Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பேரறிவாளன் மடல்... ''மரணத்தை வெல்வேன்!'' 'தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்' என்ற புத்தகம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் என்கிற அறிவு இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார். நீதியரசர்கள் வி.ஆர்.கிருஷ்ணய்யர், எ.சுரேஷ், பத்திரிகையாளர் குல்தீப்நய்யார், அரசியல் தலைவர்கள் வைகோ, ராமதாஸ், நெடுமாறன் ஆகியோர் அணிந்துரை எழுதி இருக்கும் இந்தப் புத்தகம் தமிழக அரசியல் தளத்தில் பலத்த அதிர்வுகளைக் கிளப்பி இருக்கிறது. பேரறிவாளன் எழுதியிருக்கும் திறந்த மடலின் சில பகுதிகள் இங்கே... ''மதிப்பிற்குரிய அம்மா/அய்யா! வணக்கம்! நான், அ.ஞா.பேரறிவாளன். ராஜீவ் கொலை வழ…

    • 0 replies
    • 516 views
  2. ''மாநாயக்கர்களுக்கு தொடர்பில்லை'' (செங்­க­ட­கல நிருபர்) புதிய அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் தொடர் பில் கண்டி அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்த பீடங்­களைச் மேற்கோள் காட்டி வெளி­யி­டப்­பட்­டி­ருந்த அறிக்­கைக்கும் மேற்­படி பீடங்­களின் மாநா­யக்க தேரர்­க­ளுக்கும் எந்­த­வி­த­மான சம்­பந்­தமும் கிடை­யாது என்று மல்­வத்த பௌத்த பீடத்தின் அனு­நா­யக்க திம்­புல்­கும்­புர விம­ல­தர்ம தேரர் அறி­வித்­துள்ளார். சங்க சபை­யினர் கூடி தீர்­மா­னங்­களை மேற்­கொண்­ட­போதும் அந்த சந்­தர்ப்­பத்தில் மாநா­யக்­கர்கள் இரு­வரும் குறித்த கலந்­து­ரை­யா­டலில் பிர­சன்­ன­மா­கி­யி­ருக்­கி­வில்லை என்றும் அவர்கள் நாட்­டி­லேயே இருக்­க­வில்லை என்றும் தெரி­வித்­துள்ள விம­ல­தர்ம தேரர், ஆகவே…

  3. (எம்.ஆர்.எம்.வஸீம்) பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மேற்கொண்டுவரும் மோசடிகள் காரணமாக மக்கள் எங்கள் மீது சாபமிடுகின்றனர்.அந்தளவுக்கு மக்கள் விரக்தியடைந்துருக்கின்றனர். இந்த நிலையை மாற்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்துடன் பாராளுமன்ற மின்னுயர்த்தியினுள் சிக்கிய 12 எம்.பி.க்களையும் ஏன் காப்பாற்றினார்கள். அதற்குள்ளேயே விட்டு சாகடித்திருக்கலாம் என்றே மக்களின் எதிர்பார்ப்பாகும் என நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கோப் குழு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு …

  4. சிலாபம், முன்னேஸ்வரம் காளி கோயிலில் மிருக பலி பூசையைத் தடுத்து நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னேஸ்வரம் ஆலய பிரதமகுருவிற்கும், உதவி குருவிற்கும் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=15065

    • 1 reply
    • 409 views
  5. கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் அசாத் சாலியை விடுதலை செய்யக்கோரி அக்குறணையில் இன்று அமைதியான ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்கள் 'முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் கொடுத்த அசாத் சாலியை விடுதலை செய்" என கோஷம் எழுப்பினர். அசாத் சாலியை பார்வையிட மனைவி, மகள், எம்.பி.க்களுக்கு அனுமதி மறுப்பு குற்றப்புலனாய்வு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை பார்வையிட அவரது மனைவி மகள் உள்ளிட்ட அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. கொழு…

  6. ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும் தமிழினத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை இழிவுபடுத்துவதாகவும் தயாரிக்கப்பட்டுள்ள மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியீடு செய்து தமிழ் மக்களின் மனங்களில் நீங்காத வடுவை ஏற்படுத்த வேண்டாம் என்று யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதி வழங்கி உலகம் பூராகவும் உள்ள தமிழ் மக்களின் எதிர்ப்புக்களை சம்பாதிக்க வேண்டாம் என்றும் அசம்பாவிதங்கள் ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்றும் தமிழக அரசிடம் மிகவும் விநயமாக நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் கபே திரைப்படத்தை இயக்கி ந…

