ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142966 topics in this forum
-
(ஆர்.யசி) அரசியலில் நிரந்தர எதிரியாகவோ நிரந்தர நண்பராகவோ எவரும் இல்லை. அந்த வகையில் தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் இப்போது நண்பர்கள் என்பதே உண்மை என்கிறார் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச. என்னுடன் யார் கைகோர்த்தாலும் எனது அரசாங்கத்தில் குற்றவாளிகளுக்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியில் இந்த கருத்துக்களை அவர் முன்வைத்தார். இலங்கையின் எதிர்கால வரலாற்றில் இலங்கையில் மக்களுக்காக செயற்பட்ட இரவு பகல் பார்க்காது சேவை செய்த மக்கள் தலைவர் ஒருவராக சஜித் பிரேமதாச இருந்தார் என்று எழுத வேண…
-
- 2 replies
- 521 views
-
-
ஐனாதிபதி வேட்பாளர் எம்.கே சிவாஜிலிங்கம் தனது தேர்தல் பிரச்சாரங்களை இன்று யாழில் ஆரம்பித்துள்ளார். தியாகி பொன் சிவகுமாரனின் யாழ் உரும்பிராயில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். நடைபெறவிருக்கும் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கம் தனது தேர்தல் விஞ்ஞானத்தில் திருகோணமலை பிரகடனமாக நேற்றையதினம் திருகோணமலையில் வைத்து வெளியிட்டிருந்தார். இதற்கமைய இன்று சிவகுமாரனின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்திய பின்னர் தனது தேர்தல் பிரச்சாரத்தை யாழில் ஆரம்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சாவகச்சேரி நகரில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் நினைவுத் தூபி…
-
- 1 reply
- 433 views
-
-
வெள்ளை வேனில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் சுட்டுக்கொலை -சிஐடி கொழும்பு பகுதிகளில் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருமலை கடற்படை முகாமின் கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை முகாமுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சி.ஐ.டி. சந்தேகம் வெளியிட்டுள்ளது.அத்துடன் சி.ஐ.டி.க்கு கிடைத்த சாட்சியங்கள் மற்றும் வாக்கு மூலங்கள் பிரகாரம் இக்கொலைகள், கன்சைட் வதை முகாமுக்கு பொறுப்பாகவிருந்த கொமாண்டர் ரணசிங்கவின் கீழ் இருந்த விஷேட உளவுப் பிரிவொன்றினால் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுவதாக அது குறித்து மிக ஆழமான விசாரணைகள் ஒடம்பெற்றுள்ளதாகவும் சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்க…
-
- 2 replies
- 861 views
-
-
இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி நிலவரப்படி அமெரிக்க குடியுரிமையை கைவிட்டவர்களின் பட்டியலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பெயர் இல்லை என்று அமெரிக்காவினால் வெளியிடப்படுகின்ற அந் நாட்டின் குடியுரிமையை நீக்கிக் கொண்டவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலில் சுட்டிக்காட்டப்பட்டள்ளது. இந் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்றைய தினம் தனது டுவிட்டர் பதிவொன்றில் அமெரிக்க பிராஜாவுரிமையை கோத்தாபய ராஜபக்ஷ கைவிட்டுள்ளதாகக் கூறி, அதற்கான சான்றிதழ்களையும் பதிவேற்றியிருந்தார். மேலும் ஐக்கிய தேசியக் கட்சி கோத்தாபய ராஜபக்ஷ இன்னும் அமெரிக்கப் பிரஜை என்ற பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும், அதனை கைவிட்டு மா…
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை வெளிநாட்டு உதவிகளைப் பெற்று அபிவிருத்தியில் உச்சமடைந்த மாகாணங்களாக மாற்றுவேன் எனத் தெரிவித்த ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ நாட்டில் வாழும் மக்கள் அனைவரையும் இன மத பேதம் இல்லாமல் ஒரே குடையின் கீழ் ஒரு தாய் மக்களாக ஒரே சட்டத்தின் வாழும் அமைப்பை உருவாக்குவேன் எனத் தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணியின் ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இராஐாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் தலைமையில் நல்லூர் சங்கிலியன் புங்காவில் இடம்பெற்றபோதே அவர் இததைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் யாழ் மாவட்டத்திற்கு வந்திருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாவட்டத்தைப் ப…
-
- 12 replies
- 1.5k views
-
-
புலிகளை அழித்ததனால் எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். வவனியாவில் ஜனாதிபதி வேட்பாளா சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவத்த அவர், நாங்கள் இன்று கோருவதெல்லாம் நீங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நடத்திய காலத்தில் கூறிய விடயங்களையே கேட்கின்றோம். உண்மைக்காக போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அவர்கள் போராடியது மக்களுக்காக. அவர்கள் மக்களின் உரிமைக்காக போராடினார்கள். விடுதலைப்புலிகளின் உரிமைக்காக அல்ல. எனவே மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும். …
