ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
07 MAY, 2024 | 10:36 AM 20 வருடங்களுக்கு மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு ( M/s Adani Green Energy SL Limited ) வழங்குவதற்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியது. இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் ( M/s Adani Green Energy Limited ) மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு 2022.03.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்…
-
- 3 replies
- 278 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 07 MAY, 2024 | 09:22 AM மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளது. மன்னார் பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டிட நிர்மாண பணிகளுக்கும், மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்குமாக இந்த 600 மில்லியன் ரூபா நன்கொடை பயன்படுத்தப்படவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் நெறிப்படுத்தலின் கீழ், மாகாண சபையால் திட்ட முன்மொழிவு தயாரிக்கப்பட்டு சுகாதார அமைச்சின் ஊடாக …
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்கள், மாகாண அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை 65 வரை நீட்டித்து, பின்னர் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்பட்ட நிலையில், அதற்கிடையிலான காலத்தில் 60 வயது பூர்த்தியான பின்னர் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்காக இந்த வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவினால் வௌியிடப்பட்ட சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர தேவைகளை பூர்த்தி செய்யும் உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உ…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
06 MAY, 2024 | 06:19 PM கிளிநொச்சியில் அரசுக்கு சொந்தமான கல்மடு வனப் பிரதேசத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி - இராமநாதபுரம் பிரிவுக்குட்பட்ட கல்மடு வனப் பிரதேசத்துக்குள் அனுமதியின்றி உள்நுழைந்து மரங்களை வெட்டி, மரக்குற்றிகளை இரண்டு உழவு இயந்திரங்களில் ஏற்ற முற்பட்ட ஐந்து இளைஞர்கள் இராமநாதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஐவரும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் வெட்டிய மரக்குற்றிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி …
-
- 0 replies
- 198 views
- 1 follower
-
-
Simrith / 2024 மே 06 , மு.ப. 07:43 - 0 - 55 இந்த ஆண்டு முதல் தடவையாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 200,000க்கு கீழ் வீழ்ச்சியடைந்ததன் மூலம் இலங்கை சுற்றுலாத்துறை ஏப்ரல் மாதத்தில் வேகமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மொத்தம் 148, 867 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) தற்காலிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தை விட 41 சதவீதம் அதிகமாக இருந்தாலும், கடந்த மாதத்தில் (மார்ச்) பதிவு செய்யப்பட்ட 209,181 சுற்றுல…
-
- 0 replies
- 205 views
-
-
கிளிநொச்சியில் சட்ட விரோத விளையாட்டு பூங்காவுக்கு எதிர்ப்பு! யோகி. கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் இராணுவத்தினரின் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்ட இடத்தில் சட்ட விரோதமாக இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா ஒன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் நேரில் சென்று பார்வையிட்டதோடு இவ்விடத்தில் தொடர்ந்து இராணுவத்தினர் ஆதிக்கம் செலுத்துவதை தொடர்ந்தால் மக்களே ஒருமித்து அளவிலான போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பூநகரி பொன்னாவெளியில் வளங்கள் சூறையாடப்படுகின்றது. உருத்திரபுரம் உருத்திரபுரீச்வரர் ஆலயம் ஆக்கிரமிக்க முயற்சிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் அனுமதியில்லாது இராணுவ…
-
- 0 replies
- 447 views
-
-
புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் 06 MAY, 2024 | 04:26 PM வவுனியா, புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் முன்னிலையில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யுமாறு கோரி வவுனியா - கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக இன்று (06) கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. தாக்குதலுக்குள்ளான நபர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் 'பொலிஸார் பக்கசார்பாக செயற்படாது குழாய் கிணறு ராசனை கைது செய்', 'பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து தாக்கியவருக்கு பாதுகாப்பு…
-
-
- 3 replies
- 423 views
-
-
Published By: DIGITAL DESK 3 06 MAY, 2024 | 04:53 PM மட்டக்களப்பில் பாடசாலை சிறுமி ஒருவருக்கு இனம் தெரியாத நபரொருவர் ஊசி ஏற்றியதால் சிறுமி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதுடன், அந்த பொய் செய்தியை திரிவுபடுத்தி சமூக ஊடகங்களில் குரல்பதிவிட்ட ஆசிரியரை எச்சரித்து இன்று திங்கட்கிழமை (6) விடுவித்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.பி.ஆர். பண்டார தெரிவித்தார். “நகரிலுள்ள உள்ள பாடசாலையில் தரம் 5 ஆம் ஆண்டில் கல்விகற்றுவரும் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த வியாழக்கிழமை (02) பாடசாலை முடிந்து பிற்பகல் 2.30 மணி…
-
- 1 reply
- 376 views
-
-
Published By: DIGITAL DESK 3 06 MAY, 2024 | 05:01 PM (எம்.மனோசித்ரா) போதனா வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் சத்திரசிகிச்சைகள் வெற்றியளிப்பதில்லை என தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை. எனவே மக்கள் இவ்வாறான போலி செய்திகள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், போதனா வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் சத்திரசிகிச்சைகள் வெற்றியளிப்பதில்லை என தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை. நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான போதனா வை…
-
- 0 replies
- 158 views
-
-
06 MAY, 2024 | 08:26 PM வெளிநாட்டவர்கள் எமது நாட்டுக்கு வரும்போது 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட 50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு இன்று திங்கட்கிழமை (6) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் , மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா சேவையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டவர் ஒருவர் நாட்டிற்குள் நுழையும் போது அதற்கான விசா விநியோகிக்கும் முழுப் பொறுப்பையும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ஏற்கும் ஏற்கும் என்றும் அமைச்சரவைய…
-
- 1 reply
- 232 views
-
-
கடன் மறுசீரமைப்புத் திட்டம் தோல்வி! – அரசாங்கம் கையில் எடுக்கவுள்ள புதிய துருப்புச் சீட்டு May 6, 2024 அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் முற்றாகத் தோல்வியடைந்துள்ள நிலையில், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக பாரிஸ் கிளப் தொடர்பான ஒரு வேலைத் திட்டத்தையும் சீனாவுடன் மற்றொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தற்போது திட்டமிட்டுள்ளது. வெற்றிகரமான வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு என்ற தலைப்பை எதிர்வரும் தேர்தல்களில் பிரதான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை மகத்தான வெற்றியைப் பெற்றதாகக் காட்டி அதனைப் பெரிய துருப்புச் சீட்…
-
- 0 replies
- 477 views
-
-
யாழில் உணவகத்தில் புழு!! புதியவன்) யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் நகருக்கு அண்மையாகவுள்ள பிரபல சைவ உணவகத்தின் மதிய உணவில் புழு காணப்பட்டமை தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மதிய உணவுப் பொதியை இன்று ஒருவர் 300 ரூபா செலுத்திக் கொள்வனவு செய்துள்ளார். அவர் தனது அலுவலகத்துக்குச் சென்று மதிய உணவை உண்பதற்காக பொதியைத் திறந்துள்ளார். இதன்போது உணவினுள் புழு இருந்தமையை அவதானித்துள்ளார். உடனடியாக யாழ். மாநகர சபையின் சுகாதார மருத்துவ அதிகாரிக்கும், பொதுச் சுகாதார பரிசோதகருக்கும் அறிவித்துள்ளார். இதேவேளை மேற்படி உணவகத்தின் மதிய உணவில் புழு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைத்து மூடப்பட்டிருந்தமையும் நினைவில்க…
-
-
- 23 replies
- 1.7k views
-
-
