ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143395 topics in this forum
-
கோவையில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கை விவசாயத்துறை அமைச்சர் ரெஜினால்ட் கூரே, மதிமுக உட்பட சில கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புக்களின் எதிர்ப்பின் விளைவாய் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறாமல் நாடு திரும்பியிருக்கிறார். வியாழனன்று நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பங்குபெறவென புதனன்று கோவை சென்றிருக்கிறார் அமைச்சர். கரும்பு ஆராய்ச்சி நிறுவன நிகழ்ச்சி குறித்து அறிந்த அமைப்புக்கள், அவருக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஊடகங்களுக்குத் தெரிவிக்க, காவல்துறையின் ஆலோசனையின்பேரில் இன்று காலையே சென்னை வழியாக கொழும்பு திரும்பினார் கூரே. அவர் சென்றுவிட்டது தெரியாத ஆர்வலர்கள் அவர் தங்கியிருந்த ஓட்டலின் முன்பும், மத்திய ஆராயச்சி நிறுவனம் ம…
-
- 1 reply
- 735 views
-
-
எங்களுக்கு வாழ்வு தந்த 10 குடும்பங்களின் வாழ்வுக்கு கைகொடுங்கள் 1) தீலீபன் (முன்னாள் போராளி ) முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு இடுப்பின் கீழ் உணர்விழந்துள்ளார். மனைவி ஒரு மகளுடன் வாழ்கிறார். மகள் 2ம்தரம் கற்கிறார். திலீபன் தொடர்ந்து படுக்கையில் இருக்கிறார். இவரை மனைவியே பராமரிப்பு உட்பட சகல தேவைகளையும் கவனிக்கிறார். படுக்கையில் இருப்பதால் படுக்கைப்புண் பாதிப்பு உள்ளது. தலையிலும் காயமடைந்தமையால் தலை கடும் வேதனையைக் கொடுக்கிறது. மருத்துவம் செய்வதற்கும் எவ்வித உதவியுமில்லை. இவரை விட்டு தொழிலுக்கு செல்ல முடியாத நிலமையில் இவரது மனைவி வீட்டில் கோழிவளர்ப்பு அல்லது கால்நடை வளர்ப்புச் செய்ய விரும்புகிறார். இவர்கள் எதிர்பார்க்கும் தொகை 50ஆயிரம் ரூபா (அண்ணளவாக 310€) 2) இராச…
-
- 5 replies
- 1.7k views
-
-
அமெரிக்க செனட் சபையில் ஒலித்த சிறிலங்கா விவகாரம் ! 07 ஜூன் 2012 அமெரிக்காவின் செனட் சபையில் சிறிலங்காவின் விவகாரம் மீண்டும் ஒருதடவை ஒலித்துள்ளது. பல்வேறு நாடுகளுக்கான புதிய தூதுவர்களின் நியமன அங்கீகாரத்திற்கான செனட் சபை அமர்வின் போது சிறிலங்காவுக்கான புதிய தூதராக துமிசேல் சிஸன் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்காவுக்கான தனது நியமனம் தொடர்பில் செனட் சபையில் கருத்து தெரிவித்த துமிசேல் சிஸன் அவர்கள் சிறிலங்கா விவகாரத்தில் மனித உரிமைகளுக்கு முதலிடம் அளிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார். இலங்கை நிலைவரம் தொடர்பில் புதிய தூதுவர் துமிசேல் சிஸன் அவர்கள் அமெரிக்க செனட் சபையில் தெரிவிக்கையில் : இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது …
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை அமைச்சருக்கு எதிராக கோவையில் ஆர்ப்பாட்டம் - நிகழ்ச்சியை கைவிட்டு நாடு திரும்பினார் 07 ஜூன் 2012 கோவையில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கை விவசாயத்துறை அமைச்சர் ரெஜினால்ட் கூரே, மதிமுக உட்பட சில கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புக்களின் எதிர்ப்பின் விளைவாய் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறாமல் நாடு திரும்பியிருக்கிறார். வியாழனன்று நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பங்குபெறவென புதனன்று கோவை சென்றிருக்கிறார் அமைச்சர். கரும்பு ஆராய்ச்சி நிறுவன நிகழ்ச்சி குறித்து அறிந்த அமைப்புக்கள், அவருக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஊடகங்களுக்குத் தெரிவிக்க, காவல்துறையின் ஆலோசனையின்பேரில் இன்று காலையே ச…
