ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142953 topics in this forum
-
சாணக்கியனுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தேரர்கள் : இனவாதியாக சித்தரிக்கவும் முயற்சி இலங்கையின் தென்பகுதி சிங்கள மக்கள் மத்தியில் தன்னை இனவாதியாக சித்தரிக்கும் வகையில் சில தரப்பினர் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகளும் கிழக்கின் முன்னாள் ஆளுநரும் தனக்கு எதிராக போலி பிரசாரங்களை முன்வைப்பதாக கூறிய அவர், இனவாத கருத்துக்களை முன்வைக்கும் அம்பிட்டிய சுமன ரத்தின தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இன்று(27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாரதூரமான செய்தி அவர் மேலும் தெரிவிக்கையில், “தெற்கிலே வாழும் ஒவ்வொ…
-
- 1 reply
- 317 views
-
-
உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதல் தொடர்பில் குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பதாக போலிப் பிரச்சாரம் செய்கின்றனர். இது ஒரு கேலியான விடயம். இவ்வளவு நாட்களாக குற்றவாளியை பிடிக்காமல் நாம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் செய்யப் போகின்றோம் என்றவுடன் கைது செய்யப்பட்டிருப்பதாக ஒரு கண்துடைப்பு நாடகம் ஒன்றை அரங்கேற்றியிருக்கின்றனர் என ஊடகவியலாளர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். தென்னிலங்கையைச் சேர்ந்த ஏழு ஊடக அமைப்புக்களும், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியளாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், க.சுரேஸ்பிரேமச்சந்தின், சி.சிறிதரன், ம.வியஜகலா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், எஸ். கஜேந்திரன் மற்றும் பெருமளவான மக்களும் இ…
-
- 1 reply
- 540 views
-
-
ஜூன் இறுதியிலேயே உள்நாட்டு விசாரணை அறிவிப்பு – பின்வாங்குகிறார் மைத்திரி APR 09, 2015 | 13:00by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கான பொறிமுறை பற்றிய விபரங்களை வரும் ஜூன் மாத இறுதியிலேயே வெளியிடவுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரைம் சஞ்சிகைக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். முன்னதாக, கடந்த மார்ச் மாதம் பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிபிசி சிங்கள சேவைக்கு அளித்திருந்த செவ்வியில் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை ஒரு மாத காலத்துக்குள் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்த…
-
- 3 replies
- 516 views
-
-
12.06.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவன் http://www.yarl.com/videoclips/view_video....3f142449d037028
-
- 2 replies
- 1.8k views
-
-
ஒரு தமிழ் அமைப்பு நல்லதைச் செய்தால் அதனை மற்றைய தமிழ் அமைப்புக்கள் மனதார ஏற்று அந்த அமைப்புக்கு ஆதரவு வழங்கும் மனப்பாd;மையை வளர்த்தால் தான் தமிழ்ச்சமுதாயம் தனது குறிக்கோளை அடைய முடியுமென கனடியத் தமிழ்க் காங்கிஸின் இயக்குனர்களில் ஒருவரான டாக்டர் சாந்தகுமார் மானஈட்டு வழக்கு சம்பந்தமான நிகழ்வில் பேசும்போது தெரிவித்தார். கனடியத் தமிழ்க் காங்கிரஸின் புலம்பெயர்ந்த தமிழர்களிற்கு எதிராக கடுமையான தொனியில் செயற்பட்டு ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் பயங்கரவாதிகள் என அடையாளமிட முனையும் றோகான் குணவர்த்தன என்ற சிங்கள இனவாதிக்கு எதிராக மான நஸ்ட ஈடு கோரி தொடரப்பட்ட வழக்குச் சம்பந்தமாக வலுச் சேர்க்கும் நிகழ்வு சனிக்கிழமை ரொறன்றோவில் இடம்பெற்ற போதே மேற்படி கருத்தை டாக்டர் சாந்தகுமா…
-
- 2 replies
- 527 views
-
-
புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் இன்று தீர்மானம்: ஐ.தே.க தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி குறித்த யோசனை, இன்று (வெள்ளிக்கிழமை) முன்வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று மாலை நடைபெறவுள்ள விசேட செயற்குழு கூட்டத்தில் புதிய கூட்டணி தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணியை அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்படவுள்ளதாக பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை காலி முகத்திடலில் இடம்பெற்ற நீதியின் குரல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ப…
-
- 0 replies
- 191 views
-
-
தனிச் சிங்களச் சட்டமே நாடு பிளவுபடக் காரணம் : அமைச்சர் மனுஷ நாணயக்கார! 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே நாடு இன, மத ரீதியாக பிளவடைய பிரதான காரணமாக காணப்படுவதாக தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். நமக்கு நாம் மட்டுமே என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நல்லிணக்கம் மனிதநேயத்தின் ஆரம்பம் என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் நோக்கத்திற்காகவும் பொருளாதார நோக்கத்திற்காகவும் இனவாதமும் மதவாதமும் …
