ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த சொந்த ஊரில் குடியமர்த்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை பான் கி மூன் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபைதான் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால் ஒட்டுமொத்தமாக பிரகடனப்படுத்தி தமிழ் மக்கள் அனைவரையும் படுகொலை செய்து விடுங்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 267 views
-
-
-சுமித்தி தங்கராசா மத்திய மற்றும் மாகாண அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என ஜரோப்ப நாடாளுமன்ற உறுப்பினர் பில் பென்னியன் யாழ். மாவட்ட மேலதிக செயலாளர் ரூபினி வரதலிங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பில் பென்னியன் யாழ். மாவட்ட மேலதிக செயலாளருடன் இன்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, மத்திய மற்றும் மாகாண அதிகாரங்களின் ஊடாக தமிழ் மக்களுக்கான அனைத்து வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக பில் பென்னியன் மாவட்ட செயலாளரிடம் வினவியுள்ளார். அதன்போது, தற்போதை…
-
- 0 replies
- 456 views
-
-
பிரயோசனமற்ற எண்ணெய் குதங்களை வைத்துக்கும்பிட முடியுமா? குதத்தைக்கு கொடுப்பதில் என்ன தவறு? அரசாங்கம் கேள்வி (ரொபட் அன்டனி) திருமலை துறைமுகத்தில் காணப்படும் எண்ணெய் குதங்களை கொண்டு வருமானம் பெறாமல் சாமி கும்பிட முடியுமா? அவற்றைக் கொண்டு இலாபம் அடைவதில் என்ன தவறு என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜிதசேனராட்ன கேள்வி எழுப்பினார். என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் ராஜித சேனாரட்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப…
-
- 1 reply
- 299 views
-
-
ஏதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் யாழ். மாநகர சபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பது குறித்து சுமார் 44.7 வீதமான வாக்காளர்கள் இன்னமும் தீர்மானிக்கவில்லை என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பாக கடந்த 22, 23, 24 ஆம் திகதிகளில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினாலும், மனித உரிமைகளுக்கான இல்லத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட மாதிரி தேர்தல் கணிப்பீட்டிலேயே இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக அது தெரிவித்துள்ளது. அத்துடன் பொதுவாக யாழ். மாநகர சபை வாக்காளர்களில் 42.9 சதவீதமானோருக்கு இலங்கை அரசியலில் ஈடுபாடு இல்லையெனவும், 13.4 சதவீதமானோருக்கு இலங்கை அரசியலில் தீவிர ஈடுபாடு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகரசபை தேர்தல்…
-
- 0 replies
- 536 views
-
-
நாட்டை ஏலம் கோரி விற்கும் நிலைக்கு சென்றுவிட்ட அரசு: சுரேஷ் தமிழ் மக்களையே அழித்த சிங்கள, பெளத்த மேலாதிக்க சக்திகள் இலங்கையின் இறையாண்மையைக் காப்பதற்காக தமிழ், முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை விடுகின்ற நிலையை நாங்கள் பார்க்கின்றோம். இலங்கையை ஆட்சி செய்த அரசுகள் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்த்திருப்பார் களாயின் இவ்வாறு மண்டியிட வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏற்பட்டிருக்காது. இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார். நேற்று மதியம் யாழ்.ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்…
-
- 0 replies
- 229 views
-
-
வடக்கு உற்பத்திகளுக்கு சிறப்பு ஏற்றுமதித் திட்டம் 1,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு வடக்கு உற்பத்திகளைத் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் கொள்வனவு செய்வதை ஊக்குவிக்கும் வகையிலும், வடக்கு உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி செய்யும் வகையிலான சிறப்புச் செயற்திட்டத்துக்கு ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள் ளது. ‘நல்லிணக்கத்தை மையப்படுத்திய பொருளாதார வலுவூட்டல் கருத்திட்டம்’ அரச தலைவரின் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குச் சிறப்பு நிதியாக ஆயிரத்து 500 மில்லியன் ரூபா வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று, தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சின் செயலர் …
