Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருகோணமலையில் லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள 99 எண்ணெய்க் குதங்களையும் சிறிலங்கா அரசாங்கம் மீளப்பெறவுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. திருகோணமலையில் அமைந்துள்ள இந்த எண்ணெய்க் குதங்களை கடந்த 2002ம் ஆண்டு சிறிலங்கா பெற்றோலிய அமைச்சு, 33 ஆண்டு குத்தகைக்கு லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனத்துக்கு வழங்கியிருந்தது. ஐதேக ஆட்சிக்காலத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்பாட்டை நிறுத்தி விட்டு, எண்ணெய்க் குதங்களை மீளப்பெறுவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே சட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது. “இந்த எண்ணெய்க் குதங்கள் அமைந்துள்ள காணி திருகோணமலை அரசஅதிபர் செயலகத்துடன் இணைந்தது. தமக்குச் சொந்தமாக இல்ல…

  2. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் சிலரை சிறீலங்கா புலனாய்வு பிரிவினர் வடமராட்சிக்கிழக்கில் தேடி அலைவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டதாக சிறீலங்கா அரசு சர்வதேச நாடுகளுக்கு பரப்புரை செய்துவரும் நிலையில் இவ்வாறு புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வடமராட்சிக் கிழக்கில் உள்ள ஒரு கிராமத்தில்(பாதுகாப்பு கருதி கிராமத்தின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது) தனது குடும்பத்துடன் வாழ்ந்து வரும் முன்னாள் போராளி ஒருவரை சிறீலங்கா புலனாய்வுப்பிரிவினர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியிருந்ததாகவும் தற்போது புலிகளின் நடவடிக்கைகள் …

  3. அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.கண்டி – அம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அண்டைய நாடான இந்தியாவுக்கு கூட இலங்கை அமைச்சர்களால் செல்ல முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், அரசாங்க நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நன்மை அடைந்து வருவதாக ஜே. வி .பி தெரிவித்துள்ளது. …

  4. இலங்கையில் கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்வனவு செய்துவரும் இராணுவத்தினர் தமது பிரதேசத்திலும் நெல் கொள்வனவு செய்ய வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கூறுகின்றனர். இந்த மாகாணங்களில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரின் நாளாந்த அரிசி தேவையை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டே இந்த நெல் கொள்வனவு நடவடிக்கை என இராணுவம் கூறுகின்றது. இந்த திட்டத்தின் படி விவசாயிகளுக்கு உச்ச நன்மை கிடைக்கச் செய்வதே தமது நோக்கம் என்று கூறும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, விவசாயிகளின் போக்குவரத்து விநியோக சிரமங்களை குறைக்கும் வகையில் நேரடியாக அந்தந்த இடங்களுக்கு இராணுவம் சென்று நெல் கொள்வனவு செய்வதாகவும் தெரிவிக்கின்றார். …

  5. புலம்பெயர் நாடுகளிலிருந்து ஈழம் செல்லும் பலரிடம் ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பி ஆயுத குழுவினர் பணம் பறிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து யாழ் செல்லும் பலரது வீடுகளுக்கு நேரடியாக இரவு வேளைகளில் வானில் வந்திறங்கும் ஈ.பி.டி.பி ஆயுத குழுவினர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் பெயர்களை கூறி விசாரிப்பதாகவும் அதன் பின் தமது கட்சியின் வளர்ச்சிக்காக பணம் தருமாறும் கேட்டுவருவதாகவும் மறுத்தால் அச்சுறுத்தும் விதமாக மிரட்டுவதாவும் பின் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு பல ஆச்சுறுத்தல்களைவிடுத்து பணத்தை கறப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன் யாழில் நடந்துள்ளது. ஜரோப்பிய நாடு ஒன்றிலிருந்து யாழ் சென்ற ஒருவரி…

  6. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீது இந்தியாவிற்கு எதுவிதமான அக்கறையும் இல்லை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடாத்தி வருகின்ற போராட்டங்கள் எதுவும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக நடைபெற்றதல்ல. இருப்பினும் இந்நாட்டு தமிழ் மக்களுக்கு உருப்படியான தீர்வுகள் எதுவும் கிடைக்குமானால் ஜே.வி.பி. இரு கைகளையும் உயர்த்தி ஆதரவு வழங்கும். இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீது இந்தியாவுக்கு எதுவித கரிசனையும் இல்லை. ஏனெனில் இந்தியாவினால் சம்பூர் அமைக்கவுள்ள அனல் மின் நிலையத்திற்…

