Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் கைதிகள் ஐவர் விடுதலை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் கைதிகள் ஐவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மெகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குறித்த நபர்களை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். பளை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1261557

  2. ஒற்றையாட்சி முறையே இலங்கைக்கு நல்லது: மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது தேர்தல் அறிக்கையை திங்களன்று கொழும்பில் வெளியிட்டுள்ளார். "மஹிந்த சிந்தனை – நீட்டிக்கப்பட்ட வடிவம்" என்று பெயரிடப்பட்ட இந்த அறிக்கையை, கொழும்பில் உள்ள பண்டாரநாயக நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்வின்போது அவர் வெளியிட்டார். பிரிக்கப்படாத ஒரு ஒருங்கிணைந்த ஒற்றையாட்சி முறையே இலங்கையில் இருக்கவேண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. அமைச்சர்களும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டவர்களும் கலந்துகொண்ட இந்த வைபவம் அரச தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் ஜனாதிப…

    • 0 replies
    • 798 views
  3. மண்டேலா வரலாற்று பின்னணியில் வடக்கும், தெற்கும் சந்திக்கும் நிகழ்வு மாமனிதர் நெல்சன் மண்டேலாவின் வரலாறு, இந்நாட்டு மக்களுக்கு தரும் படிப்பினைகளின் பின்னணியில் இந்நாட்டு சிங்கள, தமிழ் மக்களின் மனசாட்சிகள் உரையாடும் நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தில் 16ம் திகதி திங்கட்கிழமை பௌர்ணமி விடுமுறை தினத்தன்று காலை 9.30 மணிக்கு, ஜ.ம.மு தலைவர் மனோ கணேசனின் தலைமையில் நடைபெறவுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட செயற்குழு ஏற்பாடு செய்துள்ள மாமனிதர் நெல்சன் மண்டேலாவுக்கான இந்த அஞ்சலி மற்றும் உரை நிகழ்வில், சிங்கள பௌத்த மக்களின் ராஜகுருவாக கருதப்படும் கோட்டே ரஜமகா விகாராதிபதி வண. மாதுலுவாவே சோபித தேரரும், வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்ற…

  4. சனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவினை ஆதரிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கு எதிராக தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னம் சனாதிபதி வேட்பாளர் மகிந்தராஜபக்ஷவினை ஆதரிக்க முன்வந்துள்ளார். நேற்றும் இன்றும் வன்னியில் மல்லாவி, யோகபுரம், துணுக்காய் போன்ற இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார். இடம் பெயர்ந்து வன்னியில் மீளக்குடியேறியுள்ள மக்கள் மகிந்த ராஜபக்ஷவிற்கே வாக்களிக்கவேண்டும். அதன் மூலம் பல அபிவிருத்திகளை (?) ஏற்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாளை திங்கள் மல்லாவியில் நடைபெறவுள்ள முக்கிய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பின…

  5. தாஜுதீன் கொலை வழக்கு: கைதாவாரா சட்ட வைத்திய அதிகாரி? ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் உடற் கூற்றுச் சோதனையை மேற்கொண்ட முன்னாள் கொழும்பு சட்டவைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைது செய்ய முடியும் என சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க முன்னிலையாகியிருந்தார். அவர் அறிக்கை ஒன்றையும் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வசீம் தாஜுதீன் காணமல்போன உடல் பாகங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சமரசேகர குற்றவாளி என அடையாளம்…

  6. 24.01.2010 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி முழுவதும் நடைபெற்ற வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் மீதான மீள் வாக்குகணிப்பில் 99,2 வீதமான யேர்மன்வாழ் தமிழ்மக்கள் இறைமையுள்ள தனித் தமிழீழ அரசினை நிறுவுவதற்கு தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். யேர்மனி முழுவதும் வாக்களித்த 23089 வாக்காளர்களில் 22904 வாக்காளர்கள் தனித் தமிழீழ அரசினை நிறுவுவதற்கு ஆம் என்றும் 136 வாக்காளர்கள் இல்லை என்றும் 49 வாக்குகள் செல்லுபடியாகாத வாக்குகளாகவும் பதிவாகியுள்ளன. இதன் படி வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் அடிப்படையில் இறைமையுள்ள தனித் தமிழீழ அரசினை நிறுவுவதற்கு 99,2 வீதமான மக்கள் ஆம் என்றும் 0,59 வீதமான மக்கள் இல்லை என்றும் வாக்களித்ததுடன் 0,21 வீதமான வாக்குகள் செல்லுபடியாற்றதாக பதிவாகியுள்ளதாக தேர்தல்குழ…