-
- 0 replies
- 256 views
-
-
வல்வை நகரசபைத் தலைவர் பதவி துறக்கிறார் July 18, 2021 வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கோணலிங்கம் கருணானந்தராசா, தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார். வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து வரும் ஜூலை 31ஆம் திகதியுடன் விலகுவதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் அந்தக் கட்சியின் நகர சபைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இந்த நிலையில் தமிழ் தேசியக் கட்சியை எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் ஆரம்பித்த நிலையில் அவர்களுடன் இணைந்து செ…
-
- 0 replies
- 317 views
-
-
குழப்பங்களை ஏற்படுத்துவதே புலம்பெயர் அமைப்புக்களின் எதிர்பார்ப்பு (ஆர்.யசி) இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட தரப்பினர் முன்வைக்கும் காரணிகள் நியாயமானவையே. எனினும் ஒரு தரப்பினர் சர்வதேச விசாரணை பொறிமுறை அவசியமென கருத்துக்களை முன்வைத்த போதிலும் இவர்களின் கோரிக்கையை சாதகமாக பயன்படுத்தி நாட்டில் மீண்டும் குழப்பங்களை புலம்பெயர் அமைப்புகள் எதிர்பார்த்து உள்ளன எவரையும் தனிப்பட்ட முறையில் திருப்திப்படுத்த சர்வதேச விசாரணைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை கருத்தில் கொண்டு சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கருத்து…
-
- 0 replies
- 682 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் இரு கிராமங்கள் முழுமையாக உவரடையும் ஆபத்தினைத் தடுப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான்குளம் கிராமங்கள் உவர் ஆபத்தினால் முழுமையாக அழிவுகளை எதிர்கொள்கின்ற ஆபத்தில் உள்ளன. மண்டைக்கல்லாறு வழியாக உவர் நீர் உட்புகுந்ததன் காரணமாக வன்னேரிக்குளம் கிராமத்தின் குஞ்சுக்குளம் கிராமம் முழுமையாக உவரடைந்து 1,000 ஏக்கருக்கு மேலான வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறி உள்ளன. குஞ்சுக்குளத்தின் அணைக்கட்டு காரணமாக வன்னேரிக்குளம் மகா வித்தியாலய சூழலுக்கு உவர்ப் பரம்பல் ஏற்படவில்லை. ஆனாலும் மண்டைக்கல்லாறு வழ…
-
- 1 reply
- 415 views
-
-
'இலங்கையிடம் 1974ஆம் ஆண்டு கச்சத்தீவை இந்தியா ஒப்படைத்தது. 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த சூழ்நிலை வேறு. தற்போது இருக்கும் சூழ்நிலை வேறு. அப்போது இலங்கை நம்மிடம் நட்புறவுடன் இருந்தது. தற்போது இலங்கை நம்மிடம் முன்பு போல் இல்லை. இந்த நிலையில் கச்சத்தீவை திரும்ப பெறுவது அவசியம்' என்று இந்திய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு விரோதமான செயல்களில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்திய மீனவர்கள் கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்கச் சென்றால் அவர்களைக் கைது செய்வது போன்ற செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபடுகிறது. இந்த நிலையில் கச்சத்தீவை திரும்ப பெறுவது அவசியம். இது பற்றி இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்…
-
- 2 replies
- 708 views
-
-
ஊடகவியலாளரின் நெஞ்சை பிடித்து தள்ளி மிரட்டிய அரச அதிகாரி : சி.வி., றிசாத், அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் சம்பவம் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பித்த நிலையில் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரை அக் கூட்டத்தில் இருந்த மாவட்ட செயலக அரச அதிகாரி ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டமானது வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதன்போது அங்கு செய்தி சேகரிப்பு பணிய…
-
- 1 reply
- 251 views
-
-
அமெரிக்க தூதுவர் தவறாக வழிநடத்தும் அறிக்கைகளை வெளியிடுகின்றார் – கொழும்பு போர்ட் சிட்டி நிறுவனம் August 5, 2021 இலங்கையின் கொழும்பு துறைமுக நகர செயற்திட்டங்கள் குறித்து தவறாக வழிநடத்தும் அறிக்கையை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வெளியிட்டுள்ளார் என கொழும்பு துறைமுக நகர நிறுவனம் China Harbour Engineering Company (CHEC) குற்றம்சாட்டியுள்ளது. சமீபத்தில் ஊடகவியலாளர்களுடனான கருத்துப்பரிமாற்றத்தின் போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ், கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமொன்று அமெரிக்காவின் தடைப்பட்டியலில் உள்ளது. இதன் காரணமாக அந்த நிறுவனத்துடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து எச்…
