Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் கடலுக்கு அடியில் மிகப்பெரிய வெடிப்பு! நிலநடுக்க அபாயம் இருப்பதாக எச்சரிக்கை! In the largest outbreak in the sea இலங்கையில் கடலுக்கு அடியில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டிருப்பதால் நிலநடுக்க அபாயம் இருப்பதாக புவியியல் வல்லுநர் திசநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த புவியியல் பேராசிரியர் சி.பி. திசாநாயக்க, இலங்கையின் கடல் பகுதி மற்றும் நில நடுக்கங்கள் பற்றி ஆராய்ச்சி நடத்தி வருகிறார். இலங்கைக்குரிய பூமி பகுதியில் சுமார் 500 முதல் 600 கிலோ மீட்டர் தூரத்தில் தெற்கு கடலில் பூமிக்கு அடியில் பெரிய வெடிப்பு ஏற்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். இலங்கையின் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் புதிய புவி அடுக்கு உருவாகி வருவதால் இந்த வெடிப்பு ஏற…

  2. காணொளி: இசைப்பிரியாவின் தாயார் சணல்-4 இற்கு வழங்கிய பேட்டி பேட்டியை காண.... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9941:----4---&catid=1:latest-news&Itemid=18

    • 10 replies
    • 1.7k views
  3. மாவீரர் நாளுக்காக யாழ்.பல்கலைக்கழகத்தை மூன்று வாரங்களுக்கு இழுத்து மூடியது சிறிலங்கா அரசாங்கம் [ ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2013, 12:05 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ] யாழ்.பல்கலைக்கழகத்தை அடுத்த மாதம் 2ம் நாள் வரை மூடுமாறு, சிறிலங்கா பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளது. கொமன்வெல்த் மாநாடு சிறிலங்காவில் நடக்கவுள்ள நிலையில், அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் சிறிலங்கா அரசாங்கம் நாளை முதல் ஒருவாரத்துக்கு விடுமுறை அறிவித்துள்ளது. கொமன்வெல்த் மாநாடு நடைபெறும் காலத்தில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், யாழ்.பல்கலைக்கழகம் மட்டும், இந்த மாதம் முழுவதும் மூ…

  4. வடக்கு மாகாணசபையின் நாளைய பேரவை அமர்வில் சந்திரசிறீயின் உரையை புறக்கணிக்க அனந்தி சசிதரன் முடிவு:- 10 நவம்பர் 2013 ஆளுநர் உரையை புறக்கணிக்க சிவாஜிலிங்கம் - சுகிர்தரன் ஆகியோரும் முடிவு செய்துள்ளனர்:- வடக்கு மாகாணசபையின் நாளைய பேரவை அமர்வின் போது இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ள ஆளுநர் சந்திரசிறியினது சிறப்புரையினை புறக்கணிக்க தான் முடிவு செய்திருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு அனந்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இராணுவத் தளபதியாகவிருந்த வேளையிலேயே ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் காணாமல் போயிருந்தனர். குறிப்பாக கிருசாந்தி குமாரசாமி பாலியல் வன்புணர்வுக்கு உட்பட்டு கொல்லப்பட்டதும் இவரது காலத்திலேயே எனத் தெரிவித்த அனந்தி, இவர் தளபதியாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்த…

  5. லண்டன்: இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் பங்கேற்க கூடாது என்று, உண்ணாவிரதம் இருக்கும் லண்டன் வாழ் இலங்கை தமிழர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் கலந்துகொள்ள கூடாது என வலியுறுத்தி லண்டனில், இலங்கை தமிழர் பரமேஸ்வரன் சுப்ரமணியம் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை முதல் பிரதமர் டேவிட் கேமரன் வீட்டின் அருகில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். கடும் குளிர் மற்றும் மழை காரணமாக அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதை அறிந்து தமிழின உணர்வாளர்கள், பரமேஸ்வரனை உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வடுத்தனர். ஆனாலும், பரமேஸ்வரன் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வந்…

    • 2 replies
    • 545 views
  6. காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது: ராஜபக்‌ஷேவுக்கு மன்மோகன் சிங் கடிதம். பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவுக்கு காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாததிற்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், முன்கூட்டிய திட்டமிட்ட பல நிகழ்ச்சிகள் இருப்பதால் பங்கேற்க முடியவில்லை. தான் இலங்கை வராமல் போனது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். பெரும் சர்ச்சைக்கிடையே இலங்கை தலைநகர் கொழும்பில் காமன்வெல்த் மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங் குகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளக்கூடாது என தமிழக அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என தமிழக…

