ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவிற்கு ஆதரவளிக்கப் போவதாக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அமைச்சர் பதியூதீன் உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அமுல்படுத்தப்பட வேண்டிய பரிந்துரைகள் சிலவற்றை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் யோசனைத் திட்டமாக முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, மதச் சுதந்திரத்தை உறுதி செய்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார். இலங்கையின் அனைத்து தரப்பினரும் தமக்கு விரும்பிய மத வழிபாடுகளில் ஈடுபட …
-
- 2 replies
- 625 views
-
-
வடக்கில்- 2 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள்!! வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வெற்றிடங்கள் இருக்கின்றன. ஆண்டிறுதிக்குள் ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார் கள். கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் என்று முக்கிய பாடங்களுக்குத் தகுதியான ஆசிரியர்கள் இங்கு இல்லை. இவ்வாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், சில இடங்களில் கூடுதலான ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். சில இடங்களில் …
-
- 6 replies
- 508 views
-
-
இலங்கை 6.5 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கையிருப்பாக வைத்திருக்க வேண்டும் என நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்த ஆண்டு நிதி நெருக்கடியின் உச்சக்கட்டத்தின் போது, இலங்கையின் கையிருப்பு சில நாட்களில் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாக இருந்தது மற்றும் எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நிதியை விடுவிக்க மத்திய வங்கி போராடியது. எவ்வாறாயினும், கடந்த சில மாதங்களில், நிலைமை கணிசமான அளவில் மேம்பட்டுள்ளதுடன், மார்ச் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்கள் 2.7 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு மா…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
சிறிலங்காவுக்கு மேலும் சில போர்க்கப்பல்களை சீனா வழங்க வாய்ப்பு சிறிலங்காவுக்கு மேலும் சில போர்க்கப்பல்களை சீனா வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று பீஜிங்கை தளமாக கொண்ட இராணுவ ஆய்வாளரான ஷோ சென்மிங் தெரிவித்துள்ளார். சிறிலங்கா கடற்படைக்கு, சீனா போர்க்கப்பல் ஒன்றைக் கொடையாக வழங்கவுள்ளது என்று அண்மையில் கொழும்பில் நடந்த சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆண்டு விழாவில், சீன பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சூ ஜியான்வேய் தெரிவித்திருந்தார். இது குறித்து சீன ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள பீஜிங்கை தளமாக கொண்ட இராணுவ ஆய்வாளரான ஷோ சென்மிங், ” மேலும் ஒன்று அல்லது இரண்டு போர்க்கப்பல்களை சிறிலங்காவுக்கு சீனா வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. சிற…
-
- 0 replies
- 279 views
-
-
Published By: VISHNU 21 APR, 2023 | 05:39 PM (எம்.மனோசித்ரா) வருடத்திற்கு 12 இலட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானத்தைப் பெருபவர்கள் வருமான வரியை செலுத்துவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தேசிய வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய தேசிய வருமான வரி திணைக்களத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பதிவுப் பிரிவிற்கு நேரடியாக வருகை தந்து அல்லது இணையதளத்தின் ஊடாக தமது ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. www.ird.gov.lk என்ற இணைய தளத்திற்குள் பிரவேசித்து ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மாவட்ட தேசிய வருமான வரி திணைக்களத்தின் கிளைகளிலும் இவற்றை கையளிக்க …
-
- 0 replies
- 483 views
- 1 follower
-
-
நாங்கள் அரசாங்கத்தைவிட்டு வெளியில் வந்தவுடன் எங்களுக்கு அரசாங்க தரப்பில் இருந்து தொடர்ச்சியான அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. எவ்வளவு அச்சுறுத்தல் வந்தாலும் நாங்கள் எந்த காரணம் கொண்டும் மீண்டும் அரசாங்கத்தில் இணைய மாட்டோம் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களை தெளிவுபடுத்தும் கூட்டம் நுவரெலியாவில் அமைந்துள்ள காரியாலயத்தில் புதன்கிழமை (17) நடைபெற்றது. அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நான் அரசாங்கத்தில் இருந்து வெளியில் வந்தமைக்கு முக்கிய காரணம் எமது பெருந்தோட்ட மக்களுக்கு வீடமைப்பு தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாமையே ஆகும். அரசாங்கத்தை விட்டு வெளியில் வந்த பி…