  7. 12 முக்கிய இராணுவ உயரதிகாரிகளை ஓய்வு பெறுமாறு கோரிக்கை 12 முக்கிய இராணுவ உயரதிகாரிகளை ஓய்வு பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மூன்று மேஜர் ஜெனரல் உள்ளிட்ட 12 உயர் இராணுவ அதிகாரிகளிடம் இவ்வாறு பதவியிலிருந்து ஓய்வு பெறுமாறு கோரப்பட்டுள்ளது. பதவியிலிருந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்திற்கு தொடர்ந்தும் அவர்களது சேவை அவசியமற்றதெனவும், அவர்களை ஓய்வு பெற்றுக் கொள்ளுமாறும் அரசாங்கம் கோரியுள்ளது. இரண்டு பிரிகேடியர்கள், கேணல்கள், லெப்டினன் கேணல்கள் மற்றும் கப்டன்கள் ஆகிய தரங்களை உடையோரும் இந்த உயர் இராணுவ அதிகாரி பட்டியலில் அடங்குகின்றனர். …

  8. ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் வழக்கிலிருந்து, விடுவிக்கப்பட்டார் பூஜித் ஜயசுந்தர! ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நாமல் பலல்லே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷதீன் ஆகிய மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று(வெள்ளிக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக அவர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது. இதேவேளை, ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளில…

    • 1 reply
    • 293 views
  9. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 09.02.2010 அன்று ஒலிபரப்பாகிய கொழும்புச் செய்தியாளரின் செய்தித் தொகுப்பு. நன்றி- ATBC

  10. மஹிந்த உள்ளிட்ட ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுவது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறினார். அரசாங்க அதிகாரிகள் தேர்தலில் ஈடுபடும் போது உள்ள புதிய சட்டதிட்டங்கள் குறித்து இதன்போது கவனத்திற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அ…

  11. இரண்டாயிரம் கெக்ரேயர் வரையான நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டது! February 26, 2022 முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு சிராட்டிகுளம் பகுதியில் சுமார் இரண்டாயிரம் கெக்ரேயர் வரையான நிலப்பரப்பு கடந்த இரண்டு நாட்களுக்குள் இரகசியமாக முன்மொழியப்பட்ட வனப் பிரதேசங்களாக வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு சிராட்டிகுளம் நட்டாங்கண்டல் பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான சுமார் இரண்டாயிரம் கெக்ரேயர் வரையான நிலப்பரப்பு கடந்த இரண்டு நாட்களுக்குள் இரகசியமான முறையில் முன்மொழியப்பட்ட வனப் பிரதேசங்களாக வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு …

  12. -மொஹொமட் ஆஸிக் கண்டி நகரிலுள்ள வெளிநாட்டு வேலை வழங்கும் நிறுவனம் ஒன்றிக்கு முன்பாக 14,12,7 வயதுகளை உடைய தனது மூன்று பிள்ளைகளையும் கைவிட்டுவிட்டு தலைமறைவான தந்தையை தேடி வலைவிரித்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர். கைவிடப்பட்ட குழந்தைகையில் 7 வயதுடைய பிள்ளை பெண் என்றும் மற்றைய இருவரும் ஆண்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். குழந்தைகளின் தாய், கண்டியிலுள்ள வெளிநாட்டு வேலை வழங்கும் நிறுவனம் ஒன்று மூலமாக மத்திய கிழக்கு நாடொன்றிற்கு பணிப் பெண்ணாகச் சென்றுள்ளார்.இந்நிலையில்,நேற்று மாலை அவரின் கணவர் தனது மூன்று பிள்ளைகளையும் குறித்த நிறுவனத்திற்கு அழைத்து வந்து அவர்களைக் அங்கு கைவிட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். மேற்படி மூன்று பிள்ளைகளையும் கண்டி நீதவான் மன்றில் ஆஜர் செய்ய…