  7. பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்லாததற்கு காரணம்: நாராயணசாமி விளக்கம். இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடந்துகொண்டிருக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் ஒரு குழு 15-ம் தேதி கலந்துகொள்கிறது. இதுகுறித்து பிரதமர் அலுவலக விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளதாவது:- 2009-ம் ஆண்டு இனப்படுகொலைகளை நிகழ்த்திய இலங்கை அரசுக்கு எதிராக கொதித்து எழுந்துள்ள தமிழர்கள், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது என்று கூறி வருகின்றனர். தமிழர்கள் அதிகமுள்ள புதுச்சேரியிலிருந்து வந்திருக்கும் நானும், அவர்களின் மனநிலையை ஆரம்பத்திலிருந்து பிரதிபலித்துக்கொண்…

  8. -சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத் பொதுநலவாய மாநாட்டுக்காக இலங்கைக்கு வருகைதந்துள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் வடக்கிற்கு படையெடுத்துள்ளனர். அதில் சில ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்திற்கும் இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் எக்ஸ்போ பிற் ஹோட்டலில் தங்கியிருக்கின்ற ஊடகவியலாளர்களில் சிலர் யாழ்ப்பாணத்தில் பல சந்திப்புக்களை நாளை முதல் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/89000-2013-11-10-12-43-48.html

  9. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனை சந்திக்க உள்ளார். எதிர்வரும் 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண பொதுநூலக கேட்போர் கூடத்தில் பிரித்தானிய பிரதமருக்கும் வட மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது. வடக்கின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, அரசியல் கைதிகள், மனிதாபிமான நிலைமைகள், இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பிரதமர் கமரூனைச் சந்தித்த பேச்சுவார்த்தi நடத்த உள்ளனர். விக்னேஸ்வரன் முதல…

  10. அரசாங்கம் கற்பனை செய்வதைப் போலன்றி கொமென்வெல்த் மாநாடு எனப்படுவது அரசாங்கத்திற்கு பாதகமான விளைவுகளைக் கொண்டுவரக் கூடும் என்ற தொனிப்பட தயான் ஜெயதிலக சில மாதங்களிற்கு முன்பு எழுந்தியிருந்தார். அண்மையில் மனோ கணேசனும் இதே தொனிப்பட கொமென்வெல்த் மாநாட்டை ஒரு பொறி என்று வர்ணித்திருந்தார். அந்த மாநாட்டையும், அதன் தலைமைப் பொறுப்பையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அனைத்துலக சமூகம் அரசாங்கத்தை சுற்றிவளைக்க முற்படுவதாக சில மாதங்களுக்கு முன்பு எனது கட்டுரையொன்றில் பிரஸ்தாபித்திருந்தேன். அதாவது, அரசாங்கத்தை முறிக்காமல், வளைத்தெடுப்பதே இந்தியாவினுடையதும், மேற்கு நாடுகளினுடையதும் இப்போதைக்கான நிகழ்ச்சி நிரலாகும். கொமென் வெல்த் மாநாட்டை இங்கு நடாத்துவதன் மூலம் அனைத்துலக அரங்கில் தன…

    • 2 replies
    • 582 views
  11. முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு: அடுத்தடுத்து வழக்கு, கைது: பழ.நெடுமாறன் கண்டனம். தஞ்சாவூர் விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்டு கடந்த 8ந் தேதி திறப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு அனுமதி கொடுக்க கால தாமதம் ஏற்படுத்தியதால் விழாக் குழுவினர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்து அனுமதி பெற்றனர். ஆனாலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதியை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு செய்ததால் கடந்த 6ந் தேதியே அவசரமாக திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திட்டமிட்டபடி நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நிகழ்ச்சி தட்டிகள் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ளது என்றும், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படம் போடப்பட்ட தட்டிகள் வைக்கப்பட்டுள்ள…

  12. கொழும்பு: காமன்வெல்த் மாநாடு பெரும் சர்ச்சைக்கிடையே இன்று கொழும்பில் தொடங்குகிறது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் காலனிகளாக இருந்து, விடுதலை பெற்ற 54 நாடுகளின் கூட்டமைப்பான காமன்வெல்த் அமைப்பின் மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்புவில் தொடங்குகிறது. இலங்கையில் இனப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது, போர் இல்லாத பிரதேசங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்களில்கூட லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். போர்க்குற்றங்கள் அரங்கேற்றப்பட்டன. சர்வதேச சமூகத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவங்களால், காமன்வெல்த் மாநாட்டை கொழும்புவில் நடத்தக்கூடாது என பலத்த எதிர்ப்பு கிளம்பி பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ராஜபக்சே போர்க்குற்ற விசாரணையை ஐ.நா. மனித உரிமை ஆணையத்த…

