Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தாயகத்தில் தமிழ் மக்களை தலைமைதாங்கத் தகுதியான தலைவர் சி.வி. விக்னேஸ்வரனே என்று தெரிவித்துள்ளார்கள் IBC தமிழ் இணையத்தள வாசகர்கள். IBC தமிழ் இணையத்தளத்தில் கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்டுவந்த கருத்துக்கணிப்பிலேயே மக்கள் தமது விருப்பை இவ்வாறு வெளியிட்டுள்ளார்கள். தாயகத்தில் தமிழ் மக்களை தலைமைதாங்கத் தகுதியான தலைவர் யார் என்ற கேள்விக்கு: 48.09% வீதமானவர்கள் (27,720 வாக்குகள்) சி.வீ. விக்னேஸ்வரன் என்றும், 18.68% வீதமானவர்கள் (10,768 வாக்குகள்) இரா. சம்பந்தர் என்றும், 13.82% வீதமானவர்கள் (7,968 வாக்குகள்) கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் என்றும், 3.9% வீதமானவர்கள் (2,248 வாக்குகள்) டக்ளஸ் தேவானந்தா என்றும், 15.5% வீதமானவர்கள் இவர்களைத் தவிர வெறொருவர் என்று…

    • 49 replies
    • 4.3k views
  2. இலங்கைக்குப் பெருமை சேர்த்த `புசாந்தன்`. மலேசியாவில் இடம்பெற்ற Asian Classic Powerlifting Championship 2023 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த புசாந்தன் இரண்டு வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த புசாந்தன் பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களைத் தனதாக்கிக் கொண்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1363534

    • 6 replies
    • 543 views
  3. மார்ச் 20இல் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படுகிறது சிறிலங்கா குறித்த அறிக்கை சிறிலங்கா தொடர்பான, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை, வரும் மார்ச் 20ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர், இந்த ஆண்டு பெப்ரவரி 25ஆம் நாள் ஆரம்பமாகி, மார்ச் 22ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது. பேரவையின் நிகழ்ச்சி நிரல் வரைவு கடந்தவாரம் தயாரிக்கப்பட்ட போது, மார்ச் 20ஆம் நாள் சிறிலங்கா தொடர்பான விவாதம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ப…

    • 0 replies
    • 350 views
  4. இலங்கையின் அனைத்து துறைமுகங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் பயணிகள் படகு சேவைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இலங்கையின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை, தலைமன்னார் மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் உட்பட பல்வேறு மூலோபாய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது விரிவாக ஆராயப்பட்டடது. இதன்போது கடல்சார் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளை முன்…

  5. ஞாயிறு 22-07-2007 16:35 மணி தமிழீழம் [மயூரன்] எச்சந்தர்ப்பத்திலும் புலிகளுக்கு நிதியை வழங்கவில்லை - மகிந்த ராஜபக்ச எச்சந்தர்ப்பத்திலும் தான் விடுதலைப் புலிகளுக்கு பெரும் நிதியைக் கொடுக்கவில்லை என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை நாவலப்பிட்டியில் நடைபெற்ற பொதுக்கூகூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எத்தகைய சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகளுக்கு பெரும் நிதியைத் தான் வழங்கவில்லை. விடுதலைப் புலிகளுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு நிதியை வழங்கியதாகச் சொல்லப்படும் பரப்புரையில் எதுதுவித உண்மைத் தன்மையும் இல்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆளும் அரசாங்கம் கலைக்கப்படும் என பரப்புரைகள் மேற்கொள்ளப்படுக…

  6. சிக்கிமுக்கு உதவி செய்ய தயார் : மம்தா சிக்கிமை மையமாகக்கொண்டு ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவு ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மாலை 6.11 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்கத்தால் சிக்கிம் தலைவநகர் காங்டாக் பேரவை கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டது. காங்டாக் நகரில் பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். பல்வேறு இடங்களில் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநிலம் முழுவது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழை பெய்த் வருவதால் மீட்புபணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிக்குமுக்கு மீட்பு பணிகளில் உதவி செய்யவிருப்பதாக மம்தா பானர்ஜி …

