ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
நாட்டில் இடம்பெற்று வரும் வெள்ளை வான்களில் ஆள்களைக் கடத்தும் நடவடிக்கை களுக்கு அரசும் இராணுவத்தினருமே பின்னணி என்று நாடாளுமன்றத்தில் வெளிப்படை யாகவே குற்றம் சாட்டியிருக்கின்றது ஐக்கிய தேசியக் கட்சி. இத்தகைய வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்பான முழு விவரங்களையும் உரிய ஆதா ரங்களுடன் தமது கட்சி விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும் ஐ.தே.க. அறி வித்திருக்கிறது. ஊடகவியலாளர்கள் தாக்கப்படுதல் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஐ.தே.கட்சியின் பிர தம கொறடா ஜோஸப் மைக்கல் பெரேரா இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். அவர் தமது உரையில் மேலும் தெரி வித்ததாவது: இன்று நாட்டில் ஊடகவியலாளர்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். யுத்தம் தொடர்பாகவும், அரசி…
-
- 2 replies
- 880 views
-
-
[size=4]'கிழக்கு மாகாண சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இந்தப் பயத்தை எமது சமூகத்தின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு நாம் பயன்படுத்த வேண்டும் என நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீம் கூறினார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவான பிரச்சாரக்கூட்டமொன்று கிண்ணியாவில் கிழக்கு மாகாண சபை வேட்பாளர் மௌலவி எஸ்.எல்.எம். ஹஸன் (அஷ்ஹரி) தலைமையில் கிண்ணியா ஹஸனாத் பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்தும் பேசுகையில், …
-
- 1 reply
- 588 views
-
-
தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும் 'வட்டுக்கோட்டை தீர்மானம்' நிறைவேற்றப்பட்டதன் நாற்பதாவது ஆண்டாகிய இவ் ஆண்டை 'வட்டுக்கோட்டை தீர்மானம்' வலுவூட்டல் ஆண்டாக பிரகடனம் செய்து அதுகுறித்த செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம். அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழ் இளையோர்கள் ஆகியவை இணைந்து முன்னெடுத்துவரும் 'வட்டுக்கோட்டை தீர்மானம்' வலுவூட்டல் செயற்பாடுகளின் அடிப்படையில் பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் சமநேரத்தில் கடந்த 12 ஆம் த…
-
- 0 replies
- 164 views
-
-
செம்மணியில் இதுவரையில் 33 என்புத் தொகுதிகள்! புத்தகப்பை, ஆடை, வளையலுடன் சிறுகுழந்தையின் என்பு நேற்று அடையாளம் செம்மணி - சித்துப்பாத்தி இந்துமயானத்தில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், நேற்றும் மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, சிறிய வளையல்கள், ஆங்கில எழுத்துகள் பொறிக்கப்பட்ட துணியிலான புத்தகப்பை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகளில் தற்போது வரை 33 மனித என்புத் தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இனங்காணபட்ட மனிதப் புதைகுழியில் நேற்று இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளின் நான்காம் நாள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆடை,…
-
- 0 replies
- 100 views
-
-
மைத்திரி- மகிந்த ஒன்றிணைந்தாலே நாட்டுக்கு விடிவு! மகிந்த ராஜபக்சவுடன் ஒன்றிணைந்து செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வந்தால் மாத்திரமே நாட்டுக்கு விடிவு காலம் பிறக்கும் என்று எல்லே குணவங்ச தேரர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்றைய சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை தற்போது அரசியல், பொருளாதார, சர்வதேச நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இவற்றில் இருந்து விடுபட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வரவேண்டும். இவர்கள் இருவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் பிக்குமார் ஈடுபட வேண்டும். …
-
- 0 replies
