Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலண்டன் குயின் மேரீஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த வியாழன் (17.12.09) இனப்படுகொலைக் கெதிரான வாக்குக் கணிப்பு ஒன்று இடம் பெற்றது. சர்வதேச மன்னிப்புச் சபையின் மாணவர் குழுவும் (Amnesty International Student Groups) தமிழர் இனப்படுகொலைக் கெதிரான மாணவர் அமைப்பும் SAGT (Student Against Genocide of Tamil) இணைந்து இலண்டன் குயின் மேரிஸ் பல்கலைக்கழக அனைத்து மாணவர் அமைப்பின் ஆதரவுடன் கடந்த 17 ஆம் திகதி சில கோரிக்கைகளின் அடிப்படையில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார்கள். அதேவேளை மாணவர் சமூகத்தினதும், பல்கலைக்கழக நிர்வாகத்தினதும் வாக்குறுதிகளுக்கு அமைய கையெழுத்துப் போராட்டமும் நடைபெற்றது. அதன் அடிப்படையிலேயே கருத்துக் கணிப்பு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 1…

    • 0 replies
    • 604 views
  2. யாழ். நில­வ­ரம் குறித்து மைத்­தி­ரி­யு­டன் பேச்சு விரை­வில் நடத்­தும் கூட்­ட­மைப்பு யாழ்ப்­பா­ணத்­தின் தற்­போ­தைய குள­று­ப­டிச் சூழல் குறித்­து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேரில் சந்­தித்து தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அவ­சர – அவ­சிய பேச்சு நடத்­த­வுள்­ளது. இதற்­கான நேரத்தை ஒதுக்­கித்­த­ரு­மாறு கூட்­ட­மைப்பு கேட்­டுள்­ளது. எதிர்­வ­ரும் திங்­கட் கிழ­மைக்­குப் பின்­னர் ஓரிரு தினங்­க­ளுக்­குள் இந்­தச் சந்­திப்பு நடை­பெ­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த ஒரு மாத காலத்­தி­னுள் பல்­வேறு அசம்­பா­வி­தங்­கள் இடம்­பெற்­றுள்­ளன. பொலி­ஸார் சுட்டு ஒரு­வர் இறந்­தார். அதே­போன்று ஒரு­வர் சுட்டு பொலிஸ…

    • 1 reply
    • 241 views
  3. முஸ்லிம் மாணவிகள் முகத்தை மூடும் வகையில் நிகாப் அணிவதை மொறட்டுவ பல்கலைக்கழகம் தடை செய்துள்ளது. எனினும் உடலின் ஏனைய பகுதிகளை முழுமையாக மறைப்பதில் ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மறைப்பதனை மட்டும் அனுமதிக்க முடியாது என பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ஏ.கே.டப்ளியூ. ஜெயவர்தன தெரிவித்துள்ளார். முதன் முறையாக இரண்டு முஸ்லிம் மாணவிகள் கண்கள் மட்டும் தெரியும் வகையில் முகத்தை மூடிக்கொள்ள அனுமதி கோரியிருந்தனர். எனினும் பாதுகாப்பு விடயங்கள் இருப்பதால் அதற்கு அனுமதி வழங்க முடியாது என மாணவிகளுக்கு அறிவிக்கப்பட்டது. முகத்தை மூடிக் கொண்டு குற்றவாளிகள் பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்கக் கூடும் என்பதால் அதற்கு அதற்கு அனுமதி மற…

    • 32 replies
    • 2.4k views
  4. அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம்! தெற்காசிய பிராந்தியத்திலேயே அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. 2021 நவம்பரில் 9.9% ஆக இருந்த நாட்டின் பணவீக்க விகிதம் 2021 டிசம்பரில் 12.1% ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச நாடுகளின் பணவீக்க விகிதத்தில் இலங்கை 20ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1259491

  5. புதுக்குடியிருப்பு கிழக்கு, முள்ளைவாய்க்கால் பகுதி்யில் எடுக்கப்பட்ட M16-A2 எறிகுண்டு செலுத்தி எம் தர இயந்திர துப்பாக்கி மற்றும் 125தற்கொலை அங்கிகள் உட்பட அனைத்தையும் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் தனிப்பட்ட பாஅனைக்கு உபயோகிக்கப்பட்ட ஆயுதங்கள் என இலங்கை அரசு கூறியுள்ளது. இது ஓர் தேர்தல் பிரச்சாரத்திற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே ஆகும். உண்மையில் இந்த வெடிப்பொருட்கள் ஆயுதங்கள் இயக்கத்தில் கொமாண்டோ தாக்குதல், குறுந்தூர தாக்குதல்கள், ஆகியவற்றுக்கு பாவிக்கப்படுவது வழமை. ஆனால் இதனை தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட ஆயுதம் என கூறி தேர்தல் ஆதாயம் பெற மஹிந்த அரசு முற்படுகின்றது. தவிர வவுனியாவில் கண்காட்சி நடத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த ஆயுத மீட்பு தொடர்பாக கிளிநொச்சி பொலி…

