ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142619 topics in this forum
-
விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கை அரசுக்கு உதவிய இந்தியா இன்று இலங்கைக்கு எதிராக செயற்படுவதாகத் தெரிவித்த யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க யாழ். பல்கலைக்கக வளாகத்தில் பரசூட்களில் இறங்கிய இந்திய அமைதிப் படையினரை புலிகள் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றமை மனித உரிமை மீறலாகத் தெரியவில்லையா எனவும் கேள்வி எழுப்பினார். 1987 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் பரசூட்டில் தரையிறங்கியபோது கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தினரின் நினைவுத் தூபி பலாலி படைத்தளத்தில் அமைக்கப்பட்டு அங்கு இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வைத் தொடர்ந்து நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மேலும் கூறியதாவது; புலிகளுக்கு…
-
- 1 reply
- 523 views
-
-
மாணவர்கள் கொலைக்கு நீதி கோரி பல்கலைக்கழகங்களில் நாளை போராட்டம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு நாளை நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்க ளிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில், உயிரிழந்த சுலக்சன் சகோதரர் மரணமானது பொலிஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் என பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட முன்னதாகவே பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது …
-
- 0 replies
- 187 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குடும்பிமலை பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நேற்றிரவு (13) இடம்பெற்றது. வழமையான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த படையினர் மீதான இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக படைதரப்பில் தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 804 views
-
-
உலகத்தமிழர் பேரவையின் மூன்றாவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வண்ணம், பிரிட்டனின் நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய பிரிட்டிஷ் அமைச்சர்கள் மற்றும் சர்வதேச பிரமுகர்கள், இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஒரு முழுமையான, வெளிப்படையான, நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணையை வலியுறுத்தினார்கள். விழாவில் பேசிய பிரிட்டிஷ் துணைப் பிரதமரும், லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான, நிக் க்ளெக், பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் பொதுவாக தாராளவாத விழுமியங்களான, சகிப்புத்தன்மை, மனித உரிமைகளைப் பேணுதல், பல்லினக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பது, மாறுபட்ட கருத்தை மதிப்பது மற்றும் கருத்து சுதந்திரம் போன…
-
- 0 replies
- 369 views
-
-
கூடங்குளத்தில் கதிரியக்க கசிவு: இலங்கையும் குற்றச்சாட்டு ஞாயிற்றுக்கிழமை, 03 மார்ச் 2013 01:14 கூடங்குளம் அணு மின்நிலையத்தில் கதிரியக்க கசிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கையும் சாட்டியுள்ளது. கூடங்குளம் மின் நிலையத்துக்கு எதிரான இலங்கையை சேர்ந்த மக்கள் குழுவே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கூடங்குளம் அணு மின்நிலையத்தில் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதியிலிருந்து கதிரியக்க கசிவு ஏற்பட்டுள்ளதாகவே இந்த குழு குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் கசிவு ஏற்பட்டு அபாயகரமான பொருள் தீப்பற்றி எரிந்தமையினால் பலர் பலியாகிவிட்டதாக கடந்த இரு நாட்களாக குறுஞ்செய்திகள் மூலம் வதந்திகள…
-
- 1 reply
- 500 views
-
-
அரபு நாடுகள் இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்வது ஏன்? காரணம் கூறுகிறார் கலகொட : பின்னணியில் பைசர் உள்ளதாகவும் தகவல் (ஏ.ஆர்.ஏ.பரீல்) ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் அபுதாபி போன்ற நாடுகள் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்து, ஹோட்டல்கள் நிறுவி முஸ்லிம் குடியேற்றங்களையும் பள்ளிவாசல்களையும் நிறுவுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பின்னணியிலிருந்து செயற்படும் அமைச்சர் பைசர் முஸ்தபாவைக் கைது செய்து இது தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும், அவரது அமைச்சுப் பதவியை பிரதமர் ரத்துச் செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு கோரியுள்ளது. அம்பகமுவ பிரதேச சபை பிரிவில் நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட…