-
- 0 replies
- 695 views
-
-
வன்னி மாவட்டங்களில் தமிழ் மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏப்பம் விட்ட இலங்கை இராணுவம் தற்போது யாழ். மாவட்டத்திலும் முதற்கட்டமாக 61 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.நல்லூர், கோப்பாய், தெல்லிப்பழை ஆகிய மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலும் இருந்து மாத்திரம் இந்த 61 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட உள்ளது. இவற்றில் தனியாரின் உறுதிக்காணிகளும் உள்ளடங்குகின்றன. இவற்றை காணி சுவீகரிப்பின் கீழ் மேற்கொள்வதற்கும் இராணுவம் திட்டங்களைத் தயார்ப்படுத்தி விட்டது. அது தவிர பிரதேச சபைகள், மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை அரச காணிகள் என்ற போர்வையில் கையகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் …
-
- 0 replies
- 1.1k views
-
-
போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவின் உரை நிறுத்தப்பட்ட செய்தி உத்தியோக பூர்வமாக அறிவிக்ப்பட்டிருக்கிறது. காரணம் அறிவிக்கப்படவில்லை. ஆனால் எமது போராட்டத்தின் காரணமாகவும் நாளை லட்சக்ணகக்கில் தமிழ் மக்கள் கூடுவோம் என எதிர்பார்த்து சங்கடங்களை தவிர்ப்பதற்காக நிறுத்தபப்ட்டதாக தகவல் வெளியாகி உள்ளது . மேலதிக செய்திகள் விரைவில். http://thaaitamil.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86/ போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவை விட்டு போகுமட்டும் போராட்டம் தொடரும் செயற்பாட்டாளர்கள் அறிவிப்பு. அனைத்து தமிழ…
-
- 93 replies
- 7.4k views
-
-
இந்தியாவின் கோவை பகுதிக்குச் சென்றுள்ள இலங்கை அமைச்சர் ஒருவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 100 பேர். வரை கைது செய்யப்பட்டனர். திருமண விழா ஒன்றில் பங்கேற்க இலங்கை அமைச்சர் கோவை சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் தங்கியுள்ள விடுதிக்கு முன் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக கோவை தகவல்கள் தெரிவிக்கின்றன. http://thaaitamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5/
-
- 2 replies
- 796 views
-
-
போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படைகளால் தமிழர்கள் மோசமாக நடத்தப்பட்டதற்கான மேலதிகமான காணொலி மற்றும் ஒளிப்பட ஆதாரங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் "தி இன்டிபென்டன்ட்" நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது. "தி இன்டிபென்டன்ட்" நாளேட்டுக்கு கிடைத்துள்ள காணொளி ஒன்று, வேண்டுமென்றே மார்பகங்கள் மற்றும் பாலுறுப்புகள் வெளித்தெரியத்தக்கதாக ஆடைகள் களைப்பட்ட நிலையில் டசின் கணக்கான பெண்கள் உள்ளிட்ட 100 இற்கும் அதிகமான தமிழர்களின் பிணக்குவியலின் முன்பாக சிறிலங்காப் படையினர் களிப்புடன் நின்பதைக் காட்டுகின்றது. இது தமிழர்கள் எந்தளவுக்கு சித்திரவதை செய்யப்பட்டு- நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டனர் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்தக் காணொளி ச…
-
- 2 replies
- 1.4k views
-
-
