Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு தேசாபிமானி, தேசபந்து, லங்கா புத்திர, மானகீத்தவாதி ஆகிய கௌரவ பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வறுமைகோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு புடவைகளும் வழங்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள், இராணுவ உயர்நிலை அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 25 மாணவர்களுக்கு புலமைப்பரிசிலும், 50முதியவர்களுக்கு கண்புரைசத்திரசிகிச்சைக்கு உரிய உதவியும், தெரிவு செய்யப்பட்ட 100 ஏழைகளுக்கு உடுபுடவைகளும் வழங்கி வைக்கப்பட்டது http:…

  2. பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி நீக்கம்! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதம் நேற்று (05) இரவு தமக்கு கிடைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர “அத தெரண”விற்கு தெரிவித்தார். இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக கடமையாற்றிய சரத் ஏக்கநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளார். கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக “அத தெரண” வினவிய போது சரத் ஏக்கநாயக்க குறிப்பிட்டார். https://tamil.adade…

    • 4 replies
    • 500 views
  3. அவசர அவசரமாக வீடுகள் அமைக்கும் படையினர் யாழ். மாவட்டத்தில் உள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களைத் தலைமையாகக் கொண்ட 100 குடும்பங்களுக்கு அவசர அவசரமாக வீடுகள் அமைத்துக் கொடுக்கும் பணியில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 10 நாள்களில் நூறு வீடுகள் என்ற திட்டத்தின் கீழ் படையினர் இந்த வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். யாழ். மாவட்டத்தில் கடந்த கால யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வறுமையான குடும்பங்களைத் தெரிவு செய்து மனிதாபிமான அடிப்படையில் இராணுவத்தினர் இந்த வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு வீடும் சுமார் மூன்று லட்சம் ரூபா பெறுமதி கொண்டதாக இந்த வீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. வீட்டுத்திட்டப் …

    • 0 replies
    • 712 views
  4. மார்ச் 07 2015 சனிக்கிழமை அன்று கனடாத் தமிழ்ச் சமூக ஆர்வலர் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக் கூட்டம் ரொறொன்ரோ நகரிலுள்ள ஸ்ரீ ஐயப்பன் ஆலயக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. “தாயகம தேசியம் தன்னாட்சியுரிமை நோக்கித் தமிழீழ அரசியல் தலைமையைச் செம்மைப்படுத்துவோம்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தை நீண்ட காலத் தமிழின உணர்வாளரான திரு. பாபு அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார். மண்டபம் நிறைந்த மக்களின் ஆர்வமிக்க வருகையானது இக்கூட்டத்தின் முக்கியத்துவத்தையும் தமிழீழ அரசியல் தலைமைமேல் கனேடியத் தமிழர் கொண்டுள்ள அதிருப்தியையும் வெளிக்காட்டுவதாக அமைந்தது. கனேடிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்…

  5. வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு அருகில் இராணுவத்தினரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலின்போது இராணுவத்தினர் திருப்பித்தாக்கியதில் விவசாய கல்லூரி வளவில் கற்றல் நடவடிக்கை மேற்கொண்டிருந்த ச.கிந்துஜன், சி.கோபிநாத், இரா.அச்சுதன், ஆர்.மொகமட், தி.சிந்துஜன் ஆகிய ஜந்து மாணவர்கள் உயிரிழந்தனர். இவர்களின் நினைவு தினம் வருடாவருடம் விவசாய கல்லூரியில் இடம்பெற்று வருவதுடன் குறித்த மாணவர்களின் நினைவாக மரநடுகை, இரத்ததானம், தாகசாந்தி போன்ற சேவைகளை விவசாயக்கல்லூரி மாணவர்கள் குறித்த நினைவு தினத்தில் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 12 ஆவது நினைவேந்தல் மாணவர் ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டில் நேற்று (18.11) இடம்பெற்றது இந் நிகழ்வில் தாண்டிக்குளம் விவச…