-
- 0 replies
- 380 views
-
-
வாள்வெட்டுக் குழுவுக்கு ஆதரவு? – சயந்தனின் முயற்சி தோல்வி!! சாவகச்சேரியில் நேற்றுமுன் தினம் கைது செய்யப்பட்ட 7 இளைஞர்களையும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று நேற்று உத்தரவிட்டது. மானிப்பாய் பொலிஸார் 7 இளைஞர்களை நேற்றுமுன்தினம் கைது செய்திருந்தனர். அவர்களிடமிருந்து 2 வாள்கள், ஒரு கோடாரி, ஒரு கைக் கோடாரி, செயின், இரும்புப் பைப், 3 உந்துருளிகளை மீட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர். மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்றுக் காலை தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டனர்.சட…
-
- 2 replies
- 717 views
-
-
Published By: NANTHINI 30 APR, 2023 | 03:51 PM அமெரிக்காவின் ஸ்ட்ராட்ஃபோர்ட் நகரில் மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வந்த இலங்கை மருத்துவர் ஒருவர், சுகாதார சேவைகளை வழங்குவதாக தெரிவித்து அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து சுமார் 840,000 அமெரிக்க டொலர்களை பெற்று, மோசடி செய்த குற்றத்துக்காக அவருக்கு பிரிட்ஜ்போர்ட் நீதிமன்றமொன்று நான்கு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த குறித்த மருத்துவர் கடந்த நவம்பரில் மோசடி குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் தண்டனை நிலுவையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். மெடிகெயார் என்ற மருத்துவ கிளினிக்கின் உரிமையாளரும் தலைவருமான இவர், தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மன…
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
பெருமிதப்பட வேண்டிய தமிழீழப் பெண்கள் தமிழ்த்தேச விடுதலையின் முக்கியமான ஒரு கால கட்டத்தில் நிற்கின்றோம். இந்தக் கால கட்டத்தில் தமிழீழப் பெண்களின் எழுச்சி நாள் மற்றும் 2ம் லெப் மாலதி அவர்களின் 19வது ஆண்டு நினைவு நாளையும் நினைவு கூறும் இத்தருணத்தில் தமிழீழப் பெண்கள் தீர்க்கமான சில வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டியது காலத்திற்கு அவசியமானது. ஈழத்தமிழர் வரலாறு வீரவரலாறாகப் படைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த வரலாற்றில் தமிழீழப் பெண்களின் வீரமும், தியாகமும், பங்களிப்பும் பெருமைப்பட வேண்டிய விடயம். அந்தப் பெருமைக்கு வழிகாட்டியாக அடிமை விலங்குகளால் கட்டுண்டு கிடந்த பெண்கள் சமூகத்துக்கு சமத்துவ நிலை வழங்கிய பெருமை தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களைச்…
-
- 0 replies
- 2.3k views
-
-
யாழில் அதிசயம்! சிவப்பு நிறமாக மாறியுள்ள வடமராட்சி வடக்கு கடல் நீர் வியாழன், 12 மே 2011 14:18 யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பிரதேச கடல் நீர் சிவப்பு நிறமாக காட்சியளிப்பதாக தெரியவந்துள்ளது. இதனை யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க தலைவர் திரு எஸ். தவரட்ணம் உறுதிப்படுத்தியுள்ளார். வடமராட்சி வடக்கு கடற்கரையிலிருந்து 10 கிலோமீற்றர் தூரத்துக்கு இந்த சிவப்பு நிற நீர் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தை அறிவதற்காக தற்போது அந்தக் கடற்பரப்பில் உள்ள நீர் எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகஅவர் மேலும் தெரிவித்தார். ஆய்வின் முடிவில் அதற்கான காரணத்தை கண்டறிந்து விடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். tamilenn
-
- 3 replies
- 2.6k views
-
-
பதவி துறக்குமாறு- வடக்கு முதல்வருக்கு அழுத்தம்!! வடக்கு மாகாண அமைச்சரவையில் நெருக்கடி ஏற்பட் டுள்ள நிலையில் அதனை முன்னி றுத்தி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பதவி துறக்குமாறு அவருக்கு ஆலோசனை வழங்கும் நெருக் கமான சில தரப்புக்கள் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்துள்ள தாக அறியமுடிகின்றது. இதனூடாக மக்களின் அனுதாபங் களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அந்தத் தரப்புக்கள் முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குச் சுட்டிக் காட்டியுள்ளபோதும், அந்த யோசனையை இதுவரையில் முதல மைச்சர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது. மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங் கிய தீர்ப்பால் வடக்கு மாகாண அமைச்சரவை மறுசீரமைக்க வேண் டிய நிலைக்குத் தள்ளப்…
-
- 2 replies
- 554 views
-
-
