ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை பொலிஸ் விசாரணைக்கு வருமாறு ஏறாவூர் பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர். செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்திற்கு எதிராக மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டமை குறித்து பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தனை ஏறாவூர் பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் ஊழல் தொடர்பாக செய்திகளை வெளியிட்டு வரும் சுதந்திர ஊடகவியலாளர் நிலாந்தன் மீது கடந்த காலங்களில் பல தடவைகள் இதுபோன்ற பொலிஸ் விசாரணைகள் நான்கு தடவைக்கு மேல் நடைப…
-
- 1 reply
- 873 views
-
-
கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இரு கட்சிகளுக்கும் இடையிலான இந்தக் கூட்டணியை உருவாக்கும் முடிவு குறித்த முறைப்படியான பகிரங்க அறிவிப்பு நாளை மறுநாள் புதன்கிழமையே வெளியிடப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இரா.சம்பந்தன் கடந்த சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். அதேவேளை, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இறுதியாக நடத்தவுள்ள கலந்துரையாடலுக்குப் பின்னரே இதுபற்றிய இறுதி முடிவு எடுக்கப்படும் எ…
-
- 0 replies
- 504 views
-
-
அரசியல் கைதிகள் விடயத்தில் சட்டமா அதிபரின் அறிவுரை பெறுமாறு பணிப்பு புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு அனுப்புவதை விரும்பாத அரசியல் கைதிகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் அறிவுரையை பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்ற குற்ற தடுப்பு பிரிவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் குறித்த சில மனுக்கள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேலதிக நீதவான் அருணி ஆடிகல இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். http://onlineuthayan.com/news/8540
-
- 0 replies
- 305 views
-
-
கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கானிய பனிஸ்டரதும் அவரது கணவரதும் தொலைபேசி மற்றும் சிம் அட்டைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்குமாறு கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டுத் தூதரகத்துக்கு கொழும்பு தலைமை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/71428 சுவிஸ் தூதரக ஊழியர் விவகாரத்தில் தேசிய, சர்வதேச சட்டங்கள் உறுதியாகப் பின்பற்றப்படுகின்றன : தினேஷ் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் இலங்கை ஊழியரொருவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தைக் கையாள்வதில் இலங்கை அரசாங்கமும், நீதித்துறையும் தேசிய சட்டங்களையும் சர்வதேச சட்டத்தையும் உறுதியான முறையில் கடைப்பிடிப்பதாக வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவ…
-
- 5 replies
- 978 views
-
-
05 Apr, 2025 | 04:32 PM ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கொழும்பு இளைஞன் முகமட் ருஸ்டியை 90 நாட்கள் தடுப்புக்காவலில்வைப்பதற்கு உத்தரவிட்டுள்ள ஆவணத்தை பார்வையிட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் தெரிவித்துள்ளதாவது கொழும்பில் 22 வயது முகமது ருஸ்டி மார்ச் 25ம் திகதி கைதுசெய்யப்பட்டமை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை ஆழ்ந்த கவலையடைந்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ருஸ்டியை 90 நாட்கள் தடுப்புக்காவலில்வைப்பதற…
-
- 0 replies
- 123 views
-
-
யாழ்பாணம் பருத்தித்துறையில் இனத் தெரியாத ஆயுததாரிகளினால் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார. பருத்தித்துறை மந்திகைப் பகுதியில் இன்று காலை இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்வம் இடம்பெற்றுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்டவர் கரவெட்டி இராஜகிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான 28 அகவையுடைய ஜெயசிங்கன் விக்னேஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மரண விசாரணைகளை விசாரணை செய்த பருத்தித்துறை மேலதிக நீதியாளர் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக மந்திகை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். செய்தி: பதிவு
-
- 0 replies
- 848 views
-
-
