ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
கொரோனா அச்சம் காரணமாக சிறுகுற்றக் கைதிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளான அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு அவசர கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில், “நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் போது செல் துகல்களை உடலில் சுமந்தவாறு தற்போது பல அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர். அத்துடன் தீர்ப்பு வழங்கப்பட்ட அரசியல் கைதிகளும் உள்ளனர். இவர்கள் தற்போது மருத்துவ வசதிகள் இல்லாமல் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக சிறைச்சாலைய…
-
- 0 replies
- 297 views
-
-
கொரோனா தொற்று சர்ச்சைக்குரிய யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்று இதுவரை தனிமைப்படுத்தலுக்கு செல்லாது மறைந்திருப்பவர்கள் தங்களை உடனடியாக அடையாளப்படுத்தவும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கோரியுள்ளார். யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சுவிஸ் போதகர் ஒருவரால் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தற்போது ஒவ்வொருவராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுடன் நெருங்கிப் பழகிய 325 பேர் வரையிலானவர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் தற்போது குறித்…
-
- 7 replies
- 613 views
-
-
கொரோனா சந்தேகத்தில் வந்தவர் உயிரிழப்பு Editorial / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 05:47 - 0 - 12 -எஸ்.நிதர்ஷன் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர் உயிரிழந்துள்ளார். இன்று (06) அதிகாலை 2 மணிக்கு, மந்திகை வைத்தியசாலைக்கு, பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் ஒருவர் அழைத்து வரப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த நபர், பெப்ரவரி 7ஆம் திகதியன்று, கம்போடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளாரெனத் தெரியவருகிறது. அவர், மூச்சுத் திணறல் (வீசிங்) நோயாளி ஆவார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கொரோனா-சந்தேகத்தில்-வந்தவர்-உயிரிழப்பு/71-248047
-
- 0 replies
- 394 views
-
-
பஸ்களில் இருந்த டீசல், டி.வி கொள்ளை Editorial / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 05:54 - 0 - 10 -எஸ்.நிதர்ஷன் யாழ்ப்பாணம் - கோண்டாவில் டிப்போவில் தரித்து நின்ற இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ஆறு பஸ்களில் இருந்த டீசல் திருடப்பட்டுள்ளதாக, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் அனைத்தும், கோண்டாவில் பஸ் நிலையத்தில் தரித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தரித்து நின்ற 6 பஸ்களில் இருந்து, டீசலும் ஒரு பஸ்ஸில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டியும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பா…
-
- 1 reply
- 654 views
-
-
கொழும்பில் இருக்கும் வெளிமாவட்டத்தவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பம்! by : Litharsan கொழும்பிலிருந்து வெளிமாவட்டத்துக் காரர்கள் பேருந்து, ரயில் மூலம் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடைமுறையை இவ்வாரம் முதல் ஆரம்பிக்க கொழும்பு மாவட்ட ஒருகிணைப்பு குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற கொரோனா நிலைமை தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கொழும்பில் வாழும் வெளிமாவட்ட மக்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இவர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டு, பஸ் மற்றும் …
-
- 4 replies
- 396 views
-
-
அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் - செல்வம் நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் போது 'செல்' துண்டுகளை உடலில் சுமந்தவாறு தற்போது பல அரசியல் கைதிகள் எவ்வித மருத்துவ வசதிகளும் இன்றி சிறைச்சாலைகளில் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏனைய கைதிகள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது போல் அவர்களையும் விடுதலை செய்ய அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதிக்கு அவசர கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டில் ஏற்பட…
-
- 2 replies
- 386 views
-
-