  13. சமஷ்டி நாட்டை பிள­வு­ப­டுத்­தாது என்­பதில் எமக்கு நம்­பிக்­கை­யில்லை வடக்­கிற்­கான சிறப்பு அதி­கா­ரங்கள் மலை­ய­கத்தை போர்க்­க­ள­மாக்கும் என்­கி­றது அஸ்­கி­ரிய பீடம் (லியோ நிரோஷ தர்ஷன்) சமஷ்டி முறைமை நாட்டை பிள­வு­ப­டுத்தி பிரி­வி­னை­வா­தத்தை தோற்­று­விக்­காது என்­பதில் நம்­பிக்­கை­யில்லை. ஒற்­றை­யாட்­சிக்கு ஆபத்து ஏற்­ப­டுத்த கூடிய எந்­த­வொரு அர­சியல் அதி­கார கோரிக்­கைக்கும் அங்­கீ காரம் வழங்க முடி­யாது. வடக்கு மாகா­ணத்­திற்கு கூடுதல் அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்டால் மலை­யகம் அடுத்­தப்­ப­டி­யாக போர் கொடி தூக்கும் என அஸ்­கி­ரிய பீடத்தின் தலைமைச் செய­லாளர் மெத­கம தம்­மா­னந்த அநு­நா­யக்க…

  14. இம்முறை தமிழ்க்கூட்டமைப்பு பேராசிரியர் இரா.சிவச்சந்திரன், சட்டதரணி ரமேடியஸ், அதிபர்கள் போன்ற கல்வியாளர்களை உள்வாங்கிஉள்ளது இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து அது தொடர்பான சர்ச்சைகளும், விமர்சனங்களும் அடங்கும் முன்னரே இன்னொரு தேர்தலுக்கு நாடு ஆயத்தமாகி விட்டது. நாட்டின் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதி வசம் குவிந்து இருந்தாலும், நாடாளுமன்றுக்கான 225 மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு நாட்டு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், வழக்கம் போலவே பல்டிகள், பேரம் பேசல்கள், தாவல்கள், குழிபறிப்புக்களும் உச்சக்கட்ட நாடகத்தை ஆடிக்கொண்டிருக்கின்றன. கடந்த பொதுத்தேர்தலில் இருபத்திரண்டு தமிழ்க்கூட்டமைப்பு உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பி வைத்த தமிழ்மக்கள் இப்பொதுத…

  15. பொருத்து வீடு­கள் அமைக்­கும் பணி வடக்­கில் டிசெம்­ப­ருக்­குள் ஆரம்­பம் அமைச்­சர் சுவா­மி­நா­தன் தெரி­விப்பு “வடக்கு மாகா­ணத்­தில் பொருத்து வீடு வேண்­டும் என ஆயி­ரக் கணக்­கான குடும்­பங்­கள் விண்­ணப்­பித் துள்­ளன. அவர்­க­ளுக்­கான வீடு­களை அமைக்­கும் பணி­கள் இந்த வரு­டத்­துக்­குள் ஆரம்­பிக்­கப்­ப­டும். அதற்கு எந்­தத் தடை­கள் வந்­தா­லும் எதிர்­கொள்­வ­தற்­குத் தயார்”இவ்­வாறு கொழும்பு மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம். சுவா­மி­நா­தன் தெரி­வித்­தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: வடக்கு மாகா­ணத்­தில் பொருத்து வீடு வழங்­கு­மாறு கோரி ஆயி­ரக் கணக்­கான குடும்­பங்­கள் விண்­ணப்­பித்­துள்­ளன. அந்த விண்­ணப்­பங்­க­ளின் அடிப்­ப­டை­ய…

  16. புதிய ஆணையாளருக்காகக் காத்திருக்கும் கல்முனை மக்கள் -கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கல்முனை மாநகரசபையின் முன்னாள் ஆணையாளர் ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக இடமாற்றம் வழங்கப்பட்டு அவ்விடத்தை நிரப்புவதற்காக திருவாளர் என்.சிவலிங்கம் அவர்கள் கடந்த 02ம் திகதி நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தனது கடமைகளை இதுவரையில் பெறுப்பேற்காமல் இருப்பது கல்முனை மக்களின் அபிவிருத்திகளை மேலும் பின்நகர்த்தும் விடயமாகவே இருக்கின்றது என கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார். அவர் உடன் வந்து தனது பதவியைப் பாரமெடுத்து கல்முனை மக்களின் ஏக்கத்தினைத் தீர்க்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்த…