-
- 14 replies
- 1.4k views
- 1 follower
-
-
சொல்வதை செய்பவன், செய்வதை சொல்பவன் தான் மஹிந்த ராஜபக்ச சொல்வதை செய்பவன், செய்வதை சொல்பவன் தான் மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டில் 30 வருட காலமாக நடைபெற்றுவந்த யுத்தத்தை நிறுத்தவதாக கூறினேன் அதை இரண்டரை வருடத்திற்குள் யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை கொண்டு வந்தேன் என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ நுவரெலியா நகரில் (09.11.2019) அன்று சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்பொழுது கூறினார். இக்கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து உரையாற்றுகையில், நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞா…
-
- 0 replies
- 300 views
-
-
சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு எடுத்த தீர்மானம் பிழையானது. நமது ஆதரவு சிவாஜிலிங்கத்திற்கே என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது கட்சியின் யாழ் மாவட்டக்குழு. சில தினங்களின் முன்னர் ரெலோவின் தலைமைக்குழு கூடி, சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென முடிவெடுத்துள்ள நிலையில், யாழ் மாவட்டக்குழுவின் இந்த தீர்மானம் கட்சிக்குள் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரெலோவின் யாழ் மாவட்டக்குழு கூட்டம் இன்று (9) யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள் விந்தன் கனகரட்ணம், சபா.குகதாஸ் மற்றும் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண…
-
- 2 replies
- 690 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் பிரதான கட்சிகளின் மூன்று வேட்பாளர்களின் பிரச்சார செலவினங்கள் தொடர்பிலான தகவல்களை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்பு நிலையமான தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் கொழும்பில் கடந்த 05ஆம் திகதியன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இந்த விடயத்தை வரலாற்றில் முதல் தடவையாக வெளியிட்டது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, புதிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளினால் கடந்த ஒக்டோபர் மாதம் 14ஆம் திபதி முதல் 31ஆம் திகதி வரையான செலவினங்களை அந்த நிலையம் வெளியிட்டது. குறித்த காலப் பகுதியில் மாத்திரம் மூன்று பிரதான கட…
-
- 1 reply
- 553 views
-
-
கிளிநொச்சியில் வாள்வெட்டு; நால்வர் படுகாயம் -எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி தட்டுவன் கொட்டி பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த பகுதியில் உள்ள கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கிராம சேவையாளர் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மண்அகழ்வு தொடர்பில் தொடர்ச்சியாக மேற்கொண்ட தடுக்கும் நடவடிக்கையின் உச்ச கட்டத்திலேயே இவ்வாறு வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் 11 மணியளவில் கு…
-
- 1 reply
- 647 views
- 1 follower
-
-
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழர் தரப்பின் நிலைப்பாடாக தயாரிக்கப்பட்ட பொது ஆவணத்தின் 13கோரிக்கைகளையும் பிரதான வேட்பாளர்களிடம் கொண்டு சேர்க்காமல் மாணவர்களையும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் ஐந்து தமிழ் கட்சிகளும் ஏமாற்றியுள்ளதாக யாழ் பல்கலைகழக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதன் மூலம் தாம் தயாரித்த பொது ஆவணக் கோரிக்கைகளை தாமே உதாசீனம் செய்து, கூட்டு முயற்சியையும் இக் கட்சிகள் குழப்பியுள்ளதாகவும் மாணவர் ஒன்றியம் தெரிவித்தது. தமிழர் தரப்பின் ஒற்றுமைக்காக மாணவர்களாகிய நாங்கள் எடுத்த இந்த முயற்சியைத் தமது அரசியலுக்காக முந்திக் கொண்டு அறிக்கைகளை வெளியிட்டும் தமது நிலைப்பாடுகளை அறிவித்தும் எல்லாவற்றையும் குழப்பியடித்து அனைவரையும் ஏமாற்றி முட்டாள்களாக்கி உள்ளதாக…
-
- 5 replies
- 890 views
-
-
Published by T. Saranya on 2019-11-08 16:59:25 தேசிய பாதுகாப்பிலும் பிராந்திய பாதுகாப்பிலும் எமது முப்படையினர் உட்பட பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துறை மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்புகள் பாராட்டத்தக்கதாகும் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்தார். பெலவத்த, அக்குரேகொடயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இராணுவத் தலைமையகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (08) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். புதிய இராணுவ தலைமையக வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா வரவேற்றார். மரியாதை வேட்டுக்களுடனும் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடனும் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட…