  7. ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும் தமிழினத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை இழிவுபடுத்துவதாகவும் தயாரிக்கப்பட்டுள்ள மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியீடு செய்து தமிழ் மக்களின் மனங்களில் நீங்காத வடுவை ஏற்படுத்த வேண்டாம் என்று யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதி வழங்கி உலகம் பூராகவும் உள்ள தமிழ் மக்களின் எதிர்ப்புக்களை சம்பாதிக்க வேண்டாம் என்றும் அசம்பாவிதங்கள் ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்றும் தமிழக அரசிடம் மிகவும் விநயமாக நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் கபே திரைப்படத்தை இயக்கி ந…

  8. சாட்டை வீசும் நெடுமாறன் ''ராஜபக்ஷேவை விட மோசமானவர் கருணாநிதி!'' அப்பாவி தமிழக மீனவர்களைப் படுகொலை செய்வதைக் கண்டித்து கடந்த 12-ம் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன், வல்லநாடு சாது சிவா சுவாமிகள் உள்ளிட்ட முக்கியஸ் தர்களின் தலைமையில் காலை 11:30 மணிக்கு ஆர்ப் பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. கடைசி நிமிடம்வரை ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி தராததால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தார் நெடுமாறன். ஆர்ப்பாட்டக் களத்தில் வந்து இறங்கிய உடனே கைது செய்யப்படுவோம் என்பதைத் தெரிந்துகொண்…

  9. இலங்கைத்தீவின் நவ பௌத்த காவலரணில் குந்தியுள்ள வகையறா தொகையறாக்களில் ஒன்றான 'ராவண பலய' அல்லது ராவணா சக்தி, தமிழக திரையுலக நட்சத்திரங்களை குறிவைத்தமைக்கான பச்சைக்கொடி ஶ்ரீலங்காவின் திரைப்படக் கூட்டுத்தாபனத்திலிருந்து கிளம்பிவிட்டது. குறிப்பாக, தமிழக நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், சரத்குமார், விஜயகுமார் போன்றோர் நடித்த திரைப்படங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய வேண்டுமாயின் சிறப்பு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென ஶ்ரீலங்கா திரைப்படக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. புதிய நடைமுறையின் அடிப்படையில் மேற்படி நடிகர்கள் நடித்த திரைப்படங்களை இறக்குமதி செய்ய வேண்டுமாயின் மகிந்த & co வின் அமைச்சரவை அனுமதி அவசியம் எனவும் குறிப்பிடப்படுகிறது. அதாவது, இல…

    • 1 reply
    • 1k views
  10. ''ராடர்களும் ஏவுகணைகளும் புலிகளுக்கும் கொள்வனவு'' -ச.சங்கரன்- தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் சிறிலங்காவின் வான் பரப்பிற்குள் சென்று கட்டு நாயக்கா விமான நிலையத்தில் துணிகர அதிரடித் தாக்குதலை நடத்திவிட்டுத் திரும்பியமை குறித்த சலசலப்புகள் இன்னும் ஓயவில்லை. இத்தாக்குதலால் ஏற்பட்ட அவமானத்தை சகித்துக் கொள்ள முடியாத மகிந்த அரசாங்கம் தமிழீழ விடுதலை புலிகளின் வான் படைக்கு எதிரான வான் படை ஏதிர்ப்பு கட்டமைப்பு ஒன்றை உருவாக்க நடவடிக்கைகளை மேற் கொண்டிருக்கிறது. சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் புலிகளின் விமானம் தாக்குதல் நடாத்தி பாதுகப்பாக தளம் திரும்பிய சிறிது நேரத்திலேயே முதலாவது பாதுகப்புச் சபையினை கூட்டி புலிகளின் விமானப் படைக்கு …

