ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143499 topics in this forum
-
ஆசிய ஆயர் பேரவையின் இறுதி நாள் திருப்பலியானது புனித லூசியாஸ் கொழும்பு உயர்மறை மாவட்ட பேராலயத்திலே நடைபெற்றது. இந்த நிகழ்வானது இன்று (04) காலை இடம்பெற்றது. அனைத்து ஆசிய ஆயர்களும் இந்த ஆலயத்திற்கு வந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தனர். இந்நிகழ்வில் பக்தர்கள் உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/religion/01/126993?ref=home
-
- 0 replies
- 257 views
-
-
இலங்கை தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியையே பலி கொடுத்தவர்கள் நாங்கள்:கலைஞர் முதல்வர் கருணாநிதி இன்று கேள்வி பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ’’அரசுக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இலங்கைத் தமிழர்கள் நலனை நீங்கள் கை கழுவி விட்டதாக டாக்டர் ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறாரே? தன்னுடைய மகனின் அமைச்சர் பதவி போய்விடக் கூடாது என்பதற்காக காங்கிரசோடு கூட்டணி என்று கடைசி வரை ஏமாற்றி வந்தது யார் என்பதை தமிழ்நாடு அறியும். இலங்கைத் தமிழர்களுக் காக இரண்டு முறை கழக ஆட்சியையே பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்பதையும் - நானும், பேராசிரியரும் எங்கள் சட்டப் பேரவை உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்தோம் என்பதையும் தமிழ்நா…
-
- 25 replies
- 2.2k views
- 1 follower
-
-
இலங்கை தமிழர் பிரச்சனை தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் ஆகியன தொடர்பாக நாளைய தினம் கருத்து வெளியிப்படும் என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் யஷ்வந் சின்ஹா இதனை தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கான வாழ்வு நிலை சுய கௌரவத்துடனும் சம உரிமையும் வாழ வழியேற்படுத்தல் மறுவாழ்விற்கான உதவி என்பன தொடர்பாகவே கருத்துக்கள் வெளியிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையேஇ பாரதீய ஜனதா கட்சி இலங்கை தமிழர் தொடர்பாக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதாகவும் பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் யஷ்வந் சின்ஹா தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/56423
-
- 5 replies
- 3.1k views
-
-
32 வருடங்களின் பின்னர் நெடுங்கேணி காட்டுப்பகுதியில் முரளிப்பழம் வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு காட்டுப்பகுதியில் 1984 ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் முரளி ப்பழம் காய்த்துள்ளது 1984 ஆண்டு இப்பகுதி காட்டுப்பகுதியில் அதிகளவு முரளிப்பழம் பழுத்திருந்து. அவற்றை பறித்து அதிகளவு விலைக்கு விற்பனை செய்து வந்த மக்கள் மீண்டும் 32 வருடங்களுக்கு பின் நெடுங்கேணி ஒலுமடு காட்டுப்பகுதிகளில் முரளிமரங்களில் அதிகமாக பழம் காணப்படுவதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்பகுதி மக்களும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் மக்களும், வயது வித்தியாசம் இன்றி ஆர்வத்துடன் காட்டுப்பகுதிகளில் முரளிப்பழம் பறிப்பதை காணக்கூடியதாகவுள்ளது. …
-
- 2 replies
- 2.2k views
-
-
சிறிலங்கா, ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமையுள்ள நாடு. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் அதன் உறுப்பு உரிமையுள்ள நாடு ஒன்று நாளாந்தம் ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவிப்பது தொடர்பாக அதிக அக்கறை கொள்ளவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் கோல்ம்ஸ் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் முகமாக தமிழீ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய பகுதிகள் வருமாறு: எமது பகுதியில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பொருட்களும் மனிதாபிமான உதவிகளும் சென்றடையும் வண்ணம் வன்னியில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்று மேற்கொ…
-
- 1 reply
- 462 views
-
-
காணாமல் போதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் - ஐ.நா. 07 ஏப்ரல் 2013 பலவந்தமான காணாமல் போதல்கள் மற்றும் கடத்தல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பில் நிலவையில் உள்ள முறைப்பாடுகள் உரிய முறையில் துரித கதியில் விசாரணை செய்யப்பட வேண்டுமென சட்டவிரோத கடத்தல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்குழு கோரியுள்ளது. கடத்தல் காணாமல் போதல்கள் n;தாடர்பிலான 5676 முறைப்பாடுகள் இன்னமும் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போதல் தொடர்பில் நான்கு முறைப்பாடுகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாக குறித்த ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது, முறைப்பாடுகள் தொட…
-
- 0 replies
- 540 views
-
-
லண்டன் ஆர்ப்பாட்டத்தில் தெரிவிப்பு என்கிறது திவயின முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை பௌத்தர்கள் நிறுத்தவிடின் ஜிகாத்தின் ஊடாகவே பதில் லண்டனில் வாழும் முஸ்லிம் மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு எதிராக லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர். எனினும் இலங்கை முஸ்லிம்கள் எவரும் இதில் கலந்து கொள்ளவில்லை. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுத்துவதை இலங்கை பௌத்தர்கள் நிறுத்தவில்லை என்றால், ஜிகாத் அமைப்பின் ஊடாகவே பதிலளிக்கப்படும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசாங்கம் அமைதியை விர…
-
- 2 replies
- 770 views
-
-
