ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
'ஒரு செம்பு தண்ணி கொடுத்தவர்கள், தகவல் தெரிவிக்காதவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர், யுவதிகள் சிறைகளில் வாழ்கின்ற நிலையில், சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள், வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்படவிருந்ததாக முன்னரே அறிந்தும் அரசாங்கத்துக்கு தகவல் தெரிவிக்காத முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை கைது செய்து புனர்வாழ்வளிக்க வேண்டும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் வெள்ளிக்கிழமை (01) அவரிடம் கருத்துக்கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், …
-
- 1 reply
- 854 views
-
-
அதானியின் திட்டங்களை நிறுத்தியமைக்கு ரூ. 500 மில்லியனை இலங்கை செலுத்த வேண்டும் 19 July 2025 அதானி நிறுவனத்தின் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறுத்தியமை தொடர்பில் 300-500 மில்லியனை இலங்கை மீள் செலுத்த வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விலை நிர்ணயம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி திட்டங்களிலிருந்து விலகியது. இந்த ஆண்டு மே மாதம் திட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்து திட்டத்தை செயல்படுத்துவதற்காக இங்கு ஏற்பட்ட ஆரம்ப செலவுகளை திருப்பிச் செலுத்துமாறு கோரி கடிதம் அனுப்பப்பட்டது. பின்னர், எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளின் பேரில், இலங்கை நிலைபேறுதகு வலு அதிகாரசபை, இந்திய நிற…
-
- 1 reply
- 122 views
-
-
வெளி நாட்டு தமிழர்களின் நாடி பார்க்கும் "றோ" வெளி நாடுகளில் இந்தியாவிலிருந்து படையெடுக்கும் ஜோதிடர்களில் ஒரு பகுதியினர் றோ அமைப்பினரின் ஏஜன்டாக உள்ளனர்.அண்மையில் இந்தியாவுக்கு காசு அனுப்பும் போது ஜோதிடர் ஒருவர் உயரதிகாரிகளுக்கான கடவுச்சீட்டு(Diplomatic passport) வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.இவர் கனடாவின் மிசிஸாகா பகுதியிலுள்ள கடையொன்றில் பணம் அனுப்பும் போது இவ்விடயம் தெரிய வந்துள்ளது.இவர் பற்றி விசாரித்தபோது கிழமைக்கு $3000-5000 வரை இந்தியாவுக்கு பணம் அனுப்புவதாகவும் தெரிய வந்துள்ளது.இதைவிட முக்கிய விடயம்:-இந்து சமய முறைப்படி ஆலயம் போன்ற இடங்களில் தான் தகடுகளை வைத்து பூஜிக்க வேண்டும்.இதை வீடுகளில் வைப்பதால் குடும்பங்களில் பிரச்சனைகள் தலை தூக்கும் என்பது மரபு.இதைவிட…
-
- 3 replies
- 1.2k views
-
-
பொருத்து வீட்டுத் திட்டம் ; உடன் இடைநிறுத்த ஜனாதிபதி பணிப்பு - குழுவொன்றும் நியமிப்பு [ Thursday,7 April 2016, 03:32:31 ] வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொருத்து வீட்டுத் திட்டப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும், மீளாய்வின் பின்னர் அது தொடர்பில் முடிவெடுக்கலாம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஆராய குழுவொன்றையும் அவர் நியமித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் நடைபெற்றது. இதன்போது பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இந்த வீட்டுத் திட்டத்திற்கு பல்வேறு தரப்புக்களும் எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளன. இத…
-
- 0 replies
- 349 views
-
-
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு! ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க, முன்னர் செயற்பட்டிருந்தார். இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக சாட்சியமளிக்க ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பீ.பி. ஹேரத் தெரிவித்துள்ளார். லலித் பத்திநாயக்க இதற்கு முன்னரும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்ததுடன், ஆணைக்குழுவில் இது வரையில் 72 பேர் சாட்சியமளித்துள்ளனர் என…
-
- 0 replies
- 627 views
-
-
மெல்பேன் நகரில் கறுப்பு ஜூலையை நினைவுகூறும் முகமாக நடந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.முழுக்க முழுக்க இளையோரின் பங்களிப்புடன் பெரியோரின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில் வைக்கப்பட்ட ஒளிப்படங்கள் வேறு இன மக்களை கவர்ந்தது மட்டுமல்ல என்னவென வினாவி இலங்கை அரசின் பயங்கரவாதத்தை அறிந்து கொண்டனர். வேறு இனத்தவரை கவரும் முகமாக ஆங்கில மொழிமூலமான பாடல்களை இளையோர் இசைத்து நிகழ்வினை வெற்றிகரமாக்கினர்.சல்வேர்சன
-
- 1 reply
- 707 views
-
-
[size=4]மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் மன்னார் நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டு மன்னார் பொலிஸாரினாலும் புலனாய்வுத்துறையினராலும் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் 11 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஜூன் மாதம் 18ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரினால் மன்னார் நீதிமன்றம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதோடு பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் அரச திணைக்கள பணியா…
