள சிலர், பணம் உழைப்பதற்காகவும் சுகபோகங்களை அனுபவிப்பதற்காகவும் போராளிகளை பயன்படுத்தி வருகின்றனர்.இத்தகைய விடயங்களை அரசாங்கம் உணர வேண்டும். மேலும் பல தமிழ் அரசியல் கைதிகள், விடுதலை செய்யப்படாமல் இருப்பதற்கு புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளே காரணம் என மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் போராளியுமான வித்தியாபதி முரளிதரன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/புலம்பெயர்-…
-
- 0 replies
- 345 views
-
-
ராஜபக்ச குடும்பம் ஆறு மாதம் நல்லா களவு செய்திருக்கும் – அசாத்சாலி இந்நாட்லுள்ள மக்களுக்கு நவம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரைக்கும் மக்களுக்கு ஆதரவாக எதுவித உதவிகளும் நடக்கவில்லை. ஆனால் ராஜபக்ஷ குடும்பம் ஆறு மாதம் நல்லா களவுகள் செய்தனர் என முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அஷாத் சாலி குற்றம் சுமத்தினார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (04) ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். மேலும், “இந்த நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு உரம் இலவசமாக வழங்குவதாக கோட்டாபய அரசாங்கம் அறிவித்தது. மாதா மாதம் உங்கள் வீட்டுக்கு ஐயாயிரம், பத்தாயிரம்…
-
- 3 replies
- 494 views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம் என்று எம்.ஏ. சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வி தமிழ் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் சிறிலங்கா நாட்டின் ஒரு அங்கம் என்பதால் ஜெனிவாவுக்குச் சென்று சிறிலங்கா நாட்டுக்கு எதிராகச் செயற்படப்போவதில்லை என்று பொருள்பட அவர் அந்தச் செவ்வியில் தெரிவித்திருக்கின்றார். ஜெனீவாவில் எங்களால் பரப்புரை செய்முடியும். ஆனாலும் நாங்கள் அதனைச் செய்யமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் சிறிலங்கா என்ற நாட்டின்; ஒரு அங்கமாக இருப்பதன் காரணமாக, சிறிலங்கா தேசத்திற்கு எதிராக எதனையும் செய்வதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். …
-
- 24 replies
- 1.9k views
- 1 follower
-
-
யாழில் தேர்தல் பிரச்சாரத்தில் சஜித் மூன்று நாட்கள் தேர்தல் பரப்புரைக்காக வடக்குக்கு வந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாசா நேற்று (01) வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இதன்படி சாவகச்சேரி, யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி, கோப்பாய் செல்வமஹால் மண்டபம் ஆகிய இடங்களில் பிரச்சார கூட்டங்களை நடத்தினார். https://newuthayan.com/யாழில்-தேர்தல்-பிரச்சாரத/
-
- 8 replies
- 863 views
-
-
முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் போன்றவர்களின் கொடும்பாவிகள் சற்றுமுன்னர் யாழ் வடமாராட்சியில் தமிழ் இளைஞர்களால் எரியூட்டப்பட்டன. இரண்டு தலைவர்களுக்கும் எதிராக குற்றசாசனங்களை வாசித்து, அந்த இருவரது உருவப் பொம்மைகளும் எரியூட்டப்பட்டன. சுமந்திரனின் சொந்த பிரதேசமான வடமாராட்சி முள்ளியில் வல்லிபுரக் கோவிலுக்கு அருகே சற்று முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றது. அண்மைக்காலமாக சுமந்திரம் மற்றும் சிறிதரன் போன்றோர் பொது வெளிகளில் தெரிவித்துவருகின்ற பல்வேறு கருத்துக்கள் யாழ் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பலத்த எதிர்வலைகளை உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/politics/…
-
- 30 replies
- 2.8k views
-
-
ஏன் எம்.ஏ.சுமந்திரன் இலவசமாக உதயன் நாளிதழ் வழங்கினார்..? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.ஏ. சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு இலவசமாக விநியோகித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெறவுள்ளது. கூட்டத்துக்கு முன்னதாக அங்கு வந்திருந்தவர்களுக்கு வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை இலவசமாக வழங்கி வைத்தார். "சுமந்திரனுக்கு வாக்களிக்கவேண்டாம்" என்று பிரதான தலைப்பிட்ட செய்தி உதயனில் இன்…
-
- 5 replies
- 1.8k views
-
-