சடலங்களைப் பாதுகாப்பதற்கான கொள்கலன்கள் தயார் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக குளிர்சாதன வசதிகள் அடங்கிய 5 கொள்கலன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் தனிப்பட்ட நன்கொடையாக இந்த கொள்கலன்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய குறித்த குளிர் கொள்கலன்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணித்த 5 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில் இதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நீதியமைச்சிடம் கோரியிருந்தார் என்பது குறிப்பிட…
-
- 0 replies
- 388 views
-
-
Sri Lanka military sounds last warning to Tigers Buzz Up Send Email IM Share Delicious Digg Facebook Fark Newsvine Reddit StumbleUpon Technorati Yahoo! Bookmarks Print By C. Bryson Hull C. Bryson Hull – 31 mins ago COLOMBO (Reuters) – Sri Lanka's military on Wednesday broadcast a final surrender offer to Tamil Tiger rebels surrounded in a tiny strip of coast, urging them drop their guns and free tens of thousands of civilians or be destroyed. After a punishing three-day battle in which the military said it killed more than 500 Liberation Tigers of Tamil Eelam (LTTE) rebels, the army sealed the remnants of the separatist group off in a no-fire zon…
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் நடத்தி வரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் கனடா, டென்மார்க், அவுஸ்திரேலியாவிலும் தமிழர்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 287 views
-
-
இந்திய மத்திய அரசுடன் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துப் பேசுவதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பு குழுவினர் புது டில்லி சென்றுள்ளதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையின் தற்போதைய போர் நிலவரம், தமிழர் பிரச்சினைக்கு தீர்வு, அப்பாவித் தமிழமக்களைக்களைக் காப்பது உள்ளிட்டவை குறித்துப் பேசுவதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தமை அறிந்ததே. மத்திய அரசின் சார்பில், இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர மேனன் அவர்களால் விடப்பட்ட இந்த அழைப்பை, ஏற்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களிடையே இரு வேறு கருத்துக்கள் எழுந்தன. இதில் பெரும்பாலான எம்.பிக்கள் இந்தியாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என கோரியிருந்தபோதும், தற…
-
- 9 replies
- 1.5k views
-
-
வவுனியா ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக இரண்டு தினங்கள் காத்திருக்கும் பொதுமக்கள் - விசேட விலைக்கழிவு அறிவித்தலால் சம்பவம் (சதீஸ் ) புதுவருடத்தை முன்னிட்டு விலைக்கழிவில் ஆடைகள் விற்பனை செய்யப்படுவதாக வவுனியாவிலுள்ள பிரபல்ய ஆடைத்தொழிற்சாலை நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த இரண்டு தினங்களாக இங்கு வரும் பொதுமக்களுக்கு ஆடைகள் விற்பனைக்கு வழங்கப்படவில்லை. வவுனியா கண்டி வீதியிலிருக்கும் பிரபல்யமான ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக கடந்த இரண்டு தினங்களாக மக்கள் கூட்டங் கூட்டமாக அலைமோதுகின்றனர். புதுவருடத்தை முன்னிட்டு விலைக்கழிவில் ஆடைகள் விற்பனை செய்யப்படுவதாக ஆடைத்தொழிற்சாலை நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனி…
-
- 0 replies
- 361 views
-
-
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்கப் போவதாக நியூசிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் கீ இதனை உறுதி செய்துள்ளார். பிரித்தானியா மஹாராணி அல்லது அவரது பிரதிநிதி ஒருவர் இலங்கை அமர்வுகளில் பங்கேற்பார் எனவும், இந்த அமர்வுகளில் பங்கேற்க வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளை திருத்திக் கொள்வதற்கு இலங்கை முயற்சித்து வருவதாக நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த அமர்வுகளில் பங்கேற்கப் போவதாக அவுஸ்திரேலியாவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்…
-
- 0 replies
- 270 views
-
-
கே .குமணன் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக முத்துஐயன்கட்டு குளத்தின் நீர்மட்டம் 23 “9″ஆக உயர்ந்தது. இந்நிலையில், இன்று சனிக்கிழமை குளத்தின் நான்கு வான்கதவுகளும் தலா 3 இஞ்சி உயரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதிகளவான இராணுவத்தினரின் பிரசன்னத்தோடு இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர், மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர், முல்லைத்தீவு மாவட்ட இராணுவத்தளபதி, முல்லைத்தீவு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர், ஒட்டுசுட்டான் பிரதேச உதவி பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள தகவலின் படி தமது …
-
- 1 reply
- 558 views
-
-
-சுமித்தி தங்கராசா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்டத் தலைவர்கள் எனக் கூறி 12 இலட்சம் ரூபாவினைக் கப்பமாகப் பெற்ற இருவரை கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி, பரந்தன் சந்திப் பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையிலான விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் திருநகர் மேற்கு, கிளிநொச்சி மற்றும் குருக்கள் வீதி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இருவரும் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் விசாரணை பின்னர் யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 205 views
