ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அச்சுறுத்தி அடிபணியச் செய்து ஒரு அரசியல் தீர்வைத் திணிப்பதற்கு சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச முயல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். அரசாங்கம் நாடு முழுவதையும் சிங்கள, பௌத்த, இராணுவமயமாக்குவதற்கு முயற்சிக்கின்றது. அச்சுறுத்தி அடிபணியச்செய்து தமிழ் மக்கள் விரும்பாத அரசியல் தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார். அவரின் அந்த திட்டத்திற்கு கூட்டமைப்பு ஒருபோதும் தலை வணங்காது. முழு நாட்டையும் ஆள வேண்டும் என்று …
-
- 0 replies
- 1.1k views
-
-
அச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை நோக்கி அச்சுறுத்தும் விதத்தில் சைகை செய்து சர்ச்சையில் சிக்கிய பிரிட்டனிற்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி பிரியங்கர பெர்ணான்டோ குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் மீண்டும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர் ஹைவெல் வில்லியம்ஸ் குறிப்பிட்ட விவகாரம் குறித்து மீண்டும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள பிரிட்டனின் ஆசிய விவகாரங்களிற்கான அமைச்சர் மார்க் பீல்ட் பொதுநலவாய மாநாட்டின் போது இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடன் இது குறித்து ஆராய்ந்ததாக தெரிவித்த…
-
- 0 replies
- 236 views
-
-
இலங்கை அரசு ஒரே நேரத்தில் பலமுனைகளில் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் மீது மட்டுமின்றி மனித உரிமை அமைப்புகளின் மீதும் அது தாக்குதல் தொடுத்து வருகிறது. இப்போது சிங்கள அரசின் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது ‘சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு’ (IIGEP) என்ற அமைப்பாகும். இந்தக் குழு இலங்கை அரசால் அமைக்கப்பட்டதுதான். இதன் தலைவராக இருப்பவர் இந்தியாவின் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.பகவதி ஆவார். ஆள் கடத்தல், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இலங்கை ராணுவத்தின் மீதும், போலீஸ் மீதும் கூறப்பட்டு வருகின்றன. அப்படி கூறப்பட்டவற்றில் நவம்பர் 2005-&க்குப் பிறகு நடந்த பதினாறு சம்பவங்கள் பற்றி விசாரிப்பதற்காக இலங்கை அரச…
-
- 1 reply
- 1.4k views
-
-
அச்சுறுத்தும் கடற்புலிகள்! -விதுரன் முழு அளவிலான போரில் புலிகள் குதிக்காத நிலையில் இன்று முப்படைகளையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் புலிகளுக்குள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. வடக்கில் இராணுவத்தினர் புலிகளிடம் பல தோல்விகளைச் சந்தித்துள்ள அதேநேரம், கிழக்கில் புலிகள் வசமுள்ள பெரும்பாலான பகுதிகளை படையினர் கைப்பற்றி வருவது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது. வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமாயிருந்த போதிலும் கிழக்கில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள படைவலுச் சமநிலையிலான மாற்றங்கள், கிழக்கில் புலிகள் மரபு வழிச் சமரிலிருந்து மீண்டும் கெரில்லாப் பாணியிலான போர் முறைக்குள் தள்ளப்பட்டுள்ளார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது. கிழக்கில் தற்போது தொடரும் படை நடவடிக்கைக…
-
- 17 replies
- 5.9k views
-
-
அச்சுறுத்தும் பௌத்த பீடங்கள் http://epaper.virakesari.lk
-
- 0 replies
- 339 views
-
-
