Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளைவேன் சந்தேக நபர்களுக்கு மரண அச்சுறுத்தல் வெள்ளைவேன் ஓட்டுனர்களாக தங்களை அடையாளம் காட்டிக் கொண்ட இருவருக்கும் மரண அச்சுறுத்தல் நிலவுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைபாடு செய்துள்ளனர். http://tamil.adaderana.lk/news.php?nid=125046

    • 3 replies
    • 411 views
  2. வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமாக பொங்கல் பானை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளரான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், தனது பொங்கல் வாழ்த்துடன் விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகம் வாழ் எனது இனிய தமிழ் உறவுகளுக்கு பொங்கல் பானை சார்பில் எனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களை உழவர் திருநாளாம் இன்று மதம், குலம், நாடு கடந்து சகல தமிழ்ப் பேசும் உறவுகளுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன். பொங்கல் பானை தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் என்பதை நான் சொல்லி எனது இனிய உறவுகள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என அவர் மேலும் தெ…

    • 36 replies
    • 3.7k views
  3. மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்த திறைசேரி முறிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை மீதான இரு நாட்கள் விவாதம் அடுத்த மாதம் 18ஆம் ,19 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்த திறைசேரி முறிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை கடந்த வாரம் மத்திய வங்கியினால் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்ட போதிலும் சபாநாயகர் தடயவியல் கணக்கறிக்கையை சபையில் சமர்பிக்காது இருந்தார். எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்சியாக இது குறித்த கேள்வியை எழுப்பிய நிலையில் கணக்காய்வு அறிக்கையில் இணைப்புகள் இல்லாத அறிக்கையை சபைப்படுத்திய நிலையில் அது குறித்து எதிர்க்கட்சியினர் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலைய…

  4. வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கோரிக்கை Jan 26, 20200 கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக கொழும்பு தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.கொழும்பில் உள்ள பொது இடங்கள் மற்றும் ஹோட்டல் உணவகங்களுக்குள் நுழையும்போது ஹோட்டல் ஊழியர்கள் வருபவர்களிடம் அவர்களது வாயை நன்றாக கழுவசொல்லுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பு நகரில் பெருமளவான சீனர்கள் வசிப்பதால் சீனர்களின் பாதுகாப்பிற்காக இந்த முறையைப் பின்பற்றுமாறு மருத்துவர் அறிவுறுத்தினார் http://www.samakalam.com/செய்திகள்/வைரஸ்-அச்சுறுத்தலை-அடுத்/

    • 21 replies
    • 2.3k views
  5. காலி பிரதேசத்தில் நேற்று இரவு வீடு ஒன்றுக்குள் நுழைந்த திருடன் அங்கு பொருட்களை திருடும்போது வீட்டிலுள்ளவர்கலிடம் சிக்கி உள்ளான். இந்நிலையில் குறிப்பிட்ட திருடன் தனக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாகவும் . எனது அருகில் வந்தால் உங்களுக்கும் அது பரவும் என எச்சரித்து வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி தம்மை நெருங்கவிடாமல் செய்து அவ் வீட்டில் இருந்த தங்க நகைகள் சிலவற்றையும் கொள்ளையடித்து சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகி https://www.madawalaenews.com/2020/01/blog-post_157.html

    • 2 replies
    • 842 views
  6. சீன நாட்டினருக்கான விசா வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சீன நாட்டினருக்கான விசா வழங்கும் நடவடிக்கையில் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி சீன நாட்டிலிருந்து நாட்டிற்கு வருகை தருவதற்கு விசா வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. எனினும் இலங்கையில் உள்ள சீன நாட்டவர்கள் அவர்களது நாட்டிற்கு செல்வதில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இதுவரையில் 106 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு 4515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டற…

    • 1 reply
    • 352 views
  7. விடுதலைப்புலிகளுடனான போரின்போது காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கரை நேற்று (சனிக்கிழமை) சந்தித்த ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்ததுடன், இச்சந்திப்பில் காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தனது திட்டங்களையும் எடுத்துக் கூறியுள்ளார். மேலும் காணாமல்போனவர்கள் உண்மையில் இறந்துவிட்டதாகவும், அவர்களில் பெரும்பாலோர் விடுதலைப் புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அல்லது கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்தோடு அவர்கள் தொடர்பாக தேவையான விசாரணைகள் முடிந்ததும், காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க நடவடிக்கை எ…

    • 12 replies
    • 1.8k views
  8. 61 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் இவர்களுக்கு விளக்கமறியல் இன்று (28) நீடிக்கப்பட்டுள்ளது. நுவரேலியாவில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செ…

    • 0 replies
    • 524 views
  9. வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மீது முல்லைத்தீவு பொலிஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சென்ற அவர் பிணையில் விடுதலையாகியிருந்தார். இதேவேளை வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜ…