இலங்கை இராணுவப் புலனாய்வு அதிகாரியான லெப்.கேணல் முத்தலிப்பை, சக இராணுவ அதிகாரி ஒருவரே புலிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. வன்னியில் கண்டுபிடிக்கப்பட்ட புலிகளின் இரகசிய ஆவணம் ஒன்றையடுத்து இந்தக் கொலையில் தொடர்புடைய சந்தேகநபரான இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு மே மாதம் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த போது கிருலப்பனையில் வைத்து லெப்.கேணல் முத்தலிப் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். வன்னியிலும் கிழக்கிலும் விடுதலைப் புலிகளின் மீது இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகளால் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதல்களுக்கு இவர் பொறுப்பாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 953 views
-
-
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் “உறுதியாகவும் வெளிப்படையாகவும்“ பேச்சு நடத்தியுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை லண்டனில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்புத் தொடர்பாக, பிரித்தானிய வெளிவிவவார அமைச்சர் வில்லியம் ஹேக் தனது அதிகாரபூர்வ ‘ருவிற்றர்‘ பக்கத்தில், செவ்வாய்கிழமை இரவு தகவல் வெளியிட்டுள்ளார். “சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் இன்று கரிசனைகுரிய எல்லா விவகாரங்கள் தொடர்பாகவும் உறுதியாகவும் வெளிப்படையாகவும் கலந்துரையாடியுள்ளேன்“ என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 895 views
-
-
தனது நிகழ்ச்சி நிரலில் மனித உரிமைகள் விவகாரம் முதன்மையானதாக காணப்படும் என சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் தூதர் பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள [Michele Sison] மிசேல் சிசன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரின் போது அனைத்துலக மனித உரிமைச் சட்டம் மீறப்பட்டமை தொடர்பாக இன்னமும் சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும், சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீளிணக்கப்பாட்டு நடவடிக்கைகள் மிக மெதுவாக நடைபெறுவதாகவும் மிசேல் சிசன் தெரிவித்துள்ளார். "போர்க் குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறாது உண்மையான, நேர்மையான மீளிணக்கப்பாடு ஒன்று உருவாக்கப்பட முடியாது" என சிசன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் தொடரப்பட்ட கால்…
-
- 0 replies
- 467 views
-
-
பிரித்தானிய மகாராணிக்கு கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா நேற்று வழங்கிய மதிய விருந்தின் போது, எடுக்கப்பட்ட குழுப்படத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோனுடன் ஒட்டிக்கொண்டார். கொமன்வெல்த் தலைமையகமான மால்பரோ ஹவுசில் மகாராணிக்கு நேற்று விருந்துபசாரம் அளிக்கப்பட்டது. இதில் 54 கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் பங்கேற்றனர். இதன்போது சிறிலங்கா அதிபருக்கு எதிராக மால்பரோ ஹவுஸ் முன்பாக தமிழர்கள் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். இந்த விருந்தில், பிரித்தானிய மகாராணிக்கு இடப்புறமாக - கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மாவின் மனைவி, நமீபிய அதிபர், அவரது மனைவி, நியுசிலாந்துப் பிரதம…
-
- 0 replies
- 619 views
-
-
