ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142962 topics in this forum
-
ஐனாதிபதித் தேர்தலில் புதிய ஐனநாயக முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பிதாக தமிழரசுக் கட்சியினர் அவசர அவசரமாக எடுத்த நிலைப்பாட்டிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நரித் தந்திரமே காரணமென்று குறிப்பிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ரணிலிற்கு பிரதமர் பதவி இல்லை என்றவுடன் கட்சிப் பதவியையாவது காப்பாற்றுவதற்காக ரணிலும் சுமந்திரனும் மேற்கொண்ட சதியினாலேயே சஜித் பிரேமதாச தோற்கடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். “தமிழ் அரசுக்கட்சியினர் இவ்வளவு தூரம் குத்திடியடிச்சும் 13 இலட்சம் வாக்குகளால் கோட்டாபய வெற்றி பெற்றுள்ளார். நீங்க…
-
- 5 replies
- 936 views
- 1 follower
-
-
இலங்கை நேரம் காலை 08:00 இன் போது: சஜித் பிரேமதாச 9,99,720 (48.69%) கோட்டாபய 9,12,534 (44.44%) அனுரகுமார 66,054 (3.22%) சிவாஜிலிங்கம் 8,566 (0.42%) ஏனையவை 66,467 (3.24%)
-
- 18 replies
- 2.2k views
- 1 follower
-
-
வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம், 1000 நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு அவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அதில் கலந்துகொண்டோர் தங்களது வேதனையை கண்ணீர் மல்க வெளிப்படுத்தியமை அனைவரையும் கவலைக்கு உள்ளாக்கியது. இவ்விடயம் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் இணைப்பாளர் ராஜ்குமார், “சுழற்சி முறையில் உணவு தவிர்க்கும் 1000ஆவது நாளை இன்று நாங்கள் அனுஷ்டிக்க வந்துள்ளோம். இதில் அனைத்து தமிழ் தாய்மார்களும் சுழற்சி முறையில் உணவு தவிர்க்கும் போராட்டத்தில் தொடர்ந்து பங்கு பற்றி வருகின்றனர். இலங்கை இராணுவத்தா…
-
- 10 replies
- 895 views
-
-
வட கிழக்கிற்கும் தெற்கிற்கும் இடைவெளியை குறைப்பதற்கான ஆணையை பெரும்பான்மை மக்கள் வழங்கியுள்ளனர் - ஜனகன் வட கிழக்கிற்கும் தெற்கிற்கும் இடைவெளியை குறைப்பதற்கான ஆணையை பெரும்பான்மை மக்கள் வழங்கியுள்ளனர் - ஜனகன் Published on 2019-11-19 15:26:50 கோத்தாபய ராஜபக்சவின் வெற்றி இந்த நாட்டில் வடக்கு மற்று கிழக்குக்கும் தெற்கும் இடையில்இருக்கும் பாரிய இடைவெளியினை குறைப்பதற்கு உதவும் என்று நம்புகிறேன் என ஜனநாயக மக்கள்முன்னணியின் அமைப்புச் செயலாளரும் அக்கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட அமைப்பாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடும் போது.. தொலைத்த இடத்தில் தான் தேட வேண…
-
- 1 reply
- 337 views
-
-
மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறுகளை, தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர் தின அனுஸ்டிப்பு ஆரம்பமாகும். மாலை 6.05 கீதங்கள் இசைக்கப்பட்டு நாம் அஞ்சலி செலுத்துவோம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், மாவீரர் நாளினை வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அனுமதிக்க மாட்டேன் என்று தனது தேர்தல் பிரச்சார காலத்தில் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கூறி…
-
- 11 replies
- 1.5k views
-
-
பெப்ரவரி 15இற்கு முன் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஐதேக எதிர்ப்பு Nov 19, 2019 | 1:56by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்துவதற்கு, ஆதரவு வழங்க ஐதேக நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவிக்கவில்லை என்று அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ” நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்துவதற்கு, ஆதரவு அளிக்க ஐதேக நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவிக்கவில்லை. எனினும், பொதுத் தேர்தலை பெப்ரவரி 15 அல்லது அதற்குப் பின்னர் நடத்துவதற்கு உடன்பட்டால், ஐதேக நாடாளுமன்றக் குழு அதுகுறித்து பரிசீலிக்கும். தேர்தலுக்கான நாள் குறித்து அடுத்த சில நாட்களில் கலந்துரையாடல்கள் நடத்தப்படும். …
-
- 0 replies
- 287 views
-
-
-செ.கீதாஞ்சன் புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரைக்கேட்டாலே தாம் அச்சம் கொள்வதாகத் தெரிவித்த முல்லைதீவு மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி, அவரால் தரப்படும் காணாமல் ஆக்கப்படடவர்களுக்கான மரண அறிக்கையை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் கூறினார். முல்லைத்தீவு மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், இன்று (19) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் கடந்த கால செயற்பாடுகளை எண்ணி தற்போது அச்சத்துடன் இருப்பதாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயம் குறித்து சர்வதேசம், புதிய ஜனாதிப…
-
- 0 replies
- 550 views
-
-
