Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மஹிந்தவுடன் இணையுமாறு புலம்பெயர் தமிழர்கள் என்னை வலியுறுத்தினர்: மனோ கணேசன். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையுமாறு புலம்பெயர் தமிழர்கள், என்னை வலியுறுத்தினார்களென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய பிரதமராக மஹிந்த தெரிவு செய்யப்பட்டமை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து இலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர் காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சிறுபான்மையினர் வைத்திருந்த அனைத்து நம்பிக்கைகளையும் அவர் சிதைத்து விட்டார். மேலும் மைத்திரியின் திடீர் அரசியல் நகர்வுகளை நாம் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில…

    • 3 replies
    • 702 views
  2. 11 பதக்கங்களை வென்று யாழ். இந்து மாணவர் சாதனை news வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற தடகளப் போட்டியில் யாழ். இந்துக்கல்லூரி 8 தங்கப்பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம், 2 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் 11 பதக்கங்களை பெற்றுள்ளது. இதில் ஆர்.செந்தூரன் 15 வயது பிரிவு ஆண்களுக்கான உயரம் பாய்தல் நிகழ்வில் தங்கப் பதக்கம் வென்றார். வி.யஸ்மினன் 19 வயது பிரிவு ஆண்களுக்கான நீளம் பாய்தலில் தங்கப் பதக்கத்தை யும் முப்பாய்சலில் வெள்ளிப் பதக்கத்தையும் 19 வயது பிரிவு ஆண்களுக்கான 4*100 மீற்றர் அஞ்சல் ஓட்டத்திலும் 4*400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்திலும் தங்கப்பதக்கத்தையும் பெற்றார். வடமாகாண தடகளப் போட்டியில் 15 வயதுப்பிரிவு ஆண்களுக்கான சிறந்த மைதான நிகழ்வுக்கான வீரராக…

  3. நிராயுதபாணிகளாக விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை போர்க்குற்றம் என்றே கருதப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கம்போடியாவின் பொல்போட் மற்றும் ஈராக், குர்திஷ் மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமை என்பனவும் போர்க்குற்றங்கள். இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இலங்கை படையினர் போர்க்குற்றங்களை செய்யவில்லை. போரின் இறுதிக்கட்டத்தில் துப்பாக்கி முனையில் ஆயிரக்கணக்கான மக்களை பணய கைதிகளாக வைத்திருந்த விடுதலைப் புலிகள் அமைப்பை வி…

    • 9 replies
    • 1.3k views
  4. ஜனாதிபதியின் நடவடிக்கையால் நாடு செயலிழந்துள்ளது என சாடியுள்ள மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகாவான முன்னாள் அமைச்சர் குமார வெல்கம பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறிசேன இலங்கையை உலகநாடுகள் மத்தியில் நகைச்சுவைபொருளாக்கியுள்ளார் என தெரிவித்துள்ள குமார வெல்கம பிரதமர் யார் என்ற விவகாரத்திற்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வை காணவேணடும் என தெரிவித்துள்ளார். எமது நாடு அதளபாதளத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் அரச அலுவலகங்களில் எவரும் பணிபுரியாத நிலை உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். அரச ஊழியர்கள் யார் உண்மையான பிரதமர் என தெரியாமல் தடுமாற்றத்த…

  5. இன்று காலை மீண்டும் உலகின் கவனத்தை ஈர்க்கும் உச்சநீதிமன்றம் நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபரின் உத்தரவு சட்டவிரோதமானது என்றும், பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரியும், தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போது மனுதாரர்கள் தரப்பில் முன்னிலையான சட்டவாளர்கள் தமது வாதங்களை முன்வைத்தனர். எனினும், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய காலஅவகாசம் கோரியதால், இந்த மனுக்கள் மீதான விசாரணையை தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையி்லான மூன்று நீதியரசர்கள் குழு, இன்று காலை 10 மணிவரை ஒத்தி …

  6. Published By: DIGITAL DESK 3 15 SEP, 2023 | 05:19 PM (நா.தனுஜா) தமிழ்மக்கள் செறிந்துவாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இடம்பெற்றுவரும் தீவிர பௌத்தமயமாக்கலை ஆவணப்படுத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தவறியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், அரச கட்டமைப்புக்களின் ஆதரவுடன் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் இத்தகைய நடவடிக்கைகள் இனங்களுக்கு இடையிலான வன்முறையாக நிலைமாற்றமடையக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை தொடர்பான தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், பிரித்தானிய தமிழர் பேரவை,…

