ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
Published By: DIGITAL DESK 3 22 JUN, 2024 | 01:40 PM பொருளாதார நெருக்கடியால் மூளைச் சலவைக்கு உள்ளாகும் வைத்தியர்களில் 25 சதவீதமானவர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 1,800 க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சம்மில் விஜேசிங்க அரபு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் 2021 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் சராசரியாக 200 வைத்தியர்கள் நாட்டை…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
இலங்கை தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் மீண்டும் பெற வேண்டும் என்று இந்திய மத்திய மந்திரி ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் மீண்டும் பெற வேண்டும் எனவும் இதற்கான முழு உதவியையும் இந்தியா மேற்கொள்ளும் எனவும், இந்திய மத்திய மந்திரி ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார். ´தமிழினத்தின் இதயம் இலங்கை´ என்ற நூல் வெளியீட்டு விழாவில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். 1927ல் காந்தி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விடுதலை விதை விதைத்தது முதல் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் இலங்கை தமிழர்களுக்காக ஆற்றிய பணிகள் பற்றி குறித்து ஜி.கே.வாசன் தனது உரையில் குறிப்பிட்டார். எனினும், ராஜீவ் காந்தி படு…
-
- 3 replies
- 1.1k views
-
-
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை மகிந்த, மைத்திரி ஏட்டிக்குப் போட்டியாக சந்திப்புAUG 20, 2015 | 1:34by கி.தவசீலன்in செய்திகள் புதிதாகத் தெரிவாகியுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதன் போது. ஐதேகவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது. அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களான நிமால் சிறிபால டி சில்வா மற்றும், ஜோன் செனிவிரத்ன ஆகியோர், தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதற்கிடையே…
-
- 0 replies
- 450 views
-
-
யுத்தத்தில் கொல்லப்பட்ட முப்படையினருக்கு, கிளிநொச்சி பள்ளியில் அஞ்சலி.. May 20, 2019 நேற்று ஞாயற்றுக் கிழமை மாலை ஏழுமணிளவில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பள்ளியில் இறுதி யுத்தத்தில் இறந்த முப்படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது குறித்த பள்ளிவாசலின் மௌலவி தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் இறந்த முப்படையினருக்கு மெழுகுவர்த்தி ஏந்திஅஞ்சலி செய்யப்பட்டதுடன் பிரார்த்தனையும் இடம்பெற்றது. http://globaltamilnews.net/2019/122281/
-
- 3 replies
- 894 views
-
-
மாந்தைப் புதைகுழி வழக்கில் திருப்பம்! - கண்டுபிடிக்கப்பட்டது மூடப்பட்ட கிணறு. [Thursday 2015-08-27 07:00] மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த மனிதப் புதைகுழிக்கருகில் கிணறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த இடத்தில் சுமார் 90 மனித உடல் எச்சங்கள் இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடமாக அது முன்னர் இருந்ததாக இது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்ற புலனாய்வு தரப்பு நீதிமன்றத்தில் கூறியிருந்தது. ஆனால், காணாமல் போயுள்ளவர்களின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள் அங்கு அவ்வாறு இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடம் இருந்திருக்கவில்லை என்றும், அதற்கான பதிவுகளோ ஆவணங்களோ கிடையாது என்றும…
-
- 0 replies
- 312 views
-
-
வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவ தளபதிக்கு உத்தரவிட்ட போதிலும் அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.என மக்கள் தெரிவித்துய்யளர். இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாடாளாவிய ரீதியில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.எனினும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் பார்க்க வடக்கில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகமாக காணப்படுகின்றன. .பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு சொதனையிடப்படுகின்றனர்.பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டே அனுமதிக்கப்படுகின்றது. …
-
- 2 replies
- 590 views
-
-
போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த தொழில்நுட்ப உபாயங்களை கையாள்கிறார் ஜனாதிபதி நாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் கடைபிடிக்கப்படும் தொழில்நுட்ப உபாயங்களை பயன்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சுக்கள் மற்றும் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான நிறுவன அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டையும், இளம் சந்ததியினரையும் போதை பொருள் பாதிப்பில் இருந்து மீட்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களை தாம் பொறுப்புடன் முன்னெடுக்க உள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். இதற்கு அமைச்சுக்களும், நிறுவனங்களும் உதவ வேண்ட…
