ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
வடமாகாண சபைத்தேர்தல்கள் மீண்டும் ஒக்ரோபர் வரை ஒத்திவைப்பு! வட மாகாணசபைத் தேர்தல்கள் ஒரு மாத காலத்திற்கு ஒத்தி வைக்கப்படலாம் என அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும், தேர்தலை ஒக்ரோபர் மாதத்தில் நடாத்த தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மாகாணசபை சட்ட மூலத்தில் திருத்தங்களைச் செய்யயும், இடம்பெயர் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கும் இந்தக் கால அவகாசம் பயன்படுத்திக்கொள்ளப்பட உள்ளது. மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை வரையறுக்கும் வகையில் அரசாங்கம் அவசர சட்டத் திருத்தங்களை செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பில் மாகாண முதலமைச…
-
- 0 replies
- 493 views
-
-
உறுதிமொழிகள் நேர்மையாக நிறைவேற்றப்படாவிடின் எதிர்பாராத நிலைமைகள் தோன்றலாம் – இரா.சம்பந்தன் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நேர்மையாக நிறைவேற்றப்படாவிடின், அது நாட்டில் எதிர்பாராத நிலைமைகளை தோற்றுவிக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மறைந்த சபாநாயகரும், அமைச்சருமான எச்.எம்.மொஹமட்டின் அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சகல இனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு நியாயமான தீர்வொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்பதுடன் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என எச்.எம்.மொஹமட் தீவிரமாக விரும்பியிருந்தார் என்பதனை ச…
-
- 1 reply
- 386 views
-
-
13ஆவது திருத்தச்சட்டத்தில் இரண்டு திருத்தங்களை எப்படியாவது கொண்டு வரவேண்டு என்ற அவசரம் அமைச்சரவையில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் சிறுபான்மை சமூகங்களுக்கென இருக்கும் அடிப்படைக் காப்பீடுகளை 13ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து அகற்றி விடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் துணைபோகாது என்று நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு திரும்பப் பெறுவது என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு இந்த விடயம் அணுகப்படுவதை என்னால் உணர முடிந்தது. இது 13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படை உயிர்நாடியையே அகற்றும் செயல். எனவே இதில் எமக்கு உடன்பாடில்லை. 13ஆவது…
-
- 0 replies
- 438 views
-
-
சட்டவிரோதமான முறையில் கடல்வழியாக படகில் கனடா செல்ல புத்தளம் – கற்பிட்டி, குரக்கன்ஹேன வீடு ஒன்றில் தங்கியிருந்த 24 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் என்றும், பயணிக்க பயன்படுத்திய லொறி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் கடற்படை தெரிவித்தது. இவர்களில் தாயும் இரண்டு சிறு பிள்ளைகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. சட்டவிரோதமாக கனடா செல்ல காத்திருந்த 24 பேர் கைது! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 101 replies
- 9.4k views
-
-
வடக்கு, வடமத்திய, மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலை செப்டம்பர் மாதம் ஒரே தினத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=16479
-
- 0 replies
- 259 views
-
-
பிளவுக்கு இடமில்லை: ஹக்கீம் சூளுரை ப. பிறின்சியா டிக்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை வளர்த்தெடுத்த பல்லாயிரக்கணக்கானோர் இந்த அரங்குக்கு வெளியே இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான போராளிகள் கவலையோடு இருக்கின்றனர். இந்த இயக்கத்துக்குப் பங்களித்த தாய்மார்கள், சகோதரிகள் யாருமே இங்கு கலந்துகொள்ள முடியாத நிலைமையில் இருக்கின்றார்கள். இவ்வாறானதொரு நிலையில், இந்த இயக்கத்தைப் பிளவு -படுத்துவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்” என்று, காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். “காங்கிரஸின் உயர்பீடத்துக்கான தெரிவு நடைபெற்ற போது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்த விவகாரம், பக்கத்தில் இருந்த எங்களுடைய முன்ன…
-
- 0 replies
