ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143263 topics in this forum
-
வலி.வடக்கில் இடம்பெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு வடமராட்சியிலிருந்து பொதுமக்களுடன் சென்ற பஸ் மீது கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது. யாழ். வல்லைப்பகுதியில் சிவில் உடையில் நின்ற படைத்தரப்பை சேர்ந்தவர்களே கழிவெண்ணையை ஊற்றியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வலி.வடக்கில் மீள் குடியேற்றத்தினை வலியுறுத்தியும் அங்கு இடம்பெறும் வீடழிப்பினை நிறுத்தக் கோரியும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இன்று நான்காம் நாளாக உண்ணா விரதப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்ற பஸ்ஸின் மீதே கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினமும் மேற்படி உண்ணாவிரத…
-
- 0 replies
- 378 views
-
-
வடமராட்சி – அல்வாய்ப் பகுதியில் இன்று காலை கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சுமார் 22 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த இகைசிய தகவலை அடுத்து அவர்களின் உதவியுடன் பருத்தித்துறை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர். http://uthayandaily.com/story/14076.html
-
- 0 replies
- 285 views
-
-
ஊடகவியலாளர்கள் பண மோசடியெனச் செய்தி; விசாரணைக்கு பூஜித் உறுதி -எம்.றொசாந்த் “யாழ். ஊடகவியலாளர்கள் மூவர், துபாயில் பண மோசடியில் ஈடுபட்டதாக, சிங்கள இணையத்தளமொன்றில் வெளியாகிய செய்தி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உறுதி வழங்கியுள்ளார். யாழ். ஊடகவியலாளர்கள் மூவர், துபாயில் பண மோசடியில் ஈடுபட்டதாக, சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது. துபாயில் உள்ள பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில், இலங்கையைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் பணியாற்றியதாகவும், அவர்கள் அந்த நிறுவனத்தின் 1,198,000 துபாய் டினாரை மோசடி செய்ததாகவும், செய்தி வெளி…
-
- 2 replies
- 410 views
-
-
சிறிலங்கா அரசஅதிபர் தேர்தலுக்கு முன்னதாக (ஜனவரி 26ம் நாளுக்கு முன்), இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான முன்னாள் போராளிகளைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டுள்ளது. http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e244OJlaccaeoOAd4deKKMMW0a3cdlYOed4dBTnB33022m4BZ4e
-
- 4 replies
- 1.6k views
-
-
பாதை தெரிந்த பின்பும் பயணத்தில் ஏன் தயக்கம் ? தமிழீழ நினைவெழுச்சி நாட்களை உணர்வுபூர்வமாக எதிர்கொள்ளும் தருணத்தில், நிகழ்காலநிலவரத்தையும் எதிர்காலம்பற்றிய சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியாக இப்பத்தி அமைகிறது. `மீகாமன் இல்லாத கலமாக’ ஈழத்தமிழினம் தடுமாறிக் கொண்டிருப்பதாக நம்மத்தியில் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. இன்னொரு புறத்தில் தவறான தீர்மானங்களால் இந்நிலைக்குத் தள்ளப்படடு விட்டோம் என்ற கருத்தும் உள்ளது. வந்த வாய்ப்புகளையெல்லாம் தவறவிட்டு விட்டு வருந்திக் கொண்ருக்கிறோம் என்று கூறுபவர்களும் உள்ளனர். இக்கருத்துகள் யாவும் அவரவர் பார்வையில் சரியாகத் தென்படலாம். இருப்பினும் வரலாறு முன்னோக்கியே நகரவேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே நடவடிக்கைகளை மேற்கொள்ள …
-
- 0 replies
- 574 views
-
-
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இரவு நடைபெற்ற இந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டு நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதுடன், மக்க…
-
- 0 replies
- 259 views
- 1 follower
-
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது நிழல் என்ற பிரமையில் இருந்த லக்ஸ்மன் குலுகல்ல? 1ஆம் இணைப்பு - 02-12-2013 - 13:17pm உடன் அமுலுக்கு வரும் வகையில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். இதேவேளே இந்த நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் குலுகல்ல மகிந்த ராஜபக்ஸ சகோதரர்களின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதற்கு அப்பால், அவர்களில் ஒருவராக தன்னை நினைத்து செயற்பட்டவர். ஆயின் ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பினூடு திடிரென இந்த முடிவு எடுக்க…
-