தமிழ்நாட்டின் குன்னூரில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியை இரத்து செய்து சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார். குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொள்ள இலங்கை இராணுவ அதிகாரிகள் வந்துள்ளனர். இலங்கை இராணுவ அதிகாரிகள் வந்திருக்கும் தகவலால் நேற்று முதல் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மதிமுகவினர் நேற்றே போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று வெலிங்டன் பயிற்சி மைய முற்றுகைப் போராட்டம் நடத்த தமிழ் அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன. இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். …
-
- 2 replies
- 837 views
-
-
23 ஆம் திகதி அமைச்சராகும் பொன்சேகா லியோ நிரோஷ தர்ஷன் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவிவழங்கப்படவுள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். வடமத்திய, மத்திய மற்றும் ஊவாக மாகாணங்களுக்கான மாநகர அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். http://www.virakesari.lk/article/3203
-
- 0 replies
- 465 views
-
-
கிறிஸ்மஸ் தினத்தில் பாலன் பிறப்பை கொண்டாடும் நிலையில் தமது பாலகர்களை தாம் தேடி வருவதாக தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் 1040 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தமது போராட்ட கொட்டகை முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் அவர்களின் படத்தை நத்தார் தாத்தா வேடமணிந்து, நாத்தார் வாழ்த்துக்கள்- அடுத்த நத்தாருக்குள் தீர்வு என வாசகத்தையும் பொறித்து ஏந்தியிருந்தனர். மேலும், ' துப்பாக்கிகள…
-
- 1 reply
- 434 views
-
-
Published By: DIGITAL DESK 2 14 APR, 2025 | 03:23 PM நாடளாவிய ரீதியில் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. விஸ்வாவசு வருடம் சித்திரை முதல் நாள், இன்று திங்கட்கிழமை (14) அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் பிறந்திருக்கின்றது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் இன்று (14) விசேட வழிபாடுகள் நடைபெற்றுவருவதுடன் பெருமளவான மக்கள் வழிபாடுகளில் கலந்துகொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயம் தமிழ் – சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மர…
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
நோர்வே அனுசரணையாளர்களின் பங்களிப்பின்றி இலங்கை அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லையென தமிழீPழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். நோர்வேயின் முக்கியஸ்தர்களான எரிக் சொல்ஹேய்ம், நோர்வேத் தூதுவர் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதுடன், எதிர்கால சமாதானப் பேச்சுவார்;த்தைகள் தொடர்பாகக் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு அவர்களின் கிளிநொச்சி வருகையை எதிர்பார்த்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத் தலைவர் எஸ்.புலித்தேவன் கூறியுள்ளார். “இலங்கை அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் நோர்வே அனுசரணையாளர்களுடன் பல்வேறு விட…
-
- 0 replies
- 755 views
-
-
[size=4]வடக்கு மக்களுக்கு கருத்துரிமை மறுப்பு அமெரிக்கத் தூதுவர் பற்றீசியாவிடம் யாழ்.ஆயர் முறையீடு[/size] தனியாகவோ, கூட்டாகவோ கருத்துகளை வெளியிட முடியாத ஒரு இக்கட்டு நிலையில் வடக்கு மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கான சுதந்திரமான கருத்துரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இங்கு ஜனநாயக அரசியல் நிலைநிறுத்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இவ்வாறு நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டினிஸிடம் முறையிட்டார் யாழ். ஆயர் மேதகு தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை. இதுவரை காலமும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிய பற்றீசியா புட்டினிஸ் அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்துக்கு மாற்றலாகிச் செல்கிறார். இதற்கு முன்னதாக அவர் நேற்று யா…
-
- 1 reply
- 358 views
-
-
சிங்கள இரத்தம் கலப்படம் கொண்டது ; ரெஜினோல்ட் குரே [ Sunday,21 February 2016, 04:53:02 ] சாதி, சமயம், இனம் என்ற தனித்துவம் பாராமல், கலப்பு வாழ்க்கை மூலமாக நாட்டில் உண்மையான சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த முடியும் என வடமாகாண புதிய ஆளுனராக பொறுப்பேற்றுள்ள ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். கலப்பு வாழ்க்கை முறைமையின் ஊடாக பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வடமாகாண ஆளுனராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு யாழ்ப்பாணத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 'கலவை என்பது சிறந்த பலன்களை அளிக்கவல்லது என்பது எனது கருத்தாகும். சமூகத்தில் உள்ள சாதிகளும், சமூகங்களும் ஒன்றுடன் ஒன்று …