    • 0 replies
    • 272 views
  10. இலங்கையில் நீதித்துறை சுயாதீனமாக உள்ளது என கூறுவதற்கு இந்த ஆட்சியாளர்களுக்கு தகுதி இல்லை – சுமந்திரன் இலங்கையில் நீதித்துறை சுயமாக செயற்படாதவாறு பலர் செயற்படுகின்றனர். நீதித்துறையை சுயாதீனமாக செயற்படவிடவில்லை என பலர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.முக்கியமாக வழக்குகள் இவ்வாறு நடத்தப்படாது தடை செய்யப்படுமாக இருந்தால் இதைவிட நீதித்துறையில் தலையீடு வேறு எதுவுமாக இருக்க முடியாது என சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இலங்கையில் நீதித்துறை சுயாதீனமாக உள்ளது என கூறுவதற்கு இந்த ஆட்சியாளர்களுக்கு தகுதி இல்லை.பல சம்பவங்கள் இருக்கின்றன. உங்களுடைய பிரதேசங்களிலேயே பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இது இப்படியாக நடக்குமாக இருந்தால், இந்தநாட்டிலே நீதித்துறை சுயாதீன…

  11. ’ஆதரவு வழங்கினால் வணக்க ஸ்தலத்தை அமைக்கத் தயார்’ -எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன் பல்கலைக்கழகச் சமூகம் தமம்மால் முன்வைக்கப்படும் வணக்கஸ்தல அமையவுள்ள திட்டத்துக்கு ஆதரவு வழங்கினால், ஆதீனம் பொறுப்பெடுத்து வணக்க ஸ்தலத்தை அமைக்கத் தயாராக உள்ளதாக, தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி வண. கலாநிதி டெனியல் எஸ்.தியாகராஜா தெரிவித்தார். இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கண்டி - பேரதெனியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தென்னிந்திய திருச்சபையால் வணக்கஸ்தலங்கள் அமைக்கப்பட்டுள்ளனவெனவும் அதேபோன்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்திலும் அமைப்பதற்கு தாம் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். அதற்கு பல்கலைக்க…

  12. நீதியை பெற்றே தீருவோம் - எம். ஏ.சுமந்திரன். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு காலங்கடந்தாலும் நீதியை பெற்றே தீருவோம் என பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் அவர்கள் தெரித்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அமைக்கப்பட்ட சனசமூக நிலையத்தின் திறப்பு விழாவும் கல்விச் சாதனையாளர்கள் கௌரவிக்கும் நிகழ்வும் இன்று(27-01-2020) நடைபெற்றுள்ளன. கிளிநொச்சி பரந்தன் பகுதியில் பா.ம.உறுப்பினர் அவர்களின் நிதியொதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட சனசமூக நிலையம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு எம்.ஏ.சுமந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் தே.கூ.அமைப்பின் பிரதிநிதிகள், மாணவர்கள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்ட னர் இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எ…

  13. யாழ். பல்கலை வளாகத்தில் பௌத்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை 6.15 மணியளவில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேவேளை, குறித்த பல்கலைக்கழக வளாகத்தில் நான்கு வணக்கஸ்தலங்கள் அமைப்பதற்கு தலா ஒரு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டது. எனினும் அந்த இடத்தில் ஏனைய வணக்கஸ்தலங்களை அமைப்பதற்கு சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நான்கு வணக்கஸ்தலங்களும் சம அளவு உயரத்தை கொண்டதாக அமைய வேண்டும் என்பது பல்கலைக்கழகத்த…

    • 3 replies
    • 968 views
  14. தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு சுமந்திரன் தமிழ் மக்களின் தலைவராக வருவதாக இருந்தால் அது தமிழ் மக்களுக்கான சாபக்கேடு என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கட்டப்பிராயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று (14) நடைபெற்ற ஊடகவயலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையிலி, தொடர்ச்சியாக தமிழ் மக்கள் பல்வேறு பட்ட இன்னல்களை எதிர் கொண்டு வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. தற்போது வந்துள்ள அரசாங்கம் என்பது தமிழ் மக்கள் கொஞ்சமாவது அனுபவித்து வந்த அற்பசொற்ப உரிமைகளைக் கூட இல்லாமல் செய்கின்ற போக்கினை தான் எங்களால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஐக்கி…

  15. -செ.கீதாஞ்சன் 2020 ஜனவரி 27 , பி.ப. 03:48 முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த தினத்தன்று 2009.05.18 அன்று பிறந்த மாணவியான நிஷாந்தி உஷாந்தன் (வயது 10) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கூளாமுறிப்பு அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில் குறித்த மாணவி சித்தியடைந்துள்ளார். இந்த மாணவிக்கு ஆங்கில கல்வி நிறுவனமொன்றினால் விருது வழங்கி கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது. 24ஆம் திகதியன்று, கூளாமுறிப்பு அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், குறித்த மாணவி உட்பட புலமைபரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். http://www.tamilmirror.lk/வன்னி/இறுத…