    • 0 replies
    • 246 views
  17. பயங்கரவாதத் தடை... தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலம் நிறைவேறியது – பிள்ளையான், திலீபன் ஆதரவு !! சிவநேசதுரை சந்திரகாந்தன், திலீபன் ஆகியோரின் ஆதரவுடன் பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேறியது. குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் நாடாளுமன்றில் கிடைத்தன. இதனை அடுத்து பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததுடன் அச்சட்டம் குறித்து இன்று நாடாளுமன்றில் கடும் அதிருப்தியும் வெள…

    • 4 replies
    • 380 views
  18. வெள்ளி, மார்ச் 12, 2010 09:39 சிறீலங்காவுக்கு யப்பானும் 250 மில்லியன் டொலர் கடனுதவி சிறீலங்காவில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளுக்கென யப்பான் 250 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க முனவந்துள்ளதாக சிறீலங்காவின் அமைச்சர் காமினி லக்ஸ்மன் பீரீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கொத்மலை பகுதியில் மேற்கொள்ளப்படும் நீர்சக்தி மின்உற்பத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் நீர் விநியோக அபிவிருத்திகளுக்காக யப்பான் 250 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. யப்பானின் இந்த உதவிகள் போர் நடைபெற்ற வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கும் விஸ்த்தரிக்கப்படவுள்ளது. யப்பானின் அனைத்துலக கூட்டுறவு அமைப்பு சிறீலங்காவின் நீர் மின் உற்பத்திக்காக 50 …

    • 5 replies
    • 421 views
  19. இப்­ப­டி­யும் பொலிஸ் அதி­கா­ரியா? : ஆச்­ச­ரி­யப்­பட வைத்த நேர்மை பொலிஸ் அதி­கா­ரி­யின் செயற்­பாடு வங்கி நிர்­வா­கத்­தி­னரை வியக்க வைத்­துள்­ளது. கோரிக்­கைக்கு அதி­க­மான பணத்தை வங்கி வழங்­கிய நிலை­யில், அந்­தத் தொகையை மீண்­டும் வங்­கி­யி­லேயே பொலிஸ் அதி­காரி ஒப்­ப­டைத்­துள்­ளார். இது தொடர்­பில் பொலிஸ் அதி­காரி மேலும் தெரி­வித்­த­தா­வது: மகனின் கல்­விக்­காக இடைக்­கி­டையே பணம் அனுப்பி வைப்­பேன். இதற்காக வங்­கி­யின் சிலா­பம் கிளைக்குச் சென்று எனது வங்கி கணக்­கில் இருந்து 5 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மீளப்­பெற்­றேன். வங்­கி­யில் வழங்­கப்­பட்ட பணத்தை நான் கணக்­கிட்டு பார்க்­கா­மல் மார­வில வங்­கிக்குக் கொண்டு சென்று அந்­தப் பணத்­தில் 5 ஆயி­ரம் ரூபா மா…

  20. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்கான சிறந்த ஆரம்பமாக மாகாண சபை முறைமையே சிறந்த என்ற தனது வழிமுறையை தமிழ் தரப்புக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதை வரவேற்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்தோடு வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவருத்தி உட்பட பல திடடங்களுக்கான கோரிக்கைகளையும் இந்தியாவிடம் முன்வைத்துள்ளார். மேலும், தமிழ் மக்களின் கலாசார விழுமியங்களையும் பாரம்பரியங்களையும் பாதுகாத்து வளர்த்தெடுப்பதற்காக யாழ்ப்பாணத்தில் நவீன வசதிகள் அடங்கிய கலாசார நிலையத்தினை அமைத்து தந்தமைக்காக இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் இலங்கை தமிழ் மக்கள் சார்பான தனது நன்றியை அமைச்சர் டக்ளஸ் தேவான…