  7. ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வை வழங்க முடியும் பிரதமர் ரணில் தெரிவிப்பு யக்கலமுல்ல - கராகொட பூர் வாராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மதகுருமாருக்கான விடுதியை திறந்து வைக்கும் நிகழ்விலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இக்கருத்தை வெளியிட்டார். இந்நிகழ்வு நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் தெரிவித்ததாவது, அரசியலமைப்பு வந்தால் நாடு பிளவுபடும் என சிலர் கூறுகின்றனர். நாங்கள் எந்த ஒரு அரசியல மைப்பினையும் தயாரிக்கவில்லை. அரசியலமைப்பு வரைபையே தயாரித்துள்ளோம். ஜே.ஆர்.ஜயவர்தன ஒற்றையாட்சியை மாற்றுவதில்லை என கூறினார். நானும் ஒற்றையாட்சி என்றே கூறுகின்றேன். ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களைப் பக…

    • 0 replies
    • 787 views
  8. Published By: VISHNU 10 JAN, 2024 | 08:52 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) செங்கடலில் இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாப்பதற்காக கடற்படையை அங்கு அனுப்புவதை விட்டு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கு உதவிகளை செய்ய கடற்படையினரை ஈடுபடுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற நீதிமன்ற நியாயசபை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக புல்மோட்டை…

  9. தமிழின அழிப்பை அம்பலப்படுத்திய `சாவிலும் வாழ்வோம்' நினைவு நாள் கறுப்பு ஜூலையின் ஆறாவடுக்களுடன் உலககெங்கிலும் `கூடு கலைந்து' வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்கள், தாம் தங்கியுள்ள நாடுகளில் அந்தக் கரி நாட்களை உணர்வெழுச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளனர். பேரினவாத மமதைகளின் தமிழின அழிப்புத் தாண்டவத்துக்குள் அகப்பட்டு அநியாயமாக பலியெடுக்கப்பட்ட தமது உறவுகளை மாத்திரமன்றி இற்றைத் திகதி வரை தொடரும் அரச பயங்கரவாதத்தினால் தாயகத்தில் மடிந்துகொண்டிருக்கும் தமது சொந்தங்களையும் நினைவு கூர்ந்தனர். கடந்த புதன்கிழமை (25-07-07) நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் தமிழர்கள் மாத்திரமன்றி பிற இனத்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர். `சாவிலும் வாழ்வோம்' என்ற அடிப்படைக் கோஷத்துடன் இடம்பெற்ற இந் நிக…

    • 1 reply
    • 979 views
  10. தமிழ் மொழியில் தேசியம் கீதம் பாடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று இன்று மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே தமிழில் தேசிய கீதம் இயற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள மாணவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் பத்தக்குட்டி சுமன் என்ற குடும்பஸ்தரே தாக்குதலுக்கு இலக்காகி செங்கலடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். http://www.virakesari.lk/articles/2015/05/16/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF…

    • 4 replies
    • 658 views
  11. 22 JAN, 2024 | 02:36 PM அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகந்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சம்பாதித்தமை தொடர்பில் பெண் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் . கைது செய்யப்பட்ட நபர் அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவராவார் என பொலிஸார் தெரிவித்தனர் . இவரிடமிருந்து சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக…

  12. வடக்கு நடவடிக்கை எளிதானது அல்ல- சிறிலங்காவுக்கு இந்தியா உதவி செய்ய வேண்டும்: கேணல் ஹரிகரன் சிறிலங்கா அரசாங்கம் கிழக்கைப் போல் வடக்கில் எளிதாக வெற்றி பெற்றுவிட முடியாது என்றும் பேச்சுவார்த்தைக்குப் போங்கள் என்று கூறுவதோடு மேலதிகமாகவும் சிறிலங்காவுக்கு இந்தியா உதவி செய்ய வேண்டும் என்றும் முன்னாள் இந்திய இராணுவப் புலனாய்வு அதிகாரி கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்: இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியாத அமைப்பு எதுவும் இல்லை. ஆகையால் தோற்கடிக்க முடியாது என்பது தொடர்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் அதே நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் யார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அவர்கள் …

  13. அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன 02 அக்டோபர் 2011 அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வருடத்தில் இந்த அமைச்சரவை மாற்றங்களை மேற்கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தேசித்துள்ளார். சில அமைச்சுக்கள் புதிதாக இணைக்கப்படுவதுடன், சில அமைச்சுக்கள் இல்லாமல் செய்யப்பட உள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் கிரக நிலை மாற்றத்திற்கு ஏற்ற வகையில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜோதிடத்தில் மிகவும் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், ஜோதிட நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய அடுத்த ஆண்டு அமைச்சரவையில் மாற்றங்கள் ச…

