ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
இலங்கையில் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு ஒன்றை எட்டி சகல இன மத மக்களும் சரிசமமாக வாழக்கூடிய சூழல் ஒன்றை விரைவாக ஏற்படுத்துமாறு பரிசுத்த பாப்பரசர் 16ஆம் பெனடிக்ற் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று நேரில் வலியுறுத்தினார்.இலங்கையில் விரைவில் நிலையான அமைதியும் சமாதானமும் ஏற்படும் என்று தான் நம்புவதாகவும் பாப்பரசர் ஜனாதிபதியிடம் கூறினார். லண்டனுக்கு பயணமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரிசுத்த பாப்பரசரைச் சந்திப்பதற்காக அங்கியிருந்து நேற்று முன்தினம் ரோமுக்குப் புறப்பட்டுச் சென்றார். பாப்பரசருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் பாப்பரசரின் வத்திக்கான் வாசஸ்தலத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் பாப்பரசருட…
-
- 1 reply
- 2.5k views
-
-
நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழ.நெடுமாறன் சென்ற கார் மீது டேங்கர் லாரி நேற்று மோதியது. இதில், அதிர்ஷ்டவசமாக நெடுமாறன் உயிர் தப்பினார். தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் நேற்று மாலை மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டார். சீர்காழி அருகே சேந்தன்குடி பகுதியில் சென்ற இந்த கார் மீது எதிரே வந்த எரிவாயு டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், நெடுமாறன் சென்ற காரின் முன் பகுதியில் சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது பற்றி சீர்காழி போலீசார் வழக்குப்பதிந்து திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கணபதியைக் கைது செய்தனர். நக்கீரன்
-
- 16 replies
- 2.5k views
-
-
கள நிர்வாகம் இச்செய்தியை நீக்காதென்ற நம்பிக்கையில் இங்கே பதிவிடுகிறேன். நேற்று ஊர்ப்புதினம் பகுதியில் "செஞ்சோலையில் வளர்ந்த 5பெண்பிள்ளைகள் வெலிக்கடைச் சிறையிலிருந்து எழுதிய கடிதம்" என்ற தலைப்பில் செய்தியொன்றினை இணைத்திருந்தேன். அதன் இணைப்பு வருமாறு :- http://www.yarl.com/forum3/index.php?showtopic=94340 சில இணையங்கள் இச்செய்தியை தங்கள் இணையங்களில் வெளியிட்டுள்ளார்கள். மேற்படி பிள்ளைகளுக்கான உதவிகளை எவ்வாறு செய்யலாம் என்பதற்கான நேசக்கரம் தொடர்பு விபரங்களையும் சேர்த்து போட்டிருந்தார்கள். ஆனால் பதிவு , சங்கதி போன்ற தளங்கள் வெலிக்கடைச் சிறையிலிருந்து பெண்கைதிகள் எழுதிய கடிதத்தின் மேல் தலையையும் கீழ் குறிப்புகளையும் வெட்டி விட்டு ஏதோ உத்தியோக ப…
-
- 11 replies
- 2.5k views
-
-
4 ஆம் இணைப்பு) வாகரையை நோக்கி சிறிலங்காப் படையினர் படை நகர்வு: 12 போராளிகள் வீரச்சாவு- 45 படையினர் பலி- 150 படையினர் காயம் [செவ்வாய்க்கிழமை, 16 சனவரி 2007, 15:03 ஈழம்] [தாயக செய்தியாளர்] வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிறிலங்காப் படையினர் மும்முனைகளில் பாரிய நகர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இன்று மாலை படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வான் குண்டுத் தாக்குதல்களை நடத்த பல்குழல் ரொக்கட்டுக்கள் மற்றும் ஆட்டிலெறிகள் செறிவாக எறிகணைகளை பொழிய படையினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு நகர்வு ஆக்கிரமிப்புத் தாக்குதலை தொடக்கினர். வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் அதன் வடபகுத…
-
- 6 replies
- 2.5k views
-
-