  6. இந்த உலகில் வேறெங்கிலும் காணமுடியாத ஒப்பற்ற தமிழீழத் தேசியத் தலைவன் பிரபாகரனின் வீரம் செறிந்த போராட்டத்தின் விளைவை நீந்திக்கடந்த நெருப்பாறு நாவல் பதிவாக்கியிருக்கின்றது. இது வெறும் நாவலாக மட்டும் நின்றுவிடவில்லை. இது ஈழ விடுதலைக்கான படைக்கருவி என்று மறுமலர்ச்சி திராவிடர் கழகப் பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்லீடர் இணையக் குழுமத்தின் வெளியீடான, நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல், சென்னையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலர் வைகோ அவர்களினால் வெளியிட்டுவைக்கப்பட்டது. தமிழக மக்கள், ஈழ உணர்வாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், இளைஞர்கள், மாணவர்கள் உட்பட்ட நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் நீந்திக்கடந்த நெருப்பாறு நாவல் தொடர்பில், சிற…

  7. நல்லூரில் மணற்சிற்பம்:- யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவம் இடம்பெற்று வரும் நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவரால் ஆலய சூழலில் செய்யப்பட்ட மணற்சிற்பம். இந்த மாணவர் உற்சவகாலத்தில் தினமும் இவ்வாறு மணற்சிற்பங்களை வடிவமைத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/36785

  8. எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று வவுனியாவில் பெரும் பணச்செலவில் “கோலாகலமாக’ தேர்தல் பொங்கலை நடத்துவதற்கு மகிந்த அரசு ஆயத்தங்களைச் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் வவுனியாவிலுள்ள மக்களையும் நலன்புரி நிலையங்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களையும் திரட்டி தமிழ் மக்களின் ஆதரவு தம் பக்கமே உள்ளது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு மகிந்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் பிரமாண்டமாக நடத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பொங்கல் தேர்தல் சட்டத்திற்கு முரணானதாக இருப்பதால் இதனைத் தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையாளர் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. மூலம்: http://seithi1.blogspot.com/2010/01/blog-post_8529.html

  9. 3 நாட்களில் 100 இலட்சத்திற்கு மேல் வருமானம் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அத்துகல்புர நுழைவு) திறந்து வைக்கப்பட்ட முதல் மூன்று நாட்களில் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதியில் 50,000 வாகனங்கள் பயணித்துள்ளதோடு 100 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். 15-01-2022 சனிக்கிழமை அன்று மீரிகமவில் இருந்து குருநாகல் வரையான பகுதி திறந்து வைக்கப்பட்டதையடுத்து, முதல் 12 மணித்தியாலங்களுக்குள் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை 16-01-2022 மதியம் 12.00 மணிக்குப் பிறகு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. …

    • 0 replies
    • 235 views
  10. ஞானசார தேரருக்கு இந்த நாட்டில் விஷேட சட்டம் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில், ஞானசார தேரர் நீதிமன்ற அனுமதியின்றி ஜப்பான் சென்றுள்ளமை தொடர்பில் பிரமுகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் போது, “கூட்டு எதிரணியினர் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் ஆயிரம் முறை நீதிமன்றத்திற்கு ஏறி இறங்க வேண்டும், ஆனால் ஞானசார தேரருக்கு இந்த நாட்டில் விஷேட சட்டம் உள்ளது. இந்த அரசாங்கத்தில் ஞானசார தேரருக்கு இராஜதந்திர அந்தஸ்து பெற்றுக் கொடுத்துள்ளதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவும் அங்கு விசனம் வெளியிட்டுள்ள…

  11. எனது உயிருக்கு எதும் நடந்தால் திலீபன் எம்.பியே பொறுப்பு – பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்!

