Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் போருக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட நிலையில் உடல், உளத் தாக்கங்களுக்கு உட்பட்டு எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்ட பலர் இருக்கின்றனர். இவர்களுக்கான பாரிய திட்டங்களை உரிய ஆராய்வின் பின்னர் நாம் வகுக்காமல் இருப்பதால், தனிமனிதர்கள் மட்டத்தில் அவர்களுக்கு என்ன செய்யலாம் என்று ஆராய்ந்து பார்த்து எமது வடமாகாணசபை பல உதவிகளை செய்து வருகின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி நினைவு நாள் நிகழ்வும் நினைவுப் பேருரையும் நேற்று சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியிலுள்ள வாழ்வகம் நிறுவனத்தின் செல்லா மண்டபத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற…

  2. இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச கண்காணிப்பாளர்களின் ஒத்துழைப்பு அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது. தி ஹிந்து ஊடகத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அளித்த செவ்வி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளின் போது அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். எந்தவொரு நேரத்திலும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்த தயார் என அவர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகளில் சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் பேச்சுவார்த்தையின் வெளிப்ப…

  3. -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்ணொருவர், ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிரசவித்த சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை (11) கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. பிரசவத்தை அடுத்து குழந்தைகளும் தாயும் நலமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/126518-2014-09-12-04-57-44.html

  4. -சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு முள்ளிவாய்கால் உள்ளிட்ட பகுதிகளில் வெடிபொருட்களின் ஆபத்தை பொருட்படுத்தாமல் பெண்களும்இ சிறுவர்களும் இரும்பு பொறுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் வெடிபொருட்கள் அபாயம் என அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் வெடிபொருட்கள் அபாயம் என அறிவித்தல் வைக்கப்பட்டுள்ள நிலையிலும் பொதுமக்கள் அதனை அலட்சியம் செய்து வருகின்றனர். இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபொழுது, வெடிபொருட்கள் அபாயம் உள்ள பகுதிகளுக்குள் பொதுமக்கள் செல்லக்கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெடிபொருட்களின் அபாயம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள், அரசசார்பற்ற நிறுவனங்கள், மாவட்ட செயல…

  5. இலங்கையின் பதிலுக்காக காத்திருப்பதாக மூன் தெரிவிப்பு! இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காக காத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கையுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட போதிலும், அதற்கான பதில் இதுவரையில் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக மனித உரிமை ஆர்வலர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகள் தொடாபிலேயே இவ்வாறு தொடர்பாடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை விவகாரம் பற்றி பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டார்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அடக்குமுறைக்கு உட்பட…

  6. இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச கண்காணிப்பாளர்களின் ஒத்துழைப்பு அவசியம் - TNA:- குளோபல் தமிழ்ச்செய்தியார் - கொழும்பு:- இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச கண்காணிப்பாளர்களின் ஒத்துழைப்பு அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது. தி ஹிந்து ஊடகத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அளித்த செவ்வி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளின் போது அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். எந்தவொரு நேரத்திலும் ஜனா…

  7. ஆயிரக் கணக்காண இசைப் பிரியாக்களுக்காக நாம் பேசுவோம்:-" சுனிலாவுக்கான நிமால்க்காவின் நினைவுப் பேருரை தமிழ் ஆக்கம் - ரஜீபன்:- தங்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்து பேசமுடியாத நிலையில் உள்ள, மௌனமாக்கப்பட்ட ஆயிரக் கணக்கானவர்களுக்காக இசைப்பிரியாவிற்க்கு நிகழ்ந்த கொடுரமான வன்முறை குறித்து நாங்கள் பேசுவோம். ஜனாதிபதியும் அரசியல் தலைவர்களும் அவர்களுடைய குடும்பத்தவர்களும் மனித உரிமைகளையும் மனித உரிமை பாதுகாவலர்களையும் தங்களுடைய இருப்பிற்கும் அதிகாரத்திற்கும் அச்சுறுத்தலாக கருதுகின்றனர். நாங்கள் தனிப்பட்ட மனித உரிமை செயற்பட்டாளர்கள் என்ற வகையிலும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் சமூகம் என்ற அடிப்படையிலும் சுனிலா அபயசேகரவின் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளோம். த…