    • 1 reply
    • 1.6k views
  6. கொழும்பு போட் சிட்டி திட்டத்தை சீனா தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அனுமதித்தால் அதற்கு மேலாக உள்ள வான்பரப்பு முற்றுமுழுதாக சீனாவிற்குரியதாகிவிடும்; என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை விமானப்போக்குவரத்து அதிகார சபையை சேர்ந்த அதிகாரிகளே இதனை சுட்டிக்காட்டியுள்ளனர். 1944 சிக்காக்கோ பிரகடனத்தின் படி குறிப்பிட்ட பகுதியின் வான்பரப்பு உரிமை சீனாவிற்கே செல்லும், இலங்கை கேள்வி எழுப்ப முடியாத நிலை உருவாகலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.முன்னைய அரசாங்கம் சீனாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையே இந்த அபாயகரமான நிலைக்கு வழிவகுத்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ள இந்த விடயம் அரசாங்கத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள…

  7. ஜனாதிபதியின் சதித்திட்டங்களுக்கு துணை போகப்போவதில்லை - மனோ ஏதிர்காலத்தில் 122 க்கு அதிகமான பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கான சக்தி ஐ. தே.மு.விற்கு உள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதத்தில் பொது தேர்தலுக்கு பதிலாக ஜனாதிபதி தேர்தலே நடத்தப்பட வேண்டும். முடிந்தால் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். ஏதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் 122 க்கு அதிகமான பெரும்பான்மையினை நிரூபிப்போம். நிரூபிப்பதற்கான சக்தி ஐக்கிய தேசிய முன்னணிக்கு உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எந்த சதித்திட்டங்களுக்கும் துணை போகப் போவதில்லை. அஞ்சப் போவதுமில்லை. எதுவானாலும் சந்திக்க தயாராகவ…

  8. சனல்4 தொலைக்காட்சியினால் ஒளிபரப்பட்ட 'இலங்கையின் கொலைக்களம்' விவரணத் தொகுப்பு, ஶ்ரீலங்காவின் உள்நாட்டு யுத்தகளத்தில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்வதாக பல்வேறு தரப்புக்களிலும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் உள்ள பிரபலமான தொலைக்காட்சிகள் இந்த விவரணத்தை மறு ஒளிபரப்புச் செய்துள்ளன. விரைவில் தமிழகத்தில் ஜெயா தொலைக்காட்சியும் இந்த விவரணத்தை ஒளிபரப்பவுள்ளது என ஊகந் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந் நிலையில், இன்று 03.08.2011 புதன்கிழமை இரவு 20:55 மணிக்கு சுவிற்சர்லாந்தின் முக்கிய தொலைக்காட்சிச் சேவைகளில் ஒன்றான, SF 1 தொலைக்காட்சியில் இலங்கையின் கொலைக்கள விவரணத் தொகுபிலுள்ள காட்சிகளுடன் , போர்க்குற்றம் சாட்டப்படும்…

  9. முல்­லைத்­தீவு மாவட்­டம் ஐயங்­கன்­கு­ளம் பகு­தி­யில் இரா­ணு­வத்­தி­ன­ரின் ஆழ ஊடு­ரு­வும் படை­ய­ணி­யின் கிளை­மோர்த் தாக்­கு­த­லில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு நேற்­று­முன்­தி­னம் அஞ்­சலி செலுத்தப்பட்டது. கிளை­மோர்த் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்ட 8பேரும் அடக்­கம் செய்­யப்­பட்ட இடத்­தில் நேற்­று­முன்­தி­னம் மதி­யம் 12.30 மணிக்கு அஞ்­சலி நிகழ்­வு­கள் இடம்­பெற்­றன. 2007ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 27ஆம் திகதி மதி­யம் 12.30 அள­வில் இரா­ணு­வத்­தி­ன­ரின் ஆழ ஊடு­ரு­வும் படை­யி­னரின் கிளை­மோர்த் தாக்­கு­த­லில் அதே கிரா­மத்­தைச் சேர்ந்த பாட­சா­லைச் சிறு­மி­கள் நால்­வர் உட்­பட 8 பேர் கொல்­லப்­பட்­டி­ருந்­த­னர். அவர்­க­ளின் உடல்­…