  21. அனைவரும் உறக்கத்தில் இருக்கையில் விழித்திருந்த எமக்கு மக்கள் வாக்களிப்பர்: மனோ கணேசன் கொழும்பில் தமிழ் பேசும் மக்கள் துன்பப்பட்ட போது விழித்திருந்து நாம் மக்களுக்காக போராடினோம். அந்த போராட்டம் இன்றும் சுறுசுறுப்பாக தொடர்கிறது. நாம் மக்களுடன் இருந்தபோதும், இருக்கும்போதும் எப்போதும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களுக்கும், துன்பம் விளைவித்த கூடாரத்தை சேர்ந்தவர்களுக்கும் மனசாட்சியுள்ள மக்களால் ஒருபோதும் வாக்களிக்க முடியாது. ஆகவே எதிர்வரும் தேர்தலில், நமது ஜனநாயக மக்கள் முன்னணி மென்மேலும் பலம்வாய்ந்த ஒரு கட்சியாக வெற்றி பெறுவது உறுதியாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் இன்று, கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பு …

  22. கனடாவில் இருந்து கனடிய தமிழ்ப் படைப்பாளிகள்[ குழுமம் ]கழகத்தின் தலைவர் திரு நக்கீரன் அவர்கள் வழங்கிய நேர்காணலில் உள்ள சில விடயங்கள் தொடர்பாக வீரகேசரி வாரஏட்டின் பத்தி எழுத்தாளரும், அரசியல் ஆய்வாளருமான திரு இதயச்சந்திரன் அவர்கள் எழுதியுள்ள பதிலை இங்கு தருகிறோம். நக்கீரன் அண்ணன் வணக்கம். 1. எமது தீர்விற்கான திறவுகோல் டில்லியிடம் உள்ளதென கூறுகிறீர்கள். நல்லது. எமதுவிடுதலைக்கான வாசலை பூட்டி வைத்துள்ளது இந்தியா ,என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? தமிழ்நாடு- இந்தியா- உலகம் என்கிற பாதை 80 களோடு மாறிவிட்டது. புதிய உலக ஒழுங்கில், இந்துசமுத்திர பிராந்திய ஆதிக்கப்போட்டியில், சீனா-பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வகிபாகத்தை புறக்கணிக்க முடியாது. இலங்கையில் தற்போது நடைபெறும் முதலீட்டுப்…

  23. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். புதுக்குடியிருப்பு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த 25 வயதுடைய தயானந்தன் விஜியசாதனா மற்றும் 3 வயதுடைய தாயானந்தன் யர்சிகா ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் நிரப்பிவிட்டு திரும்பிய போது எதிரே வந்த வடி என அழைக்கப்படும் வாகனத்துடன் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.on…

    • 5 replies
    • 487 views
  24. யாழ்ப்பாணத்தில் ஹர்தாலுக்கு மக்கள் ஆதரவு வழங்கவில்லை - வியாபாரம் வழமை யாழ்ப்பாண நகரில் மக்கள் கூடும் இடங்களில் யாழ்ப்பாண பெண்கள் அமைப்பினர் மற்றும் தீவக மக்கள் என பெயர் குறிப்பிட்டு ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுவதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இருப்பினும் யாழ்ப்பாண நகரில் மக்கள் வழமைபோன்று தத்தமது கடமைகளில் ஈடுபட்டுவருவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். குறிப்பாக தனியார் மற்றும் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுவருகின்றன. வர்த்தக நிலையங்கள் வழமைபோன்று இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை தினம் ஆகையால் தனியார் கல்வி நிலையங்கள் வழமை போன்று இயங்குகின்றன. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு மரணதண…

  25. துயிலுமில்லத்தில் துரோகிகளின் விளம்பரங்கள்! தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்த சிங்களப் படைகளும் அதன் கைக்கூலிகளும் தமிழர்களுடைய வரலாற்று அடையாளங்களை அழித்தும் சிதைத்தும் வருவதுடன் அந்தச் சிதைவுகளைப் பயன்படுத்தி அவற்றின் மீது தமது தேர்தல் விளம்பரங்களைப் பிரசுரித்தும் இழிவு படுத்தல் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. மாவீரர் துயிலிடங்கள், மாவீர்களின் நினைவுச்சின்னங்கள், நினைவுத்தூபிகள், தமிர்களின் வரலாற்றுச் சான்றுகள் என அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்ற அதேவேளை அவற்றை இழிவுபடுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம் சிங்களக் கைக்கூலிகளால் இடித்தழிக்கப்பட்டன. இந்த …

    • 0 replies
    • 911 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.