-
- 1 reply
- 534 views
-
-
Published By: DIGITAL DESK 2 25 APR, 2025 | 10:18 AM கொடிகாமம் சந்தைக்கு அருகாமையில் உள்ள மரத்தை வெட்டியதால் வியாபாரிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். புதன்கிழமை (23) இரவு வந்த சாவகச்சேரி பிரதேச சபையினர் இந்த நாசகார வேலையை செய்ததாக வியாபாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். தற்போது வெப்பமானது மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. ஆகையால் மரங்கள் நிற்பதன் மூலம்தான் ஓரளவேனும் வெப்பத்தின் தாக்கம் குறைவாக உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் மக்களின் கருத்தையும் மீறி மரத்தை வெட்டியதாக அவர்கள் குற்றம் சாட்டினர். சந்தையில் உள்ள மலசல கூடங்களும் பயன்படுத்த முடியாமல் மிகவும் அசுத்தமான முறையில் காணப்படுகின்றதாகவும் அவற்றினை சாவகச்சேரி பிரதேச சபையினர் சுத்தம் செய்வதில்லை என்றும் அவர்கள்…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
ராஜிதவை பார்வையிட ஜனாதிபதி சிங்கப்பூருக்கு அவசர பயணம் சுகயீனம் காரணமாக சிங்கப்பூரின் பிரபலமான மலவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று காலை 7.41 மணியளவில் அவசரமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். யுஎல்302 என்ற விமானத்திலேயே ஜனாதிபதி சென்றுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொழும்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை அடுத்து, மேலதிக சிகிச்சைகளுக்காக கடந்த 20 ஆம் திகதி சிங்கப்பூருக்கு சிறப்பு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்…
-
- 1 reply
- 493 views
-
-
ஈரான் – அமெரிக்கா மோதலின் உச்சம் : பயணப்பாதையினை மாற்றியது ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ்! ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையில் அதிகரித்துள்ள போர் பதற்றம் காரணமாக பயணப்பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தினால் இன்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – லண்டன் – கொழும்பு வான்வெளி பயணப்பாதையிலேயே இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் அல் ஆசாத் விமானப்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. அடுத்தடுத்து ஒன்பது தடவைகளுக்கு மேல் இவ்வாறு தாக்குதல…
-
- 1 reply
- 628 views
-
-
புதுக்குடியிருப்பில் வான் குண்டுத்தாக்குதல்: 4 பேர் பலி- 10 பேர் காயம் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூன் 2008, 03:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று நடத்திய மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர். [2 ஆம் இணைப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு] புதுக்குடியிருப்பு நகர மையத்தில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி உள்ளடங்கலான பகுதிகள் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9:50 மணியளவில் குண்டுத்தாக்குதலை நடத்தின…
-
- 0 replies
- 635 views
-
-
[size=4]94-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்; சந்திரிகாவின் உளவாளி ரணில் தான்[/size] [size=4]1994-ம் ஆண்டு இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்த லில் ஐக்கிய தேசியக் கட்சி யின் ஜனாதிபதி வேட்பாளர் காமினி திஸநாயக்கவை தோற்கடிப்பதற்காக பொது ஜன ஐக்கிய முன்னணிக்கு தகவல் வழங்கியவர் குறித்த தகவல்கள் நேற்று வெளியாகின.[/size] [size=4]அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இத் தகவலை வெளியிட்டார்.[/size] [size=4]ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட காமினி திஸநாயக்வை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே இத்தகவல்களை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் உறுப்பினர்களுக்கு அவர் இந்த தக…
-
- 4 replies
- 804 views
-
-
Published By: DIGITAL DESK 3 18 MAY, 2025 | 05:25 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் நாளை திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவு தூபியில் தேசிய போர்வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவீரர் சேவை அதிகாரசபையின் தலைவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் செனரத் கொஹொன தெரிவித்தார். இன்று ஞாயிறுக்கிழமை (18) போர்வீரர் நினைவு நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வை செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதில் தன்னலமின்றி பணியாற்றிய…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