    • 1 reply
    • 1.3k views
  11. ''வன்னி மீது ஆக்கிரமிப்புப்போரைத் தொடுக்க ஆயத்தமாகும் அரசபடைகள்'' -வி.வேனில்- வடக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னி நிலப்பரப்பின் சில பகுதிகளைக் கைப்பற்ற சிறிலங்கா அரசு விரும்புவதாகத் தெரிகிறது. இதற்கான தயாரிப்பு நடவடிக்கைகளில் சிறிலங்காப்படையினர் மும்முரமாக ஈடபட்டுக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. கிழக்கில் தனது படைகளைக்கொண்டு சம்பூர், வாகரைப்பகுதிகளை கைப்பற்றிய சிறிலங்கா அரசு சமகாலத்திலேயே வன்னிப்பிரதேசங்கள் மீது வான்படைத்தாககுதல்களை மேற்கொண்டு வந்தது. தற்போது வன்னியின் பல முனைகளில் போரை ஆரம்பித்து சிலபகுதிகளையேனும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அது விரும்புவதாகவே தெரிகிறது. வவுனியா வடக்கில் ஓமந்தையை எல்லைப்பகுதியா…

  12. ''வலை வீசும் அரசியலும் ஜே.வி.பியின் வீழ்ச்சியும்'' நா. யோகேந்திரநாதன்- அண்மையில் கொழும்பு அரசியலில் மிக வேகமாகவும் திடீர் திடீர் எனவும் ஏற்படும் மாற்றங்கள் பலருக்கு வியப்பை ஏற்படுத்தக்கூடும். சில சமயங்களில் இவை ஆரசியல் ராஜதந்திரத்திற்கு அப்பாற்பட்ட செய்கைகளாகவும் தோன்றலாம். ஆனால் சிறீலங்காவின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினால் இது நடைமுறையில் காலம்காலமாக நிலவி வரும் ஒரு மூன்றாம் தர அரசியலின் தொடர்ச்சி என்பதை புரிந்து கொள்ள முடியும். அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் உட்பட பலர் அரசுபக்கம் தாவினர். இவர்களை தம்பக்கம் இழுக்கும் வலையாக திரு. மகிந்த ராஜபக்ஷ மந்திரிப்பதவிகளைப் பயன்படுத்திக் கொண்டார். இதன் பலனாக அரசியலிலே மி…

  13. ''வாள்வெட்டுச் சம்பவங்களுக்காக நேரடியாகத் தலையிட்டேன்'' வடக்கில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாகவும் அதற்காக நேரடியாக தலையிட்டதாகவும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று (27) தெரிவித்துள்ளார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 150 ஆவது வருட நிறைவை முன்னிட்டு பதுளையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பொலிஸ்மா அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, வடக்கில் அண்மைக்காலமாக சில அசம்பாவிதங்கள் இடம்பெற்றன. அடிக்கடி வாள்வெட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றன. இவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நான் நேரடியாக தலைய…

  14. ''விக்கினேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆதரவு ; த.தே.கூ.வின் கொள்கையே தமிழ்த்தேசத்தின் சாபக்கேடு'' தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனி கட்சி ஒன்றை ஆரம்பித்து கொள்கை பற்றுடன் செயற்படுவாராக இருந்தால் தமிழ்தேசிய மக்கள் முன்னணி அதனை வரவேற்கும் எனத் தெரிவித்திருக்கும் அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,தமிழ்தேசிய கூட்டமைப்பின் கொள்கையே இன்றைக்கு தமிழ்தேசத்தின் சாபக்கேடாக மாறியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனிக் கட்சி ஒன்றை உருவாக்க உள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக கேட்டபோதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு …

  15. ''விடுதலைப்புலிகளை இலகுவாக கையாள முடியாமலிப்பதே சிங்கள அரசுகளுக்குள்ள பிரச்சினை'' -மனோகரன்- அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தீர்மானிக்க முடியாத ஒரு இறுக்கமான சூழல் இப்போது சிறிலங்காவின் அரசியலில் ஏற்பட்டுள்ளதாக அரசியல் பத்தி எழுத்தாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது தெரிவித்தார். இன்றைய சூழலில் அவர் சொல்வது ஒருவகையில் சரிதான். சிறிலங்காவில் இப்பொழுது அரசியலும் தேக்கத்துக்கு உள்ளாகித்தானிருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகளும் தேக்கத்துக்கு உள்ளாகித்தானிருக்கிறது. ஏன் இராணுவ நடவடிக்கைகளும் தேக்கத்துக்கு உள்ளாகித்தானிருக்கின்றது. அரசியலைப் பொறுத்து இந்த மாதிரித் தேக்கங்கள் சிலபோது ஏற்படுவது உண்டு. ஆனால், அது நாட்டைப் பாதிக்காத வகையில் ஒரு இடைமா…

