Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப் புலிகளின் விமானப்படை 9 ஆவது தடவையாகவும் தாக்குதல் நடத்தி விட் டுப் பத்திரமாக தரையிறங்கியிருப்பது அரச, பாதுகாப்பு வட்டாரங்களைப் பெரும் திகைப் புக்குள்ளாக்கியிருக்கிறது. கடந்த 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணியளவில் இரணைமடுவில் உள்ள புலிகளின் விமான ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட இரண்டு இலகு ரக விமா னங்கள் ஐந்தே நிமிடங்களில் மன்னார் வான் பரப்பை அடைந்தன. இரவு 10.20 மணியளவில் முதலாவது குண்டு தள்ளாடிப் படைத்தளத்தின் மீது வீசப் பட்டது. அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வீசப் பட்டன. தள்ளாடியில் இருந்த 58 ஆவது டிவிசன் தலைமையகத்தின் ஆட்லறி ,பல்குழல் பீரங்கி களே இந்த விமானங்களின் இலக்காக இருந் தன எனக்கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் படையினர் தரப்பில்…

  2. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கைது செய்யப்படும்வேளை அவருடன் இருந்த மனோ கணேசன் அப்போது நடந்த சம்பவம் தொடர்பில் தற்போது வெளிப்படையாக முகநூலில் பதிவிட்டுள்ளார். "இதுவரை மனோ" என்னும் நூலை எழுதிவரும் மனோ கணேசன், கடந்த காலத்தில் இடம்பெற்று, வெளிவராத பல சம்பவங்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுவருகின்றார். அந்தவகையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரிடம் கூறுமாறு சந்திரிக்கா கூறிய விடயம் தொடர்பில் கடந்த 23 ஆம் திகதி தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது, சர்பொன்சேகா கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், புலிகளின் தலைவர் பிரபாகரனை தோல்வியடைய செய்து, கொன்று, விடுதலை புலிகளை நிர்மூலமாக்கி, நேற்…

    • 1 reply
    • 645 views
  3. பண்டத்தரிப்பில் இருந்து வெளியேறிய இராணுவம்; பிரதேச சபை எடுத்துள்ள முக்கிய தீர்மானம் Published By: Vishnu 29 Jan, 2026 | 09:31 PM மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான பண்டத்தரிப்பில் உள்ள காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் அக்காணியில் இருந்து புதன்கிழமை (28) முற்றாக வெளியேறியுள்ளனர். காணியில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர் காணியை சண்டிலிப்பாய் பிரதேச செயலரிடம் கையளித்த நிலையில் , பிரதேச செயலர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி , காணியை மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் கந்தையா ஜெசிதனிடம் உத்தியோக பூர்வமாக கையளித்துள்ளார். மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான 31 பரப்புடைய காணியை யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் கடந்த 2012ஆம் ஆண்டளவில் இராணுவத்தினர் கையகப்படுத்தி இராணுவ முகாம் அ…

  4. வணக்கம், இலங்கை அரசுக்கு எதிரான பரப்புரையின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் வர்த்தக வரிச்சலுகையை நிறுத்தக்கோருவதே இந்தக் கடிதத்தின் நோக்கமாகும். உலகெங்கும் வாழும் தமிழர்கள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உங்கள் வேண்டுகோளை எழுதி அனுப்பலாம். இதனைச் செய்வது மிகவும் எளிதானது. நீங்கள் செய்யவேண்டியது இதுதான். எங்களுடைய குறிக்கோள் குறைந்த பட்சம் 1000 கடிதங்களையாவது அனுப்பிவைப்பது என்பது. அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசு வரிச்சலுகையைப் பெறத்தகுதியற்றது என்ற செய்தியை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிப்பதே எங்கள் நோக்கம். எங்கள் செய்திக்கு ஐரோப்பிய ஒன்றியம் செவிசாய்க்க வேண்டுமென…

    • 0 replies
    • 1.5k views
  5. - சிறிலங்கா அரசுத் தலைவரின் இரகசிய அமெரிக்க பயணத்தின் பின்னணி ! - பிரதமர் வி.உருத்திரகுமாரனின் வலுவான வாதங்கள் ! - அமெரிக்க நீதித் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய வாதங்கள் ! வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கு என வர்ணிக்கப்படும் கேணல் ரமேஸ் படுகொலையில், சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை மேன்முறையீடு செய்வதற்கு அமரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நியூ யோர்க் மாநிலத்தின் தென் மாவட்டத்துக்கு உரிய ஐக்கிய அமரிக்க கூட்டாட்சி நீதிமன்றமானது, கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவி அவர்கள், தனது மேன்முறையீட்டு வழக்கை அமரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றின் 2வது சுற்றில் நடாத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. …