  7. பட்டதாரிப் பயிலுநர் நியமனத்தில் அரசியல் முறைகேடு, ஊழல் இடம்பெற்று வருவது அம்பலத்துக்கு வந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் நிர்ப்பந்தம் காரணமாக நேற்றைய தினம் 50 பட்டதாரிகளுக்குத் தனியான நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டப் பட்டதாரிகளுக்கு நாளை திங்கட் கிழமையும் நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமையும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட இருந்த நிலையில் நேற்றைய தினம் 50 பட்டதாரிகளுக்கு இந்த ரகசிய நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முல்லைத்தீவு அரச அதிபருக்கு வழங்கிய அழுத்தத்தின் பேரிலேயே இந்த நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது என்று உதயனுக்குத் தெரியவந்தது. தான் அனுப்பும் பட்டியலில் உள்ளவர்களுக்கு…

    • 2 replies
    • 694 views
  8. 'கெரகம்' சரியில்லாததால் நாடு நாடாக அலையும் ராஜபக்சே! கொழும்பு: ராஜபக்சேவுக்கு கிரகம் சரியில்லையாம். இதனால்தான் அவர் கொழும்பில் தங்கியிருக்காமல் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாராம். கொழும்பு ஜோசியக்காரர்கள்தான் இப்படிக் கூறியுள்ளனர். இந்த ஜோசியக்காரர்கள் கூற்றுப்படி, மே 16-ம் தேதி காலை 6.47 மணி முதல் சனி கன்னி ராசிக்குள் பிரவேசிக்கிறது. அதன்பின்னர் 17-ம் தேதி 9.45-க்கு குரு ரிஷப ராசிக்கு செல்கிறது. இந்த மாற்றம் இலங்கைக்கு சரிவராதாம். இதனால் இலங்கை தலைவர்களுக்கும் கிரகப்பலன் சரியாக இல்லையாம். எனவேதான் இந்த காலகட்டத்தில் ஊரில் இருக்காமல் வெளிநாடுகளுக்குப் போகுமாறு ராஜபக்சேவுக்கு அவரது ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனராம். இதனால்தான் ராஜபக்சே நாடு நாடாக அ…

  9. பிரித்தானிய சட்டத்திட்டங்களை மீறி, லண்டனில் விடுதலைப்புலிகளின் கொடியை பகிரங்கமாக காட்சிப்படுத்தியமை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க பிரித்தானியாவில் உள்ள சிங்கள அமைப்பான இலங்கையர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. பிரித்தானியா, விடுதலைப்புலிகளை தடைசெய்துள்ள நிலையில், புலிகளின் கொடியை காட்சிப்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. உலக தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழ் பேரவை ஆகிய இந்த சட்டத்தை மீறி புலிகளின் கொடியை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் புலிகக் கொடியை ஏந்தியிருந்தவர்கள் தமது முகங்களை மூடிக் கொண்டிருந்தனர் எனவும் திவயின தெரிவித்துள்ளது. அத்துடன் ஹித்ரோ விமான நிலையத்தின் 4 இலக்க கட்டடத்தில், 100க்கும் மேற்பட்ட புலிக்கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. …

  10. மாதகல் மேற்குக் கடல் பகுதியில் கடற்றொழில் செய்வதற்குத் தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் விசனம் தெரிவிக்கின்றனர். கடற்படையினரே இதற்கான அனுமதியை மறுத்துள்ளதாகவும் மாதகல் மேற்கு சாம்பல் துறையில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரையை அண்டிய கடற் பகுதியிலேயே தொழில் செய்யத் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியைப் புனிதப் பிரதேசமாக மாற்றும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே கடற்றொழில் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். பௌத்த விகாரையில் நின்று கடலைப் பார்க்கும் போது கடல் தெரியும் தூரம் வரை கட…

    • 0 replies
    • 532 views
  11. திடீர் ஜனாதிபதித் தேர்தலை நடாத்த அரசு நடவடிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர் அடுத்த ஆண்டில் திடீர் ஜனாதிபதித் தேர்தலொன்றை நடத்துவது குறித்து அரசின் கவனம் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய ஓகஸ்ட் மாதத்தில் கலைக்கப்படவுள்ள வடமத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாண சபைகளின் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டதும் 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமளவில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்தி விட்டுப் பின்னர் திடீர் ஜனாதிபதித் தேர்தலொன்றை அறிவிப்பது தொடர்பில் அரசின் கவனம் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த தினங்களில் இது தொடர்பான சட்ட ஆலோசனைகளை ஜனாதிபதி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. …

