ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142757 topics in this forum
-
போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் போக்குவரத்து மற்றும் தொலைதொடர்புகளை மீண்டும் ஏற்படுத்துவதற்கும், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதற்கும், அவர்களுக்குரிய வாழ்வாதாரத்திற்கும் இந்திய அரசாங்கம் உதவி வழங்கி வருகின்றது. இந்த உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் சிறப்பு செயலர் ராகவன் கிளிநொச்சியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் தெரிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த வர்த்தகர்களின் சேதமடைந்த வர்த்தக நிலையங்களைப் புனரமைப்பதற்கான இந்திய அரசின் நிதியுதவியை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். இலங்கை வணிகர் மன்றங்களின் ஒன்றியத்தின் வேண்டுகோ…
-
- 2 replies
- 620 views
-
-
http://www.pathivu.com/news/1213/54/.aspx
-
- 0 replies
- 757 views
-
-
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பாலச்சந்திரனுக்கு சேலத்தில் சிலை எழுப்புவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இது குறித்து கட்சியின் பொதுச் செயலர் வை.காவேரி, ஒருங்கிணைப்புச் செயலர் எம்.பி.காமராஜ் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணத்திடம் திங்கள்கிழமை அளித்துள்ள மனு விவரம்: இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையில் அப்பாவித் தமிழ் சிறுவன் பாலச்சந்திரன் ராணுவ வீரர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். இது தமிழகத்தில் வாழும் தமிழர்கள் மத்தியில் பெரும் அனுதாபத்தையும் இன உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பாலச்சந்திரனின் நினைவைப் போற்றும் வகையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாலச்…
-
- 0 replies
- 447 views
-
-
வடக்கு மாகாண சபைக்கு காணி,பொலிஸ் அதிகாரங்களை வழங்கக்கூடாது புதிய அரசியலமைப்பை கூட்டு எதிரணி எதிர்க்கும் என்கிறார் வாசு (ப.பன்னீர்செல்வம்) வடமாகாண சபைக்கு காணி, பொலிஸ் உட்பட அதிக அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாது. இதனை கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்த மஹிந்த ஆதரவு எம்.பி.யான வாசுதேவ நாணயக்கார புதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்றத்தில் பொது எதிர்க்கட்சி வாக்களிக்கும் என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் தெரிவிக்கையில்; ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான இந்த அரசுக்கு எமது ஆதரவு எப்போதும் இல்லை. எனவே, புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொது எதிர்க்கட்சி…
-
- 0 replies
- 456 views
-
-
சிறிலங்கா இராணுவ இரகசியங்களை இந்தியாவுக்கு வழங்கினாரா சுரேஸ் பிறேமச்சந்திரன்? [ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 02:01 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்காவின் இராணுவ இரகசியங்களை இந்திய நாளிதழுக்கு வெளியிட்டது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனிடம் சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். கொழும்பில் நாலாம் மாடியில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்துக்கு நேற்றுக்காலை காலை 10 மணிக்கு அழைக்கப்பட்ட சுரேஸ் பிறேமச்சந்திரனிடம் இது தொடர்பாக சுமார் 2 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 'ரைம்ஸ் ஒப் இந்தியா' நாளிதழுக்கு சுரேஸ் பிறேமச்சந்திரன் அளித்த செவ்வி ஒன்றில், சிறிலங்கா இராணுவத்த…
-
- 5 replies
- 1.4k views
-
-
பொருத்து வீட்டை அமுல்படுத்தினால் அதிலுள்ள ஊழலை வெளிப்படுத்துவோம்-அமைச்சர் சுவாமிநாதனுக்கு சுமந்திரன் எச்சரிக்கை பொருத்துவீட்டுத் திட்டம் முற்று முழுதாக ஊழல் செயற்பாடு. அதனை எமது மக்கள் மீது திணிக்கின்ற நடவடிக்கைகளில் அமை ச்சர் சுவாமிநாதன் அதில் தொடர்ந்தும் ஈடுபட்டால் அந்தத் திட்டத்தில் நடந்த ஊழலை நாங்கள் வெளிப்படுத்த வேண்டிய சூழல் தவிர்க்க முடியாமல் ஏற்படும். இது அமைச்சருக்கு விடுக்கும் இறுதி எச்சரிக்கை.இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன். கரவெட்டி பிரதேச செயலகத்தின் கலாசார விழா நேற்றைய தினம் மூத்தவிநாயகர் கோயில் திருமணமண்டபத்தில் கர…
-
- 2 replies
- 460 views
-
-
