ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143276 topics in this forum
-
விஜயதாச ராஜபக்ஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் 70 பேர் கையொப்பமிட்டுள்ளனர்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனையில் 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக கொழும்பு தகவலொன்று தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதனுடன் தொடர்பு பேணும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மான யோசனையில் கையொப்பமிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 17ம் திகதி நடை…
-
- 0 replies
- 244 views
-
-
இன்று ஜனவரி 08, 2010. அலுவலகத்திற்குச் செல்லும் போது பட்டப்பகலில் நட்டநடுத்தெருவில் வைத்து எனது கணவரும் உங்களது நண்பருமான லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது. 2005இல் நீங்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதிலிருந்து இற்றை வரை 15க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தப் படுகொலைகளில் ஒன்று பற்றிக்கூட உரிய விசாரணைகள் நடைபெறவில்லை. லசந்த குறிப்பிட்டதைப் போன்று சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் அரசுகளுக்கு அது எங்கென்றாலும் படுகொலை தான் அதன் அடிப்படை ஆயுதமாக இருக்கும். இறுதியில் நான் கொல்லப்படுவேன். அரசாங்கமே என்னைக் கொல்லும் என்று லசந்த தனது இறுதி ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார். லசந்தவின் படுகொலை …
-
- 0 replies
- 951 views
-
-
ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஐ நிராகரிப்போம் 13ம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அணி திரண்டு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி துண்டுப்பிரசுரம் விநியோகித்துள்ளது. தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ம் திருத்தத்திற்குள் முடக்கம் சதி முயற்சியை முடியடிக்க அனைத்து தமிழ் மக்களதும் பூரணமான ஆதரவை கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாண நகர் பகுதியில் இன்றையதினம் இவ்வாறு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. -யாழ். நிருபர் பிரதீபன்- http://tamil.adaderana.lk/news.php?nid=156526
-
- 5 replies
- 508 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் இலங்கையின் வடக்கு கிழக்கில் செயல்பட்டு வரும் சட்டவிரோத ஆயுதக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்களை உடனடியாக பறிமுதல் செய்வதற்கு சரத்பொன்சேகா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் ஆதரவுடன் வடக்கு கிழக்கில் செயல்பட்ட வரும் ஆயுதக் குழுக்களால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களின் செயல்பாடுகளை உடனடியாக முடிவிற்கு கொண்டு வருவதற்கு சரத் பொன்சேகா நடவடிக்கை எடுப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். http://thinamurasam.com/
-
- 3 replies
- 737 views
-
-
ஜெனிவாவுக்கு அனுப்புவதற்கான அறிக்கை கூட்டமைப்பால் தயார் செய்யப்படுகின்றது – சுமந்திரன் காணி அபகரிப்பு உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கம் ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தற்போதைய நிலைமைகளை தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் …
-
- 1 reply
- 195 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி இன்று சனிக்கிழமை மீண்டும் தோண்டப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டது. மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக இன்று சனிக்கிழமை (28) காலை 8.30 மணிக்கு குறித்த மனிதப்புதைகுழி தோண்டும் நடவடிக்கை ஆரம்பமாகியது. இதன்போது, மண்டையோடு மற்றும் மனித எச்சங்கள் சிலவும் புதிதாக தோண்டப்பட்ட பகுதியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்த மனித புதை குழி தோண்டும் போது உடற்கூற்று நிபுணர் ஆர்.எம்.பி.ராஜகருணா, அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரி பி.யு.மடவல, தொல்பொருள…
-
- 0 replies
- 445 views
-
-
முல்லைத்தீவில் கோர விபத்து : ஒருவர் பலி, இருவர் படுகாயம் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் நெடுங்கேணி வீதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியாகியதோடு மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாரவூர்தி ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளானதில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/23957
-
- 0 replies