- 387 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் கரைவலைத்தொழிலில் ஈடுபட்டவர்கள் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். நான்கு படகுகள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 525 views
-
-
பூவின் மீதமர்ந்தும் அமராமலும் மெல்லப் படபடக்கும் வண்ணத்துப் பூச்சியின் மெதுமை போன்றது, ‘பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சிகள்’ நாடகம், செவ்வாய்க்கிழமை (25) மாலை 6.30 மணிக்கு மருதானை எல்பின்ஸ்ட்டன் அரங்கில் நடைபெறும் அரச நாடகவிழா – 2020 இல் அரங்கேறவுள்ளது. பயங்கரமாகவே வெளித்தெரியும் போர்க்கால வாழ்வும், வெளித்தோற்றப்பாட்டில் பெருமிதமாகவும், உள்ளார்ந்தமாகப் பயங்கரமும் வன்முறையான சமூக வாழ்வில் சற்று விலகிச் சிந்திக்க முனையும் யதார்த்தத்தை நோக்கி நகர முனையும் சிறிசொன்றின் துயர வாழ்வும் அதனை விளங்கமுனையாத சமூக இருப்பின் மீதான எதிர்வினைதான் பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சிகள் நாடகம். நடைமுறையிலுள்ள சமூக வாழ்க்கை முறையும், நடைமுறைக் கல்வி முறையும் மேலதிகமாக குரூரமான போர்க்க…
-
- 0 replies
- 440 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதற்கு வேறு இனத்தவர்களுக்கு அருகதை இல்லை- கருணாகரம் அமீர்அலிக்கு பதிலடி மட்டக்களப்பு நகரின் மோசாப்பிட்டி வை.எம்.ஏ.சி.விளையாட்டுக்கழகத்தின் 88வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டும் மாபெரும் விளையாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பயனியர் வீதியில் உள்ள வை.எம்.ஏ.சி.விளையாட்டுக்கழக மைதானத்தில் இந்த விளையாட்டு விழா நடைபெற்றது. வை.எம்.ஏ.சி.விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஈ.வைரமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பிரதம அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா), கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் ஆலய தலைவர் செ.அமிர்தலிங்கம் ஆகியோர் கலந்துகொண்ட…
-
- 0 replies
- 1.1k views
-
-
மிலேனியம் ஒப்பந்தத்தில் இனி கையொப்பமிடப் போவதில்லை February 28, 2020 அமெரிக்காவின் மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் ((Millennium Challenge Corporation – MCC) நிறுவனத்துடன், இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடவிருந்த ஒப்பந்தத்தில், இனி கையொப்பமிடப் போவதில்லை என அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நேற்றையதினம் (27) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இந்த ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கைபயின் பிரகாரமே இந்தத் தீர்மானத்துக்கு அரசாங்கம் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்றையதினம் அரசாங்கத் …
-
- 6 replies
- 694 views
-
-
வால் பிடிக்கும் அடிமைக்கு அல்ல வாளெடுக்கும் வீரனுக்கே வரலாறு - சு.ஞாலவன் - ஆபிரிக்காவின் மேற்குக்கரையில் அமைந்திருப்பது தான் செனேகல். இலங்கைத்தீவின் 3 மடங்கு பரப்பளவைக் கொண்டிருந்தபோதிலும் வெறும் 10 மில்லியன் மக்களையே சனத்தொகையாகக் கொண்டது இத்தேசம். இங்குதான் யோறே hபா வாழ்கிறார். 88 வயதைத் தாண்டிய அவரிடம் 'வரலாறு" பதிந்துகொள்ளாத உண்மைகள் பல உள்ளன. வரலாறு பதிந்துகொள்ளவில்லையா? ஏன் இல்லை? என்று எவராவது கேட்கலாம். வெற்றியீட்டுபவர்களால் ஒருதலைப்பட்சமாக எழுதப்படுவதே ~வரலாறு| என்பது கசப்பான உலக யதார்த்தம். சரி இந்த யோறோபாவிடம் அப்படி என்ன வரலாற்று உண்மை பெரிதாக இருந்துவிடப்போகிறதென நீங்கள் அலட்சியமாகக் கேட்கக்கூடும். 1940 இல் அவருடைய ஊரான கியூஜிப…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்! - பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் [Thursday 2016-04-14 09:00] தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டு, அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜேம்ஸ் பெரி தெரிவித்துள்ளார். தமிழ், சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டு, அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜேம்ஸ் பெரி தெரிவித்துள்ளார். தமிழ், சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வா…