அன்பார்ந்த உறவுகளே!! நாளைய தினம் எம் இனத்தை அழித்துக்கொன்டிருக்கும் இன அழிப்புக் குற்றவாளி மகிந்த ராஐபக்ச புனித பாப்பரசரை வத்திக்கானில் சந்திக் போகின்றார். இதை வன்மையாக கண்டிக்கும் முகமாக அனைத்து தேசிய அமைப்புக்களின் அணுசரனையுடன் 4 அம்ச கோரிக்கைகள் உள்ளடக்கிய ஒரு மனு வத்திக்கான் அரச செயலகத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இம்மனுவின் உள்ளடங்கிய கோரிக்கைகள் பின்வருமாறு : 1) தமிழர் தாயகத்தில் தொடர்ந்து இடம் பெறும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப் பட வேண்டும். 2) பேராயர் இராயப்பு ஜோசெப்பின் பாதுகாப்பை உறுதி செய்தல், மற்றும் 1984ம் ஆண்டு முதல் 2009 வரை படுகொலை செய்யப்பட்ட வணபிதாக்களுக்கு நீதி கிடைத்தல் 3) இலங்கை அரசின் மதவாத அரசியல் கொள்ளை நிறு…
-
- 0 replies
- 495 views
-
-
கொழும்பு: இலங்கை பாதுகாப்பு செயலாளரும், அதிபர் ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபயா ராஜபக்சேவின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டு கடற்படைக்கு இந்தியா அதிநவீன பயிற்சி அளிக்கவிருக்கிறது. சிங்கப்பூரில் ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில் இலங்கை வெளியுறவுத்துறை அமைசச்ர் ஜி.எல். பெரீ்ஸ் தலைமையிலான அந்நாட்டு பிரநிதிகள் குழு கலந்து கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவும், பெரீஸும் சேர்ந்து மாநாட்டில் பங்கேற்ற இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியையும், அமெரிக்க ராணுவ தளபதி மார்ட்டின் டெம்ப்சியையும் சந்தித்து பேசினர். அந்த சந்திப்பின்போது இலங்கை கடற்படைக்கு அதிநவீன பயிற்சி அளிக்க இந்தியாவும், அமெரிக்காவும…
-
- 0 replies
- 504 views
-
-
யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினர் தற்போது நிலைகொண்டு நிலங்களை சுவீகரிக்கும் முயற்சியில், யாழ்.மாவட்ட முன்னாள் இராணுவத் தளபதியும் வடக்கு மாகாண ஆளுநருமான ஜி.ஏ.சந்திரசிறி தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் இதற்கான வேலைகள் முழுமூச்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில், கடந்த வாரம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம் பெற்றது. இதில் யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். மாவட்டத்தின் சகல பிரதேச செயலர்கள், இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கலந்துரையாடலிலே வடமாகாண ஆளுநர், காணிகளைக் சுவீகரிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளார். யாழ்.குடாநாட்டில் இராணுவ…
-
- 0 replies
- 347 views
-
-
விரைவில் உலக அழிவு ஏற்படும் - மைத்திரிபால சிறிசேன மாயர்களின் நாட்காட்டியின் அடிப்படையில் 2012 ம் ஆண்டிறுதியில் உலக அழிவு ஏற்படும் என இதற்கு முன்னர் பல தடவைகள் கருத்துகள் வெளியிடப்பட்டிருந்தன. இதற்கான காரணமாக மாயர்கள் தயாரித்த நாட்காட்டி 2012 ம் ஆண்டில் நிறைவடைகின்றமையையே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இருந்த போதும், அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மாயர்களுக்கு உரித்தான நாட்காட்டியின் அடிப்படையில் உலக அழிவு தாமதமடையும் என குறிப்பிடப்பட்டள்ளது. இதனடிப்படையில் 2300 ம் ஆண்டு காலப்பகுதி என்ற நீண்ட எதிர்காலத்தின் பின்னர் இயற்கை அழிவுகள் ஏற்படும் என எதிர்வு கூறுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இருந்தபோதும் இலங்கையிலும், அதற்கு வெளியிலும் இடம்பெறும் சம்பவங்களை நோக்க…
-
- 2 replies
- 1.5k views
-
-