  8. மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு வயது சிறுமி மூன்று பிள்ளைகளின் தந்தையான அயலவரொருவரால் பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை மாலை மேற்படி சிறுமியின் தந்தையினது பலசரக்குக் கடைக்கு சென்றுள்ள சந்தேக நபர் மழை பெய்வதால் குடையொன்றை கேட்டுள்ளார். இதன்போது அந்தநபருக்கு குடையொன்றை கொடுத்துள்ள சிறுமியின் உறவினர் ஒருவர் சிறுமியையும் கூடவே அனுப்பியதுடன் சந்தேக நபரின் சகோதரியின் வீட்டில் அவரை விட்டுவிட்டு குடையை எடுத்து வருமாறு சிறுமிக்கு அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு இந்நபருடன் சென்ற சிறுமி நெடுநேரம் ஆகியும் வீடு வந்து சேராததால் சிறுமியின் குடும்பத்தினரும், அயலவர்களும் சிறுமியை தேடியுள்ளனர். இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸாருக்கும் அறிவி…

  9. இலங்கை அதிபர் ராஜபக்சே | கோப்புப் படம் இலங்கை மீதான போர்க்குற்ற புகார்களை விசாரிக்க சர்வதேச விசாரணைக் குழுவை அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய ராஜபக்சே, 'நாளை காஷ்மீர் விவகாரத்திலும் சர்வதேச விசாரணை என்றால் அனுமதிப்போமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். போர்க்குற்ற விசாரணை தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில், "எங்கள் அரசு உள்நாட்டு விசாரணைகளை நடத்தி வருகிறது. அதனை சர்வதேசமயமாக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதனை அனுமதித்தால் ஐ.நா. மனித உரிமை ஆணையம் அடுத்த முறை காஷ்மீரில் சர்வதேச விசாரணை தேவை என்று கோரும், அதை அனுமதிப்போமா? இலங்கையாக இருந்தாலும் இந்தியாவாக இருந்தாலும் வெளியிலிருந்து விசாரணையை அனுமதிக்க முடியாது" என்றார். பாலச்சந…

  10. நெடுந்தீவில் இருந்து குதிரைகள் கடத்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் வடக்கு மாகாண சபையினர் இன்று பேச்சுக்களை நடாத்தியுள்ளனர். நெடுந்தீவில் இருந்து யாழ்ப்பாணத்தின் வரலாற்று சிறப்பு மிக்க குதிரைகள் கடற்படையினரால் கடத்தப்படுவதை நிறுத்துவது தொடர்பில் வடக்கு மாகாண கால்நடை அமைச்சர் பொ. ஐங்கரநேசன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் ஆகியோர் நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடினர். நெடுந்தீவில் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குதிரைகள் உள்ளன. இந்த நிலையில் யுத்தம் முடிந்த பின்னர் வன ஜீவராசிகள் திணைக்களம் நெடுந்தீவுக்கு வருகைதந்து குதிரைகளுக்கு சரணாலயம் அமைப்பதற்கு காணி ஒன்றினை வழங்குமாறு காணி அமைச்சர் ஊடாக வடக்கு ம…

  11. இடைநடுவின் நின்று போன தனது மோட்டார் சைக்கிளை வைத்தியர் ஒருவர் வீதியில் வைத்து தீயிட்டு கொளுத்திய சம்பவம் நேற்று மதியம் மல்லாகத்தில் இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழைப் பகுதியில் கடமை புரியும் வைத்தியர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மல்லாகம் சந்திக்கு அண்மையாக சென்று கொண்டிருந்தார். இடைவழியில் அந்த மோட்டார் சைக்கிள் இயங்காமல் நின்றுவிட்டது. அவர் சிறிது தூரம் மோட்டார் சைக்கிளை உருட்டிக் கொண்டு சென்றார். மல்லாகம் சந்திக்கு அண்மையிலுள்ள மில் ஒழுங்கையில் குப்பைக்கு வைத்த தீ எரிந்து கொண்டிருந்தை அவர் அவதானித்துள்ளார். அந்த இடத்தை நோக்கி தனது மோட்டார் சைக்கிளை உருட்டிச் சென்ற அவர், எரிந்து கொண்டிருந்த குப்பைக்கு நடுவில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதைப் பற்றவைத்துள்ளார். இதனை அவதானி…