- 442 views
-
-
இலங்கையில் சில்லறை நாணயங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டிலிருக்கும் தமது நாணயங்களை மீண்டும் நாட்டுக் கொண்டுவர இலங்கை முயற்சிகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் இந்தியாவிலுள்ள பல ஆலயங்களிலுள்ள சுமார் இருபது டன்கள் அளவுக்கான நாணயங்களை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர மத்திய வங்கி முயற்சிகளை எடுத்துவருகிறது. இந்தியா மற்றும் நேபாளத்துக்கு இலங்கையிலிருந்து புனித யாத்திரை செய்யும் பௌத்தர்கள் அங்குள்ள உண்டியல்களில் தமது காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். அவ்வகையில் புத்தகயாவில் மட்டும் பத்து டன்கள் அளவுக்கு இலங்கை நாணயங்கள் உள்ளன என்று தங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் மத்திய வங்கியின் பேச்சாளர் தமாரா விஜேசூரிய பிபிசியிடம் தெரிவித்துள்ளார்…
-
- 1 reply
- 845 views
-
-
நெருக்கடிக்கு தீர்வாக... மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை, நாட அரசாங்கம் தீர்மானம்! மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து நிதி உதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து இலங்கை அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார். தற்போதைய நாணயமாற்று நெருக்கடிக்கு தீர்வு காண உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். https://athavannews.com/2022/1269261
-
- 4 replies
- 501 views
-
-
வெளிநாடுகளில் நடக்கும் பொன்சேகாவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்பவர்கள், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது கைது செய்யப்படுவர் என சிறிலங்கா தூதுவர்களால் எச்சரிக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக – வோசிங்டன் மற்றும் இத்தாலியில் உள்ள சிறிலங்கா தூதுவர்களே புலம் பெயர்ந்த சிங்கள சமூகத்தை இவ்வாறு மிரட்டி உள்ளனர் மூலம் சங்கதி இது எப்படி இருக்கு சிங்களவர் தமிழரை மிரட்டும் காலம் போய் சிங்களவரே சிங்களவரை மிரட்டும் காலம் வந்தாச்சு.
-
- 0 replies
- 1k views
-
-
விமல், கம்மன்பிலவை அரசிலிருந்து வெளியில் விடாதீர்கள்! – திலும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகிய இருவரையும் அரசில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான சமரசப் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.” – என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- “நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை மட்டும் கருதி, சில தரப்புகளால் முன்வைக்கப்படும் யோசனைகளை எல்லாம் ஏற்றுச் செயற்பட முடியாது. ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சி அரசியலில் இருந்து …
-
- 3 replies
- 337 views
-
-
எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலுக்கான யாழ் மாவட்டத்திற்கான வேட்புமனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தாக்கல் செய்துள்ளது. தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா இந்த வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார். முதன்மை வேட்பாளராக மாவை சோமசுந்தரம் சேனாதிராசா குறிப்பிடப்பட்டுள்ளார். அவருடன் கந்தையா சுரேஸ் பிரேமச்சந்திரன் ,அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சிவி கந்தையா சிவஞானம் சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம், நடேசு ராசேந்திரன், கந்தையா அருந்தவபாலன், சிவஞானம் சிறிதரன், ஈஸ்வரபாலன் சரவணபவன், ராசரத்தினம் சிவச்சந்திரன், பொன்னுத்துரை ஐங்கரநேசன், முடியப்பு ரெமீடியஸ ;ஆகியோர் பிரேரிக்கப்பட்டிருக்கின்றனர். www.globaltamilnews.net
-
- 2 replies
- 798 views
-
-
வன்னியில் இடம் பெற்ற இறுதியுத்தத்தில் உயிர்தப்பி, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளவர்கள் சிலர் காணமற் போயுள்ளதாகத் தெரியவருகிறது. தமிழகத்தில் ஈழத்தமிழர்களை தங்கவைக்கபட்டுள்ள, அகதிகள் முகாமிலிருந்தே மர்மமான முறையில் இவர்கள் காணமல் போயுள்ளதாக மேலும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னியிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்று, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருந்து வைத்தியர் ஒருவர் அண்மையில் இவ்வாறு மர்மமான முறையில் காணமற் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இறுதி யுத்தத்தின் போது, இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான பல விவரங்கள் இவருக்கு தெரிந்திருந்தது எனவும், அதன் காரணமாகவே இவர் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.…