-
- 11 replies
- 1k views
- 1 follower
-
-
அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள தமிழர்களின் மனித உரிமைகளையும், அரசியல் சுயநிர்ணய உரிமையையும் பாதுகாத்து உறுதி செய்வதை விடுத்துவிட்டு - ஐக்கிய நாடுகள் சபையும், இணைத் தலைமை நாடுகளும் அவர்களை நிரந்தர அகதிகளாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளி்ன் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் 'புதினம்' சிறப்பு நிருபரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 434 views
-
-
-றிப்தி அலி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த வாரம் ஜப்பான் செல்லவுள்ளார். ஜப்பான் பிரதமர் சினோஸ் அபியின் அழைப்பினையேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 14ஆம் திகதி ஜப்பான் செல்லவுள்ளார். நான்கு தினங்கள் ஜப்பான் தங்கவுள்ள ஜனாதிபதி, ஜப்பான் பிரதமர் உட்பட பல அரச முக்கியஸ்தர்களை சந்தி பேச்சு நடத்தவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜப்பானுக்கான இந்த விஜயத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த டிசெம்பர் மாதத்திலேயே ஜப்பானுக்கான விஜயம் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அப்போதைய ஜப்பானிய பிரதமரின் இராஜினாமாவை தொடர்ந்து குறித்த விஜயம் இறுதி…
-
- 6 replies
- 598 views
-
-
மறவன் புலவில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட தற்கொலை அங்கி தமிழரசு கட்சியின் பேச்சாளர் சுமந்திரனுக்கு இலக்கு வைக்கப்பட்டு இருந்தது என்று வடமாகாண சபை உறுப்பினர் சயந்தன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிக் கிளைத் திறப்பு விழா நிகழ்வில் நன்றியுரை ஆற்ற அழைக்கப்பட்ட சயந்தன் நன்றி கூறுவதைத் தவிர்த்து தனது மற்றும் சுமந்திரனின் அரசியல் எதிரிகளை வசைபாடுவதில் நீண்ட நேரம் செலவளித்தார். உரையின் இறுதியில் அந்தத் தற்கொலை அங்கியை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு எடுத்துச்சென்ற முக்கிய சூத்திரதாரி இன்னும் கைது செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்ட சயந்தன், அந்தச் சூத்திரதாரி தனது அலுவலகத்துக்கு முன்னால் வீடு வாடகைக்கு எடுத்து வெளிநாட்டுப் பெண்ணை அமர்த்தி சுமந்திர…
-
- 0 replies
- 421 views
-
-
தமிழ் அரசு கட்சிக்குள் குழு செயற்பாடு தொடர்ந்தால் கூட்டமைப்பை விட்டு வெளியேறுங்கள்: இரகசியமாக கூடி ரெலோவிற்கு அங்கீகாரமளித்தது தலைமைக்குழு! October 25, 2020 இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் எம்.ஏ.சுமந்திரன்- சி.சிறிதரன் கூட்டு தொடர்ந்து கூட்டமைப்பு செயற்பாடுகளிற்கு எதிராக செயற்பட்டால், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி புதிய தமிழ் தேசிய அணியொன்றை உருவாக்க தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு நேற்று (24) அங்கீகாரம் அளித்துள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு நேற்று வவுனியாவில் கூடியது. வழக்கத்தை போல ஆர்ப்பாட்டங்களின்றி காதும் காதும் வைத்ததை போலவே இந்த தலைமைக்குழு கூடியது. இதன்போது, எட்டு தலைமைக்குழு உறுப்பினர்க…
-
- 3 replies
- 671 views
-
-
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள். அவாஸ் எனப்படும் இந்த இணையத் தளத்தில் எமது கருத்துக்களையோ அல்லது உள்ளக் குமுறல்களையோ பதிவு செய்வோம். https://secure.avaaz.org/en/report_back_2/ http://www.avaaz.org/en/sri_lanka_civilians/
-
- 8 replies
- 1.3k views
-
-
கேரள கஞ்சா வைத்திருந்த இளைஞன் கைது யாழ்ப்பாணம் - இளவாளை - மாதகல் பிரதேசத்தில் பொலிஸாரால் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது பொலிஸாரால் 9 கிலோ 305 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த சுற்றிவளைப்பின் போது 24 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/13569
-
- 0 replies
- 125 views
-
-
யாழ். குடா நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இன்று திங்கட்கிழமையும் கடும் மழை பெய்துள்ளது. நெற்று மாலை ஆரம்பமாகிய மழை வீழ்ச்சி இன்று அதிகாலை வரை தொடர்ச்சியாக நீடித்துள்ள நிலையில் காலை முதல் மழை சற்று ஓய்வடைந்திருந்தது. இந்த நிலையில் இன்று பிற்பகல் 02 மணியளவில் ஆரம்பித்த கடும் மழை வீழ்ச்சி சுமார் 2 மணித்தியாலங்களிற்கு மேலாக நீடித்தது. கடும் மழை காரணாமாகப் பாடசாலை முடித்து வீடு திரும்பிய மாணவர்கள் உட்படப் பொதுமக்களும் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கினர். இன்று பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக யாழ்.பிரதான பேருந்து தரிப்பிட நிலையம் மற்றும் அதனை அண்டிய ஆஸ்பத்திரி வீதியில் பெருமளவு வெள்ளம் தேங்கி நின்றது. இதன் காரணம…