இந்தியாவுடன் இணைந்து யாழ் சர்வதேச விமான நிலையம் அபிவிருத்தி adminMay 6, 2024 இந்தியாவுடன் இணைந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களிடமிருந்து கோரப்பட்டிருந்த முன்மொழிவுகளுக்கமைய ஒரேயொரு முன்மொழிவு மாத்திரமே கிடைக்கப்பெற்றதன் காரணமாக இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர குறிப்பிட்டுள்ளார். https://globaltamilnews.net/2024/202491/
-
-
- 4 replies
- 570 views
- 1 follower
-
-
06 MAY, 2024 | 12:19 PM வவுனியா வவுனியாவில் கிராம சேவையாளர்கள் இன்று திங்கட்கிழமை (06) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு நாள் சுகயீன விடுமுறை வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் கிராம சேவையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் சேவையினை பெற்றுக்கொள்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த பணிப்பகிஷ்கரிப்பானது சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. தம்பலகாமம் நாடளாவிய ர…
-
- 2 replies
- 253 views
- 1 follower
-
-
06 MAY, 2024 | 01:40 PM இந்திய கடற்பரப்பில் நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களையும் நாட்டுக்கு அழைத்துவர கடற்றொழில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை எவ்வித முனைப்பும் காட்டவில்லை என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று திங்கட்கிழமை (6) காலை மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்திய கடற்பரப்பில் நுழைந்த நிலையில் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களின் நிலை தொடர்பாக இந்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 170 views
- 1 follower
-
-
இலங்கைத் தீவில் நீதீயையும் சமத்துவத்தையும் அடைவதற்காக தமிழர்கள் நடத்தி நீண்ட போராட்டம் மனக்கிளர்ச்சியைத் தருகின்ற சர்ச்சைக்குரிய பல ஆளுமைகளை முன்னரங்கத்துக்கு கொண்டுவந்திருக்கிறது. அவர்களில் ஒருவர் ஈழவேந்தன் என்று தனக்கு புனைபெயரை வைத்துக்கொண்ட தமிழ்த் தேசியவாத அரசியல் செயற்பாட்டாளர் மா.க. கனகேந்திரன். தமிழ் அரசியலில் ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர் இலங்கை பாராளுமன்றத்தில் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டுவரை உறுப்பினராகவும் அங்கம் வகித்தார். 90 வயதைக் கடந்த அவர் 28 ஏப்ரில் 2024 கனடாவின் ரொறண்டோ நகரில் காலமானார். அவரது மறைவு குறித்த செய்திக்கு இலங்கை தமிழ்ப் பத்திரிகைகள் பரந்தளவில் முக்கியத்துவத்தை கொடுத்தன. சில பத்திரிகைகள் ஆ…
-
- 0 replies
- 324 views
-
-
நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு, தட்டுப்பாடு காணப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நோயாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளில் இதுவரையில் 20 வீதமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் விஜேசூரிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அதற்கு மாற்று மருத்துகள் நாட்டில் உள்ளதாகவும் வைத்தியசாலைகளில் அரிதாக தேவைப்படும் 115 வகையான மருந்துகளுக்கு தட்டுபாடுகள் நிலவுவதாகவும், அவற்றை கொள்வனவு செய்வதற்கான நிதி…
-
-
- 2 replies
- 221 views
-
-
05 MAY, 2024 | 06:14 PM தென்னிந்திய நடிகரும் இயக்குநருமான ஆர். பாண்டியராஜன் இன்று (05) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். அவர் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இல. 199 சுண்டுக்குழியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்துகொண்டார். "மக்களுக்கு சினிமாவும் சீரியலும் வழிகாட்டுகிறதா? வழிமாறுகின்றதா?" என்றொரு தலைப்பிலும் "இன்றைய சூழ்நிலையில் பிறருக்கு உதவி செய்வது ஆபத்தே? ஆனந்தமே?" என்ற தலைப்பிலும் இரு பட்டிமன்றங்கள் நடைபெற்றன. இந்த பட்டிமன்றத்தினை காண பல இடங்களிலும் இருந்து மக்கள் வருகை தந்தனர். இதில் கிருபா சாரதி பயிற்சிசாலை அதிபர் அ.கிருபாகரன், பட்டிமன்ற நடுவர் முனைவர் நெல்லை பி.சுப்பை…
-
-
- 1 reply
- 350 views
- 1 follower
-
-
யாழில் தாங்க முடியாத வெக்கை என்று என் நெருங்கிய உறவுகள் சொல்லி அனுப்பி வைத்த வெப்பநிலையைக் காட்டும் படங்கள்
-
-
- 16 replies
- 1.6k views
- 1 follower
-
-
