ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டுக்காக இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமமந்திரிக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் இலங்கையில் பிரவேசிக்க உள்ள படையின் முதலாம் பிரிவு எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று செல்லவுள்ளதாக இன்றைய லக்பிம ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது. இந்திய பிரதமருக்கும் அந்த நாட்டின் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பளிக்கவென சுமார் மூவாயிரம் இந்திய துருப்புகள் இலங்கை செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று சுமார் 1000 துருப்பினர் இலங்கைக்கு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் கட்டத்துருப்பினர் எதிர்வரும் யூலை 20 ஆம் திகதி இலங்கைக்கு செல்வர்;. இறுதி கட்ட துருப்பினர் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு இந்திய போர்;க்ப்பலின் மூலம் பிரவேசிக்க உள்…
-
- 28 replies
- 3.3k views
-
-
இனிமேல் இரணைமடு யாருக்கு? – வன்னிமகன் Saturday, August 25, 2012, 4:56தமிழீழம் இரணைமடு யாருக்கு? ஏழை விவசாயிகளுக்கா? சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளுக்கா? இத்தகைய கேள்விகள்தான் தற்போது தமிழ் மக்கள் மனங்களெங்கும் எழுந்து கொண்டிருக்கின்றது. மக்களுடைய சொத்தில் யாரோ ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மக்களுடைய சொத்தை யார் யாரோ தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் சொத்துக்குரியவர்கள் மட்டும் வயிற்றில் ஈரத்துண்டைக் கட்டிக்கொண்டு படுக்கும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதுதான் இரணைமடுக் குளத்தினதும், குளத்தை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான அப்பாவி விவசாயக் குடும்பங்களினதும் பரிதாபகரமான நிதர்சனம். இரணைமடுக்குளம் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்குள்ளே…
-
- 2 replies
- 626 views
-
-
திரு. பாலகுமார், திரு.நடேசன் அவர்கள் பொங்கு தமிழ் பற்றி ......
-
- 0 replies
- 920 views
-
-
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 100 ரூபா நாணயத்தாளில் இதுவரை காலமும் சிங்கள மொழிக்கு வழங்கப்பட்டிருந்த முதலிடம், தற்போது தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் இனவாதப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இருப்பினும், மத்திய வங்கி இந்த வகையான முறையில் நாணயத்தாள்களை அச்சிடவில்லையென மறுத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் 2016.03.12 ம் திகதி வெளியிடப்பட்டதாக கூறப்படும் புதிய நாணயத்தாள்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை என தெரிவிக்கப்படுகின்றது. அந்த பணத்தாள்களில் நிதி அமைச்சராக மஹிந்த ராஜபக்சவே கையொப்பமிட்டுள்ளார். மத்திய வங்கி ஆளுநராக சுனில் மெண்டிஸ் ஒப்பமிட்டுள்ளார். சுனில் மெண்டிஸ் என்பவர் 2…
-
- 0 replies
- 408 views
-
-
தையிட்டி விகாரைக்கு அருகே மற்றுமொரு சட்டவிரோதக் கட்டடம்? தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகே மேலுமொரு சட்ட விரோதக் கட்டடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அது தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையினரால் விகாரதிபதியிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாகவும் தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்திலேயே குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் தவிசாளர் தலைமையில் சில உறுப்பினர்கள் தையிட்டி விகாரைக்கு சென்று விகாரை வளாகத்திற்குள் சென்று பார்வையிட்டதாகவும், அங்கு கட்டடம் ஒன்று அமைப்பதற்கான அத்திவார கிடங்கு ஒன்று காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்…
-
- 1 reply