இலங்கை அரசாங்கத்திற்குத் தமிழ் மக்களின் ஆதரவு இன்னமும் கிடைக்கப் பெறவில்லை என இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயணன் தெரிவித்துள்ளார். இந்தக் கூற்றுத் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தியடையக் கூடும் என்றபோதிலும் இதுவே யதார்த்த நிலை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த விசேட செவ்வியில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரச படையினர் வெற்றி கொள்ளக் கூடும் எனினும்இ தமிழ் மக்களின் நம்பிக்கையை வெற்றி கொள்ளவதற்கான நடவடிக்கைகள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். நோர்வே அல்லது வேறும் ஓர் தரப்பு வழங்கக்கூடிய பங்களிப்ப…
-
- 15 replies
- 2.5k views
-
-
இலங்கைக்கு விழுந்துள்ள இரட்டைச் சுருக்கு 2013 பொது நலவாய நாடுகளின் மாநாட்டினை இலங்கையில் நடத்துவதற்கு முன்பாக அங்கு மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட்டு நல்லிணக்க வேலைத்திட்டங்களிலுமான முன்னேற்றங்களைக் காட்டவேண்டும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். 2013 இன் மாநாட்டினை புறக்கணிக்கும் நடவடிக்கைகளை சிறிலங்கா தவிர்க்க வேண்டுமாயின் இவற்றைச் செய்தே ஆகவேண்டும் எனக்கூறியுள்ளார் டேவிட் கமரூன். தான் கனடாவுடனும் இது குறித்துக் கலந்துரையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.இதே வேளை மஹிந்த ராஜபக்ஷவுடனும் பேசியதாகவும் கூறியுள்ள கமரூன். சிறிலங்கா பொறுப்புள்ள அரசாங்கம் என்பதனை நிரூபித்துக் காட்டவேண்டும் எனவும் கூறியுள்ளார்.இதே நிலைப்பாட்டிலேயே கனேடிய அரசும் உள்ளது…
-
- 3 replies
- 2.5k views
-
-
வியாழன் 04-10-2007 19:10 மணி தமிழீழம் [மயூரன்] வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள் மன்னார் மற்றும் மட்டக்களப்புப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதல்களின் போது வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மன்னார் விளாத்திகுளத்தில் நேற்று புதன்கிழமை சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலில் வீரச்சாவடைந்தோர்: 2 ஆம் லெப். தீக்கவி என்றழைக்கப்படும் பூலோகநாதன் சிவாகர் (சொந்த முகவரி: 155 ஆம் கட்டை, தொண்டமான் நகர், கிளிநொச்சி. தற்காலிக முகவரி: மணியன்குளம், விநாயகர் குடியிருப்பு, கந்தபுரம்) வீரவேங்கை பெருநம்பி என்றழைக்கப்படும் சக்திவேல் சங்கரலிங்கம் (இன்பன் கடை, செல்வா நகர், கிளிநொச்சி) …
-
- 6 replies
- 2.5k views
-
-
யாழ்ப்பாணம் முகமாலை மற்றும் கிளாலி ஆகிய பகுதிகளில் கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் இடம்பெற்ற மோதல்களில் இரண்டு தரப்பிலும் அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமான "லக்பிம" தனது பாதுகாப்பு ஆய்வுரையில் தெரிவித்துள்ளது. அரசாங்கம் 10 படையினரே இதில் கொல்லப்பட்டதாக கூறும் நிலையில் உயிரிழப்புகள் அதனைவிட பன்மடங்கு என லக்பிம குறிப்பிட்டுள்ளது. 2006 ஆம் ஆகஸ்ட் 10 ஆம் திகதியும் 2007 ஆம் ஆண்டு ஏப்ரலிலும் முறையே 140 மற்றும் 90 என்ற அடிப்படையில் 55 வது பிரிவுப் படையினருக்கு இழப்புகள் ஏற்பட்டன. பல நூற்றுக்கணக்கான படையினர் காயங்களுக்கு உள்ளாகினர். இந்தநிலையில் கடந்த வார மோதல்களின் போது படைத்தரப்பில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் வெளியிடவில்லை. புதிய கட்டுப்பா…
-
- 2 replies
- 2.5k views
-
-