    • 0 replies
    • 246 views
  12. தமிழர்களை வீழ்த்தி அந்த வெற்றிக்கு காரணமானவர்கள் எண்று தங்களுக்குள் போட்டி போடும் இருவேட்ப்பாளர்களும் இண்று தமிழர்களின் வாக்குக்காக அலைபாய்கிறார்கள்.... இவர்களுக்கு தமிழர்களின் வாக்கு கட்டாயம் போடப்பட வேண்டுமா...?? Should Tamils vote for the General who crushed them? By Dean Nelson Last updated: January 14th, 2010 26 Comments Comment on this article Sarath Fonseka with LTTE(2) Who should Sri Lanka’s blighted Tamils vote for in this month’s presidential election – the politician who ordered a final offensive against their last stronghold or the general who called the shots? There are other candidates, but only two stand a chance o…

    • 6 replies
    • 936 views
  13. இலங்கையிலிருந்து ஆண்கள் வெளிநாடுகளில் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை வெளிநாட்டு வேலை வாயப்பு வாரியத்தினால் வட்டியின்றி கடன் வழங்கும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு வாரியம் அறிவித்துள்ளது. ஜனவரி முதல் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்கள் வெளிநாடுகளுக்கு வீட்டுவேலைக்கு பணிப்பெண்களாக செல்வதை குறைப்பதும், அதற்கு மாறாக ஆண் பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை ஊக்குவிப்பதும் என்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது. இலங்கையில் பெண்கள் வெளிநாடுகளுக்கு பணிப் பெண் வேலைக்காக செல்லும் போது சகல செலவுகளும் அவர்களின் வெளிநாட்டு எஜமானர்களால் பொறுப்பேற்கப்படு…

  14. இந்த வருடத்திற்குள் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 300 ரூபாவாக அதிகரிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கும் அபாயம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட முன்னாள் பிரதமர், தற்போது சந்தையில் டொலரின் உண்மையான பெறுமதி 250 ரூபாவிற்கும் அதிகமாக உள்ளதாக தெரிவித்தார். அவரது அறிக்கையில், பொருளாதாரம் இன்னும் சீரழிந்து வருகிறது. டொலர் பற்றாக்குறை தீர்க்கப்படவில்லை. ரூபாய் பற்றாக்குறை இன்னும் தீர்க்கப்படவில்லை. இன்று ரூபாயின் உண்மையான மதிப்பு டொலருக்கு ரூ.250 இதிலும் அதிகம்.. இதன் மூலம் ரூ. 275 வரையும் உயரும். அதோடு நிறுத்தவில்லை என்றால், அது ஆண்டு இறு…

  15. கைது செய்யப்பட்டுள்ள சரத் பொன்சேக்கா அவர் இழைத்துள்ள இராணுவக் குற்றங்களுக்காக இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என தேசிய பாதுகாபபிற்கான ஆணயகத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹ_லுகல்ல தெரிவித்தார். இராணுவ ரகசியங்களை வெளியிட்டது மற்றும் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://www.eelamweb.com/

    • 1 reply
    • 1.1k views
  16. பிரதமர் போதைப் பொருள் இறக்குமதி செய்கின்றார், காவல்துறைப் பொறுப்பதிகாரி விநியோகம் செய்கின்றார். பிரதமர் டி.எம். ஜயரட்ன போதைப் பொருள் இறக்குமதி செய்வதாவும், காவல்துறை பொறுப்பதிகாரி போதைப் பொருள் விநியோகம் செய்து வருவதாகவும் ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. பிரதமரின் ஒத்துழைப்புடன் கொள்கலனின் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானிய போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் இணைந்து இந்தப் போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். தெரிந்தோ தெரியாமலோ குற்றச் செயலில் தொடர்புபட்டிருப்பதனால் பிரதமர் பதவியை விலக வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் குற்றத்தை ஒப்புக்கொண்டு ம…

  17. மட்டக்களப்பு திகிலிவெட்டை பகுதியில் சிறுமி மீது ஸ்ரீலங்கா இராணுவ சிப்பாய்கள் பாலியல் வன்முறை (செவ்வாய், பிப்ரவரி 16, 2010 12:40 | தமிழ்மணி. மட்டக்களப்பு) மட்டக்களபபில் நான்காம் வகுப்பில் கல்வி கற்கும் சிறுமி மீது ஸ்ரீலங்கா இராணுவ சிப்பாய்கள் பாலியல் வன்முறை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டிக்கு அருகில் உள்ள திகிலிவெட்டை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் குறிப்பிட்ட சிறுமியை வழிமறித்த படையினர் அந்த சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளனர். படையினரின் இந்த மிலேச்சத்தனமான நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சிறுமி சித்தாண்டி வைத்திய சாலையில…

    • 3 replies
    • 1k views
  18. அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை விரைவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான இடைக்கால அறிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி வெளியாகும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களாக புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை வெளியாகும் என அவர் குறிப்பிட்டார். இந்த இடைக்கால …