  13. புலம் பெயர் தமிழர் மாநாடு - பிரத்யேக காட்சிகள் https://www.youtube.com/watch?v=oQFJwITt6Nc#t=130

  14. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காததால் அந்நாட்டுடனான உறவு பாதிக்காது: சல்மான் குர்ஷித் கொழும்பு காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காததால் அந்நாட்டுடனான உறவு பாதிக்காது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கைக்கு பிரதமர் மன்மோகன் சிங் செல்வதற்கான வாய்ப்பு அமையவில்லை. இதனால் இலங்கையுடனான உறவில் எந்த விரிசலும் ஏற்படாது. இதற்கு முன்பும் நடைபெற்ற பல்வேறு மாநாடுகளில் பிரதமர் பங்கேற்கவில்லை. இது நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. தற்போது கொழும்பு மாநாட்டின்போது அங்குள்ள தமிழர்கள் விவகாரம், வீடுகளை இழந்தவர்களின் புனர்வாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த…

  15. கடந்த நான்கு ஆண்டுகளாக “இசைப்பிரியா” எனும் புனைப்பெயரைக் கொண்ட எனது தங்கையான, மறைந்த தமிழ்மொழி ஊடகவியலாளர் சோபனா அருட்செல்வன் அவர்கள் தொடர்பான செய்திகள், பெரும்பாலான செய்தி ஊடகங்களில் வசதிக்கேற்ப கதையமைக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதனைத் தொகுப்பவர்கட்கு இசைப்பிரியாவைப் பற்றி எதுவும் தெரியுமா? அன்றி இசைப்பிரியாவுடன் இறுதிநாளிலே நந்திக் கரையோரம் இவர்களும் இருந்தார்களா? எப்படி உங்களால் இது முடிகிறது ? ! என்பது தெரியவில்லை. தமிழன் என்பவன் வீரத்துடன் மானத்தையும், பாசத்தையும் ஒருசேரப் போற்றுபவன். தமிழ் ஊடகங்களும் அதற்கு சான்று பகர்வனவாகவும், அவற்றை வளர்ப்பவைகளாகவும் அமைய வேண்டும். இசைப்பிரியா என்பவள் ஒரு கற்பனை கதாப்பாத்திரமல்ல. உயிருடன் சிறப…

    • 27 replies
    • 3.1k views
  16. கொழும்பு பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது குறித்த இறுதித் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் மத்திய அமைச்சரவை ஒப்படைத்துள்ளது, இந்திய மத்திய அமைச்சரவையின் அரசியல் விவகாரக்குழு பிரதமர் மன்மோகன்சிங்கின் இல்லத்தில் நேற்று கூடி, கொழும்பு மாநாடு தொடர்பாக ஆராய்ந்தது. சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் மன்மோகன் சிங் மாநாட்டில் பங்கேற்பதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொழும்பு மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் ஒருமித்த கருத்தை எட்ட முடியாததால், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை சோனியாகாந்தி தலைமையிலான காங்கிரஸ் உயர்மட்டக் குழ…

  17. விடுதலைப்புலிகளை தோற்கடித்த தமக்கு விரிவுரையாளர்கள் பெரிய விடயமல்ல என்று இராணுவ அதிகாரி ஒருவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களை அச்சுறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீடத்தினால் நடத்தப்பட்ட இரண்டு நாள் கருத்தரங்கொன்றில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் தங்கியிருந்த அறையொன்றுக்குள் புகுந்த இராணு வீரர் ஒருவர் அவரை பாலியல் வல்லுவுறக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார். இராணுவத்தினர் நடத்தப்பட்டு வரும் குக்குலே கங்க விடுமுறை விடுதியில் கடந்த 2 ஆம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இராணுவ வீரர் தன்னிடம் இருந்து மேலதிக சாவியை கொண்டு கதவை திறந்து அறைக்குள் புகுந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த மாணவி சத்தமிட்டுள்ளார்…