-
- 4 replies
- 1.2k views
-
-
ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்றத்தில் ரகளை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், சபைக்கு நடுவே வந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சபையில் சற்று பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஒன்றிணைந்த-எதிரணி-நாடாளுமன்றத்தில்-ரகளை/175-204150
-
- 0 replies
- 187 views
-
-
தமிழர் தாயக தலைநகரான திருக்கோணமலையை ஆக்கிரமித்து நிற்கும் சொறீலங்கா கடற்படை மற்றும் அமெரிக்க ஈரூடகப் படை பயிற்சியாளர்கள் இணைந்து சிறீலங்காவுக்கான ஈரூடகப் படைப்பிரிவை உருவாக்கி வருகின்றனர். ஈழப்போர்களின் காலத்தில் கூட சிறீலங்காவிடம் ஈரூடகப் படையணி இருந்திராத நிலையில்.. போர்க்குற்ற.. மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை சுமக்கும் சிறீலங்காவுக்கு அமெரிக்க ஏகாதபத்தியம்.. ஈரூடக் படையணியை உருவாக்க உதவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சம்பூர் தமிழர் நிலப்பரப்பு சிங்கள ஈரூடகப் படைகளின் தேவைக்காக சிறீலங்கா கடற்படையால் கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகள் மட்டும் ஈரூடகப் படையணியை வைத்திருந்ததோடு.. 2006 க்குப் பின்னரான.. யாழ் குடா மீட்புக்கான ஒரு சண்டையில்.…
-
- 2 replies
- 676 views
-
-
தமிழ்மக்களுக்கு புத்தாண்டுப் பரிசாக யாழ்தேவி ரயிலை யாழ்ப்பாணத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை கிளிநொச்சி வரை சேவையில் ஈடுபடும் யாழ்தேவி ரயில், இந்த மாத இறுதிக்குள் பளை வரையிலான சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.தற்போது யாழ் ரயில் மார்க்கத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்து வருவதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இதேவேளை எதிர்வரும் சித்திரை வருடப் பிறப்புக்குள் யாழ்ப்பாணம் வரை யாழ்தேவி பயணிப்பதற்கான அனைத்து கட்டட நடவடிக்கைகளும் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். http://seithy.com/breifNews.php?newsID=102972&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 470 views
-
-
புதிய அமைச்சர்கள், நியமனம் – நிதியமைச்சராக அலி சப்ரி..! அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கையளித்துள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பசில் ராஜபக்ஷவுக்கு பதிலாக புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி பதவியேற்றுள்ளார். அத்தோடு, கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தன சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மேலும் வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். குறித்த நால்வரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். கடுமையான அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில் …
-
- 8 replies
- 485 views
-
-
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், மீன்பிடி மற்றும் விவசாயம் என்பவற்றில் மக்களின் உரிமைகளை உறுதிசெய்ய ஒன்றிணைந்து போராடுவோம் என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் அறிவித்துள்ளது. அதன்படி 1990ஆம் ஆண்டிலிருந்து இடம்பெயர்ந்து இன்னும் மீள்குடியேறாத மக்களை விரைவில் மீள்குடியேற்ற கோரியும், காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்குவதனை நிறுத்தி உண்மைநிலையினை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், இந்திய மீனவர்களின் அத்துமீறலை நிறுத்த வேண்டும் , விவசாயிகளின் உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பொருளாதார மேம்பாடு போன்ற கோரிக்கைகள…
-
- 0 replies
- 161 views
-
-
வேட்பாளர் தெரிவில் கட்சிகள் தீவிரம் எம். நேசமணி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தெரிவில் பிரதான கட்சிகள் உட்பட சகல தரப்பினரும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர். பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றிற்கு சவால் விடுக்கும் வகையில் இம்முறை கூட்டு எதிரணியி னர் தனியாக களமிறங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தெரிவு செய்யும் முகமாக ஐக்கிய தேசியக் கட்சி 17 வேட்புமனு தெரிவுக்குழுக்களை அமைத்துள்ளதாக தெரிவி…
-
- 0 replies
- 233 views
-
-