  14. வழமைக்கு திரும்பாத யாழ்ப்பாணம் புங்குடுதீவு பள்ளி மாணவியின் கொலையை அடுத்து யாழ். நகர் அதனை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட பதட்ட சூழல் இன்னமும் வழமைக்கு திரும்பவில்லை. புங்குடுதீவு மாணவி வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டதையடுத்து பல்வேறு போராட்டங்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வந்தன. அதன் ஒருஅங்கமாக கடந்த 20 ஆம் திகதியும் பல்வேறு அமைப்புக்கள் போராட்டத்தை நடாத்தியதுடன் மகஜர்களையும் அதிகாரிகளிடம் வழங்கி வைத்தனர். அத்துடன் அன்றைய தினம் யாழில் பூரண கடையடைப்பும் அனுஸ்டிக்கப்பட்டது. அன்றைய தினம் அமைதிப் போராட்டம் ஒருபகுதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நீதிமன்ற வளாகத்திற்குள் கூடிய ஆர்ப்பாட்டகாரர்களால் நீதிமன்றம் தாக்கப்பட்டதுடன் சிறைச்…

  15. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருமாறு கனடாவின் பிராந்திய பொலிஸாரிடம் வலியுறுத்தல் Sri Lanka PoliceSri Lankan TamilsCanada 1 மணி நேரம் முன் Kamal in உலகம் Report Share விளம்பரம் கனடாவின் பீல் பிராந்திய பொலிஸார் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிக சிற்சபேசன் வலியுறுத்தியுள்ளார். கனடாவின் பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா அண்மையில் இலங்கைக்கு வி…

    • 0 replies
    • 383 views
  16. Posted on : Sat Aug 11 8:36:48 EEST 2007 .அடுத்தவாரம் இங்கு வருகை தரவிருக்கும் மற்றொரு ஐ.நா.பிரதிநிதியைத் தடுக்கக் கோருகிறது ஜே.வி.பி. ஐ.நாவின் மற்றுமொரு பிரதிநிதி அடுத்த வாரமளவில் இலங்கை வரவுள்ளார் என் றும் அவரை வரவிடாமல் உடனடியாகத் தடுக்குமாறும் ஜே.வி.பியின் நாடாளுமன் றக்குழுத் தலைவர் விமல் வீரவன்ஸ நேற்று நாடாளுமன்றத்தில் அரசிற்கு வேண்டு கோள் விடுத்தார். இலங்கைக்கு ஏற்கனவே வந்து திரும் பிய ஐ.நா.உயரதிகாரி ஜோன் ஹோம்ஸ் இலங்கை தொடர்பாக வெளியிட்ட கருத் துப் பற்றி பிரதமர் அரசின் நிலைப்பாட்டை நேற்று விளக்கியதைத் தொடர்ந்து தனது கருத்தை முன் வைத்தார் விமல்வீரவன்ஸ். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு: ஐ.நா.பிரதிநிதி ஜோன்ஹோம்ஸ் வருவதை நாம் ஏற்கனவே எதிர்த்தோம். அது தொடர…

  17. உயர் பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் முடக்கப்பட்டிருந்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக 6 தொடக்கம் 7 பில்லியன் ருபா வரைச் செலவாகும் என்றும், இச் சீமெந்துச் தொழிற்சாலையில் 250 முதல் 500 மெற்றிக் தொன் சீமெந்து உற்பத்தி செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமெந்து உற்பத்திக்காக புதிய இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீண்டும் இயங்க ஆரம்பித்தால் யாழில் அதிகமானவர்கள் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் தென்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்குமே இங்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றத…

  18. Published By: RAJEEBAN 11 FEB, 2024 | 08:14 AM ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆலோசனைகளை பின்பற்றவேண்டிய அவசியமில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார் சண்டே ஒப்சேவருக்கான பேட்டியொன்றின் போது நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் ஆலோசனைகளை செவிமடுக்கவேண்டிய அவசியமில்லை அவர்களின் செயற்பாடுகளின் மூலம் சாதகமான விளைவுகள் எதுவுமில்லை அவர்களின் செயற்பாடுகள் எப்போதும் எதிர்மறையானவை என அவர் தெரிவித்துள்ளார். …