-
-
5 மாணவர் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல் சந்தேகநபர்கள் கடற்படை அதிகாரிகளே பெயர்ப் பட்டியலும் நீதிமன்றிடம் ஒப்படைப்பு (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்டுள்ள விவகாரத்துக்கு பொறுப்புக் கூற வேண்டிய, கைது செய்யப்பட வேண்டிய சந்தேக நபர்கள் யார் என்பதை ஒரு மாத காலத்துக்குள் மன்றுக்கு அறிவிக்க வேண்டும் என்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன நேற்று சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அறிவித்தார். இது தொடர்பிலான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, இக்கடத்தலுடன் கடற்படையினரே தொடர்பு ப…
-
- 1 reply
- 319 views
-
-
இம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை! தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு குறித்த கட்சி கடிதம் அனுப்பியுள்ளதுடன் தொடர்ந்தும் தமிழர்களை அந்நியப்படுத்தாது அவர்களின் உள்ளங்களை வெற்றிக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் உப தலைவரும் ஊடகப் பேச்சாளருமான சமன்குமார் கூறுகையில், “இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதி கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக முன்னெடுக்கப்பட்ட…
-
- 4 replies
- 626 views
-
-
தெருக்களில் இறங்கவேண்டும் மாற்று கருத்து இல்லை ஆனால் வித்தியாசமாக... உதாரணம்: ஒவ்வொரு மத ஆலயங்களுக்கும் சென்று அமைதியாக அவர்களின் உதவி கோர வேண்டும்.
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
மாத்தளை மனித புதைகுழி விசாரணைகளில் சந்கேம்: ஐ.நாவின் தலையீட்டை கோருகிறது ஆசிய மனித உரிமை ஆணைக்குழு! [Wednesday, 2013-05-22 09:41:00] மாத்தளை பாரிய மனித புதைகுழி விசாரணைகள் குறித்து ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது. பாரிய மனித புதை குழி தொடர்பான விசாரணைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 154 பேரின் உடல் எச்சங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் விசாரணை நடத்திய சட்ட வைத்திய அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணை நடத்தி வரும் நீதவானும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாரிய மனித புதைகுழி தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இந்த இடமாற்ற உத்தரவுகள் …
-
- 0 replies
- 331 views
-
-
பத்திரிகை பத்திரிகை கண்ணோட்டம் (காணொளி) 27 -01 -2017
-
- 0 replies
- 399 views
-
-
திருகோணமலை எண்ணெய் குதங்கள் இலங்கை வசமாகும் - உதய கம்மன்பில (ஆர்.யசி) திருகோணமலை எண்ணெய் குதங்களில் பெரும்பாலானவை இலங்கையின் நிருவாகத்தின் கீழும் ஏனையவை இந்திய நிறுவனமொன்றின் நிருவாகத்தின் கீழும் இயங்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக கூறினேனே தவிர இந்தியாவிடம் இருந்து எண்ணெய் குதங்களை இலங்கை அபகரிக்கும் என்ற அர்த்தத்தில் கூறவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெளிவுபடுத்தினார். எவ்வாறு இருப்பினும் திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் இலங்கை வசமாகும் என்பது உண்மை எனவும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வாய்மூல வினாக்கான விடை நேரத்தில், திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்வதாக அமைச்சர் உதய கம்மன்பில…
-
- 0 replies
- 321 views
-
-
‘யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டத்திற்காக’ 2010ல் ஆசிய அபிவிருத்தி வங்கியால் 130 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் வசதி மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்கான உள்ளுர்ச் செலவுகளுக்கான 26 மில்லியன் டொலர் நிதியானது சிறிலங்கா அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியிருந்தது. யாழ்ப்பாண நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் வாழும் 300,000 மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதியை வழங்குதலும் யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த 80,000 மக்களுக்கு சுகாதார வசதியை வழங்குவதையும் நோக்காகக் கொண்டே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான மூல நீரானது கிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து பெற்றுக்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இரணைமடுக் குளத்தின் …
-
- 1 reply
- 887 views
-
-
The American Association for the Advancement of Science (AAAS) Tuesday issued a preliminary analysis of commercial high-resolution satellite imagery of the conflict zone in northern Sri Lanka that shows craters from the use of heavy weapons and the removal of thousands of likely structures used by internally displaced persons (IDPs) between May 6 and May 10. May 6 imagery analysis reported on possible evidence of shelling, in the form of likely shell impact craters and adjacent destroyed structures. These possible shell impact craters are found throughout the conflict zone, in close proximity to and intermingling with IDP shelters and other structures. The report po…
-
- 6 replies
- 3k views
-
-
சிலாபம், முன்னேஸ்வரம் காளி கோயிலில் மிருக பலி பூசையைத் தடுத்து நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னேஸ்வரம் ஆலய பிரதமகுருவிற்கும், உதவி குருவிற்கும் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=15065
-
- 1 reply
- 415 views
-