  6. விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்! ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட தாழ்தள பேருந்து சேவையை ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 10 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதி குறித்த பேருந்துகள் நாட்டை வந்தடையவுள்ளன. இந்தப் பேருந்துகளை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும்த் தேவையான பௌதீக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபைக்கு இயலுமை இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே, பேருந்துப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் முதற்க…

  7. யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறீலங்கா பொலீசாரினால் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி சுதர்சன் என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களில் ஒரு மாணவர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூன்று மாணவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இன்நிலையில் இன்றைய தினம் யாழ் இராணுவ கட்டளைத் தளபதிக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது. …

  8. "மஹிந்த ராஜபக்ஷ கொலையாளி அல்ல": பொன்சேகாவின் கருத்தை வரவேற்கும் நாமல் ராஜபக்ஷ! Published By: Digital Desk 1 21 Feb, 2026 | 04:19 PM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு கொலையாளி அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியிருப்பது மிகவும் நல்ல விடயமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமீபத்தில் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "சரத் பொன்சேகா சர்ச்சைக்குரியவராக இருக்கலாம், ஆனால் கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ பிரபாகரனை ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்த…

    • 2 replies
    • 200 views
  9. வன்னியில் சன்னாசிப்பரந்தன் பிரதேசத்தில் கிளைமோர்த் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 3 பேர் கொல்லப்பட்டு 2 பேர் காயம் அடைந்துள்ளனர். புளியங்குளம் நெடுங்கேணி வீதியில் புளியங்குளத்திற்கு வடக்கே 5 கி.மீற்றர் தொலைவிலுள்ள சன்னாசிப்பரந்தன் எனுமிடத்தில் இடத்தில் இன்று காலை 8.45 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதில் முல்லைத்தீவைச் சேர்ந்த 12 வயதுடைய மர்மேந்திரராசா நகுலேஸ்வரன் அவருடைய தந்தையாரான 53 வயதுடைய மர்மேந்திரராச, 34 வயதுடைய கருணாகரன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர் தாயாரும் வாகனச்சாரதியும் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளைமோர்த் தாக்குதலுக்குள்ளான வாகனம் வாராந்தப் பத்திரிகைகளை விநியோகித்துவிட்டு வவ…

  10. யாழ் பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்டதனைக் கண்டித்து யேர்மனியில் இளையோர்களால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலும் மனுக்கையளித்தலும். [saturday, 2012-12-08 10:02:37] யேர்மனியின் டுசில்டோர்ப் நகரில் அமைந்துள்ள மாநிலப் பாராளுமன்றுக்கு முன்பாக இன்று யேர்மனியில் உள்ள இளையோர்களால் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்பாட்டம் இடம்பெற்றது. இன்று காலை பத்துமணியளவில் யேர்மனிய இளையேர் அமைப்பும் மக்களவையும் இணைந்து டுசில்டோர்ப்பில் அமைந்துள்ள மாநிலப் பாராளுமன்றத்தில் பசுமைக் கட்சியின் வெளிவிவகார அரசியலுக்கு பொறுப்பான அதிகாரியிடம் மனுவொன்றைக் கையளித்தனர். அதில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கைது சம்பந்தமாகவும் அவர்களின் விடுதலைக்கு இலங்கை அரசிற்கு அனைத்துலக அழுத்த…

  11. தேசிய முச்சக்கரவண்டி சங்க தலைவர் படுகொலை கொழும்பு – மிரிஹான பகுதியில் வைத்து நேற்று (10) இரவு நாடாளுமன்ற வேட்பாளரும், இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவருமான சுனில் ஜயவர்த்தன (53-வயது) குழு ஒன்றினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பகுதியிலுள்ள வாகனங்களை குத்தகைக்கு விடும் நிறுவனமொன்றில் முச்சக்கரவண்டி ஒன்றை விடுவிப்பது தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான இவர், முச்சக்கரவண்டி சாரதிகளை பாதிக்கும் “லீசிங் மாபியா” தொடர்பில் பல்வேறு விமர்சன காணொளிகளை வெளியிட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவரது…

