ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
ஏமாற்றப் பட்டனர் பொதுமக்கள் டாண் ரீவி குழுமத்தினால் நடத்தப்பட்டு வந்த டொல்பின் தொலைக்காட்சி சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இத்தொலைகாட்சி சேவைக்கென பணத்தைச் செலுத்தி வாங்கிய பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் சிலமாதங்களுக்கு முன்னர் டாண் ரீவி குழுமத்தினால் ஆரம்பிக்கப்பட்ட டொல்பின் என்ற தொலைக்காட்சிச் சேவை திடீரென்று நித்தப்பட்டுவிட்டததால் அதனை பார்வையிடவென பல ஆயிரம் ரூபாக்களைச் செலுத்தி இணைப்புக்களை பெற்ற பொதுமக்கள் நட்டாற்றில் கைவிடப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் கொக்குவில் பகுதியிலிருந்து டாண் ரீவி குழுமத்தினால் டொல்பின் என்ற பெயரில் டிஜிட்டல் தொலைக்காட்சி சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அதற்கென அவர்கள் தனியான டிஜ…
-
- 0 replies
- 971 views
-
-
புலிகள் இயக்கம் தடைசெய்யப்படுமானால் பேச்சுக்கான கதவை அரசே மூடுவதாக அமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு [sunday December 30 2007 10:23:49 PM GMT] [யாழ் வாணன்] தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்படுமானால், பேச்சுவார்த்தைக்கான கதவை அரசாங்கமே இழுத்து மூடுவதாக அமையும். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல், யுத்தத்தை நிரந்தரமாக நிறுத்த முடியாது. தொடரும் யுத்தத்தின் மறுதரப்பாக புலிகள் இயக்கமே இருப்பதால், அவர்களை தடைசெய்துவிட்டு அரசாங்கம் யாருடன் பேச்சு நடத்தப்போகிறது? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான என். ஸ்ரீகாந்தா கேள்வியெழுப்பினார். போர் நிறுத்த உடன்படிக்கை ரத்துச்செய்யப்படுமானால…
-
- 0 replies
- 634 views
-
-
ஐ.நாவுக்கான இலங்கைத் தூதரகம் மேலதிக பாதுகாப்பு கோருகிறது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், தமக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு சுவிட்ஸர்லாந்து அதிகாரிகளிடம் ஜெனீவாவிலுள்ள, ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம் கோரியுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவரான விஸ்வநாதன் ருத்ரகுமார் தலைமையிலான எல்.ரி.ரி.ஈ. செயற்பாட்டாளர்கள் குழுவொன்று பெப்ரவரி 27 ஆம் திகதி லண்டனிலிருந்து ஜெனீவாவுக்கு வரவுள்ளதாக இலங்கைத் தூதரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் நெடியவன் தலைமையிலான மற்…
-
- 4 replies
- 672 views
-
-
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தனது பதவிக்காலம் ஆரம்பித்து முடிவடையும் தினம் தொடர்பில் உச்சநீதிமன்றத்திடம் வியாக்கியானத்தைக் கோருவது பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆராய்ந்து வருவதாகத் தெரியவருகிறது. இதன் ஊடாக தனது பதவிக்காலம் முடிவடையும் சரியான தினத்தை, அவர் அறிந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 19ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் 2015 மே 15ஆம் திகதியே சபாநாயகர் கரு ஜயசூரிய தனது கையொப்பத்தையிட்டு அதனை உறுதிப்படுத்தியிருப்பதாக ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியிருப்பதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, மைத்திரிபால ச…
-
- 0 replies
- 552 views
-
-
எம்.எல்.எம்.மன்சூர் சிங்கள பெரும்போக்கு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கருத்துக்களை பதிவு செய்யும் அரசியல் விமர்சகர்கள் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு சொல் ‘தீரணாத்மக’ என்பது (தமிழில் அதனை ‘இரண்டில் ஒன்று முடிவாகப் போகும் தருணம்’ என்று சொல்லலாம்). இன்று இலங்கை அதன் சுதந்திரத்திற்கு பிற்பட்ட 76 வருட கால வரலாற்றில் மிக மிக நிர்ணயமான ஒரு கட்டத்தில் வந்து நின்றிருக்கிறது என்ற அபிப்பிராயம் பொதுவாக அனைத்துத் தரப்புக்கள் மத்தியிலும் நிலவி வருகிறது. முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிட்டு நோக்கும் பொழுது இந்தத் தேர்தல் முற்றிலும் வேறுபட்ட ஓர் இயல்பை கொண்டிருப்பதனை அவதா…