பிரித்தானிய மக்கள் போராட்டத்தின் வெற்றியும் தவறான அரசியலின் தோல்வியும் பிரித்தானியாவில் மூன்று வருடங்களின் பின்னர் தமிழர்களின் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏறத்தாள 4 ஆயிரம் தமிழர்கள் கலந்துகொண்டார்கள். இலங்கை அரசியல் சாசனம், 13 வது திருத்தச் சட்டம், மகிந்த ராஜபக்சவின் உருவப் பொம்மை ஆகியன எரியூட்டப்பட்டன. மகிந்த ராஜபக்ச உரையாற்றவிருந்த நிகழ்வு ஆர்ப்பாட்டங்களால் ரத்துச்செய்யப்பட்ட நிலையில் அவர் உரையாற்றவிருந்த மன்ஷன் கவுசிற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெளியே ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந் போதிலும் பிரித்தானிய மாகாராணியின் விருந்தில் மகிந்த ராஜபக்ச மற்றும் அவர் மனைவி மற்றும் சிலர் கலந்துகொண்டனர். பல நூற்றுக்கணக்கா…
-
- 0 replies
- 653 views
-
-
மாபெரும் இனப்படுகொலையினை செய்துவிட்டு அது குறித்த எவ்வித குற்ற உணர்வும் இன்றி நடமாடித்திரியும் மனித மிருகம் ராஜபக்சே இரண்டாவது தடவையாக லண்டன் மண்ணிற்கு வந்தபோது நேரிடையாக நின்று துரத்தியடித்த பிரித்தானிய ஐரோப்பியவாழ் ஈழத்தமிழர்களின் வீரத்தை சிரம்தாழ்த்தி வணங்கிநிற்கின்றது ஈழதேசம் இணையம். ஒக்த்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்த கொலைவெறியன் மகிந்தவை குறுகிய கால அவகாசத்தில் துரிதமாக செயற்பட்டு விரட்டியடித்து போர்பரணி பாடிநின்ற பிரித்தானிய வாழ் ஈழத்தமிழர்கள் இம்முறை அதனிலும் பலபடி சென்று சாதனை படைத்துள்ளார்கள். கடந்த முறை ஒக்த்போர்ட் பல்கலைக்கழகத்தில் கொலைவெறியனின் பேச்சை நிறுத்திய உங்களது போராட்டம் இம்முறை பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாட்டையே நிறுத்திவைக்கும…
-
- 2 replies
- 693 views
-
-
-
சனல் 4 அதிகாரியும் அவரது மனைவியும் தடைப்பட்டியலில் உள்ளனர் - இலங்கை பிரிட்டனிலிருந்து ஒளிபரப்பாகும் சனல் 4 தொலைக்காட்சியின் மூத்த அதிகாரி ஒருவரை அவர் இலங்கையை வந்தடைந்து ஓரிரண்டு நாட்களுக்குள் வெளியேற்றிவிட்டதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. அதேவேளை, அவரது மனைவியான இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண்ணும் நாட்டுக்குள் அனுமதிக்கப்படாமல் விமானநிலையத்தில் வைத்தே திருப்பியனுப்பப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் கூறியுள்ளனர். சனல் 4 தொலைக்காட்சியில் பன்முக நிகழச்சிகளுக்கான பிரிவின் தலைமை அதிகாரியான ஸ்டுவர்ட் கொஸ்க்ரோவ் நாடு கடத்தப்பட்டுவிட்டதாக இலங்கை அரசின் அதிகாரபூர்வ இணையதளமொன்று கூறியிருந்தது. ஆனால், ஸ்டுவர்ட் கொஸ்க்ரோவ் நாடுகடத்தப்பட்டதாகக் கூறமுடியாது, அவரை நாட…
-
- 0 replies
- 732 views
-
-
யாழ்ப்பாணத்துக்குச் சென்றுவரும் புலம்பெயர் தமிழர்கள் திரும்பி வந்து "யாழ்ப்பாணம் அந்த மாதிரி இருக்கிறது. சாப்பிடறதுக்கும் குடிக்கிறதுக்கும் என்னென்ன வேண்டுமோ அதெல்லாம் அங்கு இருக்கின்றன. விலைதான் அதிகம் ஆனால் டொலருக்கு விலை ஒரு பொருட்டே இல்லை" எனப் புளுகுகிறார்கள். இந்தப் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மையோர் உறவினர்களைப் பார்க்கவும் காணிபூமிகளை நல்ல விலைக்கு விற்கவும் தங்களது ஊர்க்கோயில் தேர், தீர்த்தம், திருவிழா பார்க்கவும்தான் பெருமளவு பணத்தைச் செலவழித்து அங்கு போகிறார்கள். இவர்களில் யாரும் போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களைப் பார்ப்பதில்லை. யாழ்ப்பாணத்தைப் பார்த்துவிட்டுக் கிளம்பிவிடுகிறார்கள். கொழும்பில் இருந்து வெளியாகும் சண்டே லீடர் (மே 10)…
-
- 1 reply
- 894 views
-
-