  18. பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு அவசர அவசரமாக பல பணிகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்தது. இதன் ஒருகட்டமாகவே கட்டுநாயக்க - கொழும்பு நெடுஞ்சாலையும் அவசரமாக திறந்துவைக்கப்பட்டது. அந்த அவசரத்தில் என்னவோ தெரியவில்லை. அங்கு வைக்கப்பட்டுள்ள ''எச்சரிக்கை'' பலகையும் அவசரமாக எழுத்தப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. குறிப்பாக பாதசாரிகளுக்கான அறிவித்தல் பலகையில், பிரவேசிப்பதற்கு தடை என்பதற்குப் பதிலாகவே ''விரவேசிப்பதற்டு தலட'' என எழுதப்பட்டுள்ளது. அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் கீழ் உள்ள அமைச்சின் மும்மொழிக் கொள்கை விஸ்தரிப்பின் அடையாளமாக இந்த அறிவித்தல் பலகை அமைந்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலை பெயர் பலகையில் தமிழ் இவ்வாறு மெல்ல செத்துக் கொண்ட…

  19. காணொளி: இலங்கை தமிழர்கள் தொடர்பாக NEWSX தொலைக் காட்சியில் இடம்பெற்ற விவாதம் துக்ளக் சோ மற்றும் சுரேன் சுரேந்திரன் ஆகியோரும் பங்கு பற்றியுள்ளனர்.. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9940:-newsx-&catid=1:latest-news&Itemid=18

  20. http://youtu.be/fR7camXGFUw http://youtu.be/63oDqI7VgQo THANKAS https://twitter.com/francesharris0n

  21. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்காமைக்கான காரணத்தை இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விளக்கி கடிதம் எழுதவுள்ளார். என்ன காரணத்திற்காக தம்மால் அமர்வுகளில் பங்கேற்க முடியவில்லை என்பதனை பிரதமர் சிங், ஜனாதிபதி மஹிந்தவிற்கு விளக்கி கடிதம் எழுதவுள்ளார். இந்திய ஊடகமொன்று இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியப் பிரதிநிதிகள் குழுவி;ற்கு வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் தலைமை தாங்குவார் என மத்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை விஜயத்தின் போது இந்திய மீனவர் பிரச்சினை குறித்து பேசப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articl…

  22. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் அல்லது வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை சீர்குலைக்கும் தீவிர முனைப்பில் பிரித்தானிய தமிழ்ப் புலம்பெயர் அமைப்பு ஒன்று ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். க்ளோபல் தமிழ் போரம், பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் இனச் சுத்திகரிப்பிற்கு எதிரான தமிழர் அமைப்பு ஆகியன பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்தித்தமை தொடர்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அமர்வுகளை புறக்கணிக்குமாறு புலி ஆதரவு தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் பிரதமரை கோரி வருவதாகத் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல் குறித்து செனல…

    • 4 replies
    • 532 views
  23. கொழும்பு: வடக்கு, கிழக்கில் போர் காரணமாக ஏற்பட்ட சொத்து மற்றும் உயிர் சேதங்கள் தொடர்பாக கணக்கெடுப்பை மேற்கொள்ளவுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்திற்கான ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்புகள் பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பின் கீழ் கிராம சேவகர்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள். வரும் 21 ஆம் தேதி முதல் கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதோடு, அதற்கான பயிற்சிகள் வரும் 15 ஆம் தேதி தொடங்குகிறது. போர் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக சரியான கணக்கெடுப்பை நடத்துமாறும், ஏற்பட்ட சொத்து மற்றும் உயிர் சேதங்களுக்கு இழப்பீடுகளை வழங்குமாறு எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் பல வருடங்களாக இலங்கை அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றன. நிலங்க…

  24. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பு: சல்மான் குர்ஷித் கலந்து கொள்கிறார்! இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை ஆனால் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடில்லியில் இன்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அக்பருதீன் மேலும் தெரிவிக்கையில், பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்பாரா? இல்லையா? என்பது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கும். இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வார். யாழ்ப்பாணத…

  25. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்க வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. இந்தியாவிற்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் பெவன் தெரிவித்துள்ளார் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர் என்ற ரீதியில் இந்தியா அமர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்பதே பிரித்தானியாவின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை விவகாரங்களில் அக்கறை கொண்டுள்ளதாகவும் எனவே அமர்வுகளில் பங்கேற்கபது முக்கியமானது என பிரித்தானியா கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் அமர்வுகளில் பங்கேற்பதா இல்லையா எனத் தீர்மானிக்கும் உரிமை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.globaltamilnews.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.