-
- 0 replies
- 449 views
-
-
யாழில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு களத்தில்; எதிர்காலத்தில் பலர் கைதாகலாம் [ Thursday,14 April 2016, 05:04:24 ] யாழ்ப்பாணத்தில் தற்கொலை அங்கி மீட்கப்பட்டதன் பின்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புலனாய்வில் ஈடுபட்டு வருவதோடு, எதிர்காலத்தில் மேலும் பலரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தலாம் என்ற ஊகத்தை சாவகச்சேரி பொலிஸார் வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேசத்தில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட விவாரத்தில் நுணாவில் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டதோடு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். பூசா முகாமில் அவர் தடுத்து வைத்திரு…
-
- 0 replies
- 510 views
-
-
தமிழ்த்தேசியப் பயணத்துக்கு தமிழரசு இணக்கப்பாடில்லை! ஐ.நா.வுக்கான கடித விவகாரத்தில் பொய்யுரைப்பு; கஜேந்திரகுமார் தெரிவிப்பு! ஐ. நா.வுக்குக் கடிதம் அனுப்பும் விவகாரத்தில் தமிழரசுக் கட்சியே பொய்யுரைத்துள்ளது. தமிழ்க் கட்சிகளிடையே இப்போது இணக்கப்பாட்டை ஏற்படுத்தத் தவறினால் தமிழ்த் தேசியம் அழியும் நிலை ஏற்படும். இணக்கப்பாட்டை ஏற்படுத்த நாங்கள் தொடர்ந்தும் முயற்சிப்போம். இவ்வாறு யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள முன்னணியின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடத்திய ஊடக சந்திப்பின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு இலங்கையை சர்வதேசக் குற்றவியல் நீ…
-
- 0 replies
- 94 views
-
-
(எம்.மனோசித்ரா) பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பொது மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறுவதற்கும் பொறுப்பு கூறலை நிலைநாட்டுவதற்கும் தமது சொத்துக்கள் விபரங்களை பொது வெளியில் வெளிப்படுத்துமாறு ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தாம் ஊழலுக்கு எதிரான அர்ப்பணிப்புள்ளவர் என்பதையும் மிக வெளிப்படைத் தன்மை , பொறுப்புக் கூறுபவர் என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்த முடியும் என்றும் குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை பொது வெளியில் தெரியப்படுத்த முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த இந் நிறுவன…
-
- 2 replies
- 536 views
-
-
25 வருட போராட்டம்! ஈழத்தமிழர்களின் கருப்பு ஜூலை. ஈழத்தமிழர்களின் வரலாற்றில்... 1983 ஜூலை 23-ந் தேதி ஒரு திருப்பத்தை எற்படுத்திய நாள். தமிழினத்திற்கு எதிரான சிங்கள ராணுவத்தினர் மீது தமிழர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து... தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு. அந்த அரச பயங்கரவாதத்தைத்தான் "கருப்பு ஜூலை' என்று ஈழத்தமிழர்கள் பதிய வைத்துள்ளனர். அந்த "கருப்பு ஜூலை' நிகழ்ந்து தற்போது 25 வருடங்கள் அகிவிட்டன. அன்றைய ஜூலையில் நடந்த கொடூரங்களை தமிழர்கள் இன்னமும் மறந்துவிட வில்லை. அன்று என்ன நடந்தது? எழுபதுகளின் தொடக்கத்திலேயே ஈழத்தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திவிட்டனர் என்றபோதிலும், அந்த ஆயுதங்களின் வலிமையை, சிங்கள அரசு 19…
-
- 0 replies
- 1.7k views
-
-
(ஆர்.விதுஷா) நாட்டு மக்கள் ஜனாதிபதியிடம் எதிர்பார்த்த எந்த விடயமும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், பல பதவிகளை வகித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை எனவும் வலியுறுத்தினார். உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல், மத்தியவங்கி பிணைமுறி மோசடிகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காகவும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவுமே ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவை மக்கள் ஆதரித்திருந்தனர். ஆனால் இன்று, மக்கள் எதிர்பார்த்த எதையாவது இந்த அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதா? கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் பொதுத்தேர்தலுக்கு முன்…
-
- 4 replies