-
- 0 replies
- 440 views
-
-
தீபாவளி பண்டிகை நாளில் இறைச்சி வாங்க சென்றவர் மீது கத்திக்குத்து..! யாழ்.கோப்பாயில் சம்பவம். தீபாவளி பண்டிகை நாளில் கோப்பாய் சந்தியில் மாட்டிறைச்சி கடைக்காரனின் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் கோப்பாய் சந்தியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பவத்துடன் தொடர்புடைய புத்தளத்தைச் சேர்ந்த சுன்னாகத்தில் வசிக்கும் இறைச்சிக்கடை உரிமையாளர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இறைச்சி வாங்கச் சென்றவர் பசு மாட்டு இறைச்சிபோல் உள்ளது என்று தெரிவித்ததால் உரிமையாளர் கோபமடைந்து கத்தியால் க…
-
- 6 replies
- 1.3k views
-
-
அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுக்காத தீர்மானம் ஒன்று மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்படுவதால், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பயன் எதுவும் இல்லைனெ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அமெரிக்காவின் நலன்களுக்காகத்தான் ஜெனீவா மனித உரிமைச் சபையில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதென அவர் கூறினார். அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணையில் அனைத்துலக விசாரணை என்ற வாசகம் நீக்கப்பட்டமை இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமான விடயமெனவும், இலங்கைக்கு மேலும் உத்வேகத்தை அளிக்குமெனவும் இன்று முற்பகல் எமது கொழும்பு செய்தியாளரிடம் அவர் கருத்து வெளியிட்டார். உள்ளக விசாரணை நடத்துமாறு கோருவதற்கும் வட மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துவதற்கும் ஜெனிவா…
-
- 0 replies
- 348 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் சாதுரியமாக செயற்பட்டு வருகின்றது ஆச்சரியமளிப்பதாக கூறுகின்றார் அமைச்சர் ராஜித சேனாரத்ன (ரொபட் அன்டனி) நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வுத்திட்டமொன்றை சகலரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முன்னெடுப்பதற்கான அவகாசத்தை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மிகவும் சாதுரியமாக செயற்பட்டு வருகின்றது. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் இந்த செயற்பாடு எங்களை ஆச்சரியப்பட வைக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு தொடர்ந்து இவ்வாறு ராஜதந்திர ரீதியிலும் சாதுரியமா…
-
- 0 replies
- 289 views
-
-
இனக்கொலையை நிறுத்து - புறூஸ் பெயின் இது ஏற்கனவே இங்கு பதியப்பட்டதா எப்று எனக்குத் தெரியவில்லை. நான் இன்றுதான் பார்த்தேன்.
-
- 1 reply
- 1.5k views
-
-
காணாமற்போனோர் தொடர்பில் 3,000 முறைப்பாடுகள் ஜெனிவாவில் சமர்ப்பிப்பு காணாமற்போனவர்கள் தொடர்பில் எமது அமைப்பிடம் பதிவு செய்யப்பட்ட 5 ஆயிரம் பேர் தொடர்பான முறைப்பாட்டில் 3 ஆயிரம் பேரின் முறைப்பாடுகள் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எஞ்சியோரின் முறைப்பாடுகளையும் அங்கு அனுப்பு வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு காணாமற்போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் செயலாளர் எஸ்.மகேந்திரம் தெரிவித்தார். காணாமற்போன 37 பேர் தொடர்பில் நேற்றைய தினம் (உதயனில்) வெளியிடப்பட்ட பெயர்ப்பட்டியலில் உள்ளவர்களின் உறவினர்கள் தன்னுடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: வன்னியில் நடைபெற்ற இ…
-
- 1 reply
- 528 views
-
-
ரவிராஜ் கொலை வழக்கின் முதல் சாட்சியாளருக்கு பலத்த பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் முறைப்பாட்டாளர்கள் தரப்பு முதல் சாட்சியாளரான ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரித்திவிராஜ் மனம்பேரிக்கு பலத்த பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதன், கருணா குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர்களிடமிருந்து சாட்சியாளருக்கு பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு பிரதம நீதவான் மணிலால் வைத்தியதில…
-
- 0 replies
- 308 views
-
-