ஒன்றிணையாத மனித கூட்டங்கள் அவமானத்திற்கும் பரிதாபத்திற்கும் உரியவர்கள் – சி.வி விக்னேஸ்வரன் by : Benitlas ஒன்றிணையாத மனித கூட்டங்கள் அவமானத்திற்கும் பரிதாபத்திற்கும் உரியவர்கள் என வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள வாராந்த கேள்வி பதிலிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் ஊடங்களுக்கு அனுப்பி வைத்துள்ள பதிலில், ‘கொரோனா வைரசின் தாக்கம் மாதக் கணக்கினுள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் கூட அதனால் ஏற்படுத்தப்பட்ட உலக ரீதியான, நாடுகள் ரீதியான, மாகாணங்கள் ரீதியான, கிராமங்கள் ரீதியான, குடும்பங்கள் ரீதியான தாக்கங்கள் பல காலத்திற்கு எமக…
-
- 1 reply
- 380 views
-
-
வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்! ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா-தரவளைப் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட ஒன்பது பேர் தேவாலயத்துக்குள்ளேயே நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த மதபோதகர் ஒருவருடன் இணைந்து ஆராதனைக் கூட்டம் நடத்தியமை, யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டமை ஆகியவற்றாலேயே குறித்த மதபோதகரும், அவருடன் நெருங்கிப் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, தமிழகம் திருநெல்வேலியிலிருந்து கடந்த 11ஆம் திகதி பாலசேகர் எனும் மதபோதகர் இலங்கை வந்துள்ளார். அதன் பின்னர் தரவளை தேவாலயத்திலுள்ள…
-
- 130 replies
- 9.9k views
- 1 follower
-
-
-மு.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சி – கரைச்சி, புளியம்பொக்கனை நாகதம்பிரான் கோவிலின் வருடாந்த பொங்கல் உற்சவம், இன்று (06) அடியார்கள் எவரும் அற்ற நிலையில், கோவில் நிர்வாக உறுப்பினர்கள், பூசகர் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட 10 பேருடன் நடைபெற்றது. மேலும், ஊடகவியலாளர்களும் கோவில் வளாகத்துக்குள் சென்று செய்தி சேகரிக்க படையினராலும், பொலிஸாராலும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது http://www.tamilmirror.lk/வன்னி/அடியார்களற்ற-நிலையில்-நடைபெற்ற-வருடாந்த-பொங்கல்-உற்சவம்/72-248046
-
- 0 replies
- 335 views
-
-
ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் 15 ஆயிரம் பேர் கைது! by : Jeyachandran Vithushan நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 14 ஆயிரத்து 966 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 3,751 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) நண்பகல் 12மணி வரையான காலப்பகுதியினுள்ளேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன. அந்தவகையில் இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான 06 மணித்தியால காலப்பகுதியினுள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 171 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 86 வாக…
-
- 1 reply
- 352 views
-
-
வவுனியா விவசாயிகள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை! by : Benitlas வவுனியா விவசாயிகள் தமது உற்பத்தி பொருட்களை சிறந்த விலைக்கு விற்பனை செய்யமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கத்தினால் சில மரக்கறிகளுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மொத்த விற்பனையாளர்கள் விவசாயிகளிடம் மிகக்குறைந்த விலைக்கே பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர். குறிப்பாக கறிமிளகாய் 150 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளிடம் 30 ரூபாவிற்கே கொள்வனவு செய்யப்படுவதாகவும் இதேபோல் கத்தரிக்காய் 20 முதல் 30 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டு 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக…
-
- 0 replies
- 391 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வீடுகளுக்கு அனுப்பட்டிருந்தாலும், அவர்கள் அனைவரையும் அவரவர் வீடுகளில் மீள சுய தனிமைப்படுதலுக்கு உள்ளாகுமாறு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார். 14 நாள் தனிமைபப்டுத்தல் காலத்தை நிறைவு செய்து வீடு திரும்பிய நிலையில் 7 நாட்களின் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் தொற்றாளர்கள் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 3 ஆம் திகதி 8 பேரும், 4 ஆம் திகதி மூன்று…
-
- 0 replies
- 259 views
-
-
(இராஜதுரை ஹஷான்) பாடசாலை மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இரண்டு பிரத்தியேக அலைவரிசைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்க சவாலை பெற்றிக்கொள்ள முன்னெடுக்கும் திட்டங்களை பலவீனப்படுத்த வேண்டாம். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்தி இபலவீனப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரச தலைவர் தூர நோக்க கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு சுகாதார துறைய…
-