-
- 2 replies
- 374 views
-
-
வணங்கா மண் நிவாரணப் பொருட்கள் அனைத்தும் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் தந்த தகவலின் அடிப்படையில் அவை அடுத்த வாரம் வன்னி மக்களுக்கு விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கை அரசின் வரி மற்றும் கட்டணங்கள் என பெருந்தொகையான பணம் செலுத்தப்பட்ட பின்னரே அவை விடுவிக்கப்பட்டதாகவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் தெரிவித்தனர். எப்படியாயினும் இப்பொருட்கள் மிகவிரைவில் வன்னி சென்று சேரும் என தற்போது நம்பிக்கை வந்துள்ளது. http://appaa.com/index.php?option=com_cont...4&Itemid=61
-
- 1 reply
- 655 views
-
-
கிளிநொச்சியில் கீதாஞ்சலியின் ஆதரவாளர்கள் அட்டகாசமாம்! 08 செப்டம்பர் 2013 கடந்த 6ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு கிளி நொச்சி இரத்தினபுரத்தில் கடை நடாத்திவரும் வர்த்தகரான மகேந்திரன் விஜயேந்திரன் என்பவர் தாக்கப்பட்டுள்ளார். சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரான கீதாஞ்சலியின் குண்டர்களாலேயே இவர் கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவதினத்தன்று அப்பகுதியிலிள்ள வீட்டு மதில்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரான கீதாஞ்சலியின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படும் ஆதரவாளர்கள் கூட்டம் கீதாஞ்சலியின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்துள்ளது. தேர்தல் விதிமுறை மீறல்களில் ஒன்றான சுவரொட்டி ஒட்டும் செ…
-
- 0 replies
- 363 views
-
-
-
- 38 replies
- 9.7k views
-
-
விக்னேஸ்வரன் கொழும்புக்குத் திரும்ப முடியாது - ராவண பலய எச்சரிக்கை [ வியாழக்கிழமை, 12 செப்ரெம்பர் 2013, 00:55 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என்று, சிறிலங்கா தேர்தல் ஆணையாளரிடம் சிங்கள அடிப்படைவாத அமைப்பான ராவண பலய கோரிக்கை விடுத்துள்ளது. ராவண பலயவின் பொதுச்செயலர் வண.இத்தேகண்டே, சத்ததிஸ்ஸ தேரர் கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, “எனது தலைமையிலான ராவண பலய அமைப்பினர் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்து, வடக்கு மாகாணசபைத் தேர்தலை சட்டபீர்வமாக நடத்தும்படி கேட்டுள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை, சிறிலங்காவின் அரசியலமைப்பை மீறும் வகை…
-
- 1 reply
- 474 views
-
-
சிறிலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கிளைகள் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் அடுத்த வருட தொடக்கத்தில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 348 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் 2000 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பின்னர் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சின் செயலாளரினால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐரோப்பிய வலய நாடுகள் உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் 30 நாடுகளுக்கும் மேல் தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீடிக்க பிரித்தானியா தீர்மானம் | Virakesari.lk
-
- 13 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா அரசுக்கும் நாட்டுக்கும் எதிராக அனைத்துலக சதி வேலைகள் பல்வேறு வழிவகைகளில் இடம்பெற்று வருவதாக அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 314 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் சில மூத்த அதிகாரிகள் தன் மீதும், தனது பணியகத்தின் மீதும் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை குற்றம்சாட்டியுள்ளார். கடந்தமாதம் சிறிலங்காவுக்குத் தாம் மேற்கொண்ட பயணம் தொடர்பாக கருத்துகளை வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மற்றும் அதிகாரிகளை இலக்கு வைத்தே நவநீதம்பிள்ளை இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஐ.நா உறுப்பு நாடு ஒன்றின் மீது, ஐ.நா உயர்அதிகாரி ஒருவர் இவ்வாறு குற்றச்சாட்டை சுமத்துவது வழக்கத்துக்கு மாறானது. நவநீதம்பிள்ளையின் பயணத்தின் போது, மூன்று சிறிலங்கா அமைச்சர்கள் இணைந்து அவருக்கு எதிரான வியூகம் அமைத்து அவதூறுகளை மேற்கொண்டதாகவும் அது இன்னமும் தொடர்வதாகவும், நவநீதம்பிள்ளையின் ப…