உண்மைகளைப் பேசாமல் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது! - groundviews போர் முடிவுற்று இரு ஆண்டுகள் கழிந்த பின்னரும் தமிழ் மக்கள் தற்போதும் சந்தேகக் கண்ணோடு நோக்கப்படுவதும், பயங்கரவாதிகள் போன்று நடத்தப்படுவதும் நீடித்து வருவதாக groundviews எனும் இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந் நிலை மாறி தமிழ் மக்களும் கௌரவமாக நடத்தப்பட்டாலேயே இலங்கையில் உண்மையானதும், நிலையானதுமான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என இந்த இணையத்தளம் வலியுறுத்தியுள்ளது. இவ் விடயம் குறித்து இந்த இணையத்தளம் தெரிவித்துள்ள முக்கிய பகுதிகளை இங்கே தொகுத்துத் தருகின்றோம். 'தென்னாபிரிக்காவில் உருவாக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு போல் சிறிலங்கா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்…
-
- 1 reply
- 723 views
-
-
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரவூப் ஹக்கீம் உட்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இன்று காலை அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருப்பதாகவும் தெரிய வருகின்றது. இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து இன்று மாலை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. http://onlineuthayan.com/News_More.php?id=524923756627406550
-
- 3 replies
- 726 views
-
-
சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த ஐவர் கைது கிளிநொச்சி - இரணைமடு குளத்தில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய தங்கூசி வலைகளும் மீட்கப்பட்டுள்ளது. நாட்டில் தங்கூசி வலைகளின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு சட்டத்திற்கு விரோதமான முறையில் இரணைமடு குளத்தில் தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுவந்த ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் பயன்படுத்திய 30 வலைகளும், குறித்த நபர்களையும் கிளிநொச்சி நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக இரணைமடு நன்னீர் மீன்னவர்கள் தெரிவித்தனர். குறித்த குளத்தில் மீன்பிடி இன்மையால் தாம் பாதிக்க…
-
- 0 replies
- 306 views
-
-
உறுதியை இழந்துவரும் மகிந்தா அரசு: கொழும்பு ஊடகம் Posted by இரும்பொறை on 23/05/2011 in செய்தி | 0 Comment மகிந்தா அரசு அனைத்துலக மட்டத்தில் மட்டும் உறுதியற்ற நிலையை அடையவில்லை, அரசுக்குள்ளேயும் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐ.நா அறிக்கைக்கு எதிராக இந்தியாவை திருப்பும் சிறீலங்கா அரசின் முயற்சிகள் மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றமே அதற்கு காரணம். முத்துவேல் கருணாநிதியின் ஆட்சி தூக்கியெறியப்பட்டுள்ளதால் மட்டும் தி.மு.க பின்னடைவைச் சந்திக்கவில்லை, இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பிலும் அது விசனம் அடைந்துள்ளது. ஊழல் வழக்கு தொடர்பில் …
-
- 0 replies
- 1.3k views
-
-
முன்னிலை சோஷலிச கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் குமார் குணரட்னம் இன்று வியாழக்கிழமை காலை இலங்கைக்கு திரும்பியுள்ளதாக அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. - http://www.tamilmirror.lk/136807#sthash.zNhLItv3.dpuf
-
- 7 replies
- 897 views
-
-
Posted by இரும்பொறை on 27/05/2011 in செய்தி | 0 Comment இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையில் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கக் கூடிய ஒரே நபர் நான். இந்த விடயத்தில் ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் இறுதியில் இராணுவத்தினரைக் காட்டிக்கொடுப்பது நிச்சயம் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார். வெள்ளைக்கொடி விவகார வழக்கு நேற்று மேல் நீதிமன்றத்தில் நீதியரசர்களான தீபாலி விஜே சுந்தர, எச்.என்.பி.பி. வராவௌ, சர்பிக் ரஷீக் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிரதிவாதி சரத்பொன்சேகா 5ஆவது நாளாகவும் சாட்சியமளித்தார். அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில் கூறியவை வருமாறு:…
-
- 3 replies
- 884 views
- 1 follower
-
-
மைத்திரியின் பரப்புரை மேடை மீது துப்பாக்கிச் சூடு – 3 பேர் காயம் JAN 05, 2015 | 5:13by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இரத்தினபுரியில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை பரப்புரை மேற்கொள்ளவிருந்து மேடை மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மேடை அலங்காரப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள நிவித்திகலவில் இன்று காலை 11 மணியளவில் மைத்திரிபால சிறிசேன பங்கேற்கும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இடம்பெறவிருந்தது. இதற்காக மேடை அமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இன்று அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமுற்ற 3…