- 237 views
-
-
பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகள் எவையும் இல்லை – சிபோன் 21 Views ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பிரித்தானியா சமர்ப்பித்துள்ள தீர்மானத்தில் சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து பொறுப்புக் கூறலை முன்னெடுப்பதற்கான எந்த பரிந்துரைகளும் இல்லை என இன்று (18) பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சிறீலங்கா தொடர்பான விவாதத்தின் போது பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சிபொன் மக்டொனாக் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் தோல்வியான தீர்மானம் அது ஏமாற்றம் தருகின்றது. அனைத்துலக நீதிமன்றத்திற்கு சிறீலங்காவை பாரப்படுத்துவதற்கான…
-
- 0 replies
- 253 views
-
-
மாவீரருக்கு செய்வோம் வீரவணக்கம்!! இன்று புலத்திலும் களத்திலும் நடந்துகொண்டு இருப்பது என்ன? அந்நியனும் சிங்களமும் இன்று வெற்றி திளைப்பில் இருக்கிறான் நாமோ பல தளபதிகளைய்ம் ஆயிரக்கணக்கில் போராளிகளையும் இழந்ததால் இடிந்து போய் இருக்கிறோம் யுத்தம் முடிந்த உடனேயே தலைவனை கொன்றோம் பொட்டரை கொன்றோம் என்றது தளபதிகளை நய வஞ்சயமாக கொன்றது ஆனால் எம் சூரிய புதல்வனை தொட முடியவில்லை தலைவனை கொன்றதாக சொல்லும் சிங்களம் முதலில் ஒரு பொம்மையினை வைத்து உலகினை ஏமாற்ற நினைத்தது Plastic Surgery பிழைத்ததுக்கான காரணம் தனது Video Clip என்று உணர்ந்தது அது பிசகி போகவே இன்று இன்னொரு விதமான இனொரு செட் படங்களை வெளியிட்டது அதில் தாடி முளைத்துவிட்டது காலையில் clean ஆக இருந்த முகம்…
-
- 3 replies
- 2.2k views
-
-
'சம்பந்தன் ஏமாற்றப்பட்டார்' -எஸ்.நிதர்ஸன் “எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டிருக்கின்றார் அல்லது இராஐதந்திர ரீதியில் தோல்வியடைந்திருக்கிறார் ”என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினுடைய 34 ஆவது கூட்டத்தொடர், எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. அதில் இலங்கை தொடர்பான விடயங்கள் தொடர்பாக ஒன்றரை வருட கால அவகாசம் இலங்கை அரசால் கேட்கப்பட இருக்கின்றத…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜுலியா கிலார்ட்டின் பதவி பறிபோக நாமல் ராஜபக்சவும் ஒருவகையில் காரணம் என்று சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; ஜனாதிபதியின் மூத்த மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அண்மையில் உத்தியோகபூர்வமான முறையில் அவுஸ்திரேலியா முன்னாள் பிரதமர் ஜுலியா கிலார்ட்டை சந்தித்து உரையாடியிருந்தார். அதன் பின் குறுகிய காலத்துக்குள் ஜுலியா கிலார்ட் தனது பிரதமர் பதவியைப் பறிகொடுக்க நேர்ந்தது. இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்ச உத்தியோகபூர்வமான முறையில் லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியைச் சந்தித்திருந்தார். அந்தச் சந்திப்பின் பின் சிறிது காலத…
-
- 0 replies
- 360 views
-
-
ஜ.நா பாதுகாப்புச் சபை பூட்டிய கதவினுள் இலங்கை நிலை குறித்து உத்தியோகப்பற்றற்ற முறையில் ஆராயும் என துருக்கிய அமைச்சர் தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் (வெள்ளி) இந்த கூட்டம் நடைபெறப்போவதாக துருக்கிக்கான ஜ.நாவின் அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் முடிவுற்றபின்னர் நடைபெறும் பாதுகாப்புச்சபையின் முதலாவது கூட்டம் இதுவாகும் என்பது, குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஜரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சிமுறையிலான தலைவர் பதவியை துருக்கி ஏற்க இருப்பதும், அதன் அமைச்சரான பாக்கி ஈல்கின் இலங்கையில் இறுதி யுத்தத்தில் 20,000 பேர்கொல்லப்பட்டதை மிகவும் கண்டித்திருக்கிறார். இதற்காக துரிக்கியை தமிழர்கள் நம்ப வேண்டாம் இவர்கள் மகிந்த கூட்டத்தின் அடிவருடிகள் தான் ஆனால் இவர்களுக்கு ஐரோ…
-
- 7 replies
- 1.6k views
-
-
Sri Lanka turns back 'mercy mission' aid ship
-
- 10 replies