  12. வடமாகாணத்தில் தனக்குள்ள அதிகாரம் தொடர்பில் வடமாகாண ஆளுனர் G.A சந்திரசிறி இன்று காலை ஊடகவிலாளர்களுக்கு விளக்கமளித்திருந்தார் அதில் மாகாண சபை ஆளுனரை நீக்க வேண்டுமாயின், 1 குறித்த ஆளுனர் அரசியல் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு இருக்க வேண்டும். 2 அரச நிதியை கையாடல் செய்திருக்க வேண்டும். 3 லஞ்சம் ,ஊழல் செய்திருக்க வேண்டும். 4 தான் பினபற்ற வேண்டிய ஒழுக்க நெறிகளை கைவிட்டு இருக்க வேண்டும். அத்தகைய நேரத்திலையே மாகாண சபை அது பற்றி ஜனாதிபதிக்கு அறிவித்து ஆளுனரை நீக்க முடியும். அல்லாமல் வேறு எந்த வகையிலும் ஆளுனரை மாகாண சபையினால் நீக்க முடியாது அதற்குரிய தகுதியோ சட்டமோ இல்லை அதேவேளை மாகாணத்தில் ஆளூனருக்கு உள்ள அதிகாரம் ஆவன , 1 மாகாண சபையை ஆரம்பித்து வைக்க முட…

  13. தமிழர்கள் ஒரு காலத்தில் இருந்தார்கள் என்ற சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது: சி.வி -சுப்பிரமணியம் பாஸ்கரன் வடக்கு, கிழக்கில் சிங்களவர்களை பெருவாரியாக கொண்டுவந்த குடியமர்த்தி, வடக்கு, கிழக்கு பகுதியில் ஒரு காலத்தில் தமிழர்கள் இருந்தார்கள் என்ற நிலை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். வடமாகாண வர்த்தக வாணிப உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் முழங்காவில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் அனுசரணையின் கீழ் முழங்காவில் கிருஷ;ணா நகரில் அமைக்கப்பட்டவுள்ள கோழிக்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல்லை வியாழக்கிழமை (11) நாட்டி உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியதாவது, …

  14. ... 11 செப்டம்பர் 2014 சொன்னதை விக்கியிடம் சொன்னேனே தவிர இதில் எனக்கு விசேட அக்கறை எதுவுமில்லை - மனோ கணேசன் என் தாயாரின் மரண சடங்கில் கலந்துகொள்ள எனது இல்லத்துக்கு வந்த பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச, சி.வீ. விக்னேஸ்வரனுடன் எனக்கு இருப்பதாக அவர் நினைக்கும் நட்பை பயன்படுத்தி தனக்கும், வடமாகாண முதல்வருக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி தரும்படி கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்புக்காக விக்கியின் யாழ்ப்பாண வீட்டுக்கோ அல்லது எனது கொழும்பு வீட்டுக்கோ வரவும் தயார் என்றும் கூறினார். என்னிடம் கோதாபய கூறியதை நான் விக்னேஸ்வரனிடம் தெரிவித்தேன். இதற்கு பிறகு பேசுவதா, இல்லையா என்பதை பற்றி அவர்கள் இருவரும் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். இதில் இதைவிட தலையிட என…

  15. பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் மரணத்திற்க்கு யார் காரணம் என்பது குறித்து இன்னமும் தெரியவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தத் தயார் , அத்துடன் வரும் 2015 ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர் நிராகரிக்க தவறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியப் பிரதமர் சந்தித்தது குறித்து தான் சீற்றமடைந்ததாக வெளியான கருத்துக்களை நிராகரித்துள்ள ஜனாதிபதி, ஜனநாயகத்தில் எவரையும் சந்திப்பதற்கான உரிமையுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத் தொடரின்போது இந்தியப் பிரதமரை தான் சந்திக்க விருப்பம் கொண்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள…