  10. 17 OCT, 2023 | 04:56 PM இலங்கையில் 14 வயதுக்குட்பட்ட 10 சதவீதமான குழந்தைகள் தொழுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் தடுப்புப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் தொழுநோய் எதிர்ப்பு பிரச்சாரத்தின் பணிப்பாளர் பிரசாத் ரணவீர கருத்து தெரிவிக்கையில், தொழுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கொண்ட அபிவிருத்தியடைந்து வரும் நாட்டில் குழந்தை தொழுநோயாளிகளின் சதவீதம் குறைந்தது 4 சதவீதமாக இருத்தல் அவசியம். இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மாத்திரம் இலங்கையில் சுமார் ஆயிரத்து 155 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளனர். இந்நோய் தொற்றில் 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு பிறகே நோயின் அறிகுறிகள் தோன்றும்,…

  11. சிறிலங்காவின் புதிய இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் நிகால் ஹப்புஆராச்சி நியமனம் [ செவ்வாய்க்கிழமை, 09 ஓகஸ்ட் 2011, 14:28 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்காவின் புதிய இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் நிகால் ஹப்புஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். நாளை சிறிலங்கா இராணுவ தலைமையத்தில் இவர் தனது கடமையைப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளராகவும் செயற்படுவார். சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளராக பதவி வகித்த மேஜர் ஜெனரல் உபய மெடவெல வெளிநாட்டுப் பயிற்சி ஒன்றுக்குச் செல்லவுள்ள நிலையிலேயே இந்தப் பதவிக்கு பிரிகேடியர் நிகால் ஹப்புஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். http://www.puthinappalakai.com/view.php?2…

  12. மஹிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன. இதனால் எமது மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். கொடூர ஆட்சியால் தமிழ் மக்கள் தமது உறவுகளை இழந்தனர்; உறவுகளைத் தொலைத்தனர்; உறவுகளைப் பிரிந்தனர். சொந்த மண்ணை இழந்து அகதிகளாகினர். இந்தத் துயரங்களுக்கு முடிவுகட்டவேண்டும் என்ற நோக்கில்தான் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த அரசை வீட்டுக்கு அனுப்பி மைத்திரி அரசை ஆட்சிபீடத்தில் ஏறவைத்தனர் தமிழ் மக்கள். - இவ்வாறு அமெரிக்க செனட் உறுப்பினர்களிடம் சுட்டிக்காட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். மைத்திரி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களாகின்றன. இந்த அரசின் ஆட்சி…

  13. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தனது கொலைச் சதி முயற்சி தொடர்பில் நாமல் குமாரவின் குரல் வழிப் பதிவு வெளிவந்த பின்னரும் தமக்கிருந்த பாதுகாப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் காவல்துறை திணைக்களத்திற்கு பொறுப்பானவரென்ற வகையில் ஜனாதிபதியே அதற்கு வகை சொல்ல வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று (05) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அழைப்புக்கேற்ப அங்கு சென்ற அவர் சுமார் 3 மணி நேரம் கொலைச்சதி முயற்சி தொடர்பில் வாக்கு மூலம் வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்தார். …

  14. மட்டக்களப்பு, இருதயபுரத்தில் வைத்து சுமனரத்தின தேரர் தெரிவித்த கருத்துக்களை தமிழ் தேசிய இளைஞர் பேரவை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மட்டக்களப்பு, இருதயபுரத்தில் சிலருடன் வருகை தந்த சுமனரத்தின தேரர், 'மீண்டும் யுத்தம் வரும்; தமிழர்களையும் தமிழ் அரசியல்வாதிகளையும் வெட்டுவேன்' என்று கூறியுள்ளார். இவருடைய கருத்தை தமிழ் தேசிய இளைஞர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. மிகப்பெரும் யுத்தம் இடம்பெற்று, மிகப்பெரும் அழிவுகளை சந்தித்த நாடு, தற்போது நிலையான அமைதியையும், இனப் பிரச்சினைக்கான நிலையான தீர்வையும் நோக்கி பயணி…

  15. சிங்கள மன்னன் மகா பராக்கிரமபாகு மாளிகைக்கு தீ வைப்பு!ஆறு பேர் கைது. Monday, August 15, 2011, 20:47 சிங்கள மன்னன் மகா பராக்கிரமபாகு வசந்த கால மாளிகைக்கு நெருப்பு வைத்த குற்றச்சாட்டில் ஆறு பேர் பொலனறுவையில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரை நெருப்பு பற்றி எரிந்து இருக்கின்றது. இதனால் மாளிகையில் இருந்து பொருட்களும், மாளிகையின் சில சுவர்களும் அழிந்து விட்டன. கைதானவர்கள் இன்று பொலனறுவை ந்நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட உள்ளார்கள். http://www.tamilthai.com/?p=24267