கருணாவை கத்தியுடன் சந்திக்க சென்றவர் கைது Sayanolipavan கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கத்திகளுடன் சந்திக்க சென்ற நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.முரசுமோட்டை பகுதியில் தங்கியிருந்த கருணாவை , நேற்றைய தினம் சந்திக்க சென்ற நபரை கடமையில் நின்ற பொலிஸார் சோதனைக்குட்படுத்திய வேளை அவரிடமிருந்து கூரிய ஆயுதங்கள் இரண்டை பொலிஸார் மீட்டுள்ளனர்.குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.வயலிற்கு பசளைகளை இடுவதற்காக செல்கையில், கத்தி மற்றும் அரிவாள் ஆகியவற்றை எடுத்து சென்றதாகவும் வயலில் இருந்து திரும்புகையில் கருணாவை சந்தித்து செல்வதற்காகவே வந்ததாகவும் குறித்த சந்தேக நபர் தெரிவித்துள்ளார் எ…
-
- 2 replies
- 793 views
-
-
பிரான்சில் 10 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதேவேளையில் டென்மார்க்கில் தமிழ் இளையோர்கள் நடத்திவந்த உண்ணாநிலைப் போராட்டம் அந்நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சு வழங்கிய உறுதிமொழிகளை அடுத்து நிறைவுக்கு வந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 342 views
-
-
நாடு பிரிக்கப்படுவதற்கு எதிராக சிங்கள மக்களை அணிதிரள அழைக்கிறார் ஞானசாரதேரர் நாட்டின் தலைவர்கள் பௌத்தர்கள் அல்லது சிங்களவர்கள் அல்லாதவர்களின் ஆலோசனை க்கு அமைய செயற்படுவதாக பொதுபல பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கல பொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நாட்டைப் பிளவுபடுத்தும் புதிய யாப்பு ஒன்றிற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றி ணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். “தற்போது நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள அரசியல் யாப்பு திருத்தத்தின் ஊடாக நாட்டை பிளவடையச் செய்யும் அதேவேளை நாட்டின் வளத்தை வெளிநாடுகளுக்கு விற்ப னை செய்வதற்கு எதிராக நாம் ஒரு வேலைத்திட்டத்தை உடனடியாக செ…
-
- 0 replies
- 426 views
-
-
Britain renewed calls yesterday for an immediate ceasefire in SL Foreign Secretary David Miliband renewed calls for an immediate ceasefire in Sri Lanka on Saturday 18 April. He said, Britain is gravely concerned about the many thousands of lives and maintains its calls for an immediate ceasefire. And the Prime Minister's Special Representative, Des Browne MP, is travelling to New York to consult urgently with the UN. His statement said: 'I remain gravely concerned at the continuing conflict in northern Sri Lanka that threatens many thousands of civilian lives. The British Government maintains its calls for an immediate ceasefire in Sri Lanka and for civi…
-
- 2 replies
- 856 views
-
-
வடக்குத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற குடையின் கீழ் போட்டியிட்டாலும் அதன் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் குழுவானது தனித்துவமானவடக்குத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற குடையின் கீழ் போட்டியிட்டாலும் அதன் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் குழுவானது தனித்துவமானதாக இருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார் பசில் ராஜபக்ஷ. வடக்குத் தேர்தலில் முதற் தடவையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலமான முறையில் போட்டியிடுகின்றது. இதுவரை காலமும் அவ்வாறான பலமான நிலைமை எமக்கு இருக்கவில்லை. ஆனால் தற்போது சுதந்திரக் கட்சிக்கு வடக்கில் மக்கள் ஆதரவுடன் பலமாக உள்ளது என்றும் ; ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை போன்று வடக்குத் …
-
- 4 replies
- 625 views
-
-
வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் இன்று நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அவர்கள் எதிர்வரும் 27ம் திகதி வரை ஐந்து நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும், நெடுங்கேணி பொலிஸாரும் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்ததுடன் தொல்பொருட்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்கு வவுனியா நீதிமன்றில் கடந்த வருடம் ஒக்டோபரில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நிர்வாகத்தினர் பிணையில் விடுவ…
-
- 4 replies
- 679 views
-
-