- 0 replies
- 342 views
-
-
வடபகுதியில் வர்த்தக நடவடிக்கைகளின் தரத்தை தேசிய – சர்வதேச தரத்திற்கு உயர்த்த முன்வர வேண்டும். – சி.வி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடபகுதி இளைஞர் யுவதிகள் அரச சேவைகள் தவிர்ந்த வேறு எந்த வேலைகளிலும் ஈடுபட மாட்டார்கள் அல்லது வேறு தொழில்கள் தெரியாது என்று கூறப்படுகின்றது. இந்நிலை மாற்றப்பட வேண்டும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் , ‘யாழ் தொழில் முனைவோர் – 2017’ எனும் தொனி பொருளில், யாழ்.சங்கிலியன் பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை காலை கண்காட்சி ஆரம்பமானது. அக் கண்காட்சியினை பிரதமன விருந்தினராக கலந்து கொண்ட முதலை…
-
- 0 replies
- 379 views
-
-
இன்று முதல் மீண்டும் மூடப்படும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று முதல் மீண்டும் இடைநிறுத்துவதற்கு எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நிலவும் அந்நிய கையிருப்பு நெருக்கடி காரணமாக மசகு எண்ணெய் கொள்முதல் செய்வதில் எழுந்துள்ள சிக்கல்களின் விளைவாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தேவையான மசகு எண்ணெயை பெற்றுக் கொண்டதன் பின்னர் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதிக்குள் அதன் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாகம் தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு மசக…
-
- 0 replies
- 157 views
-
-
பொன்சேகாவின் அதரவாளர்கள் மீது உகணையில் தாக்குதல் நேற்றைய தினம் அம்பாறையில் நடைபெற்ற ஜெனரல் சரத்பொன்சேகாவின் பிரச்சார கூட்டத்திற்கு வந்து திரும்பிச் சென்ற இரண்டு பேரூந்துகள் மீது நேற்றிரவு உகணைப் பகுதியில் வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதில் இருவர் காயமடைந்ததாகவும் பேருந்து வண்டிகள் சேதமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளையில் அம்பாறை மாவட்டத்தில் வக்கியல்ல வெருங்காட்டகொட பகுதியிலும் உகனைப்பகுதியிலுள்ள பாலகந்தபுர பகுதியிலும் அமைந்திருந்த பொன்சேகாவின் தேர்தல் பிரச்சார அலுவலகம் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தேர்தல் நாள் நெருங்குகையில் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகரித்து வருவதாக சுயாதீன தேர்தல் பார்வை…
-
- 0 replies
- 510 views
-
-
இந்து சமுத்திரத்தில் மிதக்கும் கோத்தாபயவின் ஆயுத களஞ்சியம்! - இந்தியக் கடற்படைத்தளபதி அதிருப்தி. [Monday, 2013-12-09 08:04:52] கடற்கொள்ளையர்களை அடக்கும் நோக்கம் என்று கூறி நாடு ஒன்றின் சட்ட எல்லைக்கு புறம்பாக இந்து சமுத்திரத்தில் மிதக்கும் ஆயுத களஞ்சியம் இயங்கி வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என இந்திய கடற்படைத் தளபதி அத்மிரல் டி.கே. ஜோஷி டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையிடம் கூறியுள்ளார். சர்வதேச கடல்சார் அமைப்பு இந்த மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பில் பொருத்தமான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் மிகப் பெரிய சட்டவிரோத நடவடிக்கையாக இது மாறிவிடும். அது மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமை…
-
- 8 replies
- 938 views
-
-
Published by J Anojan on 2022-01-12 18:37:43 துறைமுகங்களை நிர்மாணித்து இந்த நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி செல்வோம் என்ற நம்பிக்கையை நாம் கைவிடவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தெற்காசியாவின் கடல்சார் கேந்திர நிலையமான கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் இன்று (12) முற்பகல் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதனை குறிக்கும் வகையிலான நினைவு பலகை திறந்து வைக்கப்பட்டதுடன், நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வை…
-
- 7 replies
- 659 views
-
-
விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான அரசியல் தீர்மானத்தை எடுத்தவர் தற்போதைய ஜனாதிபதியே எனப் பெரும்பாலான தமிழ் மக்கள் கருதுவதால், அவருக்கு எதிராகத் தமிழ் மக்கள் வாக்களிக்கலாம் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஏ.எவ்.பி. செய்திச்சேவைக்குத் தெரிவித்திருக்கின்றார். பல தசாப்த காலமாக சுதந்திர இனரீதியிலான தனிநாடொன்றிற்காக இலங்கையின் விடுதலைப் புலிகள் போரிட்டனர். அவர்கள் மே மாதத்தில் தோற்கடிக்கப்பட்டனர். எனினும், இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிப்பதில் தமிழ் வாக்காளர்களே தீர்க்ககரமான சக்தியாக விளங்கப் போகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். பெரும்பான்மை சிங்களவர்களின் வாக்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்…
-
- 2 replies
- 1.1k views
-
-
Annonces Google மற்றவர்களின் அறிவுரைகளைக் கேட்காமல் தான் தோன்றித்தனமாகச் செயற்பட்டு வரும் சிறிலங்கா அரசுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் பேரதிர்ச்சி காத்திருக்கின்றதென மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மக்களுக்கான சகல உரிமைகளையும் வழங்காவிடின் சர்வதேச சமூகத்தால், சிறிலங்கா அரசு தூக்கியெறியப்படும் காலம் தொலைவில் இல்லைஎன்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்தவாரம் கத்தோலிக்க ஆயர் பேரவை விடுத்துள்ள சுற்றுநிரூப ஆவணத்தை சிறிலங்கா அரச தரப்பினரும், சிங்கள இனவாதிகளும் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் கருதி ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோ…
-
- 0 replies
- 450 views
-
-
சிவாஜிங்கம், சிறீகாந்தா ஆகியோர் ரெலோ அமைப்பிலிருந்து நீக்கம் – செல்வம் அடைக்கலநாதன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம் மற்றும் சிறீகாந்தா ஆகியோர் ரெலோ அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் செயலளார் பிரசன்னா ஆகியோர் ஒப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவர்கள் இருவரும் கட்சியின் அனைத்து பதவி நிலைகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணாக ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடத் தீர்மானித்தமை தொடர்பில் சிவாஜிலிங்கம் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவருக்கு ஆதரவு வழங்கியமை காரணமாக சிறீகாந்தா கட்…
-
- 6 replies
- 962 views
-
-
தேசிய வீரன் பண்டாரவன்னியனின் ஞாபகார்த்த விழா இன்று காலை 8.30மணியளவில் வவுனியாவில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள அன்னிய படையெடுப்புக்கு எதிராக 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தீரத்துடன் போராடிய தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுத்தூபியில் ஞாபகார்த்த நினைவு அனுஷ்டிக்கப்பட்டது. நினைவுத்தூபினை நிறுவிய வவுனியா சட்டத்தரணி மு. சிற்றம்பலம் தலைமையிலேயே இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். பி. றோஹன புஸ்பகுமார, வடமாகாண சபை உறுப்பினர்களாக ப. சத்தியலிங்கம், ஜி.ரி. லிங்கநாதன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா வர்த்தகர் சங்க செயலாளர் ஜி. ஸ்ரீஸ்கந்தாராஜா, தமிழ் விருட்…
-
- 3 replies
- 517 views
-
-
கிடைக்காத விடயத்திற்கு போராட்டம் என்கிறார் சப்றி! January 30, 2022 கிடைக்காத விடயம் ஒன்றினை பெறுவதற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள் என நீதி அமைச்சர் மொகமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர் மொகமட் அலி சப்ரி, “சில அரசியல்வாதிகள் இங்குள்ள இளைஞர் யுவதிகளை பிழையாக வழி நடத்துகிறார்கள்.கிடைக்காது என தெரிந்து கொண்டும் அதனை பெற முயற்சிக்கிறோம் என இளைஞர்களை மக்களை தூண்டி விடுகிறார்கள் அது சாத்தியமல்லாத விடயம். எத்தனை இளைஞர் யுவதிகளை இவ்வாறான அரசியல்வாதிகளின் போராட்டத்தின் மூலம் இழந்து விட்டோம் எத்தனை இளைஞர் யுவதிகள் வடக்கி…
-
- 5 replies
- 750 views
-
-
அடுத்த ஜனாதிபதி யார்? ஒரு கோடியே 40 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி இலங்கையின் நிறைவேற்று அதிகாரமிக்க ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை மறுதினம் 26 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 14,088,500 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 10875 நிலையங்களில் வாக்களிக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் அதிகளவில் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள தேர்தலாக இது அமைந்துள்ளது. 23 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் ஒருவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து…
-
- 5 replies