  16. கூட்டமைப்புடன் இரகசிய உடன்பாடு இல்லை – சஜித் பிரேமதாச ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐதேக எந்த இரகசிய உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை என்று அந்தக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “கூட்டமைப்புடன், ஐதேக இரகசிய உடன்பாடு செய்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எந்த உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டியது எமது தார்மீக கடமை. கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் போ…

  17. மஹிந்தவின் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கும் முயற்சி முடிவாகியுள்ளது. இந்த குழுவின் அரச ஊதுகுழல்களான டக்ளஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ஆகியோர் இடம்பெறுவர். என முன்பே கூறப்பட்டது.. தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்விற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படும் என கூறிய சிங்களம் இப்போ அதன் பேரையே மாற்றியுள்ளது. அத்துடன் அதன் நோக்கங்களில் தமிழர் பிரச்சினை என்ற வார்த்தைகளே இடம்பெறவில்லை.. இது சிங்களம் எவ்வாறு உலகத்தை முட்டாளாக்குகின்றது என்பதனை மீண்டும் காட்டுகின்றது. மட்டுமன்றி இந்தியா, ஐக்கிய நாடுகள் மற்றும் மேற்குலகத்தின் முகத்தின் கரியை பூசியுள்ளது. . மஹிந்தரின் பாராளுமன்ற தெரிவுக்குழுவானது கீழ் வரும் நோக்கங்களைக்கொண்டிருக்கும் என சிங்கள…

  18. Published By: VISHNU 15 NOV, 2023 | 03:47 PM முல்லைத்தீவு கொக்குதொடுவாய் வடக்கு15ஆம் கட்டை பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்கள மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். புலிபாய்ந்தகல் பகுதியில் பெரும்பான்மையினத்தை சேர்ந்த மீனவர்கள் அத்துமீறி வாடி அமைத்து தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை பிரதேச செயலகத்தினால் அறிவித்தல் வழங்கப்பட்டு வாடிகளை அகற்றுமாறு கோரி பதாகை காட்சிபடுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொக்குதொடுவாய் 15ஆம் கட்டை பகுதியில் இவர்கள் வாடிஅமைத்து சட்டவிரோத தாெழிலில் ஈடுபட்டு வருகி…

  19. ஐ.நா வில் தனக்குத் தானே கரி பூசிக் கொண்ட சிறிலங்கா. சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் கட்டடத் தொகுதியில் மனித உரிமைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் சிறிலங்கா அரசாங்கமே அம்பலப்பட்டு அவமானத்துக்குள்ளாகியது. மனித உரிமைகள் குறித்த 5 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது. கடந்த 11 ஆம் நாள் முதல் நடைபெற்று வரும் இக்கூட்டத் தொடரில் அனைத்துலக மனித உரிமைகளின் நிலைமை மற்றும் அதனை பாதுகாப்பது பற்றி பல்வேறு கலந்துரையாடல்கள், கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இக் கூட்டத்தொடரில் பங்கு கொள்ள உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புகளு…

    • 4 replies
    • 2k views
  20. டில்லி பயணம் தேசியக்கூட்டமைப்புக்கு அங்கீகாரத்தை வழங்குமா? மக்கள் புரட்சி ஒன்றின் ஆரம்பம், ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் வாயிலாக, இந்திய அரசியலை மையம் கொண்டு தாக்கி வருவதாக தெரிகிறது. இந்தியாவுக்குள் புரையோடிப்போய் கிடக்கும் ஊழல் பூதத்திற்கு எதிராக கிளம்பியிருக்கும் மக்கள் கிளர்ச்சி, அன்னா ஹசாரே என்ற காந்தியவாதியின் தலைமையில், பெருநெருப்பாக பற்றி எரியத்தொடங்கியிருக்கிறது. காலாகாலமாக இந்தியாவில் ஊறிப்போயிருந்த ஊழலுக்கு எதிரான போராட்டம், இவ்வளவு நெருக்கடியை இந்திய அரசுக்கு ஏற்படுத்தும் என்று காங்கிரசு அரசும் அதன் கூட்டாளிகளும் நினைத்திருக்கவில்லை. நாட்டுக்குள் உருவான இந்த ஜனநாயக கிளர்ச்சி போராட்டம். இந்திய ஆட்சியாளர்களால் இலகுவில் கட்டுப்பட…