(எம்.மனோசித்ரா) ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுள்ளதாக கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். எனினும் பொதுத் தேர்தலுக்கு செல்வதாக இருந்தாலும் அதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பிலும் ஏனைய அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பிலும் கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கிடையில் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியமாகும். எனவே வியாழக்கிழமை மத்திய செயற்குழுவை கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாவும் இதன்போது அது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டும் மத்திய குழு கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அறிவிக்கப்படும். அத்தோடு முன்னாள் ஜனாதிபதி மைத்திரி…
-
- 1 reply
- 257 views
-
-
பேரம் பேசி உரிமை பெற ஒட்டகம் தான் முஸ்லீம்களின் தெரிவாக இருக்கும் : மகளிரணி தலைவி ஹஸ்மியா ! (அபு ஹின்சா ) 35 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் முஸ்லீம்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய ஒருவராக இருப்பவர் முன்னாள் ஆளுநர் எம்.எல். எ. எம். ஹிஸ்புல்லா அவர்கள் மட்டுமே. பாட்டு போட்டு ஓட்டு கேட்கும் கட்சிகள் இந்த சமூகத்துக்கு செய்த சேவைகளை விட ஆளுநராக இருந்த எமது முஸ்லிம் வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் செய்த சேவைகள் அதிகம்.என பிரச்சார குழு மகளிரணி தேசிய அமைப்பாளர் வைத்தியர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். அக்கரைப்பற்றில் இன்று பகல் நடைபெற்ற மகளிர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய போது, …
-
- 9 replies
- 2.2k views
-
-
புதிய ஜனாதிபதி கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு ஆரம்பம்! புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. கடமைகளை பொறுப்பேற்கிறார் புதிய ஜனாதிபதி கோட்டாபய! இலங்கையின் ஜனாதிபதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் 7ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். இதற்கமைய இன்று முற்பகல் ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் ஜனாதிபதி தனது பொறுப்புக்களை ஏற்கவுள்ளார். அத்தோடு ஜனாதிபதி செயலாளராக முன்னாள் திறைசேரி செயலாள…
-
- 1 reply
- 412 views
-
-
பூஜித், ஹேமசிறிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போதே அவர்களை எதிர்வரும் 3ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்காதமை காரணமாக இவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனை அடுத்து கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இருவரும் மேல் நீதிமன்ற உத்தரவை அடுத்து, கடந்த…
-
- 0 replies
- 310 views
-
-
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஓய்வூதியம் இல்லாமல் போகும்: தயக்கம் காட்டும் உறுப்பினர்கள்! நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஓய்வூதியம் இல்லாமல் போய்விடும் என்பதனால் பொதுத் தேர்தலுக்கு செல்ல ஆளும்தரப்பு தயக்கம் காட்டுகின்றனர். அவ்வாறு கலைக்கப்பட்டால் சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என அறிய முடிகின்றது. இதேவேளை நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்திலிருந்து விலகுவதா அல்லது நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்குத் செல்லலாமா என்பது குறித்த இறுதி முடிவு, அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடிய பின்னர் வரும் நாட்களில் எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி வட்டார தகவல்கள் த…
-
- 0 replies
- 311 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்டுப்பணத்தை இழந்தனர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில் 33 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை இழந்துள்ளனரென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ (52.25%) மற்றும் சஜித் பிரேமதாச (41.99%) ஆகியோர் மட்டுமே 5% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றனர். எனவே ஏனைய 33 வேட்பாளர்களும் அந்த சலுகையினை இழக்க நேரிட்டுள்ளது. குறிப்பாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க 3ஆம் பெரும்பான்மையினை பெற்று இருந்தபோதும் அவரால் 3.16% வீகிதத்தை மட்டுமே அடைய முடிந்தது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அரசியல் கட்சி சார்ந்து போட்டியிட்டால் தலா 50 ஆயி…
-
- 0 replies
- 476 views
-
-
ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றமை குறித்து ஹிஸ்புல்லா விளக்கம் ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமையவே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்துகொண்டார் என அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக பதவியேற்றிருந்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலாளரது உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமையவே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்துகொண்டார் என அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு ந…
-
- 0 replies
- 317 views
-
-
-
கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவளிப்பது ஏன்: வரதராஜப் பெருமாள் விளக்கம்
-
- 1 reply
- 376 views
-
-