    • 0 replies
    • 733 views
  12. லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனைச் சந்திதிருந்தார் எனவும் இச் சந்திப்பு மகிழ்ச்சியான சூழலில் நடைபெற்றதாகவும் சிறிலங்கா ஊடகங்களில் வெளியான தகவல்களை பிரித்தானிய பிரதமரின் பேச்சாளர் ஒருவர் நிராகரித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, போர்க்குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், மஹிந்தவிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளதாக சனல்4 ஊடகம் தெரிவித்துள்ளது. கமரூனும், மஹிந்த ராஜபக்சவும் மகிழ்ச்சியாக உரையாடியதாகவும், இதன்போது மஹிந்த, பிரித்தானியப் பிரதமருக்கு தமது நாட்டின் நிலைமைகள் குறித்து விளக்கமளித்தாகவும் 'டெய்லி மிரர்' நாளேட்டில், மஹிந்தவின் சர்வதேச ஊடக …

    • 1 reply
    • 724 views
  13. பிரித்தானிய மகாராணியின் வைரவிழா நிகழ்வுகளில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்திருக்கக் கூடாது என்று றோயல் கொமன்வெல்த் சமூகத்தின் தலைவர் பீற்றர் கெல்னர் தெரிவித்துள்ளார். சனல் 4 தொலைக்காட்சியில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர்,“ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்த இந்தத் தவறை மகாராணியோ பக்கிங்ஹாம் அரண்மனையோ செய்யவில்லை. கொமன்வெல்த் தான் அதைச் செய்தது. சிறிலங்காவுக்கு எதிராக கடைசியாக பேர்த்தில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டிலேயே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாது போனால், கொழும்பில் நடைபெறவுள்ள அடுத்த கொமன்வெல்த் மாநாடு ஒரு பேரிடராகவே அமையும். சிறிலங்கா மீது அமைப்பு ரீதியாக…

  14. இறுதி யுத்தம் இடம் பெற்ற வேளையில் சிங்கள படைகளினால் கைது செய்யபட்டு சித்திர வதைகளுக்கு உட்படுத்த பட்ட போராளிகளின் அதிர்ச்சி படங்கள் . இதில் உள்ள போராளிகளை உடன் அடையாளம் காட்டு வண்ணம் உலக தமிழ் மக்களிடம் மன்றாடி கேட்டு கொள்கின்றோம் . தெரிந்தவர்கள் உடனடியாக எமக்கு தெரிவிக்கும் படி வேண்டி கொள்கின்றோம் .

  15. வெளிநாடுகளில் இயங்கும் இணையத்தளங்களுக்கு தகவல்களை வழங்கும் செய்தியாளர்களின் விபரங்களைத் திரட்டுவதற்கான பொறுப்பு சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாந்த திசநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே நேரடியாக வழங்கியுள்ளார். கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சாந்த திசநாயக்க சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராவார். சில காலங்களுக்கு முன்னரே இவர், போர்த் தந்திரோபாயக் கற்கைநெறி ஒன்றை முடித்துக் கொண்டு சீனாவில் இருந்து திரும்பியிருந்தார். அதேவேளை, அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் சந்திரா…

    • 4 replies
    • 864 views
  16. இன அழிப்பின் முக்கிய ஆதாரங்கள் பாகம் தொடர்ந்து வெளியிட உள்ளோம்.பிரித்தானியா தமிழர்களுக்கு அதிகளவில் புகலிட கோரிக்கைக்கு உதவிய வழக்கறிஞர் வாசுகி முருகதாஸ் அவர்களுக்கு கிடைக்க பெற்ற ஆதாரங்கள் அண்மையில் வெளியிடப்படுள்ளன.இதனால் சிங்கள அரசுக்கு பெரும் நெருக்குதல்கள் அதிகரித்துள்ளது. ஆங்கில ஊடகம் பலவற்றுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.தொடர் நெருக்குதலால் அதிர்ந்துள்ள கொழும்பு தொடர் முயற்சியாக புலம்பெயர் இணையங்களுக்கு செய்திகளுக்கு சேகரித்து அனுப்பும் இலங்கையை சேர்ந்த நபர்களின் விபரங்களை திரட்டும்படி மகிந்த நேரடியாக புலனாய்வு துறையினருக்கு உத்தரவை பிறப்பித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இறுதி யுத்தத்தில் கைதாகி சித்திரவதைகளுக்கு உட்படுத்த பட்ட பல போராளிகளின…