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இருநாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ளார். இதன்போது அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசின் முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேசவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக இலங்கை வரும் அஜித் டோவல், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக தமிழர் தரப்பு அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/139387/hhhh.jpg இதேவேளை கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாகவும் பேச்சுக்கள் நடைபெறும் என்றும் எதிர்…
-
- 14 replies
- 1.8k views
-
-
தெரு நாடகம் நடத்திய தேரர்களை தண்டிக்க வேண்டும் : மனோ (பா.ருத்ரகுமார்) மட்டக்களப்புக்கு சென்று தெருநாடகம் நடத்திய பெரும்பான்மையின மதத்தை சேர்ந்த தேரர்கள் உடன் தண்டிக்கப்பட வேண்டும் என தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கருமங்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மேலும் பொலிஸ் மா அதிபர் யாரை 'சேர்' என அழைத்தார் என தேடிப்பார்த்து அரசியலாக்க முனையும் கூட்டு எதிரணியினரும் மக்கள் விடுதலை முன்னனியும் தேரர்களின் அடாவடித்தனம் தொடர்பில் மொளனமாக இருப்பது பெரும் வேதனைக்குறியது எனவும் குறிப்பிட்டார். மட்டக்களப்பில் தேரர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் அமைச்சரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஆவர் தொடர்ந்து தெ…
-
- 0 replies
- 292 views
-
-
புலம்பெயர் தேசங்களில் வாழும் எம்மவரால் சிங்களத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியுமா? சர்வதேச நாணய நிதியம் சிறீலங்கா அரசினிற்கு நிதி உதவி செய்வததை தடுப்பதற்காக புலம்பெயர் தேசத்து தமிழ உறவுகள் தாம் வாழகின்ற நாடுகளில் அந்தநாட்டின் நீதிமன்றங்களிலோ அன்றேல் அந்நாடுகளில் இதற்கெனவே விசேடமான நீதிமன்றங்கள் இருந்தால அவற்றிலேயோ வழக்குகளைப் பதிவு செய்யலாமா? இவ்விடையத்தைப்பற்றி, யாருக்காவது துறையியல் நிபுணத்துவம் உள்ளவர்களுடன் தொடர்பிருந்தால் ஆலோசிக்கலாமே! எழுஞாயிறு.
-
- 1 reply
- 697 views
-
-
இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண பணிகளில் அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது என்கிறார் ஐநாவின் பிரதிநிதி வீரகேசரி இணையம் 4/5/2009 11:49:28 AM - இலங்கை அரசாங்கம் கஷ்டமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், இடம்பெயர்ந்து பெரும் எண்ணிக்கையில் வரும் மக்களின் உடனடி நிவாரண தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கத்திற்கு ஐநா சபை உதவிகளைச் செய்து வருவதாக சனியன்று வவுனியாவுக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியாகிய வோல்டர் கேலன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இடம்பெயர்ந்த மக்களுக்கான ஐநா சபை செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி வோல்டர் கேலன், மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், அரச சமாதான செயலகப் ப…
-
- 0 replies
- 505 views
-
-
மாதுறு ஓயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொத்தானை அணைக்கட்டுகள் உடைப்பெடுத்த நிலையில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். பொத்தானை அணைக்கட்டு கடந்த வருடம் மார்கழி மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக உடைப்பெடுத்து போக்குவரத்து மற்றும் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் விசாயிகள் ஏழு இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து மண் மூடையடுக்கி தற்காலிக அணைக்கட்டினை அமைத்து விவசாய செய்கையை செயள்து வந்தனர். இந்நிலையில் தற்போது ஆறு பெருக்கெடுத்தமையினால் தற்காலிக மண் மூடையில் அமைத்த அணைக்கட்டு தற்போது வெள்ளத்தில் உடைப்பெடுத்து முன்னர் உடைபட்ட பொத்தானை அணைக்கட்டு ஊடாக சும…
-
- 0 replies
- 501 views
-
-
125 இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் !பிரான்ஸ் செய்தி நிறுவனம் To: keetru@googlegroups.com இலங்கை இராணுவத்தின் 2 படைப் பிரிவுகளில் இந்திய வீரர்கள்: பிரான்ஸ் செய்தி நிறுவனம் [ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2009, 04:01.36 PM GMT +05:30 ] இலங்கையின் வட பகுதியில் சிங்கள இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்களும் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய வீரர்கள் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்திய இராணுவ அதிகாரிகள், இலங்கைப் படையினரை வழி நடத்தி வருவதாகவும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை படு வேகமாக ச…
-
- 0 replies
- 1.2k views
-