-
-
- 17 replies
- 1.3k views
- 1 follower
-
-
ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடர் சற்று நேரத்திற்கு முன் ஆரம்பித்து நடைபெற்று வரும் நிலையில், ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை ஆரம்ப உரை நிகழ்த்தியுள்ளார். நவநீதம்பிள்ளை தனது ஆரம்ப உரையில் சிரியாவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து கருத்து வெளியிட்டார். இலங்கை குறித்து ஒரு வார்த்தைகூட உரையாற்றவில்லை. எனினும் உலகில் மனித உரிமையை பாதுகாக்க தொடர்ந்தும் செயற்படத் தயார் என நவநீதம்பிள்ளை குறிப்பிட்டார். http://www.eeladhesa...lle-nachrichten
-
- 20 replies
- 2.3k views
-
-
ரணில் விக்கிரமசிங்க வடக்கு நோக்கிய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலுக்கு முன்பாக இன்று மாலை 4.30 மணியளவில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இந்த எதிர்ப்பு போராட்டமானது பிரதமர் யாழ் நோக்கிய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடிகளை ஏந்தி எதிர்ப்பு பதாதைகளுடன் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட உறவுகள் இதில் கலந்து கொண்டனர். இதன்போது எங்களுக்கு வடகிழக்கு இணைக்கப்பட்ட முழுமையான கூட்டாட்சியே தேவை, உங்கள் ஏக்கிய ராஜ்யாவை குப்பையில் போடுங்கள், ரணிலே எங்கள் தமிழர் இராஜ்ஜியத்தை…
-
- 1 reply
- 606 views
-
-
தேர்தல் முடிவுகள் வௌியாகும் நேரம் அறிவிப்பு! தற்போது இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் தொகுதி வாரியான முடிவுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் நிலையங்களிலும் இரவு 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் உள்ள வாக்குப்பெட்டிகள் கிடைக்கப் பெற்றதன் பின்னர், வாக்குகளை எண்ணும் பணிக…
-
-
- 5 replies
- 536 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை இலங்கை ராணுவம் பிடிக்கும் பட்சத்தில், அவரை விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைப்போம் என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே உறுதிபட கூறியுள்ளார். கடந்த ஜனவரி 15ம் தேதி இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ராஜபக்சஷ அறிவித்திருந்தார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: விடுதலைப் புலிகளுடன் இனி அமைதிப்பேச்சு வார்த்தைக்கு இடமில்லை, பிரபாகரன் எந்தவிதமான ஒரு உடன்படிக்கைக்கும் வரமாட்டார். அப்படி அவர் ச…
-
- 10 replies
- 2.9k views
-
-
இலங்கை அரச அதிகாரிகள் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஜெனீவா அமர்வில் காரசாரமாக வாய்த்தர்க்கம் ஜெனீவாவில் வியாழக்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது இடம்பெற்ற பகிரங்க உரையாடலின் போது இலங்கை அரச அதிகாரிகளும் புலம்பெயர்ந்த தமிழர்களும் உரிமைகளுக்கான குழுக்களும் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 30 வருடங்களுக்குப் பின்னர் யுத்த நிலைமையில் இருந்தும் மீட்சி பெற்று நாங்கள் வெளிவந்திருக்கிறோம். நாங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களுடன் நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புகிறோம் என்று மனித உரிமைகளுக்கான இலங்கையின் விசேட தூதுவரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்திருக்கிறார். அதேவேளை, அவரும் ஏனைய இலங்கை அதிகாரிகளும் அமெரிக்காவின் அனுசரணையு…
-
- 1 reply
- 777 views
-
-