-
- 0 replies
- 403 views
-
-
கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிணையில் விடுதலை! மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி தெமட்டகொட கடையொன்றில் பணிபுரிந்த அமில பிரியங்க என்ற இளைஞனை கறுப்பு டிஃபென்டர் காரில் கடத்திச் சென்று சிறையில் அடைத்து தாக்கியமை உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுக்களில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை தண்…
-
-
- 4 replies
- 295 views
- 1 follower
-
-
மடு அன்னையின் ஆடி மாத திருவிழா – பாதுகாப்பு சோதனைகளின் பின்பே ஆலயத்தினுள் பக்தர்களுக்கு அனுமதி : June 10, 2019 எமது நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற இந்த சங்கடமான நிலையிலே பாதுகாப்பு ஒரு பிரச்சினையாக இருந்து கொண்டு வருகின்றது. ஆகையினால் பாதுகாப்பின் அவசியத்தால் மடு திருத்தளத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் பாதுகாப்பின் அவசியமான சோதனைகளுக்கும் உற்படுவார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்தார். மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை மாலை 3.45 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்கள அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரைய…
-
- 0 replies
- 311 views
-
-
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளம் 1700 ரூபாய் நிறைவேற்றம்! பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் இன்று வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், உற்பத்தி ஊக்குவிப்பு விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது . இதேவேளை, சம்பள விடயம் உயர் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட தவறுகளை த…
-
- 3 replies
- 420 views
-
-
கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார் - ஜெயலலிதா தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக உதவி புரிந்து வருவதாக, அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான முதலமைச்சர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லி செல்ல இருக்கும் நிலையில், ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார். விடுதலைப் புலிகளுக்கு படகுகள் கொள்வனவு செயததாக கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கைது செய்யப்பட்டு உடனடியாக பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னணியில் முதல்வர் கருணாநிதி இருப்பதாக ஜெ…
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்கள் உள்நாட்டு பொறிமுறையொன்று குறித்து நம்பிக்கை கொண்டிருக்கவில்லை புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் பாதுகாப்பு தரப்பில் முழுயைமான மாற்றங்கள் ஏற்படவில்லை அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தில் சூடான விவாதம்:- இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்கள் உள்நாட்டு பொறிமுறை ஒன்று குறித்து நம்பிக்கை கொண்டிருக்கவில்லை எனவும், புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் பாதுகாப்பு தரப்பில் முழுயைமான மாற்றங்கள் ஏற்படவில்லை எனவும் அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் இன மற்றும் மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க காங்கிரஸ் குழுவின் கூட்டம் செப்டம்பர் 17 ம் திகதி இடம்பெற்றது.ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்…
-
- 0 replies
- 309 views
-
-
கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப் புலிகளைச் சந்திக்கும் ஐ.நா. அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கு புலிகள் கூறுவதையெல்லாம் அப்படியே ஏற்று தலையசைத்து விட்டு வருகின்றனர் என்று சீற்றத்துடன் கூறியிருக்கின்றார் அரச சமாதான செயலகத்தின் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க. தமிழர் தாயகப் பகுதிகளில், 'ஸ்ரீலங்காவின் கிளைமோர் தாக்குதல்கள்' போன்ற சொற்பிரயோகங்களை விடுதலைப் புலிகள் முன்வைக்கும் போது அதனை ஆட்சேபித்த ஒரு வார்த்தையேனும் ஐ.நா. பிரதிநிதிகள் கூறுவதில்லை என்று அவர் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அரச சமாதான செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கபட்டிருப்வை வருமாறு :- தமிழர் தாயகப் பகுதிகளில் ஐக்கிய நாடுகளின் பணிகள் குறித்தும், விடுதலைப்புலிகளின் படையணிகளில் உள்ள 18 வயத…
-
- 1 reply
- 1.1k views
-
-