    • 0 replies
    • 1k views
  16. ''விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள்'' -சொல்கிறார் ருத்திரகுமார் சட்டத்தரணி வி.ருத்திரகுமார் பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து செயல்படுவது, பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் செயல் என்று தற்போதுள்ள சட்டவிதிகள் ரத்துசெய்யப்படவேண்டும் என்று தொடரப்பட்டிருக்கும் வழக்கின் விசாரணைகள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றன. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நாடுகடந்த தமீழீழ அரசை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் குழுவுக்கு தலைமை தாங்கும் அமெரிக்கச் சட்டத்தரணி விஸ்வநாதன் ருத்ரகுமார் அவர்கள் மனுதாரர்கள் சார்பில் வாதாடினார். இந்த வழக்கின் நோக்கங்கள் க…

  17. பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு அவசர அவசரமாக பல பணிகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்தது. இதன் ஒருகட்டமாகவே கட்டுநாயக்க - கொழும்பு நெடுஞ்சாலையும் அவசரமாக திறந்துவைக்கப்பட்டது. அந்த அவசரத்தில் என்னவோ தெரியவில்லை. அங்கு வைக்கப்பட்டுள்ள ''எச்சரிக்கை'' பலகையும் அவசரமாக எழுத்தப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. குறிப்பாக பாதசாரிகளுக்கான அறிவித்தல் பலகையில், பிரவேசிப்பதற்கு தடை என்பதற்குப் பதிலாகவே ''விரவேசிப்பதற்டு தலட'' என எழுதப்பட்டுள்ளது. அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் கீழ் உள்ள அமைச்சின் மும்மொழிக் கொள்கை விஸ்தரிப்பின் அடையாளமாக இந்த அறிவித்தல் பலகை அமைந்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலை பெயர் பலகையில் தமிழ் இவ்வாறு மெல்ல செத்துக் கொண்ட…

  18. ஈழத்தமிழர்களின் வரலாற்றை சொல்லும் படம் ''வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி'' -ஆவணப்படம் வெளியிடப்பட்டது தமிழர் பாதுகாப்பு காட்சி ஊடகம் (Save Tamils Visual Media) தயாரித்து, சோமீதரன் இயக்கிய “வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” ஆவணப்படம் 20 ஆம் திகதி சென்னையில் வெளியிடப்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் ஓடும் இந்த ஆவணப்படம் ஈழத்தின் , தமிழ் ஈழரின் வரலாற்றைப் பேசுவதில் இருந்து துவங்கி மே மாதம் 2009 ஒரு இனப்படுகொலையின் மூலம் அம்மக்கள் முள்வேலி முகாமுக்குள் அடைக்கபட்டது வரை அரசியல் நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டு இறுதியில் அம்மக்கள் தமக்கான ஒரு நாடு தம் தாய் நிலத்தில் கிடைக்கும் என்ற வேட்கையுடன் நடைபோடுகின்றனர் என்று முடிகிறது. முதன்மையான அரசியல் நிகழ்வுகள், ஒப்பந்தங்கள், பேச்சு…

    • 0 replies
    • 744 views
  19. ''வெற்றி தோல்வி என்பது ஒரு துப்பாக்கி ரவையிலும் தீர்மானிக்கப்படலாம்'' -ச.சங்கரன்- சம்பூர்- வாகரையில் விடுதலைப்புலிகளுடன் போரிட்டு சிறு வெற்றியினைப் பெற்றுக்கொண்டு அதனை இமாலய வெற்றியாகவும்,; மட்டக்களப்பு திருகோணமலையில் விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாகவும் இராணுவ வெற்றியைவிட பலபத்து மடங்கு ஊடாகவெற்றியை மகிந்தர் அரசு பெற்றுக் கொண்டது. அல்லது காட்டிக் கொண்டது. " வெற்றி தோல்வி என்பது ஒரு துப்பாக்கி ரவையிலும் தீர்மானிக்கப்படலாம்" என்கிறார் ஜேர்மனியின் கேணல் அடம்ஸ் மாக்கர் அதே போல் அரசுக்கு கிழக்கில் வாகரையை பிடித்த வெற்றியைவிட உலகின் பிரதான இராஜதந்திரிகள் மத்மியில் வீழ்ந்து வெடித்த புலிகளின் நான்கு எறிகணைகள் புலிகளின் போரியல் ஆற்றலையும், போர் தி…