    • 11 replies
    • 1.6k views
  12. நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை Mar 5, 2026 - 01:58 PM புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா மின் விநியோகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தேசிய மின் கட்டமைப்புத் தொகுதியின் அதிர்வெண்ணில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் நீராவி விசையாழி செயலிழந்து, அது கட்டமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தேசிய மின் கட்டமைப்புத் தொகுதியில் 55 மெகாவாட் மின்சாரக் கொள்ளளவு இழக்கப்பட்டதால், நாட்டின் சில பகுதிகளில் இவ்வாறு மின்தடை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், சில நிமிடங்களிலேயே நிலைமை…

  13. வணிகச்சந்தையும் தொழிற்சந்தையும் கண்காட்சி சுப்பிரமணியம் பாஸ்கரன் தேசிய இளைஞர் சேவை மன்றம், 'கெயர் நிறுவனம்' என்பவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட வணிகச்சந்தையும் தொழிற்சந்தையும் கிளிநொச்சி மத்தியகல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (23) காலை ஆரம்பமாகியது. இக்கண்காட்சி இன்று சனிக்கிழமை (23) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (24) ஆகிய இருநாட்கள்; நடைபெறவுள்ளது. இதன் ஆரம்பநிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைத் தொடக்கி வைத்தனர். இக்கண்காட்சியில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. - See more at: http://ww…

  14. வீரகேசரி இணையம் 12/4/2008 3:58:38 PM - அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை மறைத்து அரசியல் இலாபம் கருதி செயற்படுகிறது என ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். பாதுகாப்பு கண்காணிப்பகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவாறு தெரிவித்தார். இவ் ஊடகவியலாலர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசு இன்று இராணுவ வீர்ரகளுக்காக "அப்பிவெனுவென் அப்பி" என்ற திட்டத்தை ஆரம்பித்து பணத்தை சேகரிகின்றது.இவ்வாறு நிதி உதவி செய்பவர்களுக்கு இந்நிதி எவ்விடயங்களுக்கு பயன்படுத்தப்பட்டது என தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது.இவ்வாறாக கோடி கணக்கில் பணம் சேகரிக்கப்பட்ட பணம் இராணுவ வீர…

  15. (எஸ்.ரூபன், சுமித்தி) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிராக அவ்வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். குறித்த வைத்தியசாலையில் பணியாற்றும் காது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணர் எஸ்.திருமாறன், நேற்று இரவு இனந்தெரியாத ஆயுததாரிகளினால் தாக்குதலுக்கு உள்ளானார். இதனைக் கண்டித்து யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர். எஸ்.பவானந்தராஜா, வைத்திய சங்கத் தலைவர் எஸ்.நிமலன் உட்பட அனைத்து வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவசர சிகிச்சைப் பிரிவு வைத்தியர்கள் மட்டும் இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை. இப்பணிப் புறக்கணிப்பு நாளை நாடளாவிய ரீதியில் நடத்துவதற்கு உத்தேசிக்கபட்டுள்ளதாகவ…

  16. சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளரும், அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரருமான கோதாபாய ராஜபக்ச யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான திடீர் பயணத்தினை நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டு அங்கு சென்றிருந்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 728 views
  17. செல்பேசிகள், Tablet Computers எனப்படும் பலகைக் கணினிகள், ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்டிராய்டு இயங்கு தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல் குறித்து விவாதிப்பதற்கான உலகத்தமிழ் இணைய மாநாடு தமிழ்நாட்டின் சிதம்பரத்தில் டிசம்பர் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவங்கி மூன்று நாட்களுக்கு நடக்கவிருக்கிறது. உத்தமம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்கிற சர்வதேச அமைப்பும், தமிழ்நாட்டின் அண்ணாமலைப்பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் பதினோறாவது உலகத்தமிழ் இணைய மாநாட்டில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தமிழ் மொழியியலாளர்கள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். துறைசார் வல்லுநர்களுக்கான ஆய்வரங்கம், தமிழ்கணினி குறித்த…