ஒரு தேசத்தின் தலைவர் இன்னொரு தேசத்திற்கு செல்லும் போது வழங்கப்படும் வரவேற்புக்கள் பல விதமானவை. யார் அந்தத் தலைவராக இருந்தாலும் அந்த இரு நாடுகளிற்கும் இடையிலான மக்களிடையே ஒரு உண்மையான நட்புணர்வு இருக்குமாயின் அந்த வரவேற்பே உன்னதமானதாக இருக்கும். இந்த நட்புணர்வு இன, மொழி, கலை, கலாசார மற்றும் அரசியற் கொள்கை ரீதியானதாகவோ அன்றில் வர்த்தக பொருளாதார இராணுவ தொடர்பானதாகவோ அமையலாம். பங்களாதேஷை இந்தியா விடுவித்த போதும், இன்று ஒரு இந்தியத் தலைமை அங்கு செல்லும் போது அந்த நன்றி உணர்வு அங்கு பொங்கி வெடிப்பதில்லை. ஆனாலும் உலகானது “அமெரிக்கா- ரஷ்யா” என்ற இரு முனைத் துருவங்களின் கீழ் ஒரு சமபல பரஸ்பர எதிர்ப்புடன் விளங்கிய ஆரோக்கியமான உலக ஒழுங்கிருந்த காலத்தில், இந்தியாவிலிருந…
-
- 0 replies
- 965 views
-
-
புலத்தில் – நிலத்தில் மகிந்தருக்கு எதிராக போராட்டம்- யாழ் மாணவர்களால் யாப்புக்கள் தீக்கிரை தமிழீழம் | Admin | June 6, 2012 at 19:00 -------------------------------------------------------------------------------- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரிட்டனில் தங்கியள்ள நிலையில் மீண்டும் இலங்கையின் அரசியல் யாப்பு இன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.கடைசியாக தமிழ் அரசன் சங்கிலியன் ஆட்சி செய்த நல்லூரிலுள்ள புனித யோவான் தேவாலய கல்லறையில் அரசியல் யாப்பு மாணவர்கள் கழு ஒன்றினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வாகனங்களினில் சென்றிறங்கிய மாணவர்கள் குழு ஒன்றே அரசியல் யாப்பை தீக்கிரையாக்கியுள்ளது. சுலோக அட்டைகளில் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் நடைமுறையை அமுலுக்கு கொண்டு வந்த பிரி…
-
- 2 replies
- 974 views
-
-
பொதுநலவாய நாடுகளின் செயலகத்தினை நோக்கி நடைபெற்றுவரும் பேரணி நடைபாதை வழியாக நகர்ந்து வந்துகொண்டிருந்த நிலையில் தற்போது லண்டன் மாநகரக் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு வீதிகளில் இறங்கி பேரணியைத் தொடர்ந்து வருவதாக அங்கிருந்து உற்சாகமான செய்திகள் கிடைத்துள்ளது. எட்டுத் திசைகள் அதிர புலத்துப் புலிப்படைகளின் படையெடுப்பால் நடைபாதை கொள்ளதாக மக்கள் வெள்ளம் திரண்டுள்ளதால் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து பிரதான வீதிகளில் இறங்கி பேரணியை தொடரந்து வருகின்றனர். பேரணிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவந்த லண்டன் காவல்துறையினர் கூட திரண்டு வந்துகொண்டிருக்கும் புலத்துப் புலிப்படையினை கண்டு செய்வது அறியாது திகைத்து நிற்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதா…
-
- 12 replies
- 2k views
-
-
கொடூரமான பயங்கவாதத்திடம் இருந்து மீட்ட நாட்டை எந்த சக்திகள் பறிக்கவும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து, லண்டனில் உள்ள இலங்கையர்கள் லண்டன் பார்க் லேனில் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனை கூறியதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் லண்டன் விஜயத்திற்கு ஆதரவு தெரிவித்து, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நோக்கில், லண்டனில் வசிக்கும் இலங்கையர்கள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர். ஆர்ப்பாட்டகார்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையர்கள் மற்றும் சகல இனங்களுக்காகவும் கட்டியெழுப்பபட்டு வரும் நாட்டை, எதிர்கால சந்ததி…
-
- 1 reply
- 1.4k views
-