  19. 'இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே? விரைந்து நீதி வழங்குங்கள்': ஐ.நா. மனித உரிமை ஆணையர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES முக்கிய அரசு நிறுவனங்களில் இன-மத தேசியவாதம் மேலும் வெளிப்படையாக தெரிகிறது; இதனால், சிறுபான்மை இனத்தவர் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவதும், அஞ்சுவதும் அதிகரித்து, நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்துள்ளார் ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையர் மிச்சல் பேச்சலெட். ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 49 வது கூட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று வெள்ளிக்கிழமை (2022 மார்ச் 4) நடைபெற்ற 'இலங்கை குறித்த பங்கேற்பு உரையாடல்' என்ற …

  20. வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் கால எல்லைகளை நிர்ணயிக்க முடியாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக நலன்புரி நிலைய மக்களை மீள் குடியேற்றுவதாக இந்தியாவிலடம் இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மீள் குடியேற்ற துறை அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது மீள் குடியேற்றம் தொடர்பில் காலக்கெடு எதனையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று கூறினார். முகாம்களில் உள்ள மக்களை விரைவில் மீள் குடியேற்ற வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் எனினும் அதற்கான கால எல்லைகளை நிர்ணயிக்க முடியாது என்றும் அவர் குறிப…

  21. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசு உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் என சிறிலங்காவிலுள்ள அமெரிக்க தூதரகம் நேற்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. மற்றும் சமாதான, சகவாழ்வுக்கும் உடன்பாடுகள் எட்டப்படல் அவசியமென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது... மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்றினை நடத்திக் குற்றாவாளிகளைத் தண்டிக்க வேண்டும். இவ்வாறானதொரு விசாரணையை அமெரிக்கா ஊக்கவிக்க பின்னிற்கமாட்டாது. போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்க தூதர் ஸ்டீபன் ராப், தனது சிறிலங்கா விஜயத்தின் போது யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்ட மீறல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களுடனான…

  22. வடக்கு, கிழக்கு மக்களுக்கு சுமார் 1,20,000 வீடுகள் தேவை: மீள்குடியேற்ற அமைச்சு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு சுமார் 1,20,000 வீடுகள் தேவை என மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களுக்கும் சுமார் 16,000 நிரந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 1,20,000 நிரந்தர வீடுகள் தேவை எனவும் மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நிரந்த வீடுகளை வழங்கும் பொருட்டு 65,000 பொருத்து வீடுகள் வடக்கு, கிழக்கில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 6000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. சுமார் 60,000 பேர் பொருத்து வீடுகள…

  23. நாட்டைக் சிறப்பாக வைத்திருக்கும் சக்தி... மஹிந்த குடும்பத்திற்கு, மாத்திரமே உள்ளது – ப.சந்திரகுமார் நாட்டைக் கொண்டு நடத்தக்கூடிய சக்தி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்கு மாத்திரமே உள்ளது என பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார். பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதிக்கான இளைஞர் மாநாடு பெரியபோரதீவிலுள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு தலைமையுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கை மக்கள் எதுவித வேறுபாடுகளுமின்றி எமது அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வருகின்றது. கிழக்கு மா…

  24. ஆளும்தரப்பிலிருந்து முதன் முதலாக ஒருவர் இன்று எதிரணிக்கு தாவல்! விரைவில் தேர்தல் ஒன்று நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆளும்தரப்பிலிருந்து பலர் எதிரணிக்கு தாவ உள்ளதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் அண்மையில் கிறிஸ்தவ மத மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பதவியிலிருந்து கவிழ்க்கப்பட்ட அருந்திக பெர்னாண்டோ இன்று எதிரணியில் சென்று அமர்ந்துள்ளார். http://www.virakesari.lk/article/24632

  25. வெளி நாடுகளில் வதியும் இலங்கை ஊடகவியலாளர்கள் நாடு திரும்பலாம் - சட்ட மா அதிபர் கொழும்பு நிருபர் வியாழக்கிழமை, மார்ச் 11, 2010 வெளி நாட்டில் இருக்கும் இலங்கை ஊடகவியாலாளர்கள் இலங்கை திரும்புவதற்கு பாதுகாப்பு வழங்கப்படும் என சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். வெளி நாடுகளில் பல ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வதிகின்றனர். அவர்கள் இலங்கை திரும்புவதாயின் போதிய பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படும் என கூறியுள்ளார் மொஹான் பீரிஸ். அமெரிக்க ஊடகவியலாளர் பாது காப்பு அமைப்பு அண்மையில் பீரிஸ் அவர்களை சந்தித்தபோதே இந்த உத்தரவாதத்தினை வழங்கியுள்ளார். வெளி நாடுகளில் இலங்கை உடகபியலாளர்கள் இருந்து கொண்டு அரசாங்கத்தினை தாக்குவதில் பிரயோசனம் இல்லை. அவர்கள் இங்கு…

    • 1 reply
    • 490 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.