- 779 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் உயர் மட்ட நிலையைக் கொண்டிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இப்போது மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக விரிவு பெற்றிருக்கின்றது. கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல் நாள் வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்தின்போது இந்த விடயம் வெளிப்பட்டிருக்கின்றது. இவ்வாறு உறுப்பினர்களின் எண்ணிக்கையில் கூட்டமைப்பு விரிவடைந்து பெரிதாகியிருக்கின்றபோதிலும், அதன் செயற்பாடுகள், எதிர்காலத்து நடவடிக்கைகள் குறித்த அக்கறையான போக்கு என்பன விரிவு பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. வடமாகாண சபை செயற்படத் தொடங்கி இரண்டு மாதங்களாகின்றன. ஆயினும் மாகாண சபையும் அதன் முதலமைச்சர், மாகாண அமைச்ச…
-
- 16 replies
- 1k views
-
-
போராடும் மக்களின் பசி தீர்க்கும் அம்மா உணவகம்- யேர்மனி பேர்லின். தமிழீழம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் மீனவர்கள் கொல்லப்பட்டதற்கான தொடர் போராட்டம் நடந்துகொண்டிருக்கின்றது. இப் போராட்டத்தில் பங்கு பெறும் பெண் தலமைத்துவக் குடும்பங்களுக்கு மூவாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் நூறு குடும்பங்களுக்கு பேர்லின் அம்மா உணவகத்தினால் வழங்கிவைக்கப்பட்டது. Video Player 00:00 02:19 …
-
- 2 replies
- 272 views
-
-
அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்கத் தயார் –சிங்கள மக்களுக்கு தீமையை ஏற்படுத்தப் போவதில்லை‐ சம்பந்தன்‐ அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு யதார்த்த பூர்வமான அதிகாரப் பகிர்வினை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவாராயின் அதில் கலந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். நன்றி: globaltamilnews
-
- 2 replies
- 873 views
-
-
20 ஆவது அரசியலமைப்பு விவகாரம் : தோல்வியடைந்த அனைத்து மாகாணங்களிலும் மீள் வாக்கெடுப்பு லியோ நிரோஷ தர்ஷன் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம்அனைத்து மாகாண சபைகளிலும் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இதனடிப்படையில் தோல்வியடைந்த அனைத்து மாகாணங்களிலும் மீள் வாக்கெடுப்பு நடத்தி உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு அங்கீகாரம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்கான விதிகள் உள்ளடக்கிய 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலத்தை அங்கீகரிக்காத மாகாண சபைகளில் மீள் வாக்…
-
- 0 replies
- 314 views
-
-
இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் கிட்டத்தட்ட 24% பேர் ரஷ்யர் மற்றும் உக்ரேனியர்!! இந்த ஆண்டு இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் கிட்டத்தட்ட 24% பேர் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலாத்துறையின் உத்தியோகபூர்வ தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. எதிர்பார்த்தபடி, இலங்கைக்கு வரும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் ரஷ்யாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. https://athavannews.com/2022/126…
-
- 0 replies
- 204 views
-
-
அமெரிக்காவின் அதிகாரபூர்வ டுவிட்டர் குறிப்பாக வெளியான படம் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கைக்கு அபாயகரமான பிரதிவிளைவுகளை ஏற்படுத்தும் என்று முன்னாள் இராஜதந்திர அதிகாரி தயான் ஜயதிலக்க எச்சரித்துள்ளார். இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினால், இலங்கை மீதான அதன் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் ஜயதிலக்க கூறினார். இறுதிக்கட்டப் போரின்போது நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம்…
-
- 3 replies
- 1.2k views
-
-
நல்லாட்சி அரசாங்கத்தில் எமது மக்கள் பாதிக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் (பெரியபோரதீவு நிருபர்) சிறுபான்மையின மக்களினால் உருவாக்கப்பட்ட இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எமது மக்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எமது நிலங்கள் எவ்வாறு சூறையாடப்படுகின்றதோ, அதேபோன்றுதான் எமது கல்வியும் சூறையாடப்பட்டு வருகின்றது. இதனால் எமது மாணவர்களின் கல்வியை மேம்படுத்த நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் தீர்வுக…
-
- 0 replies
- 238 views
-