-
- 4 replies
- 491 views
-
-
28 NOV, 2023 | 03:16 PM இலங்கையில் 40 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 100 மருத்துவமனைகள் மூடப்படும் நிலையில் உள்ளன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வடக்கு புத்தளம்நுவரேலியா உட்பட பல பகுதிகளில் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் ஓய்வுபெறுவது புலம்பெயர்வது இடமாற்றம் போன்ற பல காரணங்களால் இது இடம்பெறுகின்றது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/170456
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
இலங்கையில் இனங்காணப்பட்ட 862 எய்ட்ஸ் நோயாளிகளில் இதுவரை 161 பேர் மரணம் [27 - June - 2007] எய்ட்ஸ் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளவர் என ஒருவர் அடையாளம் காணப்படும் பட்சத்தில் சமூகம் அவரையும், அவரது குடும்பத்தையும் இழிவுபடுத்தி ஒதுக்கிவிடாமல் அவர்கள் மீது அன்பு, கருணை, ஆதரவுகளை வழங்கி வாழவைக்க வேண்டும் என எய்ட்ஸ் நோய் தொடர்பான விசேட நிபுணத்துவ வைத்தியரான டாக்டர் திருமதி கங்கா பத்திரன தெரிவித்தார். ஊடக அமைப்பு அனுசரணையுடன் ஐகெப் (ICAPP) நிறுவனத்தினால் கண்டி கட்டுகஸ்தோட்டை ஹோட்டல் ட்ரீ ஒப் லைபில் ஊடகவியலாளருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எய்ட்ஸ் நோய் தொடர்பான அறிவூட்டல் செயலமர்வின்போதே வைத்தியர் திருமதி கங்கா பத்திரன இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்…
-
- 0 replies
- 973 views
-
-
விகடனில் வெளிவந்த ஒப்புதல் வாக்குமூலம் உலுக்கும் உண்மைகள்! [Friday, 2011-09-02 10:39:34] 'பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும் மரணத்தில் இருந்து காப்பாற்றுங்கள்!' என நீள்கின்றன கண்ணீர்க் கோரிக்கைகள். கடந்த 21 வருடங்களாகக் கடிதங்கள், புத்தகங்கள் மூலமாக ஒலிக்கும் இந்தக் கதறல் யார் மனதையும் உலுக்காமல் போனதுதான் வேதனை. இவர்கள் மீதான குற்றத்துக்கு சாட்சிகள் இல்லை; ஆவணங்கள் இல்லை. 'தூக்குத் தண்டனையைச் சுமக்க வேண்டிய ஆட்கள்தான் இவர்கள் என்பதற்கு அதிகாரி கள் காட்டும் ஒரே ஆதாரம்... இவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்தான். "செய்த தவறையும் சதிக்கான பங்களிப்பையும் அவர்களே ஒப்புதல் வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுவிட்டார்கள். அப்படி இருக்க, வேறு சாட்சி எதற்கு?" என்கிறது அதிகாரத் தரப்பு…
-
- 2 replies
- 2.1k views
-
-
ஊடகங்களை ஒடுக்கும் 19ஆவது திருத்தம் – ராஜீவ விஜேசிங்க 19ம் திருத்தச் சட்டம் ஊடகங்களை ஒடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் ஊடக நிறுவன அதிகாரிகளை அடக்கி ஒடுக்கும் வகையிலான விடயங்கள் 19ம் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். புதிய சட்டத்தில் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் ஊடகவியலாளர்களை, நிறுவன உரிமையாளர்களை அடக்கி ஒடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்றிற்கு வழங்கப்பட்ட சட்டத்திற்கு முற்றிலும் மாறுபட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். முதலில் அரசிற்கும் அரச அதிகாரி…
-
- 0 replies
- 394 views
-
-
குழாய்க்கிணறுகள் யாழில் பூதாகரம்! [ஆதவன்] யாழில் அதிகரிக்கும் குழாய்க் கிணறுகளால் நிலத்தடி நீர் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்றும், நாள் ஒன்றுக்கு எவ்வளவு நீர் வெளியேற்றப்படுகிறது என்பதைக்கணிப்பிட முடியாத சூழல் உருவாகியுள்ளது என்றும் யாழ். பல்கலைக்கழகத்தின் விலங்கியல்துறை பேராசிரியர் திருமதி ஞானேஸ்வரன் இராஜேந்திரமணி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- யாழ். மாவட்டத்தில் அதிகரித்துவரும் குழாய்க் கிணறுகளால் நிலத்தடி நீர் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு குழாய்க் கிணறுகள் ஊடாக வெளியேற்றப்படும் நீரின் அளவைக் கணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. யாழ். குடா மூன்று பக்கமும் நீரினால் சூழப்பட்டு ஒரு பகுதியில் நிலத்துடன் இணைக்கப்பட்ட பிரத…
-
- 3 replies
- 342 views
- 1 follower
-
-
கரும்புலிகள் நாளையொட்டி தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கரும்புலிகள் பற்றிய விசேட பதிவு
-
- 0 replies
- 964 views
-
-