-
- 4 replies
- 581 views
-
-
மகிந்த ராஜபக்சவின் சாஞ்சி பயணத்தினால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் தொடக்கம், சாஞ்சி வரையிலான கிராம மக்கள் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டார்கள் என்பது குறித்த தகவல்களை ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ வெளியிட்டுள்ளது. போபாலுக்கும் சாஞ்சிக்கும் இடைப்பட்ட 45 கி.மீ நீளமான பிரதேசத்தில் உள்ள ஒரு டசினுக்கும் அதிகமான கிராமங்களில் நேற்று அறிவிக்கப்படாத ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்தது. சாஞ்சியிலும், போபால் தொடக்கம் சாஞ்சி வரையிலான நிலையங்களிலும் வழக்கமாக நின்று செல்லும் எந்தத் தொடருந்துகளும் நிறுத்தப்படவில்லை. பேருந்துகளையும், கார்களையும் வீதிகளில் காணமுடியவில்லை. கடைகள், விடுதிகள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சாஞ்சியில் பௌத்த ப…
-
- 6 replies
- 817 views
-
-
ஜெயாவின் தேர்தல் அறிக்கையில் இலங்கையில் தனி ஈழம் எய்திடும் வகையில் தொடர்ந்து நடவடிக்கை! இலங்கையில் தனி ஈழம் எய்திடும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை பெருந்துறையில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டு வைத்த குறித்த தேர்தல் அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் தமிழ்நாட்டில் முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியேயும் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனவும் தமிழக…
-
- 1 reply
- 694 views
-
-
லொறியும் வானும் நேருக்கு நேர் மோதி விபத்து – நாலவா் உயிாிழப்பு adminSeptember 25, 2025 குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வானும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் நால்வா் உயிரிழந்துள்ளனா். அந்த விபத்து இன்று (25) அதிகாலை இடம்பெற்றதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். குருணாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வானும், எதிர்த்திசையில் பயணித்த லொறியும் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த ஏழு பேர் தலாவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த இந்த வான் ஜா-எலயில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்தது எனவும் உய…
-
- 1 reply
- 150 views
-
-
சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்திய கடற்படைத் தலைமையகம் மீது வான்புலிகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடத்தியுள்ள தாக்குதலானது களநிலைமை குறித்த மறு மதிப்பீடு ஒன்றிற்குச் செல்ல வேண்டியதானதொரு நிர்ப்பந்தத்தைச் சிறிலங்காப் படைத்தரப்பிற்கு மட்டுமல்ல வேறு உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளுக்கும் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும் என்றே உறுதியாக நம்பலாம். கடற்படையின் கிழக்குத் தலைமையகம் மீது வான்புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா கடற்படைக்கு ஏற்பட்டுள்ள உயிர் இழப்புக்கள் மற்றும் உடமை இழப்புக்கள் என்பனவற்றின் அளவு, தொகை என்பன இங்கு முக்கியமானதொரு விடயம் அல்ல. சிறிலங்காப் படைத்தரப்பின் அதி முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையம் ஒன்றின் மீது இலக்குத் தவறாது வான்புலிகள் தா…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜெயசிக்கிறு நடவடிக்கையில் படையினருக்கு எதிராக தொடரப்பட்ட செய் அல்லது செத்துமடி தாக்குதலை போன்ற தாக்குதலை விடுதலைப்புலிகள் கடந்த சில நாட்களாக ஆரம்பித்திருப்பதாக படைத்தரப்பை மேற்கோள் காட்டி அரச சார்பு ஊடகமான டெயிலிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. நாச்சிக்குடா, வன்னேரிக்குளம், அங்கராயன்குளம் வரை உள்ள 20 கிலோமீற்றர்கள் நீள பாதுகாப்பரண்களில் நிலை கொண்டிருந்த 4ம் சிங்க ரெஜிமெண்ட் , 11ம் சிறீலங்கா காலாட் படை, 6ம் கெமுனு வோர்ச் ஆகிய படைப்பிரிவுகளின் நிலைகளையே கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் தினங்களில் அலையலையாக வந்து புலிகள் தாக்கினர் என்றும் இதன் போது தந்துரோபாய ரீதியில் 11ம் சிறீலங்கா காலாட் படை மற்றும் 6ம் கெமுனு வோர்ச் பிரிவுகள் தாம் கைப்பற்றியிருந்த சில நிலைகளில் இருந்து …