அரசில் இணைவது குறித்து கூட்டமைப்பு பரிசீலிக்கும் -சுமந்திரன் In இலங்கை November 18, 2019 3:29 am GMT 0 Comments 1016 by : Dhackshala எதிர்காலத்தில் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலனை செய்யவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சியொன்றின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்திருந்தார். கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று, சேவையாற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அது குறித்து பரிசீலிப்போம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார். தீர்வு வரும்வரை அரசில…
-
- 10 replies
- 1.4k views
- 1 follower
-
-
வ.சக்தி பொது ஜன பெரமுன கட்சி ஒரு இனவாதக் கட்சியல்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற கட்சியாகுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (18) காலை களுதாவளை யில் அமைந்துள்ள அவரைது இல்லத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..... நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சில கட்சிகளின் இனவாதத்தினால் தான், எமது கட்சிக்கு இம்மாவட்ட த…
-
- 2 replies
- 641 views
-
-
-க. அகரன், செல்வநாயகம் ரவிசாந் புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி, தான் உங்களுடைய தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ளாமைக்கு தான் மன்னிப்புக் கோரவேண்டிய அவசியமில்லையெனவும் கூறினார். புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழத்துத் தெரிவித்து அனுப்பியுள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஒரு சிலர், தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒரு கொடியின் கீழ் இணைத்துக்கொள்ள எடுத்துக்கொண்ட நடவடிக்கையானது, வகுப்புவாதப் பாதையில் பிரசாரமாக நகர்வதை உணர்ந்த தான் உங்களுடைய தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ளவி…
-
- 2 replies
- 979 views
- 1 follower
-
-
நான் அமைச்சராக இருந்த போது அனைத்து சிறைச்சாலைகளையும் சென்று அவதானித்துள்ளேன். அதன்படி இரகசிய முகாம் அல்லது இரகசிய கைதிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் மேற்கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழ்மக்களின் வாக்குகள் கோத்தாபாயவிற்கு குறைந்துள்ள நிலையில் எமக்கு கிடைத்த பொன்னான வாய்ப்புக்களை இழந்திருக்கிறோம் என்று தான் நினைக்கிறேன். எனினும் காலப்போக்கில் இதில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம். வடகிழக்கில் பல பிரச்சினைகள் இருக்கிறது. கூடுதலான வாக்கினை அழித்திருந்தால் உரி…
-
- 2 replies
- 969 views
-
-
பதவியேற்பு விழாவில் கோட்டாபய பேச்சு: "சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டுமே ஜனாதிபதி ஆனேன்" 30 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைUDAYASHANTHA GUNASEAKRA சிங்கள பெளத்த பெரும்பான்மை வாக்குகளினால் மாத்திரமே தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேசியுள்ளார். அனுராதபுரம் ருவன்வ…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
சஜித்தின் தோல்விக்கு ரணிலின் சூழ்ச்சியே காரணம் – சிவாஜி In இலங்கை November 18, 2019 9:40 am GMT 0 Comments 1360 by : Dhackshala புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு ரணில் விக்ரமசிங்கவின் சூழ்ச்சியே காரணமென எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்தோடு இந்த விடயத்தில் பிரதமர் ரணிலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துணைபோயுள்ளதாகவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் மீது போர்க்குற்றங்களையும் இனப்படுகொலையையும் புரிந்த ஓர் போர்க்குற்றவாளி, இன…
-
- 2 replies
- 600 views
- 1 follower
-
-
கோட்டாபய அனுராதபுரத்தில் பதவியேற்பது ஏன்? அந்த பௌத்த விஹாரையின் சிறப்பு என்ன? 58 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைNURPHOTO இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ இன்று பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். அநுராதபுரம் ருவன்வெலி மகா சாய பௌத்த விஹாரை வளாகத்த…
-
- 6 replies
- 1.5k views
- 1 follower
-
-
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மக்களால் தானேதெரிவு செய்யப்பட்டுள்ளதாக கோத்தாபய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது. வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/69123
-
- 32 replies
- 5.8k views
-
-
(எம்.மனோசித்ரா) மக்கள் ஆணையை ஏற்று பாராளுமன்ற தேர்தலுக்குச் செல்வதே பொருத்தமானதாக இருக்கும் எனக் கருதுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரு அரசாங்கம் தற்போது காணப்படுவதால் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். பழைய அரசாங்கமே இன்னும் காணப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கிறார். எனினும் இது வரையில் ஐந்திற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி விலகியிருக்கின்றனர். எதிர்வரும் நாட்களில் என்ன நடக்கவிருக்கிறது என்பதை அவதானிக்க வேண்டும். மக்களின் நிலைப்பாட்டை ஏற்று அதற்கேற்ப தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். https://www.virakesari.…
-
- 2 replies
- 623 views
-