-
- 1 reply
- 311 views
-
-
அயர்லாந்தில் நடைபெறவுள்ள உலக படைத்துறையினரின் விளையாட்டு விழாவில் கலந்துகொள்வதற்கான விசாவிற்கு விண்ணப்பித்திருந்த சிறிலங்கா அணிக்கு இந்தியாவில் உள்ள அயர்லாந்து தூதரகம் விசா வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விசா மறுப்புக்கு அயர்லாந்து தூதரகம் பல காரணங்களை தெரிவித்துள்ளது. ஐந்து ஈருருளி அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் ஜந்து பேர் அடங்கிய 13 குழுவிற்கு இந்தியாவில் உள்ள அயர்லாந்து தூதரகத்தின் ஊடாக விசாவிற்கு விண்ணப்பித்தபோதும் அவர்கள் விசா வழங்க மறுத்துள்ளதுடன் கடந்த காலங்களில் சிறிலங்காவின் படை அணி வெளிநாடுகளில் போட்டிகளில் கலந்துகொள்ளாத அணி என்றும் விசா வழங்குவதற்கான விண்ணப்பங்கள் காலம் தாழ்த்தியே கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து விசா வழங்…
-
- 0 replies
- 705 views
-
-
(ஆர்.யசி) பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சகலரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதையும், அண்மைக் காலங்களில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பல கைதுகள் இடம்பெற்றுள்ளமை, பொது மக்களின் காணி அபகரிப்பு, ஜனநாயக செயற்பாடுகள் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளமை போன்ற பல்வேறு விடயங்களை இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எடுத்துக்கூறியுள்ளதுடன் சிறுபான்மை மக்களின் நீண்டகால உரிமைகளை பெற்றுக்கொள்ளும் ரீதியில் அரசாங்கத்திற்கு அழுத்தங்கொடுக்க ஜி.ஸ்.பி பிளஸ் சலுகையை நீக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். இலங்கையின் நிலைமைகளை ந…
-
- 3 replies
- 412 views
-
-
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப்பெறுவதற்கு நடவடிக்கையெடுப்போம் -நீதிக்கான வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப்பெறுவதற்கு நடவடிக்கையெடுப்போம். இருந்தாலும் முதலமைச்சரின் அமைச்சு உட்பட ஐந்து அமைச்ச்சுக்கள் மீதும், அதன் கீழான திணைக்களங்களிலும் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் அனைத்து ஊழல் மோசடிகள் மற்றும் அதிகார முறைகேடுகள் குறித்தும் முறையானதும், சட்டரீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நீதிக்கான வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் ஊடக பேச்சாளர் கே. சயந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்ப…
-
- 1 reply
- 290 views
-
-
2021 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டில் வட மாகாணத்திற்கு 20 வீதம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது - சார்ள்ஸ் நிர்மலநாதன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரையில் 20 வீத நிதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பெறுமதிசேர் வரி திருத்த சட்ட மூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனா வைரஸ் காரணமல்ல. நிதி அமைச்சின் தவறான கொள்கையும் வழிகாட்டலுமே பொருளாதாரம் வீழ்ச…
-
- 3 replies
- 395 views
-
-
வன்னியில் உள்ள வதை முகாம்கள் தொடர்பான நெருக்கடி நாளுக்கு நாள் இலங்கை அரசிற்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. மேற்கு நாடுகளிலிருந்தும் மனித நேய அமைப்புக்களிடம் இருந்தும் பல அழுத்தங்கள் இலங்கைமீது அதிகரித்தே வருகின்றது. இதிலிருந்து ஒரு தற்க்காலிக நிவாரணமாவது இலங்கை அரசிற்குத் தேவைப் படுகிறது. இலங்கை அரசைப் பொறுத்தவரை தமிழர் பிரதேசங்களை சிங்களவர்களைக் குடியேற்றிய பின்னரே அங்கு முகாம்களில் இருக்கும் மக்களை சிங்களவர்களின் கொத்தடிமைகளாக குடியேற்ற வேண்டும். இந்தியவைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளை இனி தலையெடுக்க முடியாதவாறு அழிக்கவேண்டும். எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும் அழித்தொழிக்க வேண்டும். இதற்கு இன்னும் சிலமாதங்கள் வன்னி முகாம்கள் நீடிக்க வேண்டும். இதற்…
-
- 0 replies
- 2.2k views
-