சில விடயங்களில் சிறிலங்கா முன்னேற்றத்தை எட்டியுள்ள போதிலும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் ருவிட்டர் செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். “உட்கட்டமைப்பு, மீள்குடியமர்வு, கண்ணிவெடிகளை அகற்றல் போன்ற விடயங்களில் சிறிலங்கா அடைந்துள்ள முன்னேற்றத்தை அமெரிக்காவும் அனைத்துலக சமூகமும் மதிக்கின்றன. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவது சாதகமானது. ஆனால், தெரிவு செய்யப்பட்ட பரிந்துரைகளை மட்டும் தான் சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. எல்லாத் தரப்பினதும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்…
-
- 5 replies
- 1.2k views
-
-
மேலைத்தேய ஆடைகளுக்கு விடுமுறை; ஜனாதிபதி உத்தரவு அரச உயர் அதிகாரிகள், ஐரோப்பிய முறையிலான ஆடைகளை அணிவது கட்டாயம் என முன்னாள் ஜனாதிபதி ஏற்படுத்தியிருந்த சுற்றுநிருபத்தை தான் இல்லாது செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், அரச சேவையின் உயர் அதிகாரிகள், இனிமேல் அத்தியாவசிய தேவைகளை விடுத்து, ஏனைய சந்தர்ப்பங்களில் கழுத்துப் பட்டி மற்றும் கோட் உடனான உத்தியோகப்பூர்வ ஆடை அணிய வேண்டியதில்லை என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். …
-
- 0 replies
- 476 views
-
-
இந்தியா இலங்கை ஜப்பான் ஆகியநாடுகள் மத்தியில் கைச்சாத்திடப்பட்ட கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பான உடன்படிக்கையிலிருந்து இலங்கை விலகியிருப்பது ஒருதலைப்பட்சமான வருந்தத்தக்க நடவடிக்கை என ஜப்பான் தெரிவித்துள்ளது. முத்தரப்பு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளதை தொடர்ந்து ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடமிருந்து மேலதிக விபரங்களை எதிர்பார்த்துள்ளதாக புதுடில்லியில் ஜப்பானிய தூதரக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் இது குறித்து ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்து அறிவித்துள்ளமை வருந்தத்தக்க விடயம் என அவர் தெரிவித்துள்ளார். Thinakkural.lk
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கை: 350 ராணுவத்தினர் பலி: புலிகள் அதிரடி இலங்கை முள்ளிவாய்க்கால் வடக்குப் பகுதியில் இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்கதல்களில் குறைந்த பட்சம் 350 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 700க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் வானொலியான புலிகளின் குரல் வானொலி அறிவித்துள்ளதாக தமிழ்நெட் இணையதளத்தில் கூறப்பட்டள்ளது. இதேபோல் வியாழக்கிழமை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதல் முயற்சி ஒன்றும் கடற்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும
-
- 8 replies
- 2.2k views
-
-
சாவின் விளிம்பில் நின்று இனவாத சிறிலங்கா அரசின் கொடிய குண்டுமழையில் குளித்தும் எறிகணையில் எரிந்தும் கொத்தணிக் குண்டிலும் நச்சுவாயுவிலும் கொல்லப்படும் ஈழத் தமிழர்களின் துயர்கண்டு உங்கள் இதயத்தின் கதவுகளைத் திறந்து ஈழத்தமிழ் மக்களுக்கு தமிழீழத்தை அமைத்துக்கொடுப்பேன் என்று உணர்வுடன் விடுத்த உணர்வின் வரிகளும் உரிமைக்குரலும் எங்கள் நெஞ்சத்தை நெருட வைத்துள்ளது என்று இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 350 views
-
-
-
- 0 replies
- 228 views
-
-
இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியின் அடக்குமுறைப் போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை "மீண்டும் அச்சத்திற்குள் இலங்கை: புதிய ஆடையில் பழைய பேய்கள்' (Old ghosts in new garb: Sri Lanka return to fear) என அந்த ஆட்சியை குறிப்பிட்டுள்ளது. ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட் டத்தொடரில் இலங்கை விவகாரம் எடுக்கப்படுவதை ஒட்டி இந்த அறிக்கையை மன்னிப்புச் சபையின் கொழும்பில் உள்ள தென்னாசிய அலுவலகம் வெளியிட்டுள்ளது. புதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை' என்ற தலைப்பில் இலங்கை தொடர்பாக பிந்திய அறிக்கை ஒன்றை சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ளது. இலங்கையில் வரலாற்று ரீதியான குற்றங்களுக்கான நீத…
-
- 1 reply
- 728 views
-
-
மின் அஞ்சலில் வந்த செய்தி Ask EU to lift the ban on the LTTE If you are from a country in the EU... Please inform the EU about the ban on the LTTE and ask them to lift the ban. Here are the steps: Visit this link: http://www.ombudsman.europa.eu/atyourservi...e.faces#Target2 It is for misadministration in the EU. The info section says ... "The European Ombudsman investigates complaints about maladministration in the institutions and bodies of the European Union (EU). The institutions include, among others, the European Commission, the Council of the EU and the European Parliament. The European Medicines Agency and the European Foundation for the Im…