-
- 0 replies
- 413 views
-
-
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் 4 கோடி ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட தானியங்கி தடுப்பூசி இயந்திரம் தற்போது செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சையில் வழங்கப்படும் கதிரியக்க SDG மருந்தை உட்செலுத்துவதற்கு, சிகிச்சை சேவைகளை மேற்கொள்ளும் சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தானியங்கி தடுப்பூசி இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த தானியங்கி தடுப்பூசி இயந்திரத்திற்கு பயன்படுத்தப்படும் வடிகுழாய்கள் தீர்ந்து விட்டதன் காரணமாக அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த வடிகுழாய்களை கொள்வனவு செய்ய போதியளவு பணம் இல்லாதமையே இதற்கு பிரதான காரணமாகும் என அரச கதிரியக்க தொழிநுட்ப வ…
-
- 2 replies
- 176 views
- 1 follower
-
-
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டு அமைப்பு கூட்டத்தில் வைகோ ஈழம் தொடர்பாக ஆற்றிய உரை
-
- 1 reply
- 560 views
- 1 follower
-
-
மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிவந்த மற்றுமொரு சுதந்திர கட்சிக் குழுவினர் இன்று காலை ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்தனர். ஜனாதிபதியின் வீட்டிற்கு வருகை தந்த இவர்கள் தங்களது ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்கவுள்ளதாகவும் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் குறிப்பிட்டனர். சுதந்திரக் கட்சி உறுப்பினர்களான சஜித் வாஸ் குணவர்த்தன, டியு குணசேகர, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, உதித் லொக்குபண்டார ஆகியோரே தற்போது ஜனாதிபதியுடன் இணைந்துள்ளனர். ஜனாதிபதியின் இல்லத்திற்கு வருகை தந்த இவர்கள் ஊடகவியலாளர்களை வரவழைத்து தங்களது முடிவுகைள அறிவித்தனர். - See more at: http://www.canadamirror.com/canada/36660.html#sthash.iBmrWY0H.dpuf
-
- 1 reply
- 624 views
-
-
நியூசிலாந்து தமிழ் மருத்துவ சங்கத்தின் முயற்சியினால் நியூசிலாந்து அரசாங்க உபகாரசபை தென் தமிழீழ மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. http://www.tamilnaatham.com/photos/2007/MA...326/NEWZEALAND/
-
- 0 replies
- 758 views
-
-
வாள்முனையில் கொள்ளை – அதிர்ச்சியில் நிதி நிறுவனம்!! யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் சற்றுமுன்னர் பெருமளவு பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. சுமார் 18 லட்சம் ரூபாவுக்கு அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்துள்ளனர். https://newuthayan.com/story/10/வாள்முனையில்-கொள்ளை-அதிர்ச்சியில்-நிதி-நிறுவனம்.html
-
- 1 reply
- 593 views
-
-
விரிவுரையாளரின் இறுதி ஊர்வலத்தில்- பெண்கள் அமைப்பு கவனவீர்ப்பு!! காணாமல் போயிருந்த நிலையில் திருகோணமலை நகர கடலில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் இறுதி ஊர்வலம் வவுனியா கற்குளத்தில் இன்று நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில், கிராமப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனவீர்ப்பும் இடம்பெற்றது. இதில் வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி லிங்கநாதன் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் , திருகோணமலை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் , ஊழியர்கள், மாணவர்கள் , தமிழ் விருட்சம் அமைப்பினர் , வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் , அரச, அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். க…
-
- 2 replies
- 3.7k views
-
-
[Thursday April 05 2007 06:28:56 AM GMT] [யாழ் வாணன்] தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புலி முத்திரை குத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைக்கே ஆப்புவைக்க முயல்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நாம் எந்தவிதமான அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியப் போவதில்லை. எந்தவிதமான விசாரணைகளுக்கும் முகம் கொடுக்கத் தயார். இப்படி அரசுக்கு சவால் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம். நேற்று நாடாளுமன்றம் கூடியபோது சிவாஜிலிங்கம் எம். பி. சிறப்புரிமைப் பிரச் சினை ஒன்றை சபையில் சமர்ப்பித்துப் பேசும்போதே இப்படிக் கூறினார். அவர் தொடர்ந்து பேசும்போது மேலும் கூறியதாவது: நிறைவேற்று அதிகாரங்கள் அனைத்தை யும் தன்கையில் வைத்துக்கொண்டிருக்கும் ஜன…
-
- 1 reply
- 1k views
-