சீமான் பொய் கூறுகிறார்: ஆதாரத்துடன் தமிழக அரசியல் (09.06.2012) Published By பெரியார்தளம் On Thursday, June 7th 2012. Under thamizhaga arasiyal, முதன்மைச்செய்திகள் கடந்த கிழமை வெளிவந்த தமிழக அரசியல் கட்டுரைக்கு தான் பேட்டி கொடுக்கவில்லை என்று அறிக்கை வெளியிட்ட சீமானுக்கு தமிழக அரசியல் இதழ் ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளது. சீமானுடன் நமது நிருபர் அலைபேசியில் பேசியதற்கான ஆதாரம் நம்மிடம் இருக்கிறது. அவர் சொன்ன கருத்துக்களை சீமான் மறுத்தால் தனது கட்சியின் கொள்கைப் பிரகடனத்தையே அவர் மறுக்கிறார் என்பதாகவே பொருள்படுகிறது. – தமிழக அரசியல் 09.06.2012 ஏடு நன்றி: தமிழக அரசியல் http://www.periyarthalam.com/2012/06/07/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9…
-
- 7 replies
- 2.5k views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 05:23 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா தலைநகரில் இடம்பெறும் கடத்தல்களை உடனடியாக நிறுத்தக்கோரி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19.09.06) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கதவடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று சனிக்கிழமை இரவு கேட்டுக்கொண்டதற்கிணங்க மகிந்த நாடும் திரும்பும் வரை பிற்போடுவது என ஏற்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளது. கியூபாவுக்கு சென்றுள்ள மகிந்த ராஜபக்ச கொழும்பில் கதவடைப்பு மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படுவதை அறிந்து தனது சகோதரர் பசில் ராஜபக்ச மூலமாக கதவடைப்பிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட அரசியல்வாதிகள் சிலருடன் நேற்றிரவு ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைகளின் போத…
-
- 9 replies
- 2.5k views
-
-
எழுதுமட்டுவாள் சிறிலங்காப் படைத்தளம்- எறிகணைத்தளம் மீது விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதல் [புதன்கிழமை, 04 யூன் 2008, 04:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். தென்மராட்சி எழுதுமட்டுவாள் சிறிலங்காப் படைத்தளம் மற்றும் எறிகணை ஏவுதளம் ஆகியவற்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று இலக்கு வைத்து நடத்திய எறிகணைத் தாக்குதலில் அழிவைச் சந்தித்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: முகமாலைக் களத்தின் முதன்மைப் பின்தளமாக உள்ள எழுதுமட்டுவாள் சிறிலங்காப் படைத்தளம் மற்றும் மோட்டார் எறிகணைகளை ஏவும் தளம் ஆகியன இன்று புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் …
-
- 1 reply
- 2.5k views
-
-
http://www.dinamalar.com/fpnnews.asp?News_...40&cls=row3 தினமலரில் வந்துள்ள செய்தி. புலம்பெயர் உறவுகளே உங்கள் கருத்தினை முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள் இதோ: அவரது மின்னஞ்சல் முகவரி. cmcell@tn.gov.in ***
-
- 7 replies
- 2.5k views
-
-
கிளிநொச்சியை படையினர் கைப்பற்றுவதை விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனினால் தடுக்க முடியாது எனவும் தமது அதிகார பிரதேசத்தை பாதுகாத்து கொள்ளும் நோக்கிலேயே சார்க் மாநாட்டை முன்னிட்டு, போர் நிறுத்தம் ஒன்றை விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர் எனவும் கருணா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் மிகவும் தளர்வடைந்துள்ளனர் எனவும் முன்னர் கிளிநொச்சியை தற்கவைப்பதற்காக தான் கிழக்கில் இருந்து 2 ஆயிரம் பேரை வன்னிக்கு அழைத்துச் சென்றதாகவும் அதன் மூலம் பிரபாகரனை காப்பற்றியதாகவும் கருணா கூறியதாக சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் தற்பொழுது அவர்களுக்கு உதவகூடிய படையை கொண்டு வரமுடியாத நிலையில் விடுதலைப்புலிகள் இருக்கின்றனர். பதுங்குகுழிக்குள் இருந்து கட்டளைகளை மாத்திரம…
-
- 11 replies
- 2.5k views
-
-