-
- 0 replies
- 3.3k views
-
-
வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வாய்பேச முடியாத பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் நேற்று (14) நள்ளிரவு 11.30 மணியளவில் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த மாதம் 27 ஆம் திகதி குறித்த பெண் வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் வீட்டிற்குள் புகுந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டு…
-
- 0 replies
- 144 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் உள ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகக்கூடிய அபாயம் நிலவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ச்சியான யுத்தம், இடம்பெயர்வு போன்ற காரணிகளினால் சிறுவர்கள் பாரியளவில் மன உளைச்சலுக்கு உட்படக் கூடும் என சுட்டிக்காட்டப்படுகிறது. நல்லூரில் அண்மையில் நடைபெற்ற ஓவிய மற்றும் கைப்பணிக் கண்காட்சியொன்றின் படைப்புக்கள் மூலம் சிறுவர்களது பாதிக்கப்பட்ட மனோ நிலை வெளிப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நல்லூரைச் சேர்ந்த அரச சார்பற்ற தொண்டு நிறுவனமொன்று குறித்த கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தது. அரசாங்கப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் அதிர்வு பாலர் மனதில் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்திய…
-
- 0 replies
- 599 views
-
-
[size=4]தற்போதைய சூழ்நிலையில் தமிழர்களின் வாழ்வுரிமையை தீர்மானிக்கும் சக்தியாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அரச தரப்பினரும் அதனைத் தொடர்ந்து சர்வதேச சமூகமும் முன்னிலைப்படுத்தி வருவதனைக் காணமுடிகிறது.[/size] [size=4]இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு தமிழர் தரப்புக்கு உரிய நியாயத்தைப் பெற்றுத் தருமா? என்ற வினாவுக்கு சிறைக்குள் இருந்து ஒரு கைதியின் எண்ணத்தின் வெளிப்பாடாகவே இந்தக்கட்டுரை அமைகிறது.[/size] [size=4]இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் ஒன்று முன்வைக்கப்படும் போது,[/size] [size=4]வரையப்படும் திட்டம் சம்பந்தப்பட்ட தரப்பினர் மத்தியில் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். நடைமுறைச் சாத்தியமானதாகவும் உலக ஒழுங்குக்கு அமைவானதாகவும் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்…
-
- 0 replies
- 344 views
-
-
யாழ். செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி போராட்டம் 28 Oct, 2025 | 01:02 PM செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி, யாழ்ப்பாணம் செம்மணி வளைவுக்கு அருகில் செவ்வாய்க்கிழமை (28) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை மெதடிஸ்த திருச்சபை மற்றும் நீதிக்கும் சமாதானத்துக்குமான பணிக்குழு ஆகியவை இணைந்து முன்னெடுத்த போராட்டத்தில் மத தலைவர்கள் , பாதிக்கப்பட்ட மக்கள் கலந்து கொண்டு செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/228885
-
- 2 replies
- 171 views
- 1 follower
-
-
பிரபாகரனே விரும்பாத 13 ஆவது திருத்தச்சட்டத்தை, அரசு இல்லாதொழிக்க வேண்டும்: பியசிறி தெரிவிப்பு [Thursday, 2012-10-18 08:41:06] விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூட 13 ஆவது திருத்தச்சட்டத்தை விரும்பவில்லை. ௭னவே மாகாண சபை முறைமையைக் கைவிட்டு புதிய மாவட்ட மற்றும் பிரதேசங்களை மையப்படுத்திய மக்கள் சபைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை ௭டுக்க வேண்டும். குறிப்பாக 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டியது ஜனாதிபதியின் தார்மீக கடமையாகும் ௭ன்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. வட மாகாண சபை தேர்தலை நடத்தி அங்கு மாகாண சபை அமைக்கப்பட்டால் மத்தியரசு பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரும். மாகாண சபைகள் பாராளுமன்றத்தை குழப்பியடிக்கும் நிலையங்களாக…