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
வடக்கு, கிழக்கு தனித்தனியாக அபிவிருத்தி செய்யப்படும் - சஜித் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதியதொரு வைத்தியசாலையை அமைத்துகொடுக்கவுள்ளதாக வாக்குறுதியளிக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனியான சர்வதேச உதவிக்கோரல் மாநாடுகளை நடத்துவதாகவும் தெரிவித்தார். மட்டக்களப்பு களுதாவலை பொது மைதானத்தில் இன்று (09) நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்துக்கான புதியதொரு பொது வைத்தியசாலையை உருவாக்குவதாகவும், கிராமிய வைத்தியசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார். அதேபோல் மட்டக்களப்பின் விவசாய செயற்பாடுகளை தரமாக முன்னெடுக்கும் வகையிலான அபிவிருத்திகள் ச…
-
- 1 reply
- 828 views
-
-
சிறுபான்மை வேட்பாளர்களின் போட்டி ஒருபோதும் தமிழர்களுக்கு சாதகமாக அமையாது-இரா.சம்பந்தன் சுயேட்சையாக களமிறங்கியுள்ள சிறுபான்மை ஜனாதிபதி வேட்பாளர்களின் போட்டி என்பது ஒருபோதும் தமிழர்களுக்கு சாதகமாக அமையாது எனவும், அவர்களுக்கு வாக்களிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம் எனவே அப்படியான வேட்பாளர்களை தமிழ், முஸ்லிம் மக்கள் நிராகரிக்க வேண்டும் என திருகோணமையில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தலைமையில் ஏற்படுத்தப்படும் ஆட்சி அனைத்து மக்களின் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.மேலும் சஜித் பிரேமதாவை எதிர…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
இரத்மலானை – யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை பரிட்சார்த்தமாக இன்று ஆரம்பம் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான எலையன்ஸ் Alliance Air விமானசேவைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது. இந்த விமான சேவைகள் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சேவைகளில் ஈடுபடவுள்ளன.அதன்பின்னர், கூடிய விரைவில் இந்த சேவை, வாரத்தில் ஏழு நாட்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை Fits Air இன்று பரிட்சார்த்தமாக மேற்கொள்கின்றது.இரத்மலானையில் இருந்துபுறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. …
-
- 0 replies
- 371 views
-
-
கூட்டமைப்பு ஆதரித்த ஜனாதிபதி வேட்பாளர் அவர்களது பிரிவினைவாத கோரிக்கைகளை நிறைவேற்றுவார்-கோட்டாபய இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நான் நாடாளுமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ இல்லை. ஆனாலும் எனது தோள்களில் சுமந்துள்ள கடமைகளை நிறைவேற்றுவேன்.தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆதரித்த ஜனாதிபதி வேட்பாளர் அவர்களது பிரிவினைவாத கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என நான் நம்புகின்றேன்.எஸ்.பி. திசாநாயக்கவின் மெய்பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டு விவகாரத்தில், யார் குற்றம் இழைத்திருந்தாலும் சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதேவேளை சுற்றுலாத்துறையின் ஊட…
-
- 0 replies
- 301 views
-
-
ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க கோரி வடக்கில் தீவிர பிரசார பணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க கோரி வடக்கு முழுவதும் தீவிர பிரசார பணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஈடுபட்டுள்ளது.மேலும் ஜனாதிபதி தேர்தல் என்பது சிங்கள தலைவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்றும் குறித்த பிரசர்ப்பணியில் ஈடுபட்டுள்ள கட்சி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் எண்ணம் இரு தரப்பினருக்கும் இல்லை என்பதனால் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர். http://www.samakalam.com/செய்திகள்/ஜனாதிபதித்-தேர்தலை-புறக்/
-
- 1 reply
- 618 views
- 1 follower
-
-
புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் மக்கள் சந்திப்பு - மன்னார்
-
- 0 replies
- 508 views
-
-