05 MAY, 2024 | 01:59 PM வடக்கு, கிழக்கில் கண்ணிவெடி அகற்றுவதற்கு இன்னும் 23 சதுர கிலோமீற்றர்களே எஞ்சியுள்ளன என மனிதாபிமான கண்ணிவெடி ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தோடு, இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு குறித்தும் இந்த மாநாட்டில் பாராட்டப்பட்டுள்ளது. இந்த மாநாடு சுவிற்ஸர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் (ICCG) கடந்த ஏப்ரல் 29 முதல் மே 1 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் 130 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கான ஜெனீவா சர்வதேச மையம் (GICHD) மற்றும் ஐக்கிய நாடுகளின் கண்ணிவெடி நடவடிக்கைக்கான ஒருங்கிணைந்த ஒருங்கிணைப்புக் குழு ஆக…
-
- 1 reply
- 168 views
- 1 follower
-
-
பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக தத்துக்கொடுக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு! பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தத்துக்கொடுக்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ! ஒரு வருடத்தில் சராசரியாக சுமார் 1700 குழந்தைகள் த தத்துக்கொடுக்கப்படுவதாக பதிவாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் (சிவில் பதிவுகள்) திருமதி லக்ஷிகா கணேபொல தெரிவித்துள்ளார். கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் குழந்தைகளை வேறு நபர்களிடம் கொடுக்கும் போது, அது குறித்த தகவலை பதிவாளர் துறைக்கு தெரிவிக்க வேண்டும். பொருளாதாரச் சிக்கல்கள், திருமணத்துக்குப் புறம்பான உறவுகள் போன்ற சமூ…
-
- 1 reply
- 292 views
-
-
போகம்பர சிறைச்சாலை ஹோட்டலாக மாறுகிறது ! ShanaMay 5, 2024 போகம்பர சிறைச்சாலையை ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முதலீட்டாளர் முன்வந்திருக்கிறார். இதன் பழமையைப் பாதுகாத்து அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். போகம்பர சிறைச்சாலை 2014ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது. மேலும், அந்த அதிகார சபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பெரிய கண்டி அபிவிருத்தித் திட்டம் மற்றும் கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இது மீள் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சிறைச்சாலையின் ப…
-
- 1 reply
- 434 views
-
-
பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை - டக்ளஸ் ! ShanaMay 5, 2024 பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை (04) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், சில தமிழ் கட்சிகள் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் பொது வேட்பாளர் என்ற கருத்தை தற்போது முன்னெடுத்து வருகின்றனர். இதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை. அது சரியானதும் நியாயமானதுமாக நான் கருதவில்லை. கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் தங்களது சுயலாபங்களுக்காக தீராத பிரச்சினை…
-
-
- 3 replies
- 551 views
-
-
இந்திய மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்ய இலங்கைக்கு அழைப்பு ! இந்திய மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் சர்வதேச தேர்தல் பார்வையாளர் நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய தேர்தலொன்று நடைபெறுவதைக் காண்பதற்காக 23 நாடுகளிலுள்ள தேர்தல் முகாமைத்துவ அமைப்புகளுடன் தொடர்புடைய 75 சர்வதேச பார்வையாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையகம் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, மே மாதம் 4ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெறுகின்ற…
-
- 4 replies
- 281 views
-
-
தாய் சடலமாக மீட்பு – வீட்டில் இருந்த 16 வயது சிறுவனை காணவில்லை adminMay 5, 2024 யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதுடன் , வீட்டின் சுவர்களில் இரத்த கறைகளும் காணப்படுகின்றன. தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் (வயது 37) எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் அவரது கணவன் வெளிநாட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அருகில் உள்ள வீட்டில் தூங்க சென்…
-
-
- 1 reply
- 234 views
-