கள உறவுகளே அவதானமாக இருங்கள் ஈழத்திலிருக்கும் உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள் தேவையில்லாத தொலைபேசி உரையடல்களை தவிர்ப்பது தற்போதய நிலமையில் அங்கு இருப்பவர்களுக்கு நல்லது............ தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்டது றோ. - உறுதிப்படுத்தியது இலங்கை அரச பாதுகாப்பு அமைச்சு. இந்தியாவிற்கு உத்தியோக புூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த மகிந்த தலைமையிலான குழுவினரின் அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் இந்தியா ஒட்டுக்கேட்டுள்ளதாக இந்திய புலனாய்வு நிறுவனங்களின் தகவல் கசிவுகள் தெரிவிக்கின்றது. மகிந்த குழுவினரின் தொலைபேசி அழைப்புகளை இந்திய புலனாய்வு நிறுவனம் ஒட்டுக் கேட்டதாகவும், இந்த குழுவில் பங்கு பற்றியிருந்த ஒரு தனியார் ஊடக நிறுவனத்தின் பிரதிநிதியாக சென்றவரின் தொலைபேசி…
-
- 11 replies
- 2.5k views
-
-
பாயும் புலிச் சின்னத்துடன் "நாம் தமிழர்" அரசியல் கட்சி தமிழின உணர்வாளர் சீமான் அவர்களால் தொடங்கிவைப்பு தனியீழமே தமது ஒரே குறிக்கோள் என்ற முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இக்கட்சி தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், தமிழக தலைவர்கள் ஈழத்தமிழர் தொடர்பாக அசமந்தப் போக்கையே கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டினார். சோழர்களின் தலைநகரான தஞ்சாவூரில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி தமிழீழ விடுதலைப்புலிகளின் இலட்சினை ஒத்த பாயும் புலியுடனும், ஈழத்தமிழரின் தேசியக்கொடியினை ஒத்த வர்ணங்களுடனும் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31531 நன்றி தமிழ்நெட்.
-
- 12 replies
- 2.5k views
-
-
என்ன செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? இன்றும் 134 அப்பாவித் தமிழர்களை ஸ்ரீலங்கா அரச படைகள் கொண்றுகுவித்துள்ளன. வன்னியில் அவலப்படும் எமது மக்களுக்காக என்ன செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? என்பதுதான் இன்று புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்ற பிரதான கேள்விகள். ஐக்கிய இராச்சியத்தில் வாழும் மக்களாகிய என் போன்றவர்களை நினைத்து எனது மனதில் எழுந்த சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். மற்றைய நாடுகளில் வாழ்பவர்களும் அவரவர் நாடுகளுக்கேற்றபடி இக்கருத்துகளை பயன்படுத்த முடியும். இன்றைய அத்தியாவசிய தேவை என்ன? • அப்பாவி குடிமக்கள் மீதான ஸ்ரீலங்கா அரசின் தாக்குதல்கள் உடன் நிறுத்தப்படவேண்டும். • சர்வதேச தொண்டு நிறுவனங்களை வன்னியில் செ…
-
- 23 replies
- 2.5k views
-
-
லண்டனிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட தமிழர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்கொலை லண்டனிலிருந்து திருப்பியனுப்பப்பட்டு கடந்த ஜூலை மாதம் சிறிலங்கா கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இவர் தற்கொலை செய்துள்ளார் என்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்து கொண்டவர் ஜெயக்குமார் சுப்பிரமணியம் என்று கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர், சட்டச்சிக்கல்கள் காரணமாகவும் தேவையான ஆவணங்கள் இன்மையாலும் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படாமல் குடிவரவு-குடியகல்வு திணைக்கள அ…
-
- 10 replies
- 2.5k views
-
-
நன்றி சங்கதி http://sankathi.org/news/index.php?option=...43&Itemid=1 வீரகாவியமான கண்மணிகளுக்கு வீரவணக்கம்
-
- 11 replies
- 2.5k views
-
-