கூட்டமைப்பு கிழக்கு தமிழரை நேசிக்கவில்லை Thursday, November 7, 2019 - 9:35am தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மக்களை நேசிக்குமாகவிருந்தால் இந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து இருக்கவேண்டும். கிழக்கு தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது என்கின்ற தீர்மானத்தினை எப்போதோ எடுத்துவிட்டார்கள் என, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும்,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார். …
-
- 8 replies
- 1.5k views
-
-
கோத்தாபயவுடன் சேர்ந்திருப்பவர்கள் சர்வதேச குற்றவாளிகளாக இருக்கின்றார்கள். பிள்ளையான் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்; வெலிகந்தைப் பகுதியில் பல இடங்களைத் தோண்டினால் தெரியும். கருணா அம்மான் பிள்ளைகளைப் பிடித்து அடித்து இன்றும் பல பொதுமக்களின் வயல் காணிகளை சுவீகரித்து தமது சொந்த சொத்தாக பயன்படுத்துகின்றார் என இலங்கைத் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினரின் வாழைச்சேனையிலுள்ள அலுவலகத்தில் நேற்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், …
-
- 1 reply
- 597 views
-
-
Published by R. Kalaichelvan on 2019-11-08 21:00:28 (எம்.நியூட்டன்) இராணுவ வீரர்களை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தவதோ, மக்களை திசை திருப்புவதற்கோ இடம் கொடுக்க மாட்டோன் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் என அமைச்சர் பீல்ட்மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஐக்கியதேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸவை ஆதரித்து நல்லூர்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இன்று மாலை இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நல்ல ஒத்துழைப்பை வழங்கியிருந்தீர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கிய…
-
- 1 reply
- 367 views
-
-
17, 18ம் திகதி சஜித் பிரேமதாச இந்நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்பது நிச்சயமான ஒன்று என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்று (08) சற்றுமுன் கிளிநொச்சியில் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும், வடக்கு, கிழக்குக்கு மஹிந்த ராஜபக்ச பட்டாளம், கோத்தாபய ராஜபக்ச பட்டாளம், நாமல் ராஜபக்சய பட்டாளங்கள் வந்து தந்திரமான செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர். கெஞ்சுகின்றனர். எமக்கு வாக்களிக்காது விட்டால் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களியுங்கள். இல்லை சஜித் அல்லாத எவருக்கும் வாக்களியுங்கள் என்கி…
-
- 0 replies
- 519 views
-
-
அன்று நீங்கள் வாக்களித்திருந்தால் இன்று எமது உறவுகளை, சொத்துக்களை இழக்காமல் வாழ்ந்திருப்போம் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று (08) மதியம் கிளிநொச்சியில் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் பிரச்சாரக் கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும், அன்று விட்ட பிழையை நீங்கள் இன்றும் விடக்கூடாது. அதிகாரத்தில் இல்லாத சில கட்சிகள் தாம் அரசியல் செய்ய முடியாது என்பதற்காக தேர்தலை புறக்கணிக்க கோருகின்றனர். அதனை பெரும்பான்மை கட்சிகளுடன் பேரம் பேசக்கூடிய தலைமைகள் சொன்னாலாவது ஏற்றுக் கொள்ள முடியும். சொந்த அரசியலுக்காக மக்களை பனயம் வைக்கின்றனர். …
-
- 0 replies
- 575 views
-
-
தமிழரசுக் கட்சிக்கு வழங்கியது போன்ற ஆதரவை நீங்கள் எனக்கு ஜனாதிபதித் தேர்தலில் வழங்கியிருந்தீர்கள். நீங்கள் எப்போதும் எமக்கு நன்றி கடன் உடையவர்களாகவே செயற்பட்டீர்கள் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இன்று (08) மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இதனை தெரிவித்தார். மேலும், சிலர் தேர்தலை புறக்கணிக்க ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். அதனை நீங்கள் கணக்கில் எடுக்காதீர்கள். யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு என்று இல்லை எல்லோரையும் ஒருதாய் மக்களாக நேசிக்கிறோம். இனியும் ஒரு யு…
-
- 0 replies
- 323 views
-
-
பிரதான இரண்டு கட்சிகளும் தாம் ஆட்சி செய்த காலத்தில் எமது நிலங்களை சர்வதேச நாடுகளுக்கு வாரிவழங்கியுள்ளனர். இன்றும் எமது நாட்டில் பிரதான நிலங்களை சர்வதேச வல்லரசுகளே ஆக்கிரமித்துள்ளனர் என தேசிய மக்கள் சத்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அத்துடன் அமெரிகாவின் மிலேனியம் ஷேலேன்ச் ஒப்பந்தமே எமது நாட்டினை நாசமாக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயகவின் அனுராதபுரம் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார். மிலேனியம் ஒப்பந்தம் குறித்து இரு தரப்பிலும் நிறைய விவாதம் நடந்துள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மங்கள சமரவீரா உள்ளிட்ட சஜித் பிரேமதாச முகாம் இது ஒரு …
-
- 0 replies
- 282 views
-