யாழ்ப்பாணம் மாநகரில் வீதியால் செல்லும் இளைஞர்களை மிரட்டி அலைபேசிகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவரையும் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதி – கைலாசபிள்ளையார் கோவிலடி, கந்தர்மடம் சந்தி மற்றும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமை ஆகிய இடங்களில் வீதியால் பயணித்த இளைஞர்களை வழிமறித்த மூவர், அவர்களிடம் அலைபேசிகளை பறித்துள்ளனர். வீதியால் பயணிக்கும் இளைஞர்களை வழிமறிக்கும் கும்பல், அலைபேசியைக் காட்டு என்று மிரட்டுவார்கள். அவர்களில் ஒருவர் எனது தங்கையை ஏன் படம் எடுத்தாய் என்று மிரட்டி அலைபேசியில் உள்ள படங்களை பார்ப்பது போன்று பாசாங்கு காட்டிவிட்டு மோட்டார் ச…
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
மக்கள் மன்ற நிகழ்வில் மஸ்தானுடன் முறுகல் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் குழப்பகரமான நிலை ஏற்பட்டது. வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்கும் கட்சிகளின் வேட்பாளர்கள் சிவில் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது ஆரம்பத்தில் நெறியாள்கை செய்த வி.எஸ்.சிவகரன் சிவில் பிரதிநிதிகளாக கலந்துகொண்டுள்ள சின்மயா மிசன் சுவாமி தவத்திரு வேலன் சுவாமி, பல்கலைக்கழக மாணவன் வி.சாரங்கன், சமூக ஆர்வலர் செ.சுதாகரன் ஆகியோரும் வேட்பாளர்களாக கலந்துகொண்ட காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், ப.உதயராசா, சிவ.கஜேந்…
-
- 0 replies
- 509 views
-
-
வடக்குக்கு ஒரு சட்டமும், தெற்குக்கு மற்றுமொரு சட்டமும் இருக்கமுடியாது.! அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பிலும், அதிகாரப்பகிர்வு குறித்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட கருத்துக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. வடக்குக்கு ஒரு சட்டமும், தெற்குக்கு மற்றுமொரு சட்டமும் இருக்கமுடியாது. நாட்டில் ஒரு சட்டமே இருக்கவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ” ரணச…
-
- 0 replies
- 601 views
-
-
கார் கதவுடன் மோதியவர் படுகாயம்; நல்லூரில் சம்பவம்! யாழ்ப்பாணம் – நல்லூர் கோவில் வீதியில் இன்று (04 காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மறைந்த எம்பி மகேஸ்வரனின் சகோதரர் பரமேஸ்வரினின் காரில் இருந்தவர் சாரதி பக்க கதவினை திறந்து கொண்டு இறங்க முற்பட்டுள்ளார். இதன்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்தவர் கார் கதவுடன் மோதி விழுந்துள்ளார். விபத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் மயக்கமுற்றுள்ளார். இதனையடுத்து மீட்கப்பட்ட நபர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றப்பட்டு சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்ப…
-
- 0 replies
- 468 views
-
-
உங்களிடம் வாக்கு கேட்கும் உரிமை எனக்கு இருக்கின்றது.! - சசிகலா ரவிராஜ் பெண் வேட்பாளர் என்ற ரீதியிலும் தென்மராட்சியின் பிரதிநிதி என்ற வகையிலும் மக்கள் தம் விருப்பு வாக்குகளில் ஒன்றை அவசியம் எனக்கு அளிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் கீழ் பொதுத் தேர்தலில் களமிறங்கியிருக்கும் சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில் உள்ள தமிழரசுக் கட்சியின் சகல உறுப்பினர்களும் பங்கேற்ற தொகுதிக்கான மூலக்கிளை கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது, சசிகலா ரவிராஜ் தனது உரையில் பெண் வேட்பாளர் என்ற ரீதியிலும் தென்மராட்சியின் பிரதிநிதி என்ற வகையிலும் மக்கள் தம் விருப்பு வாக்குகளில் ஒன்றை அவசியம் தனக்கு அளிக்கும்படி வலியுறுத்துவதாகவும், அவ்வாறு க…
-
- 4 replies
- 754 views
-
-
நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக கனடாவில் பல அமைப்புக்கள், நலன்விரும்பிகளால் சேகரித்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக வழங்கப்பட்ட 20 கோடியே 20 இலட்சம் (212 மில்லியன்) ரூபாவுக்கு என்ன நடந்தது என தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்படி கேள்வியினை எழுப்பியிருந்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், ஈழத்தில் போரால் கடுமையாக பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கப்பால் வடக்கு கிழக்கில் நுண் நிதிக் கடன் பி…
-
- 40 replies
- 3.6k views
- 1 follower
-