இந்துக்களை கொச்சைப்படுத்தவே மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி – வடிவேல் சுரேஸ் nShare காதர் மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டிலுள்ள இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 7 பேருக்கு இன்று பி…
-
- 18 replies
- 2.5k views
- 1 follower
-
-
இலங்கைத் தீவில் தேசிய இனங்கள், தேசிய இனப்பிரச்சனை என எதுவும் இல்லையென நிறுவுவதையே தங்கள் உடனடி அரசியல் திட்டமாக ராஜபக்ச சகோதரர்கள் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுகின்றார் கொழும்பில் இருக்கும் தமிழ் அரசியல் ஆர்வலர் ஒருவர். "கோவணமும் களவு போய்விட்டதை உணராமல், பட்டாடை பற்றிய கனவில் மிதக்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்" என அவர் புதினப்பலகை-யிடம் தெரிவித்தார். கடந்த குடியரசு அதிபர் தேர்தலுக்குப் பின்னர் - தமக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைவர் சம்பந்தனும் தான் என்றே ராஜபக்ச சகோதரர்கள் கருதுகின்றனர் என்று சொல்லப்படுகி்ன்றது. ஆதலால் - தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பலவீனப்படுத்திச் …
-
- 38 replies
- 2.4k views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து கருணாவிற்குப் பொருத்தமான பதவியொன்றைத் தருவதாக மகிந்த றாஜபக்ச உறுதியளித்துள்ளதாக சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றப் போவதாக கருணா உறுதியளித்திருக்கிறார். ஜனாதிபதி தன்மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அதற்கேற்ப தான் தேர்தலில் பணியாற்றப் போவதாகவும் செய்தியாளர்களிடம் பேசிய கருணா தெரிவித்தார். SOURCE: http://www.eelamweb.com
-
- 22 replies
- 2.4k views
-
-
அம்பாறையில் பஸ்சில் குண்டுவெடிப்பு என்றும், 12 பேர் பலியாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 7 replies
- 2.4k views
-
-
போர் வலுச் சமநிலை குழம்பியதால் வந்த வினை 16.01.2008 இன்றுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாகச் செயலிழக்க இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நான்காம் ஈழ யுத்தம் மும்முரமாகக் கட்டவிழப் போகின்றது. அதன் கோரமும், அகோரமும் எப்படி அமையும் என்பதை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கின்றது. இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்திலேயே, இவ்வாறு அதை முறிக்கும் நிலை வரலாம் என்று கருதப்பட்டதாலேயே, யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் பற்றிய வழிமுறையையும் அதில் குறிப்பிட்டிருந்தனர். அந்த யுத்த நிறுத்த உடன்பாடு நின்று, நிலைத்துத் தாக்குப் பிடிப்பதற்கான அடிப்படை விவகாரம் ஒன்று குறித்து, அந்த உடன்பாடு செய்யப்பட்ட கால…
-
- 0 replies
- 2.4k views
-
-
சீமான் நேர்காணல் Jeya TV 19/12/2010 Part 1 http://www.youtube.com/watch?v=3apM2u8niYM Part 2 http://www.youtube.com/watch?v=GmIDsmWVrO4
-
- 6 replies
- 2.4k views
-
-
யாழ்ப்பாணம், சர்வதேச விமான நிலையம் ஊடாக... ஜூலை 1 ஆம் திகதி முதல், விமான சேவை ஆரம்பம். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் எதிர்வரும் ஜூலை 1ம் திகதி மீளவும் ஆரம்பமாகவுள்ளது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் முன்னதாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, விமான நிலையத்தை பார்வையிட்டார். இதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறினார். மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் விமானங்கள் வருகை தரும் என எதிர்பார்ப்பதாகவும் அதனூடாக புலம்பெயர் தமிழர்கள் தமது தாயகத்திற்கு திரும்ப முடியும் என்றும் கூறினார…
-
- 30 replies
- 2.4k views
- 1 follower
-