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ரக்னா லங்கா பாதுகாப்புச் சேவை நிறுவனம் தொடர்ந்து செயற்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாரத்ன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். பாரிய முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் சாட்சியமளித்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கருணாரத்தின ஹெட்டியாரச்சி, ரக்னா லங்கா நிறுவனம் மூலமாக அரசாங்கத்துக்கு பாரிய வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதன் காரணமாக ரக்னா லங்கா நிறுவனத்தில் உள்ள சிற்சிறு குறைபாடுகளைக் களைந்து அதனை ஒரு வர்த்தக நிறுவனமாக நடத்திச் செல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் என்று பாதுகாப்பு செயலாள…
-
- 0 replies
- 197 views
-
-
தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு! தழிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் நேற்று நிறைவேற்றிய தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம் என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் திங்கட்கிழமை நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் நினைவேந்தலில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் சுகவீனம் காரணமாக நேற்றையதினம் வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில…
-
-
- 25 replies
- 1.8k views
- 1 follower
-
-
ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பேரழிவு நாசங்களை விளைவித்து வரும் இலங்கை மீது சர்வதேச ஆயுதத்தடையை விதிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகைளை எடுக்குமாறு ஆஸ்திரேலிய அரசை வற்புறுத்திக் கேட்டிருக்கிறது அந் நாட்டின் மனித உரிiமைகள் அமைப்பு ஒன்று. இது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசை வலியுறுத்தும் மகஜர் ஒன்றைத் தாயாரித்து, அதில் ஆஸி. மக்களின் கையொப்பத்தைச் சேகரித்துப் பெற்று அந்நாட்டு நாடாளுமன்றுக்கு அனுப்பும் நடவடிக்கையில் அந்த அமைப்பு தீவிரமாக ஈடுபட்டிருகின்றது. 'குரலற்றவர்களின் மனித உரிமைகளுக்கான அஸ்திரேலியர்களின் அமைப்பு'(Australian For human Rights Of Voiceless) என்ற நிறுவனமே மனித உரிமைகளில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலியப் பிரஜைகள் மத்தியில் இத்தகைய மகஜரில் கையொப்பம் திரட்டி வருகின்றது. …
-
- 3 replies
- 1.7k views
-
-
வியட்நாமில் அமெரிக்கா பெற்ற பாடத்தை இலங்கையிலும் புகட்ட ஜாதிக ஹெல உறுமய தீர்மானம்_ பெரும்பான்மை சிங்கள கடும் போக்காளர்களை ஓரணியில் இணைப்பதற்கான திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென்று ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய செயற் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு வியட்நாமில் அமெரிக்கா கற்றுக் கொண்ட பாடத்தை இங்கு நாம் புகட்ட வேண்டுமென்றும் ஹெல உறுமய தீர்மானித்துள்ளது. கடந்த வாரம் பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில் அதன் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தலைமையில் கூடிய மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இவ்விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசியல் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வருவதாவது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை …
-
- 7 replies
- 788 views
-
-
நாட்டிலிருந்து வெளியேறியது நிலத்தடியைக் கண்காணிக்கும் விமானம்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட நிலத்தடியைக் கண்காணிப்பது உள்ளிட்ட விசேட செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் விமானம் நாட்டிலிருந்து புறப்பட்டு செல்லவுள்ளது. குறித்த விமானம் இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பை நோக்கி புறப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. Basler BT-67 என்ற விமானம் கடந்த சனிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி சுமார் 1000 மீற்றர் ஆழத்தில் நிலத்திற்கடியில் உள்ளவற்றை கண்காணிக்க முடியும். இந்த விமானம் இந்தோனசியாவிலிருந்து நாட்டை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavann…
-
- 1 reply
- 713 views
-
-
12 SEP, 2024 | 05:06 PM அரசும் அதன் அதிகாரமும்தான் எமது தமிழ் அரசியல் கைதிகளை பழிதீர்க்கும் போக்கில் 30 ஆண்டுகளாக சிறைக்குள் தடுத்து வைத்துக்கொண்டிருக்கின்றதா என குரலற்றவர்களின் குரல் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய சிறைக்கைதிகள் தினமான இன்றைய தினம் வியாழக்கிழமை (12) யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அமைப்பினர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயகப் பெயர் கொண்டமைந்துள்ள இலங்கை நாட்டில் இன்று 116ஆவது தேசிய சிறைக்கைதிகள் தின நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுமார் 13 ஆயிரம் கைதிகளை மாத்திரமே தடுத்து வைத்திருக்கக்கூடிய இட வசதியினைக் கொண்ட சிறைக்க…
-
- 1 reply