  7. பரந்தனில் புலிகளின் குரலின் ஊரெங்கும் ஒலிவெள்ளம் சிறப்பு ஒலிபரப்பு நிகழ்வு [வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 19:30 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] புலிகளின் குரல் நிறுவனத்தின் ஊரெங்கும் ஒலிவெள்ளம் சிறப்பு ஒலிபரப்பு பரந்தனில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. இரண்டாம் நாள் ஒலிபரப்பு இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு தொடங்கியது. நிகழ்வில் பொதுச்சுடரை புலிகளின்குரல் விசுவமடு மன்றத் தலைவர் மு.கந்தசாமி ஏற்ற தமிழீழ தேசியக்கொடியை பரந்தன் பிரதேசப் பொறுப்பாளர் வின்சன் ஏற்றினார். ஈகச்சுடரை போராளி தேவா ஏற்றினார். இன்று இரவு வரை மக்களின் பெரும் பங்களிப்புடன் ஊரெங்கும் ஒலிபரப்பு நடைபெற்றது. மூன்றாவது நாளாக நாளையும்…

  8. அமெரிக்கத் தீர்மானம் ஜனநாயகம் அற்றதாம்! Published on July 22, 2011-9:43 pm இலங்கையின் உள் விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் பிறப்பிக்கும் எந்த உத்தரவும் அமெரிக்காவினால் முன்மொழியப்படும் ஜனநாயகக் கொள்கைகளுக்கு முரணானது என இலங்கை அரசாங்கம் இன்று கூறியுள்ளது. 2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போதான ரத்தக்களறிகள் தொடர்பாக பொறுப்புடைமையை வெளிப்படுத்தத் தவறினால் இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கத்தின் உதவிகளை தடைசெய்யப்பட வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பாக அரசாங்க பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் கருத்து கேட்டபோது, அமெரிக்கா இத்தகைய தடையை கொண்டுவந்தால், அது அவர்கள் போதிக்கும்…

  9. ‘எனக்கு நேரமில்லை’ அரசாங்கத்துக்காகப் பேரம் பேசுவதற்குத் தனக்கு நேரமில்லையென தெரிவித்துள்ள, மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோசித்த ராஜபக்‌ஷ, தன்னை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாமென்றும் கோரியுள்ளார். றக்பி போட்டிகளுக்காக, தான் மிகவும் வேலைப்பளுவுடன் இருப்பதால், பேரம் பேச தனக்கு நேரமில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுங் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யோசித்த ராஜபக்‌ஷவே, அதனை முன்னின்று செயற்படுத்துகின்றார் என, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, தன்னுடைய டுவிட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார். …

  10. கெப்பிட்டிக்கொல்லாவ: ஊர்காவல் படையைச் சேர்ந்தவரின் துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி [வியாழக்கிழமை, 24 மே 2007, 18:54 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] அனுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிக்கொலாவப் பகுதியில் சிங்கள ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் ஒரு குழந்தை, இரு பெண்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. கொல்லப்பட்ட பெண்களில் ஒருவர் தாக்குதல் நடத்திய ஊர்காவல் படையைச் சேர்ந்தவரின் மனைவி ஆவார். துப்பாக்கிச் சூட்டினை நடத்திவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்ற ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். புதினம்

    • 1 reply
    • 1.1k views
  11. சபாநாயகர் மீது நாடாளுமன்றத்துக்குள் அமிலம் வீச சதித்திட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த 16ஆம் நாள் நடந்த குழப்பங்களின் போது, சபாநாயகர் கரு ஜெயசூரிய மீது அமிலம் (அசிட்) வீசுவதற்கு சதித்திட்டம் தீட்டப்படமை தொடர்பாக சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருவதாக, நாடாளுமன்ற உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக சபாநாயகர் தகவல் வெளியிட்டதை அடுத்து, நாடாளுமன்றத்துக்குள் அவர் நுழையும் போது மேலதிகமாக காவல்துறையினரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து, சபாநாயகரிடம் கேள்வி எழுப்பிய போது, விசாரணைகள் நடந்து கொண்டிருப்பதால், கருத்து வெளியிட விரும்பவில்லை என்று கூறியுள்ளார். கடந்த 16ஆம் நாள், நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்க 5 நிமிடங்கள் முன்னதா…

  12. முல்லைத்தீவு நீதிபதியாக இருந்த சரவணராஜா தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடகமொன்றுக்கு தெரிவித்த காணொளி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்த நிலையில் அது தொடர்பாக அவரே தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தி குறிப்பில் - “நீதிபதி சரவணராஜாவிற்கு மொழிப்பிரச்சனை இருந்திருக்கும்” கூறுகின்றார் சி.வி.விக்னேஸ்வரன் மேற்படி தலையங்கத்துடன் வெளியாகியிருக்கும் காணொளி எம் மக்களிடையே என் மீது ஒரு தவறான கருத்தை ஏற்படுத்தியிருப்பதை நான் அவதானிக்கின்றேன். சட்டத்துறை தலைமையதிபதி நீதிபதி சரவணராஜாவை அழைத்து அவரின் தீர்ப்பை மாற்றும்படி கோரியதாக வந்த…