- 2 replies
- 342 views
-
-
மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரம் ஆரம்பம் Editorial / 2020 ஏப்ரல் 06 , மு.ப. 08:06 - 0 - 23 இன்று (06) முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதி, மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதி வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக முதல் முறையான பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர், கடந்த மாதம் 30 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று முதல் வீட்டிலிருந்து பணியாற்றும் மூன்றாவது வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செ…
-
- 4 replies
- 419 views
-
-
சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கோரிக்கை.!! வவுனியா உட்பட தமிழர் தாயகப்பகுதிகளில் இருந்து தொழில் மற்றும் இதர காரணங்கள் நிமித்தம் தலைநகர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் தமது சொந்த பிரதேசங்களுக்கு வரமுடியாது நெருக்கடியில் உள்ளார்கள். அவர்களை சமுகப்பாதுகாப்பை உறுதிப்படுத்தி அழைத்துவருவதற்குரிய பொறிமுறையொன்றை உடன் அமைக்குமாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் ஆளும் தரப்பினரிடத்தில் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் சம்பந்தமாக அவர் விடுத்துள்ள ஊடக அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, வவுனியா உட்பட தமிழர் தயாகத்திலிருந்து தொழில் நிமித்தமும், கற்றல், கற்பித்தல், மருத்துவ சிகிச்சைகள், வணிகம் உள்ளிட்ட இதர…
-
- 4 replies
- 588 views
-
-
கொரோனா சந்தேகத்தில் மந்திகைக்கு கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழப்பு! கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு கொரோனா தொற்று காரணமாக இருக்கலாமா என்று பரிசோதனை செய்வதற்கு மாதிரிகள் பெறப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மந்திகை வைத்தியசாலைக்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய அவர் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி கம்பொடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார். அவர் வீசிங் நோயாளி என்பதுடன் கடந்த மூன்று நாட்களாக அவருக்கு …
-
- 0 replies
- 603 views
-
-
இந்திய தலைநகரில் இடம்பெற்ற இஸ்லாமிய மத நிகழ்வில் கலந்துகொண்ட நான்கு இலங்கை பிரஜைகளிற்கு கொரோன தொற்றுள்ளமை மருத்துவபரிசோதனைகளின் மூலம் உறுதியாகியுள்ளது என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. புதுடில்லியில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கையர்கள் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ள இந்துஸ்தான் டைம்ஸ். நு என்ற மாவட்டத்தில் இவர்களிற்பு வைரஸ் உள்ளமையை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இரு நோயாளிகள் நுவிற்குள் நுழைய முயன்றவேளை மார்ச் 31 ம் திகதி பல்வால் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டார்கள் என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் ஏனைய இருவரும் உம்ரா என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். …
-
- 1 reply
- 380 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம் சடலங்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்வது தொடர்பாக ஆராய குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துவருகின்றோம். இதுதொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என ஜனாதிபதி சட்டத்தரணியும் ஜனாதிபதியின் சட்ட ஆலாேசகருமான அலி சம்பரி தெரிவித்தார். கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு இறக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு இறக்கும் முஸ்லிம்களின் சடலங்களை எரிக்காமல், நல்லடக்கம் செய்வது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா…
-
- 2 replies
- 310 views
-
-
கொள்ளைக்காரர்கள், பதுக்கல் பேர்வழிகளின் தலையில் இடி..! நிர்ணய விலையில் வட மாகாணத்திற்கு வருகிறது அத்தியாவசிய பொருட்கள்.. வடக்கே வரும் பொருட்களுக்கான விலைகள் இனி இறங்கும். கொரோன தொற்று நோய் காரணமாக வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள பொருள்களின் அதி கூடிய விலையேற்றத்தை தடுக்க வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு வரப்படவுள்ளன. இது தொடர்பில் அந்தந்த மாவட்ட செயலர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 5 மாவட்டத்திற்கும் ஒரு லட்சத்து 55 ஆயிரம் கிலோ சீனி 117 ரூபா விலையிலும் , ஒரு லட்சம் கிலோ வெங்காயம் 160 ரூபா விலையிலும் , ஒரு லட்சத்து 50 ஆயிரம் சமன் ரின் 100 ரூபா விலையிலும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிலோ அரிசி 98 ரூபா விலையிலும் அனுமதிக்க…