இலங்கை அரசியல் அண்மைக் காலத்ததில் அதிரடியான மாற்றங்கள் பலவற்றைச் சந்தித்து வருகின்றது. அந்த மாற்றங்களுள் ஒன்றுதான் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்ட “தேசிய அரசாங்கம்” எனக் குறிப்பிலாம். கடந்த வாரம் இலங்கைத் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களைச் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுத் தேர்தலின் பின்னரே தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் எனத் தெளிவாகச் சொல்லியிருந்தார். மறுநாள் பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியும் அதுதான். இருந்தபோதிலும் மிகவும் குறுகிய கால அறிவித்தலுடன் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது. தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டிய தேவை அல்லது அவசியம் அரசாங்கத்துக்கு ஏன் ஏற்பட்டது என்பதையிட்டு இந்த வாரத்தில் சுருக்கமாகப் பார்ப்போம். பிரித்தானிய ஆட்சிய…
-
- 1 reply
- 2.3k views
-
-
அச்சுறுத்தும் வகையில் வெடிபொருள் மீட்பு ; ஆரையம்பதியில் பதற்றம் மட்டக்களப்பு ஆரையம்பதியிலுள்ள வீடொன்றில் அச்சுறுத்தும் வகையில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஆரையம்பதியில் தாயும் மகளும் தங்கியிருந்த வீடொன்றில் இருந்து குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதிக்கு முப்படையினரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வீட்டின் வேலியொன்றில் தீவிரவாத அமைப்பொன்றின் வாசகம் எழுதப்பட்ட சுலோக அட்டையொன்றும் தொங்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/…
-
- 0 replies
- 232 views
-
-
அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி மோசமாகப் பாதிப்பு – பொதுமக்கள் கோரிக்கை அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி மிக மோசமாக சேதமடைந்துள்ளமையால் அவ்வீதியுடான போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. எனவே இதனைத் திருத்தித்தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மிக நீண்ட காலமாக புனரமைப்பு எதுவுமின்றி காணப்படும் இவ்வீதியை கடந்த மழைகாலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீதி முற்றாக சேதமைடந்துள்ளது. தற்போதும் தொண்டைமானாறு நன்னீர் தேக்கத்திற்கு அருகில் நீர் வீதியின் மேலாக ஓடுகின்றது. இதனால் வீதியில் பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மேலும் இவ்வழியூடான பயணிகள் பேருந்துக்களும் ஆபத்தான நிலையில் அவ்வீதியூடான பயணத்தினை மேற்கொண்டுவருகின்றன. குறித்த…
-
- 0 replies
- 471 views
-
-
சகோதரியுடன் சேட்டை புரிந்த இராணுவத்தினருடன் முரண்பட்ட சகோதரன் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். அச்சுவேலி பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அச்சுவேலி பகுதியில் வசிக்கும் பாடசாலை மாணவி ஒருவரை புதிதாக இராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர் ஒருவர் அண்மைக்காலமாக தன்னை காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அவரது காதலை பாடசாலை மாணவி ஏற்க மறுத்து வந்ததால் கடந்த செவ்வாய் கிழமை மாலை நேரம் மாணவியின் வீட்டுக்கு இரண்டு இராணுவத்தினருடன் குறித்த இளைஞரும் சிவில் உடையில் சென்று மாணவியின் தகப்பனாருடன் முரண்பட்டுள்ளார்கள். அவ்வேளை வீட்டுக்கு வந்த மாணவியின் மூத்த சகோதரன் தகப்பனாருடன் முரண்பட்டுக் கொண்டு இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள…
-
- 0 replies
- 647 views
-
-
அச்சுவேலி தொண்டமனாறு வீதி வெள்ளத்தால் மூடியுள்ளதால் மக்கள் சிரமம் December 7, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அச்சுவேலி தொண்டமனாறு வீதி வெள்ளத்தால் மூடியுள்ளதால் அவ்வீதி வழியாக பயணிப்போர் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். குறித்த வீதி நீண்டகாலமாக திருத்தப்படாமல் குன்றும் குழியுமாக உள்ள நிலையில் தற்போது வீதியை மூடி வெள்ளம் ஓடுவதனால் வீதியில் பயணிக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். http://globaltamilnews.net/2018/105878/
-
- 0 replies
- 335 views
-
-