  19. மலேசிய கடற்படைக்கு சொந்தமாக கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. நாளைய தினம் வரை இந்த கப்பல் கொழும்பு துறைமகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மலேசிய கப்பலில், 11 அதிகாரிகளும், 39 சிப்பாய்களும் இலங்கை வந்துள்ளனர். இதேவேளை 23 அமெரிக்க கடற்படை அதிகாரிகள் மற்றும் 175 கடற்படையினருடன் அமெரிக்காவின் கப்பல் ஒன்று இலங்கை சென்றுள்ளது. காலி துறைமுகத்திற்கு அருகில் இந்த கப்பல் நங்கூரமிட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான கடற்படை ஒத்துழைப்புகளை அதிகரித்து கொள்ளும் நோக்கில், பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleVi…

  20. ஜீவனின் வளர்ச்சி மனோவிற்கு எரிச்சல், அதனாலேயே புலம்பல் - இது காழ்ப்புணர்ச்சி - வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும் PrashahiniFebruary 22, 2024 ஒரு இளம் அரசியல் தலைவராக மக்களுக்கான அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்து, மக்களின் கோரிக்கைகளை அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிறைவேற்றிவருவதால், அரசியலில் தாம் காணாமல் போய்விடுவோம் என்ற பீதியிலேயே அவர் மீது சில எதிரணி மலையக அரசியல்வாதிகள் விமர்சனக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்துள்ளனர். இது காழ்ப்புணர்ச்சி – வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார். வீட்டுரிமையையும், காணி உரிமையையும் வைத்து இது…

  21. வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுமாயின் மக்கள் மயப்படத்தப்பட்ட போராட்டங்கள் வெடிக்கும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எங்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுமாயின் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை ஜனநாயக ரீதியில் முன்னெடுத்து சர்வதேசத்திற்கு எமது கருத்துக்களை வெளிக் கொண்டுவருவோம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் அறைகூவல் விடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியப் பிரதிநிதிகள் இன்று புதன்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி கருத்தினைத் தெரிவித்துள்ளனர். எங்கள் மீது தாக்குதல் நடத்தி எமது கல்வி நடவடிக்கையை பாதிக்கக் செய்யும் செயல்களை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்…

  22. பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட இடத்தில் சிறுமி ஒருவரை இளைஞர் ஒருவர் தடுத்துவைத்திருந்தார் என்று அவரது தாயாரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தினர். அத்துடன் இளைஞனைக் கைது செய்தனர். 13 வயது நிரம்பிய சிறுமியை சட்டபூர்வ பாதுகாவலரின் பாதுகாப்பிலிருந்து கவர்ந்து சென்று பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தினார் என்ற கு…

  23. 04 MAR, 2024 | 09:43 PM இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, 92 ரக பெற்றோல், மற்றும் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. இதேவேளை, 95 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 447 ரூபா குறிப்பிடப்பட்டுள்ளது. சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 458 ரூபாவாகும். மண்ணெண்ணெயின் விலை லீற்றருக்கு 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 257 ரூபாவாகும். https://www.virakesari.lk/article/177912

  24. யாழ்பல்கலைக்கழக மாணவர் மீது நடாத்தப்படும் தாக்குதலின் தொடர்ச்சியாக மற்றுமொருமாணவனும் இனந்தெரியாத நபர்களின் மிலேச்சதனமான தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார்.மேற்படி தாக்குதலுக்கு இலக்காகி உள்ளவர் கலைப்பீட நான்காம் வருடத்தைச்சேர்ந்த செல்வன் இராஜவரோதயம்.கவிராஜன் எனும் மாணவனாவார் .22.10.2011 அன்று உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு பரந்தன் பூநகரி வீதியால் தனது வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இரவு 8.45மணியளவில் ஆட்டோவில் வந்த தாக்குதலாளிகள் சரமாரியாக கற்களால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். மாணவர் ஒன்றியத்தலைவர் தாக்கப்பட்டு பல்கலைக்கழக வகுப்புப்பகீஸ்கரிப்புப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ள அதே காலப்பகுதியில் இம்மாணவன் தாக்கப்பட்டுள்ளதோடு மாணவர் தாக்கப்படுவத…

  25. Published By: VISHNU 15 MAR, 2024 | 01:49 AM வடபகுதியின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகப் பல மில்லியன் நிதியை வழங்க சீனா, இந்தியா, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தைச் சரியானதாக பயன்படுத்திக்கொள்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறுகையில்; பாரிய பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்திருந்தாலும் தற்போதுள்ள அரசின் சரியான அரசியல் வழிநடத்தல் காரணமாக அந்த நிலையிலிருந்து நாடு தற்போது மீண்டு வருகின்ற நிலையில் வடக்கின் அபிவிருத்திக்கு இன்றைய அரசு அதிகளவான முக்கியத்துவம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.