    • 16 replies
    • 2k views
  17. யாழ் -குடாநாட்டிலுள்ள 40 சதவீத அதி உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தை பொதுமக்களிடம் ஒப்படைத்துள்ளதாக இராணுவம் தெரிவிப்பதை கூட்டமைப்பு முற்றாக நிராகரிப்பதாக கூட்டமைப்பின் எம் பி மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கிலுள்ள தமிழ் மக்களது பூர்வீக நிலம் அபகரிக்கப்பட்டு புத்த சிலைகள், விகாரைகள், இராணுவ குடியிருப்புகள், விமான ஓடு பாதைகள் அமைக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கிழக்கில் குச்சவெளி போன்ற பிரதேசங்களில் பௌத்த சின்னங்கள் இருப்பதாகத் தெரிவித்து முஸ்லிம் மக்களும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். வடக்கில் இராணுவத்தினரின் கூற்றுப்படி பார்த்தாலேயே இன்னும் 60 சதவீத அதி உயர் பாதுகாப்பு வலய நிலப்பிரதேசம் விடுவிக்கப்படவில்லை. அதி உயர் பாதுகாப்பு வலயத்திலிரு…

  18. என்ற கருத்து, புலம்பெயர் தமிழர்களில் உள்ள சில குழுக்களின் பிரசாரமே- குமரன் பத்மநாதன் விடுதலைப்புலிகள் அமைப்பில் மீதமுள்ள உறுப்பினர்கள் மீண்டும் ஒன்றிணைந்து வருகின்றனர் என்ற கருத்து, புலம்பெயர் தமிழர்களில் உள்ள சில குழுக்களின் பிரசார வேலைத்திட்டத்தின் ஒரு பகுதி மாத்திரமே என குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களில் உள்ள குழுக்களுக்கு தமிழ் மக்கள் குறித்து உண்மையான அக்கறையிருந்திருந்தால், அவர்கள் நாட்டை செல்லாதிருந்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். விநாயகம் மற்றும் நெடியவன் போன்றவர்கள் போரின் பல கட்டங்களின் போது நாட்டில் இருந்து தப்பிச் சென்றதாகவும் அவர்கள் தற்போது வெளிநாடுகளில் உள்ள அப்பாவி தமிழர்களை தவறாக வழிநடத்தி வருகின்றனர் எனவும…

  19. மே 18 என்பது தமிழர் வாழ்வியலில் மறக்கப்பட முடியாத ஒரு துயர நாள் தான், அதேநாளில் அதற்கு முன்னர் நிகழ்ந்தேறிய வரலாற்றுப்பதிவுகளை பிரட்டிப்பார்ப்பது பொருத்தமானதாக அமையும். அதன் ஒரு அங்கமான வன்னி ஊடகவரலாற்றில் தனி இடம் பெற்றிருந்த புலிகளின்குரல் தோற்றம் அது எதிர்கொண்ட சவால்கள் அதன் இறுதிப்பயணம் தொடர்பிலான மேலோட்டமான பார்வை, 21ஆம்நாள் நவம்பர் மாதம் 1990 ஆண்டு அன்;று புலிகளின் குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால் தொடங்கிவைக்கப்படுகின்றது. யாழ்குடாநாட்டினை முதன்மையாக கொண்டு அன்றைய காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றன, யாழ்ப்பாணத்தில் மக்கள் செறிந்துவாழும் நிலையில் யாழ்ப்பாண கோட்டைக்கு அருகில் வைத்து பண்பலையில் 98 அதிர்வெண்யில் புலிகளின் குரல் வா…

  20. இலங்கையில் உள்ள பௌத்த விகாரைகளை கட்டி எழுப்பும் அரசின் செயற்பாடுகளை எவராலும் தடுக்க முடியாது என்று கோத்தாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். மாத்தறை, வெஹரஹேன விஹாரையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் அந்த நிகழ்வில் உரையாற்றுகையில், கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களால் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள கிராமங்களில் அதிக அளவிலான பௌத்த விகாரைகளை தரிசிக்க முடியாத நிலை இருந்தது. அத்துடன் அவை சேதமடைந்த நிலையிலும் இருந்தது. இந்த நிலை இராணுவத்தினரின் முயற்சியினால் மாற்றப்பட்டது. இந்த நிலையில் அவற்றை நாங்கள் மரபுரிமையுடன் பாதுகாப்பாற்றும் நடவடிக்கைகளை எவராலும் தடுக்க முடியாது. அதற்காக ஏற்படும் எந்தவிதமான சவால்…