  13. கடந்த தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய போது எழுத்து மூல ஒப்பந்தத்திற்கு மைத்திரி தரப்புச் சம்மதித்திருந்தது, எனினும் அதனை கூட்டமைப்பின் தலைவர் திரு.இரா.சம்பந்தன் அவர்கள் மறுத்திருந்தார். அதன்போது அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட மைத்திரிபாலா சிறிசேனா, சந்திரிகா குமாரதுங்க மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் திரு. இரா. சம்பந்தனின் செயலால் அதிர்ச்சியடைந்தனர். 60 ஆண்டுகள் இங்கே சிங்கள இனம் உங்களை ஏமாற்றிய பின்புமா நீங்கள் ஒரு எழுத்து மூல ஒப்பந்தத்தை தவிர்க்கிறீர்கள் என திரு. இரா. சம்பந்தனை சந்திரிகா குமாரதுங்க வினாவியுள்ளார். இவ்வளவு காலமும் எழுத்தில் போடப்பட்ட எந்த ஒப்பந்தமும் நடக்காதபோது இப்போது மட்டும் ஏன் எழுத்தில் ஒப்பந்தங்கள் தேவை…

  14. Published By: VISHNU 17 OCT, 2023 | 08:20 PM (நா.தனுஜா) இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு 7 தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து கூட்டாக அனுப்பிவைப்பதற்கு உத்தேசித்துள்ள கடிதத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் இன்னமும் பூர்த்திசெய்யப்படவில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமைக்கு அப்பால் அண்மையகாலங்களில் வட, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி அபகரிப்புக்கள், பௌத்த சிங்களமயமாக்கம், இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டு அங்கு பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படல் போன்ற சம்பவங்கள் தமிழ்மக்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்திருக்க…

  15. அனைத்துலக விசாரணை ஒன்றே சிறிலங்கா அரசின் போர்க்குற்ற நடவடிக்கைகளை வெளிக்கொண்டுவரும் ஓர் பொறிமுறையாக இருக்கும் என்பதே அமெரிக்காவின் கருத்து என கூறியுளார் அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர். நேற்றிரவி இந்திய ஊடகமான ஹெட்லைன் ருடே சிறிலங்கா அரசின் போர்க்குற்ற நடவடிக்கைகளை இனவழிப்பு என்ற தலையங்கத்தின் கீழ் ஒளிபரப்பியது. . இதன் போது கருத்து தெரிவித்த இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மார்னர்; போரின் போது சிறிலங்காப்படைகளினால் போர்க் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன என்பது இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுக்குத் தெரியும் என்ற சாரப்படக் கருத்துத் தெரிவித்துள்ளளார். . "போரின் போது இடம்பெற்றதாக எழுப்பப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரசுகூட விசாரண…

  16. யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதிகள் தொடர்­பி­லான விசா­ர­ணையை துரி­தப்­ப­டுத்த விசேட நீதி­மன்­ற­மொன்றை கட்­ட­மைக்கும் ஒழுங்கு முறை அர­சாங்­கத்­திடம் உள்­ளதா என சர்­வ­மத தலை­வர்கள் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் யுத்­த­த்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்டோர் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்தி, இதன்போது குற்­ற­மற்­ற­வர்­களை உடன் விடு­தலை செய்­ய­வேண்டும். மேலும் யுத்­த­தினால் இடம்­பெ­யர்ந்­தோரின் காணிகள் தொடர்­பி­லான சட்­டத்தில் சிக்­கல்கள் இருப்பின் திருத்­தங்­களை மேற்­கொண்­டா­வது உட­…

    • 0 replies
    • 354 views
  17. ரணில் விக்­ர­ம­சிங்க தலைமை அமைச்­ச­ராக செயற்­பட நாடா­ளு­மன்­றத்­தில் அவ­ருக்­குப் பெரும்­பான்மை ஆத­ரவு உண்டு என்­பதை நிரூ­பிக்­கும் நம்­பிக்­கைத் தீர்­மா­னம் ஒன்று 12ஆம் திகதி நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான முன்­ன­றி­வித்­தல் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. இத்­த­கைய நம்­பிக்­கைத் தீர்­மா­னம் ஒன்றை நிறை­வேற்­றி­னால் அத­னைத் தான் ஏற்­றுக்­கொள்­வார் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரி­டம் தெரி­வித்­தி­ருந்­தார். அதை­ய­டுத்து 5ஆம் திக­தி­யான நேற்று அத்­த­கை­ய­தொரு தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­ப­டும் என்று கூறப்­பட்­டது. ஆனால், கூட்­ட­மைப்­பி­ன­ரைச் சந்­தித்த மறு­நாள் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யி­ன­ரைச் சந்­…