    • 0 replies
    • 925 views
  16. இனவாத பேய்களை கண்டு வேட்டியை நனைத்த விமல் வீரவங்ஸ..! மன்னாரில் தமிழ் மொழி இரண்டாம் இடத்தில், சிங்களம் முதலாமிடத்தில்.! மன்னார் மாவட்டத்தில் அமைச்சர் விமல் வீரவங்ஸ திறந்துவைத்த தும்பு தொழிற்சாலையின் பெயர் பலகையில் தமிழ் மொழி இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. குறித்த பெயர் பலகையில் தமிழ் மொழி 1ம் இடத்தில் இருந்த நிலையில் சிங்கள இனவாதிகளின் கூச்சலினால் இனவாத அமைச்சரின் உத்தரவையடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடக்கூடாது என்கிற தர்க்கம் பேசப்பட்டு வரும் நிலையில், மன்னார் மாவட்டத்தில் மேற்படி இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.சிறு வணிக அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த சனிக்கிழமை மன்னார் மாவட்டத்திற்கு பனந்தும்பு …

  17. கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை சீனாவிலிருந்து வருகைதரும் பயணிகளைக் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட வௌியேறும் பிரிவினூடாக வௌியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் விசேட மருத்துவப் பிரிவினூடாக பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் விமான நிலையத்தின் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விமான நிலையத்தின் அனைத்து ஊழியர்களையும் முகக்கவசத்தை அணிந்துகொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர். இதனிடையே, கொரோனா வைரஸ் தாக்கத்தைத் தடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாட…

    • 1 reply
    • 862 views
  18. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் விகாரைக்கு கலசம் -எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு, இன்று (27), காலை 6.15 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேவேளை, குறித்த பல்கலைக்கழக வளாகத்தில், ஏனைய வணக்கஸ்தலங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நான்கு வணக்கஸ்தலங்கள் அமைப்பதற்கு தலா ஒரு ஏக்கர் காணி வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஏனைய வணக்கஸ்தலங்களை அமைப்பதற்கு, சம்பந்தப்பட்டவர்கள் இன்று வரை நடவடிக்கை மே…

    • 0 replies
    • 384 views
  19. ’சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்து என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும்’ -செ.கீதாஞ்சன் “ஜனாதிபதி போர் காலத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்த காரணத்தினால், நாட்டின் ஜனாதிபதி என்றவகையில் படையினரிடம் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக தீர்வு காணவேண்டியுள்ளது” என்று, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில், நேற்று (26), கட்சி தொண்டர்களுடனான சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார் இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு …

    • 0 replies
    • 421 views
  20. வடக்கு கிழக்கில் அபிவிருத்தி, மேம்பாட்டுக்காக புத்திஜீவிகள் அமைப்பு: யாழ் ஆயர் இல்லத்தில் அங்குரார்ப்பண கூட்டம் வடக்கு கிழக்கில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டை முன்னெடுத்துச்செல்லும் நோக்கத்துடன் ‘தமிழ் மக்கள் அபிவிருத்தி, மேம்பாட்டுக்கான மன்றம்’ ஒன்றை அமைத்து செயற்படுவதற்கான அங்குரார்ப்பண கூட்டம் யாழ் மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய ஜஸ்ரின் பேணார்ட் ஞானப்பிரகாசம் அவர்களின் இல்லத்தில் இன்று ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடக்கு கிழக்கில் உள்ள துறைசார் பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பொருளியலாளர்கள், புலமையாளர்கள், கல்வியாளர்கள், தொழில்சார் நிபுணர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இது தொடர்பில் கூட்டத்தில் கலந்…

    • 5 replies
    • 642 views
  21. பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் குருணாகலில் களமிறங்கும் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிச்சயமாக குருணாகல் மாவட்டத்திலேயே போட்டியிடுவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இன்று (27) காலை கட்சி தலைமையகத்தில் இடம்பெற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சியின் தலைவர் ஜீ.எல் பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த பொதுத்தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருணாகல் மாவட்டத்தில் பாரிய வெற்றி பெற்றதாகவும் அதனால் எப்போதும் குருணாகல் மக்கள் வழங்கிய ஆதரவை மறப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=125042

    • 0 replies
    • 397 views
  22. கோத்தா ஜனாதிபதி, சஜித் பிரதமர் - கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்

  23. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் அங்கொடையில் அனுமதி கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நிலையில் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென விமான நிலைய சுகாதார பிரிவின் வைத்தியர் சந்திக்க பண்டார விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். இவர்களில் 47 வயதான இந்திய பெண் ஒருவருக்கே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. அந்த பயணி விமான சேவை ஊழியர் ஒருவரை அழைத்து தான் கடுமையான குளிரை உணர்வதாகவும் அதேபோல் சுவாசிக்க சிரமப்படுவதாகவும் தெரிவித்…

  24. வவுனியா- ஏ9 வீதியை அண்டிய பகுதியில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கை வவுனியா புளியங்குளம், ஓமந்தை‌ மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவமும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.சந்தேகத்திற்கிடமாக வீதியால் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்களும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டிருந்ததுடன், மோப்ப நாயின் மூலமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. நாடுமுழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் முகமாக ஜனாதிபதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கூறியதனையடுத்து, பொதிகளுடன் வருபவர்களிடமும் சந்தேகத்திற்கிடமான பேருந்துகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில் வவுனியா- ஏ9 வீதியில் இராணு…

    • 2 replies
    • 647 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.