  16. விரிவுரையாளர் - எப்.எச்.ஏ. ஷிப்லி:- சரீஆ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தென் கிழக்குப் பல்கலைக்கழகம் இந்த நாட்டுக்கு மிகவும் பயங்கரமான ஒன்றாகும் என பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி தெரிவித்திருக்கிறார். அதுதவிர இங்குள்ள சகல பீடங்களும் சரீஆ சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே காணப்படுவதாகவும், இங்கு இஸ்லாமிய கற்கைகளுக்கான பிரிவு, இஸ்லாமிய சிந்தனைக்கும், கலாசாரத்துக்குமான பிரிவு, இஸ்லாமிய சரீஆ சட்டப் பிரிவு, இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி முறைமைப் பிரிவு என்ற பெயர்களில் பல்வேறு பீடங்கள் இயங்குவதாகவும் சொல்லியிருக்கிறார். ஊடகவியலாளர் மாநாடொன்றில் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியிருக்கும் இவரைப்பற்றி என்ன சொல்ல ? ஆழமாகவும் நீளமாகவும் தாம் அறி…

  17. 13ஆவது திருத்தம் என்பது இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 13ஆவது திருத்தச் சட்டத்தை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் இந்தத் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வுகாண வேண்டும் என அவர் மேலும் கூறினார். அத்துடன், இலங்கை அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுக்களின் உள்ளடக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் அவர் விளக்கமளித்தார். http://www.intertam.net/2014/09/10092014_10.html - INTERTAM

  18. 13 திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக TNAயுடன் பேச்சுக்களை நடத்த தயாராக இருக்கிராராம் மகிந்த:- 11 செப்டம்பர் 2014 பாலசந்திரனின் மரணத்திற்கு யார் காரணம் என்பது பற்றி விசாரணை - தமிழில் - குளோபல் தமிழ்ச் செய்திகள்:- தமிழ் தேசியகூட்டமைப்புடன் 13 திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுக்களை மேற்கொள்வதற்க்கு தயாராகயிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளை அவர் நிராகரிக்க தவறியுள்ளார். இந்தியாவின் இந்து நாளிதழிற்க்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இந்திய பிரதமர் சந்தித்தது குறித்து தான் சீற்றமடைந்ததாக வெளியான கருத்துக்களையும் நிராகரி…

  19. -கவிதா சுப்ரமணியம் தமிழரசுக்கட்சியின் 15 ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், தேசிய இனப்பிரச்சினைக்கு பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வு காண்பதற்கு அரசாங்கத்துக்கு எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரையிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு காலக்கெடு விதித்துள்ளது. அக்காலப்பகுதிக்குள் தீர்வு கிடைக்காவிடின் மகாத்மா காந்தி வழியில் அஹிம்சை போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழி இல்லை என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் நேற்று புதன்கிழமை (10) கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவ…

  20. இந்திய மீனவர்கள் 51 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது! இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகத் தெரிவித்து 51 இந்திய மீனவர்கள் மன்னார் மற்றும் பருத்தித்துறைக் கடற்பரப்புகளில் வைத்து நேற்று புதன்கிழமை இரவு சிங்களக் கடற்டையினரால் கைதுசெய்யப்பட்டனர். மன்னார் கடற்பரப்பில் 30 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களின் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டன. பருத்தித்துறைக் கடற்பரப்பில் 21 மீனவர்கள் 72 அடி நீளமான பெரிய படகொன்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது கைதுசெய்யப்பட்டனர். இவர்களைக் கடற்படையினர் இன்று விடிகாலை கரைக்குக் கொண்டுவந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் இன்று அந்தந்த மாவட்ட நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படுவர். அதன…