  18. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன - இரா.சம்பந்தன் வீரகேசரி நாளேடு கொழும்பிலும் வடக்கு, கிழக்கிலும் அன்றாடம் கொலைகள் இடம்பெறுகின்றன. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவசரகாலச் சட்டம் மக்களின் அதிகாரத்தை இல்லாமல் செய்கின்றது என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் சபையில் குற்றம் சாட்டினார். அரசாங்கம் நேர்மையுடன் செயற்பட்டு இனப் பிரச்சினை தீர்வுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அவர் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய இரா. சம்பந்தன் எம்.பி. கடந்தகால அரசியல் வரலாறுகளை ம…

  19. ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆவணமெதிலும் கைச்சாத்திடவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கை தமிழரசுக்கட்சி- தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய நானும் இணைந்து கைசாத்திட்டதாக தெரிவிக்கும் ஆவணமொன்று வெளியாகியுள்ளது. ஐக்கியதேசிய கட்சி தலைவருடன் இணைந்து நான் அவ்வாறான ஆவணம் எதிலும் கைச்சாத்திடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் அவ்வாறான ஆவணம் போலியானது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/46324

  20. மட்டக்களப்பில் இருவேறு சம்பவங்களில் 5 தமிழ் இளைஞர்கள் சுட்டுப் படுகொலை [செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2007, 19:16 ஈழம்] [சி.கனகரத்தினம்] மட்டக்களப்பில் இருவேறு சம்பவங்களில் 5 தமிழ் இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏறாவூர் சிறிலங்கா காவல்துறை பிரதேசத்துக்குட்பட்ட சித்தாண்டி நாகதம்பிரான் கோவில் வீதியில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.35 மணியளவில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் அப்போது தம்மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்த முற்பட்ட 4 இளைஞர்களை சுட்டுக்கொன்றதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே வந்தாறுமூலை பௌண்டரி வீதியைச் சேர்ந்த எஸ்.மனோகரன் (வயது 22) என்ற இளைஞர் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ள…

  21. பிரசுரித்தவர்: admin August 21, 2011 வயது சிறுமி மதகுருவால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு இலங்கையில் 12 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்துள்ள குற்றச்சாட்டில் அந்நாட்டின் மூத்த பௌத்த மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமல்வெவ ரத்தனசார நாயக்க தேரர் என்ற பௌத்த பிக்குவே சிங்கப்பூரிலிருந்து திரும்பிய போது கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபலமான மிகிந்தலை ரஜமஹா விகாரையின் தலைமை மத குருவான இவரை 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பொலிசார் விடுத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் டிக்கிரி கே.ஜயதிலக்கவிடம் நிராகரித்துவிட்டார். …

  22. சென்னை – கொழும்பு இடையே நான்காவது விமானசேவையை தொடங்குகிறது சிறிலங்கன் எயர்லைன்ஸ் APR 15, 2015 | 2:58by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் சென்னைக்கான விமான சேவைகளை நாளை முதல் அதிகரிக்கவுள்ளது. இதன்படி கொழும்புக்கும் சென்னைக்கும் இடையில் நாளொன்றுக்கு நான்கு விமான சேவைகள் நடத்தப்படவுள்ளன. இதையடுத்து, சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வாராந்த விமான சேவைகளின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் மிகவேகமாக வளர்ச்சி பெற்று வரும் நகரான சென்னை, தமக்கு முக்கியமான ஒரு சந்தை என்று சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் பொதுமுகாமையாளர் சமிந்த பெரேரா தெரிவித்துள்ளார். புதிய விமான சேவையின் மூலம் இரு நாடுக…

    • 0 replies
    • 461 views
  23. வவுனியா – குறிசுட்டகுளத்திலிருந்து நேற்று(14) அடையாளம் தெரியாத சடலமொன்று கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 20 – 25 இற்கு இடைப்பட்ட வயதுடைய பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் சில தினங்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த பெண்ணின் சடலம் நீதவான் விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா – ஈச்சங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். https://thinakkural.lk/article/281313

  24. யாழில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 14 பேர் காயம். யாழ்ப்பாணம், அளவெட்டி பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 14 பேர் காயமடைந்ததுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். அளவெட்டி, அம்பானை பகுதியில் இச்சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் காயமடைந்த 14 பேரும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். குறித்த பகுதியிலுள்ள வெற்றுக்காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த சிலர் அங்கிருந்த பற்றைகளை வெட்டியுள்ளனர். இதன்போது அதிலிருந்த குளவிக் கூடொன்று கலைந்து, துப்பரவு பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் மற்றும் வீதியால் சென்றவர்களை துரத்தி கொட்டியதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். இந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.