-
- 2 replies
- 344 views
-
-
கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம் இலங்கையில் கொரோனா தொற்றின் தாக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றே கூறலாம். உலக நாடுகளுடன் அதிக தொடர்புடைய நகரங்களும், நகர மக்களுமே தொற்றின் பிரதான இடம் பிடித்த மாவட்டங்களாக உள்ளன. இதே நேரம் இத்தகைய நெருக்கடியின் மத்தியில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிடுகின்றதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கட்டுரையும் கொரோனா தொற்றின் மத்தியில் தேர்தலின் அவசியப்பாடு பற்றி உரையாட முயலுகிறது. முதலாவது கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தினை மீண்டும் அவசரகால சட்டத்தின் விதியின் கீழ் கூட்டமுடியுமென அரசியலமைப்பு கூறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் கோரியிருந்தது. அத்தகைய கோரிக்கை தொடர்பில் முன்னாள் எதிர்க்கட்…
-
- 0 replies
- 326 views
-
-
வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக 2 லட்சம் மக்கள் ஆபத்தான நிலையிலுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் முகவர் அமைப்புகள் அபாயக் குரலெழுப்பியுள்ளன. இலங்கையில் செயற்படும் ஐக்கிய நாடுகளினது முகவர் அமைப்புகளையும், முக்கிய அரச சார்பற்ற அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் ஐ.நாவின் குழு வெளியிட்டுள்ள தனது வாராந்த அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது. கிளிநொச்சி நகரின் அநேகமான பொதுமக்கள் இடம்பெயர்ந்துவிட்டனர் எனவும் தெரிவித்துள்ள மனிதாபிமான அமைப்புகள் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இராணுவ நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளில் விமானக் குண்டுவீச்சும்,ஷெல் தாக்குதலும், சிறு ஆயுத பிரயோகமும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 729 views
-
-
மு.சிவசிதம்பரத்தின் அவர்களின் நினைவு தினம்... எஸ்.கர்ணன் நல்லூர், உடுப்பிட்டித் தொகுதிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உப சபாநாயகருமான அமரர் மு.சிவசிதம்பரத்தின் 14ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) வடமராட்சி நெல்லியடியில் இடம்பெற்றது. நெல்லியடி பஸ் நிலையப் பகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஏம்.ஏ.சுமந்திரன் உட்பட பலர் மலர் மாலை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து கரணவாய் மூத்தவிநாயகர் ஆலய மண்டபத்தில் அஞ்சலிக் கூட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள…
-
- 0 replies
- 372 views
-
-
இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது மட்டுநகர் எப்படியிருந்தது? மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளையில் மக்கள் தொடர்ச்சியாக முன்டியடித்துக்கொண்டு பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டதையும் நகரப்பகுதிகளில் சனநெரிசல் அதிகமாக கானப்பட்டது மருந்துக்கடைகளில் நீண்ட வரிசைகளில் மக்கள் நின்றதையும் சதொச நிலையங்களில் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் பொருட்கள் கொள்வனவில் அதிகளவான மக்கள் பங்கெடுத்திருந்தமை அவதானிக்க முடிந்தது. மரக்கறி வகைகளை கொள்வனவு செய்வதில் மக்கள் சமூக இடைவெளிகளை கடைப்பிடித்தமை அவதானிக்கமுடிந்தது. மட்டக்களப்பு நகரப்பகுதியில் மக்கள்நெரிசலை குறைப்பதற்காக நான்கு இடங்களில் மரக்கறிச் சந்தைகளை பிரித்து நான்கு பிரதேசங்களில் அமைக்கப்பட்டி…
-
- 0 replies
- 313 views
-