- 449 views
- 1 follower
-
-
21 SEP, 2024 | 05:58 PM அமைதியான முறையில் அதிகார மாற்றம் குறித்து தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பொதுமக்கள் அமைதியை பேணவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனநாயக ரீதியில் மக்களால் அவரின் பின்னர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழிவிடுவார் என எதிர்பார்க்கின்றேன் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். அதிகாரமாற்றத்தின் போது ஜனாதிபதி எந்த பிரச்சினையையும் உருவாக்குவார் என எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/194304
-
-
- 8 replies
- 676 views
- 1 follower
-
-
யாழ். இந்துக் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய இரு அணிகளுக்கிடையேயான இந்துக்களின் பெரும்போர் கிரிக்கெட்போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி தனது இரண்டாவது இன்னிங்சில் தற்போது வரை 246 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. யாழ். மாவட்டப் பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பெரும் துடுப்பாட்டப் போட்டிகளின் வரிசையில் இந்துக்களின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டி நேற்று ஆரம்பமானது. இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற யாழ். இந்து முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. அதன்படி துடுப்பெடுத்தாடிய கொக்குவில் இந்துக் கல்லூரி தனது முதலாவது இன்னிங்சில் 68.4 ஒவர்களுக்கு அனைத்து விக…
-
- 0 replies
- 770 views
-
-
[ புதன்கிழமை, 14 ஒக்ரோபர் 2015, 06:46.52 AM GMT ] 1996ம் ஆண்டு 10மாதம் 10ம் திகதி ஜோர்தான் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற ஜெயராணி என்ற பெண் இன்னும் வீடு திரும்பாத சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்ப்படுத்தியுள்ளது. 19 வருடங்களில் 7 கடிதங்கள் மாத்திரமே உறவினர்களுக்கு கிடைத்துள்ளமையானது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடியில் இருக்ககூடிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஊடாக ஜோர்தான் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றவர் குறித்து, அரசாங்கமும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களும், இதுவரையில் எவ்வித முடிவுகளும் எடுக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணின் தாய் கறுவல் செல்லத்தங்கம் இது தொடர்பாக கூறுகையில், கடந்த…
-
- 0 replies
- 792 views
-
-
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக, அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று புதுடெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ள அமெரிக்கா, அதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதுபற்றி இந்திய அரசுடன் பேச்சு நடத்தவே உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்றை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இந்தக் குழுவினர் நேற்றுக்காலை புதுடெல்லியைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அமெரிக்க அதிகாரிகள் புதுடெல்லியில் யாருடன் பேச்சு நடத்தினர் என்ற விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.…
-
- 0 replies
- 653 views
-
-
ஜனாதிபதி மாமா எனது தந்தையைத் தாருங்கள் ஜனாதிபதி மாமா தயவு செய்து எனது தந்தையைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்று காணமற்போன பொலிஸ் அதிகாரியின் பிள்ளை விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி செவிசாய்த்துள்ளார். வவுனியா பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரி குணதிலக்க என்பவரே காணாமற் போயிருந்த நிலையில், இது தொடர்பில் முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால பொலிஸ்மா அதிபருக்குப் பணித்துள்ளார். புதையல் தோண்டுதல் தொடர்பாக ஒரு வாக்குமூலத்தைப் பெற்ற பின்னர் குறித்த பொலிஸ் அதிகாரி, ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி முதல் காணாமற் போயிருந்தார். இந்த நிலையில் காணாமற்போயிருந்த பொலிஸ் அதிகாரி தொடர்பில் கொழும்பிலிருந்து வெளியாகும் ஞாயிறு தேசிய பத்திரிகையில் ஒரு செ…
-
- 2 replies
- 676 views
-
-
ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர்! ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திருப்பியுள்ளார். அவர் நேற்று (சனிக்கிழமை) இரவு நாடு திரும்பியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தனர். நேற்று முன்தினம் காலை பெங்களூர் சென்றடைந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் மங்களூர் செல்ல திட்டமிட்டிருந்தார். எனினும் சீரற்ற வானிலையால் அவர் தரைவழியாகவே மங்களூர் சென்று, உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார். அத்தோடு, அவரின் ஏற்பாட்டில் அங்கு சிறப்பு யாக…
-
- 3 replies
- 720 views
-