    • 5 replies
    • 892 views
  18. இலங்கை: `போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு பொதுமன்னிப்பு கூடாது' மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்பு கூறுவதற்காக அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் மன்னார், ஒட்டுசுட்டான், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் சனிக்கிழமை இடம்பெற்றன. உண்மையைக் கண்டறிதல், நடந்தவைகளுக்கு நீதி வழங்குதல், இழப்புக்களுக்கான நிவாரணம், குற்றங்கள் மீள் நிகழாமை ஆகிய நான்கு அம்சங்களைக் கொண்டதாக நல்லிணக்கப் பொறிமுறை அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. நாட்டு மக்களின் கருத்துக்களை உள்வாங்கி அதன் அடிப்படையில் இந்தப் பொறிமுறையை அமைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கருத்தறியும் செயற்பாடுகள் ம…

  19. பிரதமரை சந்தித்த வட மாகாண ஆளுநர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் வட மாகாண ஆளுநர் எஸ். எம் சார்ள்ஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பு இன்று (29) முற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகளின் பின்னர் வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கையினை வழமைக்கு கொண்டு வருதல் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளது. அத்துடன், சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்குள் பிரவேசிப்பவர்களை தடுத்து நிறுத்துவது தொடர்பிலும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், வடக்கில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொ…

  20. இந்தியாவின் மும்பாயில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவராகக் கூறப்படும் அஜ்மலை, நேபாளத்திலிருந்து கடத்தி வந்தது இந்திய உளவு அமைப்பான "றோ" தான் என்று பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த சட்டத்தரணியான சௌத்ரி மொகமட் பரூக் கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  21. பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளியேன்! புனர்வாழ்வின் பின்னரே மாணவர்களை விடுவிப்பேன்!! - கோத்தபாய 'நான் நினைத்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் யாழ். பல்கலைக்கழக மாணவர்களைத் தடுப்புக் காவலிலும் வைக்க முடியும். அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க முடியும். ஆனாலும், மாணவர்களின் எதிர்கால கல்வியை கருத்திற்கொண்டு அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் நால்வரையும் புனர்வாழ்வு வழங்காமல் விடுவிக்கவே முடியாது.' கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது சிறிலங்கா படைத்துறை அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸா…

  22. நோர்வே பிரதமர் இலங்கைக்கு விஜயம் நோர்வே பிரதமர் எர்னா சோல்பர்க் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு, இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்துள்ளனர். கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். நாட்டுக்கு வந்துள்ள நோர்வே பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளைச் சந்தித்து பேசவுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/178622/ந-ர-வ-ப-ரதமர-இலங-க-க-க-வ-ஜயம-#sthash.9tZvF7cV.dpuf

  23. பல்கலைகழக மாணவன் வெள்ளைவான் ஆயுததாரிகளினால் கடத்தல் ஞாயிறு, 21 டிசம்பர் 2008, 08:56 மணி தமிழீழம் [மயூரன்] கொழும்பு பல்கலைகழக மாணவன் பொரளை கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு சென்ற வேளையில் காவல்துறை சீருடையணிந்த வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டதாக அவரின் உறவினர்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை பொரளை கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு சென்ற முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியைச் சேர்ந்த 23 அகவையுடைய வடிவேல் அரவிந்தன் என்ற மாணவன் இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

  24. எதிர்வரும் 2014ஆம் ஆண்டில் தேர்தலொன்றை நடத்துவதற்கான சூழல் நிலவுகின்றது. அந்த தேர்தலின் போது, நாட்டில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமொன்று உருவாகும் என்று அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இன்று ரோம் நகருக்கு சென்றிருந்தார். அங்கு ஐ.தே.க ஆதரவாளர்களைச் சந்தித்து உரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி இந்த ஆண்டில் பல்வேறு முன்னேற்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. அத்துடன், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நீதிமன்றத்தின் சுயாதீனம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்தல் தொடர்பில் ஆர்ப்பாட்டங்களை ஐ.தே.ன நடத்தும் என்றும் என்றும் ரண…

    • 5 replies
    • 601 views
  25.  'முன்னாள் போராளிகளின் மரணம் தொடர்பில் ஆராய வேண்டும்' புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் பலர் மர்மமான முறையில் மரணமடைந்து வருகின்றனர் என ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்ற நிலையில், அதன் பின்னணி தொடர்பில் முழுமையானதும், பகிரங்கமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் இவர்கள் உரிய உடல் மற்றும் உள ரீதியிலான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, உரிய சிகிச்சைகளுக்கு இவர்கள் உட்படுத்தப்பட வேண்டுமென்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில்அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.