    • 0 replies
    • 654 views
  21. Published By பெரியார்தளம் On Wednesday, June 6th 2012. Under பெரியார் முழக்கம், முதன்மைச்செய்திகள் அனைத்து தமிழர் சிக்கல்களுக்குக் காரணம் ‘திராவிடம்’ என்ற சொல் தானா? எந்த ஒரு மனிதரையும் ஒற்றை அடையாளத்தில் பொருத்தி விட முடியுமா? என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டுள்ளார். அடுக்கடுக்கான கேள்விகளோடு கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை. இன்றைய நிலையில் சமுதாயத்தில் நிலவும் ஏராளமான சிக்கல்கள் உரிய அளவுக்கு கவனிக்கப் படாமலும், கவனத்துக்கு வந்தாலும் அதைத் தீர்ப் பதற்கான உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படாமலும் உள்ளன. சமூக தளத்தில் சாதிய அடக்குமுறைகள்; தீண்டாமை வன்கொடுமைகள்; அரசுத் திட்டங்களே சாதிய ஆதிக்கத்திற்கு சாதகமாக தீட்டப்படுதல்; தேர்ந்தெடுக…

  22. ஒஸ்ரேலியா மெல்பேர்ண் நகர மையத்தில் அமைந்துள்ள விக்ரோரிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அலுவலகக் கட்டிடத்தில், (Victoria Trades Hall) தமிழீழத் தேசிக்கொடி தொழிற்சங்கத்தினரால் உத்தியோகபூர்வமாக ஏற்றப்பட்டது. இன்று வெள்ளிக் கிழமை (08-06-2012) மாலை 4.45 மணிக்கு தமிழீழத் தேசியக் கொடிக் கீதம் ஒலிக்க தொழிற் சங்கத்தின் முக்கிய உறுப்பினர் Jacob Cragg அவர்களால் தமிழீழத் தேசியக் கொடி கட்டிடத்தின் உச்சியில் ஏற்றி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒஸ்ரேலிய பல்லினமக்கள், கரவொலி எழுப்பித் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஒஸ்ரேலியா அரசினால் பாதுகாக்கப்படும் புராதான கட்டிடங்களில் முக்கியாமாதொன்றான Victoria Trades Hall ஆனது உலகின் பழமைவாய்ந்த தொழிற்சங்கக் கட்டடமாக…

    • 9 replies
    • 1.5k views
  23. சீனாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை விஜயம் செய்ய உள்ளார். அவருடன் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பினை அடுத்து இந்த விஜயம் இடம்பெறுவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சீனாவில் தங்கியிருப்பார்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.தலைநகர் பெய்ஜிங், ய்வாங், சங்காய் போன்ற நகரங்களுக்கு விஜயம் செய்ய உள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களுடன் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். http://www.seithy.co...&language=tamil

    • 2 replies
    • 784 views
  24. ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு மூலம் சிறையில் இருந்து அண்மையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவின் பாதுகாப்புக்காக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 15 படையினரை கொண்ட ஆளணி இன்று முதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சிறையில் இருந்து விடுதலைப் பெற்ற பின்னர், டிரான் அலஸின் ஆலோசனையின் படி செயற்பட்டு வரும் பொன்சேக்காவின் நன்னடத்தையை கவனத்தில் கொண்டு பாதுகாப்பு செயலாளரின் தீர்மானத்திற்கு அமைய இந்த பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் கொண்டு வரவிருந்த பொன்சேக்காவின் உரிமைகளை மீள வழங்குமாறு கோரும் நாடாளுமன்ற யோசனையை பொன்சேக்கா எதிர்த்தமையானது அவரது சிறந்த நன்னடத்தை எனக் கருதியே இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. http://w…

  25. தமிழக - சென்னைப் பெருநகரின் ஜவஹர் நகரில் உள்ள அங்காடியொன்றுக்கு முன்னால், சிறிலங்கா தயாரிப்பு பொருட்களைப் புறக்கணிக்க கோரும் விழிப்பூட்டல் பரப்புரை போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. சிறிலங்கா தயாரிப்பு பொருட்களை புறக்கணியுங்கள் என்ற முழக்கத்துடன், குறித்த அங்காடிக்கு முன்னால் ,வாடிக்கையாளர்களை நோக்கி துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இராஜ்குமார் பழனிச்சாமி அவர்கள் பல வாடிக்கையாளர்களுக்கு எது சிறிலங்கா தயாரிப்புகள் என்றே தெரியவில்லை. அதனால் அவர்களுக்கு சிறிலங்கா தயாரிப்பு பிஸ்கட் , இனிப்புகள், கேக்குகள் முதலியவற்றை அடையாளம் காட்டினோம் எனத் தெரிவித்துள்ளார். தமிழக …

    • 10 replies
    • 825 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.