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் அச்சுவேலியில் புனரமைக்கப்பட்டுள்ள கைத்தொழிற்பேட்டையில் ஏழு வர்த்தகர்கள் மாத்திரமே தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு தற்போது முன்வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 24 கைத்தொழில்களை ஆரம்பித்துச் செயற்படுத்தத் தக்கவகையில் இந்தத்தொழிற்பேட்டைக்குரிய அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கென இந்தியா 225 மில்லியன் ரூபாயையும், இலங்கை 50 மில்லியன் ரூபாயையும் செலவு செய்திருக்கின்றன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் இராஜபக்ச, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா சகிதம் இதனை வைபவரீதியாகத் திறந்து வைத்தார். இந்தக் கைத்தொழிற்பேட்டையின் மூலம், 2 ஆயிரம் பேர் நேரடியாகவும், சுமார் பத்தாயிரம் பேர் மறைமுகமாகவும் தொழில்வாய்ப்புக்களை…
-
- 1 reply
- 432 views
-
-
[Thursday, 2011-07-07 17:53:36] அச்சுவேலி நாவற்காட்டுப் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த ரவீந்திரன் கிருஷ்ணகுமாரி (வயது36) என்பவரின் சட லமே மீட்கப்பட்டுள்ளது. வவுனியா நலன்புரி முகாமில் இருந்து வந்து மீளக் குடியேறிய இந்தப் பெண்ணின் கணவர் அண்மையிலேயே விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்தில் மல்லாகம் நீதிவான் விசாரனைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரி சோதனைக்காக சடலத்தை யாழ். போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டார். அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=461…
-
- 0 replies
- 732 views
-
-
அச்சுவேலி பகுதியில் காணி விடுவிப்பு - செந்தூரன் பிரதீபன் அச்சுவேலி பகுதியில் கடந்த 23 ஆண்டுகளாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் இன்று (31) பகுதியளவில் விடுவிக்கப்பட்டுள்ளது. 9 குடும்பங்களுக்குச் சொந்தமான 3ஏக்கர் காணிகள் 1995 ஆம் ஆண்டு முதல் 521 ஆவது படையணியின் பயன்பாட்டிலிருந்தது. இதில் 50 வீதமாக காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மிகுதி காணிகள் எதிர்வரும் 3 மாத காலப்பகுதியில் விடுவிக்கப்படும் எனவும் இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மிகுதி காணிகளும் விடுவிக்கப்படும் வரை காணிகளுக்கு செல்லமாட்டோம் என குறித்த காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். http://www.tamilm…
-
- 1 reply
- 1.2k views
-
-
அச்சுவேலி முக்கொலை; குற்றத்தை ஏற்றார் சந்தேகநபர் வைத்துவிட்டார்களோ என்ற சந்தேகத்தில் ஏற்பட்ட ஆத்திரத்தில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று மனைவியின் உறவினர் களைத் தானே வெட்டிக் கொன்றார் என்பதை நேற்று நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டார் அச்சுவேலி முக்கொலை வழக்கின் சந்தேகநபரான தனஞ்செயன். இந்த வழக்கின் விசாரணை நேற்றும் தொடர்ந்தது. கொலைக்குற்றஞ்சாட்டப்பட்ட தனஞ்செயன் நீதிபதி முன்பாக நடந்த சம்பவத்தை விளக்கினார். அவரது சட்டத்தரணி அவரது சாட்சியத்தை நெறிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் அதை மீறி நடந்தது என்ன என்று தனஞ்செயன் மடமடவென்று நீதிபதிக்குக் கதை சொல்ல ஆரம்…
-
- 4 replies
- 798 views
-
-
அச்சுவேலி பிரதேச சபையின் 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பொதுமக்களின் பங்களிப்புடன் அச்சுவேலி வெட்டுக்குளம் புனரமைக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக சேறு, குப்பைகள் மண்டிக்கிடந்த இக்குளத்தின் புனரமைப்பு பணிகள், கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளன. இக்குளம் ஆழமாக்கப்பட்டுள்ளதுடன், கரைகளில் அணைக்கட்டுகள் அமைக்கப்பட்டு புற்கள் பதிக்கப்பட்டு அழகாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் ஒவ்வொரு கிராமத்துக்கும் கிடைக்கப்பெற்ற 1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இக்குளத்தின் புனரமைப்புக்கு பிரதேச சபை 5 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியதுடன் பிரதேசமக்களின் பங்களிப்பும் உள்வாங்கப்பட்டுள்ளது. இக்குளம் புனரமைக்கப்பட்டமையால் மழை காலங்களில் தேங்கும் நீரைக்கொண்டு இப்பகுதி…