தமிழர்களை அழிப்பதற்கு உதவி செய்த இந்தியா இன்று அதற்காக இலங்கை அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களின் காணிகளை இலஞ்சமாகப் பெற்றுக் கொள்கிறது என இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். மனித உரிமை குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்புவதற்காகவே இதனை இலங்கை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தை முடித்து தமிழ் மக்களை அழிப்பதற்கு இந்தியா, சீனா, இஸ்ரேல், அமெரிக்கா உட்பட பல நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்கள் உட்பட அனைத்து உதவிகளையும் வழங்கியது. இதற்காக அந்நாடுகளுக்கு அரசாங்கம் லஞ்சம் கொடுக்கின்றது. வடக்கு, கிழக்கில் பரம்பரையாக வாழும் மக்களின் காணிகளை அந்நாடுகளுக்கு வழங்குகிற…
-
- 2 replies
- 842 views
-
-
கிழக்கு தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்களை ஆளும் தரப்புக்கு இழுக்க தீவிர முயற்சி. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தம்பக்கம் இழுத்தெடுக்கும் தீவிர முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அறியவருகிறது. இதனை அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்திய அதேவேளை, அமைச்சர்கள் சிலரும் ஏற்றுக்கொண்டனர். கிழக்கில் அரசாங்கம் தனது முழுக்கட்டுப்பாட்டினை நிலைநாட்டி, அங்கிருந்து புலிகளை விரட்டிவிட்டதாக கூறும் நிலையிலேயே கிழக்குமாகாண பாராளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுத்தெடுத்து அமைச்சுப் பதவி வழங்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. கிழக்கிலிருந்து புலிகள் அகற்றப்பட்டுள்ளதால் அரசாங்கத்துடன் இணையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற …
-
- 3 replies
- 1.5k views
-
-
[ புதன்கிழமை, 14 செப்ரெம்பர் 2011, 01:28 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்கா இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா கருத்து ஏதும் தெரிவிக்காமல் மெளனம் சாதித்து வருகிறது. சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நேற்றுமுன்தினம் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளருக்கும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கும் அனுப்பி வைத்திருந்தார். இந்த விவகாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜெனிவாவிலோ அல்லது புத…
-
- 3 replies
- 1.1k views
-
-
இளைஞர்கள் வீதிகளில் கூடி நின்றால் கைது செய்ய நடவடிக்கை யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட அரச அதிபர் வேதநாயகன், வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லக்ஸ்மன் ஜெயசேகர மற்றும் பிரதேச செயலர்கள் சிவில் அமைப்பினர் ஏனைய அரச அதிகாரிகள் பிரதேச சபை தவிசாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது யாழ்.குடாநாட்டில் அதிகரித்துள்ள போதைப் பாவனை, வாள்வெட்டு, அடிதடிக் கலாசாரம்,மிருக பலியிடல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. மாலை நேரங்களில் தனியார் வகுப்புக்கள் நிறைவடைந்ததும் இளைஞர்கள் தேவையற்ற விதத்தில் வீதிகளில் கூடி நிற்க முடி…
-
- 0 replies
- 526 views
-
-
பால் தேநீர், கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு! Published By: NANTHINI 31 DEC, 2023 | 11:03 AM பால் தேநீர், கொத்து உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலைகள் நாளை (ஜனவரி 1) முதல் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் நாளை முதல் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், சாதாரண தேநீரின் விலை 5 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினாலும், சோறு மற்றும் கொத்து …
-
- 11 replies
- 800 views
- 1 follower
-
-
திங்கள் 23-07-2007 12:57 மணி தமிழீழம் [மயூரன்] இனப் பிரச்சினையில் தலையிடுவதில்லை இணைத் தலைமை நாடுகள் தீர்மானம் இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் முனைப்புடன் செயல்படுவதில்லை என இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகள் தீர்மானித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன சிறீலங்கா அரசாங்கம் அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஊடாக இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளை முன்வைக்கும் வரை இணைத் தலைமை நாடுகள் இலங்கை விவகாரத்தில் தலையிடாப் போக்கை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. அண்மையில் சிறீலங்கா படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாண அபிவிருத்திக்னெ அனைத்துலக உதவிகளை பெறுவதற்கு சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டு…
-
- 3 replies
- 2k views
-
-