-
- 0 replies
- 961 views
-
-
இலங்கை மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்பது கேள்விக்குறி! - மூத்த தலைவர்களுடன் ஆலோசனை!! இலங்கையில் இடம்பெறவிருக்கும் பொதுநலவாய அரசியல் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பது குறித்தான தமது முடிவை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மீள்பரிசீலனை செய்து வருவதாக இந்திய இராஜதந்திர வட்டாரங்களின் ஊடாக அறியமுடிகின்றது. எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறும் பொதுநலவாய அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டை முக்கிய சில நாடுகள் புறக்கணிப்பது தொடர்பில் ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில் இந்த மாநாட்டை இந்தியாவும் புறக்கணிக்க வேண்டும் என தமிழகத்தின் அரசியல்வாதிகள் இந்திய மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை தொடர்பில் காங்கிரஸ்…
-
- 5 replies
- 898 views
-
-
இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சி: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/Kabir-Hashim.jpg இரணைதீவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட முடிவின்மூலம் அரசாங்கம் இனங்களுக்கிடையில் திட்டமிட்டு பிரச்சினையை தோற்றுவிக்க முயற்சி செய்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், அனைத்து தரப்பினர் மத்தியிலும் பிரிவினைவாதத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என குறிப்பிட்டார். சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொறுத்தமான 6 இடங்கள் தேர…
-
- 0 replies
- 268 views
-
-
ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை குறித்த பாராளுமன்ற விவாதம் இன்று ஆரம்பம் பாராளுமன்ற அமர்வு இன்று (10) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. உயிர்த்த ஞாயிறு (ஏப்ரல் 21 ) தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மீது பாராளுமன்றத்தில் இன்று (10) ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது. இந்த அறிக்கை தொடர்பில் மூன்று நாள் விவாதத்தை முன்னெடுப்பதற்கு கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர். இதனடிப்படையில், முதல் நாள் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. ஏனைய 2 நாள் விவாதங்களையும் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்…
-
- 1 reply
- 372 views
-
-
சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு வெள்ளவத்தை காவல்துறையினருடன் இணைந்து பயங்கரவாத புலனாய்வுத்துறையினர் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றின்போது சிறிலங்கா இராணுவத்தின் கேணல் தரத்தில் உள்ள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இவரிடம் இருந்து மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவர் விசாரணையின்போது தெரிவித்த தகவலைத் தொடர்ந்தே இந்த இராணுவ அதிகாரி நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருக்கின்றார். கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி இரத்மலானை இராணுவ முகாமில் பணிபுரிபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மைக்ரோ ர…
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் வருடாந்த திருவிழா இன்று வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இன்று காலை 4 மற்றும் 6 மணிக்கு தமிழ் மொழியிலான திருப்பலிகள் இடம்பெற்றதோடு 5 மற்றும் 7 மணிக்கு சிங்கள மொழியிலான திருப்பலியும் இடம்பெறவுள்ளன. காலை 8.00 மணிக்கு தமிழ் மொழியிலான திருவிழா திருப்பலியும் 10 மணிக்கு சிங்கள மொழியிலான திருப்பலியும் 12 மணிக்கு ஆங்கில மொழியிலான திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டன. இதனையடுத்து இன்று மாலை 5.30 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி வழமையாக இடம்பெறும் வீதி வழியாக நடைபெற்று ஆலயமுன்றலில் நற்கருணை ஆசீர்வாதத்துடன் புனிதரின் திருச் சொ ரூப ஆசிருடன் திருவிழா இனிதே நிறைவு பெறும். இம்மாதம் 3ஆம் திகதி கொடிய…
-
- 0 replies
- 488 views
-