-
- 3 replies
- 837 views
-
-
-எஸ்.நிதர்ஷன் இந்து, பௌத்த, கலாசார பேராவையால், அச்சுவேலியில், இன்று (02), 2ஆம் மொழி கற்கை நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தினதேரர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, கற்கை நிலையத்தைத் திறந்து வைத்தார். இந்துக் கலாசாரப் பேரவையின் வடமாகாண தலைமைக் காரியாலயமாக இந்த நிலையம் விளங்கும் என்பதுடன், எதிர்வரும் காலத்தில் வடமாகாணத்தில் உள்ள ஏனைய மாவடங்களிலும், இந்த நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிலையத்தில் சிங்களம், ஆங்கில மொழிக் கற்கைநெறிகளை, மாணவர்கள் இலவசமாகக் கற்கமுடியும். இதுவரை காலமும் குறித்த நில…
-
- 0 replies
- 459 views
-
-
இராணுவத்தினரால் கடுமையாகத்தாக்கப்பட்;ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு இளைஞர்கள் இராணுவப்புலனாய்வுப்பிரிவினரால் வைத்தியசாலையிலிருந்து நேற்றைய தினம் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர் இச்சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த 23 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் அச்சுவேலி பஸ்தரிப்பு நிலையத்தில் இரண்டு குடிகாரர்களுக்கிடையில் சண்டை நடைபெற்றுள்ளது இதன்போது அப்பகுதியில்நின்றுகொண்டிருந்த இராணுவப்புலானாய்வுப்பிரிவினைச் சேர்நத ஒருவர் அவர்களை சமாதானப்படுத்த முற்பட்டுள்ளனர் இதன்போது குடிகாரர்கள் இருவரும் சேர்ந்து இராணுவப்புலனாய்வினைச்சேர்ந்தவரை அடிக்க அடிதாங்க முடியாமல் அவர் அருகிலுள்ள பலநோக்குக்கூட்டுறவு சங்கத்தின் எ…
-
- 6 replies
- 2.4k views
-
-
அச்சுவேலி இராச வீதியில் இராணுவ முகாம் அமைக்கும் நோக்கில் 53 பரப்புக் காணிகளை அளவீடு செய்ய இன்று திங்கட்கிழமை (21) மேற்கொள்ளப்பட்ட முயற்சியினை பொதுமக்கள் தடுத்துப் போராட்டம் மேற்கொண்டதில் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது. மேற்படி பகுதியில் 9 குடும்பங்களுக்குச் சொந்தமான 53 பரப்புத் தோட்டக் காணிகள் கடந்த ஜுன் 2ஆம் திகதி நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் அளவீடு செய்ய முற்பட்ட போது, அதனை பொதுமக்கள் போராட்டம் நடத்தித் தடுத்திருந்தனர். இந்நிலையில், இன்று திங்கட்கிழமை (21) பொலிஸாரின் பாதுகாப்புடன் மீண்டும் காணிகளை அளவீடு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, அங்கு கூடிய பொதுமக்கள், வடமாகாண சபை அமைச்சர், உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் காணி அ…
-
- 0 replies
- 425 views
-
-
அச்சுவேலியில் சித்த விஷேட சிகிச்சை கட்டண பிரிவு- மருந்து விற்பனை நிலையம் திறந்து வைப்பு! அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சித்த வைத்திய சாலையில், சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் வழிநடத்தலின் உருவாக்கப்பட்ட இவை, இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த சிகிச்சை நிலையத்தில் நோயாளர்கள் கட்டணம் செலுத்தி தங்களுடைய சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் ஆயுர்வேத மருந்துகளையும் வாங்கிச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் எஸ். எம். சமன் பந…
-
- 1 reply
- 399 views
- 1 follower
-
-
அச்சுவேலியில் நிலத்தின் வெடிப்பு மேலும் விரிவடைகின்றது யாழ்.அச்சுவேலி நவக்கிரி பகுதியில் ஏற்பட்ட நிலவெடிப்பு மேலும் விரிவடைந்து உள்ளதாக யாழ்.பல்கலைகழக புவியியற்துறை பேராசிரியர் ரீ .ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். நவக்கிரி பகுதியில் கடந்த 23ம திகதி அதிகாலை வேளை திடீர் என நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டது. அதனால் ஒரு வீடு சேதமடைந்து இருந்ததுடன் சுமார் 500 மீற்றர் தூரம் வெடிப்பு ஏற்பட்டு இருந்தது. அச் சம்பவம் தொடர்பில் புவியியற்துறை பேராசிரியர் தெரிவிக்கையில் , அன்றைய தினம் நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பினை தொடர்ந்து அவதானித்து வந்த வேளை வெடிப்பானது 1.5 சத மீற்றர் அகலத்துக்கு விரிவடைந்து உள்ளது. அத்துடன் மேலும் புதிய இடங்கள் சிலவற்றிலும் வெடிப்புக்கள் ஏ…