-
- 3 replies
- 518 views
-
-
ஊரடங்கு சட்டம் காரணமாக மேல் மாகாணத்தின் முக்கிய நகரங்களில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மேல் மாகாண ஆளுநர் மாஷல் ஒப் த பீல்ட் ரொஷான் குணதிலக இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து மேல் மாகாணத்தின் முக்கிய நகரங்களில் பல்வேறு தொழிற்துறைகளுக்காக தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளவர்களை மீண்டும் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் மாஷல் ஒப் த பீல்ட் ரொஷான் குணதிலக தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 208 views
-
-
முதலை கடித்து, உயிரிழந்த நிலையில், இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்னது. வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புனாணை மைலந்தனை பிரதேசத்தில் முதலை கடித்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று (03.04.2020) மாலை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். நாட்டின் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் உணவுக்காக மைலந்தனை பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத நிலையில் இளைஞனை முதலை கடித்து இழுத்து சென்றதாக இவருடன் மீன்பிடிக்க சென்ற நண்பர்கள் தெரிவித்தனர். புனாணை மைலந்தனை பகுதியைச் சேர்ந்த தியாகராஜா கஜேந்திரன் (வயது 15) எனும் இளை…
-
- 12 replies
- 997 views
-
-
“கொரோனா உங்களை அணுகாது” என்ற தலைப்பில் யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகை யொன்று விளம்பரம் ஒன்றை கடந்த 15ஆம் திகதி பிரசுரித்திருந்தது. இதனைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய பிரதமர் மகிந்த இப்படி பொறுப்பற்ற விதத்தில் விளம்பரம் பிரசுரித்ததற்கு தனது கண்டனத்தை வெளியிட்டார். கட்சித் தலைவர்கள் கூட்டமானது நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்தது. இதில் வைத்தே குறித்த விளம்பரம் தொடர்பில் பிரதமர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கிறிஸ்தவ மதபோதனை ஒன்று தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகையொன்று விளம்பரம் செய்துள்ளது . “கொரோனா உங்களை நெருங்காது” என்ற அந்த விளம்பரத்தில் இலக்கம் – 14 ராசாவத்தை, சுதுமலை வீதி, மானிப்பாய் பகுதியில் இடம்பெற…
-
- 1 reply
- 411 views
-
-
கொரோனா வைரஸின் அச்சம் அதிகரித்துள்ள நிலையில் நாட்டில் உள்ள 24 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் சுகாதாரம், பாதுகாப்பினை உறுதி செய்யும் முகமாக சர்வதேச செஞ்சிலுவை குழுமத்தின் இலங்கை பேராயம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவை குழுவின் (ஐ.சி.ஆர்.சி) இலங்கை பேராயமானது பொதுமக்களையும், தடுத்து வைக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்புடன், நீதி அமைச்சு. சிறைச்சாலைகள் திணைக்களம், பொலிஸ் மா அதிபர், ஏனைய அதிகாரிகள் ஆகிய தரப்புக்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதுதொடர்பில், ஐ.சி.ஆர்.சியின் இலங்கைக்கான பேராயத்தின் தலைவர் லுக்காஸ் பெட்ரிடிஸ் கூறு…
-
- 0 replies
- 532 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இன்று மாலை மாலை 5.30 மணியுடன் நிறைவடைந்த 48 மணி நேரத்துக்குள் 11 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று 8 பேரும், இன்று மட்டும் புதிதாக மூன்று தொற்றாளர்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட 11 தொற்றாளர்களில் தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பி, கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொற்று நீக்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பட்ட ஒருவரும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் தகவல்கள…
-
- 3 replies
- 469 views
-
-
(தி.சோபிதன்) யாழ்ப்பாணம், அாியாலை பிலதெல்பியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகருடன் பழகிய 346 போ் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இவா்கள் எவரும் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை எனவே ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவாா்கள் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளாா். இது குறித்து மேலும் அவா் கூறுகையில், அாியாலை பிலதெல்பியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகருடன் பழகிய 346 போ் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் தாவடியில் 163 குடும்பங்கள் மற்றும் காங்கேசன்துறை தனிமை…
-
- 81 replies
- 6k views
- 1 follower
-