- 427 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டாவது விமானத்தளமொன்றை அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகப் பிரபல ஆங்கில நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கப் படையினரின் விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் முல்லைத்தீவில் புதிய விமான இறங்குதளமொன்றை அமைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரச படையினரின் வான் தாக்குதல் காரணமாக வன்னி முன்னரங்கப் பகுதியில் புலிகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் விடுதலைப் புலிகளின் இரணமடுவில் அமைந்துள்ள இறங்குதளத்திற்குச் சேதமேற்பட்டுள்ளதாக இராணுவ உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது முழுப் பலத்தைப…
-
- 5 replies
- 2.7k views
-
-
மரவெள்ளி தோட்டத்திற்குள் வைத்து 14 வயதுச் சிறுமி 23 வயது இளைஞனால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. குறித்த சிறுமியின் மல்லாகத்தைச் சேர்ந்த தூரத்து உறவினர் ஒருவர் வீட்டில் எவரும் இல்லா சமயம் மேற்படி சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.இதன்போது குறித்த சிறுமியின் வீட்டிற்கு பின்புறமாக இருந்த மரவெள்ளித் தோட்டத்திற்குள் அச் சிறுமியை அழைத்துச் சென்று அங்குவைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு அங்கிருந்து தம்பிச் சென்றுள்ளார். இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதன் பின்னர் அச் சிறுமியின் பெற்றோரால் கோப்பாய் காவல்துறையில் …
-
- 2 replies
- 716 views
-
-
இலங்கை தொடர்பான முக்கிய வரைவுத் தீர்மானம் 2 வாரங்களுக்குள் ஜெனிவாவில் 14 September 2025 இலங்கை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இருக்கும் வகையில் வரைவுத் தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்படி, மனித உரிமைகள் பேரவையின் அதிகாரத்தை நீடிக்கும் வரைவுத் தீர்மானம், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்த முன்னேற்றம் தொடர்பில் அடுத்த விரிவான அறிக்கை, 2027 ஆம் ஆண்டு செப்டம்பரில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ…
-
- 0 replies
- 172 views
-
-
ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் சென்ற பஸ் ஒன்று கம்பஹா பகுதியில் விபத்துக்கு உள்ளானதில் 11 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு குறிப்பிட்ட பஸ் அதிவேகமாகக் சென்றமையால் தடம் புரண்டு குடைசாய்ந்துள்ளதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த பாதுகாப்புப் படையினர் வத்துப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது http://www.tamilwin.com/view.php?2aIWn5e0d...d426QV3b02ZLu3e
-
- 0 replies
- 976 views
-
-
[size=4]மண்ணுக்காகவும் மக்களுக்காவும் உண்மையிலே பல்வேறு தியாகங்களைச் செய்த புலிகள் தோற்றுப்போனதில் தனிப்பட்ட முறையில் எனக்கும் வருத்தம்தான் என 91 அகவை நிரம்பிய இந்தியாவின் பிரபல மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் ஆனந்த விகடனிடம் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா, மவுன்ட் பேட்டன், மன்மோகன் சிங் இப்படி கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து தலைவர்களையும் செவ்வி கண்டிருக்கும் இவர் இப்பொழுதும் 14 மொழிகளில் கிட்டத்தட்ட 80 பத்திரிகைகளில் இடைவிடாமல் கட்டுரைகள் எழுதுகிறார் என ஆனந்த விகடன் குறிப்பிடுகிறது. இவரிடம் ''2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, இந்திய அரசும் வட இந்திய ஊடகங்களும் மௌனித்தது சரிதானா?'' எ…
-
- 4 replies
- 1.1k views
-
-
வடக்கு மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது; விக்கினேஸ்வரன் யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் ஆசிரியர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். வேம்படி மகளிர் கல்லூயில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் இந்நிகழ்வு நடைபெற்றது. மாநாட்டில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார். எதிர்கால மாணவர்களின் கல்வியும் வளமான சமுதாயமும் என்னும் தொனிப் பொருளிலான இம்மநாட்டில் யாழ் கல்வி வலயத்திற்கு உட்பட்ட 150 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாகாண கல்விப் பணிப்பாளர் தெய்வேந்திர ராஜா முதலமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், நினைவுப் பரிசில்களையும் வழங்கி வைத்தார். யாழ். வலயத்தில் இருந்து சும…
-
- 1 reply
- 245 views
-
-
24 Sep, 2025 | 05:16 PM ( எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்) கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி தற்கொலை தொடர்பான விசாரணையில் சிவானந்தராஜா என்பவருக்கோ அல்லது ஏனைய பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினக்கு எதிராகவோ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இயலுமை உள்ளதா என்பது தொடர்பில் சட்ட ஆலோசனை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தனது உரையி…
-
- 0 replies
- 113 views
-
-