‘கோட்டா கோ ஹோம்’: காலி முகத்திடலில் கூடும் மக்கள்! ஜனாதிபதியை வீட்டுக்கு போகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடலில் பெருந்திரளான மக்கள் கூடி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களின் ஊடாக இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெருந்திரளவர்ககள் கலந்துகொண்டுள்ளனர். இரண்டு மில்லியன் பேரை இன்றைய தினம் அங்கு அழைக்க முயற்சித்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு நீர்த்தாரை வாகனங்கள், கலகம் அடக்கும் பொலிஸார் ஜனாதிபதி செயலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. …
-
- 24 replies
- 2.5k views
- 1 follower
-
-
நாமலின் செயற்பாடுகளுக்கு நீதிமன்றம் தடை பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் டீ.வீ.சானக ஆகியோருக்கு ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகார எல்லைக்குள் சில செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இருவரும் ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகார எல்லைக்குள் வீதியை மறைத்து ஆர்ப்பாட்டம் செய்தல், இந்திய தூதரக காரியாலயம், மாகம்புர துறைமுகத்திற்கு நுழையும் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடல் மற்றும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்துதல் ஆகியசெயற்பாடுகளுக்கு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் ஹம்பாத்தோட்டையில் மாகம்புர துறைமுகம் மற்றும் ம…
-
- 0 replies
- 319 views
-
-
[TamilNet, Saturday, 09 April 2022, 14:44 GMT] பெரும் பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ளும் இத்தருணத்தில், திடுமென வரலாற்று ஓட்டத்திற்கு மாறான நடத்துமுறை ஒன்றைத் தழுவி, ஈழத்தமிழர் தேசத்தின் கூட்டு உரிமைகளை உறுதிப்படுத்த, அதன் ஆளும் தரப்போ, எதிர்த் தரப்போ இலகுவில் உடன்பட்டுவிடும் என்று எதிர்பார்ப்பது அடிப்படைத் தவறாகும். இலங்கைத் தீவைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு வரலாற்றுப் பட்டறிவே உற்ற நண்பன்; எதிரியை மட்டுமல்ல விரோதிகளையும் துல்லியமாகக் கணிப்பிடும் நுண்ணறிவே அவர்களின் அருமைத் தோழி. அரசியலமைப்பை இலங்கை அரசு கையாண்டுவந்துள்ள அதன் நடத்துமுறையைப் (modus operandi) புரிந்த நிலையில், நுண்ணறிவோடும் பேரறிவோடும், ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழம், தமிழ்நாடு, புலம்பெயர் சூழல் என்று ஒ…
-
- 0 replies
- 404 views
-
-
காலி முகத்திடல் போராட்டம் : நீதிமன்ற அதிகாரத்தை கொழும்பு பிரதான நீதிவானுக்கு வழங்கவும் - பிரதம நீதியரசருக்கு கடிதம் (எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (20) பத்தாவது நாளாகவும் காலி முகத்திடலுக்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த கோட்டை பொலிஸார் நீதிமன்ற உத்தரவினைப் பெற்றுக்கொள்ள முயற்சிகளை செய்கின்றமை தெளிவாகியுள்ளது. இந்நிலையில், ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்ற தலையீடு ஒன்றுக்கு பொலிஸார் முயற்சிக்கும் நிலையில், அந் நீதிமன்ற நடவடிக்கைகளை கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்காது, அவ்வதிகாரத்தை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு அளித்து உத்தரவிடுமாறு பிரதம நீதியரசர் உ…
-
- 0 replies
- 149 views
-
-
யாழ்ப்பாணத்து மாம்பழம் தனி ருசி யாழ்ப்பாணத்து முருங்கைக்காய் தனி ருசி யாழ்ப்பாணத்து புகையிலை தனி ருசி யாழ்ப்பாணத்தானும் ஒரு தனி ரகம்” - நிலாந்தன் - சில நாட்களுக்கு முன் என் ஆசிரியர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது, “நீ கதைக்கிறது ஒரு மெல்லிய ஆங்கிலம் கலந்த, சினிமாப் பாணியான தமிழ்” என்ற தொனிப்படக் கூறியிருந்தார். ஆம். அது சரிதான். “தொனி” தான் நாம் இப்போது பேசப்போகும் பிரச்சினை. யாழ்ப்பாணத்தின் தனித்த அடையாளங்களை சொல்லிக்கொண்டே போகும்போது முதலில் சொல்லத் தொடங்குவது அதன் வித்தியாசமான அழகான தமிழை உச்சரிக்கும் பாணியைத்தான். யாழ்ப்பாணத்து அன்ரிமார் “இஞ்சருங்கோ” என்று அழைப்பதில் தொடங்கி, அதன் காதல் இழைந்து கிடக்கும் தனித் தொனி தன்னை இழந்து வருகிறதா என்று கேட்டுக்கொண…
-
- 1 reply
- 873 views
-
-
தன்மீதான தாக்குதல் தொடர்பில் யோகேஸ்வரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள அலுவலகத்திற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் பாராளுமன்ற உறுப்பினரைத் தாக்க முனைந்தபோது தடுக்க முனைந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். தன்மீது தாக்குதல் நடத்த உதவி ஆணையாளர் முயற்சிகளை மேற்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.…
-
- 0 replies
- 160 views
-