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் மூன்று இராணுவப் படைவீரர்கள் நேற்றிரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீ முருகன் கோயில் ஒன்றில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த படைவீரர்களே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த படைவீரர்களின் பெயர் விபரங்கள் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் இவர்கள் தனிப்பட்ட பிரச்சிரனை காரணமாக தம்மை தானே சுட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது http://www.virakesaridaily.lk/2012/03/
-
- 6 replies
- 1.1k views
-
-
யாழ். பருத்தித்துறை, தம்பசிட்டிப் பகுதியிலுள்ள தோட்டமொன்றின் கிணறிலிருந்து இன்று (27) முற்பகல் கைகள் பின் பக்கமாக கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பதில் நீதிவான் மற்றும் சட்ட மருத்துவ நிபுணரின் முன்னிலையில் சடலம் இன்று மீட்கப்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த சட்ட மருத்துவ நிபுணர் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு பின்னரே இது கொலையா? தற்கொலையா? எனத் தெரிவிக்க முடியும் என தெரிவித்தார். உயிரிழந்த பெண் தம்பசிட்டி, கதிவேற்பிள்ளை வாசிகசாலை வீதி, ஜெகநாத குருக்கள் கிருபாலினி (வயது -35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்போது ´´கைகள் பின் பக்கமாக கயிற்றால் கட்டப்பட்டிருந்ததோடு கால்களும் கட்டப…
-
- 1 reply
- 718 views
-
-
06 OCT, 2024 | 01:17 PM (ஆர்.ராம்) பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் இணைந்து போட்டியிடுவதற்கு சாதகமான சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா, பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம், சுமந்திரன், சிறிதரன், குகதாசன் ஆகியோர் நேற்று மாலை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் ஆண்டகையை நேரில் சந்தித்து உரையாடி இருந்தார்கள். திருகோணமலை மாவட்டத்தில் ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தினையே தக்க வைத்துக்கொள்ளும் நிலைமைகள் காணப்படுகின்ற நிலையில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்ற …
-
- 4 replies
- 327 views
- 1 follower
-
-
இடைக்கால அறிக்கை கையளிப்பு நிகழ்வில் - வீ. ஆனந்தசங்கரி மேதகு ஜனாதிபதி, கௌரவ அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அனைவருக்கும் வணக்கம். சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரண அவர்கள் குழுவின் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கும் வைபவத்தில் நான் கலந்து கொள்வது உங்கள் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். இந்த நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்தினருக்கும், பிறநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் நான் ஏன் 13வது திருத்தச் சட்டத்தை, இறுதி தீர்வுக்கு முன்பு, முன்னோடியாக இருந்து முற்றாக அமுல்படுத்துவதற்கு ஆதரவு வழங்குகிறேன் என்பதை விளக்க கடமைபட்டுள்ளேன். நாம் தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களுக்காக ஒன்றிணைந்து செயல்படும் கட்சி…
-
- 3 replies
- 2k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு நோர்வே ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது. சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் சகல குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் இலங்கை பதிலளிக்க வேண்டுமென நோர்வே தெரிவித்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது. எகிப்து, சவூதி அரேபியா மற்றும் பஹ்ரெய்ன் போன்ற நாடுகளின் மனித உரிமை நிலைமை குறித்தும் நோர்வே அதிருப்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை, இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக நோர்வே அறிவித்துள்ளமை துரதிஸ்டவசமானது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ள…