ஈழத் தமிழ் இனம் தன்னுடைய நியாயமான அரசியல் கோரிக்கைகளை பெறுவதில் தடைகள் இருப்பதென் பதற்கப்பால் பாதையற்ற நிலையில் தவிக்கிறது. ஊரைக் காணாதவர்களும் வீடுகளைப் பார்க்காதவர்க ளும் எங்கள் மக்கள். வவுனியாவைத் தெரியாதவர்களும் யாழ்ப்பா ணத்தை தெரியாதவர்களும் வன்னியைத் தெரியாதவர்களும் என்று துண்டிக்கப்பட்ட போர் வலயங்களில் எங்கள் மக்கள் வாழ நிர்பந்தி க்கப்பட்டார்கள். பல்லாண்டுகளாக மூடப்பட்ட பாதைகளும் பல்லாண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்பட்ட வீதிகளும் எங்களுடைவை. அறுந்த வீதிகளும் தடைப்பட்ட வீதிகளும் எங்கடையவை. போராடும் ஈழத் தமிழினம் பாதைகளுக்காகவும் போராடியிருக்கிறது. எங்களுடைய பயணத்தின் பாதைகள் இன்னும் இறுக மூடப்பட்டிருக்கின்றன. அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் போருக்குப் பிந்…
-
- 4 replies
- 877 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவி பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை! [Wednesday 2020-01-22 16:00] யாழ்ப்பாணம்- பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் கற்கும் சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம் 2.30 மணியளவில் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றுள்ளது. கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த …
-
- 6 replies
- 1.7k views
- 1 follower
-
-
[size=4]சென்னை: இலங்கையில் தமிழருக்கு எதிராக போர்க்குற்றத்தில் ஈடுபட்ட போர்க் குற்றவாளிகள் மீது ஐக்கிய நாடுகள் சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐநா. மூலம் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.[/size] [size=4]சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்:[/size] [size=4]- இலங்கை போர்க் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்[/size] [size=4]- தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்ற வேண்டும்[/size] [size=4]- இலங்கையில் நடைபெறும் அநீதிகளை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? ஈழத் தமிழர் தாங்கள் விரும்பும் அரசியல் தீ…
-
- 0 replies
- 490 views
-
-
[size=4][/size] [size=4]நீதவான்களுக்கான பற்றாக்குறையே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் தாமதமடையக் காரணம் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குறிப்பாக உயர் நீதிமன்ற நீதவான்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையே வழக்கு விசாரணைகளை துரித படுத்த முடியாமைக்கான பிரதான ஏதுவெனக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]உயர் நீதிமன்ற நீதவான்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக விரைவில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 75 ஆக இருக்கும் நீதவான்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்த்தப்பட உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]நீதிமன்றங்களின் எண்ணிக்கையையும் நீதவான்களின் எண்ணிக்கையையும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படு…
-
- 0 replies
- 607 views
-
-
கொல்லவே நினைத்தேன் அழகன் கனகராஜ் மாவிலாறு அணையின் வான்கதவுகளை மூடியபோது, பயங்கரவாதிகளுக்கு எதிராக யுத்தம் செய்யவேண்டும் என்ற குரல் ஓங்கியிருந்தது. எனினும், எதில் அடிப்பது என்று மஹிந்த ராஜபக்ஷ கேட்டார்' என்று கூறிய பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, 'எந்தவொரு ஜனாதிபதியும் யுத்தம் செய்யவேண்டாம் என்று கூறவில்லை' என்றார். 'இந்த யுத்தத்தில், இடங்களைப் பிடிப்பது எனது நோக்கமாக இருக்கவில்லை. மாறாக, பயங்கரவாத அமைப்பில் இருந்தவர்களைக் கொல்லவேண்டும். அவ்வாறு செய்தால் யுத்தம் நிறைவடையும் என்ற சிந்தனையிலேயே யுத்தத்தை முன்னெடுத்தேன்' என்றும் அவர் கூறினார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊட…
-
- 1 reply
- 558 views
-
-
.counter{ position: absolute; top: 25px; right: 25px; font-size: 50px; z-index: 200; text-decoration: none; } COPE மற்றும் COPA உறுப்பினர்கள் நியமனம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு மற்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுக்களுக்கான (கோப்) உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 24 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழு, 119 (1) நிலையியற் கட்டளைக்கு அமைய அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு 16 உறுப்பினர்களை நியமித்தது. இவ்வாறு …
-
- 0 replies
- 366 views
-