  21. ராஜபக்ஸக்களின் உல்லாசங்களுக்கு புலிகளைக் காட்டி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சூறையாடப்படுகின்றன 11 செப்டம்பர் 2014 வில்பத்து தேசிய பூங்கா பகுதியில் இலங்கை கடற்படை பாரிய சுற்றுலா விடுதியொன்றை அமைக்கும் திட்டமொன்றை முன்னெடுப்பதற்காக 800 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியுள்ளது. வில்பத்து தேசிய பூங்காவின் வடபகுதியில்-முள்ளிக்குளத்திற்க்கு அருகில் உள்ள நிலங்களையே கடற்படையினர் இவ்வாறு கையகப்படுத்தியுள்ளதாக சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட பகுதியில் இரண்டுகிலோமீற்றர் நீள வீதியொன்றை கட்டிமுடித்துள்ள படையினர் பாரிய மதிற்சுவர் ஒன்றையும் அமைத்துவருவதாக தெரிவித்துள்ளனர். இந்த பணிகளுக்காக பெருமளவு சட்டவிரோத மணல் அகல்வு பணிகளும் …

  22. இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ள நிலைப்பாட்டில் சிறிதளவு கூட மாற்றம் ஏற்படவில்லை என இலங்கை அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இருந்து தொலை தூரத்தில் அமெரிக்கா இருப்பதாலும், இலங்கை குறித்த அதிக கவனத்தை அந்த நாட்டு மக்கள் செலுத்தாததாலும் தற்போதும் அவர்களது நிலைப்பாடு மாறவில்லை என ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித ஹோகன்ன தெரிவித்துள்ளார். பத்திரிகைகள் வாயிலாக அறியும் விடயங்களை மட்டும் வைத்துக் கொண்டு இலங்கை குறித்த தமது வெளிப்பாட்டையே அமெரிக்கா கொண்டுள்ளது. இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ள நிலைப்பாட்டில் இன்றுவரை மாற்றம் ஏற்படவில்லை. இதற்கான காரணங்களாக, இலங்கை அமெரிக்காவிலிருந்து வெகுதொலைவில் இருப்பதும், மக்கள் அந்த நாடு குறித்து அதி…

  23. "TNA ஊடாக ஒற்றுமையை வலுப்படுத்துவதன் மூலம் நிச்சயமாக எங்களுடைய இலக்கை அடைவோம்" D. சித்தார்த்தன்:- "தெற்காசியப் பிராந்தியத்தில் மூத்த, சிறந்த, அறிவுபெற்ற ஒரு தலைவராக நீங்கள் திகழ்கின்றீர்கள்" என சம்பந்தர் அண்ணரைப் மோடி விளித்துக் கூறினார். தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மகாநாட்டில் புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் ஆற்றிய உரை- தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தண்ணர் அவர்களே! தமிழரசுக் கட்சியின் தலைவர் சேனாதியண்ணர் அவர்களே!, எங்களுடைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களே! எனது அருமை நண்பர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்களே! மற்றும் ஏனைய கட்சிகளின் தலைவர்களே! இங்கு மிகப் பெருந்திரளாக கலந்து கொண்டிருக்கின்ற தமிழரசுக் கட்சியின் பேராள…

  24. இந்திய மீனவர்கள் சுற்றாடலை சீரழிக்கின்றனர் – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ:- 11 செப்டம்பர் 2014 இந்திய மீனவர்கள் சுற்றாடலை சீரழிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் கடல் வளம் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து மீன் வளங்களையும் இந்திய மீனவர்கள் அழித்து வருவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்று இரண்டு படகுகள் அல்ல நூற்றுக் கணக்கான படகுகள் இவ்வாறு இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையானது எமக்கும்,இந்தியாவிற்கும் சுற்றாடலுக்கும் பாதகமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய…

  25. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோருக்கான வாகனங்களை ஆளுநர் அலுவலத்தில் வைத்து வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி செவ்வாய்க்கிழமை வழங்கினார். வாகனங்களை, முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோரின் செயலாளர்கள் பெற்றுக்கொண்டனர். வடமாகாண சபையால் கடந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 50 மில்லியன் ரூபா நிதி, முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் நான்கு அமைச்சர்களுக்கு வாகனங்கள் வாங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனடிப்படையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, வர்த்தக வாணிப மீன்பிடி அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் ஆகியோருக்கு தலா 7 மில்…

    • 17 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.