- 153 views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் அதிகாரங்களை கோராத போது ஏனையோர் அதிகாரங்களை கோரிநிற்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துளளது. அமைச்சர்கள் ராஜித சேனாரட்ன, திலான் பெரேரா, மேல் மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட்குரே, ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவர் ரஞ்சித் நவரட்ன ஆகியோர் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை கோரி நாட்டிற்குள் தேசிய அமைப்பு ரீதியான கருத்தொன்றை முன்னெடுத்து வருவதாக ஜாதிக ஹெல உறுமயவின் பிரசார செயலாளர் நிஸாந்த ஸ்ரீவர்ணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளில் மூலம் புலிகளை முழுமையான ஒழிக்கும் படையினரின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அமைச்சர்களான இவர்கள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையினால் தேசிய ஐக்கியம் சீர்குலையக் கூடும். சந்திரிக்கா அரசாங்கம் அப்போது மு…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை, முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் உள்ள பிரதமர் காரியாலத்திலேயே இச்சந்திப்பு, சுமார் 20 நிமிடங்கள் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகப் பொலிஸாரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகின்றது. மஹிந்த ராஜபக்ஷவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சென்றிருந்ததுடன்; பிரதமர் ரணில்…
-
- 2 replies
- 580 views
-
-
முன்னாள் பெண் போராளி உயிர்மாய்ப்பு! adminJuly 28, 2025 யாழ்ப்பாணத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27.07.25) தனது உயிரை மாய்த்துள்ளார். புனர்வாழ்வு பெற்று, தடுப்பில் இருந்து வெளியே வந்து ,தனது சகோதரியுடன் கொக்குவில் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்தவர் நேற்றைய தினம் தனது உயிரை மாய்த்துள்ளார். என உறவினர்கள் மரண விசாரணையில் தெரிவித்துள்ளனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/218417/
-
- 0 replies
- 100 views
-
-
மன்னார் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் மீது தாக்குதல்:செல்வம் எம்.பி கண்டனம். By General 2012-09-09 11:10:36 மன்னார் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேஸ்பர் ஆராதனை இடம் பெற்றுக்கொண்டிருந்த போது ஆலயப்பகுதிக்கு வந்த காடையர் குழுவொன்று குறித்த ஆலயத்தினுள் கற்களால் வீசி தாக்குதல்களை நடத்தியதோடு,பட்டாசுகளை கொளுத்தி குறித்த ஆராதனையினைக் குழப்ப முயற்சி செய்தமை மத அனுஸ்டானங்களையும்,இன ஒற்றுமையையும் சீர் குலைக்கும் செயலாகக் காணப்படுவதாகவும் இச்சம்பவத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்…
-
- 0 replies
- 302 views
-
-
பயங்கரவாதத்தை தோற்கடிக்க நாங்கள் இணைந்து செயற்படுவோம் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் ஆரம்பமாகிய 15வது சார்க் உச்சி மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சார்க் பிராந்திய நாடுகளில் பயங்கரவாதம் இன்று தலைதூக்கியுள்ளது. இந்த நாடுகளுக்கு பயங்கரவாதமே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. தீவிரவாதிகளுக்குத் தெரியும் பயங்கரவாத்திற்கு எல்லைகள் இல்லை என்று. பங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்தில் நாங்கள் தோல்வியடைக் கூடாது. அண்மையில் இடம்பெற்ற காபூலிலுள்ள இந்தியத் தூதரகம் மீதான தாக்குதல் மற்றும் அஹமதாபாத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள் என்பன பயங்கரவாதம் இன்னமும் உக்கிரமான நிலையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகின்றன. சவால்களை எதிர்கொள்வதற…
-
- 2 replies
- 1k views
-
-
சர்வதேச சமூகத்திடம் உறுதியளித்துள்ளபடி பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து விலகி இலங்கை அரசு தொடர்ந்து இதே கொள்கையில் சென்றுகொண்டிருந்தால் அடுத்த வருட முற்பகுதியில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டிவருமென அமெரிக்கா நேற்று முன்னெச் சரிக்கை விடுத்திருக்கிறது. கொழும்பில் நேற்றுக்காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சின்போது அமெரிக்காவின் இந்தக் கருத்தை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க அமைச்சர் றொபேட் ஓ பிளேக் வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப…
-
- 10 replies
- 1.3k views
-
-
கொழும்பில் போட்டியில் இருந்து விலகியது கூட்டமைப்பு.! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இம்முறை போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நியமனக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. கொழும்பில் போட்டியிடுவதற்குப் பதிலாக, சட்டத்தரணி தவராசாவின் பெயரை தேசியப்பட்டியலில், முன்னுரிமைப்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://jaffnazone.com/news/16259
-
- 3 replies
- 827 views
-
-