-
- 0 replies
- 563 views
-
-
யாழ்ப்பாணம் அச்சுவேலி பிரதேசத்தில் நிலம் தாழிறங்குவதற்கான காரணங்களைக் கண்டறிவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த நிலப் பகுதியை எதிர்காலத்தில் பயன்படுத்துவது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்காகவே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின் மூலம் இதற்கான ஆய்வினை மேற்கொள்வது தொடர்பாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் …
-
- 2 replies
- 359 views
-
-
தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் இராணுவத்தின், பொலிஸார் இணைந்து அச்சுறுத்தல் விடுத்து சில கடைகளை திறக்க செய்துள்ளனர். அச்சுவேலி பகுதியில் கடைகளை திறக்குமாறு கடை உரிமையாளர்களுக்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையில் அங்கு சென்ற வலிகிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் நிரோசுக்கு பொலிஸ், இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிடத்துக்கு முன் இராணுவம், பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இராணுவ உயரதிகாரிகள் சொகுசு வாகனங்களில் அப்பகுதியில் பிரசன்னமாயிருந்தனர். சந்தி…
-
- 0 replies
- 435 views
-
-
அச்சுவேலியில் புதிய கலாச்சாரம் - பொங்கல் தாத்தாக்கள் உலாவினார்கள் 2011-01-18 03:47:19 தைப் பொங்களுக்கு முதல்நாள் வெள்ளிக்கிழமை அச்சுவேலிப் பகுதியில் பொங்கல் தாத்தாக்கள் என பலர் உலாவியதாக தெரியவருகின்றது. சில இளைஞர்கள் ''பொங்கள் தாத்தா'' என்ற வேடங்களில் அச்சுவேலிப் பகுதியில் ஆடிப் பாடி வீதி வழியே வந்துள்ளார்கள். இவர்களைக் கண்டு ஏராளமானோர் திரண்டு வேடிக்கை பார்த்துள்ளார்கள். சிலர் இவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கியதாகவும் தெரியவருகின்றது. வேறு சிலர் இவர்களின் நடத்தையை கண்டிக்க முயன்றுள்ளார்கள். பாரம்பரிய கலாச்சார நிகழ்வை இவ்வாறு ஏளனம் செய்கின்றது போல் நடக்கின்றார்கள் என சிலர் இவ் இளைஞர்களைப் பற்றி விமர்சனம் தெரிவித்துள்ளார்கள. newjaffna.com/
-
- 3 replies
- 1.9k views
-
-
Published By: VISHNU 01 JUN, 2025 | 08:44 PM ஞாயிற்றுக்கிழமை (01) யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம் வைத்ததால் பல கோழிகள் உயிரிழந்துள்ளன. கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முட்டையிடும் கோழிகளுக்கே இவ்வாறு விஷம் வைக்கப்பட்டது. இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. வளலாய் மேற்கு, அச்சுவேலி (ஜே/284) பகுதியில் வசித்து வந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வாழ்வாதரமே இவ்வாறு நாசம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 97 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் இன்னும் பல கோழிகள் உடல்நலம் குன்றிய நிலையில் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கோழிகளையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்க்கை…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
Priya Rasa அச்சுவேலி பகுதியில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி கொண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 26 வயதுடைய பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். குறித்த இளைஞன் பொலிஸ் கான்ஸ்டபிளை திருமணம் செய்வதாக தெரிவித்து வந்த நிலையில் பின்பு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் குறித்த இளைஞன் வீட்டிற்கு முன்பாக நின்று தனக்கு தானே தீ மூட்டி கொண்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் யாழ். போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில…
-
- 2 replies
- 339 views
-