    • 1 reply
    • 1.7k views
  20. ''வெளியிடங்களில் இருந்து வந்த அரசியல் சதிகாரர்களே தாக்குதல் நடத்தினர் ; சூத்திரதாரிகள் விரைவில் கைது செய்யப்படுவர்" திகன, தெல்தெனிய உள்ளிட்ட கண்டி மாவட்டத்தில் வெளிமாவட்டங்களிலிருந்து வந்த அரசியல் சார்ந்த குழுவினர் திட்டமிட்ட ரீதியில் மேற்கொண்ட சதிநடவடிக்கையினாலேயே அசம்பாவிதங்கள் இடம்பெற்றன. இதுதொடர்பில் பாதுகாப்புத்துறை முழுமையாக விசாரணை நடத்தி ஆதாரங்களைத் திரட்டி வருகின்றது. விரைவில் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்ற அரசியல் சார்ந்த அந்த சூத்திரதாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக சகல பிரஜைகளினதும் உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. அதனை யாரும்…

  21. வடமாகாண கால்நடை அமைச்சின் ‘தகர்’ திட்டத்தின் மூலம் நல்லூரைச் சேர்ந்த 30 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு நல்லின ஆடுகள் நேற்று வியாழக்கிழமை (27.08.2015) வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ‘தகர்’ என்பது ஆடுகளைக் குறிக்கும் பழந்தமிழ்ப் பெயர் ஆகும். இதனைப் பெயராகக் கொண்டு ‘தகர் வளர் துயர் தகர்’ என்ற தொனிப்பொருளில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சு நல்லின ஆடுவளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டமொன்றைக் கடந்த ஆண்டில் இருந்து செயற்படுத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாகவே தற்போது நல்லூர் மூத்தவிநாயகர் பகுதியைச் சேர்ந்த 30 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு யமுனாபாறி ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மூத்தவிநாயகர் சனசமூக நிலைய…

  22. '100 முள்ளிவாய்க்கால்கள்': இலங்கை அமைச்சரின் பேச்சுக்கு கருணாநிதி கண்டனம்-பிரதமருக்கு கடிதம் சென்னை: ஒரு முள்ளிவாய்க்கால் சம்பவமே போதும், நூறு முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவங்கள் நடைபெற யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்திருப்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் துயரத்துக்குப் பிறகு வட இலங்கையில் தமிழர் நிலங்கள் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தங்கள் பூர்வீக வீடுகள், நிலங்களை இழந்த தமிழ் மக்கள், இப்போது அறவழிப் போரில் மீண்டும் குதித்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கடந்த மாதம் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 14வ…

  23. '1200 புலிகள் இன்னும் மறைந்திருக்கின்றனர்' திங்கட்கிழமை, 21 ஜனவரி 2013 01:40 0 COMMENTS பாதுகாப்பு படையினரிடம் சரணடையாத மற்றும் கைதுசெய்யப்படாத நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த இன்னும் 1200 பேர் இருக்கின்றனர். என்று பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். புலி சந்தேகநபர்கள் 400 பேர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் இருப்பதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். வடக்கு பாதுகாப்பு பிரிவினரினால் கடந்தவாரம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளதாக பிபிசியின் சிங்கள சேவையான சந்தேஷிய தெரிவித்துள்ளது. அந்த 1200 பேரிலும் 400 பேர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல மாகாணங்களில் வசிப்பதாகவும் ஏனையோர் வெளிநாடுகளுக…

  24. '12ஆயிரம் புலிகளுக்கு நடந்தது தெரியாது' இறுதி யுத்தத்தில் 12ஆயிரம் புலிகள், பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. இந்நிலையில், வடக்கிலிருந்து பாதுகாப்பு படையினரை குறைக்கமுடியாது என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/187625/-ஆய-ரம-ப-ல-கள-க-க-நடந-தத-த-ர-ய-த-#sthash.bigpLBHr.dpuf

  25. -அழகன் கனகராஜ் நாமிருவரும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ளோமே தவிர அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. அரசாங்கத்திலிருந்து வேண்டிய நேரத்தில் எம்மால் வெளியேறவும் முடியும் என்பதுடன் 13 ஆவது திருத்தத்தை நாமே தடுத்து நிறுத்தினோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரபா கணேசன், வீ.இராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர். மலையக தேசிய முன்னணி கொழும்புஇ நிப்போன் ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட் டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். அங்கு அவர்கள் பதிலளிக்கையில், 13 ஆவது திருத்தத்தில் எவ்விதமான மாற்றங்களையும் செய்யக்கூடாது, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் போது மலைய மக்களின் பிரச்சின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.