Published By: DIGITAL DESK 3 20 AUG, 2025 | 04:18 PM லங்கா உப்பு நிறுவனம் தனது அயோடின் கலந்த உப்புப் பொருட்களின் விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இன்று புதன்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது நிறுவனத்தின் தலைவர் நந்தன திலக்க இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். 400 கிராம் அயோடின் கலந்த உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 1 கிலோ கிராம் பக்கற் ஒன்றின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அடுத்த வாரம் முதல் 400 கிராம் உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 100 ரூபாவுக்கும், 1 கிலோ கிராம் உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 200 ரூபாவுக்கும், கிரிஸ்டல் உப்பு பக்கற் ஒன்றின் விலை 150 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என தெர…
-
-
- 1 reply
- 163 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் சிறீலங்கா படையினரும்,காவல்துறையினரும் இணைந்து நடத்திய தேடுதலின் போது 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தேடுதல் இன்று (07.08.08) காலை 8.00 மணி தொடக்கம் மதியம் 13.00 மணி வரை இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது. நிருபர்:செல்வி http://www.tamilseythi.com/srilanka/Tamil-...2008-08-07.html
-
- 0 replies
- 658 views
-
-
தென்னிலங்கை மீனவர்கள் 39 பேர் கைது -செல்வநாயகம் கபிலன் 'வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம், மற்றும் வெற்றிலைக்கேணி கடற்பரப்பினுள், நிபந்தனைகளை மீறி கரையில் இருந்து 7 கிலோமீற்றர் தொலைவில் கடலட்டை பிடியில் ஈடுபட்ட தென்னிலங்கை மீனவர்கள் 39 பேரை சனிக்கிழமை (23) இரவு காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை (24) எம்மிடம் ஒப்படைத்துள்ளனர்' என கடற்றொழில் நீரியல்வளதுறை திணைக்கள யாழ். மாவட்ட உதவிபணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா தெரிவித்தார். 'அத்துடன், அவர்கள் பயணம் செய்த 13 டிங்கி படகுகள், 2,264 கடலட்டைகள், 102 ஒக்சிசன் சிலிண்டர்;கள், 10 ஜீ.பி.ஸ் கருவிகள், நீரில் முழ்கி கடலட்டை பிடிக்க பயன்படுத்தும் ஆடைகள், …
-
- 1 reply
- 480 views
-
-
வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கடந்த இரண்ரை மாதங்களில் 75,000 அதிக மக்கள் இடம்பெயர்ந்து மிகவும் நெருக்கடியான நிலையில் வாழ்வதாக ஐநா அறிவித்துள்ளது. இதற்கிடையே விடுதலைப்புலிகளின் முழங்காவில் தளத்தைக் கைப்பற்றிய சிறீலங்காப் படையினர் கிளிநொச்சி நகரில் இருந்து வெறும் 15 கிலோமீற்றர்கள் தொலைவிலேயே நிலைகொண்டுள்ளதாக படைத்தரப்பு பிபிசிக்குத் தெரிவித்துள்ளது..! http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7560052.stm
-
- 16 replies
- 4.1k views
-
-
இலங்கையுடனான நட்புறவை சிறு சிறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கப்படமாட்டாதென்றும் அந்த நட்புறவை உரிய மட்டத்தில் உறுதி செய்ய வேண்டுமென்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார தொடர்புகளை போன்று பாதுகாப்பு நடவடிக்கைளும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவிற்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு அங்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்கை உத்தியோக பூர்வமாக சந்தித்து பேசிய போதே இந்தியப் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பாக ஜனாத…
-
- 0 replies
- 485 views
-
-
மல்லாவியில் கைதான இராணுவ அதிகாரியிடமிருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் சமீபத்தில் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் வைத்து கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 'கமாண்டோ சாலிந்தா'வுக்கு ரி-56 தோட்டாக்களை விற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட லெப்டினன்ட் கேணலிடமிருந்து பல குற்றவியல் விஷயங்கள் வெளிவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு மல்லாவி பாலிநகர் இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியபோது, மேற்கு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் அந்த அதிகாரி கைது செய்யப்பட்டார், மேலும் அவர் ஒரு பாதாள உலகக் குழுவிற்கு 260 ரி-56 தோட்டாக்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். ஒன்றரை கோடிக்கு மேலும் விசாரித்ததில், கமாண்டோ சாலிந்தா தனக்கு 1…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் உள்ளுராட்சிசபைக்கான தேர்தல்களை நடத்தப்போவதாக ஜனாதிபதி அறிவிப்பு வியாழன், 21 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைக்கான தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று தேசியத் தொலைக்காட்சியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, தனது உரையிலேயே யாழ்ப்பாணத்தில் உள்ளுராட்சி சபைத்தேர்தல்களை நடத்துவதற்கான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தான் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத்தேர்தல்களை நடத்துவதற்கான கடந்த 2006 ஆம் ஆண்டு நியமனப்பத்திரங்கள் கோரப்பட்டிருந்தன. எனினும் தேர்தல்களை நடத்துவதற்கான சீரான நிலைமைகள் அங்கில்லை…
-
- 2 replies
- 1k views
-
-
23 Sep, 2025 | 04:22 PM யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (23) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இந்த நபர் நீண்ட காலமாக தலைமறைவாகியிருந்த நிலையில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முயன்ற வேளையே கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யாழில் வாள்வெட்டுச் சம்பவங்கள் ; நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது | Virakesari.lk
-
-
- 4 replies
- 426 views
- 1 follower
-
-
திருகோணமலையில் உள்ள சிறிலங்காவின் கிழக்கு கடற்படைத் தலைமையக தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் சிறிலங்கா கடற்படைப்படகுகள் இரண்டு அழிக்கப்பட்டுள்ளன என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி, இந்துபுரம் மற்றும் வசந்தநகர் ஆகிய பகுதிகளில் தற்போது கசிப்பு காய்ச்சுதலும் விற்பனை செய்தலும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேற்படி கிராமங்களில், என்றுமில்லாதவாறு தற்போது கசிப்பு காய்ச்சி, விற்பனை செய்யும் நடவடிக்கைகளும் போதைப்பொருள் பாவனைகளும் அதிகரித்துள்ளன. சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்க வேண்டிய மதுவரித்திணைக்களம் கிளிநொச்சியில் இயங்குவதனாலும், பொலிஸ் நிலையம் 25 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மாங்குளம் பகுதியிலும் அமைந்திருப்பதால், உரிய அதிகாரிகளுக…
-
- 0 replies
- 310 views
-
-
புலிகளின் பாரிய படகு தாக்கப்பட்டதாக சிறிலங்கா அரசு பொய்ப் பிரச்சாரம் [வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2008, 09:57 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய படகினை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா வான்படை தரப்பால் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று கொழும்பில் உள்ள இராணுவ ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். நாச்சிக்குடா மற்றும் வன்னேரி ஆகிய இடங்களில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட பாரிய இழப்புக்களை மூடி மறைப்பதற்காகவும் சிங்கள, ஆங்கில ஊடகங்களை திசை திருப்புவதற்காகவும் முல்லைத்தீவில் படகு தாக்கப்பட்டது எனும் பொய்ப்பிரச்சாரத்தில் சிறிலங்கா வான்படை ஈ…
-
- 1 reply
- 1.5k views
-
-
இனங்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துமாறு கோரும் இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஜந்து நாள் மாநாடு எதிர்வரும் வியாழக்கிழமை (18.09.08) சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இடம்பெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 486 views
-
-
வைத்தியர் வரதராஜாவிற்கு அமெரிக்கா புகலிடம் வழங்கியதாக உபாலி குழுமம் கூறுகிறது யுத்தத்தின் போது முல்லைத்தீவில் கடமையாற்றிய வைத்தியர் வரதராஜாவிற்கு அமெரிக்க அரசாங்கம் புகலிடம் வழங்கியுள்ளது. வைத்தியர் வரதராஜாவிற்கு அமெரிக்க அரசாங்கம் அரசியல் புகலிடம் வங்கியுள்ளதாக உபாலி குழுமம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைப் படையினருக்கு எதிராக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு சாட்சியங்கள் வழங்கியதனால் இவ்வாறு புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. வன்னி யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கத்திற்கு வாக்கு மூலம் அளித்த வைத்தியர் வரதராஜா, காயமடைந்த பொதுமக்களை புலிகள் சுட்டுக்கொலை செய்தனர் என கூறியிருந்தார். எனினும், பின்ன…
-
- 0 replies
- 321 views
-