- 2.3k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்துமாறும் தமிழர்களுக்கான தாயகம் - தன்னாட்சி - சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு வழங்குமாறும் இந்திய எதிர்க்கட்சித் தலைவரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான எல்.கே.அத்வானியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 443 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை ஆணையர் நவநீதம்பிள்ளை அடுத்த மாதம் சிறிலங்கா வர திட்டமிட்டுள்ள நிலையில் அவரது பாதுகாப்பு ஆலோசகரான ஏப்ராஹாம் மத்தாய் சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ளார். சிறிலங்கா வந்துள்ள அவர் தனது விஜயத்தின் முதல் கட்டமாக திருகோணமலை கடற்படை தலைமையகத்துக்குச் சென்று அங்கு கடற்படை அதிகாரிகளைச் சந்தித்து பேசியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இவர் சிறிலங்காவில் தங்கியிருக்கும் குறுகிய காலப்பகுதிக்குள் பல்வேறு தரப்பினரையும சந்தித்துப் பேசவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் சிறிலங்கா அரச தலைமைகளுடனான இவரது சந்திப்பு தொடர்பான தகவல்கள் மிக இரகசியமாகப் பேணப்டுவதாகக் கூறப்படுகிறது. http://goldtamil.com/?p=2762
-
- 0 replies
- 440 views
-
-
சிறிலங்காவின் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை மக்களின் கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலமான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டதையடுத்தே நடைமுறைப்படுத்துவது என அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 421 views
-
-
சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் இலங்கை வழங்கி வரும் ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது – அவுஸ்திரேலியா சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் இலங்கை வழங்கி வரும் ஒத்ஐதுழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இலங்கை பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது இந்த விடயம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். கனிய வளங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்த சந்திப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. http:/…
-
- 0 replies
- 124 views
-
-
முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கு இந்தியா அழுத்தங்களை வழங்கவேண்டுமென இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்துடனான சந்திப்பில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் முதற்கட்டமாக மீள்குடியேற்றப்படவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரியுள்ளனர். யாழ்ப்பாணம் உட்பட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இராணுவ ரீதியிலான நிலைமையினை கையாள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகக் கூறிய கூட்டமைப்பினர், இனப்பிரச்சினைக்கு இராணுவ ஆட்சியின் மூலம் தீர்வைக் காணமுடியாதெனவும் சுட்டிக்காட்டினர். எனவே, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இராணுவப் பரம்பல் தடுக்கப்படவேண்டுமெனவு…
-
- 0 replies
- 534 views
-
-
கடந்த 01ஆம் திகதி இராணுவத்தினரால் வெலிவேரியவில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான துப்பாக்கிக்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=26356
-
- 7 replies
- 594 views
-
-
மக்களின் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகியவற்றை ஒடுக்குவதற்கு அரசாங்கம் மீண்டும் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=26934
-
- 0 replies
- 390 views
-
-
ஏதிலிச் சிறுமிக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யுமாறு வன்னித் தளபதிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு காயமடைந்த நிலையில் வன்னி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஏதிலிக் குடும்பத்தைச் சேர்ந்த சோபிகா சுரேந்திரநாதன் (வயது 13) என்ற சிறுமியை உடனடியாக அநுராதபுரம் வைத்தியசாலையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு வன்னி இராணுவத் தளபதிக்கு சிறிலங்கா உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்தக் குடும்பத்தவர்கள் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் ஷிராணி பண்டாரநாயக்கா, சலீம் மர்க், ஜகத் பால பட்டபெந்தி ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவை நீதிமன்றம் விடுத்தது. பிரித்து வெவ்வேறு முகாம்…