  21. 26 NOV, 2023 | 05:35 PM போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நிலத்தை தோண்டும் நடவடிக்கை கடந்த 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று (25) மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை பணிகள் இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் இன்றைய தினம் (26) நான்காவது நாளாக அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன. இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் விசேட புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த விடயம் கடந்த 19ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு, குறித்த பகுதியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்…

  22. Posted on : Tue Jun 26 7:26:00 EEST 2007 "இது எங்கள் சிங்கள நாடு' என்று பாடிக்கொண்டிருக்க முடியாது சிறுபான்மையினருக்கு உரிமைப் பொதி ஒன்று வழங்கப்பட்டாக வேண்டும் முன்னாள் ராஜதந்திரி கொடகே சொல்கிறார் சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிப்படுத்தும் பொதியொன்றை நாம் வழங்கியாக வேண்டும். நாம் இனிமேலும் ""இது எங்கள் சிங்கள நாடு'' என்று பாடிக்கொண்டியிருக்க முடியாது. முன்னாள் ராஜதந்திரியும் வெளிநாட்டுறவுகள் விமர்சகருமான கல்யாணந்த கொடகே இவ்வாறு தெரிவித்திருக்கிறார். புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி அமரர் ஆர்.பிரேமதாசாவின் 83ஆவது பிறந்த தின வைப வத்தில் அவர் உரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில் தெரிவித்த தாவது: சர்வதேச உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு சிறு…

  23. அடேல் பாலசிங்கத்தை கைது செய்ய கோத்த போடும் புதிய வியூயுகம் ! Thursday, September 1, 2011, 10:57 தமிழீழ விடுதலை புலிகளின் மா மேதையும் தேசத்தின் குரலுமான அன்டன் பாலசிங்கம் அவர்களின் பாரியாரான அடேல் பாலசிங்கத்தை கைது செய்துஇலங்கை கொண்டு செல்ல கோத்தா மற்றும் மகிந்தா புதிய வலை விரிப்பை மேற்கொண்டு வருகின்றனர் . இதற்கு பல நாடுகள் மீதினில் இவர் மீதான அப்பண்ட போலி குற்ற சாட்டை முன் வைத்துள்ளன .இவர் சிறார்களிற்கு பயிற்சி அளித்தது .புலிகள் பாசறையில் ஆயுத பயிற்சி பெற்றது .மற்றும்இலங்கை அரசுக்கு எதிராக போராட அவர்களை தூண்டிய குற்றங்களை முன்வைத்துள்ளதுடன் புலம் பெயர் நாட்டில் தங்கியிருந்து தடை செய்ய பட்ட புலிகள் அமைபிற்கு நிதி சேகரித்துஆயுதம் வாங்கினார் என்ற பொய்யான …

  24. முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் நடந்த கொடுமைகள் மற்றும் அந்த சூழலைப்பார்த்து பான் கி மூன் அதிர்ந்து போயிருந்தார்.யுத்தம் நிறைவடைந்த அடுத்த வாரத்தில் முன்பு யுத்தசூனிய பகுதியாக காணப்பட்ட பிரதேசத்தின் ஊடக விமானத்தில் செல்லும் போது தான் முழு அழிவினையும் பார்த்ததாக ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இராஜதந்திரிகளுக்கு தெரிவித்திருந்ததாக சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், தான் பார்த்தவற்றுள் மெனிக்பாம் அகதிகள் முகாம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதாக பான் கி மூன் இராஜதந்திரிகளுக்கு தெரிவித்திருந்ததார். 2009ம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி இரவு பான் கி மூன் இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பவென கொழும்பு விமான நில…

  25. மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறி நேபாளத்தில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த மூன்று ஊடகவியலாளர்கள் அடுத்த சில தினங்களில் நாடு திரும்பவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இந்த ஊடகவியலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் இலங்கையில் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், எனினும், இவர்களைப் பாதுகாப்பாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரசியல் தஞ்சம் கோரியிருந்த நிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் குறித்து கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். நேற்று முன்தினம்…

    • 0 replies
    • 469 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.