-
- 2 replies
- 816 views
-
-
வங்காள விரிகுடாவில் தாழமுக்க நிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! In இலங்கை August 2, 2019 9:34 am GMT 0 Comments 1044 by : Litharsan வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் தாழமுக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் எதிர்வரும் சில தினங்களில் காற்றின் வேகம் அடிக்கடி 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் கடல் பிரதேசம் அடிக்கடி கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், புத்தளத்தில் இருந்து மன்னார் மற்…
-
- 0 replies
- 478 views
-
-
தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு kugenOctober 12, 2024 தமிழ் தேசிய பரப்பில் கொலை செய்யாதவர்கள், கடத்தல் செய்யாதவர்கள், காட்டிக்கொடுக்காதவர்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சின்னத்தில் மட்டுமே போட்டியிடுகின்றனர். ஏனைய கட்சிகளில் இவ்வாறான தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் ஊடக சந்…
-
- 0 replies
- 403 views
-
-
அநுராதப்புரத்தில் கைவிடப்பட்ட வீடொன்றிலிருந்து 280 குண்டு துளைக்காத கவசங்கள் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். நேற்றைய தினம் மதவாச்சியில் வைத்து லொறியொன்றை சோதனையிட்ட் பொலிஸார் அதிலிருந்து 68 குண்டு துளைக்காத கவசங்களை கைப்பற்றினர். அத்துடன் இது தொடர்பில் இருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கலிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இன்று அநுராதபுரத்தில் கைவிட்ட வீடொன்றிலிருந்து மேலும் 280 குண்டு துளைக்காத கவசங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். செய்தி அவையடங்கி http://www.kalakam.com/forum/viewtopic.php?t=177
-
- 2 replies
- 2.3k views
-
-
ரஜமஹா விகாரையில் ரூ.860,000 பணம் கொள்ளை மஹியங்கனை, ரஜமஹா விகாரையின் விஹாராதிபதியின் அறையிலிருந்து சுமார் 860,000 ரூபாய் பணம், வீடியோ கமரா மற்றும் பெறுமதிமிக்க கடிகாரம் என்பன நேற்று பகல் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விஹாராதிபதியின் அறைக்கு ஜன்னல் வழியாக நுழைந்தவர்கள் இப்பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/158101/ரஜமஹ-வ-க-ர-ய-ல-ர-பணம-க-ள-ள-#sthash.Sj27hQcl.dpuf
-
- 0 replies
- 424 views
-
-
சஹ்ரானின் முடக்கப்பட்ட சொத்து விவரம் நீதிமன்றில் அறிவிப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுக்கு சொந்தமான முடக்கப்பட்டுள்ள சொத்துகளின் விவரத்தை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர். அதன்படி, இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் அதன் தலைவர் சஹ்ரான் ஆகியோருக்கு சொந்தமான 1 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துகள் மற்றும் 130 மில்லியன் ரூபாய் பெறுமதியான வங்கிக் கணக்குள் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/சஹ்ரானின்-முடக்கப்பட்ட-சொத்து-விவரம்-நீதிமன்றில்-அறிவிப்பு/175-236484 தாக்குதல் நடத்த தயாராகவிருந்த 15 பேர் தடுப்புக் காவலில் ; 13.4…
-
- 2 replies
- 597 views
-
-
விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிவரும் திருமாவளவனை உடனே கைது செய்ய வேண்டும் என்று இளைஞர் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. திருமாவளவனை கைது செய்க தென்சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சத்தியமூர்த்திபவனில் நேற்று நடந்தது. மாநில தலைவர் மïரா ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ராஜமாணிக்கம், மாநில பொதுச் செயலாளர் பிஜுசாக்கோ, சைதை நாகராஜ், எபினேசர், முருகன், வில்லிவாக்கம் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தமிழ் மண்ணில் கொடூரமாக கொலை செய்த விடுதலை புலிகளை ஆதரித்து தொடர்ந்து பேசியும், செயல்பட்டும் வருவதுடன் விடுதலைப் புலிகளை கண்டித்து பேசும் தமிழக…