முகமாலையில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு [வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2008, 08:08 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முகமாலை களமுனையில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படையினருக்கு இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முகமாலை கண்டல் பகுதியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5:00 மணிக்கு சிறிலங்காப் படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தி படையினரின் முன்நகர்வினை முறியடித்தனர். இதில் மூன்றுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். பல படையினர் காயமடைந்தனர். இதே பகுதியில் நேற்று முன்நாள் பிற்பகல…
-
- 0 replies
- 839 views
-
-
இச்செய்திக்கும் எமக்கும் எந்தவித சம்மந்தமுமில்லை இதற்கு அவ் இணையமே பொறுப்பு கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் செயலாளர் இந்திய புலனாய்வுப் பிரிவினருடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக ஆங்கில இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரத்தில் தமிழகத்திற்கு விஜயம் செய்திருந்த பிள்ளையானின் செயலாளா ரகு, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும் சந்தித்து கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக தமிழகத்தில் இரகசிய பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பதற்கு ரகு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தம…
-
- 0 replies
- 1.5k views
-
-
கேப்பாபுலவு என்பது மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான இயற்கை வளங்களைக் கொண்டு அமைந்த ஒரு கிராமம். இங்கு விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலம் காணப்படுவதுடன் வெள்ளப் பாதிப்பு அற்ற பகுதியுமாகும். இவ்வாறான நிலப்பகுதியை தமதுவசம் சூறையாடியுள்ள படையினர் அப்பகுதிக்கு உரிய மக்களை மீளக் குடியமர்த்தாமல் இழுத்தடித்து வந்த நிலையில் அந்த மக்கள் போராட்டம் நடத்தியபோது அச்சுறுத்தப்பட்டு கழிவு அபிசேகம் செய்தமை தொடர்பாக கடந்தவாரம் இப்பகுதியில் பார்த்தோம். இந்த மக்களை பழிவாங்கும் நோக்குடன் சிறீலங்காப் படையினர், மக்களின் விருப்பத்தைக் கேளாமலே மக்களை ஏமாற்றி வவுனியா மெனிக்பாம் முகாமில் இருந்து அவர்களை பலவந்தமாக அகற்றி அடர்ந்த காட்டுப்பகுதியில் நிர்க்கதி நிலையில் விடப்பட்டனர். உங்களுக்கு ஏது சொந்தம…
-
- 1 reply
- 695 views
-
-
மஹிந்தவின் வெற்றிவிழா இரத்து.! நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, குருநாகலையில் நடைபெறவிருந்த மஹிந்தவின் “யுத்த வெற்றி விழா” இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இம்முறை யுத்த வெற்றிதின விழாவுக்கு அரசாங்கம் அழைப்பு விடுக்கவில்லை. இந் நிலையில் மஹிந்த அணியினர் நாளை குருநாகலில் தமது இராணுவ வெற்றி தின கொண்டாட்டங்களை நடத்தயிருந்தனர். மேலும், மஹிந்த ராஜபக் ஷ கலந்துகொள்ளும் குருநாகல் நிகழ்வில் இராணுவத்தின் அதிகாரிகளோ, சிப்பாய்களோ கலந்துகொள்ள முடியாது என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articl…
-
- 2 replies
- 473 views
-
-
15 Oct, 2025 | 04:09 PM சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்துடன் இணைந்ததாக, கொடி விற்பனை வாரத்தை முன்னிட்டு முதல் கொடி, அடையாள ரீதியாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கு இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அணிவிக்கப்பட்டது. இலங்கை பார்வையற்றோர் சம்மேளனத்தின் தலைவி நில்மினி சமரவீர, கொடியை ஜனாதிபதியின் செயலாளருக்கு அணிவித்தார். பின்னர், வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் வெள்ளைப் பிரம்புகளை வழங்கி வைத்தார். கொடி விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் பார்வையற்றோர் சமூகத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என்று சம்மேளனத்தின் தலைவி தெரிவித்தார். இலங்கை பார்…
-
- 0 replies
- 149 views
- 1 follower
-
-
'முள்ளிவாய்க்கால் நினைவு: புலிகளுக்கானது அல்ல' பாநூ கார்த்திகேசு முள்ளிவாய்க்காலில், மே 18ஆம் திகதி, முதன்முறையாக நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. அந்த நினைவுதின அனுஷ்டிப்பு, விடுதலைப் புலி அமைப்பின் உயிரிழந்த உறுப்பினர்களுக்கானது அல்ல என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பியான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அது, யுத்தத்தினால் உயிரிழந்த உறவுகளுக்கான துக்க அனுஷ்டிப்பாகும் என்றும் அவர் கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (24), நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர…
-
- 0 replies
- 333 views
-