-
- 0 replies
- 496 views
-
-
இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார் பிரதமர் ரணில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளவுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயமானது தனிப்பட்ட விஜயமாக அமையவுள்ள நிலையில் மறுநாள் 26 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மதிய போசனத்தில் கலந்துகொள்ளவுள்ளார். இந்திய வெளியுறவுத்தறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்களையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் வெஷாக் பண்டிகை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத…
-
- 9 replies
- 893 views
-
-
ஜெனிவா தீர்மானத்தில் முன்னேற்றம் இல்லை – இலங்கை குறித்த பிரதான நாடுகளின் குழு June 23, 2021 “ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்திலுள்ள முக்கியமான விடயங்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை” என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான முக்கிய நாடுகளின் குழு கவலை தெரிவித்திருக்கின்றது. கனடா, ஜேர்மனி, பிரிட்டன், வட மசிடோனியா, மலாவி, மொன்ரிகுறோ ஆகிய நாடுகளின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறப்பட வேண்டும், சிறுபான்மை மதத்தவர்கள் உள்ளிட்டவர்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அதன் 46/1 தீர்மானம் இலங்கையைக் கோரியிருந்தது. மார்ச் மாத …
-
- 1 reply
- 279 views
-
-
அனைத்துலக நாணய நிதியத்திடமிருந்து 2.6 பில்லியன் டாலரை கடனுதவியாக சிறிலங்கா பெற்றுக்கொண்ட பின்னர், அந்தக் கடனைப் பெற்றுக்கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் ஜுலை 16 இல் அனுப்பிவைத்த கடிதத்தை வெளியிடுமாறு அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் குறிப்பிட்ட கடிதம் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. முகாம்களில் மக்களைத் தடுத்துவைத்திருப்பதற்குப் பயன்படுத்தப்படாமல் அவர்களுடைய மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதற்கு முரணாக, இந்த நிதி முகாம்களுக்காகப் பயன்படுத்தப்படும் எனவும், இடம்பெயர்ந்த மக்களில் 70 முதல் 80 வீதமானவர்கள் இவ்வருட இறுதிக்குள் மீளக் குடியேற்றப்படுவார்கள் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகம…
-
- 0 replies
- 506 views
-
-
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்தகால போரின் போது காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்வதற்காக ஆணைக்குழு ஒன்றை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவித்துள்ளார். மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையிலான இந்த ஆணைக்குழுவில், டிமிங்கு பாததுருஹே பிரியந்தி சுரஞ்சனா வித்யாரட்ண மற்றும் மனோ இராமநாதன் ஆகியோர் இடம்பெறுவதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 6 மாதங்களில் இந்த ஆணைக்குழு தனது விசாரணைகள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்கள் காணாமல் போன சம்பவங்கள், கடத்தப்பட்ட சம்பவங்கள் ஆகியவற்றுக்கு பொறுப்பானவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இந்த ஆணைக்குழுவுக்கு …
-
- 2 replies
- 436 views
-
-
விரக்தியின் அடையாளமே வட, கிழக்கில் இன்று ஹர்த்தால் : சபையில் முதலமைச்சர் இன்று எம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தியின் அடையாளமாக ஒரு நிகழ்வு இந் நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெறுகின்றது என முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று(27) காலை ஆரம்பமான வட மாகாணசபை அமர்விலே முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவருடை உரை பின்வருமாறு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் இன்று நடைபெறுகின்றது. திருகோணமலையில் போராடிக்கொண்டிருக்கும் அப்பேர்ப்பட்ட மக்களைக் கூட்டாக அண்மையில் சந்தித்தேன். அதற்கு முன்னர…
-
- 0 replies
- 348 views
-