-
- 1 reply
- 1.6k views
-
-
பதிலடி கொடுக்கிறது இலங்கை அரசு – அமெரிக்க உயர்மட்ட அதிகாரி கொழும்பில் ஆற்றவிருந்த உரை நிறுத்தம்! [ ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012, 03:38.04 AM GMT ] [ புதினப்பலகை ] ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிய அமெரிக்காவுக்கு இலங்கை அரசாங்கம் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக, கொழும்பில் உள்ள லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் அமெரிக்க அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் நிகழ்த்தவிருந்த உரையை எந்தக்காரணமும் கூறாமல் இலங்கை அரசாங்கம் திடீரென கடைசிநேரத்தில் நிறுத்தியுள்ளது. தெற்காசியாவுக்கான அமெரிக்காவின உதவி வர்த்தகப் பிரதிநிதி மைக்கல் ஜே டிலானி வரும் 27ம் நாள் லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில், “தேசி…
-
- 2 replies
- 743 views
-
-
கண்டி தலதா மாளிகையின் விஸ்ணு ஆலயத்தின் ஊர்வலத்தில் டிகிரி எனப்படும் வயோதிப யானையை ஈடுபடுத்தியமை தொடர்பில் பலரதும் அவதானம் விழுந்துள்ளது. இதனை விலங்கு ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் யானை கொடுமைப்படுத்தபடுவாதாக குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பான தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்நிலையில் டிகிரி தொடர்பில் வெளிவரும் தகவல்கள் பொய்யானவை என்றும், தவறான சித்தரிப்புகளை மேற்கொள்ளவதாகவும் குறிப்பிட்டு வளர்ப்பு யானைகள் சங்கத்தின் செயலாளர் தர்மசிறி பண்டார கருணாரத்னவும் , டிகிரி யானையின் உரிமையாளர் எல்.எல்.திலகரத்னவும் ஒருமித்து கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டிகிரி யானை குறித்து மேலும் தெரியவருவதாவது, டிகிரி யானைக்கு …
-
- 1 reply
- 535 views
-
-
சர்வதேச சமூகத்துடன் மோதும் கொள்கையை இலங்கை வெளிவிவகார அமைச்சு பின்பற்றக்கூடாது என நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். இலங்கை தனது கடந்த காலத்தின் தனிமைப்பட்ட, மோதல்போக்கை பின்பற்றுகின்ற வெளிவிவகார கொள்கைக்கு திரும்பக்கூடாது என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த காலத்தின் வெளிவிவகார கொள்கைகளை மீண்டும் பின்பற்றினால் கடந்த நான்குவருடங்களில் கிடைத்த பல நன்மைகளை இழக்கவேண்டிவரும் என மங்களசமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய இராணுவதளபதி தொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவில் வெளிநாட்டு தூதுவர்களை தலையிடவேண்டாம் என வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே முன்னாள் வெளிவிவகார அமைச்சரான மங்களசமரவீர இந்த வேண…
-
- 0 replies
- 700 views
-
-
கூகுளின் போக்குவரத்து விபரத் தகவல் இலங்கையிலும் கூகுள், போக்குவரத்து விபரங்கள் தொடர்பான தகவல் வழங்கும் சேவையைத் தற்பொழுது இலங்கையிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் போக்குவரத்து நெரிசல் குறைந்த வீதிகளை இலகுவாக அறிந்து கொள்ள முடியும். ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள கூகுள் வரைபடத்தின் மூலம் இதனை அவதானிக்க முடியும்.ஸ இந்த வரைபடத்தில்அதிக வாகன நெரிசல் கொண்ட பாதைகள் சிவப்பு நிறத்தாலும், வாகன நெரிசல் குறைந்த பாதைகள் பச்சை நிறத்தாலும் காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் வாகன ஓட்டுநர்கள் பெரியளவில் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.கூகுள் தேடுபொறியில…
-
- 0 replies
- 560 views
-