யாழ் நீதிமன்றில் பிணையில் விடுதலையான தமிழ் இளைஞர் பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு மீண்டும் கைது 19 செப்டம்பர் 2011 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாண நீதிமன்றில் தமிழ் இளைஞர் ஒருவரை தாக்கி பலாத்காரமாக கைது செய்ய பொலிஸார் மேற்கொண்ட முயற்சி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. சிறு குற்றச்செயல் ஒன்று தொடர்பினில் கைது செய்யப்பட்டிருந்த இவ்விளைஞன் இன்று நீதிமன்றில் கோப்பாய் பொலிஸாரால் ஆஜர் படுத்தபட்டிருந்தார்.எனினும் அவ்விளைஞனை பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்திருந்தார். அவ்வேளையில் வெளியே சிவில் உடையினில் பதுங்கியிருந்த பொலிஸார் மீண்டும் அவ்விளைஞனை நீதிமன்ற வளாகத்தினுள் கைது செய்ய முற்பட்டனர்.இந்நிலையில் அடைக்கலம் கோரி அவ்விளைஞன் நீதிபதி அறையினுள் செல்ல…
-
- 0 replies
- 402 views
-
-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பிரித்தானியாவின் போலியான நிறுவனம் ஒன்றுக்கு மிக்27 வகை விமானக் கொள்வனவின் போது நிதி வழங்கியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விமானக் கொள்வனவில் 10 மில்லியன் டொலர்கள் மோசடி செய்யப்பட்டன. இந்த நிதி பிரித்தானியாவின் பெலிமிசா என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் ஆவணங்களில் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறான நிறுவனம் ஒன்று பிரித்தானியாவின் எந்த பாகத்திலும் இல்லை என்று இன்டர்போல் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ மீதான குற்றச்சாட்டு உறுதியாகி இருக்கிறது. எனினும் அவர் இப்போதைக்கு கைது செய்யப்படமாட்டார் என்று கூறப்படுகிறது. http://www.pathivu.com/news/39964/57//d,article_…
-
- 0 replies
- 712 views
-
-
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது இன்று (21) திங்கட்கிழமை 133 ஆவது நாளாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது. மன்னார் மனித புதை குழியில் மனித எலும்புக்கூடுகள், தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. மன்னார் மனித புதைகுழியில் இருந்த, அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி, குறித்த மனித எச்சங்கள் எந்த காலப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம்?மரணம் நிகழ்ந்தது எவ்வாறு? என்பது தொடர்பாகவும் இந்தப் புதை குழி இயற்கையான மயானமா? அல்லது கொடுரமாக கொல்லப்பட்டு குறித்த புதைகுழியினும் புதைக்கப்பட்டனரா? என்பது தொடர்பான ஆய்வுக்காக மனித எலும்பு கூட்டு மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு ஆய்வுக்காக அனுப்புவதற்…
-
- 0 replies
- 227 views
-
-
கிழக்கின் வெற்றியால் அரசுக்கு எந்தவொரு நன்மையுமில்லை வீரகேசரி நாளேடு மஹிந்த அரசாங்கம் பரப்புரை செய்ததுபோல கிழக்கின் வெற்றி அவர்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற புலிகளின் குரல் முத்தமிழ் கலையரங்கில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது: தமிழர்களுக்கான தீர்வை முன்வைக்க மஹிந்த அரசாங்கம் தயாராக இல்லை. தீர்வை முன்வைக்குமாறு பன்னாட்டு சமூகமும் அழுத்தங்களைக் கொடுக்கத்தவறிவிட்டது. மஹிந்த அரசாங்கம் பரப்புரை செய்ததுபோல கிழக்கின் வெற்றி அவர்களுக்கு…
-
- 0 replies
- 1.2k views
-
-
சம்பூரை விடுவிக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டாலும் ஏலவே நிலுவையிலுள்ள வழக்குடன் தடை உத்தரவு வழக்கையும் இணைத்து தடையை நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். சம்பூரை விடுவிக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு உச்ச நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவு சம்மந்தமாக விளக்கம் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 2012 ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் முதலீட்டு சபைக்கு சம்பூரில் உள்ள 818 ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய மேற்படி முதலீட்டு சபை கெற்வே இன்டஸ்றீ…
-
- 0 replies
- 432 views
-
-
700 ரூபாய் சம்பள உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவையில் போராட்டம் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வந்த போதும் தற்போது 700 ரூபாயாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் பொகவந்தலாவை நகரில் சத்தியாகிரக போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரின் கோரிக்கை என்னவெனில் ,1000 ரூபாய் அடிப்படை சம்பளம் வேண்டும்.தோட்ட தொழிலாளர்களை 700 ரூபாய்க்கு அடகு வைக்க வேண்டாம் என கோஷங்கள் எழுப்பியும் பதாகைகள் ஏந்தியும் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறுகையில், நாம் 1000 ரூபாய் எனக…
-
- 0 replies
- 503 views
-